
முதல் பகுதி இரண்டாவது பகுதி மூண்றாவது பகுதி நான்காவது பகுதி ஐந்தாவது பகுதி ஜோதிராஜன் இன்னும்
ரெண்டு முணு தடவ நல்லா யோசிச்சி சொல்லுங்க அவர் தானான்னு… அவங்க ஃபேமிலி போன வாரம்
தான் இந்த ஃப்ளாட்டுக்கே போன வாரம் தான் குடி வந்துருக்காங்க”
“சார் இதுல யோசிக்க
எதுமே இல்ல சார். அவரோட வலது பக்க நெத்துல ஒரு சின்ன தழும்பு இருக்கு பாருங்க. அன்னிக்கு
பாத்தது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கும். நூறு சதவீதம் அவரே தான் சார்” என அடித்துக்
கூறினார் ஜோதிராஜன்.
“சார்… இப்போ ….”
என தங்கதுரை ஆரம்பிக்க… “இப்போ எதுவும் வேணாம்.. நாளைக்கு காலையில சும்மா ஃபார்மாலிட்டின்னு
சொல்லி அவங்க ரெண்டு பேரயும் வரச் சொல்லிட்டு வாங்க… ஜோதிராஜம் நீங்க கூட நாளைக்கு
காலையில 10 மணிக்கு ஸ்டேஷனுக்கு வந்துருங்க” என்றார் ரவிக்குமார்.
“ஓக்கே சார்” என
ஜோதிராஜன் விடைபெற்று செல்ல “தங்கதுரை நீங்க அப்டியே அந்த ஹெல்மெட் மேட்டர இன்னிக்கு
நைட்டே கொஞ்சம் கவனிச்சிருங்க”
“ஓக்கே சார்… கண்டிப்பா…
நாளைக்கு காலையில ரிப்போர்ட் உங்க கையில இருக்கும்” என கூறி புறப்பட்டனர்.
மறுநாள் காலை
10.30 மணி. ரவிக்குமாருக்கு பின் தங்கதுரை நின்றிருக்க, ரேவதியும் மதனும் முன்னே அமர்ந்திருந்தனர்.
முதலில் வழக்கமான சில கேள்விகளுக்கு பின்
“மிஸ்டர் மதன்… உங்களுக்கு ஆனந்த்த எப்படி தெரியும்?” என்றதும் மதன் முகம் சற்று வெளிரியது.
“எ..எனக்… எனக்கு
ஆனந்த்னு யாரையும் தெரியாது தான்.. நாங்க லாஸ்ட் வீக் தான் இங்க குடியே வந்தோம்”
“சும்மா தமாஷ்
பண்ணாதீங்க மதன்… சொல்லுங்க… உங்களுக்கு ஆனந்த்த தெரியும்னு எங்களுக்கு தெரியும்” என
ரவிக்குமார் கூறியதும் ரேவதி அதிர்ச்சியில் திரும்பி ஆனந்தைப் பார்க்க ஆனந்த் பதில்
கூற முடியாமல் எச்சில் விழுங்கி மறுபடியும் அதே பதிலை கூற முயல ஜோதிராஜன் கண்முன் நிறுத்தப்பட்டார்.
“இவர் யாருன்னு தெரியுதா?”
“த்…தெரியல சார்”
என கூறிய மதனிடம் அந்த 500 ரூபாய் சங்கதிகளை விளக்கிவிட்டு “ஒழுங்கா உண்மைய சொல்லிடுங்க…
உங்கள ரஃப்பாவும் எங்களால டீல் பண்ண முடியும். அந்த மாதிரி சிட்சுவேஷன் கிரியேட் பண்ணிடாதிங்க”
என்று கூறி முடிக்கும் போது அருகிலுள்ள லேண்ட் லைன் அலறியது. தங்கதுரை அதனை எடுத்து
காதுக்கு பொருத்தி
“ஹலோ.. போலீஸ்
ஸ்டேஷன் “
“-------“
“ஓக்கே…. வச்சிடுங்க”
என கூறிவிட்டு “சார்… கன்ஃபார்ம் சார்…. நேத்து நாம எடுத்த ஹெல்மெட் ஆனந்தோடதுதான்னு
கீழ்ஃப்ளாட்ல கன்ஃபார்ம் பண்ணிகிட்டேன். அதிலருந்த சில முடிகள டி.என்.ஏ டெஸ்ட் பண்ணதுல அந்த பாடி ஆனந்த்தோடது தான்னு கன்ஃபார்ம்
பண்ணிட்டாங்க சார்” என்றதும்
“ஓக்கே…. நீங்க
இப்போ கண்டினியூ பண்ணலாம் மிஸ்டர் மதன்” என கரத்த குரலில் ரவிக்குமார் அரட்ட… மதன்
அழ ஆரம்பித்திருந்தான். 10 நிமிடத்திற்கு பிறகு மெல்ல பேச ஆரம்பித்தான்.
“ஆ.. ஆனந்த் என்னோட
க்ளோஸ் ப்ரண்ட் சார்.. சொல்லப்போனா ஆனந்துக்கு இருந்த ஒரே ஃப்ரண்டும் நான் தான்… ஒரு
தடவ ட்ரெயின்ல ரெண்டு பேரும் மீட் பண்ணி ஃப்ரண்ட்ஸ் ஆனோம். அவன் பொதுவா யார்கிட்டயுமே
நெருங்கி பழகுனதில்லை.
அவன் ஒரு பெரிய
டிசைன் டெவலப்மெண்ட் கம்பெனில பெரிய பொசிஷன்ல ஒர்க் பண்ணிட்டு இருந்தான். அவங்க டெவலப்
பண்ற ஒரு புது ப்ரோடக்ட் டிசைன் டீட்டெய்ல்ஸ பத்தி கேள்விப்பட்டு அவங்களோட competitor
சில பேரு இவன அப்ரோச் பண்ணாங்க. இவன் ஆரம்பத்துல அந்த டீட்டெய்ல்ஸ தரமுடியாதுன்னு சொல்லிட்டு
தான் இருந்தான். இத பத்தி என்கிட்ட ஒரு தடவ சொல்லும் போது நா தான் இவன கன்வின்ஸ் பண்ணி
அவங்க கூட பேசி 50 லட்சம் அதுக்கு பேசி ஓத்துகிட்டோம்.
அவங்களோட யுஎஸ் ப்ராஞ்ச்ல ஆனந்த்துக்கு
வேலை தர்றதாகவும் டீல் ஒத்துகிட்டாங்க. ஆனந்த் எனக்கு அதுல 20 லட்சம் தர்றதா சொன்னான்.
ச்
அதே போல ஆனந்தும்
அந்த டிசைன் டீட்டைல்ஸ் drawings அத்தனையும் அவனோட கம்பெனிக்கு தெரியாம இவங்களுக்கு
எடுத்து குடுக்க, ஆனந்த் கம்பெனி அந்த ப்ரோடெக்ட ரிலீஸ் பண்றதுக்கு முன்னால அந்த
competitor ரிலீஸ் பண்ணி மார்கெட்ட புடிச்சிட்டாங்க. இதனால அப்செட் ஆன ஆனந்தோட கம்பெனி,
எப்படி டீட்டெய்ல்ஸ் வெளில போனதுங்கறத கண்டுபுடிச்சி ஆனந்தை கம்பெனிய விட்டு தூக்கிட்டாங்க.
கம்பெனி ரெபுடேஷன் போயிடக்கூடாதுங்கறதுக்காக இந்த விஷயத்தையும் வெளில லீக் பண்ணாம மறைச்சிட்டாங்க.
ஆனாலும் ஆனந்ந்துக்கு
U S la வேலை கிடைச்சிட்டதால அங்க போறதுக்காக காத்திருந்தான். எப்படியும் 10, 15 நாள்ல
U S கெளம்பிடுவானு தெரிஞ்சி நா பணம் கேட்க ஆரம்பிச்சேன். எனக்கும் அப்போ கொஞ்சம் பண
கஷ்டம் இருந்துச்சி. ஆனா அவன் பணத்த பத்தி பேசும் போதெல்லம் வேற எதாவது பேசி மழுப்பிகிட்டே
இருந்தான். அதான் ஒரு நாள் அவன் வீட்டுக்கு நேரடியா பொய்ட்டேன். வீட்டுல அவன் மட்டும்
தனியாதான் இருந்தான். ரெண்டு பேரும் நல்லா தண்ணி அடிச்சோம். அப்புறம் பணத்த பத்தி அவன்கிட்ட
கேட்டப்போ மொத்த பணத்தையும் வீட்டுல தான் வச்சிருந்ததாகவும் ரெண்டு நாள் முன்னாடி அது
காணாமல் போச்சின்னும் என்கிட்ட சொல்ல எனக்கு கோவம் தலைக்கு ஏறிடுச்சி.
விளையாடாம உண்மைய
சொல்லுன்னு நா பல தட கேட்டும் அவன் அதயே சொல்லிகிட்டு இருந்ததால கோவம் தலைக்கேறி போதையில
ஒரு பீர் பாட்டில எடுத்து ஓங்கி தலையில அடிச்சேன். நடு தலையிலருந்து ரத்தம் வழிய பேச
முடியாம மயங்கி கீழ விழுந்துட்டான். 5 நிமிஷம் என்னால கோவத்த கண்ட்ரொல் பண்ணவே முடியல.
அப்புறம் கொஞ்சம் ரிலாக்ஸாயி அவன ஹாஸ்பிட்டல் தூக்கிட்டு போகலாம்னு நெனச்சி அவன தூக்கி
பாக்கும் போது தான் தெரிஞ்சிது உச்சன் தலையில அரை இஞ்சி அளவு தலையே ஓப்பன் ஆயி உள்ள
இருந்ததெல்லாம் சிகப்பு கலர்ல தெரிய அவன்ட்ட எந்த அசைவும் இல்லை. கொஞ்ச நேரம் எனக்கு
என்ன பண்றதுன்னே தெரியல.
கொஞ்ச நேரம் உக்காந்து
அழுதேன். அப்புறம் என்ன ஆனாலும் ஆகட்டும்னு பாடிய டிஸ்போஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணேன்.
எப்படியும் மொத்த பாடியையும் என்னால வெளில எடுத்துட்டு போய் டிஸ்போஸ் பண்ண முடியாதுன்னு
தெரியும். அதனால முதல்ல தலைய மட்டும் தனியா நா கொண்டு வந்த ட்ராவல் பேக்ல எடுத்துகிட்டு
அத நா குடியிருந்த பழைய வீட்டு சந்துல தோண்டி புதைச்சிட்டேன். ச்
மத்த உடம்ப லாஃப்ட்ல
போட்டு அங்கருந்த டேப்பால ஸ்மெல் எதுவும் வராம இருக்க தெரிஞ்ச கேப் எல்லத்தையும் கவர்
பண்ணிட்டேன்.
முதல்ல ரெண்டு நாள்ல கொஞ்சம் கொஞ்சமா அந்த பாடிய டிஸ்போஸ் பண்றதுதான்
என்னோட ப்ளான். ஆனா வீட்டுக்கு போய் போதை தெளிஞ்சதும் அத நா தான் செஞ்சேனான்னு எனக்கே
சந்தேகம் வந்துருச்சி. திரும்ப அந்த வீட்டுக்கே என்னால போக முடியாத அளவு பயம் வந்துருச்சி.
கொஞ்ச நாள் அத என்னால மறக்க முடியாம திரிஞ்ச்சேன் நா அவன் வீட்டுக்கு போனது யாருக்குமே
தெரியாதுங்கறதால அவவளவு சீக்கிரம் என்ன ட்ரேஸ் பண்ணிட முடியாதுன்னு நம்பிக்கையா இருந்தேன்.
கொஞ்ச நாள்ல திரும்ப நார்மல் வாழ்க்கைக்கு வந்துட்டேன். கொஞ்ச நாள் முன்னல தான் ரேவதிய
சந்திச்சேன். எங்களுக்குள்ள காதல் வந்துச்சி. கல்யாணமும் பண்ணிக்க முடிவு பண்ணோம்.
அப்போ தான் ஆச்சர்ய
படுற மாதிரி ரேவதி ஒரு வீடு பாத்துருக்கதா சொன்ன. போய் பாத்தப்போ தான் அது ஆனந்த் வீட்டுக்கு
அடுத்த வீடுன்னு தெரிய வந்துச்சி. மொதல்ல நா வேணாம்னு சொன்னாலும் ரேவதியோட பிடிவாத்தால
ஒத்துகிட்டேன். அதோட அங்கயே இருந்தா வீட்டுக்குள்ள இருக்க அந்த பாடியையும் எப்படியாச்சும்
டிஸ்போஸ் பண்ணிட்டு மொத்த ப்ரச்சனையிலருந்தும் வெளில வந்துடலாம்னு நெனைச்சி ஒத்துகிட்டேன்.
கடைசில அதுவே எனக்கு எமனா இருந்துருச்சி. “
முழுவதையும் கேட்டுக்கொண்டிருந்த
ரவிக்குமார் “நீ சொன்னதுல ஆனந்தோட ஒயிஃப பத்தி ஒண்ணுமே சொல்லலியே?”
“எனக்கும் இப்போ
வரைக்கும் புரியாம இருக்கது அது ஒண்ணுதான் சார். நா அவங்க வீட்டுக்கு போன போது அவங்க
அங்க இல்லை. ஆனந்த் கிட்டயும் நா எதுவும் அவங்கள பத்தி கேக்கல. ஒருவேளை நா அவங்க திரும்ப
வீட்டுக்கு வந்திருந்தா பாடிய முன்னாலயே பாத்தாலும் பாதிருப்பாங்க. ஆனா வரலன்னு நெனைக்கிறேன்”
என கூறிவிட்டு லேசாக திரும்ப “ரேவதியின் கண்ணிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்திருந்தது.
மணவாழ்க்கை துவங்கிய ஒரு வாரத்திலேயே முடியப்போகிற சோகம் அத்தனையும் கண்களில் தெரிந்தது.
“தங்கதுரை… இப்போ
இவரு சொன்னதெல்லாம் ஒரு ஸ்டேட்மெண்ட்டா எழுதி இவர்கிட்ட சைன் வாங்கிட்டு இவர லாக்கப்ல
லாக் பண்ணுங்க” என கூறிவிட்டு
“ஐ ஆம் ரியலி சாரி
மேடம்” என்றார் ரேவதியை பார்த்து. ரேவதி பேசமுடியாமல் கண்ணில் வழிந்த நீரை கர்சீப்பால்
துடைத்துக் கொண்டிருக்க “தங்கதுரை நீங்க இவங்கள கொஞ்சம் வீட்டுல விட்டு வந்துருங்க”
என்றதும் தங்கதுரை ரேவதியை ரவிக்குமாரின் காரிலேயே அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.
5 நிமிடத்தில் ஃப்ளாட் வந்தது. ரேவதி இறங்கிக் கொண்டு “தேங்க் யூ சார்” என தழுதழுத்த
குரலில் கூறிவிட்டு திரும்ப “மேடம் ஒரு நிமிஷம் என்ற தங்கதுரை பேண்ட் பாக்கெட்டிலிருந்த
அந்த ஃபோட்டோவை எடுத்து ரேவதியின் முன் நீட்டி “இதுக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லிட்டு
போங்க” என்றாள்.
அந்த கையகல ஃபோட்வை
மெல்ல வாங்கிப் பார்த்த ரேவதியும் முகம் சட்டென மாறியது. ரேவதியும் ஆனந்தின் மனைவியும்
அருகருகே நின்று எடுத்த சற்று பழைய புகைப்படம் அது.
“ஆனந்தோட மனைவிக்கும்
உங்களுக்கும் என்ன சம்பந்தம்?” என தங்கதுரை கேட்க தலைய குணிந்து கொண்டே
“அவ என்னோட அக்கா
சார்…” என்று தொடர்ந்தாள்.
“எங்களுக்கு அப்பா
அம்மா இல்லை. நாங்க ரெண்டு பேரும் தான். சின்ன வயசுல ஒரு ஆஸ்ரமத்துல வளந்து ரெண்டு
பேருமே நல்லா படிச்சி வேலைக்கும் சேர்ந்தோம். ஒருதடவ எங்களுக்குள்ள நடந்த ஒரு சின்ன
சண்டை பெருசாகி என்னோட பேசுறதையே நிறுத்திட்டா… எனக்கும் இருந்த கொஞ்சம் ஈகோவுல அவளா
வந்து பேசட்டும்னு நானும் விட்டுட்டேன். வாரமாச்சு மாசமாச்சு வருஷமச்சு.. 5 வருஷமா
பேசவே இல்லை. இதுக்கு இடையில அவ ஆனந்த்ங்கறவர கல்யாணம் பண்ணிகிட்டதா தெரிஞ்சிகிட்டேன்.
நா போன வருஷம் ஒரு தட ஆஃபீஸ் வேலையா டில்லி போயிருந்தப்போ அவகிட்டருந்து அதிசயமா கால்
வந்துச்சி. என்கிட்ட எதோ சொல்ல வந்த அவ சொல்ல முடியாம அழுதுகிட்டே எனக்கு ரொம்ப பயமா
இருக்குன்னு மட்டும் சொல்லி ஃபோன வச்சிட்டா. திரும்ப நா கால் பண்ணும் போதெல்லாம் ஸ்விட்ச்
ஆஃப்ன்னே தான் வந்துச்சி. நா திரும்ப டில்லிலருந்து வந்ததும் இந்த வீட்டுக்கு வந்து
பாத்தேன் பூட்டி இருந்துச்சி.
அவளுக்கு எதோ ஆபத்துன்னு
மட்டும் என்னால உணர முடிஞ்சிது. ஆனந்த பத்தி விசாரிக்கும் போது அவரயும் கம்பெனிலருந்து
தூக்கிட்டதா கேள்விப்பட்டப்ப தான் அவருக்கு மதன்னு ஒரே ஒரு க்ளோஸ் ஃப்ரண்ட் இருக்காருன்னு
தெரிய வந்துச்சி. அவர்கிட்ட வேற ஒரு விஷயமா பேச போன மாதிரி ஆரம்பிச்சி க்ளோஸ் ஃப்ரண்ட்
ஆனேன். என்னையும் அறியாம அவர் மேல காதல் வந்துருச்சி. ஆனா கடைசி வரைக்கும் அவருக்கு
ஆனந்த்னு ஒரு ஃப்ரண்ட் இருந்த மாதிரி காட்டிக்கவே இல்லை. அதனால இந்த வீட்ட திறந்து
பாத்தாதான் என் அக்காவ பத்தி எதாவது விஷயம் தெரியும்னு முடிவு பண்ணி என் ப்ராஜெக்ட்
மேனேஜர் மூலமா இந்த ஃப்ளாட்ட கம்பெல் பண்ணி ரெண்டுக்கு வாங்குனேன்.
என்னோட டவுட் எல்லாமே
என் அக்காவுக்கு ஆனந்தால எதாவது ஆயிருக்கும்ங்கறது தான். என்னால அந்த ஃப்ளாட்டுக்குள்ள
போக முடியாது. அதனால தான் போலீஸ உள்ள கொண்டு வரனும்னு நெனைச்சேன். வந்த அன்னிக்கே கரண்ட்
போனப்போ வீட்டுக்குள்ளருந்து ஆள் வெளில ஓடுறாங்கன்னு மதன்கிட்ட சொன்னேன். பக்கத்து
வீட்டுல நைட்டுல சத்தம் கேக்குறதாகவும் படியில ஒரு பொண்ணு உட்கார்ந்துருந்தாகவும் நானே
நடக்காத விஷயத்த நடந்த மாதிரி காட்டிக்கிட்டேன்.
அன்னிக்கு ஃப்ளாட்ல டெட் பாடி கிடைச்சப்போ
அது என் அக்காவோடதுன்னு நெனைச்சி தான் என்னால அழுகைய நிப்பாட்டவே முடியல. ஆன இப்போ
கடைசில என்னோட மதனே கொலை பண்ணிருக்கான்னு நெனைக்கும் போது…” என்று கூறிமுடிக்க கண்களிலிருந்து
கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
“இந்த ஃபோட்டோ
நேத்து நாங்க அந்த ஃப்ளாட்டுல தேடும் போது கிடைச்சிதும்மா.. உன்ன பாக்க என் பொண்ணு
மாதிரி இருக்கு. சார்கிட்ட சொன்ன என்குயரி அது இதுன்னு உள்ள இழுத்துவிட்டுருவாரு. அவர்கிட்ட
சொல்றதுக்கு முன்னாடி நாம ஒருதடவ கேட்டுக்கலாமேன்னு தான் வச்சிருந்தேன். இந்தா” என
போட்டோவை கொடுத்துவிட்டு “உங்க அக்காவ கண்டுபுடிக்க எந்த உதவியா இருந்தாலும் நா செய்றேன்”
என்று கூறிவிட்டு புறப்பட்டார். ரேவதி மேலேறி ஃப்ளாட்டுக்கும் நுழைந்த பொழுது செல்ஃபோன்
அழைக்க , அதை காதுக்கு பொருத்தினாள்
“ஹலோ யாரு”
“உங்க அக்காவ பத்தி
உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்… அடையார் வரைக்கும் வரமுடியுமா?” என்றது மறுமுனையில் ஒரு
ஆண்குரல்.
“அட்ரஸ் சொல்லுங்க”
மறுமுனையில் அந்த
ஆண் குரல் அட்ரஸ் கூற கூற அருகிலிருந்த டைரியில் குறித்துக்கொள்ள ஆரம்பித்தாள் ரேவதி.
குறிப்பு : மாயவலையின்
முதல் தொடர் இத்துடன் நிறைவடைகிறது. இரண்டாவது பாகம் சில மாதங்களில்.
நன்றி : நண்பன்
அனந்த நாராயணன்.
3 comments:
எங்கும் தடங்கல் இல்லாமல் விறுவிறுப்பாய் கதை..! பாராட்டுக்கள்..!
என்ன சிவா இவ்வளவு சுவாரஸ்யமான ஆரம்பித்து இரண்டாம் பாகம் தொடரும் என்று சொல்லிவிடயே எப்பொழுது இரண்டாம் பாகம் வரும்?
சிவா இரண்டாம் பாகம் எப்பொழுது?
Post a Comment