

குறிப்பு: எல்லாரும் வழக்கம் போல இதுவும் எதோ காமெடி blog nu நெனச்சி, படிக்கும் போது கெக்க புக்கன்னு சிரிச்சிடாதீங்க. நா என்னோட காதல் கதைய கொஞ்சம் சீரியஸ் ah சொல்ல போறேன்.படிக்கும் பொது இடையில யாரவது கடுப்பாயி கடைசி வரைக்கும் படிக்காம போனா அதுக்கு company பொறுப்பாகாது.ஹலோ.. சீரியஸ் ah பேசிக்கிட்டிருக்கேன் சார்...
மொதல்ல நா love பண்ற பொண்ண பத்தி சொல்லியே ஆகணும். 'த' ங்குற பேரோட மொத எழுத்து உள்ள அவளை ஒரு தேவதை ன்னு சொன்னா அது கொஞ்சம் கம்மி தான்.இவளோ நாளா அவள எனக்கு தெரியும்னாலும் ஒரு தடவ கூட நேர்ல பேசுனது இல்ல. சொல்லப்போனா அவ குரல் எப்புடி இருக்கும்னு கூட எனக்கு தெரியாது. ஆனா அவள ஒரு, ஒரு லட்சம் தடவ பாத்திருப்பேன். அவளும் அப்பபோ பாத்துருக்கா. அவ சிரிச்சான்னா அந்த சிரிப்புக்காக என்ன வேணா பண்ணலாம்னு தோனும்.
எத்தனையோ தடவ நா அவள பாக்கணும், பேசணும்னு நா sms ல கேட்டிருந்தா கூட , எனக்கு அந்த வேல இருக்கு , இந்த வேல இருக்குன்னு சொன்ன அவ, அன்னிக்கு மொத மொதல்ல , வா meet பண்ணலாம்னு sms அனுப்பிருந்தா... .
எனக்கு கையும் ஓடல.. காலும் ஓடல... நம்பவும் முடியல... அப்புடியே கெளம்பி போனேன். சென்னைல அவளோ அழகான, அமைதியான எடத்த யாரும் பாத்துருக்க மாட்டாங்க. அவ அங்க wait பண்ணிக்கிட்டு இருந்தா. அவளால அந்த எடத்துக்கே அழகு கூடியிருந்துசி. ஒ ... இதுக்கு பேருதான் சொர்க்கம் போலன்னு கூட எனக்கு தோணிச்சி .
அவ பக்கத்துல போய் உக்கார்ந்தேன். கொஞ்ச நேரம் எதுவும் பேசல. என்ன பேசுறதுன்னு தெரியல. அங்க பக்கத்துல சின்ன குழந்தைங்கல்லாம் விளையாண்டுகிட்டு இருந்தாங்க. உடனே நா ஆரம்பிச்சேன்
" ச்ச.. அங்க பாரு எவ்ளோ jolly ah எந்த கவலையும் இல்லாம விளையாடுறாங்க.... jolly யான life அது... பேசாம குழந்தைங்களாவே இருந்திருக்கலாம். ச்ச... நாமல்லாம் வளந்துட்டோம்ல.." ன்னேன்...
"ஹலோ ஹலோ... நீயும் ஏன் join பண்ணிக்கிற.. நான் வளந்துட்டேன்... நீ இன்னும் கொஞ்சம் வளரனும்" ன்னு ஒரு கடி கடிச்சா..
நா குள்ளமா இருக்குறதுக்கு கூட அப்போ அவளோ சந்தோஷப்பட்டுக்கிட்டேன்.. மனசுக்குள்ளயே"
சரி சரி... என்னமோ பேசணும்னு சொல்லி அடிக்கடி தொல்ல பண்ணிக்கிட்டு இருந்தியே... என்ன பேசணும்? சீக்கிரம் சொல்லு... எனக்கு நெறைய work இருக்கு" ன்னு சொன்னா..
"இல்ல அது வந்து.... எப்புடி சொல்றதுன்னு தெரியல...சொன்னா நீ எப்புடி எடுத்துக்குவன்னு தெரியல.. அதான் யோசிக்கிறேன்.. அது... ."
"ஐயோ மொக்க போடாத ஒழுங்கா சொல்லு" ன்னு அசிங்க படுத்திட்டா.
"அது வந்து.. நா உன்ன .. என்னக்கு உண்ணா ரொம்ப ... I " ன்னு ஆரம்பிக்கும் பொது lite ah ஒரு நீர்த்துளி என் முகத்துல பட்டுச்சி..
"மழை வர்ற மாதிரி இருக்குல்ல " ன்னேன்..
" பங்குனி வெயிலு பல்ல காட்டிக்கிட்டு அடிக்கிது... மழையாம் மழை... ஒளராம விஷயத்த சொல்லு" ன்னா..
"அது வந்து... நா உன்ன.. எனக்கு உன்ன ரொம்ப..... "i love" ன்னு சொல்லும் போது...இன்னும் கொஞசம் பலமான தூரல் என் மேல பட்டுச்சி.
அய்யோ பெரிய மழை வர்ரதுக்குள்ள னாம எப்புடியாவது சொல்லிடனுமேன்னு " I LOVE YOU SO MUCH" ன்னு சொல்லி முடிக்கும் போது என்னோட முகம் முழுசும் தூரல்ல நனைஞ்சிருந்திச்சி.....ஆனா இந்த தடவ ஒரு எரும மாடு கத்துற மாதிரி ஒரு sound um சேர்ந்து கேட்டுச்சி.
" டேய்... எந்திரிடா....." ன்னு. கண்ண தொறந்து பாத்தா..
"அய்யோ... பேயி..." என் room mate கைய்யில சொம்புல தண்ணியோட நின்னுகிட்டிருந்தான்...
"அட பாவி.. ஒரு சொம்பு தண்ணிய ஊத்தி... என் காதலிய கரச்சிட்டியேடா... இன்னிக்காவது என்னோட love ah சொல்லிடலாம்னு நெனச்சேன்... கெடுத்துட்டியேடா... பாவி.."
"டேய்...அவளுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சில்ல. இன்னும் என்ன உனக்கு சொல்லனும்?" ன்னான்.
"என்னது தமன்னாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?.. எப்படா... சொல்லவெ இல்ல?"
"என்ன தமன்னாவா?.. ஏண்டா போன மாசம் தான் மீரா ஜாஸ்மீன ரொம்ப லவ் பண்ரேன்னு சொன்ன..."
"அது போன மாசம்... நாஞ்ச்சொல்றது இந்த மாசம்"
"எட்டிக்கிட்டு விட்டேன்னா ஆறு மாசம் எந்திரிக்க மாட்ட.. பண்ணாட பயலே...எந்திரிச்சி வேலைக்கு போர வழிய பாருடா..மீரா ஜாஸ்மீன், தமன்னா ன்னு கடுப்பேத்திகிட்டு... நானே என் ஆளு நயனதாராவ நாலு நாளா காணுமேன்னு வருத்ததுல இருக்கேன்..வெந்த புண்ணுல புள்ளையார பாச்சிக்கிட்டு....போய்த்தொலைங்கடா.."
"ஹா... ஹா.. என் இனமடா நீ" ன்னு நெனச்சிக்கிட்டு எழுந்து குளிக்க போனேன்.