Thursday, October 22, 2015

10 எண்றதுக்குள்ள - படுத்து தூங்கிருங்க!!!

சேதுல விக்ரமோட கம் பேக்கு அப்புறம், காசி, பிதாமகன்னு விகரமோட வித விதமான கேரக்டர்களையும் படத்துக்காக அவர் படுற கஷ்டங்களையும் பார்த்த தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு இப்பல்லாம் ட்ரயல் எடுக்கனும்னாலே விக்ரமோட மூஞ்சிதான் ஞாபகம் வருதுன்னு நினைக்கிறேன். “அடி வாங்குறதுக்குன்னே அளவெடுத்து செஞ்சா மாதிரி இருக்கான்யா” ன்னு தான் எல்லாருக்கும் தோணும் போல. போக்கிரில வடிவேலுக்கு பின்னால தண்ணி வந்துகிட்டு இருக்கும்போது ரெண்டு பேர் “நீங்க இவன கொண்டு போய் ஒரு  பத்தாயிரம் லிட்டர் எடுத்துக்குங்க.. அப்புறம் நாங்க ஒரு பத்தாயிரம் லிட்டர் எடுத்துக்குறோம்னு சொல்ற மாதிரி “விக்ரம கொண்டு போய் நீங்க ஒரு ரெண்டு வருஷம் படம் எடுங்க.. அப்புறம் எங்ககிட்ட அனுப்புங்க.. அவர வச்சி நாங்க ஒரு ரெண்டு வருஷம் படம் எடுக்குறோம்.. இப்படியே மாறி மாறி மாறி மாறி……” ன்னு போட்டி போட்டு அந்தாள கொண்ணு எடுத்துகிட்டு இருக்காங்க.

நம்ம ஷங்கர் சார் மட்டும் விகரமோட கேரியர்ல ஒரு நாலரை வருஷத்த சாப்பிட்டிருப்பாரு. சாப்டது மட்டும் இல்லாம “இப்ப நீங்க என்ன பண்றீங்க உங்க வெய்ட்ட 100 கிலோவுக்கு ஏத்துறீங்க.. அத வச்சி ரெண்டு சீன் எடுக்குறோம்… அப்புறம் சர்ர்ருன்னு அந்த வெய்ட்ட 45 கிலோவுக்கு குறைக்கிறீங்க.. அத வச்சி ஒரு நாலு சீன் எடுக்குறோம்” ன்னு அவர் பாடில கபடி ஆடி அவ்வளவு கஷ்டப்படுத்திருக்காய்ங்க. கஷ்டப்படுத்துறது மட்டும் இல்லாம “இவ்வளவு கஷ்டப்பட்டு நடிச்சிருக்காரு இந்த படத்த நல்லா இல்லைன்னு சொல்கிறீர்களே பாவிகளா?” ன்னு அத நமக்கு திருப்பி விடுவாய்ங்க.

போன வருஷம் பெரிய நடிகர்கள் யாரும் இல்லாம சின்னப் பசங்கள வச்சே கோலிசோடான்னு ஒரு சூப்பர்ஹிட்ட குடுத்த கேமராமேன் விஜய் மில்டன் இந்த வருஷம் விகரம வச்சி இறங்கிருக்காரு. முதல்ல வித்யாசமான கெட்டப் ட்ரை பண்றேன்னு அந்தாளப் போட்டு கொன்னு எடுக்காம ஒழுங்கா நடிக்க வச்சிருக்கது பெரிய ஆறுதல். சரி வாங்க படம் எப்டிகீதுன்னு பாப்போம்.

சின்னத்தம்பி படத்துல கவுண்டர் நைட்டுல கண்ணு தெரியாம இருக்கத சமாளிக்க, தியேட்டர்லருந்து வரும்போது வொய்ஃப்கிட்ட பந்தயம் கட்டிட்டு ஓட்டிட்டு வருவாரு. அப்போ அந்த பொண்ணு “ஏங்க நீங்க கண்ண மூடிகிட்டு ரொம்ப நல்லா வண்டி ஓட்டுறீங்கங்கும்.. அப்ப கவுண்டரு “இதென்ன ப்ரமாதம்… நா கம்பி மேலயே வண்டி ஓட்டுவேன்”ன்னு அடிச்சி விடுவாரு. அவரு அன்னிக்கு சொன்ன அந்த ஒரு வார்தை தான் இன்னிக்கு விக்ரமோட கேரக்டரா வந்துருக்கு. எல்லா கம்பியிலயும் கார் ஓட்டுறாரு. கார் எங்க இருந்தாலும் ஓட்டுறாரு. ஓட்டோ ஓட்டுன்னு ஓட்டுறாரு.

கார் நல்லா ஓட்டுற திறமைய வச்சிக்கிட்டு, கள்ளக் கடத்தல் பண்ணுற ரவுடிங்களுக்கு உதவி பண்ணி அது மூலமா சம்பாதிச்சிட்டு இருக்காரு. ஒரு சம்பவத்துல லோக்கல் தாதா பசுபதியோட பழக்கமாகி அவருக்கு வேலை பாத்துக்கிட்டு இருக்காரு. அப்பதான் ஒரு முக்கியமான விஷயத்த உத்தர்காண்ட் மாநிலம் வரைக்கும் கொண்டு போய் சேக்க வேண்டிய பொறுப்பு விக்ரமுக்கு வருது. அத கொண்டு போகும்போதும், கொண்டு போனதுக்கப்புறமும் விக்ரம் சந்திக்கிற ப்ரச்சனைகள்தான் 10 எண்றதுக்குள்ள.

“10 எண்றதுக்குள்ளங்குற டைட்டில justify பண்ண ரெண்டு மூணு சீன் வச்சிருந்தாலும் ஒண்ணும் வேலைக்கு ஆகல.. 10 எண்றதுக்குள்ள என்ன வேணாலும் நடக்கும்ங்குறாங்க… பத்து எண்றதுக்குள்ள ஒருத்தனை அடிப்பேங்குறாரு ஒரு சீன்ல. பேசாம சும்மாவே விட்ருக்கலாம். டைட்டிலுக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருக்கனுமா என்ன… எத்தனை படம் பாத்துருக்கோம் சம்பந்தமே இல்லாம.

முதல் பாதில பசுபதி, சமந்தாவோட புண்ணியத்துல படம் ஒரளவுக்கு பரவால்லாமயே போகுது. ஹீரோயினுக்கு நடிக்க நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்ட படங்கள்ல இதுவும் ஒண்ணுன்னு சொல்லலாம். சமந்த்தா அது கேரக்டர நல்லாவே பண்ணிருக்கு. அப்பப்ப நமக்கு சிரிப்பும் வருது. பசுபதியும் அப்டித்தான். அவர் கேரக்டர சிறப்பா பன்னிருக்காரு. அப்பப்ப நம்மள சிரிக்கவும் வைக்கிறாரு.

முதல் பாதில பல மொக்கைகள் இருந்தாலும், ஒண்ணும் பெருசா அருக்குற மாதிரி தெரியல. ஆனா ரெண்டாவது பாதி பாடி தாங்க மாட்டுது. கிட்டத்தட்ட செகண்ட் ஹாஃப் மட்டும் நாலு மணி நேரம் ஓடுற மாதிரி ஒரு ஃபீல். அப்படியே தெலுங்கு பட ஸ்டைல். அங்க தான் படம் முடிஞ்சிருச்சின்னு நினைப்போம். ஆனா அதுக்கப்புறம் ஒரு புது கேரக்டர இண்ட்ரொடியூஸ் பண்ணி இன்னும் ஒரு அரை மணி நேரம் படத்த இழுப்பாய்ங்க. அதே ஃபீல் தான் இங்கயும். கிட்டத்தட்ட படம் முடிஞ்சிருச்சி போலன்னு நினைக்கும் போது அதுக்கப்புறம் ஒரு முக்கா மணி நேரம் ஓடுது.

என்னய்யா சம்பந்தமே இல்லாம டூயட் வருதுன்னு நிறைய படத்த கிண்டல் பண்ணிருப்போம். ஆனா இங்க “பாட்டு போடனும்னா போடுங்கய்யா.. அதுக்கு ஏன் இவ்வளவு மொக்கைன்னு தோண ஆரம்பிச்சிடும்”. சார்மி கூட ஒரு பாட்டு வைக்கிறதுக்கு முன்னால இங்க சிட்சுவேஷன் வச்சிருக்காய்ங்க பாருங்க. கப்பி. ஆனா சார்மிக்காக பொறுத்துக்கலாம். (ஐ ஆம் சார்மி ஃபேன்…அவ்வ்)

படத்துல ஃபைட்டும் அவ்வளவு சிறப்பா எடுக்கல. ஃபைட்டுல காமெடி பண்றேங்குற பேர்ல கடுப்பேத்திருக்காய்ங்க. இமான் அவரு வேலைய சிறப்பா செஞ்சிருக்காரு. “நா பாஞ்சா புல்லட்டுதான்” பாட்டு சூப்பரா எடுத்துருக்காய்ங்க. பாக்க கலர்ஃபுல்லாவும் ஜாலியாவும் இருக்கு.

மொத்தமா படத்த கிட்டத்தட்ட பையா பார்ட்-2 தான் சொல்லனும். இங்க வெறும் லவ்வுன்னு மட்டும் இல்லாம உத்தர்காண்ட் ஜாதிக்கலவரம், சின்ன சின்ன ட்விஸ்டுன்னு வச்சி ஓரளவு தெலுங்கு மசாலா டைப்புல ட்ரை பண்ணிருக்காங்க. விக்ரமுக்கும், சமந்தாவுக்கும் இடையில வர்ற லவ் சீன்ஸ் நல்லா இருக்கு. ஆனா தேவையில்லாத சில வல்கர் சீன்ஸ வச்சி அத காலி பண்ணி விட்டுடுறாங்க.

விஜய் மில்டன் ஸ்க்ரிப்டுல கொஞ்சம் இன்னும் கவனம் செலுத்திருக்கலாம். நிறைய விஷயங்கள் தெளிவா இல்லை. ஏன் விக்ரம் அவர் பேர மாத்தி மாத்தி சொல்றாருங்குறது கூட புரியாத புதிர்தான். ஸ்கிரிப்டுல கோட்டை விட்டாலும், சினிமாட்டோகிராஃபில பட்டைய கிளப்பிருக்காரு. பிக்சரைசேஷன்ல நல்ல குவாலிட்டி. உத்தர்காண்ட் காட்சிகள்லாம் அழகா இருக்கு. ஆனா உத்தர்காண்டுலருந்து சென்னை பஸ்ல சமந்தாவ விக்ரம் ஏத்தி அனுப்பும்போது எனக்கு நெஞ்சி டபீர்ன்னு வெடிச்சிருச்சி. அடப்பாவிகளா…. உத்தர்காண்டுலருந்து சென்னைக்கு பஸ்ல வந்தா சீட்டு கிழிஞ்சிருமேடா… (நா சொன்னது பஸ்ஸூ சீட்ட இல்ல)

என்னைப் பொறுத்த அளவு வீக்கான செகண்ட் ஹாஃப் படத்துக்கு ஒரு மைனஸ்னா, விக்ரம் தான் இன்னொரு மைனஸ். ஆளு நல்லாருக்காரு. ஆனா இந்த மாதிரி ஒரு ஜாலியான கமர்ஷியல் படத்துல இருக்க ஹீரோ, வெறும் வசனம் பேசிட்டும், நாலு பேர அடிச்சிட்டும் போனா மட்டும் பத்தாது. ஹீரோவுக்கு கொஞ்சம் காமெடியும் வரனும். விக்ரமுக்கு காமெடி சுத்தமா வராதுன்னு நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். ஆனா இதுநாள் வரைக்கும் அதை மறைக்க எதாவது ஒரு காமெடியன் கூட இருப்பார். அப்படி யாரும் இல்லாதது இந்தப் படத்துல ஒரு பெரிய மைனஸ். பசுபதி, சமந்தாவால அந்த குறைய முழுசா பூர்த்தி செய்ய முடியல. வேற ஒரு ஹீரோவ தேர்ந்தெடுத்திருக்கும் பட்சத்துல இந்த “10 எண்றதுக்குள்ள” இன்னும் கொஞ்சம் நல்லா வந்திருக்க வாய்ப்பு இருக்கு.


ஆவரேஜ் First half, ரொம்ப பெரிய செகண்ட் ஹாஃப்னு மொத்தத்துல படம் அவ்வளவு சிறப்பா இல்லை. ஆனா காட்டு மொக்கைன்னும் ஒதுக்கிட முடியாது. எனக்கு என்னவோ ”ஐ” க்கு இது பரவால்லன்னு தான் தோணுச்சி. 


9 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. உங்க பிரச்சின என்னனு தெளிவா புரியுது பிரதர்.
    விக்ரம்! விக்ரம் வெற்றி!

    இந்த மாதிரி பதிவுகளத்தான் திரைமணத்துல Accept பண்றாங்க
    பாவம் நீங்க என்ன பண்ணுவிங்க?

    நான் சொல்றேன்
    படம் நல்லாயிருக்கு! சூப்பர்!
    கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!
    தமிழில் ஒரு hollywood movie

    பையாவுக்கும் இதற்கும் இருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை
    இரண்டும் road movie

    ReplyDelete
  3. ஹாஹா...

    உங்க ப்ரச்சனையும் எனக்கு என்னன்னு புரிஞ்சிருச்சி பிரதர்..

    //இந்த மாதிரி பதிவுகளத்தான் திரைமணத்துல Accept பண்றாங்க
    பாவம் நீங்க என்ன பண்ணுவிங்க?//

    அய்யயோ... 10 எண்றதுக்குள்ள படம் உங்கள இப்புடி சம்பந்தமே இல்லாம பொலம்ப வச்சிருச்சே

    படம் நல்லாருந்த இன்னொருக்கா போய் பாருங்க.. யாரு வேணாம்னா..

    //பையாவுக்கும் இதற்கும் இருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை
    இரண்டும் road movie//

    இன்னொரு ஒற்றுமை இருக்கு.. ரெண்டுமே தமிழ் மூவி...

    ReplyDelete
  4. நீங்க ஏதோ பெரிய ஜோக் சொன்னதா நெனப்பா?
    நீங்கதான் சிரிச்சுக்கனும்

    நீங்க எழுதியிருக்கிறது விமர்சனமா? அப்பட்டமான தனிமனித தாக்குதல்
    எவ்வளவு கேவலம்?

    நான் திரைமணத்திலதான் உங்க பதிவ படிச்சேன்
    10E க்கு மட்டும் இல்ல ஐ படத்துக்கும் தவறான செய்திகளை மட்டுமே தெரிவு செய்து வெளியிட்டிருந்தார்கள்
    விக்ரம் தோற்கவேண்டும் என்பதில் அவ்வளவு அக்கறை அவர்களுக்கு (உங்களைப் போலவே)
    ஆனால் இதையெல்லாம் தாண்டித்தான் அவர் ஜெயித்துக்கொண்டிருக்கிறார்

    உதாரணமாக ஜோக்கி சேகர் 10E க்கு விமர்சனம் எழுதி இருக்கிறார்
    அதற்கான LINK

    http://www.jackiesekar.com/2015/10/10-endrathukulla-movie-review-10.html?m=0

    இது திரைமணத்தில் சேர்க்கப்படவில்லை
    ஆனால் அவர் பின்னர் எழுதிய நானும் ரவுடிதான் விமர்சனம் சேர்க்கப்பட்டுள்ளது

    தரப்பட்டுள்ள LINKக்கு சென்றால் காரணம் தானாக புரியும்

    அடுத்து பிரதர் உங்களுக்கு
    தோத்தவன்தான் புலம்புவான்
    அப்புடீனா நீங்க தான் புலம்பனும்

    ஏன்னா ஐமேன் சீயான் விக்ரமின் வெற்றி
    உங்கள மாதிரி ஆளுங்களுக்கு தோல்விதானே

    ரென்டுமே தமிழ் மூவியா?
    நல்ல ஜோக்
    ஒடனே சிரிச்சுட்டேன்
    KEEP IT UP

    ReplyDelete
  5. மிஸ்டர் விக்ரம் ஃபேன்...

    முதல்ல திரைமணத்த பத்தி தெரிஞ்சிக்எகுங்க.. அதுல யாரும் தெரிவு செய்து போடுவதெல்லாம் இல்லை. ஒரு முறை register பன்னுன அப்புறம் பதிவுக்கு கொடுக்கப்படுற Tags ah வச்சே, அது பதிவுகளை ஏற்றுக்கொள்ளும்.. நீயும் உங்காளு சீயான் மாதிரியே update ஆகாமயே இருக்கியேப்பா..

    தனி மனித தாக்குதலா? ஏன்பா நீங்களே உங்கள ரவுடி ரவுடின்னு சொல்லிக்கிறீங்க... எதோ அஜித் விஜய் ஃபேன்ஸ் இத சொன்னாங்க ஓக்கே.. விக்ரம தனி மனித தாக்குதல் பன்னி என்ன பண்ண போறேன்..

    எங்க ஜாக்கி அண்ணேன் வாசகர் கடிதம் படிக்கிற ஆர்வத்துல tag add பன்ன மறந்துருப்பாரு.. அதனால வந்துருக்காது.. இதுல உளவுத்துரை ரேஞ்சுக்கு விசாரண வேற.. போப்பா...

    //ஏன்னா ஐமேன் சீயான் விக்ரமின் வெற்றி
    உங்கள மாதிரி ஆளுங்களுக்கு தோல்விதானே//

    யோவ்.. போயா யோவ்

    ஆமா தம்பி.. உங்க பேரு மணிகண்டன் தானே?

    ReplyDelete
    Replies
    1. Boss, thandavam season la palagina manikandan ah soldringa?? Apdina athu avar ila, its me.. Enaya inum nyabagam vachirukingla ila ithu vera maniya???

      Delete
  6. தம்பி

    விஜய்-அஜித் பேன்ஸ் மட்டும் கலிபோர்னியா யுனிவர்சிடில phd படிச்சுட்டா சுத்துராங்க

    அவிங்களும் எங்கள போல ரசிகர்கள்தான்!

    திரைமணத்தில tag பண்ணிட்டா
    அப்புறம் நம்ம பதிவ எல்லாம் வெளியிட்ருவாங்களா? ஹே ஹே
    போடா லூசு!

    ஜோக்கி அண்ணன் tag பண்ண மறந்துட்டாருன்னு சொல்ற
    அதுல இருந்தே தெரியுது
    நீ ஒரு அரைவேக்காடுன்னு!

    தம்பி கடைசியா ஒன்னு சொல்றேன்
    மவுஸ் புடிக்க தெரியும்ற தைரியத்துல
    நினைச்சதெல்லாம் டைப் பண்ணாத

    விமர்சனம் பண்றதா இருந்தா
    சரியா பண்ணு
    கருந்தேள் தெரியுமா?
    அவர் விமர்சனம் படிச்சு பழகிக்க

    ReplyDelete
  7. மிஸ்டர் தூக்கு தூக்கி

    திரைமணம் என்னண்ணே தெரியாம வந்து உளராதீங்க

    //தம்பி கடைசியா ஒன்னு சொல்றேன்
    மவுஸ் புடிக்க தெரியும்ற தைரியத்துல
    நினைச்சதெல்லாம் டைப் பண்ணாத//

    மிஸ்டர் வெண்ணை... மவுஸ புடிக்கிறதுக்கும் நினைச்சதெல்லாம் டைப் பன்றதுக்கும் என்ன சம்பந்தம்

    //விமர்சனம் பண்றதா இருந்தா
    சரியா பண்ணு
    கருந்தேள் தெரியுமா?
    அவர் விமர்சனம் படிச்சு பழகிக்க//

    அந்த ஈன வெங்காயமெல்லாம் எங்களுக்கு தெரியிங்.. இந்த
    கோத்துவிடுற வேலையெல்லாம் வேற எங்கயாவது வச்சிக்க.

    ReplyDelete
  8. I think this anony is not vikram fan, he may be visay mama pan.. He wants u to enemy of all actors fan.. B'coz that visay mama pans only do such silly things

    ReplyDelete