Tuesday, June 16, 2015

அமெரிக்காவ தாக்குறோம்!! ஒபாமாவ தூக்குறோம்!!!

என்னடா ஒசாமா பின்லாடனோட ஒண்ணா உக்காந்து படிச்சவன் மாதிரி பேசுற. நாங்க ஏண்டா நடுராத்திரி பன்னண்டு மணிக்கு சுடுக்காட்டுக்கு போறோம் தானே நினைக்கிறீங்க. இன்னிக்கு உங்களுக்கு எதுவும் தோணல. ஆனா திடீர்னு நாளைக்கு காலையில தூங்கி எழுந்திரிக்கும்போது, ஒபாமா மேல கடுப்பு வந்து அந்தாள போட்டுத்தள்ளனும்னு தோணலாம். அந்த மாதிரி சமயத்துல நீங்க கஷ்டப்படக்கூடாதுல்ல. அதுக்காகத்தான் இந்தப் பதிவு. சரி ஆப்ரேசன்ல இறங்குறதுக்கு முன்னால அவய்ங்க என்னெல்லாம் டகால்டி வேலை பண்றாய்ங்க. எப்புடியெல்லாம் அந்தாள பத்தரமா வச்சிருக்காய்ங்குற டீட்டெய்ல கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டோம்னா ரொம்ப நல்லது.

ஒபாமாம அதாவது அமெரிக்க ஜனாதிபதிய பாதுக்காக்குறதுன்னே ஒரு தனி சீக்ரெட் ஏஜென்ஸி இருக்கு. அந்த சீக்ரெட் ஏஜென்ஸில யார் யார் இருக்காங்கன்னு ஒபாமாவுக்கும் அவங்க ஒய்ஃபுக்கும் (first lady) மட்டும் தான் தெரியும். சீக்ரெட்ட ஏன் ஒய்ஃப்கிட்ட சொன்னாருன்னு ஒரு டவுட் உங்களுக்கு வரும். ஒருதடவ அந்தம்மா ஒபாமாகிட்ட அந்த சீக்ரெட் சர்வீஸப் பத்தி கேட்டதுக்கு ”இது ரொம்ப சீக்ரெட் உங்கிட்ட சொல்ல முடியாது”ன்னு சொல்லிருக்காரு. கன நேரத்தில் குபீர்ன்னு மூக்குல ஒரு குத்து விட்டுருக்கு. கொட கொடன்னு ரத்தம் கொட்டவும் உண்மைய ஒண்ணுவிடாம சொல்லிட்டாப்ள. ஒபாமாவ கல்யாணம் பன்னிக்கிட்டதுக்காக வேற வழியில்லாம அந்தம்மாவுக்கும் எல்லா உண்மையும் தெரியும்.

அந்த சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு காரணங்களுக்காக, பெரும்பாலும் எந்த விஷயத்தையும் பப்ளிக்கா டிஸ்கஸ் பன்ன மாட்டாய்ங்களாம். எங்கெங்க என்ன மாதிரியான செக்யூரிட்டி ப்ளான் பண்ணிருக்குன்னு ரொம்ப சிலருக்க்கே தெரியுமாம். அந்த சீக்ரெட் சர்வீஸோட முக்கியமான வேலை ஆப்பு கண்ணுக்கு தெரிஞ்சப்புறம் ஆக்‌ஷன் எடுக்காம, ஆப்பு தெரியிறதுக்கு முன்னாலயே எங்கெல்லாம் அய்யாவுக்கு ஆப்பு இருக்கலாம்னு கணிச்சி அந்த ஆப்புகளையெல்லாம் அலேக்கா எடுக்குறது தான்.



பெரும்பாலும் ஒபாமா விசிட் பண்ற இடங்களுக்கு இந்த சீக்ரெட் சர்வீஸ் முன்னாலயே விசிட் பண்ணி, அந்த இடம் ஃபுல்லா ஒரு தடவ செக் பண்ணுவாங்க. எத்தனை பேர் இருக்காங்க, என்னென்ன சிஸ்டம் அங்க இருக்கு, அய்யாவுக்கு அடி பட்டா தூக்கிட்டு போக பக்கத்துல எந்த ஹாஸ்பிட்டல் இருக்குன்னு எல்லாத்தையும் அலசிருவாங்க. விசிட்டுக்கு முன்னால intelligence டிபார்ட்மெண்ட்லருந்து அய்யா உயிருக்கு எதாவது ப்ராப்ளம்னு ரிப்பொர்ட் இருக்கான்னு டிஸ்கஸ் பன்னி, ஒரு வேளை எதாவது அசம்பாவிதம் ஆயிட்டா எந்த வழியா அய்யாவ கூட்டிக்கிட்டு எஸ் ஆகுறதுங்குறது, அய்யாவோட கார் எங்க வந்து நிக்கனும், அய்யா எப்போ இறங்கனும், எந்த வழியா நடக்கனும்னு எல்லாத்தையும் ப்ளான் பன்னி முன்னாலயே இன்ஸ்ட்ரக்‌ஷன் குடுத்துருவாங்க.  

இன்னும் ஒரு சில ஆபத்தான நேரங்கள்ல, body double ன்னு சொல்லப்படுற டூப்புகளக் கூட அமெரிக்க ஜனாதிபதிக்கு பதிலா யூஸ் பன்னுவாங்கன்னும் சொல்றாங்க. அதாவது மேடையில ஜஸ்ட் வந்து போஸ் மட்டும் குடுத்தா போதும்ங்குற சமயங்கள்ல அந்த மாதிரி டூப்புகள யூஸ் பன்னுவாங்களாம். பேச விட்டா மாட்டிக்குவாய்ங்கள்ள. ஜனாதிபதியோட ஒத்த உருவ அமைப்புள்ள ஆளுங்களத் தேடிப் புடிச்சி அவிங்கள இந்த டூப்புகளா பயன்படுத்துறாங்களாம். அது எப்படி ஒருத்தன் அச்சு அசலா இன்னொருத்தன் மாதிரி இருக்க முடியும்னு நீங்க கேக்கலாம். ஓரளவுக்கு சிமிலரா இருப்பாய்ங்க. ஒரே மாதிரி கொண்டு வர, முகத்துல  சிலப்பல ப்ளாஸ்டிக் சர்ஜரிய பன்னிவிட்டுருவாய்ங்க. யாரு கண்டா விட்டா அவிய்ங்க க்ளோனிங் கூட பன்னி வச்சிக்குவாய்ங்களாம். அந்த மாதிரியான டூப்புங்க வெளி உலகத்தோட எந்த காண்டாக்டும் இல்லாம தனியாவே வச்சிருப்பாய்ங்களாம்.

Vantage Point ன்னு ஒரு படம். அமெரிக்க அதிபர் க்யூபாவுல நடக்குற ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மீட்டிங்குல கலந்துகிட்டு பேசனும். ஆனா அந்த மீட்டிங்குல அவர போட்டுத்தள்ள நிறைய பேர் ப்ளான் பன்னிருக்கதா இண்டெலிஜன்ஸ் ரிப்போர்ட் வந்துருக்கும். இந்த சீக்ரெட் ஏஜென்ஸில இருக்கவய்ங்கல்லாம் அவர இந்த மீட்டிங்குக்கு போக வேண்டாம் போக வேண்டாம்னு எவ்வளவோ சொல்வாங்க. ஆனா “இது அண்ணனுக்கு ப்ரஸ்டீஜ் ப்ராப்ளம்டா” ன்னு அதிபர் அந்த மீட்டிங்குல கலந்துகிட்டே ஆகனும்பாரு. அவிங்களும் பயங்கரமா செக்யூரிட்டிய பயங்கரமா டைட் பன்னி அதிபர ஸ்டேஜ்ல ஏத்துவாய்ங்க. ஸ்டேஜ்ல ஏறி கையத்தான் தூக்குவாரு.. டுமீல்ன்னு நெஞ்சுல குண்டு பாஞ்சி அங்கயே வாயப் பொளந்துருவாரு.

நம்மல்லாம் அய்யயோ என்னடா இவ்வளவு செக்யூரிட்டி இருந்தும் அய்யாவ போட்டுட்டாய்ங்களேன்னு ஃபீல் பன்னிட்டு இருப்போம். நம்மள மாதிரியே அமெரிக்க ஜனாதிபதியும் எதிர்த்த பில்டிங்குல உக்காந்து “என்னடா இவ்வளவு செக்யூரிட்டி இருந்தும் சுட்டுட்டுட்டாய்ங்களே” ன்னு ஃபீல் பன்னுவாரு. யோவ் உன்னையத்தானய்யா சுட்டாய்ங்க.. இங்க உக்காந்து வேடிக்க பாத்துக்கிட்டு இருக்க. அப்புறம் தான் தெரியிது அவய்ங்க மீட்டிங்குக்கு அனுப்சது அவரோட டூப்ப.  அப்புறம் செத்துப்போன அந்த பாடிய தூக்கிட்டு வந்து ரமணா படத்துல பாடிய வச்சி காச கரக்குற மாதிரி, “அய்யாவுக்கு சீரியஸா இருக்கு.. அய்யா அபாய கட்டத்த தாண்டிட்டாரு” ன்னு ஏதேதோ சொல்லி சமாளிப்பாய்ங்க. முடிஞ்சா Vantage point பாருங்க. செம படம்.

ஹிட்லருக்கு குறைஞ்சது ஆறு பாடி டபுள்ஸ் இருந்ததா சொல்றாய்ங்க. ஆறு பேரு இருந்தாங்களோ இல்லியோ ஆனா ஒருத்தன் நிச்சயாமா இருந்தான்னு வரலாறு சொல்லுது. அவன் பேரு Gustav Weler பாவம் ஹிட்லர் மாதிரி இருந்தது ஒரு குத்தமாய்யா.. போர் நடந்துகிட்டு இருக்கும்போது எதிரி க்ரூப்ப குழப்புறதுக்காக இவன மர்கயா சாலா பன்னி பாடிய தூக்கி வீசிருக்காய்ங்க. எதிரி குரூப்பும் அந்த பாடிய ஹிட்லர்னு நினைச்சி கொஞ்ச நாள் பஜன பாடிருக்கானுங்க. 

செத்தது ஹிட்லர் இல்லைங்குறது ஒரு டிவிஸ்டுன்னா செத்தது Gustav Weler eh இல்லன்னு சொல்றாரு ஒருத்தரு. W. Hugh Thomas  ங்குற ப்ரிட்டீஷ் டாக்டரு அப்ப செத்தது Gutsav Wheler இல்லப்பா… அப்ப செத்தது ஹிட்லரோட சமையல்காரன். அவனும் ஹிட்லரோட ஒரு பாடி டபுள்னு சொல்லிருக்காரு. ஹிட்லர் மட்டையானதுக்கப்புறம் Gutsav Wheler ah சோவியத் காரனுங்க புடிச்சி இன்வெஸ்டிகேஷன் பன்னாங்கன்னும் சொல்றாரு.




சரி அத விடுங்க. இப்ப மேட்டர் ஒபாமாவுக்கு பாடி டபுள் இருக்காரா இல்லையா… நம்ம கரெக்டான ஆளத்தான் தூக்குறோமா இல்லையான்னு தெரியனும்.  இதுவரைக்கும் அவருக்கு பாடி டபுள் யூஸ் பன்னதா எந்தத் தகவலும் இல்லை. ஆனா இந்தோநேஷ்யாவுல Ilham anas ங்குற ஒருத்தன் அப்படியே ஒபாமா மாதிரி இருக்காப்ள. கொடுமை என்னன்னா அந்தாளும் நம்ம மோடிஜீ மாதிரி அடிக்கடி ஊர் சுத்துவாப்ள போல. போற இடத்துலயெல்லாம் “ஐ ஒபாமா.. ஐ ஒபாமா” ன்னு கூட்டம் கூடிருதாம். போற வர்றவய்ங்கள்ளாம் இவரு கூட நின்னு ஃபோட்டொ எடுத்துக்குறாங்களாம். ஒருதடவ இவரு அமெரிக்கா போயிருந்தப்போ இவன்கூட எலிவேட்டர்ல வந்த  ஒரு கிழவி ஒபாமாதான் வந்துட்டாருன்னு செம்ம ஷாக் ஆயி படபடப்பாயிருச்சாம்.

அவன்கிட்ட போய் ஒருதடவ ரிப்போர்ட்டருங்கல்லாம் “ஏன்பா.. நீ ஏன் ஒபாமாவுக்கு டூப்பா நடிக்கக்கூடாதுன்னு கேட்டுருக்காய்ங்க. அதுக்கு அவன் செருப்புல அடிச்சா மாதிரி ”என்னால குண்டடி பட்டெல்லாம் சாகமுடியாதுப்பா” ன்னு நோஸ் கட் பன்னி அனுப்பிருக்கான். இந்த அவமானம் நமக்குத் தேவையா.

(அடுத்த பதிவில் தொடரும்)

         

4 comments:

  1. your trade mark is missing in this post.. not as much as expected :-(
    what happened ? heavy work load ?

    ReplyDelete
  2. // heavy work load ?//

    heavy work load ன்னு சாக்கு சொல்ல நா விரும்பல :-)

    ReplyDelete
  3. //heavy work load ன்னு சாக்கு சொல்ல நா விரும்பல :-)//
    என்னே ஒரு பெருந்தன்மை..!!!! :-)

    ReplyDelete
  4. No problem :-) will wait for the next posts with your trade mark comedy :-)

    ReplyDelete