Thursday, July 16, 2015

மாயவலை – இந்த தடவ மிஸ் ஆவாது!!!


Share/Bookmark
”யோவ் அடுத்த பார்ட் போடுவியா மாட்டியா? “ கூடிய சீக்கிரம் போட்டுடுறேண்ணே… ”ஆமா அத உண்மையிலயே நீதான் எழுதுறியா.. இல்லை வேற எவனாது எழுதுறத சுட்டு போட்டுக்கிட்டு இருக்கியா?” சத்தியமா நாந்தான் எழுதுறேண்ணே.. ”அப்புறம் போட வேண்டியதுதானே வெண்ணே” ன்னு குறைஞ்சது ஒரு பத்து பேராவது இதுவரைக்கும் அசிங்கப்படுத்திருப்பாங்க. ”எல்லாம் சரியாக இருக்கிறது மன்னா ஆனால் ஒட்டவைப்பதற்குத்தான் நேரம் வரவில்லை” ங்குற மாதிரி சிலப்பல டெக்னிக் ஃபால்டால உடனடியா அடுத்தடுத்த பகுதிகளை போஸ்ட் பண்ண முடியல.

க்ரோம்பேட்டைல ரெண்டு வருஷத்துக்கு முன்னால நண்பர்களோட அபார்ட்மெண்ட்ல தங்கியிருந்தோம். கீழ்வீட்டுல இருந்த மணிங்குறவரால செம தொல்லை. பைக்க இங்க விடாதேள், அங்க நிக்காதேள், இங்க உக்காராதேள், மோட்டர போடாதேள்ன்னு கடுப்பேத்திட்டே இருப்பார். ஒரு நாள் நானும் நண்பன் அனந்த நாராயணனும் மொட்டை மாடியில உக்காந்து பேசிட்டு இருக்கும்போது “டேய் இந்த ஆள ஓட்டுற மாதிரி எதாவது ஒரு போஸ்ட போட்டுவிடுடா” ன்னான். அவர ஓட்டுறதுக்காக ஆரம்பிச்ச ஒரு சின்ன போஸ்ட், எங்களுக்கு அடுத்த வீடு பூட்டியிருக்கது, பின்னால ரயில்வே ட்ராக் எல்லாத்தையும் கோர்த்து ஒரு க்ரைம் கதையாயிருச்சி. கொஞ்சம் நல்லாவே டெவலப்பும் ஆச்சு. நண்பர்கள்கிட்ட நல்ல வரவேற்பும் இருந்துச்சி. சரி சும்மா இருக்கட்டுமேன்னு அந்தக் கடைசி பகுதில ஒரு ”தொடரும்” ன்னு போட்டுவச்சேன்.

ரெண்டு மூணு வாரத்துல நிறைய நண்பர்கள் அந்த தொடரும் என்னப்பா ஆச்சின்னு கேக்க ஆரம்பிச்சிட்டானுங்க. சும்மானாச்சுக்கும் ஒரு பேச்சுக்கு போட்டா அத சீரியஸாவேற எடுத்துக்கிட்டாங்களேன்னு அதுக்கப்புறம் தான்  அடுத்த பார்ட்டுக்கு என்ன பன்னலாம்னு யோச்சிக்கவே ஆரம்பிச்சேன். கழிவறையில கண நேரம் யோசிக்கும் போதே ஒரு சிறிய யோசனை. ஆமா ஏன் இந்த ஒரு கதைக்கு மட்டும் அடுத்த பார்ட் எழுதனும்? ஏற்கனவே ஒரு மூணு சின்ன க்ரைம் கதைகள் இதுலயே எழுதியிருந்ததால, அதுக்கும் சேர்த்து, இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக மூணு வெவ்வெறு கதைக்கு ஒரே சீக்குலா எழுதினா என்னன்னு மைண்டுல ஓடுச்சி. அப்டியே ஃபிக்ஸும் ஆயிருச்சி. 

அந்த மூணு கதைகளையும், அதிலுள்ள கேரக்டர்களையும் மேட்ச் பண்ணி முடிஞ்ச அளவு லாஜிக் ஓட்டைகளை சரி செஞ்சு ஒரு முழுமையான த்ரில்லர் கதையா கொண்டு வர்றதுக்கு கிட்டத்தட்ட ஒரு 9 மாசம் ஆயிருச்சு. இந்த மார்ச்ல தான் முழுக்கதையும் முடிச்சேன். ஆனாலும் அத நம்ம தளத்துல போஸ்ட் பண்ண முடியல. அடுத்தடுத்த பகுதிகளைப் படிக்க, ரெண்டு மூணு வருஷம் முன்னால எழுதிய சில கதைகளையும் படிக்கிறவங்க refer பன்ன வேண்டியிருந்ததால நிச்சயம் அது படிக்கிறவங்களுக்கு கடுப்புகளக் கிளப்பி விட்டுரும்னு அப்டியே பெண்டிங்க்ல போட்டாச்சு.அப்பதான் நண்பர் மோகன்குமார் மூலமா இயக்குனர் முத்துராமலிங்கம் அய்யா பழக்கமானாரு. அவர்கிட்ட முழுக்கதையையும் படிக்க குடுத்ததும், படிச்சிட்டு “நல்லாருக்கு.. நீங்க எதாவது வார இதழ்ல இத தொடரா வெளிட சொல்லலாம்” ன்னு சொன்னாரு. ஆனா நமக்கு எந்த வார இதழ்லயும் அந்த அளவு பழக்கமில்லை. விகடன வேற ரெண்டு மாசம் முன்னால தான் ஒரு போஸ்ட ஆட்டைய போட்டாய்ங்கன்னு கழுவி ஊத்துனோம். அதனால இது ஆவுறதில்லைன்னு விட்டாச்சு.

அப்புறம் முத்துராமலிங்கம் அய்யாவே WWW.JUSTNOWINDIA.COM  ல பொறுப்பெடுத்த உடனே, இதுலயே ஆன்லைன் சீரிஸா போடலாமேன்னு இன்னியிலருந்து ஆரம்பிச்சாச்சு. வாரம் இருமுறை.

வழக்கம்போல பாதியில நின்னுருமோன்னு யாரும் வெறிக்க வேண்டியதில்லை. முழுக்கதையையும் எழுதி முடிச்சாச்சு. முதல் 7,8 எபிசோடுகள் நீங்க ஏற்கனவே படிச்ச மாதிரியிருந்தாலும், அதிலுள்ள கேரக்டர்கள் தான் கடைசி வரைக்கும் வரப்போகுதுங்குறதால கொஞ்சம் நினைவு படுத்திக்கிறது நல்லது.  

என்னால முடிஞ்ச அளவு ஒவ்வொரு பகுதியையும் சுவாரஸ்யமா இருக்குற மாதிரி எழுதிருக்கேன். உங்களுக்கும் பிடிக்கும்னு நம்புறேன். முழுசும் படித்தவுடன் இங்க வந்து வெறிய தீத்துக்கலாம். நா எங்கயும் போகமாட்டேன்.  அவ்வ்வ்…

லிங்க்


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

Anonymous said...

I didn't read your old posts related to Mayavalai, I dont know how your crime story writing will be. But I expect & I like this kind of humorous articles only from you :-) PS: anyway, i will try to read the series

Priya said...

Oru valiya ....appada

kaniB said...

ஹலோ சிவா,

மாயவலை சிறப்பாக இருந்தது.. ஆனால் Justnowindia.com வேலை செய்யவில்லை.. ஆதலால் அடுத்த பகுதிகளைப் படிக்க உதவ முடியுமா??

நன்றி,
கனி

kaniB said...

ஹலோ சிவா,

மாயவலை சிறப்பாக இருந்தது.. ஆனால் Justnowindia.com வேலை செய்யவில்லை.. ஆதலால் அடுத்த பகுதிகளைப் படிக்க உதவ முடியுமா??

நன்றி,
கனி

முத்துசிவா said...

Please post ur mail id or mail me muthusiva007@gmail.com

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...