Thursday, January 22, 2015

ஐ – கபிம் குபாம்!!

காலையில நடந்த படகுப் போட்டிக்கு சாயங்காலம் வந்து அட்டெண்டண்ஸ் போடுறதுக்கு எல்லாரும் மன்னிக்கனும். இருந்தாலும் என்னசார் பண்றது? நம்ம கடமைய நாம செஞ்சி தான ஆகவேண்டியிருக்கு. சரி படம் ரிலீஸ் ஆகி முழுசா ஒரு வாரம் ஆயிட்டதால, கிட்டத்தட்ட படத்த பாக்கனும்னு நெனைச்ச முக்கால்வாசிப் பேரு பாத்துருப்பீங்கங்குற நம்பிக்கையில, வாங்க கொஞ்சம் விளாவாரியா உள்ள போயி கிண்டுவோம்.

சிங்காரவேலன் படத்துல சுமித்ரா கமல்ல கூப்பிட்டு, “வேலா..  இன்னும் நீ செய்யவேண்டிய கடமை ஒண்ணு பாக்கியிருக்குப்பா” ன்னு சொன்னதும் கமல் பொங்கி எழுந்து “சொல்லும்மா.. அப்பாவக் கொன்ன அந்த மூணு பேரு யாருன்னு சொல்லு. உடனே பழி வாங்கனும்” ன்னு கொதிப்பாரு. உடனே சுமித்ரா ஒரு கேவலமான லுக்கு ஒண்ண விட்டு “ஏண்டா.. அதிகமா சினிமா பாக்காத பாக்காதன்னு சொன்னா கேட்டியா? உங்கப்பாவ எங்கடா மூணு பேரு கொன்னாங்க. அவரு உடம்பு சரியில்லாம செத்துபோனாருடா”ன்னு சொல்லுவாங்க. “அந்த மூணு பேர பழி வாங்குற, லெமூரியாக் கண்டத்தோட வழக்கொழிஞ்ச கதையத்தான் நம்ம சங்கர் சாரு மூணு வருஷமா எடுத்து நமக்கு குடுத்துருக்காரு.

எந்திரன் படத்துல சிட்டிக்கு உணர்ச்சி வரலன்னு “உனக்கு ரிவர்ஸ் மேப்பிங் பண்ணி ஹார்மோன் சுரக்க வைக்க போறேன்” ன்னு சொல்லி ஒரு டயலாக் வச்சிருப்பாரு ஷங்கர். அதே ரிவர்ஸ் மேப்பிங் ஃபார்முலாவுலதான் இந்த ஐ பட கதையையே உருவாக்கிருக்காருன்னா பாருங்களேன். அதாவது ஒரு கதைய எழுதிட்டு க்ளைமாக்ஸ் எழுதாம, க்ளைமாக்ஸ எழுதிட்டு கதைய எழுதிருக்காரு இந்த படத்துல.

இப்ப இந்த படத்து கதைய எப்டி டெவலப் பன்னிருப்பாங்கன்னு பாருங்க. அதாவது “ஒரு நாலு வில்லன்கள விக்ரம் வித்யாசமான முறையில சாகடிக்கிறாரு” இதான் படத்தொட ஒன்லைன். இப்போ நாலு வில்லன எப்டி ஃபார்ம் பண்றது? சரி விக்ரம்னு நமக்கு ஒரு அடிமை கிடைச்சிட்டாரு. என்ன சொன்னாலும் செய்வாரு. 

இப்போ விக்ரம்கிட்ட எப்படி ஷங்கர் கதை சொல்லிருப்பாரு பாருங்க.”நீங்க ஒரு பாடி பில்டர் சார். முதல்ல body build பண்றீங்க சார்.. அப்போ உங்களுக்கு ஒரு வில்லன் சார். அப்புறம் பாடிய கொஞ்சம் கம்மி பண்ணி model ஆகுறீங்க சார்.. அப்போ ஒரு வில்லன் சார். எமி ஜாக்சன லவ் பண்றீங்க சார் அப்போ ஒரு வில்லன் சார். மூணுங்குறது எல்லா படத்துலயுமே வந்துட்டதால இந்த படத்துல நாலாவதா ஒரு சஸ்பென்ஸ் வில்லன் சார்.. நாலு பேரயையும் ட்ரிக் யூஸ் பண்ணி ப்ரில்லியண்டா கொல்றீங்க சார்.. பாடிய அப்புடியே  40 கிலோவுலருந்து 130 கிலோ வரைக்கும் ஏத்தி இறக்குறீங்க சார்.. இந்த படம வந்ததும் அப்புறம் இந்தியாவுலயே நீங்க ஒருத்தர் தான் சார்” அவ்வளவுதான் படம் ரெடி.

உண்மையிலயே இந்தப் படத்த ஷங்கர் தான் எடுத்தாரான்னு இன்னும் எனக்கு ட்வுட்டா தான் இருக்கு. இவ்வளவு மட்டமான characterization & திரைக்கதை அவர் படத்துல இதுவரைக்கும் இருந்ததே இல்லை. அஞ்சானுக்கும் இந்தப் படத்துக்கும் ஆறு வித்யாசம் கண்டு புடிச்சா பெரிய விஷயம். விக்ரம்ங்குற ஒருத்தர ரெண்டு வருஷமா கொடுமைப் படுத்துனத தவற இந்தப் படத்தால அவர் வேற எந்த ஒரு விஷயத்தையும் சாதிக்கல.

முதல் முக்கால் மணி நேரம் எதோ “மெட்ராஸ்” படத்த திரும்ப பாக்குற மாதிரி ஒரு ஃபீல். டிவில விளம்பரத்துக்கு வர்ற ஒரு எமி ஜாக்சன் மேல விக்ரம் பைத்தியமா இருக்காரு. இப்பல்லாம் ஹீரோயினையே எவனும் மதிக்க மாட்டேங்குறாய்ங்க. இதுல விளம்பரப் பொண்ணுக்கு விக்ரம் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிற லெவல்ல படத்துல பில்ட் அப் குடுக்குறதே முதல்ல ரொம்ப ரொம்ப செயற்கைத் தனமா இருக்கு.

முதல் பாதி முழுசும், காமெடி பண்றோம்ங்குற பேர்ல அருவருப்பா பேசி சந்தானம் அறுக்குறாரு. ஒரு காமெடிக்கு கூட சிரிப்பே வர மாட்டேங்குது. தலைவா படத்துல சாம் ஆண்டர்சன வச்சி அறுத்த மாதிரி இதுல பவர் ஸ்டார வச்சி அறுக்குறாய்ங்க.

அதவிடக் கொடுமை என்னன்னா விக்ரம் சென்னை லோக்கல் பஷை பேசுறேன்னு நம்மள கொல்றாரு பாருங்க. ஆத்தாடி கத்திய எடுத்து கரகரன்னு அறுத்துக்கலாம் போல இருந்துச்சி. எல்லாத்துலயும் பர்ஃபெக்‌ஷன் பர்ஃபெக்‌ஷன்னு பாக்குற ஷங்கர் இத கொஞ்சம் கூட கவனிக்கவே இல்லை போல.

இன்னொரு பெரிய கொடுமை என்னன்னா படம் பாத்த எல்லாரும் விக்ரம் பட்டைய கிளப்பிட்டாப்ள.. விக்ரமுக்காக பாக்கலாம்  விக்ரமுக்காக பாக்கலாம்னு அடிச்சி விட்டுக்கிட்டு இருக்காய்ங்க. எங்கையா அவரு நடிச்சிருக்காரு. ரெண்டு விஷயம் இருக்குங்க. ஒண்ணு உழைப்பு. இன்னொன்னு நடிப்பு. இதுல விக்ரம் கடுமையா உழைச்சிருக்காரு. தமிழ் சினிமாவுல இதுவரைக்கும் யாரும் கஷ்டப்படாத அளவுக்கு கஷ்டப்பட்டுருக்காரு. ஆனா இதுல எங்கைய்யா நடிச்சிருக்காரு? மூஞ்சில 2 இஞ்ச்க்கு மேக்கப்ப போட்டப்புறம் மூஞ்சி ஒரே மாதிரி தான் இருக்கும்? அதுல எங்க ரியாக்சன அவர் காமிக்க முடியும்?


உதாரணத்துக்கு அபூர்வ சகோதரர்கள் அப்பு கமல எடுத்துக்குங்க. அவர் கால மடக்கி வச்சி நடிச்சது உழைப்பு. ஆனா, ரூபினி அவர் கையில போட்ட மோதரத்த புடுங்கும் போது ஒரு ரியாக்சன் குடுப்பாரு பாருங்க. யப்பா.. அதான் நடிப்பு. இப்ப சொல்லுங்க. விக்ரம் எத்தனை சீன்ல இந்த மாதிரி ரியாக்சன் காட்டிருக்காரு? அவருக்கு மருந்தால எஃபெக்ட் வரவும், சுரேஷ் கோபிக்கிட்ட போய் அழுகுற ரெண்டு சீன்ல தான் உண்மையிலயே செமையா நடிச்சிருக்காரு. மத்த இடத்துல மேக்கப் மட்டும்தான் முன்னால நிக்கிது.

சுஜாதா இறந்ததால யாருக்கு கஷ்டமோ இல்லியோ.. ஷங்கருக்கு தான் பெரிய கஷ்டம். வசனங்கள கேக்கும் போது வண்டி வண்டியா வாயில நல்லா வருது. ஒரு சீன்ல “நா இனிமே கூலி இல்லை. கூட்டாளி” ன்னு ஒரு வசனம் வருது?  எந்திரன்ல “என்ன ரோபோ செஞ்சிருக்கீங்க” ன்னு கேக்குற மாதிரி. பேரரசு படத்துல கூட வசனம் இதவிட நல்லாருக்கும்.

இந்த முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில கோவமான நம்ம டைரக்டருங்க, இப்ப ஒவ்வொரு கேரள நடிகர்களையும் நூதன முறையில பழி வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னால “ஷிவன்” ன்னு ஒருத்தர ஜில்லாவுக்கு கூப்டு வந்து அசிங்கப்படுத்தி அனுப்பி வச்சாங்க. இப்ப நம்ம சுரேஷ் கோபி.

அவருகிட்ட எப்டி கதைய சொல்லிருப்பாங்க பாருங்க. “அதாவது சார் நீங்க படத்தோட ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் அள்ளக்கையா நடிக்கிறீங்க சார். கடைசில ஒரு சீன் வைக்கிறோம் பாருங்க.. ஒரு ட்விஸ்ட் வச்சி ஓப்பன்  பண்ணா நீங்க தான் சார் மெயின் வில்லனே.. “ அவ்வளவு தான் சுரேஷ் கோபி விழுந்துருப்பாப்ள. இது எப்டி இருக்குன்னா.. படத்துல நீங்க தாங்க மெயின் வில்லன். ஆனா படம் முடியிற வரைக்கும் நீங்க தலைமறைவாவே இருக்கீங்க ன்னு சொல்ற மாதிரி இருக்கு.

ஒரு படத்துல நல்லாருந்த எல்லாமே நல்லாருக்கு. கப்பியான எல்லாமே கப்பியாயிடுது. கருமம். “மெரசாலாயிட்டேன்” என்னா பாட்டு.. என்னா ஹிட்டு.. அத எடுத்து வச்சிருக்காய்ங்க பாருங்க வாமிட் வர்ற மாதிரி. இந்தாளு ரோட்டுக்கு பெயிண்ட் அடிக்கிறத நிறுத்தவே மாட்டரு போல அது கூட பரவால்ல..”என்னோடு நீ இருந்தால்” ன்னு விக்ரம் ஒரு கெட்டப் போட்டு வந்து பாடுறாரு பாருங்க. மண்டைய பிச்சிக்கவேண்டியிருக்கு. எமி ஜாக்சன் நம்மூர் பொண்ணாவே மாறிடுச்சி. தமிழ் தெலுங்குன்னு மாறி மாறி நடிச்சி பர்ஃபெக்ட்டா செட் ஆயிடுச்சி. ஆனா முதல் அரை மணி நேரத்துல சுத்தமா லிப் சிங்கே இல்லை. அவளுக்கு மட்டும் இல்லை நிறைய பேருக்கு. டப்பிங் படம் பாத்த எஃபெக்ட்டு.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஷங்கர நம்பியோ இல்லை மக்களை நம்பியோ பணத்த போட்ட மாதிரி தெரியலை. படத்துக்கு வந்த ஸ்பான்ஸ்சர்ஸ நம்பி தான் பணம் போட்டுருக்காரு. வக்காளி.. தீபாவளி அன்னிக்கு விஜய் டிவி. ல படம் பாக்குற மாதிரி வெறும் விளம்பரம் விளம்பரமா ஓடிட்டு இருக்கு. அப்புடியே ஆடியன்ஸ் பக்கம் கேமராவ திருப்பி “சென்டர் ஃப்ரஷ்.. வாய்க்கு போடும் பூட்டு”  ன்னு போட்டு இன்னொரு விளம்பரத்தையும் சேத்து விட்டுருக்கலாம். டைட்டில் போட்டப்போ வாயத் தொறந்தவியிங்க. அதுக்கப்புறம் ஒருத்தன் வாயத் திறக்கல.


கடைசில ஹாஸ்பிட்டல்ல இருக்க வில்லன்கள சந்தானம் “ஆப்பு டிவிலருந்து வர்றோம்”ன்னு சொல்லி interview பண்றது அக்மார்க் ஷங்கர் பட மொக்கை. படத்தோட எந்த இடத்துலயும் நம்மாள கதையோடவோ இல்லை விகரம் கேரக்டரோடவோ ஒட்டவே முடியல. DA VINCI CODE ல வர்ற சைலஸ் கேரக்டரையும், wrong turn ல வர்ற கேனிபல்கள் மூஞ்சியையும் ஒண்ணா இணைச்ச மாதிரி இருக்க விக்ரம் அங்க இங்க ஓடும் போது, எதோ ஹாலிவுட் படத்து கேரக்டர் வழி தெரியாம நம்ம படத்துக்குள்ள வந்துருச்சோன்னு ஒரு ஃபீல் வருது.

ஆனா படம் பட்டைய கிளப்புதுன்னு ஒரு சில கும்பல் திரியிது. சின்ன வயசுல நாம தியேட்டர்ல பாக்குற எல்லா படமுமே நமக்கு பிடிக்கும். ஏன்னா அப்போ நம்மள ஆறு மாசத்துக்கு ஒரு தடவையோ இல்லை ஒரு வருசத்துக்கு ஒரு தடவையோ தான் தியேட்டருக்கு அழைச்சிட்டு போவாய்ங்க. அதனால தியேட்டர்ல என்ன படம் பாத்தாலும் நமக்கு புடிச்சிரும். அதே மாதிரி கமல் படம் ரிலீஸ் ஆகும் போதும், ஷங்கர் படம் ரிலீஸ் ஆகும் போதும் மட்டுமே தியேட்டருக்கு போற ஒரு சில குரூப்பு இருக்கு. (அது யாருன்னெல்லாம் நா சொல்ல மாட்டேன்). அவங்களுக்கு மட்டுமே படம் பட்டைய கிளப்புறது போல தோணும். மகேஷ் பாபு ஸ்டைல்ல ஒண்ணே ஒண்ணு  சொல்லிக்கிறேன் “update ஆவண்ட்ரா”.

மொத்தத்துல ‘ஐ’ பாக்கும் போது, அந்த கூபம், கபிம் குபாம், மிருகினஜம்போ போன்ற தண்டனைகளே நமக்கு மிஞ்சுகின்றன.


26 comments:

  1. ஹா ஹா செம்ம ... அதுக்காக போன வருஷம் நடந்த படகுப் போட்டிக்கு இந்த வருஷம் வந்து அட்டெண்டன்ஸ் போடுவது கொஞ்சம் ஓவர் :-) :-).....

    ReplyDelete
  2. Very biased review.. Avalo mokka illa..

    ReplyDelete
  3. சந்தானம் ஷங்கரிடம் சென்று இன்டர்வியூ எடுக்கிறார் .

    சந் - நாங்க ஆப்பு டீவியில இருந்து வர்ரோம் . ஜென்டில்மேன் , முதல்வன் மாதிரி படம் எடுத்துட்டு இருந்த நீங்க , ஐ படம் எடுத்து சொய்ங்குணு போய்ட்டிங்களே ,இப்போ நீங்க எப்படி ஃபீல் பன்றிங்க ?

    ஷங்கரின் ரியாக்சனை சொல்லவா வேணும் .

    ReplyDelete
  4. kaluthay meikura payanuku evlo arivu....polappa paruda kappi thalaya

    ReplyDelete
  5. Mersalaaiten picturization is very creative and interesting.... Pls chk the hits in YouTube...

    ReplyDelete
  6. நல்ல வேளை , நான் படம் பாக்கலை

    ReplyDelete
  7. படம் நன்றாகத்தான் இருக்கிறது.லிங்காவுக்கு கூட கூட்டத்தைக்காணோம்.படம் ஹவுஸ்புல்...சந்தானம் வர்ற சீன்லாம் செம காமெடிதான்.நான் சிரிச்சேன்..கூடவே தியேட்டர்ல இருந்தவர்களும்...பாட்டு எல்லாம் ஹிட்...நல்லா இருக்கு படம்..

    ReplyDelete
  8. Your Review is Right..
    I Saw the movie...
    I Felt that same..

    ReplyDelete
  9. @சிம்புள்

    //Lingava vida paravayilla//

    இதுலருந்து ரெண்டு விஷயம் நல்லா தெரியிது. நீங்க லிங்கா பாக்கல. அடுத்தவங்க சொன்னத வச்சிக்கிட்டு ஓட்டிக்கிட்டு இருக்கீங்க போலருக்கு
    இன்னொன்னு அந்த கடைசில பாராவுல சொன்ன குரூப்புல நீங்களும் ஒருத்தரா இருக்கலாம்..

    ReplyDelete
  10. @james camera man

    //polappa paruda kappi thalaya//

    வாங்க முகேஷ் அம்பானி.. என்ன உங்க பொழப்ப விட்டுட்டு இந்தப்பக்கம் வந்துருக்கீங்க?

    அந்த முக்குல உக்காந்து பிச்சை எடுக்குற நாய்க்கு லவுட்ட பாரு

    ReplyDelete
  11. //படம் நன்றாகத்தான் இருக்கிறது.லிங்காவுக்கு கூட கூட்டத்தைக்காணோம்.படம் ஹவுஸ்புல்...//

    கூட்டம் இல்லைன்னு நா சொல்லவே இல்லியே.. படம் நல்லா இல்லைன்னு தான் சொன்னேன். நா பாத்தப்போ கூட ஹவுஸ்ஃபுல் தான்.

    அப்புறம் லிங்கா எத்தனை screen la ரிலீஸ் ஆச்சு ஐ எத்தனை ஸ்க்ரீன்ல ரிலீஸ் ஆச்சுன்னு நீங்க தெரிஞ்சிக்கிறது உசிதம்

    //சந்தானம் வர்ற சீன்லாம் செம காமெடிதான்.நான் சிரிச்சேன்..கூடவே தியேட்டர்ல இருந்தவர்களும்...//

    கஷ்டம்



    ReplyDelete
  12. //Mersalaaiten picturization is very creative and interesting.... Pls chk the hits in YouTube...//

    creative தான். ஆனா அருவருப்பாவுல்ல இருந்துச்சி..


    //Pls chk the hits in YouTube//

    இதுமாதிரி ஒவ்வொருத்தரா ஹிட்ட செக் பண்ண சொல்லித்தான் ஹிட்ஸ ஏத்தி விடுறீங்களா? :-)

    ReplyDelete
    Replies
    1. Ipdiye likes a chk panni solli , hits increase pandrathuna, all mass hero songs will b hit... But ppl really do that? Neenga ippa chk paningala? Illa la....

      Delete
  13. siva chance less writing

    unga writing aruvi mathiri
    therikuthu

    super ya

    ReplyDelete
  14. சாரி. இது இளைய தலைமுறைக்கான படம். உங்களுக்குப் பிடிக்காமல் போனது வியப்பில்லை

    ReplyDelete
  15. @தமிழ் பையன்
    //சாரி. இது இளைய தலைமுறைக்கான படம். உங்களுக்குப் பிடிக்காமல் போனது வியப்பில்லை//

    சாரி இது LKG பசங்களுக்கான விமர்சனம் அல்ல. அதனால் தங்களுக்கு இந்த விமர்சனம் பிடிக்காமல் போனதில் வியப்பில்லை

    ReplyDelete
  16. As usual adhiradi.

    ReplyDelete
  17. Good review brother. Tamil cinemala HERO's ai nalla lookah kattura directerla director shankar orutharu.indha film la adhu missing. I film la Vikram and his effort mattum dhan theryudhu. andha effort ah shankar waste pannitaru..... Climax sema mokka.......

    ReplyDelete
  18. Shankar failed as a director from his usual style n theme but Padam avlo mokkai illa. some guys comparing this with linga becoz this is also a biggie with high expectation like linga in recent times.

    Very very biased review. If someone read ur last 2 reviews (Aambala n lingaa) they ll agree with what i said.

    u not mentioned anything about the world class flying car, Air swimming stunt by vishal n bond style bomb kicking in linga, u not wrote a single negative about these movies, really dese two r such great movies without any neagtive?. itha vera evanavathu paniruntha enna ootu ootirupinga.....

    Even in I u not mentioned anything about positives like 'PC, ARR'.

    If you say wat u wrote is ur opinion then write in A4 sheet n read urself. dont post in public n disappoint ur fans muthu....

    ReplyDelete
  19. Hi,

    I agree with previous person's review...
    You didn't mention even a single positive points like Music or Camera or location anything...

    You have mainly focused for faults and that's not really fair...

    you may need to read ur post of "Arasiyalaal Tharam thaazhum kalaingargal" post... Looks like the same applies to u as a blogger...

    you have nice way of writing and i have really enjoyed ur posts a lot...

    Please do write the neutral review and not biased like this...

    I would love to see the same honest feedback of linga or aambala movie alos.. why no negative reviews for that movies...

    This is not only for I review. for some of the other posts where you are just trying to attack people and not taking opinions...just my 2 scents

    End of the day, its your blog and you can write anything..

    ReplyDelete
  20. படு மட்டமான லிங்காவுக்கு இந்த ஐ பரவாயில்ல.

    ReplyDelete
  21. படு மட்டமான லிங்காவுக்கு இந்த ஐ பரவாயில்ல.

    ReplyDelete
  22. Dear Readers,
    This post is only from Muthu Siva's view.

    I saw the movie "I". Movie is Excellent.

    ReplyDelete
  23. " DA VINCI CODE ல வர்ற சைலஸ் கேரக்டரையும், wrong turn ல வர்ற கேனிபல்கள் மூஞ்சியையும் ஒண்ணா இணைச்ச மாதிரி இருக்க விக்ரம் அங்க இங்க ஓடும் போது, எதோ ஹாலிவுட் படத்து கேரக்டர் வழி தெரியாம நம்ம படத்துக்குள்ள வந்துருச்சோன்னு ஒரு ஃபீல் வருது."

    Please see 'HUNCHBACK OF NOTRE DAME 1939' in youtube. Koonan character copy from that movie....Ana intha shankar koonan character sketch design panna romba kastapatannu enna buildup kuduthuchu theriyuma...

    ReplyDelete
  24. திருவிழா வில் கலர் கலரா காட்டி கண் மூடி திறக்கிறதுக்குள்ள நம்ம காச கறக்குற மாதிரி பண்ணிப்புட்டு கல்லா கட்டி புட்டாங்க.மீடியாக்கள் Full Support.ஷங்கர் அடுத்த படத்தில் உஷாரானால் நல்லது நம்மை போன்ற நல்ல ரசிகர்களுக்கு.

    ReplyDelete