Monday, September 19, 2011

எங்கேயும் எப்போதும் - கொஞ்சம் சங்கீதம் கொஞ்சம் சந்தோஷம்

மொதல்ல உங்க எல்லார்கிட்டயும் ஒரு கேள்வி 
 
ராகுல் காந்திக்கு ராஜீவ் காந்தி அப்பா மொறை வேணும்னா திருவள்ளுவரோட தாத்தா பேரு என்ன?
 
பதில் சொல்லுங்கப்பா? 
 
கடுப்பா இருக்குல்ல... இதே மாதிரி தான் இருக்கும் இந்த படத்தோட க்ளைமாக்ஸ் பாக்கும் போது... அதாவது "ஜெய்யும் அஞ்சலியும் லவ் பண்றாங்க... அவங்க போற பஸ் ட்ரைவரு தெரியாம இன்னொரு பஸ் மேல மோதி நடக்க கூடாததெல்லாம் நடந்துருச்சி.. அதுனால யாரும் வண்டியா வேகமா ஒட்டாதீங்க" இததான் இந்த படத்தோட க்ளைமாக்ஸ்ல சம்பந்தமே இல்லாம சொல்லிருக்காங்க.

ஆனா இந்த க்ளைமாக்ஸ் தவற மத்தபடி படம் சூப்பரா இருக்கு. தெளிவான திரைக்கதை(அதாவது க்ளைமாஸுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத தெளிவான திரைக்கதை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் யுவர் ஹானர்).

ரெண்டு தனி தனி லவ் ஸ்டோரிஸ்... ஒரே பஸ்ல போறாங்கங்கற ஒரே சம்பந்தம் மட்டும்தான் ரெண்டுக்கும். எந்த சீனுமே போர் அடிக்கல.. வழக்காமா டைரக்டர் ஷங்கர் தயாரிக்கும் "கச கச கலீஜ்" லொகேஷன் படங்களை போல இல்லாமல் ஒவ்வொரு சீனும் ரொம்ப colurful ah இருக்கு.ஜெய்க்கு சுப்ரமணிய புரத்துக்கப்புறம் ஒரு நல்ல கேரக்டர். காமெடியில பிண்ணிருக்காரு. கிட்ட தட்ட  ஜெய் பேசிய எல்லா வசங்களுக்குமே கைதட்டல்கள்.
"மாசமா ஆறு மாசமா" பாட்டு நச். இதே பாட்டு நம்ம விஜய்க்கு கெடைச்சிருந்துச்சின்னா  இன்னும் பட்டைய கெளப்பிருப்பாரு.

அஞ்சலி சுசித்ரா மாதிரி லொடலொடன்னு பேசிக்கிட்டே இருக்கு. ஆனா நல்லா இருக்கு பெயிண்டு ரெண்டு கோட்டிங் extrava  அடிச்சிருப்பாயிங்க போலருக்கு. முந்தைய படங்களை விட கொஞ்ச extra பளபளப்பு.

அஞ்சலிக்கு பெயிண்ட extrava use பண்ணிட்டு அனன்யாவுக்கு ரெண்டு கோட்டிங்க கம்மி பண்ணிட்டாங்க. கொஞ்சம் டல் அடிச்சிது. அனன்யா சொந்த குரல்ல  வேற பேசிருப்பாங்க போலருக்கு. சில சீன்ல காதுல கடப்பாரைய விட்டு நோண்டுன மாதிரி இருந்துச்சி. அந்த இன்னொரு ஹீரோவும் நல்லா இருக்காரு. நல்லாவும் நடிச்சிருந்தாரு.

கேமரா, எடிட்டிங்னு எல்லாமே சூப்பர். Music யாரோ G.சத்யான்னு போட்டாங்க. படத்துல உள்ள நாலு பாட்டுமே ரொம்ப நல்லாருக்கு. BGM um நல்லாவே இருந்துச்சி.

ஒரு பஸ் accident scene ரொம்ப நல்லா எடுத்துருக்காங்க. அடிக்கடி பஸ்ல வெளியூர் போறவங்க இந்த படத்த தியேட்டர்ல பாக்குறத தவிர்க்கலாம்.. ஏன்னா பாத்தப்புறம் பஸ்ல முன்னாடி உக்காந்தா கண்டிப்பா பீதிய கெளப்பும்.

கதையோட ஒட்டத்துலயே ஒரு நல்ல பாசிட்டிவ் க்ளைமாக்ஸ் வச்சிருந்தா படம்  இன்னும் பட்டைய கெளப்பிருக்கும். நெகட்டிவ் க்ளைமாக்ஸ்னால படம் முழுசும் பாத்துட்டு வந்தாலும் intervaloda எழுந்து வந்த feel ah யே தருது.
 ஆனா கண்டிப்பா பாக்க worth ah na படம்.

3 comments:

  1. கதையை சொல்லிடுவீங்கன்னு பயந்துதான் கடைசி பாராவை மட்டும் படித்தேன். ஆனால் அங்கேயும் சொல்லி பல்பு கொடுத்து விட்டீர்களே?

    ReplyDelete
  2. இப்படத்துக்கு நானும் ஒரு பதிவு எழுதி உள்ளேன்.உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன்.
    நன்றியுடன்,
    உலகசினிமாரசிகன்.

    ReplyDelete
  3. @பாலா:

    தல... இந்த படத்த பொறுத்தவரைக்கும் நா கதை சொன்னா கூட எந்த சுவாரஸ்யமும் குறையாது. அதனால தான் சொன்னேன்..

    ReplyDelete