Sunday, August 23, 2015

KICK 2 – கால் நூற்றாண்டுக்குப் பிறகு ஒரு கபி கபி!!!

இந்த வருஷம் என்னனே தெரில. பெரும்பாலும் நா பாக்குற எல்லா படங்களுமே ஓரளவுக்கு நல்லாதான் இருக்கு. கடந்த ரெண்டு மூணு வருஷங்களா மிரட்டல் அடி. ட்ராவிட்டோட டெஸ்ட் மேட்ச் strike rate மாதிரி பத்துபடம் பாத்தா ரெண்டு மூணு தேறுறதே ரொம்ப கஷ்டமா இருக்கும். நிறைய பேரு “ஏன் பாஸ்… நீங்க வேணும்னே இந்த மாதிரி மொக்கை படத்துக்கு போய் உக்காருவீங்களா?” ன்னுலாம் கேட்டுருக்காய்ங்க. ஆப்பு மேல யாராவது வேணும்னே போய் உக்காருவாய்ங்களா. ஆனா இந்த வருஷம் நா பாக்குற நல்ல படங்களோட அளவு ட்ராவிட்டோட One day strike rate மாதிரி கொஞ்சம் அதிகமாயிருக்குங்குறதுல மகிழ்ச்சியே.

வருஷத்துக்கு குறைஞ்சது ரெண்டு படம் ரிலீஸ் பன்னிட்டு இருந்தாலும், கடந்த ரெண்டு மூணு வருஷத்துல ரவி தேஜாவுக்கு சொல்லிக்கிறமாதிரி ஒரு பெரிய ஹிட்டும் இல்லை. எல்லா படங்களும் கமர்ஷியல் ஹிட்டுன்னு அறிவிக்கப்பட்டாலும் பாக்குற நமக்கு படங்கள் என்னவோ சற்று டொம்மைபோல்  தான் இருக்கும். நிச்சயம் ஒரு மிகப்பெரிய ஹிட்ட குடுத்தே ஆகனும்ங்குற சமயத்துல ஆறு வருஷத்துக்கு முன்னால வந்து மெகாஹிட் ஆன கிக் படத்தோட ரெண்டாவது பகுதிய அதே இயக்குனரான சுரேந்தர் ரெட்டியோட சேர்ந்து எடுத்து ரிலீஸ் பன்னிருக்காரு.

முதல்ல படத்துல ஒரு ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்னன்னா KICK 2 ன்னு பேர் வச்சிட்டு, நம்ம சிங்கம் 2 ல வந்த மாதிரி முதல் பாகத்தோட அதே plot la கேரக்டர்கள மட்டும் மாத்திபோட்டு ரெண்டாவது பார்ட் எடுத்து கடுப்பேத்தாம, ஒரு புது story line ல (actual ah அது புதுசு இல்லை) படத்த எடுத்துருக்காங்க. கிக் 2 ன்னு பேர் வச்சதுக்காக முதல் பாகத்துக்கும் இதுக்கும் ஒரு சின்ன கனெக்‌ஷனையும் வச்சிருக்காங்க. தயவுசெஞ்சி தமிழ் Kick யும், அதுல வர்ற ஜெயம் ரவி மொகரையும் கொஞ்ச நேரத்துக்கு நினைக்காம இருக்கது உசிதம். படம் பார்க்குற முடிவுல இருக்கவங்க இதோட கட் பண்ணிட்டு கடைசிக்கு பாராவுக்கு போயிருங்க.

முதல் பாகத்துல கிக்குக்காக எதை வேணாலும் செய்யிற ரவிதேஜா, வயசாகி அமெரிக்காவுல செட்டில் ஆயிடுறாரு. கிக் ரவிதேஜாவோட பையன்தான் Comfort ரவிதேஜா. பையன்னு சொன்னாலும் பாக்குறதுக்கு அவருக்கும் அப்பா வயசு மாதிரிதான் இருக்கு. வயசாயிருச்சில்லே. அவரு எப்டின்னா Personal comfort க்காக எத வேணாலும் செய்வாறு. எவ்வளவு ரிஸ்க் வேணாலும் எடுப்பாரு.  அம்மாவோட வயித்துக்குள்ள இருக்க comfort ah இல்லைன்னு ஏழே மாசத்துல பொறந்தவருன்னா பாத்துக்குங்களேன். ஆனா அடுத்தவங்க ப்ரச்சனைக்கு எந்த குரலும் குடுக்க மாட்டாரு. அவங்க அவங்க ப்ரச்சனைய அவங்கதான் தீத்துக்கனும்ங்குற கொள்கையோட வாழ்றவறு.

டாக்டரான comfort ரவிதேஜா தனக்கு சொந்தமா ஒரு ஹாஸ்பிட்டல் கட்டுறதுக்கு அப்பாகிட்ட பணம் கேட்டு கிடைக்கலன்னதும், ஹைதராபாத்ல இருக்க அவங்களோட பழைய இடம் ஒண்ண வித்துட்டு பணம் வாங்குறதுக்காக ஹைதராபாத் வர்றாரு. அங்க அந்த இடம் இன்னொரு ரவுடியால ஆக்ரமிப்பு செய்யப்பட்டிருக்கு. ப்ரம்மானந்தம் வீட்டுல தங்கிட்டே அந்த ரவுடிக்கிட்டருந்து இடத்த திரும்ப வாங்குற முயற்சில இறங்குறாரு ரவிதேஜா.

இன்னொரு பக்கம் தெலுங்கு சினிமா வரலாற்றுல இருபத்தி ரெண்டாயிரத்தி முன்னூற்றி முப்பதஞ்சாவது முறையா, பீகார்ல உள்ள விலாஸ்பூர்ங்குற ஒரு கிராமத்தையே அடிமையா வச்சி, அவங்க ஆண் குழந்தைகளையெல்லாம் அவங்ககிட்டருந்து பிரிச்சி போதைக்கு அடிமையாக்கி வேலை வாங்குறான் தாகூர்ங்குற ஒரு கொடூர வில்லன். எதிர்த்து கேக்குறவங்கள கேள்வியே இல்லாம மரத்துல கட்டிவச்சி எரிச்சிருவாப்ள. இந்த கொடுமையிலருந்து யாராவது நம்மள காப்பாத்த வரமாட்டாங்களான்னு ஊர்மக்கள் ஏங்கிக் கிடக்காங்க.

அந்த சமயத்துல ஹைதராபாத்ல ரவிதேஜாமேல கார விட்டு அடிச்சிட்டு சாரி கேக்காம போயிடுறான் ஒரு லோக்கல் ரவுடி. அவன் சாரி கேக்காம பொய்ட்டதால, அவன் மொத்த கேங்கையும் ஒரே ஆளா நின்னு அடிச்சி தொம்சம் பன்னி அவன நார் நாரா கிழிச்சி தொங்க விடுறாரு ரவிதேஜா. இத மறைஞ்சி நின்னு பாக்குற விலாஸ்பூர் கிராமத்த சேர்ந்த ஒருத்தன், நம்ம ஊர தாகூர்கிட்டருந்து காப்பாத்த இவனால மட்டும்தன் முடியும்னு முடிவு பன்னி ஊர்ல போய் சொல்றான். ஊர் மக்கள்லாம் ஒண்ணு சேந்து ரவிதேஜாவ பீகார் கிராமத்துக்கு வரவைக்க திட்டம் தீட்டி செயல்படுறாங்க.

ரவிதேஜாவும் விலாஸ்பூர்க்கு போறாரு. சொந்தப் பிரச்சனைக்கு மட்டுமே ரவிதேஜா சண்டை போடுவாறு. அடுத்தவங்க ப்ரச்சனைக்காக எதுவும் செய்யமாட்டாருன்னு தெரிஞ்ச ஊர் ஜனங்க ரவிதேஜாவ நேரடியா தாகூரோட மோத வைக்க நிறைய ப்ளான் பண்ணி ரவிதேஜாவ வில்லனோட கோர்த்துவிட்டு , எப்படி வில்லன கொல்றாங்கங்குறதுதான் நம்ம கிக் 2.

கிக் முதல் பாகத்துல காமெடிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனா இதுல காமெடி மட்டும் இல்லாம செண்டிமெண்ட் ஆக்‌ஷன்னு வழக்கமான தெலுகு ஃபார்முலாவுல வந்துருக்கு. ”பண்டிட் ரவிதேஜா” ங்குற பேர்ல வர்றாரு நம்ம ப்ரம்மாணந்தம். அவர் சந்தோஷம் வரும்போதும் கோவம் வரும்போதும் தலையில ரெண்டு கையால அடிச்சிக்கிட்டு டான்ஸ் ஆடுறதுதான் ஹைலைட். சமீபத்துல வந்த படங்கள கம்பேர் பண்ணூம்போது காமெடி இதுல கொஞ்சம் பரவால்ல. பீகார்ல உள்ள அந்த வரண்ட கிராமத்துல ரவிதேஜாவ கம்ஃபர்ட்டா வைச்சிக்கனும்னு ஊர்மக்கள் செய்யிற விஷயங்கள் செம. அதுவும் அந்த ஊர்ல ரெட் புல் கிடைக்கிறதும், KFC சிக்கன குல்ஃபி வண்டில கொண்டு வந்து வந்து தெருக்கள்ள விக்கிறதும் செம லந்து.



ஒருபக்கம் காமெடின்னாலும் ஊர்மக்கள் ரவிதேஜா comfort ah மூணு வேளை நல்ல சாப்பாடு சாப்புடனும்ங்குறதுக்காக அவங்க தினம் சம்பாதிக்கிற மொத்த காசையும் குடுத்துட்டு அவங்க ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டுகிட்டு இருக்காங்க. மகள வில்லன் கொன்னுட்டானு தெரிஞ்சும் ரவிதேஜாவுக்கு சாப்பாடு போடுறதுக்காக அந்த பொண்ணோட அம்மா கண்ண டக்குன்னு துடைச்சிட்டு போறதெல்லாம் செண்டிமெண்ட் டச்.

வில்லன் தாகூரோட பையன ரவிதேஜா சாவடி அடிச்சிட்டு ஊருக்கு கிளம்புவாரு. அவனுக்கு ட்ரீட்மெண்ட் குடுக்குற டாக்டர் இவன் எழுந்து நடக்க குறைஞ்சது ஒருவாரத்துக்கு மேல ஆகும்ன்னு சொன்னதும் வில்லன் ரவிதேஜாகிட்டபோய் “என் பையன் ஒருவாரம் கழிச்சி வந்ததும் அவன்கிட்ட நேருக்கு நேர் மோதனும். என்பையன் கையாலதான் நீ சாகனும். அதுவரைக்கும் நீ இங்கயேதான் இருக்கனும்” ன்னு சொன்னதும், ”ஒருவாரம்லாம் என்னால இங்க இருக்க முடியாது” ன்னு சொல்லிட்டு  டாக்டர் ரவிதேஜாவே அவரு அடிச்ச அந்த ரவுடிக்கு ட்ரீட் மெண்ட் பாத்து ஒரே நாள்ல சரிபண்ணி அவன சண்டைக்கு ரெடி பன்றதுலாம் செம சீன்.

ஹீரோயின் நல்லாதான் இருக்கு. ஆனா எதோ ஒண்ணு குறையிற மாதிரி ஒரு பீலிங். தமனோட சமீபத்தைய தெலுகு ஆல்பங்களல இந்த கிக் 2 தான் ரொம்ப ரொம்ப சுமாரான ஆல்பம். ரெண்டு பாட்டுதான் நல்லாருக்கு. மத்ததெல்லாம் டொம்மைதான். BGM உம் அவ்வளவு சிறப்பா இல்லை.

மாஸ் மஹராஜ் வழக்கம்போல செம. காமெடி ஃபைட்டுன்னு எல்லாமே சூப்பர். என் ஃப்ரண்டு எப்பவுமே ரவிதேஜாவ “இந்த வாட்ச் மேன் மாதிரி இருப்பானே அவனா?” “இந்த வாட்ச்மேன் படத்துக்கா போற” ன்னு எப்பப்பாத்தாலும் ரவிதேஜாவ வாட்ச்மேன்னு தான் கூப்டுவான். ”போடா கழுதைக்கு தெரியுமா கருவாட்டு வாசனை” ன்னு சொல்லி சமாளிப்பேன். இந்தப் படத்துல ஆளுரொம்ப மெலிஞ்சிட்டாப்ள. முகமும் சற்று டொக்கு விழுந்துபோல் இருக்கு. ஆனாலும் நல்லாதான் இருக்காரு. ரெண்டு ரவிதேஜா இருக்கதால க்ளைமாக்ஸ்ல இன்னொருத்தர் எதாவது ஸ்டண்ட் சீன்ல மாஸ் எண்ட்ரி குடுப்பாருன்னு எதிர்பாத்துட்டே இருந்தேன். ஆனா நடக்கல.


மொத்ததுல கிக் 2, அதே வழக்கமான பழைய தெலுங்கு கதைதான்னாலும் போரடிக்காம போற மாதிரி நல்லாவே எடுத்துருக்காங்க. நிச்சயம் ரவிதேஜாவுக்கு இந்தப்படம் ஹிட்டுதான். ஆனா ஜெயம் ரவி அத இங்க நடிக்காம இருக்க ஆண்டவன் தான் துணை இருக்கனும்.


1 comment:

  1. entha mathri kudumaiyum nadathukitu than erukunga
    unga karutha konjam pathivu panungale
    https://www.youtube.com/watch?v=OouAahHJj3U

    Korean serial pathu namma oru ponnunga epadilam aduvanga yarum ethirparthuruka matanga haiyoooooo

    ReplyDelete