Tuesday, August 31, 2010

அந்த நேரம் அந்தி நேரம்


பட்டுக்கோட்டை..... மார்கழி மாதம்.. இரவு மணி ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது

ட்ரிங்ங்ங்ங்ங்ங்... அய்யா தியேட்டரில் இரவுக்காட்சி முடிந்ததற்கான மணி ஒலித்தது.. சிறிது நேரத்தில் கலைத்து விடப்பட்ட தேன் கூட்டிலிருந்து தேனீக்கள் வெளிப்படுவதை போல மக்கள் வெளிப்பட்டனர். இரண்டு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் ஒரே horn சத்தங்களும், பைக் ஸ்டார்ட் செய்யும் சத்தங்களுமாக பரபரப்பு தொற்றிக்கொண்டது.

மூன்றாவது வரிசையில் நிருத்தப்பட்டிருந்த தனது splendor plus ல் இக்னீஷியனை உசுப்பி, கிக்கரை உதைத்து உயிர்பித்தான் கதிரேசன்.பின் கதிரின் நண்பன் சுரேஷ், பின் சீட்டில் தன்னை அமரவைத்துக்கொண்ட பின்னர் இருவரும் கிளம்பினர். கதிரேசனுக்கு இருபத்து எட்டு வயது முடிந்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தன.
உயரத்தில் ஆறடியை தொட்டிருந்தான். சிவப்பா கருப்பா என்று சொல்லமுடியாத கலர். B.sc படித்துவிட்டு ஊரில்அப்பவுடன் விவசாயத்தை பார்த்துக் கொண்டிருப்பவன்.சுரேஷ் கதிரின் பள்ளித் தோழன். ப்ளஸ் டூ வரை படித்திருந்த அவன் பட்டுக்கோட்டையில்ஒரு சிறிய தனியார் கம்பெனியில் கணக்கெழுதும் பணியில் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகின்றன.

சரியாக பத்து நிமிடம்.. நகர குடியிருப்பு பகுதிகள் மறைந்து தஞ்ஜாவூர் செல்லும் பிரதான சாலையில் பயணித்துக் கொண்டிருந்தனர். இருவரும். மார்கழிப்பனி இரவிற்கு நன்றாக வெள்ளையடித்து வைத்திருந்தது..வாகனத்தின் வேகத்தால் உடம்பு உறையும் அளவிற்குகுளிர்..

"டேய் இந்த குளுருல வந்து இந்த படத்த அவசியம் பாத்தே ஆகனுமாடா... அதுக்கு பகல்லயாச்சும் வந்துருக்கலாம்ல.." என்றான் சுரேஷ்.

"டேய் பகல்ல தான் வீடு, வயக்காடு, நெல்லுமூட்டை, உரமூட்டைன்னு பொழுது போயிடுது.. ராத்திரி வந்தாதான் நிம்மதியாபடத்த பாக்கலாம்..சரி விடு அடுத்த தடவ வர்ரப்ப வேணும்னா பகல்ல வரலாம்" என்று சொல்லிவிட்டு ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.வண்டி 60 கிலோமீட்டர் வேகத்தில் சீறிக்கொண்டு சென்றது.. அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் சாலையின் இருபுறங்களிலும் சில குடியிருப்பு பகுதிகள்.... வண்டியின் வேகத்தை குறைத்து சாலை ஓரத்தில் நிறுத்தினான்..

சுரேஷ் கீழே இறங்கிகொண்டு "சரிடா பாக்கலாம்.. பாத்து போ" என்றான்

"சரிடா" என சிரித்துக்கொண்டே தலையாட்டினான் கதிர்.

" டேய்.. நா வேணும்னா உன் கூட உங்க வீட்டுக்கு வந்துட்டு காலைல வரட்டுமா?"

"ச்ச..ச்ச... பரவாலடா... நீ போய் தூங்கு.நா பாத்துக்குறேன்.. காலைல முடிஞ்சா phone பண்ணு" என்று சொல்லிவிட்டு கிளம்பினான் கதிர்.

சுரேஷ் அவ்வாறு கேட்டதிலும் ஒரு காரணம் இருந்தது. கதிரின் ஊர் சுரேஷின் ஊரைப்போல பிரதான சாலையில் அமைந்தது அல்ல..அங்கிருந்து ஆறாவது கிலோ மீட்டரில் வரும் வலது பக்க பிரிவில் சென்றால் ஏழாவது கிலோமீட்டரில் அமைந்துள்ளதுதான்கதிரின் முள்ளுர் கிராமம். இடையில் எந்த குடியிருப்பு பகுதிகளும் கிடையாது. வெரும் வயல்காடுகளும் தோப்புகளும் நிறைந்தது.
பகல் நேரத்திலாவது, வயல்வேலை செல்வோர், வெளியூர் செல்வோர் என ஒன்றிரண்டு பேர்கள் அந்த வழியில் காணப்ப்ட்டாலும் இரவில் ஆள் அரவமற்ற பகுதியாகவே தென்படும்..அதிலும் அந்த பிரிவில் ஐந்தாவது கிலோமீட்டரில் வரும் சவுக்குத்தோப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். சுமார் அரைகிலோமீட்டர் நீளத்திற்கு சாலையின் இருபுறமும் நீள்கிறது அந்த சவுக்கு தோப்பு.

ஏற்கனவே அந்த ஊரில் சிலர், இரவில் அந்த வழியாக வரும்போது, குறிப்பாக அந்த சவுக்கு தோப்பு பகுதியில் இரண்டு சக்கர வாகனங்கள் வரும்போது தானாக நின்று விடுவதாகவும், சில வித்தியாசமான சத்தங்கள் அந்த பகுதியில் கேட்பதாகவும்கதை (?) கட்டி விட்டிருந்தனர். ஆனால் கதிர் அதுபோன்றவற்றை நம்புபவனல்ல..ஏற்கனவே பலமுறை இரவுக்காட்சி பார்த்துவிட்டு அந்தப்பகுதி வழியாக சென்றிருக்கிறான், எந்த இடையூருமின்றி.

அன்றும் அதே போல், சுரேஷை இறக்கிவிட்டு சென்ற கதிர் சிறிது தூரத்தில் "முள்ளூர் 7 கிமீ" என்று வலப்புறம் அம்புக்குறியிட்ட அந்த சாலைப்பலகை இருந்த இடத்தில் திரும்பினான். இப்போது சாலை விளக்குகள் முற்றிலும் அனைந்து, இருள் கவ்விக்கொண்டது. ஹெட் லைட்டின் உதவியுடன் நேர்த்தியாக சென்றுகொண்டிருந்தான். இருபுறமும் வயல்களில் வாழும் தவளைகள் வெளிப்படுத்திய பாரம்பரிய இசை பைக் சத்ததை விட அதிகமாக கேட்டது.

சவுக்குத்தோப்பு நெருங்கிகொண்டிருந்தது. என்னதான் கதிரேசன் அது போன்ற கட்டுக்கதைகளை நம்புவதில்லை என்றாலும், அந்த இடத்தை நெருங்க நெருங்க இதயத்துடிப்பு சற்று அதிகமானது என்னவோ உண்மைதான். அந்த பகுதியை விரைவாக கடந்து விடவேண்டும் என்பதறகாக, ஆக்ஸிலேட்டரை
முறுக்கினான். அதுவரை 40 கிலோமீட்டரில் சென்ற வண்டி, 55 கிமீ வேகத்தில் பறந்தது.

அந்த சவுக்குதோப்பு பகுதிக்குள் நுழைந்து கால் பகுதியை கடந்த பின்னர் வண்டியின் வேகத்தில் தானாக ஏற்பட்ட மாற்றத்தை அவனால் உணர
முடிந்தது.வேகம் மெல்ல மெல்ல குறந்து, இஞ்ஜின் இழுத்து இழுத்து வெட்டி தோப்பின் நடுப்பகுதியில் நின்று போனது. முற்றிலும் இருள் சூழ்ந்தது

கதிரின் பின்னந்தலையில் ஐஸ்கட்டிகளை வத்ததுபோன்றதொரு உணர்வு. முழுதும் வியர்த்திருந்தான். ஆனால் சில நொடிகளிலேயே வண்டி தானக நிற்கவில்லை என்பதும், பெட்ரோல் அளவு குறைந்து ரிசர்வ் ஆகி நின்றிருக்கிறது என்பதும், அப்பா பெட்ரோல் போட சொன்னதை மறந்ததும் நினைவிற்கு வந்தது. மனதுக்குள் சிறியதொரு மகிழ்ச்சி..லேசாக ஒரு மெல்லிய காற்று முகத்தில் தீண்டியதைப்போல உணர்ந்தான். பெட்ரொல் பாயின்டரை ரிசர்வுக்கு மாற்றி வத்து விட்டு, கிக்கரை உதைக்க ஆரம்பித்தன்.

ஒன்று... இரண்டு...மூன்று... இஞ்ஜினை உயிர்பிக்க முடியவில்லை.... அப்போதுதான் அந்த சத்தம் கேட்டது..

"வீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்..........."

ஒரு பெண்ணின் குரல்....

அடுத்த பதிப்பில் தொடரும்.....

Friday, August 20, 2010

பதினாறு பருத்தி வீரர்கள்


யாரு இந்த பதினாறு பருத்தி வீரர்கள்? விடாம மழை பேஞ்சி principal eh குவாட்டர் அடிச்சிட்டு குப்பற படுத்துருக்கும் போதுநாங்க போனாலே போவோம்னு காலேஜ்க்கு போனவனுங்களா? இல்லை... பக்கத்து காலேஜ் பசங்க எங்க காலேஜ்க்கு வந்து"யாருடா எங்க காலேஜ் சப்ப figure ku ரூட் போட்டது"ன்னு கேட்டப்ப அவயிங்க கூட சண்ட போட்டு தொரத்துனவனுங்களா? சத்தியமா இல்ல.. அப்பறம் யாரு இவியிங்க..

1.Sports day அன்னிக்கு புள்ளைங்க மேல மிக்சர கொட்டி வெளயாண்டவியிங்க

2.Sports meet கொடிய புடுங்கி தலைகீழா நட்டு அதுக்கு வந்தே மாதரம் ன்னு சல்யூட் அடிச்சவியிங்க

3.Chief guest பேசிக்கிட்டு இருக்கும் போது அவருக்கு ரெண்டடி பக்கத்துல கொண்டுபோயி வெடி வச்சிட்டு "அவ்வளவு சத்தமாவா கேக்குது" ன்னு கேட்டவியிங்க

4.சைக்கிள் ஓட்டத்தெரியாம ஓட்டிக்கிட்டு வந்த புள்ளைய கலாட்டா பண்ணி கீழ விழ வச்சவியிங்க

5.எல்லாத்துக்கும் மேலா சம்பந்தத்த (பெயர் மாற்றப்படவில்லை) சம்பந்தம் இல்லாம தகாத வார்த்தையில திட்டுனவியிங்க..

(குறிப்பு: அந்த பதினாறு பேர்ல நா இல்லீங்கோ)

உங்களுக்கு சம்பந்தம் யாருன்னு தெரியனும்ல.. சம்பந்தத்துக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. ஆனா சம்பந்தத்துக்கும் எங்க காலேஜ்க்கும் ஒரு சம்பந்தம் இருக்கு. ஏன்னா அவரு எங்க காலேஜ் proffessor. சம்பந்தத்துக்கும் எங்களுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு. ஏன்னா அவரு எங்களுக்கும் ஒரு subject எடுத்தாரு. சம்பந்ததுக்கும் அவருக்குமே ஒரு சம்பந்தம் இருக்கு.ஏன்னா அவருதான் சம்பந்தம்.

Sprots meet function ah எல்லாம் நல்லா அஜால் குஜாலா கொண்ட்டாடிட்டு வந்துகிட்டு இருக்கும் போது கூட வந்தவன் கேட்டான்..

"நம்ம class ப்ரியா சாரில ரொம்ப அசிங்கமா இருக்கால்ல.."

"ஆமா.. ச்சுடிதார்ல மட்டும் கரீனா கபூர் மாதிரியா இருந்தா... ஏண்டா இப்டி ஆயிட்ட... ஆமா அவதான் இன்னிக்கு வரவே இல்ல போலருக்கே.. நீ மட்டும் எப்புடி பாத்த.."

"என்ன மச்சி... சம்பந்ததுக்கு அடுத்து ரைட்ல ரெண்டாவதா blue கலர் Saree கட்டிக்கிட்டு உக்கார்ந்து இருந்தாளே... அவதான?"

"ஆ...ஆ....அடப்பாவி..அடப்பாவி... அது நம்ம H.O.D மாலாடா..."

"சாரி மச்சி.. கண்பீசன் ல கண்ணு பீசாயிருச்சி" ன்னு கூலா சொல்லிட்டு அவன்பாட்டுக்கு போனான்.

அப்பவே தெரிஞ்சிது அவியிங்க அன்னிக்கு என்ன கண்டிஷன் ல இருந்தாயிங்கன்னு.அப்புடி இப்புடி போயி மட்டையாயிட்டோம். காலையில
மெஸ்ஸூக்கு போகும் போது ஹாஸ்டல் நோட்டீஸ் board la எதோ புதுசா ஒட்டிருந்தாயிங்க.. பசங்க நாலு பேரு அத வெறிக்க வெறிக்க
பாத்துக்கிட்டுருந்தாயிங்க..

என்ன இன்னிக்கு தேதி 14 தானே ஆகுது.. அதுக்குள்ள மெஸ் பில்ல ஒட்டிட்டாயிங்களா? எப்பவும் 2 ந்தேதி தானே ஒட்டுவாயிங்க...ஆனா அத இவிங்க திரும்பி கூட பாக்க மாட்டய்ங்களேன்னு நெனச்சிக்கிட்டு போய் பாத்தா.. அதுல எதோ புதுசா ஒட்டிருந்தாய்ங்க..

"கீழ்கண்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தினுள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக கல்லூரி முதல்வரை காலை பத்து மணிக்கு சந்திக்க தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" ன்னு போட்டு கீழ பதினாறு பேர் வரிசையா போட்டுருந்துச்சி..மூணாவதா என்னோட ரூம் mate பேரு.

"மாட்னாண்டா மாப்ள" ன்னு நெனச்சிக்கிட்டு வேக வேகமா ரூமுக்கு போயி கனவுல அவனோட lover க்காக ரவுடிங்ககிட்ட சண்ட போட்டுக்கிட்டு
இருந்த அவன எழுப்புனேன்.

"மச்சி.. மச்சி.. நோட்டீஸ் board la உன் பேரு போட்டுருக்காய்ங்கடா... எந்திரி..." ன்னேன்..

கஷ்டப்பட்டு கண்னுமுழிச்ச அவன் " என்னோட அருமையெல்லாம் இப்ப தான் இவியிங்களுக்கு தெரியுதா? என்னடா என்ன culturals co-ordinator ah செலெக்ட் பண்ணிட்டாய்ங்களா?"

"டேய் எருமை.. உன்ன course முடிக்கிறத்துக்கு முன்னாடியே நம்ம காலேஜ் "Old Boys Association" ல சேத்துருவாய்ங்க போலருக்குடா... நேத்து sports meet la நம்ம பசங்க விட்ட ரவுசுக்கு principal காண்டாயிட்டரு போலருக்கு... எதோ enquiry யாம்...உன்ன மட்டும் இல்ல பதினாறு பேர உடனே வந்து மீட் பன்ன சொல்லி போட்ருக்காய்ங்கடா...சீக்கிரம் கெளம்பு..."

உடனே அவனுக்கு பக்கத்துல படுத்துருந்தவன் கேட்டான் "squard la ஏன் பேரு இருக்கா மச்சி?"

"ஆமா இது australia tour போர indian cricket team oda squardu... நாயே...உனக்கெல்லாம் notice eh கெடயாதாம்... straight ah நீ வீட்டுக்கு கெளம்ப வேண்டியது தான்.. காலை சாப்பாட்ட மெஸ்ல சாப்டுட்டு அப்புடியே ஊருக்கு ஓடிப்போயிரு"

பத்து மணிக்கு principal ரூம்ல enquiry... ஆனா அங்க போனது அந்த பதினாறு பேர் மட்டும் இல்ல.. எங்க ஹாஸ்டல் ல இருந்த எல்லாரும்.மதியம் சாப்பாடு சமைக்கனுமேன்னு மெஸ்ல வேல பாக்குற அண்ணன மட்டும் அங்கயே விட்டுட்டு போயிருந்தோம்.

நாங்கல்லாம் அங்க சும்மா வேடிக்கை பாக்கதான் போயிருந்தோம்.. ஆனா principal என்னன்னா நாங்க அந்த பதினாறு பேருக்கு support பன்ன வந்துருக்கோம்னு தப்பா நெனச்சிட்டாறு....

"இந்தா பாருங்க நீங்க எல்லாரும் வந்ததுனால இவனுங்கல சும்மா விட முடியாது... நம்ம காலேஜ்க்குன்னு ஒரு இமேஜ் இருக்கு..இதுமாதிரி பசங்களால அது கெட்டுப்போக நா விடமாட்டேன். இத்தனை chief guest ங்க அங்க இருக்கும் போது இவ்ளோ ச்சீப்பாவா behave பண்றது..படிச்ச பசங்கதானே நீங்கல்லாம்.." ன்னு அவரு பேசிக்கிட்டு இருக்கும்போதே என் காதுல ஒருத்தன் சொன்னான்

"ச்ச பசங்க தப்பு பண்ணிட்டாய்ங்கடா... வெடிய இந்தாளுக்கு கீழ வச்சிருக்கனும்டா...."

"இந்த பசங்க மேல கண்டிப்பா action எடுத்தே ஆகனும்.... பத்துநாள் இவங்கள suspend பண்ணிருக்கோம்.... இவங்களுக்கு support பண்ணா நீங்க எல்லாருமே காலேஜ், ஹாஸ்டல விட்டு வெளிய போகவேண்டியிருக்கும்..." ன்னாரு..

ஆஹா.. plan B சூப்பரா இருக்கே... நம்ம support eh பண்ணல.. அதுக்குள்ள support பண்றோம்ன்னு சொல்லி பத்து நாள் லீவும் தர்றேங்குராரே.. அப்புடியே build up பண்ணிட வேண்டியதுதான்னு நெனச்சிக்கிட்டு உண்மையிலயே எல்லாரும் அவியிங்களுக்காக பேசுனோம்... எதிர் பாத்த மாதிரியே கடைசியா "எல்லாரும் பத்து நாள் ஹாஸ்டலுக்கோ, காலேஜுக்கோ வரக்கூடாதுன்னு" தீர்ப்பு சொல்லிட்டாரு..

"ஆஹா.. இது மாதிரி ஒரு ஆளுதாண்டா நம்க்கு principal ah வேணும்... யார்டா இவருக்கு வெடிவைக்கனும்னு சொன்னது...பிச்சிபுடுவேன் பிச்சி...எப்புடி பாத்தாலும் நம்ம ஆளுடா அவரு" ன்னு சொல்லிட்டு மெஸ்ஸூல மதிய சாப்பட்ட முடிச்சிட்டு சந்தோஷமா எல்லாரும் பத்து நாள் vacation னுக்கு ஊருக்கு கெளம்புனோம்..

இந்த நல்ல விஷயம் நடக்க காரணமா இருந்த அந்த பதினாறு பேரும் பின்னாட்களில் "பதினாறு பருத்தி வீரர்கள்" எனவும், "Team Sixteen" எனவும் எல்லோராலும் அன்போடு
அழைக்கப்பட்டனர்...