Tuesday, March 5, 2013

ஆஃபீஸில் ஓப்பி அடிப்பது எப்படி?

ஆஃபீஸில் ஓப்பி அடிப்பது எப்படி அப்புடின்னு ஆரம்பிச்ச உடனேயே "டேய் எங்ககிட்டயேவா?" ன்னு ஒரு பெருமிதத்தோட  கேக்குற உங்களோட குரல் எனக்கு கேக்குது. இதெல்லாம் நா சொல்லித்தான் தெரியனுமா?... கரெக்ட் தான். எதோ இன்னும் ஒரு நாலு அஞ்சி பேர் வேலை செஞ்சிகிட்டு இருந்தாலும் அவங்களுக்கும் இந்த வித்தையவெல்லாம் கத்துக் கொடுத்து கம்பெனிய முன்னுக்கு கொண்டு வர்றதுதான் இந்த பதிவோட நோக்கமன்றி வேறில்லை.


1. மொதல்ல punctuality ங்கற வார்த்தையவே உங்க டிக்சனரிலருந்து தூக்கிடனும். ஒம்பது மணிக்கு ஆஃபீஸ்னா, அங்க ஒம்பது மணிக்கே போய் நின்னா அப்புறம் நமக்கென்ன மரியாத? வக்காளி பத்தரை மணிக்கு போறோம். அப்போதான் மேனேஜரு எல்லார் முன்னலையும் ஒரு அல்சேசன்  மாதிரி கொலைக்க எல்லாரும் நம்மளையே ஒரு லுக்கு விடுவாங்க பாருங்க. மம்மி ஏத்திவிட்ட  விஸ்வரூபம் மாதிரி நம்ம இண்ட்ரோ குடுக்காமலேயே அனைவரும் நம்மள பத்தி தெரிஞ்சிக்க ஆரம்பிச்சிருவாங்க.

2. உடனே சட்டு புட்டுன்னு சிஸ்டத்த ஆன்பண்ணி........ என்னது க்ளையண்ட் மெயிலா... அந்த க்ளையண்ட்ட வெட்டுங்கடா... மொதல்ல NDTV, Indian Express அப்புடி அதுவும் இல்லைன்னா இந்த தினகரன்.காம்ல எதயாது ஒண்ண ஓப்பன் பண்ணி நாட்டு நடப்புகள தெரிஞ்சிக்குங்க. இந்த செஷன் தான் ரொம்ப முக்கியம். இதுல படிக்கிற மேட்டர்கள வச்சிதான் இன்றைய மீதமுள்ள பொழுதுகளை கழிக்கனும்.  எவ்வளவுக்கு எவ்வளவு சூடான மேட்டர் படிக்கிறீங்களோ அவ்வளவுக்கவ்வளவு அன்றைய பொழுது சுவாரஸ்யமாக கழியும்.  

3. சரி நாட்டு நடப்ப நீங்க தெரிஞ்சிகிட்டா போதுமா? அதப்பத்தி பேச நம்மள மாதிரியே நாலு பயபுள்ளைக வேணாம்? படக்குன்னு ஒரு குரூப் சாட்ட ஓப்பன் பண்ணி நீங்க படிச்ச அந்த லிங்குகள அந்தப்  பயபுள்ளைகளுக்கும் அனுப்பிவிடுங்க. அதெப்புடி அவனுங்க மட்டும் வேலை பாக்குறது. இப்போ லைட்டா அடிவயிற்றிலே ஒரு சிறிய மாற்றம். ஒண்ணும் இல்லை காலைல வர்ற அவசரத்துல break fast  சாப்புடாமயே வந்துட்டீங்க. என்ன அப்புடியாவா? அட அப்புடித்தான் தம்பி சொல்லோனும் எவனும் கேட்டா. அந்த குரூப் சாட்டுலயே பயபுள்ளைகள காஃபடேரியாவுக்கு கூப்புடுங்க. மொதல்ல வரமாட்டேம்பானுக... காஃபி நா வாங்கிதார்றேன்னு சொல்லுங்க படக்குன்னு பறந்து வந்துருவானுக. அங்க போனவுடனே அவனையே ஏமாத்தி அவன் ஃபுட் கார்ட வாங்கி தேய்ச்சிறலாம்.

4. ஹலோ ஹலோ.. ஹலோ... என்ன காஃபி குடிச்சிட்டு 10 நிமிஷத்துல வந்துட்டீங்க... இதெல்லாம் நம்ம ஒடம்புக்கு ஆகாது. கொஞ்ச நேரம் ஆர அமர ஒக்காந்து நல்லா பேசி பழகிட்டு ஒரு அரைமணி நேரம் கழிச்சி வாங்க. வந்துட்டீங்களா? இப்ப உங்க பாக்கெட்டுல இருக்க ஃபோன் லைட்டா வைப்ரேட் ஆகும் பாருங்க.. ஒண்ணும் இல்லை நீங்க CUG கார்டு வாங்கி குடுத்த உங்க ஆளு தான் கூப்புடுது. அத அட்டெண்ட் பண்ணி காலைல என்ன சாப்டீங்க எத்தனை இட்லி சாப்டீங்க, சட்னில எதனை கடுகு கெடந்துச்சி, சாம்பார்ல எத்தனை வண்டு செத்துக் கெடந்துச்சி இதயெல்லாம் அப்டேட் பண்ணுங்க. 

காதுல ஏர் ஃபோன் மாட்டிக்கிட்டு உங்க ஆள்கிட்ட பேசிக்கிட்டே குரூப் சாட்ல அந்த நாலு பேரு கூட காலைல படிச்ச மேட்டர்கள பத்தி fourth umpire மாதிரி டிஸ்கஸ் பண்ண ஆரம்பிங்க. அதுவும் மொதநாள் எதாவது கிரிக்கெட் மேட்ச் நடந்துருந்துச்சின்னா ரொம்ப உசிதம்... வேற மேட்டரே தேவையில்லை... “தோணி அந்த டவுன் எறங்கிருக்கவே கூடாதுங்க... கடைசி ஓவர் யாருங்க இஷாந்த் சர்மாவுக்கு குடுத்தது? இந்த பிட்ச்சிலயெல்லாம் அசால்ட்டா 350 ah chase பண்ணலாம்ங்க.. இப்புடி வாயி இருக்குங்குற காரணத்துக்காக நாம என்ன வேணா அட்வைஸ் குடுக்கலாம்.

எப்புடியும் சஞ்சம் மஞ்சரேக்கர் மாதிரி ரெண்டு பேரு உங்களுக்கு ஒத்து ஊதுனா, இன்னும் ரெண்டு பேரு நவ்ஞ்ஜோட் சிங் சித்து மாதிரி நீங்க சொல்றத ஒத்துக்காம உங்கள சாட்ல கண்டபடி திட்டுவாய்ங்க... நீங்க சாட் பண்ணிகிட்டே "இங்க பாருடா செல்லம் இந்த பையன் என்ன எப்புடி திட்டுறான் "ன்னு உங்களோட இந்த  உலகலாவிய chat history ah உங்களப்போலவே இன்னொரு கம்பெனில உக்காந்து சின்சியரா வேலை செஞ்சிகிட்டு இருக்க உங்க ஆளுக்கு அனுப்பி விடுங்க... (உங்களமாதிரியே- நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஹானர்) அது அத பாத்துட்டு "these guys are so funny ya" அப்புடிங்கும்...

5. சரி மணி பன்னண்டு ஆச்சி... அந்த பாவப்பட்ட க்ளையண்டு நீங்களும் வேலை செய்வீங்கண்னு நம்பி உங்களுக்கு எதாவது மெயில் அனுப்பிருப்பான். அத ஓப்பன் பண்ணுங்க. ரெண்டு நிமிஷத்துக்கு மேல அவன் அனுப்ச மெயில படிக்க முடியாதுன்னு எல்லாருக்கும் தெரியிங்..அவிங்க என்ன அனுப்பிருக்காய்ங்கன்னு படிச்சி தெரிஞ்சிக்கிறதுக்குள்ள லஞ்ச் டைம் வந்துரும். சுவர் இருந்தாதானே சித்திரம் வரைய முடியும்.. சோறு திண்ணாதான வேலை பாக்க முடியும்னு உங்ககிட்ட நீங்களே சொல்லிகிட்டு கொஞ்சம் கூட கூச்சப்படாம லஞ்ச் சாப்புட கெளம்பிடலாம். 

6. சாப்டு வந்து திரும்ப காலைல பண்ண அதே exercise திரும்ப கண்டினியூ
பண்ண மணி அஞ்சாயிரும்.. என்னது வீட்டுக்கா? அது தான் இல்லை...
இப்பதான் வேலைய ஆரம்பிக்கனும்...எல்லாரும் வீட்டுக்கு கெளம்பிட்டு இருக்கும்போது நீங்க சின்சியரா வேலை பாத்துட்டு இருப்பீங்க... நீங்க காலைல பண்ண வேண்டிய வேலைய தான் இப்ப உக்காந்து தம் கட்டிட்டு இருக்கீங்கண்ணு அவிங்களுக்கு எங்க தெரிய போவுது?

8. புதுசா ஒருத்தன் கம்பெனில சேந்துட்டான்னா அவ்ளோதான்.. நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமையான்வர்கள் ன்னு எல்லாத்தையும் 
அவனுக்கு தள்ளி விட்டுட்டு நாம திரும்ப ஃபோர்த் அம்பய்ர கண்டினியூ பண்ணலாம்.

9. அதுவும் இந்த அப்ரைசல் டைம்னா இன்னும் ஜாலி தான்... காரணம் தானா கெடைக்கும். நீங்க அந்த வருசம் ஃபுல்லா கிழிச்ச கிழிக்கு செகண்ட் ரேட்டிங்கோ இல்லை மூணாவது ரேட்டிங்கோ வந்துருக்கும். (ஆக்சுவலா அதுவே அதிகம்னு உங்களுக்கு தெரியும்) அவ்ளோதான்... உடனே என்னை அப்ரைசல்ல குத்திட்டாங்க... ஆப்படிச்சிட்டாங்க... இனிமே நா வேலையெல்லாம் செய்ய மாட்டேன்னு அடம்புடிக்கலாம்... சாயங்காலம் 5 மணிக்கெல்லாம் வீட்டுக்கு கெளம்பலாம். 

உண்மையிலயே அந்த வாரம் உங்களுக்கு வேலை எதும் இல்லாத்தாலதான் நீங்க கெளம்பிருப்பீங்க.. ஆனா வெளியில உங்களுக்கு அப்ரைசல் குடுக்காத்தால தான் நீங்க வேலைசெய்ய மாட்டேங்குறீங்கங்குற மாதிரி ஒரு பில்ட் அப்ப கெளப்பி விடனும். இதெல்லாம் ஒரு வாரத்துக்கோ இல்லை பத்துநாளுக்கோதான் தாக்கு புடிக்கும். இதயே continue பண்ண ஆசைப்பட்டீங்க அவ்ளோதான்... அடுத்த வருசம் ரேட்டிங் போடுறதுக்கு உங்க பேரே payroll la  இருக்காது. 

ஆபீசர்களை கரெக்ட் செய்வது எப்படி?


1. ஆபீசர்களை அமுக்குறதுக்கு மொத மொத நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான ஒண்ணு. ஆவியிங்க எது கேட்டாலும் நீங்க “NO” ன்னு மட்டும் சொல்லிடவே கூடாது.  ஒருமாசத்துல முடிக்கவேண்டிய வேலைய ரெண்டு நாள்ல முடிச்சி தரனும்னு சொல்லுவாய்ங்க.. அத ரெண்டு மாசம் ஆனாலும் முடிக்க முடியாதுன்னு உங்களுக்கும் தெரியும் உங்க மேனேஜருக்கும் தெரியும்... ஆனா NO  சொல்லக்கூடாது... முடிக்கிறோம் சார்... தூக்குறோம் சார்... பிண்றோம்சார் ன்னு பிட்ட போட்டு வைக்கனும்.. தப்பித்தவறி முடியாதுன்னு உண்மைய மட்டும் சொல்லிட்டீங்க அவ்ளோதான் Pessimistic ah பேசுறோம்னு சொல்லி ஆப்படிச்சிருவாய்ங்க. 

2. அப்புறம் முக்கியமான ஒரு விஷயம்... பாஸூங்களோட ரூமுக்கு போனா உங்களுக்கு காது கிழியிற அளவு திட்டு விழும்...  அதுக்காக சூடு சொரணை வந்து கடுப்பாயிற கூடாது.why blood… same blood” ன்னு தொடைச்சிகிட்டு “என்ன பாஸ் நேத்து திட்ட வர்றேன்னீங்க.. வரவே இல்லை... ன்னு வடிவேலு மாதிரி போயிட்டே இருக்க வேண்டியதுதான்... ஆனா வெளிய வந்த்துக்கப்புறம் மத்தவங்க கிட்ட “சும்மா உள்ள விட்டுக்கிட்டு திருப்பு திருப்புன்னு திருப்பிட்டேன்ல... அரண்டு போயிட்டாரு அப்புடின்னு பீலா விட்டுக்கிட வேண்டியதுதான். 


3. உங்க சிஸ்டம் settings ah மாத்தி வச்சிக்கனும். அப்பத்தான் நீங்க சிஸ்டடத்த லாக் பண்ணிட்டு பக்கத்து சீட்டுல மொக்கை போட்டுகிட்டு இருந்தாலும், ரெஸ்ட் ரூம்ல போய் அசந்து தூங்கிட்டாலும், சாப்புட போனாலும் , க்ரிக்கெட் விளாட போனாலும் இல்லை சைடுல படத்துக்கே போனாலும் "Available" ன்னே chat la உங்க பேரு இருக்கும். அப்புறம் chat la உங்க ஸ்டேட்டஸ மாத்திகிட்டே இருக்கனும். "in Meeting" "busy for next two hrs" அப்புடியெல்லாம். அப்பதான் நீங்க பக்கத்துல இருக்க புள்ளைகிட்ட மீட்டிங் போட்டுகிட்டு இருந்தாலும் நீங்க எதோ Board of  directors மீட்டிங்ல இருக்கமாதிரி அனைவரும் நெனைச்சிக்குவாங்க.  எங்க கம்பெனில ஒரு சாட் இருக்கு. அதுல என் பேரு மேல எப்ப வச்சாலும் "free for next 8 hrs " ன்னு காமிச்சி அசிங்கப்  படுத்திரும். நம்மள ரொம்ப close ah watch பண்ணுது போல... dangerous plow...

4.  Don ah பாஃர்ம் ஆயிட்டாலே நாலு எடத்துக்கு போகனும் வரனும். அதனால உங்க சீட்டுல மட்டுமே நீங்க உக்காந்துருக்க கூடாது. அடிக்கடி எழுந்து அடுத்தவன் சீட்டுக்கு போயி நின்னு லைட்டா மொக்க போட்டுட்டு வரனும். நீங்க அவண்ட்ட போயி நேத்து நீயா நானா பாத்தியான்னு கேட்டு வந்தா கூட தூரத்துலருந்து பாக்குறவங்களுக்கு நீங்க  தீயா வேலை செய்யிற மாதிரி தோணும்... பல வித்தைகள கத்தவரு அனைவருக்கும் சொல்லித்தர்றாருன்னு டர்ர்ர்ர் ஆயிருவானுங்க.

5. அப்புறம் எந்த மீட்டிங்குக்கு போனாலும் கையில ஒரு டைரி பேனா எடுத்துகிட்டு தான் போகனும். அங்க போயி நாம டைரில ஒரு பூ படமோ இல்ல எதாவது natural sceneries வரைஞ்சிகிட்டு இருந்தாலும் மத்தவங்க உங்கள ஒரு சின்சியர் பாய்னு மனசுக்குள்ள நெனைச்சுக்குவாங்க.

6. Friday மதியம் உங்களுக்கு ஒரு இம்பார்ட்டண்ட் மெயில் வருதுன்னு வச்சிக்குவோம்.. நீங்க பொளக்குன்னு அதுக்கு ரிப்ளை பண்ணா சாதா பூபதியாயிருவீங்க. அதுக்கு சனிக்கிழமை மதியமோ இல்லை ஞாயிற்று கிழமை அதிகாலையிலயோ ரிப்ளை போடனும். அப்பதான் லீவு நாள்ல கூட கம்பெனிக்கு இப்புடி நாயா உழைக்கிறானேன்னு உங்க ரேட்டிங்ல ஒரு 0.5 ஏறும்.

7. டைனமிக் ரிப்போர்ட் எதயாது ஜெனரேட் பண்ணிட்டு சிஸ்டத்துக்கு முன்னால சீரியஸா கன்னத்துல கைவச்சிகிட்டு சிஸ்டத்த விடாம  பாத்துக்கிட்டே இருங்க.. தூரத்துலருந்து பாக்குறவங்களுக்கு நீங்க மொரட்டுத் தனமா வேலை செய்யிற மாதிரி தோணுனாலும் நீங்க முழிச்சிட்டே தூங்கிட்டு இருக்கது உங்களூக்கு மட்டுமே தெரிஞ்ச ராஜ ரகசியம்.

8. அப்புறம் க்ளையண்ட் திடீர்னு ஒரு நாள் வேலைல தப்பு கண்டுபுடிச்சி  உங்களையும் உங்க மேனேஜரையும் காரித்துப்பி ஒரு மெயில் அனுப்பிருப்பான். அப்ப காட்டனும் உங்க performance ah. டக்குன்னு உங்க மெயில்ல தேடுங்க.. என்னிக்கோ ஒரு நாள் க்ளையண்ட் சரக்கடிச்சிட்டு தூங்கிட்டு இருக்க அன்னிக்கு எவனுக்குமே புரியாத மாதிரி ஒரு மெயில் அனுப்பிருப்பீங்க. அந்த மெயில அவனுக்கே திரும்ப அட்டாச்
பண்ணி அனுப்பி, "நா இந்த டவுட்ட அன்னிக்கே கேட்டேன்... நீங்க தான் clarify பண்ணல.. அதுனாலதான் இந்த fault" ன்னு அவன் பக்கமே ப்ளேட்ட திருப்பி போட்டுடனும். சத்தியமா நீங்க அனுப்ச மெயிலுக்கும் அவன் சொல்லிருந்த fault க்கும் சம்பந்தமே இருக்காது. ஆனா திருப்பி அடிக்கனும் குமாரு... அப்பதான் ஒரு வேளை தப்பு பண்ணிட்டோமோன்னு அவனுங்க பயப்படுவானுக. உடனே மானங்காத்த மகராசாவான உங்களுக்கு  ON THE SPOT AWARD ன்னு உங்க மேனேஜர்  ஒரு வெங்கல கிண்ணம் பரிசா குடுப்பாரு.

9. அப்புறம் உங்க பாஸ் கிட்ட எதாவது ஒர்க் குடுத்து ரிசல்ட் கேட்டுருக்காருனு வச்சிக்கோங்க.. அத எடுத்துகிட்டு பல்லகாட்டிகிட்டு காலையில வந்தோண அவர்கிட்ட போயி நின்னீங்கண்ணா மேட்டர் ஓவர்... அவரே அப்பதான் வீட்டுல wife ku சாப்பாடு செஞ்சு குடுத்துட்டு, கொழந்தைங்கள கெளப்பி ஸ்கூலுக்கு அனுப்பிட்டு வந்து கடுப்புல உக்காந்துருப்பாரு. அதனால காலைல பாஸ்கிட்ட டீலிங்குங்குறதே இருக்கக்கூடாது.. அப்புறம் எப்போ போறது? லஞ்ச் முடிச்சி ஒரு கால்மணி நேரம் கழிச்சி.. அப்பதான் அவரு அரை தூக்கத்துல இருப்பாரு.. நீங்க என்ன சொன்னாலும் ஆமா சொல்லுவாரு... வெள்ளை பேப்பர்ல கையெழுத்து வாங்குனாலும் அப்போ வாங்கிகிட்டாதான் உண்டு.


10. நீங்க வருசம் ஃபுல்லா ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தாலும் பரவால்ல.. ஆனா இந்த மார்ச் மாசம் மட்டும் தீயா வேலை செய்யனும் குமாரு... இந்த பாஸூங்கல்லாம் இருக்காங்களே... எல்லாரும் short term memory loss உள்ளவங்க... நீ ஜூன் மாசத்துல நாக்கு தள்ள வேலை செஞ்சிருந்தாலும் அத ஜுலை மாசத்தோட மறந்துடுவாங்க.  நீ மார்ச்ல என்ன பண்றியோ அதுதான் உனக்கு மார்க் போடும். அதுவும் பெரிய ஆஃபீசர்கள் நம்மள க்ராஸ் பண்றப்போதான் நாம மாமன் மகள் சத்யராஜ் மாதிரி “அந்த தாய்லாந்து பார்டி என்னாச்சி? “ஹாஜி.. I will come next week”  “ நமக்கு பையர்ஸயும் ஹாப்பி பண்ணி ஆகனும் கஸ்டமர்ஸயும் பாத்துக்கனும்.. பிஸினஸ் ட்ரெண்டு தெரியாம பேசுறீங்களே.. அப்புடி இப்புடின்னு காலே வராதா ஃபோன காதுல வச்சிட்டு எதாவது அடிச்சி விடனும். 

இவ்வாறாகச் செய்து வந்தால் வருடத்தின் இந்த நாள் மட்டுமல்லாமல் எந்த நாளும் இனிய நாளாகவே அமையும்.



எண்ணம் : நண்பன் அசால்டு அசார்
கருத்துக்கள் : நண்பன் அனந்த நாராயணன், நண்பன் கார்த்தி



10 comments:

  1. அப்படியா சொல்றீங்க? அப்படியே நம்ம பக்கமும் வாங்களேன். சூடா டீ சாப்பிடலாம். www.zrpxyzsenthil.com

    ReplyDelete
  2. Appadiye solringa Boss..super post....thanks boss...

    ReplyDelete
  3. எப்படி சிவா இப்படி கலக்குறிங்க

    ReplyDelete
  4. konjam tingaring patthu appdiye ennoda FB la potturukken.... officer post mattum

    ReplyDelete
  5. இப்படி தான் ஆபீஸ்ல பொழப்பு ஒடுதா ஹிஹி

    ReplyDelete
  6. really nice...:-))))

    ---SRK

    ReplyDelete
  7. தலை, அப்போ அப்போ கோடிங் பன்ற மாதிரி பாவ்லா காட்டிட்டு, ப்ளாக் எழுதனும்னு போட மறந்துட்டீங்களே :)

    நல்லா எழுதிருக்கீங்க பாஸு :D

    ReplyDelete
  8. நல்ல ஐடியாக்கள் தான்....

    நம்ம அலுவலகத்தில் இதையெல்லாம் செய்ய முடியாது! :(

    ReplyDelete