Tuesday, April 8, 2014

மாயவலை- பாகம் 2


Share/Bookmark


முதல் பாகத்தை படிக்க இங்கே க்ளிக்கவும்.
இன்ஸ்பெக்டர் ரவிக்குமாருக்கு  கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஒரே அயற்சி. இரவு பகல் பாராமல் கண்விழிக்க வைத்துவிட்டது ஆனந்த் கொலை வழக்கு. ஆனாலும் கொலையாளியை விரைவாக கண்டுபிடித்துவிட்டதில் மகிழ்ச்சி. வழக்கத்தை விட தாமதமாக பதினொரு மணிக்குத்தான் அன்று ஸ்டேஷனுக்குள் நுழைந்தார். மதன் இன்னும் லாக்கப்பில் பூட்டப்பட்டிருந்தான்.  இன்னும் இரண்டு நாட்களில் கோர்ட்டில் ஒப்படைத்தாக வேண்டும். மற்ற காவலாளிகளின் வணக்கங்களை வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்த அவர் லாக்கப்பை எட்டிப்பார்க்க மதன் சுவர் ஓரமாக சாய்ந்து உட்கார்ந்திருந்தான்.

“யோவ் காத்தமுத்து… இவனுக்கு எதாவது டிபன் வாங்கி குடுத்தீங்களா இல்லையாய்யா?” என்றார் ரவிக்குமார்.

“அய்யா… 8 மணிக்கெல்லாம் வாங்கி குடுத்துட்டேங்க” என்றார் லாக்கப்பை காவல் காத்திருந்த காத்தமுத்து. 

“ஹ்ம்ம்.. ஒரு ரெண்டு நாளு இவன கவனமா பாத்துக்குங்கைய்யா… “ என்று கூறி விட்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்ததும் தங்கதுரை அப்பொழுதுதான் ஸ்டேஷனுக்குள் நுழைந்து ரவிக்குமாருக்கு ஒரு வணக்கத்தை உதிர்த்தார்.

“என்ன தங்க துரை நீங்களும் இன்னிக்கு லேட்டா? வேணா இன்னிக்கு லீவ் எடுத்துருக்க வேண்டியது தானே.. பாவம் என்ன விட நீங்க தான் ரெண்டு நாளா தூங்கவே இல்லை”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார்.. நா காலையிலயே வந்துட்டேன்… பஸ் ஸ்டாண்ட்ல எதோ கலாட்டான்னு தகவல் வந்துச்சி.. அதான் பாக்க போயிருந்தேன். சார் அப்புறம் சொல்ல மறந்துட்டேன். ஆனந்தோட body ah போஸ்ட் மார்டம் பண்ண டாக்டர் ரங்கராஜன் காலையிலருந்து மூணு தடவ ஸ்டேஷனுக்கு ஃபோன் பண்ணிட்டாரு.. உங்க ஃபோன் ரீச்சபிளா இல்லையாம்.. எதோ முக்கியமான விஷயம் பேசனும்னு சொன்னாரு. “ என்றார் தங்க துரை.

“சரி விடுங்க.. நா இப்போ கால் பண்ணி பேசிடுறேன்” என்று தங்கதுரை முன்னிலையிலேயே தன்னுடைய செல் ஃபோனை எடுத்து டாக்டர் ரங்கராஜனுக்கு டயல் செய்தார்.

“ஹலோ டாக்டர்.. நான் தான் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் பேசுறேன்.. “
மறுமுனையில் “ஹலோ இன்ஸ்பெக்டர்…  என்ன காலையிலருந்து ட்ரை பண்றேன்.. உங்கள புடிக்கவே முடியில…”

“ அதெல்லாம் ஒண்ணும் இல்லை டாக்டர் கொஞ்சம் டிஸ்டர்பன்ஸ் இல்லாம் இருக்கட்டுமேன்னு ஃபோன ஆஃப் பண்ணி வச்சிருந்தேன். சார் டாக்டர் “

“சரி பரவால்லை இன்ஸ்பெக்டர்.. உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கனும் அதுக்காகத் தான் கூப்டிருந்தேன் “ என்றார் டாக்டர் ரங்கராஜன்
“சொல்லுங்க டாக்டர் என்ன விஷயம்?”

“ரெண்டு நாளுக்கு முன்னால ஒரு பாடிய போஸ்ட் மார்டம் பன்னேன்ல அதப் பத்தின ஒரு விஷயத்த உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கனும்”
“சொல்லுங்க டாக்டர்”

“நீங்க அந்த கொலைகார்ர பிடிச்சிட்டீங்கல்ல. அவரு வாக்குமூலத்துல என்ன சொல்லிருக்காரு?”

“குடிபோதையில பாட்டிலால ஆனந்தோட தலையில அடிச்சிருக்காரு. அவர் இறந்துட்டார்னு தெரிஞ்சதும் பதட்டத்துல என்ன செய்றதுன்னு தெரியாம பாடிய அப்புறப் படுத்த பாத்துருக்காரு. முதல்ல தலைய மட்டும் தனியா வெட்டி எடுத்துட்டுப் போய் கூவத்துல வீசிருக்காரு. போதை தெளிஞ்சதும் திரும்ப கொலை நடந்த வீட்டுக்கு போக பயந்துகிட்டு அப்டியே விட்டுட்டாரு” என கூறி முடித்தார் ரவிக்குமார்.

“பர்ஃபெக்ட்… அவரோட ஸ்டேட்மெண்டுக்கும், போஸ்ட் மார்டம் பண்ண ரிசல்டுக்கும் ஒரு சின்ன controversy இருக்கு மிஸ்டர் ரவிக்குமார். In fact அத நான் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல கூட மென்ஷன் பண்ணல. ஆனா உங்ககிட்ட சொல்றது நல்லதுன்னு பட்டுச்சி. அதான் சொல்றேன்”
“சொல்லுங்க டாக்டர்.. என்ன controversy?  “ என ரவிக்குமார் சிறு குழப்பத்துடன் கேட்க

“if you don’t mind நீங்க கொஞ்சம் புறப்பட்டு ஹாஸ்பிட்டல் வர முடியுமா? நேர்ல பேசுனா நல்லதுன்னு நெனைக்கிறேன்” 

“இதோ இன்னும் அரை மணி நேரத்துல GH ல  இருப்பேன் டாக்டர்” என கூற

“நா இப்போ GH லருந்து கெளம்பிட்டேன்.. நீங்க நேரா சைதாப்பேட்டை என்னோட க்ளீனிக்கு வந்துருங்க. “

“ஓக்கே டாக்டர் இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்” எனக் கூறிவிட்டு
 
“தங்க துரை வண்டிய எடுங்க.. சைதப்பேட்டை வரைக்கும் போகனும்” என வேகமாக ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார் ரவிக்குமார். 


மணி மதியம் 12.15. ரவிக்குமாரும் தங்கதுரையும் டாக்டர் ரங்கராஜனின் முன் அமர்ந்திருந்தனர். 

“சொல்லுங்க டாக்டர்.. மதனோட ஸ்டேட்மெண்ட்ல என்ன காண்டர்வர்சி?”

“சொல்றேன்.. நா சொல்ற விஷயம் may be or may not be true.. but நா உங்ககிட்ட ஃபேக்ட சொல்றேன்” என ஆரம்பித்தார் ரங்க ராஜன்

“சுத்தி வளைக்காம டைரக்டாவே சொல்லுங்க டாக்டர்”

“மதன் பாட்டிலால தலையில அடிச்சி ஆனந்த கொன்னேனு சொல்லிருக்காரு. அது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சிக்க நமக்கு ஆனந்தோட தலை கிடைக்கல.. so இப்போதைக்கு அத உண்மைன்னே எடுத்துக்குவோம். ஆனா அவர் சொன்ன அடுத்த விஷயத்துலதான் காண்ரவர்சி இருக்குன்னு சொன்னேன். “

“புரியலையே டாக்டர்” என கூறிவிட்டு குழப்பமாக ரவிக்குமார் அருகிலிருக்கும் தங்கதுரையை ஒரு முறை பார்த்தார்.

 “மதன் எதிர்பாராத விதமா தான் ஆனந்த கொலை பண்ணிருக்காரு. சோ அவரோட தலைய வெட்டி எடுத்துட்டு போகனும்ங்கற முடிவும் அந்த ஸ்பாட்ல எடுக்கப்பட்டது தான். அதனால ஆனந்த் வீட்டில இருந்த எதோ ஒரு கத்தியையோ இல்லை சின்ன அரிவளாலையோ தான் அந்த தலைய வெட்டி எடுத்துருக்கனும். அப்படி கத்தியோ இல்லை சின்ன அரிவாளையோ யூஸ் பண்ணிருந்தா ஒரே தடவையில வெட்டி தலைய எடுத்துருக்க முடியாது.. பல வெட்டுக்கு அப்புறம் தான் தலைய தனியா எடுத்துருக்க முடியும். அப்புடி செய்யும் போது கண்டிப்பா கழுத்து எழும்போட வெட்டப்பட்ட பகுதி uneven ஆகவும் சின்ன சின்ன தெறிப்போடவும் இருக்கும்.. இப்போ இந்தப் படங்களை பாருங்க” என ரவிக்குமாரின் கையில் சில  பிரிண்ட் எடுக்கப்பட்ட A4 தாள்களைக் கொடுத்தார். 

.ரவிக்குமார் ஒவ்வொன்றாக தாள்களைப் புரட்டி விட்டு
“இது என்ன டாக்டர்... எதோ எக்ஸ்ரே பிரிண்ட் மாதிரி இருக்கு”

“ அது எக்ஸ் ரே பிரிண்ட் இல்லை.. கழுத்து எழும்போட மைக்ரோஸ்கோப்பிக் view

“சரி டாக்டர் இதிலருந்து எங்களுக்கு என்ன சொல்ல வர்றீங்க... கொஞ்சம் தெளிவா சொல்லுங்க...” என குழப்பம் மாறாத முகத்துடன் ரவிக்குமார் கேட்க ரங்கராஜன் விளக்கத் துவங்கினார்...

“இந்த முதல் படத்தைப் பாருங்க.. இதுவும் நாம இப்போ பாத்துக்கிட்டு இருப்பது மாதிரியான தலை தனியா வெட்டி எடுக்கப்பட்ட் ஒரு விக்டிமோட கழுத்து எழும்போட வியூ. இதுல பாருங்க வெட்டப்பட்ட ஏரியாவுல எழும்பு ஒரே சீரா இல்லாம தெறிப்பு தெறிப்பா இருக்கா... “

“ஆமா டாக்டர்...”

“ இது தான் நார்மாலான ஒரு படம்.. அடுத்த ரெண்டு படத்தையும் பாருங்க.. அதுவும் இதே மாதிரியான கேஸ்தான்.. அதுலயும் நிறைய தெறிப்புங்க இருக்கு... இப்போ இந்த படத்த பாருங்க” என இன்னொரு தாளை எடுத்து ரவிக்குமாரின் பார்வைக்கு காட்டினார்..

ரவிக்குமாரின் நெற்றி சிறிது சுருக்கத்திற்குட்டது. முன்னிருந்த படங்களில் இருந்த அந்த் தெறிப்புகள் இல்லாத ஒரு க்ராஸ் செக்ஷன்.
“இது தான் நம்ம ஆனந்தோட கழுத்து எழும்போட மைராஸ்கோப்பிக் வியூ... இதுல பாருங்க.. அந்த மாதிரி எந்த தெறிப்பும் இல்லை..  

“இது எப்புடி சார் சாத்தியம்.. இப்டி வர்றதுக்கு வாய்ப்பு இருக்கா... ?” என்றார் ரவிக்குமார்

“இருக்கு ஆனா ரொம்ப ரேர். உதாரணமா ஒரு thin மெட்டல் ப்ளேட் அதிகமான ஃபோர்ஸோட ஒருத்தன் கழுத்துல படுதுன்னு வச்சிக்குவோம். அப்போ ஒரே கட்டுல அந்த தலை தனியா விழுந்துடும். அந்த மாதிரி சமயங்கள்ல இந்த மாதிரியான crack இல்லாத க்ராஸ் செக்ஷன்ஸ் வர வாய்ப்பிருக்கு. இல்லைன்னா ஒரு ஹைஸ்பீடு கட்டிங் மிஷின்ல ஒருத்தன் தலை துண்டனாலும் இந்த மாதிரி வர வாய்ப்பிருக்கு... “

“ஆனா டாக்டர் நீங்க சொல்ற எல்லாமே உதாரணத்துக்கு ஓக்கே.. ஆனா நடைமுறையில இதெல்லாம் நடக்க வாய்ப்பு ரொம்ப கம்மி... அதுவும் இல்லாம அவனோட ஸ்டேட்மெண்ட் க்ரிஸ்டல் கிளியர். நீங்க சொல்ற மாதிரி ஒரு ஹெவி மெட்டல் ப்ளேட்டோ இல்லை ஹைஸ்பீடு கட்டிங் மெஷினோ அந்த ஸ்பாட்ல இன்வால்வ் ஆக சான்ஸே இல்லை” என ரவிக்குமார் பேசிக்கொண்டே இருக்க ரங்கராஜன் குறுக்கிட்டார்

“கொஞ்சம் பொறுங்க ரவி... நா இன்னும் முடிக்கல.. அந்த கடைசி படத்தப் பாருங்க.. “என்றது ரவிக்குமார் கடைசி பேப்பரை புரட்ட அதுவும் முந்தைய படத்தைப் போலவே எழும்பில் எந்தவித க்ராக்கும் இல்லாமல் தெளிவாக இருக்க

“என்ன டாக்டர் இது .. இந்த படமும் அதே மாதிரி இருக்கு.. ஆனந்த் கேஸ் மாதிரி வேற எதாவது ” என ரவிக்குமார் கேட்க

“நீங்க இப்போ பாக்குறது மனுஷனோட எழும்பு இல்லை... கோயில்ல பலி குடுக்கப்பட்டு தலை துண்டாக்கபட்ட ஒரு ஆட்டோட கழுத்தெழும்பு.... “
என கூறி முடிக்கவும் ரவிக்குமாருக்கு தூக்கிவாரிப்போட்டது.
அடுத்த பதிவில் தொடரும்...


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

YUVA said...

i never thought you will be writing a sequel.. great.. :)

selvasankar said...

adutha epidode seekkiram boss

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...