Sunday, September 22, 2013

யா யா - கொஞ்சம் ஆஹா!! கொஞ்சம் ஸ்வாகா!!

தலைவாங்குற திரைக்காவியதிற்கு அப்புறம் ரொம்ப நாள் ஆகியும் படம் எதுவும் பாக்கவே முடியல. "அடுத்து பாக்கலாம்னு இருக்கேன்"ன்னு மதகஜராஜா போஸ்டர போன டிசம்பர்ல போட்டேன்நா என்னிக்கு போட்டேனோ அன்னிக்கே அவிங்களுக்கு சனியன் புடிச்சிருச்சி போல. அடுத்த டிசம்பரே வந்துருச்சி. இன்னும் ரிலீஸ் ஆகல. ரெண்டு மூணு வாரத்துக்கு மேல படம் பாக்காததால கைகாலெல்லாம் நடுக்க ஆரம்பிச்சிருச்சி. சிவாவ எனக்கு ரொம்ப பிடிக்கும்னாலும் தில்லு முல்லு பாத்தப்புறம் கொஞ்சம் பீதியாத்தான் இருந்துச்சி. சரி சிவாவுக்காக இல்லைன்னாலும் தலைவன் பவருக்காகவாது படத்த பாக்கனும்னு ரெண்டு நாள் முன்னாலயே ஃபிக்ஸ் ஆயிட்டேன். நேத்து கம்பெனி விட்டு வீட்டுக்கு வந்தப்புறம் தான் தெரிஞ்சிது நேத்திக்கு மும்பைக்கு மேட்சுன்னு. சரின்னு ப்ளான கேன்சல் பண்ணிட்டு மேட்ச பாக்க ஆரம்பிச்சேன். அரைமணி நேரத்துல தலைவர் 15 ரன்னுல விடைபெற நானும் வீட்டுலருந்து விடைபெற்று படத்துக்கு கெளம்பிட்டேன்.



ராமராஜனோன தீவிர ஃபேனான ரேகா தன்னோட பையனுக்கு ராமராஜன்னு பேர் வைக்கிறாங்க. அதே மாதிரி ராஜ் கிரனோட தீவிர ஃபேனான இன்னொருத்தர் அவரோட பையனுக்கு ராஜ்கிரன்னு பேரு வைக்கிறாரு. இந்த ரெண்டு பசங்களுமே தங்களோட பேரு புடிக்காம ராமராஜன தோணின்னும் ராஜ்கிரன சேவாக்குன்னும் மாத்தி வச்சிக்கிட்டு ஊருக்குள்ள அலையிறாங்க. இவங்க ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸானப்புறம் தோணிக்கு ஏற்படுர காதலால நடக்குற சில சம்பவங்கள் தான் படம். அதெல்லாம் இருக்கட்டும் சரி கதைய சொல்லுன்னு தானே கேக்குறீங்க... அட இதாங்க கதையே. நா என்ன வச்சிக்கிட்டா இல்லைங்குறேன்.

இப்பல்லாம் எந்த படத்துலங்க கதையெல்லாம் இருக்கு. இதெல்லாம் ஒரு மேட்டரா. ஆனா படம் ஆரம்பிச்சதுலருந்து முதல் பாதி முழுசுமே இதப்பத்தியெல்லாம் கவலப்பட வைக்காம ஜாலியா
சிரிக்க வச்சிருக்காங்க. சிவா திரும்பவும் ஒரளவுக்கு பழைய ஃபார்முக்கு வந்துட்டாரு. சில இடங்கள்ல லைட்டா மொக்கையானாலும் பல இடங்கள்ல செமையா சிரிக்க வச்சிருக்காரு. மத்ததெல்லாம் ஓக்கே தான் ஆனா பாட்டுல நம்மாளுக்கு என்ன பண்றதுன்னே தெரியாம காமெடி சீன்ல நடிக்கிற மாதிரியே பல்ல காட்டிக்கிட்டே இருக்காரு. இந்த மூஞ்சி பாட்டுக்கு டான்ஸ் ஆடுற மூஞ்சியே அல்ல.

சந்தானம் வழக்கம் போலவே தாறு மாறு. சண்டைக்கோழில விஷாலுக்கு வர்ற பில்டப் சீன் டைப்புல இவருக்கு வர்ற இண்ட்ரோ செம.. ஒரே  மாதிரி நடிச்சி நடிச்சி அவருக்கே அலுத்து போச்சி போல. நிறைய காட்சிகள்ல அவர் முகத்துல ஏதோ வேண்டா வெறுப்பா நடிச்சிட்டு இருக்க மாதிரியே ரியாக்ஷன். தீயா வேலை செய்யனும் குமாரு படத்துல செகண்ட் ஹாஃப்ல வர்ற அதே நெகடிவ் ரோல் தான் சந்தானத்துக்கு இந்த படத்துலயும். தன்ஷிகா செம அழகு இந்த படத்துல.

படத்துக்கு இன்னோரு பெரிய ப்ளஸ்.. பவரு... 10 நிமிஷம் வந்தாலும் பட்டைய கெளப்பிருக்காரு. முன்னடியோல இப்போ தொப்பையெல்லாம் கொறைச்சி ஸ்மார்ட் ஆயிட்டாரு (அவ்வ்) அடுத்த படத்துல சிக்ஸ் பேக்கோட வந்தாலும் ஆச்சர்யப்ப்டுறதுக்கு இல்லை. பவர் வர்ற அத்தனை சீனுமே பழைய ஹிட் படங்களோட ஸ்பூஃப் காட்சிகள்ங்கும் போது கண்டிப்பா சிரிப்ப அடக்க முடியல. சிங்கம் சூர்யா மாதிரியும், போக்கிரி விஜய் மாதிரியும், பில்லா அஜித் மாதிரியும், விருமாண்டி கமல் மாதிரியும் எந்திரன் ரஜினி மாதிரியும் வந்து தெரிக்க விடுறாரு. அதுலயும் எந்திரன் சீன்ல "soldiers roatate your heads" ன்னு சொன்னோன அந்த ரோபோக்கள்ளாம் தலைய சுத்துரது செம காமெடி.

ரெண்டாவது பாதி வந்தப்புறம் தான் படம் அருக்க ஆரம்பிக்குது. என்ன எடுக்குறதுன்னே தெரியாம கண்ட மேனிக்கு சீன்ஸ் வருது. முதல் பாதில இருந்ததுக்கு பாதி அளவு கூட செகண்ட் ஹாஃப்ல காமெடி இல்லை. படத்துல இன்னும் ரெண்டு பெரிய மைனஸ் என்னன்னா ஒண்ணு தேவதர்ஷினி கேரக்டர். இன்னொன்னு காதல் சந்தியா கேரக்டர். கவுன்சிலரா பெரிய பல்லோட வர்ற தேவதர்ஷினி வர்ற காட்சிங்க அத்தனியுமே கண்றாவி. காமெடிக்கு பதிலா கடுப்பே வருது.  ஆரம்பத்துலருந்து  சந்தானத்த தலைவா ஸ்டைல்ல "ப்ரோ" "ப்ரோ" ன்னு கூப்டுட்டு கடைசில ப்ரோன்னா ப்ரதர் இல்லடா ப்ரோக்கர்ங்கறது செம.

அப்புறம் டொப்பி மூக்கி காதல் சந்தியா... இது மூஞ்ச 10 செகண்ட் உத்து பாத்தா போதும்ஸ்பாட்லயே வாந்தி எடுப்பீங்க. கருமம். இது வர்ற சீன் எல்லாமே எரிச்சலா வருது. அதுவும்  இத சந்தானத்துக்கு ஜோடியா போட்டு செகண்ட் ஹாஃப்ல சந்தானம் இதுகூட ரொமான்ஸ் பண்ற மாதிரியான சீன்ஸ் எல்லாமே அருவருப்பு தான். பாட்டெல்லாம் மொத தடவ படம் பாக்கும் போது தான் கேட்டேன். நல்லா தான் இருந்துச்சி. அருக்குற மாதிரியெல்லாம் இல்லை.

"இவர் தாங்க தோணி... இவருக்கு ஏன் தோணின்னு பேரு வந்துச்சின்னா.... "   "இவரு தாங்க தோணியோட அப்பா... இவரு எப்டிபட்டவர்னா..." "இவங்க தாங்க தோணியோட அம்மா.. இவங்க ராமராஜனோட தீவிர ஃபேன்" இப்டின்னு படம் ஆரம்பிக்கும் போது கேரக்டர இண்ட்ரொடியூஸ் பண்றேங்குற பேர்ல டைரக்டர் வந்து narrate பண்ணப்போ தியேட்டர விட்டு எழுந்து ஓடிரலாம் போல இருந்துச்சி.. எத்தன படத்துலடா இதே மாதிரியே background narrate பண்ணி அருப்பீங்க.. யப்பா டேய்.. போதும்பா... ஆனா போகப்போக டைரக்டர் ஓரளவு தேரிருவான்னு தான் தோணுச்சி. முதல் பாதியோட முடியிறாப்புல போன கதைய தேவையில்லாம வழ வழன்னு இழுத்து சம்பந்தமில்லா காட்சிங்கள வச்சி செகண்ட் ஹாஃப்ல ஒட்டாம போயிடுச்சி.

மத்தபடி படம் கண்டிப்பா ஒரு தடவ பாக்கலாம். சில அருவை காட்சிகள தவற படம் ஃபுல்லாவுமே செம காமெடி. சிவாவோட தில்லு முல்லுக்கு இந்த படம் 10 மடங்கு பரவால்ல.

Wednesday, September 4, 2013

FACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி -வெர்ஷன் 2.0!!!


இந்த பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையும் குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும் நோக்குடனோ எழுதப்பட்டது அல்ல. ஃபேஸ்புக் முன்னாடி மாதிரியெல்லாம்  இல்லாப்பா... முன்னாடியெல்லாம் ஃபேஸ்புக்கு போர் அடிச்சா அப்பப்போ வந்துட்டு போவாய்ங்க. ஆனா இப்போ அப்பப்போ போர் அடிச்சா தான் எழுந்தே போறாய்ங்க. உலக நியூஸெல்லாத்தயும் தெரிஞ்சிக்க நீங்க எந்த லைவ் சேனலையும் பாக்க தேவையில்ல.  ஃபேஸ்புக்க ஓப்பன் பண்ணி வச்சிகிட்டு news feed பாத்தாலே போதும். எந்தெந்த மூலையில என்னென்ன நடக்குதோ எல்லாத்தயும் செகண்ட் பிசிறாம அப்டேட் பண்றாய்ங்க. ஹலோ,..நியூஸ ச்சொன்னேன்ங்க. இந்த competitive social நெட்வொர்க்குல நீங்க அப்பாட்டகர் ஆகனும்னா நீங்க கடுமையா உழைச்சாதான் முடியும். என்னடா சாஃப்ட்வேர் கம்பெனில orientation class எடுக்குற old ஆஃபீசர் மாதிரி பேசுறானேன்னு வெறிக்காதீங்க. உண்மையத் தான் சொன்னேன்.  முன்னாடி மாதிரி அப்பப்போ சீசனுக்கு வந்துட்டு நீங்க குற்றால சீசனுக்கு போனப்போ எடுத்த ஃபோட்டோக்கள மட்டும் அப்டேட் பண்ணிட்டு போறமாதிரி இல்ல இப்போ...இப்ப ரேஞ்சே வேற... அதுக்காகத்தான் "தீயா வேலை செய்யனும் குமாரு"ன்னு திருவள்ளுவரே சொல்லிருக்காரு.  என்னென்ன பண்ணனும்னு இப்போ பாப்போம்.

1. உங்களுக்கு நியூஸ் பேப்பர் படிக்கிற பழக்கம் இருக்கா? இல்லைன்னா இனிமே கண்டிப்பா படிக்கனும். தினமும் படிக்கனும். வரி வரியா படிக்கனும். கண்டிப்பா எதாவது ஒரு பக்கத்துல எவனாது ஒருத்தன் செம்ம காமெடியா அறிக்கை ஒண்ணு விட்டுருப்பான். என்ன SA சந்திரசேகர் மாதிரியான்னு கேக்குறீங்களா? ச்ச ச்ச... அத என் வாயால சொல்ல மாட்டேன். உடனே அத அப்புடியே காப்பி பண்ணி போட்டு அதுக்கு கீழ ஒரு # போட்டு அவன கலாய்க்கிற மாதிரி ஒரு கவுண்டமணி டயலாக்கோ இல்லை ஒரு சந்தானம் டயலாக்கையோ போட்டா அள்ளிக்கும். அதாவது அவர நீங்க கலாய்ச்சிட்டீக வேற ஒண்ணும் இல்லை.

2. நீங்க கண்டிப்பா அரசியல்ல இருக்கனும். என்னது அரசியல் புடிக்காதா? அட ஏங்க நீங்க வேற அந்த கருமத்த புடிக்கல்லாம் வேண்டியதில்லை. புடிச்சா மாதிரி நடிச்சா போதும். அதாவது நீங்க அய்யா ரசிகராகவோ இல்லை அம்மா ரசிகராகவோ கண்டிப்பா இருக்கனும். அப்பதான் ஆப்போசிட் குரூப் கூட அடிச்சிகிட்டு நாறுறதுக்கு வசதியா இருக்கும். அவன் உங்க குடும்பத்த பத்தி அசிங்கமா திட்ட நீங்க அவன் குடும்பத்த பத்தி அசிங்கமா திட்ட உங்களுக்கு டைம் போறதே தெரியாது. சுத்தி இருக்கவிங்க "டேய் இவிங்க பெரிய ரவுடிங்கடோய்" ன்னு உங்கள பாத்தாலே அப்புறம் டர்ர் ஆயிருவாங்க. ஆட்சில  இந்தாலும் சரி எதிர்கட்சியா இருந்தாலும் சரி இந்த ரெண்டு கட்சில இருந்தா எப்பவுமே உங்க வண்டி ஓடும்

1950 அய்யா ஒரு போராட்டம் பண்ணாரு பாருங்கன்னு அங்க ஆரம்பிச்சா, 2004 அம்மா ஒரு திட்டம் போட்டாங்க பாருங்கன்னு இங்க ஆரம்பிப்பாய்ங்க. ஆனா ரெண்டுபேருமே மக்களுக்கு நல்லா கொழைச்சி நாமத்த தான் போட்டாய்ங்குறதல்லாம் நீங்க மறந்துடனும். யாருபக்கம் இருக்கீங்களோ அவங்க பக்கம் உண்மையான தொண்டனா இருக்கனும்.  என்னது நாம் தமிழர் கட்சில இருக்கலாமான்னு கேக்குறீங்களா? ஹலோ இங்க சீரியஸா பேசிகிட்டு  இருக்கேன் பாஸ்

3. போராடுறதுங்குறது ரொம்ப முக்கியம். எதுக்காக போராடுறோம் அப்டிங்குறதெல்லாம் முக்கியம் இல்லை. உதாரணமா 50 வருஷத்துக்கு முன்னாடி பிரிஞ்சி போன பாக்கிஸ்தான இந்தியா கூட இணைக்கனும்னு போராடலாம். இல்லைன்னா சைனால ஒரு பகுதிய இந்தியாகூட சேத்துக்கணும்னு போராடலாம். அதாவது எப்பிடி சொல்றேன்னா… கிழிஞ்ச கொடைதான் வேணும்.. ஆனா கிழியாம வேணும்னு கேக்கனும். அப்பதான் கடைசி வரைக்கும் அது நடக்காது. நீங்க bore அடிக்கிறப்பல்லாம் போராடிகிட்டே இருக்கலாம்.

4. டாலருக்கு நிகரா இந்தியா ரூபாயோட மதிப்ப உயர்த்துரது எப்படி? இந்தியாவ வல்லரசா ஆக்கனும்னா என்ன பண்ணனும்? அப்டின்னெல்லாம் மன்மோகன் சிங், பா.சிதம்பரம் போன்றவங்களுக்கு நீங்க அட்வைஸ் குடுக்கனும். இந்தியாவுலயே ரெண்டே அறிவாளிங்க. ஒண்ணு ஜி.டி.நாயுடு இன்னொன்னு நீங்கங்குற மாதிரி மெயிண்டெய்ன் பண்ணனும். அதாவது அவங்களுக்கு எதுவும் தெரியாத மாதிரியும் அவங்க இருக்க வேண்டிய எடத்துல நீங்க இருந்தா நாட்ட முன்னேத்திருவீங்கங்குற மாதிரியும் ஐடியாக்கள அள்ளி வீசனும். சில சமயங்கள்ல எதாவது தீர்ப்பு தப்பாகிட்டா சுப்ரீம் கோர்டு ஜட்ஜூக்கே நீங்க அட்வைஸ் பண்ணலாம். எவன் கேக்க போறா..

5. சரி அரசியல் சுத்தமா உங்களுக்கு வரவே இல்லைன்னா பரவால்ல விடுங்க. அட்லீஸ்ட் அஜித் இல்லைன்னா விஜய் இதுங்க ரெண்டு பேர்ல யாரோட fan ah வாது இருங்க. அதுவும் செம fun ah இருக்கும். ஆனா முன்னாடி மாதிரி டைரக்டா அடிக்க கூடாது. இப்பல்லாம் ராசதந்திரத்த யூஸ் பண்ணனும். உங்களுக்கு விஜய்ய புடிக்காதுன்னா அவர டைரக்ட்டா ஓட்டிர கூடாது. அஜித்தும் விஜய்யும் இருக்க ஒரு போட்டோவ போட்டு which legend you like most? hit like for Ajith Comment for Vijay ன்னு போடனும். அதாவது யார உங்களுக்கு புடிக்குமோ அவருக்கு லைக்கும் யார உங்களுக்கு புடிக்காதோ அவருக்கு கமெண்ட்டும் போட சொல்லனும். ஏன்னா லைக் போடுறது தான் ஈஸி. எவனும் அவ்வளவு ரிஸ்க் எடுத்து கமெண்ட் போட மாட்டாய்ங்க. ஏன்னா we are  basically சோம்பேரிங்கல்ல. கடைசில பாத்தா 600 லைக்கும் வெறும் 35 கமெண்ட்டும் வந்துருக்கும். இதே டெக்னிக்க சச்சின் - தோணி , CSK -MI ன்னு உங்களுக்கு வேண்டிய காம்பினேஷன்கள்ல யூஸ் பண்ணிக்க வேண்டியதுதான்.

6.  எனக்கு நண்பர்கள் வட்டம் 5000 தொடப்போகிறது. எனக்கு தினமும் 50 புது request கள் வருகின்றன. தயவு செய்து யாரும் எனக்கு ரிக்வெஸ்ட் தரவேண்டாம்" அப்டின்னு ஒரு ஸ்டேட்டஸ  போடுங்க. ஏண்டா நாயே ஏற்கனவே உன் ஃப்ரண்ட்ஸா இருக்கவிங்களுக்கு தானடா இந்த ஸ்டேட்டஸே தெரியும். அது தெரியாம விளம்பரத்துக்கு ஸ்டேட்டஸ பாரு. இப்புடியெல்லாம் என்னைய மாதிரி யாரும் கேக்க மாட்டாய்ங்க. நீங்க தைரியமா போடுங்கப்பு. என்னது உங்களுக்கு இதுவரைக்கும் 500 ஃப்ரண்ட்ஸ் தான் இருக்காங்களா. அதுவும் நீங்களா தேடிப்போயி ஃப்ரண்ட் ரிக்வெஸ்ட் குடுத்து சேத்தவிங்களா.. அட பரவால்லீங்க.. 5000 ம்னு போட்டா எவனும் உங்க profile குள்ள போய் நோண்டியெல்லாம் பாக்க மாட்டாய்ங்க. அட கல்யாண பத்திரிக்கையில MBA, PHD ன்னு நமக்கு தோணுறதயெல்லாம் போடுறோம். எவனாவது வந்து நம்ம கிட்ட certificate ah  கேக்குறான். அந்த கணக்கு தான் இதுவும்

7. அப்பபோ திடீர் திடீர்னு “என்னை வீணாக வம்புக்கு இழுக்கிறார்கள்” “அவர் என்னை ப்ளாக் செய்து விட்டார்” “நான் அவர்களை ப்ளாக் செய்துவிட்டேன்” “இவர் என்னுடன் சண்டை போடுகிறார்” அப்புடி இப்புடின்னு நீங்களா எதயாது கெளப்பி விடனும். உண்மையிலயே ஒரு நாய் கூட உங்கள சீண்டிருக்காது.  ஆனா இதெல்லாம் ஏண் பண்ணனும் ஒரு விளம்பரம் தான். அப்பதான் நாலு பேருகிட்ட போய் நம்மள பத்தி சொல்லுவாங்க. குறிப்பா அந்த அம்மணி அக்காட்ட சொல்லுவாங்க.

8. “Very useful information… please share this” அப்டின்னு ஒரு போஸ்ட் இருந்துச்சின்னா கண்ண மூடிகிட்டு படக்குன்னு அத ஷேர் பண்ணிரனும். அதுல என்ன கண்றாவி இருந்தா என்ன? கண்டுக்கவே கூடாது. “அரளி விதையை நன்கு அம்மியில் வைத்து அரைத்து அதனுடன் நான்கு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இதயத்திற்கு ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்” அப்டின்னு ஒருத்தன் போட்டுருப்பான். உண்மையிலயே அத ஃபாலோ பண்ணா ரத்த வாந்தி எடுத்து தான் சாகனும். ஆனா நாம அதயும் ஷேர் பண்ணுவோம். நாலு பேருக்கு நல்லது நடக்கனும்னா எதுவும் தப்பில்ல.



9.  "Starting from chennai.. On the way to Delhi" இப்படியெல்லாம் ஒரு காலத்துல நீங்க ஸ்டேட்டஸ் போட்டவரா? தயவுசெஞ்சி இனிமே அத பண்ணாதீங்க. ஏன்னா லோக்கல் ஸ்டேட்டஸ் போடுறவங்கள எல்லாம் மக்கள் யாரும் மதிக்கிறதே இல்லை. "Starting from L.A to D.C..  24º C it’s too hot in here" அப்புடின்னு ஒரு இண்டர்நேஷனல் ஸ்டேட்டஸ் போடுங்க. எப்புடி கலக்குறீங்க பாருங்க.  "24º C its too hot " ன்னு நீங்க போட்டத பாத்து "பாப்பநாயக்கம் பட்டில  45 டிகிரி வெயில்ல எறுமை மாடு மேய்ச்சவிங்களுக்கு 24 டிகிரி  too hot ah.. அடிங்கோ" ன்னு கேக்க மனசுக்குள்ள தோணும். ஆனா சபை நாகரீகம் கருதி... "Awesome மச்சான்... கலக்கு" அப்புடின்னு தான் நம்ம நண்பர்கள் போடுவாங்க. So பப்ளிக்கா யாரும் திட்ட முடியாது. நீங்க தெறிக்க விடலாம்.

10. அப்புறம்  ஒரு தாய்லாந்து டென்னிஸ் ப்ளேயரும் நார்வே ஃபுட்பால் ப்ளேயரும் ஒண்ணா நிக்கிற மாதிரி ஒரு ஃபோட்டோவ போட்டு "You cannot scroll down without liking this picture" அப்புடின்னு போடுங்க. ஆமா யாரு இவிங்க... ஏன் இத லைக் பண்ண சொல்றாய்ங்க... ஒரு வேளை லைக் பண்ணலன்னா சாமி குத்தம் ஆயிடுமோ" ன்னு பயந்துகிட்டு அந்த ஃபோட்டோவுல இருக்கது யாருன்னு கூட தெரியாம நம்மாளுக லைக்க அள்ளி வீசுவாய்ங்க. ஏண்டா நமக்கு டென்னிஸ்ல தெரிஞ்சது  என்னவோ மிர்ஸாவ மட்டும் தான். நீங்க அயல்நாட்டு வீரர்கள் போஸ்டரயெல்லாம் போட்டா உடனே "இவரு பெரிய ஆட்டக்காரருடோய்" ன்னு உங்க ரேஞ்சே எங்கயோ போயிரும். ஒரு வேளை உண்மைய்லயே அந்த  ப்ளேயர தெரிஞ்ச எவனாவது உங்ககிட்ட வந்து "இவரு அந்த 2012 விம்பிள்டன்  ஓப்பன்ல ஒரு ஷாட் அடிச்சாரு பாருங்க" ன்னு ஆரம்பிச்சா …… "அச்சா... கிதர்...." அப்டின்னு தலைவா விஜய் மாதிரி எஸ்கேப்  ஆயிருங்க.

11. இப்போ மேல பாத்தத விட லைக் வாங்குறதுக்கு காவாலித்தனமான வேலை இன்னொன்னு இருக்கு. எல்லாருக்கும் நல்லா பாத்தோன புரியிற மாதிரி ஒரு ஃபோட்டோவ போட்டு "புரிஞ்சவன் லைக் பண்ணு... புரியாதவன் கெளம்பு கெளம்பு" ன்னு போடனும். பாத்தோன புரிஞ்சாலும் ஒரு வேளை நமக்கு தெரியாம எதாவது அல்ஃபான்ஸ் குல்ஃபான்ஸ் மறைஞ்சிருக்குமோனு ரொம்ப நேரம் தேடிப்பாப்பாய்ங்க. ஒருவேளை உண்மையிலயே  அவனுக்கு அந்த ஃபோட்டோ புரியலன்னாலும் "எவன் பொண்டாட்டியெல்லாம் பத்தினியோ அவன் அவன் கண்ணுக்கு மட்டும் தாண்டா கடவுள் தெரிவாறுன்னு வடிவேலு சொன்னோன எல்லா பயலும் கடவுள்  தெரியிறாரு தெரியிறாருன்னு" சொல்றது மாதிரி வெளங்கலன்னாலும் லைக் நிச்சயம். நம்மளுக்கு இருக்க அறிவுக்கு நாமலே அந்த ஃபோட்டோவ புரிஞ்சி லைக் பண்ணிருக்கோம்... அடுத்தவனுக்கு புரியாமையா இருக்கும் அப்டிங்குற நெனைப்பு உங்க மூளையோட எதாவது ஒரு மூலையில இருந்தா சரி.

12.  என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்? நாயே சுத்திப் பாத்தா உனக்கே தெரியலயா அப்டின்னு நீங்க கோவப் படக்கூடாது. உங்களுக்கே தெரியும் என்ன மாதிரியான சமூகத்துல நீங்க வாழ்றீங்கன்னு. ஆனா அத நீங்க காட்டிக்க கூடாது. 30 வருஷ வாழ்க்கைய அமெரிக்காவுல கழிச்சிட்டு, அப்டியே ஆஸ்ரேலியா போய் அங்க ஒரு 5 வருஷம் சிறப்பிச்சிட்டு போனா போகுதுன்னு இந்தியா நீங்க வந்துட்ட மாதிரி உங்களுக்குள்ள நீங்களே நினைச்சிகிட்டுபொதுமக்கள் நடக்கும் சாலையில்  எச்சில் துப்புகின்றனர் காட்டு மிராண்டிகள். என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்?" அப்டின்னு ஒரு கேள்விக் குறிய போட்டு ஒரு ஸ்டேட்டஸ் போட்டீங்கன்னு வச்சிக்குங்க... கல்லப் பொறுக்கி உங்க மேல விட்டு எறியனும் போல உள்ளுக்குள்ள தோணும். ஆனா பண்ணமாட்டாங்காளே...  "ஆமா பாஸ்... கரெக்டா சொன்னீங்க... " ன்னு ஒருத்தன் வந்து உங்களுக்கு ஜால்ரா போடுவான். அந்த நாயி மொத நாள் நைட்டு ஃபுல்லா குஸ்டு  நடு ரோட்டுல வாந்தி எடுத்து வச்சிருக்கும். ஆனா இங்க வந்து சமுதாய தீர்திருத்த வாதி மாதிரி பேசும். ஆனா அதுதான நமக்கு வேணும்.

13. "Me @ KFC with Priya ramesh & Gayathri Jeyaram " சரி அதுக்கு இப்போ என்னடா பண்ணனும்? நீ ரெண்டு புள்ளைங்கள கூப்டுகிட்டு ஊர்சுத்த போயிருக்க. அத எல்லாருக்கும் சொல்லனும் அதானே உன் ஆச? மொத நாள் வரைக்கும் தெரு முக்குல இருக்க ஆந்த்ரா மெஸ்ஸூல unlimited meals ah unlimited ah திண்ணுகிட்டு இருந்துருப்பான். புள்ளைங்கள பாத்தா மட்டும் KFC, Mc.Donald, Wangs Kitchen இதுமாதிரி தான் கண்ணுக்கு தெரியும். இதுல அத விட கொடுமையான விஷயம் என்னன்னா அந்த ஸ்டேடஸ அந்த ரெண்டு புள்ளைங்களுமே லைக் பண்ணிகிட்டு (அதுங்க மட்டும்) அதுல ஒரு புள்ள "Having fun... tanks a lot"  ன்னு போட்டு மத்த ரெண்டு பேரயும் tag பண்ணிவிடும். வக்காளி டேய்… இந்த கண்றாவிய நேரடியா பேசிகிட்டா என்னடா? எதுக்க எதுக்க உக்கார்ந்துருந்தா கூட ஃபேஸ்புக்ல வந்து தான் ஹாய் சொல்லிக்குவாய்ங்க. ஹலோ... ஏன் திட்டுறேன்னு தானே பாக்குறீங்க  ச்ச..ச்ச... நா உங்கள திட்டல பாஸ்.. இதெல்லாம் உங்க ஸ்டேட்டஸ பாக்குறவிங்களோட உள் மனசு சொல்றது. நீங்க இப்டி தான் ஸ்டேட்டஸ் போடோனும். அப்பதான் நீங்க அப்பாடக்கர் ஆவ முடியும். குறிப்பா அந்த "Having fun" ah மறந்துடாதீங்க

14. லீவு நாளுன்னா உடனே கெளம்பி உங்க பக்கத்து தெருவுல உள்ள facebook ஃப்ரண்டு வீட்டுக்கு போங்க. அவன் கூட ஒரு ஃபோட்டோவ எடுத்து “கோவை” பாலுவுடன் நான்” அப்டின்னு ஒரு கமெண்ட்ட போட்டு ஃபோட்டோவ upload பண்ணுங்க. யார்ரா அவன் “கோவை” பாலு? அவரு அமெரிக்க அதிபரு, நீயி ரஷ்ய தூதரு… ரெண்டு பேரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்புல சந்திச்சுக்கிறீங்க. அவன் யாருன்னு உங்களுக்கு தெரியும் நீங்க யாருன்னு அவனுக்கு தெரியிங்… ஆனா நீங்க ரெண்டு பேரும் யாருன்னு யாருக்கும் தெரியாது. அடடே “கோவை” பாலு பெரிய ஆளு போலருக்கு. அதான் இவரு அவர மரியாதை நிமித்தமா சந்திச்சிருக்காரு போலன்னு அவனும் ஃபேமஸ் ஆகலாம் நீங்களும் ஃபேமஸ் ஆகலாம். நாமலே நமக்கு ஒரு பில்ட் அப் குடுத்து கிருட்டு கிருட்டு கிருட்டுன்னு டெவலப் ஆயிக்க வேண்டியது தான். 

15. அப்புறம் ஒரு நாள் உங்களுக்கு ஸ்டேட்டஸ் போடுறதுக்கு எந்த மேட்டருமே இல்லன்னு வச்சிக்குவோம்… சும்மா  ஒரு smiley symbol போட்டு # feeling happy ன்னு போடுங்க. அவ்வளவுதான்… “நம்மாளு யாரையோ கரெக்ட் பண்ணிட்டாண்டா” ன்னு நம்ம பசங்களுக்கு தலையே வெடிச்சிரும். போறவன் வர்றவன்லாம் வந்து “என்ன மேட்டர் மச்சி” “என்ன மேட்டர் மச்சி” ன்னு கமெண்ட் போட்டே அத பெருசாக்கி விட்டுருவாய்ங்க. அப்டி இல்லையா ஒரு crying symbol போட்டு  இல்ல கண்ண மட்டும் ஃபோகஸ் பண்ணி கண்ணீர் வர மாதிரி ஒரு ஃபோட்டோவ போட்டு #feeling sad ன்னு போடுங்க. எவண்ட்டயோ நம்மாளூ நல்லா குத்து வாங்கிருக்காண்டான்னு நம்மாளுங்க செம குஜாலாயிருவாய்ங்க. அந்த சந்தோஷமான செய்திய உங்ககிட்டருந்து கேக்குறதுக்காகவே வந்து நலம் விசாரிப்பாய்ங்க. Traffic எகிரிடும். 

16. இது எல்லாமே கஷ்டமா இருக்குன்னு ஃபீல் பண்றீங்களா? இதோ எல்லாத்தையும் விட ஒரு எளிய வழி. ஒரு பொண்ணு பேர்ல ஒரு ஃபேக் ID கிரியேட் பண்ணுங்க. Profile la ஒரு பூ படத்தையோ இல்லை ஒரு நாய்குட்டி படத்தையோ இல்ல ஒரு rainbow படத்தையோ வச்சிடனும். சமந்தா ஃபோட்டோவ வச்சா ரொம்ப நல்லது. நீங்க ஒண்ணுமே பண்ண வேணாம். “HI Friends” ன்னு மட்டும் ஒரே ஒரு ஸ்டேட்டஸ் போடுங்க. அப்புறம் பாருங்க.. 10 நிமிஷத்துல 1150 லைக்கும் 900 கமெண்டும் வந்து குவியும். ஒரு நாளைக்கு குறைஞ்ச பட்சம் 100 friend request வரும். அதுக்கும் மேல இன்னொரு காமெடி என்னனா நீங்க அந்த ஃப்ரண்ட் ரிக்வெஸ்ட அக்செப்ட் பண்ணப்புறம் ஒவ்வொருத்தனும் வந்து “thanks for adding me my friend” nnu போட்டு உங்க wall ah நிரப்பிடுவாய்ங்க.