பொதுவா சினிமா விமர்சனங்கள் போட்டா பெருமாபலானவங்க ஸ்டெயிட்டா ஸ்க்ரோல் பண்ணி கடைசி பாராவ மட்டும் தான் படிப்பாங்க. மத்த போஸ்ட மட்டும் என்ன முழுசாவா படிக்கிறாங்க அவ்வ். நாம சொல்றது எல்லாருக்கும் ஒத்துப் போகாது. ஒத்துப் போகனும்னு அவசியமும் இல்லை. போன வாரம் நெருங்கிய சீனியர் நண்பர் ஒருத்தர்கிட்ட பேசிகிட்டு இருக்கும் போது திடீர்னு அவரு என்னப்பா வேலையில்லா பட்டதாரி படத்த ஓவர் பில்ட் அப் பண்ணி எழுதியிருந்த.. ஆன படம் எதிர் பாத்த அளவுக்கு இல்லியே அப்டின்னாரு. "சரி விடுங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்.. ஆமா எங்க பாத்தீங்க"ன்னு நா அடுத்த கேள்வி கேட்டேன் "வீட்டுல தான்"ன்னாரு. எனக்கு செம்ம கடுப்பாயிருச்சி. "என்னங்க.. படம்னா அத தியேட்டர்ல பாருங்க.. சும்மா வீட்டுல உக்காந்து பாத்துட்டு அது நல்லால்ல இது நல்லால்லன்னா எப்டிங்க நல்லாருக்கும்?"ன்னேன். உடனே சரி விடுப்பா அப்டியே இருந்தாலும் நீ எழுதுறது ஓரளவு நடுநிலையா எழுதனும்ல? ஒவரா பில்டப் பண்ணிருக்கியே" ன்னு அடுத்து ஆரம்பிச்சிட்டாரு.
இதுல காமெடி என்னன்னா "நீ நடுநிலையா தானப்பா எழுதனும்"ன்னு அவர் சொன்னதுதான். தனி ஒருத்தன் எப்படி நடுநிலையா எழுத முடியும்? நா என்னோட கருத்த தான் எழுத முடியும். என் கருத்த தனியாவும், நடுநிலையா இருக்கேன்னு இன்னொரு மாதிரியும் இருக்க நா என்ன அந்நியனா? தனி ஒரு ஆள் நடுநிலையா பேசுறேன்னு ஆரம்பிச்சான்னா, அவனோட சொந்தக் கருத்துக்கள காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டு அடுத்தவங்களுக்காக பொய் சொல்றான்னு தான் அர்த்தம். நாலு பேரோட கருத்துக்கள கேட்டு அதுலருந்து ஒரு பொதுவான கருத்த எடுத்தா அது நடுநிலையா இருக்கும். தனியா வந்து
நடுநிலையா பேசுன்னா எப்புடி?
நாம போடுறது மட்டும் இல்லை மத்த பதிவர்கள் போடுற விமர்சனங்கள் எல்லாமே அவங்களோட சொந்தக் கருத்துதான். ஏன் நாளிதழ்கள்ல வெளியாகுற விமர்சனங்கள் கூட ஏதோ ஒருத்தரோட சொந்த்க் கருத்து தான். அத படிக்கிற யார் யாருக்கு அந்த கருத்து ஒத்துப் போகுதோ அவங்களுக்கு அது நல்ல விமர்சனமாகவும், மத்தவங்களுக்கு நல்லா இல்லாத மாதிரியும் தோணும்.
நாம நல்லாருக்குன்னு சொன்ன பல படங்கள் மண்ணக் கவ்விருக்கு. அதே மாதிரி தர மொக்கைன்னு சொன்ன படங்கள் பட்டைய கெளப்பிருக்கு. உதாரணத்துக்கு அயன் சுத்தமா புடிக்கல. சிங்கம் 2 மொக்கையா தெரிஞ்சிது. ஆனா சூர்யாவுக்கு இது ரெண்டும் தான் அதிக கலெக்சன் எடுத்த படங்கள். அதே மாதிரி மரியான் புடிச்சிருந்துச்சி, படம் மரண மட்டை. எல்லாருக்கும் ஒரே விஷயம் புடிக்கனும்னு அவசியமும் இல்லை
இதுல அத விட தமாசான விஷயம் என்னன்னா, நாம தரை ரேட்டுன்னு சொன்ன படத்த சில பேரு வீட்டுல டிவிடில பாத்துட்டு "அவ்வளவு மோசமால்லாம்" இல்லியே மச்சிங்கவேண்டியது. ங்கொய்யால.. வீட்டுல உக்காந்து பாட்டையெல்லாம் ஓட்டிருர வேண்டியது. சீன் மொக்கையா இருந்தா லைட்டா ஒட்டிர வேண்டியது. ஃபைட்டு கூட கொஞ்சம் பெருசா இருந்தா அதையும் ஓட்டிர வேண்டியது. ரெண்டரை மணி நேர படத்த முக்கா மணி நேரத்துல பாத்துட்டு அவ்வளவு மோசமில்லையேங்க வேண்டியது. ரெண்டரை மணி நேரம் அத்தனை மொக்கையையும் தாங்கிட்டு வெளியவும் போகமுடியாம உள்ளயும் இருக்க முடியாம சிக்கி செதைஞ்சி பாருங்கப்பா அப்ப தெரியும் அதோட வலி.
அதே மாதிரி நல்ல படங்களும் அப்டித்தான். ஒரு காமெடிய தியேட்டர்ல என்ஜாய் பண்றதுக்கும் வீட்டுல உக்காந்து தனியா பாக்குறதுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. படங்களோட காட்சிங்க பெரும்பாலானது நம்மள தியேட்டர் ஆடியன்ஸா நினைச்சிதான் வைக்கிறாங்க. இத வீட்டுல உக்காந்து வீட்டுக்காரம்மா கிட்ட திட்டு வாங்கிட்டே உர்ர்ர்ன்னு பாத்துட்டு சிரிப்பு வரலைன்னா அதுக்கு யார் என்ன பண்ண முடியும். நோகாம நோம்பு கும்பிட்டு இதுல ஆயிரம் குறை வேற. கவுண்டர் சொல்ற மாதிரி "எடுக்குறது பிச்சை..பேசுறது எகத்தாளமா?"சார் மொதல்ல தியேட்டர்ல படத்த பாருங்க. அப்டி இல்லைன்னா இல்லைன்னா விஜய் மாதிரி "ஐ ஆம் வொய்ட்டிங்" ன்னு இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக வர்ற வரைக்கும் வெய்ட் பண்ணுங்க.
இதுவரைக்கும் பல படங்களை கலாய்ச்சிருக்கேன். அசிங்க அசிங்கமா திட்டிருக்கேன். ஆனாலும் அதனால எனக்கு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இதுவரைக்கும் இருந்ததில்லை. ஏன்னா தியேட்டர்ல பாக்குறேன். எனக்கு அந்த படத்து மேல எல்லா உரிமையும் உண்டு. இன்னும் சொல்லப்போனா தியேட்டர்ல படம் பாக்குற எல்லாருமே அந்தப் படத்தோட ஒரு ஷேர் ஹோல்டர் மாதிரி. அவங்களுக்கு அந்தப் படத்தப் பத்தி எந்தவித கருத்து சொல்றதுக்கும் உரிமை இருக்கு. கோச்சடையான் நல்லால்லைன்னு சொல்றவனுங்ள்ள முக்கால்வாசி பேரு இன்னும் படத்த பாக்காதவிங்க தான்.
ஒரு படத்த பாக்குறதும் பாக்காததும் உங்க விருப்பம். அது உங்களுக்கு புடிக்கிதா புடிக்கலையாங்குறதும் உங்களை பொறுத்தது தான். ஆனா முடிஞ்ச வரைக்கும் தமிழ்ப் படங்களை தியேட்டர்ல பாருங்க. இல்லை டிவிடிலதான் பாப்பேன்னா சத்தம் அதிகம் போடாம பேயாம இருங்க.

more are interested to see the movie in the theatres but the price of the tickets taken them back.
ReplyDelete//கோச்சடையான் நல்லால்லைன்னு சொல்றவனுங்ள்ள முக்கால்வாசி பேரு இன்னும் படத்த பாக்காதவிங்க தான்.//
ReplyDeletefact fact fact...
nachunnu sonnenga,, innum sila friends indha dakalti vela thaan panranunga.. thiruttu vcd la pathutu aayiram kurai solrathu..
avanga kitta naan itha thaan solven.. andha padatha pathi oru vaartha solla kooda unakku urimai illannu...
Watch movies in theatres and make good efforts taste success then only we ll get more good movies.
-- Ardent cinema addict
// but the price of the tickets taken them back// விலை அதிகம்ங்குறதுக்காக திருடுறது தப்பில்லைன்னு சொல்ல வர்றீங்களா?
ReplyDeleteVery good article. I fully endorse your views. Rightly said.
ReplyDeleteமுழுவதுமாய் தங்கள் கருத்தை ஏற்க்கிறேன்...
ReplyDeleteIntha naiga panam sambathika neenga yenda theatre ku poringa?
ReplyDeleteRomba correct ah sonnenga boss.. Theatre la ticket adhigam nu solla mudiyadhu.. namaku entertainment vaenum na adhuku selavu panni dhan aaganum.. 120ticketum iruku..adha vida kammiya ticketum iruku.. parking/food beverages la dhan theatre la naama yemarom..
ReplyDeleteReally nice article siva,
ReplyDeleteI agree to all of your points. same blood..