”எத்தனை
நாள்தான்பா சும்மா, இந்தப் படம் நல்லா இல்லை, அந்தப் படம் மொக்கையா இருக்குன்னு சுட்ட
வடையே சுட்டுக்கிட்டு இருப்ப. எதாவது உருப்படியா பண்ணலாம்ல” ன்னு ஒருத்தர் நாக்க புடுங்கிக்கிற
மாதிரி கொஞ்ச நாள் முன்னால கேட்டதோட விளைவுதான் இது. ஏண்டா நெட்டுல அருத்தது பத்தாதுன்னு
புத்தகமா வேற அருக்கப்போறியான்னு நீங்க நினைக்கலாம். ப்ளீஸ் என்ன தடுக்காதீங்க. நானும்
ரவுடியா ஃபார்ம் ஆயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
சரி
முதல்ல மாயவலைய முழுசா எழுதி அத மொதல்ல ரிலீஸ் பன்னுவோம்ங்குற ஐடியாவுல முழுக்கதையையும்
எழுதிட்டு சில பதிப்பகங்கள்ல “What is the procedure the publish a book” ன்னு வசூல்ராஜா
ஸ்டைல்ல கேக்க அவிங்க கோரஸா “தம்பி நாங்க மதன் சுஜாதா மாதிரி ஃபேமஸான ஆளுங்களோட புத்தகங்களத்தான்
வெளியிடுவோம். உன்ன மாதிரி புதுசா எழுதுறவங்க புக்கையெல்லாம் நாங்க பப்ளிஷ் பண்றதில்லை.
” ன்னாங்க. “ணே… நா புதுசில்லண்ணே.. ஆறு ஏழு வருஷமா blog la எழுதுறேண்ணேன்” ன்னேன்.
அதுக்கு அவிங்க “நீ ஒண்ணாப்புலருந்து கூடத்தான் ரூல்டு நோட்டுல எழுதிட்டு இருந்துருப்ப.
அதயெல்லாம் நாங்க கணக்குல எடுக்க முடியாது ஓடிரு” ன்னு மரியாதையா சொல்ல பட் அந்த டீலிங்
எனக்கு புடிச்சிருந்ததால அமைதியா வந்துட்டேன்.
சரி
ஸ்டெரெய்ட்டா ஹீரோ வேலைக்கு ஆகல. மொதல்ல வில்லன் அப்புறம் ஹீரோ அப்புறம் டெல்லின்னு
படிப்படியா போவோம்னு முதல் படியா self-publishing மூலமா இந்த ரவுச publish பன்னிருக்கேன்.
நம்ம blog la வெளியிடப்பட்ட சில நல்ல பதிவுகளத் தொகுத்து இந்தப் புத்தகத்துல கவர் பன்னிருக்கோம்.
அதுமட்டும் இல்லாம, முதல் பக்கத்துலருந்து கடைசி கவர் பக்கம் வரைக்கும் புத்தகத்தோட
டைட்டிலுக்கு ஏத்த மாதிரி ரவுசக் கூட்டிருக்கோம். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்னு
நம்புறேன். ஒரு சாம்பிள் கீழே
இத
புத்தகமா ரிலீஸ் பன்றதுக்கு ரொம்ப உதவியா இருந்தவரு நண்பர் பால விக்னேஷ். Layout லருந்து
கவர் டிசைன் வரைக்கும் எல்லாத்தையும் பன்னிக்குடுத்தது அவர்தான். நா எதோ ஒரு மாதிரி
கவர்டிசைன் பன்னலாம்னு சொல்ல, ஆனா அவரு நா கேக்காமலேயே எனக்கு புடிச்ச மாதிரி தலைவர்
படத்த வச்சே கவர் டிசைன் பன்னிக்குடுத்து அசத்திட்டாரு. என்னடா அவுர் இவுர்ன்னு ஓவரா
மரியாத குடுக்குறேனேன்னு வெறிக்காதீங்க. நம்ம காலேஜ்மேட் தான். சும்மா ஒரு பில்ட் அப்பு.
”தம்பி ப்ரச்சனை பன்னாதீங்கப்பா” போஸ்டுல மாட்ட
சிங்கம் அடிக்கிற மாதிரி ஒரு படம் வரைஞ்சாருன்னு சொன்னேன்ல. அது இவரு தான்.
சரி
இவ்ளோதான் மேட்டரு. எப்பவும்போல நண்பர்கள் அனைவரோட ஆதரவையும் எதிர்பாக்குறேன். நிச்சயம்
உங்களுக்கு பிடிச்ச ஒரு புத்தகமாவும் உங்களை கண்டிப்பா சிரிக்க வைக்கும் புத்தகமாகவும்
இருக்கும்னு நம்புறேன். லிங்க் கீழே.
குறிப்பு:
இந்த
போஸ்ட பாத்தப்புறம் புத்தகத்த ஆர்டர் பண்னாம படக்குன்னு க்ளோஸ் பன்றவங்க கவனத்திற்கு. அப்டி எதாவது செஞ்சா என்னாகும் தெரியும்ல..
உசார்
பத்திரி ரெய்டு
வாச்சா
பத்திரி சீ..
மயில்சாமி சொல்லுவாரே ரத்த வாந்தி.. அதுதான்.
உடம்ப பாத்துக்குங்க...
Done
ReplyDeleteVaazthukkal Boss :)
ReplyDeleteRegards,
A Yusuf
ரவுடியாக ஃபார்ம் ஆனதற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்னே......புக் எங்க கிடைக்கும்
ReplyDeleteஅன்னே.புக் எங்க கிடைக்கும்
ReplyDeleteஅன்னே புக் எங்க கிடைக்கும்
ReplyDeleteBOKKING DONE BEFORE 5 DAYS WHY NOT SEND THE BOOK ENNAYA RAVUSA
ReplyDelete@Thangaraj:
ReplyDeleteஒரு வாரம் கழிச்சிதான் ship பன்றாய்ங்க :-(
கூடிய சீக்கிரம் வந்துரும்.. அவ்வ்வ்
@cbz pandiyan
ReplyDeleteநண்பா page la right side la இருக்க ரவுசு ஃபோட்டோவ க்ளிக் பண்ணுங்க.