Tuesday, July 2, 2013

குழந்தைகளை வளர்ப்பது எப்படி?


ன்கு கொதிக்க வைத்த பாலில் இரண்டு டீஸ்பூன் காம்ப்ளானையும் ஒரு டீஸ்பூன் சர்க்கரையையும் சேர்த்து நன்கு கலக்கி ஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் கொடுத்து வந்தால் குழந்தைகள் ஒரு மாத்த்திற்கு ஒன்று முதல் இரண்டு செண்டிமீட்டர் வரை வளர்வார்கள். இத தான் விளம்பரத்துலயே சொல்றாய்ங்களே நாயே... நீ வேறயான்னு வெறிக்காதீங்க. நம்ம பாக்கப்போறது அந்த மாதிரி வளர்ச்சி இல்லை. உங்க குழந்தைகளை அறிவாளிகளாக, புத்திகூர்மை உள்ளவர்களாக, தன்னம்பிக்கை உள்ளவர்களாக, நல்ல எண்ணம் உடையவர்களாக வளர்ப்பது எப்படிங்குறத தான் நாம பாக்க போறோம்.

இந்த பதிவில் வரும் கருத்துக்கள் அனைத்தும் கல்வியாளர்என்.சி.ஸ்ரீதரனின் “குட்டீஸ் படிப்புஎன்ற இதழில் வெளியான கருத்துக்களின் திரிந்த வடிவமே. இத ஏஞ்சொல்றேன்னா நாளைக்கே இத பாஃலோ பண்ணியும் உங்க குழந்தை மங்கினியாவே வளருதுன்னு வச்சிக்குவோம்... அப்புறம் நீங்க என்னோட சட்டைய புடிக்க்க் கூடாது பாருங்க. எதா இருந்தாலும் அண்ணாத்தையவே கவனிச்சிக்குங்க.  

1. ஒரு குழந்தை வளர்ப்புங்கறது குழந்தை பிறந்த்துக்கு அப்புறம் ஆரம்பிக்கிற விஷயம் இல்லை. கருவிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டிய விஷயம். கருத்தரித்த இரண்டு வாரத்துலயே குழந்தைக்கு மூளை உருவாயிடுது.  இருபது வாரத்துல காதும் கேட்க ஆரம்பிச்சிடுது. அதுலருந்து அந்த குழந்தையோட அம்மா கேக்குற ஒவ்வொரு வார்த்தையும் கருவுல இருக்க குழந்தையும் கேக்குமாம். அதனால தான் கர்ப்ப காலத்துல பெண்கள் நல்ல விஷயங்களை பாக்கனும் நல்ல விஷயங்களை கேட்கனும். நல்ல சிந்தனையோட இருக்கனும். கர்பிணி பெண்களை வன்முறை காட்சிகளை டிவிலயும் சினிமாலயும் பார்க்க வேண்டாம்னு சொல்றதுக்கு முக்கியமான காரணம் இது தான்.  

2. கர்ப்ப காலங்கள்ல சந்தோஷமா இருக்க தாயோட குழந்தையும் ஆரோக்யமான மனநிலையோட  வளரும். அதனால தான் கற்பமா இருக்கும் போது பெண்கள் எது கேட்டாலும் வாங்கிகுடுத்து அவங்கள சந்தோஷமா வச்சிக்கிறாங்க. மீனா வண்ணத்து பூச்சி கேட்ட்தும் எஜமான்ல தலைவர் எப்புடி சேத்துல விழுந்து புரண்டு புடிச்சிடு வருவாரு... அதே மாதிரிதான்.

3.கருவுல இருக்கும் போது தாயோட மனநிலையும், குழந்தை பிறந்த அப்புறம் தாயோட செயல்களும், LKG, UKG  படிக்க செல்லும்போது அங்குள்ள டீச்சர்களும் ஆயாக்களுமே குழந்தையின் மனநிலையை பெரிதும் பாதிக்கிறதாம். அதாவது குழந்தை முதல் நான்கு வயதுக்குள் யார் யாருடன் பழகுதோ,  அவங்களோட தாக்கம் குழந்தைகளின் பழக்க வழக்கங்களில் அதிகமாக இருக்கும். அதனால குழந்தை யார் யாருடன் பழகனும்ங்கறத பெற்றோர்கள் தான் கவனமா தேர்வு செய்யனும்.  

4.குழந்தைகங்களுக்கு பெற்றவங்க தான் ரோல் மாடல். அதாவது நீங்க எப்டி நடந்துக்கிறீங்கங்கற பொறுத்தே குழந்தையின் செயல்பாடுகள் அமையுமாம்.  உதாரணமா குழந்தையோட அப்பா ஒவ்வொரு விஷயத்துலயும் பொறுப்பில்லாதவரா இருந்தா குழந்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அதயே ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிரும். அப்புறம் “அப்பனுக்கு புள்ளை தப்பாம பொறந்துருக்குதுன்னு அம்மாகிட்ட அசிங்கமா அதுவும் திட்டுவாங்க வேண்டியிருக்கும். (நோட் திஸ் பாய்ண்ட்- அதுவும்)

5.குழந்தைகளோட உணவுப் பழக்க வழக்கம்ங்கறது இன்னொரு முக்கியமான விஷயம். சின்ன வயசுல பெரும்பாலும் சாப்பாட்டுல காய்கறிகளும், பழங்களுமே இருக்கட்டும். ஜங்க் புட்டுங்கள தவிர்ப்பது சின்ன வயசுக்கு மட்டுமில்ல எந்த வயசுக்குமே நல்லது.


6.சின்ன வயசுலயே படிக்கும் பழக்கத்தினை குழந்தைகள்ட ஏற்படுத்தனும். பழக்கத்தை ஏற்படுத்தனுமே தவற புகுத்த கூடாது.. உங்க வீட்டுலயே சின்ன சின்ன நாவலுங்க, கதை புத்தகம், மேப்புங்க, டிக் ஷ்னரி போன்றவற்றை வாங்கி ஒரு சின்ன லைப்ர்ரி அமைப்ப ஏற்படுத்திக்கிறது நல்லது. தினமும் உங்களுக்கு தூக்கம் வந்தாலும் உங்க குழந்தைக்காகவாது எதயாது படிக்கிறமாதிரி கொஞ்சம் நடிங்க. கொஞ்ச நாள்ல அந்த பழக்கம் குழந்தைக்கும் கொஞ்சம் கொஞ்சமா வந்துடும்.

7..உரக்க படிக்கும் பழக்கத்தை உங்க குழந்தைகிட்ட கொண்டு வரணும். சத்தம் போட்டு படிக்கிறதால படிக்கிற விஷயம் மனசுல ஈஸியா பதியிறதோட மட்டுமில்லாம வார்த்தை உச்சரிப்பு தெளிவா வர உதவும். தெளிவான வார்த்தை உச்சரிப்புங்கறது எஃபெக்டிவ் கம்யூனிகேஷனுக்கு மிகவும் முக்கியமான ஒண்ணு. எங்க காலேஜ்ல பெரும்பாலன பேரு சத்தம் போட்டு படிப்போம்... ஆனா என் நண்பன் ஒருத்தன் மட்டும் தலைகாணிய போட்டு அதுமேல குப்புற படுத்திகிட்டு புத்தகத்தை வெறிக்க வெறிக்க பாப்பான். (மனசுக்குள்ளயே படிக்கிறாராம்) கொஞ்ச நேரத்துல துணி கிழியிற மாதிரி டர்ர்ர் ன்னு லேசா ஒரு சவுண்டு கேக்கும். வேற ஒண்ணும் இல்லை. நம்மாளு தூங்கிருவான். “டேய் எழுந்து படிடான்னு நாம மெனக்கெட்டு எழுப்புனா “மச்சி நா தூங்கல மச்சி ரிவிஷன் பண்றேன்ன்னு ஒரு சிரிப்பு சிரிப்பான் பாருங்க. “நீ நல்லா ரிவிசன் பண்ணுப்பான்னு நாங்க கெளம்பிருவோம். உரக்க படிக்காம மனசுக்குள்ளயே படிக்கிறது மூளைய சோர்வாக்கி சீக்கிரமே கொட்டாவியை வரவழைச்சிடும்.

8. உங்கள் குழந்தை செய்யும் ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் நீங்க பாராட்டனும். அது எவ்வளவு சின்ன விஷயமா இருந்தாலும் பாராட்டனும். குறிப்பா  உங்க குழந்தைகளை பெரிய மாமேதைகளோட ஒப்பிட்டு பேசுறது அவங்களோட self confidence  ரொம்ப அதிகரிக்கும். உதாரணமா உங்க குழந்தை கணக்குல அதிகம் மார்க் எடுத்தா என் புள்ள ராமானுஜம் மாதிரி கணக்குல புலின்னும், கிரிக்கெட் நல்லா விளையாண்டா என் புள்ள சச்சின் மாதிரி விளையாடுறான்னும் பெருமைப்படுத்தி பேசனும். தினமும் ஒரு பத்து நிமிஷம் உங்க குழந்தைய பாராட்ட நேரம் ஒதுக்குங்க.

9.Pessimistic  ah  குழந்தைகள பேசவே கூடாது. அதாவது உங்க குழந்தைகிட்ட இருக்க குறைகளை அதிகம் பேசக்கூடாது. உதாரணமா உங்க குழந்தை எல்லா பாடமும் நல்லா மார்க் எடுத்து கணக்குல மட்டும் கம்மியான மார்க் எடுத்தான்னா “இவனுக்கு சுட்டு போட்டாலும் கணக்கு வரமாட்டேங்குது “ இந்த லூசுப்பயலுக்கு கெமிஸ்ட்ரி சுத்தமா மண்டையில ஏற மாட்டேங்குதுங்குற மாதிரி பேச்சே இருக்க கூடாது. “ஏம் புள்ள அதெல்லாம் ஆடி போயி ஆனி போயி ஆவணி வந்தா டாப்பா வந்துருவான்ன்னு பாஸிடிவாவே பேசனும்.

10.குழந்தைகளை திட்டுவதை சுத்தமா குறைக்கனும். ஏன்னு சொல்றேன் கேளுங்க. நாம படிக்கும் ஒவ்வொரு விஷயமும் மூளையில இருக்க நியூரான்கள்ல தான் பதிவாகுது. ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 160 கோடி நியூரான்கள் இருக்கு. ஒவ்வொரு நியூரானிலும் 2 லட்சம் தகவல்கள சேமிச்சி வச்சிக்கலாம். கணக்கு பண்ணி பாருங்க நம்ம மூளையில எவ்வளவு தகவல சேமிச்சி வைக்கலாம்னு. (உலகத்துலயே நம்ம மூளைதான் மிகப்பெரிய hard disc.  ஆன எவ்வளவு பெரிய hard disc இருந்து என்ன ப்ரயோஜனம்.. அதுல ஒரு பட்த்த சேவ் பண்ணி சிஸ்டம்ல போட்டு பாக்க முடியுமா?)

 இதுவரைக்கும் மூளைய அதிகமாபயன்படுத்துனவங்களே மூளையோட திறன்ல ஆயிரத்துல ஒரு பங்குதான் யூஸ் பண்ணிருக்காங்கலாம். பொதுவாவே ஒரு நாளைக்கு 10,000 முதல் 15000 நியூரான்கள் இயற்கையாகவே அழிஞ்சிடும். அதே ஒரு குழந்தைய திட்டும் போது பல்புல ப்யூஸ் போவத போல 25000 முதல் 30000 நியூரான்கள வரை செயலிழந்து போயிடுது. அதுக்கப்புறம் அந்த நியூரான்கள் தகவல் சேமித்து வைக்க உபயோகப்படாது. எனவே அடிக்கடி பெற்றோரிடம் திட்டு வாங்கும் குழந்தைகள் மழுங்கினிகளாக ஆவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.


(அடுத்த பதிப்பில் தொடரும்)



4 comments:

  1. அண்ணே ரொம்ப பயனுள்ள தகவல் எனக்கு என்ன நான் இன்னும் 5 மாததுல்ல தந்தை ஆகா போகிறேன் புள்ளங்க முன்னாடி நல்லவங்க மாதிரி நடிச்ச தான் அது நல்ல புள்ளைய வளருமா ஓகே நடிக்கிறேன் சிவாஜி மாதிரிஹிஹி

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நண்பா :)

    கரெக்ட் அதே தான். சிவாஜியே தான்

    ReplyDelete
  3. சிறப்பான தகவல்கள் சிவா.... தொடரட்டும்.... நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. Supera Sonninga Sir...
    Continue your gud job.

    ReplyDelete