Friday, May 9, 2014

மாயவலை II - பகுதி 3


Share/Bookmark


முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.

"சார் இன்னும் உயிர் இருக்கு சார்... " சரிந்து கிடந்த மதனின் கையை பத்து வினாடி பிடித்துப் பார்த்தபின் தீர்க்கமாகக் கூறினார் தங்க துரை..

"ஆம்புலன்ஸ்கு சொல்லியாச்சா இல்லியா காத்தமுத்து?" ரவிக்குமார் பதட்டமாகக் கேட்க

 "கால்மணி நேரத்துக்கு முன்னாலயே சொல்லிட்டேன் சார்.. இப்போ வந்துடும்" சொல்லி முடிக்கவும்  ஆம்புலன்ஸ்
சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

இரண்டு மணி நேரம்  கழித்து ஜிஹெச்சில் டாக்டர் ஆல்பர்டுக்கு முன்னால் அமர்ந்திருந்தனர் ரவிக்குமாரும் தங்கதுரையும்.

"டாக்டர் மதனுக்கு என்னாச்சி?  அவர் உயிருக்கு எதாவது?" என ரவிக்குமார் ஆரம்பிக்க

"உயிருக்கெல்லாம் ஒண்ணும் இல்லை.. ஆனா அவருக்கு இப்போ சுயநினைவ இழந்துட்டாரு. கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜ்...."

"கோமா ஸ்டேஜா... என்ன சொல்றீங்க டாக்டர்... நாங்க அவர rude ah கூட டீல் பண்ணல.. ரொம்ப சாஃப்டா தான் விசாரிச்சோம்... எதனால இந்த ப்ராப்ளம்?"

"மதனோட ப்ளட்ட டெஸ்ட் பண்ணதுல அவர் ரத்ததுல டெட்ரோடாக்ஸின்ங்குற விஷம் கலந்துருக்கது தெரிய வந்துச்சி...  அது தான் அவர் சுயநினைவ இழக்க காரணம்"

"விஷமா? லாக்கப்ல இருந்தவனுக்கு விஷம் எப்டி? அருகிலிருந்த தங்கதுரை பக்கம் திரும்பி "தங்கதுரை நீங்க உடனே ஒண்ணு பண்ணுங்க. காலையிலருது
மதனுக்கு என்னென்ன சாப்பாடு குடுத்தாங்க? அத எங்க வாங்குனாங்க? யாரவது காலையிலருந்து மதன பாக்க வந்தாங்களா? இந்த டீட்டெய்லெல்லாம் உடனே கலெக்ட் பண்ணுங்க" என்றவுடன்

"ஓக்கே சார்" என தங்க துரை எழ முயற்சிக்க தடுத்து நிறுத்தினார் டாக்டர் ஆலபர்ட்

"ஒரு நிமிஷம் இன்ஸ்பெக்டர்... நீங்க நினைக்கிற மாதிரி இந்த விஷம் இன்னிக்கு காலையில கொடுக்கப்பட்டது இல்லை. இது ஒருத்தர் ரத்ததுல கலந்தாலே எஃபெக்ட் காமிக்கிறதுக்கு அட்லீஸ்ட் 36 மணி நேரம் ஆகும். அதனால ரெண்டு நாளுக்கு முன்னால தான் ஒரு வேளை அவர் இந்த விஷத்த சாப்டுருக்கனும் இல்லை யாராவது இவருக்கு குடுத்துருக்கனும்" என கூறி முடிக்க

"ரெண்டு நாளுக்கு முன்னாலயா" என நெற்றியை சுருக்கிக் கொண்டே

"சரி மதனுக்கு சுயநினைவு திரும்ப எவ்ளோ நாளாகும் டாக்டர்" என்றார் ரவிக்குமார்

"என்னால கண்டிப்பா இப்போ எதையும் உறுதியா சொல்ல முடியாது இன்ஸ்பெக்டர்... இப்போ அவருக்கு  கொடுத்துருக்க மெடிகேஷன்ஸ் எப்படி வேலை செய்யுதுங்கறத பொறுத்து தான் அடுத்த ட்ரீட்மெண்ட்ட பத்தி யோசிக்க முடியும்" என்றவுடன்

"சரி டாக்டர் எங்க கான்ஸ்டபிள் ஒருத்தர் இங்கேயே மதனுக்கு காவலா இருப்பர்.. ஏதாவது இம்ப்ரூவ்மெண்ட்  இருந்தா உடனே தெரியப்படுத்துங்க" என கூறிவிட்டு வராண்டவிற்கு வந்த இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரை
நிறுத்தினான் அந்த இளைஞன்.

"எஸ்க்யூஸ்மி சார்... ஒரு 5 நிமிஷம் உங்க கிட்ட பேசலாமா?"

"யார் நீங்க? என்ன பேசனும்" என்றார் ரவிக்குமார்

"சார் ஐ ஆம் அட்வோகேட் அருண்குமார். ரேவதியோட ஃப்ரண்ட்"

"ஓ.. சொல்லுங்க.. என்ன விஷயம்?"

"சார் if you don't mind நா ஒரு தடவ ஆனந்த் & ரேகா வீட்ட செக் பண்ணி பாக்கலாமா?"

"எதுக்காக? போலீஸ் இன்வெஸ்டிகேஷன் இன்னும் முழுசா முடியல... நீங்க என்ன செக் பண்ணனும்.." என கோவமாக கேட்க

"இல்லை சார்.... ரேவதி அவங்க அக்கா ரேகா காணாம போன விஷயத்துல கொஞ்சம் ஹெல்ப் கேட்டுருக்காங்க அதான் வீட்டையும் உங்க இன்வெஸ்டிகேஷன்  ரிப்போர்ட்டையும் பாத்தா எதாவது ஒரு பாய்ண்ட்ல
ஸ்டார்ட் பண்ன வசதியா இருக்கும். அதுக்காகத்தான்.. " என்றவுடன் ரவிக்குமார் வியப்பாக

"என்ன ரேகா ரேவதியோட அக்காவா? என்ன உளருறீங்க?" என்றார்.

ஒன்றும் புரியாமல் அருண் விழிக்க தங்கதுரை ஆரம்பித்தார்

"ஆமா சார் அவர் சொல்றது கரெக்ட் தான்... ரேவதியோட சொந்த அக்கா தான் ரேகா. என ஆரம்பித்து தனக்கு தெரிந்தவற்றைக் கூறி முடிக்க

"இத என்கிட்ட முன்னாலயே சொல்லிருக்கலாமே.. இதுல மறைக்க என்ன இருக்கு தங்கதுரை?" என்ற ரவிக்குமார்

"ஓக்கே மிஸ்டர் அருண்.. நீங்க ஆனந்த் வீட்டை செக் பண்ணி பாக்கலாம். பட் எங்களோட ப்ரசன்ஸ்ல தான்  நீங்க அங்க இருக்க முடியும்"

"ஓக்கே சார்.. ஃபைன்... " என்றான் அருண்.

"இன்னிக்கு ஈவ்னிங் நாலு மணிக்கு மேல நீங்க ஸ்டேஷன் வாங்க.. நீங்க ஆனந்த் வீட்ட பாக்குறதுக்கு நா ஏற்பாடு பண்றேன்" என்ற ரவிக்குமாரிடம்


"கண்டிப்பா சார்" என கூறிவிட்டு வராண்டாவின் மற்றொரு மூலையில் நின்று கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த ரேவதியை நோக்கி நகர்ந்தான்.

மாலை ஆறு மணி.. குரோம்பேட் ஸ்டேஷனில் போடப்பட்டிருந்த மர பெஞ்சில் உட்கார்ந்த படி ஆனந்த் கொலை வழக்கின் இன்வெஸ்டிகேஷன் ரிப்போர்ட்டை முழுவதுமாகப் படித்து முடித்திருந்தான் அருண். உருப்படியாக
எந்த தகவலும் இருந்தபாடில்லை. விசாரணையில் முக்கிய வாக்குமூலமான தண்ணீர் சப்ளை செய்தவர் கூட  கடைசியாக மதன் வீட்டில் இருந்த அன்று ரேகாவைப் பார்த்ததாக எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.  அருண் குழம்ப்பிக் கொண்டிருக்க

"மிஸ்டர் அருண்... நாம கிளம்பலாமா" என்ற ரவிக்குமாரின் குரல் கேட்க

டக்கென எழுந்து "போலாம் சார்... ரெடி" என்றான்.

"உங்களுக்கு 30 நிமிஷம் டைம் தர்றேன். அதுக்குள்ள என்ன பாக்கனுமோ பாத்துக்குங்க... குறிப்பா நீங்க அங்க எந்தத் தடையத்தையும் அழிச்சிடக்கூடாது" என்ற ரவிக்குமாரிடம்

"நிச்சயமா சார். ஒரு அட்வோகேட்டா இருந்துட்டு இது கூட எனக்கு தெரியாதா சார்... " என்று லேசான புன்னகைத்து விட்டு ரவிக்குமாருடன் காரில் ஏறிப் புறப்பட்டான்.

10 நிமிடத்தில் ஆனந்தின் விட்டை அடையும் போது மணி ஆறைரையைத் தொட்டிருந்தது. டிசம்பர் மாதச் சூரியன் ஐந்தரைக்கே மறைந்துவிட கிட்டத்தட்ட இருள் முழுவதும் சூழ்ந்திருந்தது.  ஆனந்தின் வீட்டின் கதைவை ரவிக்குமார் திறக்கும் போது, அருண் பாக்கெட்டிலிருந்த கையுறையை எடுத்து இரண்டு கைகளிலும் அணிந்து கொண்டு  வீட்டுக்குள் சென்றான்.

இன்னும் வீட்டுக்குள் எதோ ஒரு லேசான துர்நாற்றம் வீசிக்கொண்டேயிருந்தது. சுத்தம் செய்யப்படாத வீடும் அந்த நாற்றமும் சேர்ந்து இருவரின் வயிற்றையும் குமட்டச்செய்தது. கையில் வைத்திருந்த டார்ச்சை உயிர்ப்பித்து வீட்டிற்குள் வெளிச்சத்தைப் பாய்ச்சினார் ரவிக்குமார். அருண் தன்னிடமிருந்த இன்னொரு டார்ச்சை எடுத்துக்கொண்டு, வாடையைக் குறைக்க முகத்தில் கர்ச்சீப்பைக் கட்டிக்கொண்டு ஆங்காங்கு தேட ஆரம்பித்தான்.

முதலில் ஹாலில் இருந்த ஷோக்கேசில் இருந்து ஆரம்பித்து, அருகிலுருந்த புத்தக ஷெல்ஃப், கம்ப்யூட்டர் மேசை என ஒவ்வொன்றாக அலசிக் கொண்டிருக்க, இன்னொரு புறம் ரவிக்குமார் மேலோட்டமாக ஒரு நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். திடீரென நேற்று டாக்டர் கூறிய விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. நரபலி என அவர் சந்தேகப் பட்டதில் ரவிக்குமாருக்கு துளியும் உடன்பாடு இல்லையெனினும் லேசான உறுத்தல் உள்ளுக்குள் இருந்து கொண்டேயிருக்க மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டிருந்தவர் தரையிலும் சுவற்றிலும் தன்பார்வையைக் கூர்மையாக்கி அலச ஆரம்பித்தார். ஏதேனும் ரத்தத் துளிகளோ கறையோ தென்படுகிறதா என அங்குலம் அங்குலமாக அலச ஆரம்பிக்க

"சார் இத கொஞ்சம் பாருங்க" என்ற அருணின் குரல் கேட்டது.

கையில் ஏதோ ஒரு பேப்பருடன் ரவிக்குமாரின் அருகில் வந்து அதைக் காண்பித்தான்.

"என்ன இது அருண்?"

"சார் இது ஃப்ளிப்கார்ட்ல போன வருஷம் ரேகா பேர்ல ஒரு சாம்சங் மொபைல் வாங்குனதுக்கான ரிசிப்ட். இதுல பாருங்க  மொபைலோட IMEI நம்பர் மென்ஷன் பண்ணிருக்காங்க. நீங்க சோதனை போடும் போது இங்கருந்து எதாவது ஃபோன் கிடைச்சிதா?

"இல்லை  ஃபோன்லாம் எதும் இல்லை..." என ரவிக்குமார் கூற

"அப்போ இதுலருந்தே ஆரம்பிக்கலாம் சார். ஒரு வேளை இந்த ஃபோன இன்னும் ரேகாவோ இல்லை வேற யாரோ யூஸ் பண்ணிட்டு இருந்தாங்கன்னா இந்த IMEI நம்பர வச்சே கண்டுபுடிச்சிடலாம்"

"வெரி குட் அருண் "

"நீங்க ஒரு உதவி மட்டும் பண்ணனும் சார்.. இந்த ஃபோன் இப்பவும் யூஸ்ல இருக்கா? இருந்தா எந்த ஏரியாவுல இருக்குன்னு உங்க டிபார்ட்மெண்ட் மூலமா கண்டுபுடிச்சி சொல்லனும்..."

"அது ரொம்ப சிம்பிள்... நாளைக்கு மதியத்துக்குள்ள நமக்கு டீட்டெய்ல் கிடைச்சிரும்" என கூறிவிட்டு அங்கிருந்த்உ புறப்பட்டனர் இருவரும்.

----

மறுநாள் காலை பதினொரு மணி... அருண் வீட்டிலிருந்து கிளம்பிக் கொண்டிருக்கையில் மொபைல் அழைத்தது. மறுமுனையில் ரவிக்குமார்.

"அருண் ஓரு குட் நியூஸ்.. நேத்து நாம எடுத்த மொபைலோஅ IMEI ஆக்டிவ்லதான் இருக்கு. அதவிட முக்கியமான விஷயம் அதுல யூஸ் பண்ற சிம் சென்னை, ராயபுரம் அட்ரஸ்ல தான் ரிஜிஸ்டர் ஆயிருக்கு... அட்ரசையும்
ஃபோன் நம்பரையும் நோட் பண்ணிக்குங்க.. "

ரவிக்குமார் சொல்ல சொல்ல அருகிலுருந்த டைரியில் குறித்துக் கொண்டான் அருண்.

"அருண் நா கொஞ்சம் அவசர வேலையா வெளியூர் கிளம்பிட்டு இருக்கேன். வர ஒரு ரெண்டு மூணு நாள் ஆகும். நீங்க proceed பண்ணுங்க.. உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணாலும் தங்கதுரை செய்வாரு"

"ஓக்கே சார்.. நா இப்பவே அந்த அடரஸுக்கு கிளம்புறேன்" என கூறிவிட்டு ரவிக்குமாரை கட் செய்து விட்டு ரேவதியின் நம்பரை சுழற்றினான்.

மறுமுனையில் ஃபோனை எடுத்தவுடன் "ரேவதி... நீ உடனே கிளம்பி என்னோட வீட்டுக்கு வா.. நாம அர்ஜெண்டா ராயபுரம் போகனும். ரேகாவ பத்தின ஒரு சின்ன விஷயம் கிடைச்சிருக்கு" என்று கூறியவுடன் ரேவதி கனமும்  தாமதிக்காமல் அருண் வீட்டிற்கு விரைந்தாள்.

ரேவதிக்காக காத்திருந்த அருண் டைரியில் குறித்திருந்த முகவரியை மற்றொரு முறை பார்த்தான்... அதில் குறிக்க்பப்பட்டிருந்த மொபைல் நம்பருக்கு கால்செய்து பார்க்கலாம் என முடிவு செய்து நம்பரை டயல் செய்தான்

ரிங் போயிற்று... போயிற்று... போய்க்கொண்டேயிருந்தது... 15 விநாடிகளுக்கு தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்த ரிங் 16வது விநாடியில் பிக்கப் செய்ய்பட்டது..

மறுமுனையில் "ஹலோ.."   ஒரு பெண்...

சரி எதாவது பேச்சுகொடுத்து யார் என்று பார்க்கலாம் என நினைத்த அருண்

"ஹலோ. I am calling from city bank " என சொன்னது தான் தாமதம்

"ஏண்டா கஸ்மாலம்.. எத்தினி தடவ போன் பண்ணாத பண்ணாதன்னு சொன்னாலும் உனக்கு அறிவே இருக்காதா..." என ஹைபிட்சில் சென்னைத் தமிழ் கொப்புளித்தது.

அடுத்த பதிவில் தொடரும்.


குறிப்பு: மாயவலையின் அடுத்தடுத்த பதிவுகளைத் தொடர "துவாரமலை" "கண்டுபிடி கண்டுபிடி" என்ற இரண்டு கிளைச் சிறுகதைகள் அவசியமாகின்றன. நேரமிருக்கும் போது அவற்றையும் ஒருமுறை படித்துவிட்டு வரும் அடுத்த பகுதிகளைத் தொடரவும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

joe said...

ரெம்ப நல்லா பொயிட்டு இருக்கு ,

Priya said...

Adutha paguthuthi yeppa? Romba aarvama iruku

priya said...

Its very interesting...pls publish the next part.... eagerly waiting

RAJU R G said...

Please post the next episode..
Am eagerly waiting!!!!!!!

Unknown said...

next episode eppo sir varum.. waiting for 1 year.....

முத்துசிவா said...

மன்னிக்கவும் நண்பா... மாயவலையில் முழுக்கதையும் ரெடி.

விரைவில் உங்களை வந்தடையும் !!!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...