Wednesday, December 30, 2015

’ஓ’ரிங்குல ஓட்டை – நாஸா சம்பவம்!!!


Share/Bookmark
என்னய்யா ஓசோன்லதான ஓட்டைன்னு அவன் அவன் கிளப்பிவிடுவாய்ங்க. இது என்ன ’ஓ’ரிங்குல (’O’ Ring) ஓட்டை? அதுவுமில்லாம ஓரிங்னாலே ஓட்டையா தான இருக்கும். இதுல என்ன புதுசா இருக்குன்னு சில பேரு வெறிக்கலாம். கொஞ்ச நாளுக்கு முன்னால நம்மூர்ல மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போகுதுன்னு நாஸாவே வெதர் ரிப்போர்ட் சொல்லிட்டாங்கன்னு வாட்ஸாப் மெசேஜ்ஜ கண்ண மூடிக்கிட்டு ஃபார்வார்டு பன்னிக்கிட்டு இருந்தோமே.. அதே நாஸாவுக்கு சில வருஷங்களுக்கு முன்னால  வெதர் (வானிலை) அடிச்ச ஒரு ஆப்ப பத்தி தான் இன்னிக்கு நம்ம கொஞ்சம் பாக்கப்போறோம்.

1986.. ஜனவரி 22. ஃப்ளோரிடாவுல உள்ள கென்னடி ஸ்பேஸ் செண்டர்ல Challenger ங்குற ஒரு Space shuttle லாஞ்ச் பன்னுறதுக்காக ரெடியா நிக்கிது. அதாவது பூமிய சுத்தி வர்ற சாட்டிலைட்டுகள கொண்டு போய் அதோட சுற்றுப்பாதையில விட்டுட்டு வர்றதுக்காக பயன்படுத்தப்படுற ஹைடெக் டவுன் பஸ் தான் இந்த Space shuttle ங்குறது. பூமியிலருந்து சுமார் 160 கிலோமீட்டர்லருந்து 2000 கிலோ மீட்டர் உயரத்துக்குள்ள உள்ள பகுதிய Low Earth Orbit ன்னு சொல்றாங்க. பூமிய சுத்தி வர்ற சேட்டிலைட்டுகளெல்லாம் இந்த பகுதிக்குள்ள தான் சுத்திக்கிட்டு இருக்கும். ஆக மேல சொன்ன மாதிரி இந்த Space shuttle ங்குறது ஒரு சாட்டிலைட்ட கீழருந்து எடுத்துட்டு போய் Low Earth Orbit க்குள்ள சுத்த விட்டுட்டு திரும்ப பூமிக்கே வந்துரும்.

இப்ப லாஞ்ச் பன்றதுக்கு ரெடியா நிக்கிற சேலஞ்சர் Space shuttle இதுக்கு முன்னால 9 தடவ இதே மாதிரி சாட்டிலைட்டுகள கொண்டு போய் விட்டுட்டு பத்திரமா திரும்ப பூமிக்கு வந்துருக்கு. இப்ப பத்தாவது தடவ. இந்த தடவ சாட்டிலைட்டு கூட ஐந்து ஆண்கள், ரெண்டு பெண்கள் உட்பட 7 மனிதர்களும் விண்வெளிக்கு போறாங்க. வழக்கமா விண்வெளிக்கு போற மனிதர்கள் யாருன்னு பாத்தா, விண்வெளி ஆராய்ச்சிக்குன்னு தங்களை அர்பணிச்சிக்கிட்ட விண்வெளி ஆய்வாளர்களாத்தான் இருப்பாங்க. ஆனா இங்க கொஞ்சம் வித்யாசம். ஏழு பேர்ல அஞ்சி பேர் விண்வெளி ஆய்வாளர்கள் மீதம் இருக்க ரெண்டு பேர் விண்வெளி ஆய்வில் ஈடுபடாத சாதாரண மனிதர்கள்.

ஏன் இந்த சாதாரண மனிதர்கள விண்வெளிக்கு அனுப்புனாங்க? அதாவது 1984 ல ஆசிரியர்களை கவுரவிக்கிறதுக்காகவும், மாணவர்கள உற்சாகப்படுத்துறதுக்காகவும் ”Teacher In Space” ங்குற ஒரு ப்ரோகிராம நாஸா அறிவிக்கிறாங்க. அதன்படி விண்வெளி ஆய்வாளர்களா இல்லாத சில ஆசிரியர்கள சில நாட்கள் பயிற்சி கொடுத்து விண்வெளிக்கு அனுப்புறது. அவங்க விண்வெளிக்கு பொய்ட்டு வந்து அவங்களோட அனுபவங்களையும் படிப்பினைகளையும் மாணவர்களுக்கு சொல்லிக்குடுக்குறது. இதான் அந்த Teacher in Space ப்ரோகிராமோட நோக்கம்.

அதனால இந்த தடவ சேலஞ்சர் Space shuttle la பயணம் செய்யிறதுக்காக Christa McAuliffe ங்குற ஒரு ஆசிரியை தேர்வு செய்யப்பட்டு பயணம் செய்ய தயாரா இருக்காங்க. சும்மா தெரிஞ்சவங்க மூலமா ரெக்கமண்டேஷன்லயோ இல்லை சைடுல யாருக்கும் அமவுண்ட தள்ளியோ இவங்களுக்கு இந்த வாய்ப்பு வந்துடல. இந்த Challenger la பயணம் செய்யிறதுக்காக நாஸாவுக்கு விண்ணப்பித்த 11,000 பேர்ல இவங்க ஒருத்தர் மட்டும் செலக்ட் ஆயிருக்காங்க. இவங்க ஒரு ஹை ஸ்கூல்ல சமூக படிப்பை கற்றுக்கொடுக்கிற ஒரு ஆசிரியரா வேலை பாத்துக்கிட்டு இருந்தாங்க.

Space shuttle la ட்ராவல் பன்ன விண்ணப்பிச்சிருந்த 11,000 பேர்லருந்து முதல்ல ஒரு 10 finalists ah செலெக்ட் பன்னாங்க. அதுக்கப்புறம் அவங்களுக்கு  ”Johnson Space Center " ங்குற இடத்துல மெடிக்கல் செக்கப் மற்றும் ஸ்பேஸ் ட்ராவல் பத்தின தகவல்கள்னு  ஒரு வாரம் சொல்லிக் குடுத்துருக்காங்க. அதுக்கப்புறம் 1985 ஜூலை 19 ம் தேதி அந்த பத்து பேர்ல நம்ம Christa McAuliffe டீச்சர்தான் வண்டில சவாரி போகப்போறாங்கன்னு நாஸாவுலருந்து அதிகாரப்பூர்வமா அறிவிச்சாங்க. 

அவ்வளவுதான். அந்த டீச்சரம்மா அமெரிக்கா ஃபுல்லா செம ஃபேமஸாயிட்டாங்க. நம்மூர்ல ஒருத்தனுக்கு ஒரு படம் ஓடிட்டா அவன  வணக்கம் தமிழகம்,  காஃபி வித் DD, டீ வித் கேடி ன்னு இருக்குற எல்லா டிவிலயும் Chief guest ah  கூப்டு கொன்னு கொலையறுக்குற மாதிரி இந்த டீச்சரம்மாதான் அந்த டைம்ல அமெரிக்காவுல உள்ள அனைத்து சேனல்கள்லயும் chief guest. ஒரு தடவ இதுமாதிரி டிவி ப்ரோகிராம்ல கெஸ்டா வந்துருக்கும்போது ஒருத்தன் இந்த மிஷனப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க.. உங்களுக்கு எப்புடி ஆர்வம் வந்துச்சின்னு கேட்டுருக்கான். அதுக்கு இந்தம்மா “யோவ் ராக்கெட்டுல சீட்டு இருக்குன்னு ஒருத்தன் கூப்டா  படக்குன்னு ஏறி உக்காந்துரனும்... ஜன்னல் சீட்டா நடு சீட்டான்னு கேள்வியெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்க கூடாது” ன்னு ஜாலியா பதில் சொல்லிருக்கு. 

1986, ஜனவரி 22 ம் தேதி அனுப்பப்படுறதுக்கு ரெடியா இருந்த இந்த சேலஞ்சர் மோசமான வானிலை காரணமா ஜனவரி 25க்கு தள்ளி வச்சிட்டாய்ங்க. ஆனா பாருங்க சென்னையில பெய்ஞ்ச மழை மாதிரி அங்கயும் தொடர்ந்து வானிலை மோசமாவே இருக்க, நம்ம ரமணன் சார் பள்ளிக்கூடத்துக்கு லீவு விடுற மாதிரி ராக்கெட் லாஞ்சயும் ஒவ்வொரு நாளா தள்ளிப்போட்டுக்கிட்டே வந்தாய்ங்க. அப்புடி இப்புடின்னு ஜனவரி 28 ஆயிருச்சி. அன்னிக்கும் பாத்தா வானிலை ரொம்ப மோசம்தான். கிட்டத்தட்ட மைனஸ் ஒரு டிகிரி. உறையிற அளவு குளுரு. இப்புடியே போனா இவனுங்க டெய்லி ஓப்பி அடிக்க ஆரம்பிச்சிருவாய்ங்கன்னு நாஸா உசாராயிட்டானுங்க.  என்ன ஆனாலும் சரி இன்னிக்கு லாஞ்ச் பன்றது லாஞ்ச் பன்றதுதான்னு முடிவு பன்னிட்டாய்ங்க.

அத்தனை டிவி சேனல், ரேடியோன்னு ஊர்ல உள்ள எல்லா மீடியாவும் நம்ம Challenger Space Shuttle லாஞ்ச் பன்றதப் பாக்க ரெடியா இருக்காய்ங்க. நிறைய டிவி சேனல்கள் அத லைவ்வா டெலெகாஸ்ட் பன்னிக்கிட்டு இருந்தாங்க. கிட்டத்தட்ட அமெரிக்காவோட ஜனத்தொகையில 17% இந்த சேலஞ்சர் லாஞ்ச் பன்னப் போறத லைவ்வா பாத்துக்கிட்டு இருக்காய்ங்க. இதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க இன்னொரு காரணம் நம்ம டீச்சர் Christa McAuliffe தான். இன்னிக்கு சேலஞ்சரோட கிளம்புனாங்கன்னா விண்வெளிக்கு போன முதல் டீச்சர்ங்குற பேர் இவங்களுக்கு கிடைக்கும்.




காலையில 11.29க்கு லாஞ்சிங் ப்ளான் பன்னியாச்சி. அட இன்னும் ஒரு அரை மணி நேரம் இருக்கே. இந்த கேப்புல தியோக்கால் (Thiokol) ங்குற ஒரு கம்பெனியப் பத்தி கொஞ்சம் பாத்துட்டு கரெக்டா லாஞ்ச்க்கு ஆஜர் ஆகிடுவோம் வாங்க. யார் இந்த தியோக்கால்? இவங்க 1929 ல ஆரம்பிக்கப்பட்ட ஒரு பழைய கம்பெனி. ரப்பர் சம்பந்தமான product தான் இவய்ங்களோட மெயின் பிஸினஸ். இந்த Challenger Space shuttle la இருக்க ஒரு சில முக்கியமான பகுதிகள் இந்த Thiokol கம்பெனில தயாரிக்கப்பட்டது.

சேலஞ்சர் ஏவப்படுறதுக்கு மொதநாள் நைட்டு Thiokol இஞ்சினியர்ஸ் சில பேரு நாஸாவுக்கு ஃபோன் பன்னி “அண்ணே அண்ணே.. ஒரு சின்ன டெக்னினிக் fault இருக்குண்ணே… இப்ப நீங்க லாஞ்ச் பன்றது சரியில்லைண்ணே.. ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சி லாஞ்ச் பன்னா நல்லதுண்ணே” ன்னு சொல்லிருக்காய்ங்க. ஏற்கனவே ரெண்டு மூணு தடவ லாஞ்ச் date ah தள்ளி வச்ச நாஸா ஆளுங்க அவனுங்ககிட்ட “ அடேய்… இப்ப தான் நாங்க ஒரு புளோவா போயிட்டு இருக்கோம். நீங்க ஏண்டா இடையில பூந்து ஆட்டையக் கலைக்கிறீங்க.. எங்கள கொஞ்சம் பெர்பார்மன்ஸ் பன்ன விடுங்கடா” ன்னு சொல்லிருக்காய்ங்க. என்ன சொன்னாலும் நாஸா ஆளுங்க கேக்குற மாதிரி இல்லைன்னு தெரிஞ்சதும்  Thiokol ஆளுங்க “தங்களுக்கு தெரியாத சட்டம் எதுவும் இல்லை. அதில் எந்த சட்டம் சிறந்த சட்டமோ அதை தாங்களே தெரிவு செய்து ராக்கெட்ட ஏவிருங்க” ன்னு நாஸாகிட்ட சொல்லிட்டு வச்சிட்டானுங்க.

அட… லாஞ்ச்சுக்கு டைம் ஆயிருச்சிங்க. வாங்க வாங்க… ஃப்ளோரிடா… கென்னடி ஸ்பேஸ் செண்டர். மணி 11.29. ரெடியா..  த்ரீ… டூ.. ஒன்… ப்ளாஷ்…. பேக்குல நெருப்ப கக்கிக்கிட்டு சேலஞ்சர் சும்மா ”ஜொய்ய்ங்ங்” ன்னு வானத்துல சீரிப் பாயிது. எல்லாரும் டிவிலயும் நேர்லயும் எல்லாரும் பாத்து கைதட்டி ஆரவாரப்படுத்துராங்க. கரெக்டா 73 செகண்ட் ஆச்சி. வானத்துல ஒரே பட்டாசா வெடிச்சிது. அட ராக்கெட் லாஞ்ச்சுக்காக நம்ம அரசாங்கம் வான வேடிக்கையெல்லாம் ஏற்பாடு செஞ்சிருக்காங்கப்பான்னு அமெரிக்க மக்கள்லாம் ஒரே குஜாலா கைதட்டிக்கிட்டு இருந்தாய்ங்க. எல்லாரும் கைதட்டிக்கிட்டு இருக்க கூட்டத்துலருந்து ஒருத்தன் ஓடிவந்து எல்லாரயும் பாத்து சத்தம் போட்டு சொன்னான்

“அடேய்… வெடிக்கிறது பட்டாசு இல்லடா… நம்ம அனுப்புனா ராக்கெட்டுடா”

இரண்டு நிமிடம் முன்பு வரை ப்ரம்மாண்டமாக நின்றிருந்த சேலஞ்சர், விண்ணில் சுக்கு நூறாக வெடித்துச் சிதற, அமெரிக்காவே அதிர்ச்சியில் உறைந்தது.



அடுத்த பதிவில் தொடரும்...





Sunday, December 27, 2015

நம்ம பத்து - 2015


Share/Bookmark
போன வருஷத்த கம்பேர் பன்னும்போது இந்த வருஷம் நமக்கு strike rate கொஞ்சம் அதிகம்தான். வழக்கம்போல இந்த வருஷமும் பலருக்கு புடிச்ச சில படங்கள் எனக்கு பிடிக்காமயும், பலர் வெறித்து ஓடிய சில படங்கள் எனக்கு புடிச்சும் இருக்கு. அதனால வழக்கம்போல நம்மள biased ன்னு சொல்றவங்க சொல்லிக்கலாம். விமர்சனங்களுக்கு தலைப்பை க்ளைக்கவும்



நீண்ட நாட்களுக்குப் பின் கவுண்டரின் அதே நக்கல் நையாண்டியுடனான கம்பேக். அதே சமயம் தேவையற்ற விஷயங்களை அதிகம் காண்பிக்காமல் எடுத்துக்கொண்ட கதையையும் கருத்தையும் தெளிவாகச் சொன்ன படம். 



அஞ்சானின் சருக்கலுக்குப் பிறகு சூர்யாவுக்கு ஒரு நல்ல படம்.  ஆனால்  படம் பார்த்தவர்களை விட படம் பார்க்காதவர்களால் படு கேவலமாக விமர்சனம் செய்யப்பட்டு மரப்படுக்கைக்கு அனுப்பப்பட்ட படம்.



நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் சேதுபதிக்கு ஒரு வெற்றிப்படம். பெரும்பாலான காட்சிகளின் இயக்கம் சுந்தர்.சி யை ஞாபகப்படுத்தியது. சூப்பர் டூப்பர் நகைச்சுவையில்லை என்றாலும் ஓரளவுக்கு ஓக்கே.
 



விஷால் சுமோவில் பறக்கும் ஒரே விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இணையத்தில் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் என்னைப்பொறுத்த வரை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை சிரிக்க வைத்த சுந்தர்.சி யின் அக்மார்க் நகைச்சுவைப் படங்களில் இதுவும் ஒன்று. 



மீசை கூட சரியாக முளைக்காமல் இருந்த தனுஷை ரவுடியாக புதுப்பேட்டை படத்தில் ஏற்றுக்கொண்டவர்களுக்கு இந்தப் படத்தில் அவரை ரவுடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம். இந்தப்படம் நல்லா இல்லை என்று சொன்ன ஒருவனிடம் ஏன் என்று காரணம் கேட்ட பொழுது “என்னண்ணே எல்லா சீனும் இன்ட்ரோ சீன் மாதிரியே இருக்கு.. எவ்வளவு நேரம் தான் கை தட்டுறது “ என்றான். ஏம்மா இதெல்லாம் ஒரு காரணமாம்மா?

 


சிறுத்தை சிவாவுடனான அஜித்தின் இரண்டாவது வெற்றி. பழைய கதை மற்றும் சற்று டொம்மையான இரண்டாவது பாதி என்றாலும் அஜித்தும், இயக்கமும் படத்தை தூக்கி நிறுத்தியது. 



பேய்களை காமெடியாக்காமல் பேய்களுக்கான உரிய மரியாதையைக் கொடுத்து நம்மை பயமுறுத்திய படம். 



இந்த வருடம் கமலுக்கு கைகொடுத்த ஒரே படம்



நயந்தாராவின் சோலோ பர்ஃபார்மன்ஸில் நம்மை பயத்தில் உரைய வைத்த  இந்த வருடத்தின் சூப்பர் திகில் படம்

3. காக்கா முட்டை

பீட்சாவுக்காக ஏங்கும் ஏழைச்சிறுவர்களுடன் நம்மையும் இயல்பாக பயணிக்க வைத்த சூப்பர் திரைப்படம். 


இந்தியாவின் அனைத்து ரெக்கார்டுகளையும் அடித்து நொறுக்கி வாயைப்பிளக்க வைத்த ராஜமெளலியின் ப்ரம்மாண்டம்




”இந்த பையனுக்குள்ளயும் எதோ இருந்துருக்கு பாரேன்” என்று ரீமேக் ராஜாவைப் பார்த்து வியக்க வைத்த சூப்பர் படம்.



லிஸ்டுல 4 நயன்தாரா படங்கள் இருப்பதால் நயனுக்காக biased ah எழுதிருக்கேன்னு சொன்னீங்கன்னா அதுக்கு  கம்பெனி பொறுப்பாகாது. 

Saturday, December 19, 2015

தங்க மகன் – I WANT எமோஸன்!!!


Share/Bookmark
ஒரு படத்துக்கு கதை எப்படி இருந்தாலும், திரைக்கதையில காட்சிகள முன்ன பின்ன வச்சி எவ்வளவு சாதாரண கதையையும் சுவாரஸ்யமாக்கிடலாம்.  ஒரு சிறந்த திரைக்கதையில காட்சிகளை முறைப்படுத்தி present பன்றதும் ரொம்ப முக்கியம். அதனாலதான் நிறைய படங்கள்ல ஏற்கனவே ப்ரூவ் செய்யப்பட்ட template ல சீன்ஸ வைப்பாங்க. உதாரணமா சமீபத்துல நிறைய மசாலா படங்கள்ல யூஸ் பன்னப்பட்ட template பாட்ஷா வோடது. கதையமைப்ப இங்க நா சொல்லல. காட்சிகளோட வரிசை மற்றும் பாட்டு எந்தெந்த இடத்துல வைக்கனும்ங்குற format. முதல்ல ஒரு இண்ட்ரோ சாங்,  கொஞ்ச நேர காமெடி, அப்புறம் இன்னொரு லவ் சாங், கரெக்ட்டா இண்டர்வல் ப்ளாக் ஆரம்பிக்கப்போறதுக்கு முன்னால இன்னொரு லவ்  சாங். பெரும்பாலான மசாலா படங்கள்ல இந்த சீக்வன்ஸ பாக்கலாம்.

அதே மாதிரி நம்ம படங்களுக்கு பாட்டு அவசியமான்னு நிறைய பேர் யோசிப்பாங்க. நம்ம ஊர்ல ரெண்டரை மணி நேரம் படம் பாத்தே பழகிட்டோம். படம் சீக்கிரம் முடிஞ்சிட்டா எதோ நம்மள ஏமாத்தி காச வாங்கிப்புட்ட மாதிரி ஒரு ஃபீல். அதுனால லென்த்தா போற காட்சிகளுக்கு நடுவுல ஒரு சின்ன சின்ன ப்ரேக்குக்காகதான் பாட்டு. பாட்டு இல்லாத படங்களப் பாருங்களேன். முக்கால் மணி நேரமே எதோ ரொம்ப நேரம் ஓடுற ஒரு ஃபீல் இருக்கும். ஏன் இப்புடி சம்பந்தம் சம்பந்தம் இல்லாம ரம்பத்த போடுறேன்ன்னு வெறிக்காதீங்க. ஸ்டார்ட்டிங் ட்ரபிள் இருக்கும்போது இப்புடி எதையாச்சும் வச்சி ஆரம்பிக்கிறது வழக்கம்தானே. சரி நம்ம தங்க மகன கொஞ்சம் உரசிப் பாப்போம்.

வடிவேலு தோசை ஆர்டர் பன்ற காமெடி எல்லாரும் பாத்துருப்பீங்க. சூடான தோசைக்கல்லுல நல்லா வரட்டு வரட்டு வெளக்க மாற வச்சி வரட்டு வரட்டுன்னு தேச்சி ரெண்டு கரண்டி மாவ ஊத்தி, நாலு கரண்டி நெய்ய அப்டியே ஊத்தி, கொஞ்சம் இட்லிப்பொடிய மழைச்சாரல் மாதிரி தூவி இப்டி ஒரு பெரட்டு அப்டி ஒரு பெரட்டு  பெரட்டி கொண்டுவா.. ”அண்ணனுக்கு ஒரு ஆனியன் ஊத்தாப்பம் பார்சல்”.. அந்த பாணியில வேலையில்லா பட்டதாரி வெற்றிக்கு அப்புறம் தனுஷுக்கும் வேல்ராஜூக்கும் ஒரு கான்வர்சேஷன் நடந்துருக்கு. அது என்னன்னு பாருங்க… அதே ஸ்லாங்குல பண்ணுங்க

தனுஷ் : அண்ணேன் நாம இன்னொரு படம் இதே மாதிரி பன்னனும்ணே

வேல்ராஜ் : பன்னலாம் தம்பி

தனுஷ் : அந்தப்படம் எப்டி இருக்கனும்னா… இந்த ஆட்டோகிராஃப்ல வர்ற மாதிரி வாழ்க்கையோட வேவ்வேற phase ah காட்டணும்னே

வேல்ராஜ் : சரி தம்பி

தனுஷ் : "3" படத்துல வர்ற மாதிரி லவ்வு செமையா இருக்கனும்ணே

வேல்ராஜ் : சரி தம்பி

தனுஷ் : இந்த அஞ்சாதே படம் எனக்கு ரொம்ப புடிக்கும்னே.. அதுல வர்ற மாதிரி கூட இருக்க ஃப்ரண்டே முதுகுல குத்துற மாதிரி ஒரு கான்செப்ட் இருக்கனும்

வேல்ராஜ் : சரி தம்பி..

தனுஷ் : அப்புறம் இந்த ஃபேமிலி ஆடியன்ஸ்லாம் பாக்குற மாதிரி குறிப்பா சீரியல் பாக்குற ஆண்டிங்கல்லாம் வந்து பாக்குற மாதிரி நாலு அலுகாச்சி சீன் வைக்கனும். ஐ மீன் எமோஸன்

வேல்ராஜ் : சரி தம்பி

தனுஷ் : அப்புறம் வேலையில்லா பட்டதாரி மாதிரி இண்டர்வல்ல யாராவது ஒருத்தர மட்டை பண்ணனும். அப்பதான் இன்னும் எமோஸன் ஜாஸ்தியா இருக்கும்ணே

வேல்ராஜ் : பன்னிடலாம் தம்பி

தனுஷ் : அப்புறம் நம்ம ஃபேன்ஸ்லாம் ரொம்ப ஃபீல் ஆயிடுவாங்க.. அவங்களுக்காக நாலு மாஸ் சீன் வைக்கனும்ணே. முடிஞ்சா எதாவது பழைய ரஜினி பட டைட்டில் இருந்தா அதையும் வச்சிருங்கன்னே…

வேல்ராஜ் : அண்ணனுக்கு ஒரு மொக்கைப்படம் பார்சல்…..

வேலையில்லா பட்டாதாரி விமர்சனத்துல கதை முழுசும் ட்ரையிலர்லயே நமக்கு தெரிஞ்சிடும். ஆனாலும் படம் கொஞ்சம் கூட நமக்கு போர் அடிக்கலன்னு சொல்லிருந்தேன். இங்கயும் கதை நமக்கு ட்ரையிலர்ல முக்கால்வாசி தெரிஞ்சிடுது. படம் ஓடிக்கிட்டு இருக்கும்போதே அடுத்தடுத்து இதுவாத்தான் இருக்கும்னும் தெரிஞ்சிபோயிடுது. ஓரளவு சஸ்பென்ஸா இருக்க வேண்டிய விஷயங்கள கூட நம்மளால ஈஸியா கெஸ் பன்ன முடியிது.

பொதுவா ஒரு படம் ஆரம்பிச்சி அதிலுள்ள கேரக்டர்கள்லாம் நமக்கு பதிஞ்ச அப்புறம்தான் நமக்கு அந்த கேரக்டர்களுக்கு எதாவது ஒண்ணுன்னா ஆடியன்ஸூக்கு ஒரு தாக்கம் இருக்கும். ஐ மீன் படத்தோட ஓப்பனிங் சீன்ல ஹீரோ அடிவாங்குனா நமக்கு எந்த ஃபீலும் இருக்காது. ஆனா படத்தோட க்ளைமாக்ஸ்ல அடிவாங்குனா நமக்கும் அழுகை வரும். இங்க படம் ஆரம்பிச்ச ரெண்டாவது நிமிஷத்துலயே அழுகை காட்சிகள், சோக காட்சிகள். ஆனா அதானால நமக்கு எந்த பாதிப்பும் இல்லாம போயிடுது.

கொஞ்சம் மெதுவா ஸ்டார்ட் ஆனாலும் அடுத்து தனுஷ் எமி ஜாக்சன் லவ் சீக்வன்ஸ் ஸ்டார்ட் ஆனதும் தியேட்டரே ஜாலியாயிடுது. ஒரு அரை மணி நேரம் தொடர்ந்து சிரிப்பும் கைதட்டலும்தான். சதீஷ வச்செல்லாம் காமெடி பன்றது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் ரெண்டு பேரும் சேந்து நல்ல சிரிக்க வச்சிருக்காங்க. ஆனா அதுக்கப்புறம் படுக்குற படம் கடைசி வரைக்கும் எழுந்திரிக்க மாட்டுது. மட்டை.

ஆட்டோகிராஃப் படம் பாக்கும்போது ரொம்ப நேரமா படம் ஓடிக்கிட்டே இருந்துச்சி. என்னடா இண்டர்வலே வரல.. ஒருவேளை இண்டர்வல் இல்லாம ஒரே அடியா படத்த முடிச்சிருவாய்ங்க போலன்னு நினைச்சி பாத்துக்கிட்டு இருந்தேன். க்ளைமாக்ஸ் வந்துருச்சிபோலன்னு நினைக்கும்போது போட்டாய்ங்க இண்டர்வல்ன்னு. அடப்பாவிகளா.. அதே மாதிரிதான் இங்கயும். இத்தனைக்கும் ஒன்னேகால் மணி நேரம்தான் ஓடுச்சி. எமி ஜாக்சன் போர்ஷன் முடிஞ்சப்புறம் எப்படா இண்டர்வல் வரும்னு ஆயிருச்சி.

படத்துல ஸ்கிரிப்ட விட மொக்கையான விஷயம் ஒண்ணு இருக்குன்னா அது நம்ம சமந்தாக்கா தான். “சாமி முன்னாடி மட்டும்தான் நா சாந்தமா பேசுவேன்” ங்குற டயலாக்க பேசும்போது எப்புடி விஜய் லிப்பே அசையாம பேசுவாறோ அதே மாதிரிதான் சமந்தா படம் முழுசும் பேசிக்கிட்டு இருக்கு. சேலைகட்டி மூக்குத்தியெல்லாம் போட்டு சமந்தா கெட்டப் இருக்கே.. ப்ப்பா… நானும் ஆரம்பத்துல அப்டி இருக்கும் போகப்போக பழகிரும்னு பாத்தேன். நடக்கலையே. கடைசிவரைக்கும் அதே பீலிங்.

நிறைய ஏரியாக்கள ஒரே படத்துல கவர் பன்னும்னு ஆசைப்பட்டு இயக்குனர் படத்தோட போக்கையே மாத்திட்டாரு. படம் எடுத்து முடிச்சப்புறம்தான் அனிரூத் இருக்கதே ஞாபகம் வந்திருக்கும்போல. அட அவன் வேற சும்மா இருப்பானே..அவனுக்கு மீசிக் போடுறதுக்காவது ஒரு நாலு சீன் வேணும்னு கடைசில மாஸ் சீன்ங்குற பேர்ல நாலு கப்பி சீன்ஸ். இதுல தமிழ்ப்பற்று வேற பொங்கி வழியிது.

“தமிழ்நாட்டுல தெலுங்கு தோக்கலாம்.. கன்னடா தோக்கலாம்.. மலையாளம் தோக்கலாம்”.. ”பேசிக்கிட்டே இருப்பா டீ குடிச்சிட்டு அப்புறம் பாக்கலாம்”னு நம்ம போய் டீய குடிச்சிட்டு வந்தாலும் ”சைனீஸ் தோக்கலாம் , கொரியா தோக்கலாம்” ன்னு அதே டயலாக்குதான் ஓடிக்கிட்டு இருக்கு. யப்பா டேய்… போதும்ப்பா.. நல்லதானடா போய்ட்டு இருந்துச்சி.. இப்ப ஏண்டா மொழிப்ப்ரச்சனையெல்லாம் உண்டாக்குறீங்க.
அனிரூத் நாலு பாட்டுல ரெண்டு ஓக்கே. அதுவும் “டக்குன்னு பாத்தா பக்குன்னு ஆவேன்” பாட்டு சூப்பரா இருக்கு. நல்லாவும் எடுத்துருக்காங்க. முத்தம் மட்டுமே குடுக்குறதுக்காகவே இன்னொரு பாட்டு. ஏம்பா எமி ஜாக்சன் நீங்க சொல்றதெல்லாம் கேக்கும்னு என்ன வேணாலும் பன்னுவீங்களா? மாரி படத்துல தனுஷுக்கு வர்ற BGM ah அப்புடியே இங்கயும் போட்டுருக்காங்க.  

தனுஷ் எப்பவும் போல சூப்பரா நடிச்சிருக்காரு. ஆனா என்ன காட்சிகள்லதான் ஒரு impact இல்லை. முதல் பாதி சூப்பரா இருக்க இன்னொரு காரணம் தனுஷோட அப்பா அம்மாவா வர்ற ராதிகா, கே.எஸ்.ரவிக்குமாரோட ஸ்க்ரீன் ப்ரசன்ஸ். எமி ஜாக்சன் செம அழகு. ஆண்ட்ரியா டப்பிங்க்ல நல்லாவே பேசிருக்கு. தனுஷ் எமி ஜோடி சக்கரைப்பொங்கல் தயிர்வடை காம்பிஷேன்தான். ஆனாலும் ஒன்னும் தெரியல.

முதல்பாதி சூப்பர்னு இண்டர்வல்ல எழுந்து போறவங்கள, செகண்ட் ஹாஃப்ல வாயே திறக்க விடாம கும்மு கும்முன்னு கும்மி எடுக்குறாங்க. செகண்ட் ஹாஃப்ல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, திணிக்கப்பட்ட காட்சிகளை கொஞ்சம் குறைச்சி வேற மாதிரி எதாவது பன்னிருந்தா வேலையில்லா பட்டாதாரி லிஸ்டுல சேர்ந்திருக்க வேண்டிய படம்.


ஆனா இப்ப தங்கமகன ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு ரகத்துலயே சேக்க வேண்டியதா இருக்கு. ஆனாலும் முதல்பாதிக்காக ஒருக்கா பாக்கலாம். சுருக்கமா சொன்னா இன்னொரு ரஜினி பட டைட்டிலும் அவுட்டு. 



Monday, December 14, 2015

BENGAL TIGER – இது பழைய புலி!!!


Share/Bookmark
கடந்த ஒரு வருஷமா எல்லா  தெலுங்கு படங்களும் தேவி பாரடைஸ்ல தான் பாக்குறேன். கூட்டம் அள்ளும். அதுவும் NTR படம்னா சொல்லவே தேவையில்லை. உள்ள அடிக்கிற விசில் சத்தம் வெளில கேக்கும். ஆந்த்ராவுக்கே போய் படம் பாக்குற எஃபெக்ட் இருக்கும். ஆனா நேத்து பாருங்க தியேட்டர்ல இருந்ததே எண்ணி ஒரு இருபத்தஞ்சி பேர் தான். ”வெள்ள” எஃபெக்ட்டா இல்லை ரவிதேஜா எஃபெக்ட்டான்னு தெரில. இப்பதைக்கு சென்னையில பெரிய தியேட்டர்கள்ல தேவி பாரடைஸும் ஒண்ணு. மொத்த கூட்டமும் கடைசி ரெண்டு ரோவுல அடங்கிப்போச்சு. முன்னாடி பாத்தா அலைகடலென வெறும் காலி சீட்டு தான். நல்லா நடுவுல போய் உக்காந்து மாயா படத்துல நயன்தாரா தனியா படம் பாக்குற எஃபெக்ட்டுல இந்தப் படத்த பாத்துட்டு வந்தோம். சரி இந்தப் புலி நம்ம தமிழ்ப்”புலி” ரேஞ்சுக்கு இருக்கான்னு பாப்போம்.

இவய்ங்க படத்துக்கு ஒரே விமர்சனத்த எழுதி எழுதி எனக்கே போர் அடிக்கிது. ஆனா ஒரே மாதிரி எடுக்க இவய்ங்களுக்கு போர் அடிக்கவே அடிக்காது போல. அடங்கப்பா.. எத்தனை தடவ. அதுலயும் ரவிதேஜா கொஞ்சம் கூட கூச்சமே படுறதில்லை. டைரக்டர மாத்துவாறு.. ஹீரோயின மாத்துவாறு.. ஆனா மீசிக் டைரக்டரையும் கதையையும் மட்டும் மாத்தவே மாத்த மாட்டாரு. ரவிதேஜா வரவர நம்ம DSP மாதிரி ஆயிட்டாரு. என்ன ரவிதேஜாவும் “கபக் கபக் கப ஜல்சே” ன்னு வாந்தி எடுக்குறாரான்னு கேக்குறீங்களா? அதுக்கு சொல்லல. DSP தான் அவரு போட்ட பாட்ட அவரே காப்பி அடிச்சி (சில சமயம் அதே படத்துல கூட) இன்னொரு பாட்டு போட்டுக்குவாரு. இப்ப நம்ம ரவிதேஜாவும் அந்த ரேஞ்ச் தான்.அவர் படங்களை அவரே ரீமேக் பன்னிக்கிறாரு.

ஒரு நாலஞ்சி வருஷம் முன்னால டான் சீனுன்னு ஒரு படம் வந்துச்சி. அந்தப் படத்துல ரவிதேஜா சின்ன வயசுலருந்து டான் ஆகனும்னு ஆசைப்படுவாரு. அதுக்காக என்ன வேணாலும் செய்வேன்னு ஒரு ரவுடிக்கிட்ட வேலைக்கு சேருவாரு. உடனே அந்த ரவுடி (ஷாயாஜி ஷிண்டே) அவனோட எதிரியோட (ஸ்ரீஹரி) தங்கச்சி ஃபாரின்ல படிக்கிது. அத நீ லவ் பன்னனும்னு ஒரு வேலை குடுப்பாரு. அட ஹீரோன்னா இப்டித்தான வேலை குடுக்கனும். ரவிதேஜாவும் ஃபாரின் போய் அந்தப் புள்ளைய லவ் பன்னி அந்த புள்ளைய (ஷ்ரேயா) இண்டர்வல்ல ஊருக்கு அழைச்சிட்டு வருவாரு. வந்தப்புறம்தான் தெரியும் அது ஸ்ரீஹரியோட தங்கச்சி இல்லை ஷாயாஜி ஷிண்டேயோட தங்கச்சியேன்னு (டுஸ்டு)

அப்புறம் இண்டர்வலுக்கு அப்புறம் ஸ்ரீஹரியோட தங்கச்சியையும் லவ் பன்னி ஸ்ரீஹரியோடவும் க்ளோஸ் ஆயிடுவாரு. க்ளைமாக்ஸ்லதான் தெரியும் ஸ்ரீஹரி ரவிதேஜாவோட அக்காவ (கஸ்தூரி) ஏமாத்தி விட்டுட்டு வந்துருவாரு. அதனால ஸ்ரீஹரிய பழிவாங்க எல்லாத்தையும் பர்ப்பஸாதான் ரவிதேஜா செஞ்சாருன்னு சொல்லி க்ளைமாக்ஸ் ஃபைட்ட போட்டு படத்த முடிப்பாங்க.



இப்ப இங்க ஆரம்பத்துல ஹீரோ பொண்ணு பாக்க போகும்போது அந்தப் பொண்ணு “என்னக்கு ஃபேமஸான ஆள்தான் மாப்பிள்ளையா வரனும். உன்னையெல்லாம் கல்யாணம் பன்னிக்க முடியாதுன்னு சொல்லி அசிங்கப்படுத்திடுது. உடனே ரவிதேஜாவுக்கு கோவம் வந்து ஃபேமஸ் ஆகியே ஆகனும் அதுக்காக என்ன வேணா செய்வேன்னு அடம்புடிக்கிறாரு. இப்ப அப்புடியே மேல சொன்ன கதையில ஹீரோயின்களையும், ஸ்ரீஹரிக்கு பதிலா போமன் இரானியையும் போட்டா அதான் பெங்கால் டைகர். ஷாயாஜி ஷிண்டேவ கூட மாத்த தேவையில்லை.  

அஞ்சி பாட்டும் சூப்பரா எடுத்துருக்காய்ங்க. ரெண்டு மூணு ஃபைட்டும் ஓக்கே. காமெடி எதோ ட்ரை பன்னுருக்கானுங்க. ஆனா வேலைக்கு ஆகல. ப்ரம்மானந்தம் பேரு அமலா பால் (அமலாபுரம் பாலகிருஷ்ணன்) ரெண்டு சீன் வர்றாரு. ஆனா சிரிப்பு தான் வரல. தமன் வழக்கம்போல கேக்குற மாதிரி அதே அஞ்சி ட்யூன்கள போட்டுத்தள்ளிருக்காரு.

முதல் பாதில ரஷி கன்னான்னு ஒரு ப்ரம்மாண்ட ஹீரோயின். ரவிதேஜாவ விட உயரமா இருக்கு. லாங் ஷாட்ல காட்டும்போது சூப்பரா இருக்கு. செகண்ட் ஹாஃப்ல நம்ம தங்கத்தாரகை தம்மன்னா. அவ்வளவு சிறப்பா இல்லை இந்த படத்துல. ரவிதேஜா ஆளும் காஸ்ட்யூமும் செம. ஆனா வழக்கமான காமெடி கம்மி.

கடைசி வரைக்கும் ஏன் படத்துக்கு பெங்கால் டைகர்னு பேர் வச்சாய்ங்கன்னே தெரியல. அப்புறம் போட்டாய்ங்க ப்ளாஷ்பேக்குல. “அதாவது காட்டுக்கு ராஜா சிங்கம். ஆனா அந்த சிங்கமே தப்பு பன்னா தட்டி கேக்குற உரிமையும் தைரியமும் டைகருக்கு இருக்கு. குறிப்பா பெங்கால் டைகருக்கு இருக்கு. அதனால தான் நாம புலிய தேசிய விலங்கா வச்சிருக்கோம்” ன்னு ரவிதேஜா சின்னக் குழந்தையா இருக்கும்போது அவங்க அப்பா சொல்லுவாரு. அடங்கப்பா…. தியேட்டருக்கு வந்தது ஒரு குத்தமாடா. படத்துக்கு பெங்கால் டைகருன்னு வைங்க இல்லை Banglore டைகர்னு வைங்க. ஆனா விளக்கம் சொல்றேன்னு போட்டு கொல்லாதீங்கடா சாமி.



கொஞ்ச நாள் முன்னால RJ பாலாஜி சில பேருக்கு பிரியாணி பொட்டலம் வாங்கி குடுத்து அத வீடியோ எடுத்து youtube ல போட்டாரு. அப்புறம் அதுக்கு 500 views வந்த உடனே அதுக்கு ஒரு வெற்றிவிழா கொண்டாட்டம்னு நம்மாளுங்கள ஓட்டுறதுக்காக இன்னொரு வீடியோ எடுத்து மிஷ்கின், லிங்குபாய் எல்லாரையும் ஓட்டுவாய்ங்க. அதுல சீப் கெஸ்ட UTV தனஞ்ஜெயன கூப்டு அவரு பேச ஆரம்பிக்கும்போது டக்குன்னு கட்பன்னி “இவர் ஒண்ணும் புதுசா பேசல. இதுக்கு முன்னால 54320 ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன்ல என்ன பேசுனாரோ அதே தான் இங்கயும்” ன்னு சொல்லி முடிச்சிருவாய்ங்க. அதே மாதிரிதான் இதுக்கு மேல எதாவது எதிர்பாத்தீங்கன்னா இதுக்கு முன்னால நா ஒரு பதினைஞ்சி இருபது தெலுங்கு படத்துக்கு விமர்சனம் எழுதிருப்பேன். அதுல எதையாவது படிங்க. எல்லாமே இந்த படத்துக்கு மேட்ச் ஆகும்.


மொத்தத்துல பெங்கால் டைகரப்பத்தி சொல்லனும்னா  “இது பழைய புலி” “இது ஏற்கனவே பலதடவ பாத்த புலி” .


Saturday, December 12, 2015

பீப் பீப் பிக்காலிகள்!!! (18+)


Share/Bookmark
பொதுவா எல்லா வேலைகளும் எல்லாராலயும் செய்ய முடியும்னாலும் ஒரு குறிப்பிட்ட வேலைய அதை தொழிலா செய்யிறவங்க, அந்த வேலையில நல்ல அனுபவம் மிகுந்தவங்க  செஞ்சாத்தான் நல்லாருக்கும். சினிமாவுலயும் அப்டித்தான். சில சமயம் ஒரே ஆள் பல வேலைகள செய்ய முயற்சி செய்றதுண்டு. டிஆர் பாக்யராஜ், பேரரசு,  மாதிரி சில இயக்குனர்கள் படத்தை இயக்குறது மட்டுமில்லாம பாடல்கள், இசைன்னு பல வேலைகளை செஞ்சி வெற்றியும் பெற்றிருக்காங்க. அது திறமை. நிச்சயம் பாராட்டனும். ஆனா இன்னிக்கு இருக்க சூழல்ல சினிமாவ பொறுத்த அளவு திறமைங்குற விஷயத்த பணத்தையும், familiarity யும் வச்சிக்கிட்டு replace பன்னிடுறாங்க.

எவ்வளவோ இயக்குனர்கள் நல்ல கதை வச்சிருந்தாலும் அத படமாக்கி திரைக்கு கொண்டு வர்றதுங்குறது சாதாரண விஷயம் இல்லை. ஆனா ஒரு நடிகரோ, நடிகரின் மகனோ இல்லை ஒரு தயாரிப்பாளரோட மகனோ நினைச்சா ஒரு குப்பை கதையாக இருந்தாலும் திரைக்கு கொண்டு வர முடியும். அதனால தான் கண்ட குப்பைகள பாக்க வேண்டிய கட்டாயமும், கண்ட கருமாந்திரங்கள கேக்க வேண்டிய கட்டாயமும் நமக்கு உண்டாகுது. ரெண்டு நாளுக்கு முன்னால அனிரூத் இசையில சிம்பு எழுதி பீப் சாங்குன்னு ஒண்ணு ரிலீஸ் பன்னிருக்கானுங்க. இதுவரை அந்த பாட்ட நீங்க கேக்கலன்னா ரொம்ப சந்தோஷம். இதுக்கப்புறமும் கேக்காதீங்க.

ஒரு அஞ்சி வருசத்துக்கு முன்னால வரைக்கும் பாட்டுன்னா ஒரு மரியாதை இருந்துச்சி. ”பாடகர்கள்” மட்டும் தான் பாடுவாங்க. “பாடலாசிரியர்கள்” மட்டும்தான் எழுதுவாங்க. திடீர்னு வந்துச்சி “Y This கொலைவெறி”.. உலகமெங்கும் தாறுமாறான ஹிட்டு. அதோட தமிழ்சினிமா பாட்டுங்களுக்கும் வச்சாய்ங்க வேட்டு. வாயில வர்றதெல்லாம் எழுதி பாட்டுங்குறாய்ங்க. இப்பல்லாம் எவனும் பாடகர்கள பாடவிடுறதே இல்லை. நான் மீசிக்.. என் நண்பன் எழுதுவான். ரெண்டு பேரும் சேந்து பாடுவோம். அவ்வளவுதான் இன்னிக்கு டீலிங்கு.  “poetu” ஆவது பரவால்ல கொஞ்சம் டீசண்ட்டா எதுகை மோனையாவது மேட்ச் ஆகுற மாதிரி எழுதுறான். சிம்பு பாட்டெழுதுறேன்னுபோட்டு கொல்றான் பாருங்க. “என் ட்விட்டர் ட்வீட்டிங்கும் நீ தான்” “ என் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் நீதான்” “என் பேஸ்டு நீ தான்” “என் ப்ரஷ்ஷூ நீதான்” இதெல்லாம் பாட்டு வரி. இதுல எதாவது அர்த்தம் இருக்கா?

ங்கொய்யல.. ஏன் எங்களுக்கும் தான் இது மாதிரி எழுதத்தெரியும் “என் பிஞ்ச செருப்பும் நீதான்” “எங்க வீட்டு தொடப்ப கட்டையும் நீதான்”.  அந்த கண்றாவியல்லாம் எப்டியோ போகட்டும். இப்ப இந்த பீப் சாங்க என்ன நினைச்சி இவய்ங்க ரிலீஸ் பண்ணாய்ங்கன்னு தான் நா யோசிட்டு இருக்கேன். இத ரிலீஸ் பன்னோன இளைஞர்கள்லாம் அப்டியே இந்த பாட்ட கொண்டாடுவாங்கன்னா, இல்லை ”சிம்பு செம கெத்துடோய் கெட்ட வார்த்தையெல்லாம் பேசுறாருடோய்”ன்னு எல்லாரும் நினைப்பாய்ங்கன்னா தெரியலை

தமிழ்சினிமாவுல அதிகபட்சமா யூஸ் பன்ற கெட்ட வார்த்தைன்னா  “தா’ தான். அதையும் கொஞ்சம் உச்சரிப்ப ஏத்த இறக்கமா வச்சி பட்டும் படாத மாதிரி யூஸ் பன்னிட்டு இருக்காங்க. ஆனா இந்த நாய் பன்னிருக்கது என்னன்னா அருவருப்போட உச்சம். இந்த தெய்வ மகனத்தாதான் அவங்க அப்ப ஒவ்வொரு மேடையிலயும் தூக்கி வச்சி பேசுறார்.

நம்ம பேச்சு வழக்குல பேசுறதுக்கும் அத அச்சுல ஏத்துறதுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. நாம கோவத்துல பேசுறது, கூட இருக்கவங்ககிட்ட பேசுறது எல்லாத்தையும் அப்படியே எழுத முடியாது. நம்ம ஊர் வழக்கங்களுக்கு இதெல்லாம் ஒத்துவராதுற் யாரோ தெரியாத ஒரு ஆள் செய்யிற விஷயங்களை நாம தப்பா எடுத்துக்குறதில்லை. அதுக்கு சிறந்த உதாரணம் “ஹரஹர மஹாதேவகி” ஆடியோ. படங்கள்ல வர்ற அளவுக்கு ரீச் ஆன ஆடியோ. ஆனா யாரும் அத பேசுனவன திட்டுல. ஏன்னா அவன் யாருன்னே தெரியாது. தெரிஞ்சவனத்தான திட்டமுடியும்.

இதே அந்த ஆடியோவ பேசுன பையன் ஒரு நாள்  வந்து ”நாந்தான் அத பேசுனேன்”னு முகத்த காட்டுற அன்னிக்கு அதுவரைக்கும் ஆடியோவ ஷேர் பன்னிகிட்டு இருந்தவன்லாம் யோக்கியனா மாறி அவன கழுவி கழுவி ஊத்த ஆரம்பிச்சிருவாய்ங்க. அவ்வளவுதான் உலகம். அதேதான் இங்கயும். இந்த பாட்ட யாரோ முகம் தெரியாத ஒருத்தன் பாடி ரிலீஸ் பன்னிருந்தான்னா, இந்த பாட்ட கூட மாறி மாறி நம்மாளுக ஷேர் பன்னி ஹிட் பன்ன வாய்ப்பு இருக்கு.

ஒரு தடவ வெளியூர் போயிருந்தப்போ, அந்த நாட்டுக்கார நண்பன் ஒருத்தன் அவங்க வீட்டுக்கு என்னை அழைச்சிட்டு போனான். எப்பவுமே மொழி தெரியாத நம்ம நண்பனுக்கு முதல்ல கத்து குடுக்குறது கெட்ட வார்த்தைகள்தான். அந்த மாதிரி அந்த மொழிலயும் சில கெட்ட வார்த்தைகள சொல்லிக் குடுத்துருந்தாய்ங்க. அவங்க வீட்டுக்கு போன உடனே அவன் ”எங்க அப்பாவ அந்த கெட்ட வார்த்தை சொல்லி திட்டு”ன்னு சொன்னான். நா மெரண்டுட்டேன். “அடேய்.. அது உங்க அப்பாடா.. வேணாம்” ன்னு சொல்லியும் விடல. அப்புறம் அவன் சொல்லிக்குடுத்த அத்தனை வார்த்தைகளையும் அவங்க அப்பாவ பாத்து சொன்னப்புறம் தான் விட்டான். அவங்க அப்பாவும் அத சிரிச்சிக்கிட்டே கேட்டுக்கிட்டு இருந்தாரு. அவங்க ரெண்டு பேரும் எதோ ஃப்ரண்ட்ஸ் மாதிரி பேசிக்கிட்டு இருந்தாங்க.

ஆனா நம்ம ஊர்  நினைச்சி பாருங்க. அப்பா அம்மாவப் பத்தி ஒருத்தன் எதாவது ஒரு வார்த்தை தப்பா சொல்லிட்டா ரத்தக் களரி ஆகுற அளவுக்கு சண்டை நடக்கும். நமக்கும் அயல்நாட்டு காரனுங்களுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. நமக்கும் நம்ம குடும்பத்துக்கும் சில விஷயங்கள்ல இடைவெளி இருக்கும். நிறைய விஷயங்கள் வெளிப்படையா பேசுறது இல்லை. அது நம்ம கலாச்சாரமும் கூட. ஆனா இப்ப வர்ற நிறைய பாட்டுகளும், படங்களும், ஏன் சில டிவி நிகழ்ச்சிகள் கூட நம்மள தாவணிக்கனவுகள் பாக்யராஜா மாத்துது.

இன்னிக்கு டிவி ஷோக்கள் அத்தனையிலயும் ஆபாசமான பேச்சுதான். மக்கள் அந்த மாதிரி பேசுனாதான் ரசிப்பாங்கன்னு நினைச்சிட்டு இருக்காங்களான்னு தெரியல. குறிப்பா விஜய் டிவில வர்ற சில நிகழ்ச்சிகள். கனெக்‌ஷன், கலக்கப்போவது யாருன்னு நிறைய ஷோக்கள் ரொம்ப ஆபாசமாத்தான் போயிட்டுருக்கு. அதிலும் ”அந்த மாதிரி” கமெண்ட் அடிக்கும்போது நிகழ்ச்சில வர்ற பசங்களவிட பொண்ணுங்கதான் அதிகமா சிரிக்கிதுங்க. டிவி ஷோக்கள்ல கலக்கப்போவது யாரும் , சிரிச்சா போச்சும் தான் நான் தொடர்ந்து பாக்குறது.

ஒரு நாள் வீட்டுல கலக்கப்போவது யாரு பாத்துக்கிட்டு இருந்தோம். அப்போ ரெண்டு பேரு ஹர ஹர மஹா தேவகி ஸ்லாங்குல எதோ காமெடி பன்னிட்டு இருந்தாய்ங்க. அவய்ங்க பேசுன ஸ்கிரிப்டுல ஒரு காமெடியும் இல்லை. ஆனா ஜட்ஜா உக்காந்திருக்க மைனாவும், ப்ரியங்காவும் விழுந்து விழுந்து சிரிக்கிதுங்க. வீட்டுல உள்ளவங்க யாருக்கும் சிரிப்பு வரல. ஏன் அதுங்க அப்டி சிரிக்கிதுங்கன்னு கேக்குறாங்க. என்ன சொல்ல முடியும். தெரியலயேன்னு சங்கோஜப்பட்டுக்கிட்டே சொல்ல வேண்டியிருக்கு. நம்ம சமுதாயத்துல பொண்ணுங்களுக்குன்னு ஒரு தனி மதிப்பு இருக்கு. ஆண் பெண் ரெண்டு பேரும் சமம்னு பசங்க பேசுற எல்லாத்தையும் அவங்க பேசுனா அது நல்லாருக்காது. சில விஷயங்கள் தெரிஞ்சும் தெரியாத மாதிரி காமிச்சிக்கிறதுலதான் அவங்களோட மரியாதையே அடங்கியிருக்கு.

அவய்ங்க டிவில பர்ஃபார்ம் பன்னுறத நம்மளாலயே வீட்டுல ஒழுங்கா பாக்க முடியல. அவனுங்க அவிய்ங்க வீட்டுல எப்டி சொல்லிருப்பாய்ங்க? அதுசரி நம்ம சிம்பும் அனிரூத்தும் அவிய்ங்க வீட்டுல போய் “ஒரு செம பாட்டு போட்டுருக்கேன் கேளுங்க” ன்னு இத போட்டு காமிப்பாய்ங்களோ?
நம்மாளுகளோட ரசனை மாற்றம்தான் இந்த நாயிங்கள இப்படியெல்லாம் பன்ன வைக்கிதுன்னா கண்டிப்பா இது நல்லதுக்கில்ல. சமீபத்துல “நானும் ரவுடிதான்” படத்து க்ளைமாக்ஸ் சீக்வன்ஸ்ல நயன்தாரா பார்த்திபனப் பாத்து ஒண்ணு சொல்ற மாதிரி வச்சிருப்பாய்ங்க.  தனியா பாக்கும்போதே அறுவருப்பா இருந்துச்சி. ஃபேமிலியோட கூப்டு போனவனுங்க நிலமை என்னவோ.


ஒரு சாதாரண மனிதன் எப்படி வேணாலும் இருக்கலாம். அவன் என்ன பண்ணாலும் பெரும்பான்மையை பாதிக்காது. ஆனா சமுதாயத்துல அனைவருக்கும் நல்லா பரிட்சையமான ஒருத்தர், நிச்சயம் அவங்களோட ஒவ்வொரு அடியையும் நிதானமா எடுத்து வைக்க வேண்டியது அவசியம். இந்த மாதிரி காவாலித்தனம் பன்னிக்கிட்டு இருந்தா அதுங்களுக்கு மட்டும் இல்லை. எல்லாருக்கும் அசிங்கம். இதயெல்லாம் ஆரம்பத்துலயே அடிச்சி வளர்த்துருக்கனும். இனிமே யார தப்பு சொல்றது. 


Wednesday, December 9, 2015

பத்துலட்சம் பத்தாதேடா!!!


Share/Bookmark
”சென்னை வெள்ளம் அனைவரின் கர்வத்தையும் அழித்து, மதங்களை ஒன்றாக்கி மனிதர்களை ஒன்றாக்கி, மனித நேயத்தை வளர்த்து” ன்னு நமது நண்பர்கள் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய பல பதிவுகள் உங்கள் டைம்லைன்லயும், வாட்ஸாப்யும் ஒரு வாரமா வந்து குவிஞ்சிருக்கும். அதனால திரும்ப அதயே எழுதி அருக்கவேண்டாம்னு நினைக்கிறேன். ஆனா அதே ரம்பத்த கொஞ்சம் வேற ஆங்கிள்ல போடுவோம். இந்த மழையில நம்மாளுங்க மத்தவங்க மேல எவ்வளவு அக்கரை காட்டுறாங்கன்னு மட்டும் இல்லாம குறிப்பிட்ட சில பேர் மேல எவ்வளவு வெறுப்ப காட்டுறங்கன்னும் துல்லியமா தெரிஞ்சிருக்கு.

நம்ம கொஞ்ச நாளுக்கு முன்னால ”தமிழ்நாட்டுக்கு ஒரு ப்ரச்சனைனா நானே ஓடுவேன்” ங்குற பதிவுல வாட்ஸ்ஆப் தகவல்கள் எப்படி எந்த வித யோசனையும் இல்லாம அப்படியே அப்பட்டமா மற்றவர்களோட ஷேர் பன்னப்படுதுங்குறதப் பத்தி எழுதிருந்தோம். இப்ப சென்னை வெள்ளத்தின் போது நடந்தது அந்த மாதிரி தகவல் பகிர்வோட உச்சக்கட்டம். சமூக வலைத்தளங்களும் வாட்ஸாப்பும் இல்லாம இருந்திருந்தா இவ்வளவு விரைவா பாதிக்கப்பட்ட எல்லாருக்க்கும் உதவி கிடைச்சிருகாதுங்குறதுல கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை. ஆனா இதுங்க எந்த அளவு உதவியா இருந்துச்சோ அதே அளவு மக்கள் மத்தில பீதியக் கிளப்பவும் காரணமா இருந்துச்சி.

மக்களுக்கு உண்மைய சரியா சொல்லக்கூடிய செய்தி தளங்கள்கூட இந்த மாதிரி தகவல்கள கண்மூடித்தனமா பதிவு பன்றதுதான் ரொம்ப வேதனையான விஷயம். இப்ப இருக்க எந்த செய்தித் தளங்களும் செய்தி சேகரிக்க அவ்வளவா ஆட்கள் வச்சிக்கிறதில்லை போல. சும்மா ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட்ட க்ரியேட் பன்னி வச்சிக்கிட்டு எவன் எவன் எது எதையெல்லாம் கெளப்பி விடுறானோ அத்தனையும் அதுல எவ்வளவு உண்மை இருக்குன்னு கூட தெரியாம பதிவு செய்றாங்க. நம்பகமான செய்தித்தளங்கள் கூட இதுக்கு கொஞ்சமும் விதிவிலக்கில்ல.

இப்ப ஆன்லைன் செய்தித்தளங்கள் அதிகமாகிட்டதால அவங்களுக்குள்ள யாரு மொதல்ல செய்திய வெளியிடுறதுங்குறதுல தான் போட்டியா இருக்கே தவற யார் உண்மைய வெளியிடுறதுங்குறதுல இல்லை. ஒரு ஊர்ல நாப்பது நல்லவனுங்க இருந்தா நாலு காவாலிப்பயலுக இருக்கத்தான் செய்றாய்ங்க. இல்லைன்னா அவன் அவன் இவ்வளவு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கும்போது செங்கல்பட்டுல பாலம் உடைஞ்சிருச்சி, செம்பரம்பாக்கம் ஏரியே உடைஞ்சிருச்சின்னு வாய்க்கு வந்தத அடிச்சி விடுவாய்ங்களா? அதெல்லாம் பரவால்லை. இந்த கேப்புல ஒருத்தன் க்ரோக்கோடைல் பார்க்குலருந்து முதலைங்கல்லாம் ஊருக்குள்ள வந்துருச்சின்னு கிளப்பி விட்டான் பாருங்க. ஆனா அவனச் சொல்லி குத்தம் இல்லை. ஜூராசிக் பார்க்குலருந்து நாலு டைனோசர் தப்பிச்சி வந்துருச்சின்னு அவன் சொன்னா கூட நம்மாளுங்க கூச்சப்படாம அதயும் ரொம்ப சீரியஸா ஷேர் பன்னுவாய்ங்க.

சென்ற புதன் வியாழக்கிழமைகள்ல சமூகவலைத்தளங்கள்ல இயங்கிய அனைவருமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதாவது பன்னனும்ங்குற ஒரே எண்ணத்துல உதவிக்கான எண்களையும், எங்கெங்க மக்கள் மாட்டிகிட்டு இருக்காங்க யாரை தொடர்பு கொள்ளனும்ங்குற தகவல்களத்தான் பெரிதும் ஷேர் பன்னிட்டு இருந்தாங்க. அந்த கேப்புல நமக்கு செம்ம கடுப்பாகுற மாதிரி நடந்தது ரெண்டு விஷயம். ஒண்ணு இவய்ங்க எழுதுன கவிதை. அவன் அவன் அப்பா அம்மாவோட பேச முடியலைன்னு வெளிநாட்டுலருந்து தவிச்சிட்டு இருக்கும்போது இவய்ங்கள பாருங்க “வந்தது மழை… ஒழிந்தது ஆணவம்.. இணைந்தது மதம்… வக்காளி நல்லா என் வாயில வரும்… அது என்னவோ கவிதைய கண்டாலே எனக்கு ஒரு அலர்ஜி.. இதுக்கிடையில “சென்னை வெள்ளம் வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா” ன்னு ஒரு ஆயா பாடுன பாட்ட வேற அனுப்பிருந்தாய்ங்க. ஃபோன தூக்கி போட்டு உடைச்சிடலாம்போல இருந்துச்சி. 

அந்த சமயத்துல நடந்த இன்னொரு அருவருப்பான விஷயம் யார் யார் எவ்வளவு காசு குடுத்தாங்கங்குற ரசிகர்கள் சண்டை. எங்காளு அதிகம் குடுத்தாரா இல்லை உங்காளு அதிகம் குடுத்தாரான்னு. முக்கியமாக ரஜினிக்கு எதிராக கருத்துக்களை பகிர்வதை அதிமேதாவித்தனமாக கருதும் சில மடையர்கள். எதோ தீவாளிக்கு ஷாப்பிங்க் போறப்ப காசு பத்தலைன்னு கேக்குற மாதிரி “பத்து லட்சம் பத்தாதேப்பா” ன்னு.

அரசாங்கம் எதோ மக்களை காப்பாத்த நிதி இல்லாம திண்டாடும்போது, அரசாங்கமே நடிகர்கள்கிட்ட நிதிநிலைமைய பலப்படுத்திக்க நன்கொடை கேக்கும்போது ரஜினி பத்து லட்சம் குடுத்துருந்தா இந்த கேள்விகள் ”ஓரளவு” தகுதியானவையா இருக்கலாம். அப்படி இல்லாம இருக்க பட்சத்துல நடிகர்கள் கொடுக்குற பணம் உண்மையிலயே நிவாரணத்துக்கு ஒழுங்கா பயன்படுத்தப்படுதான்னு தெளிவா தெரியாத நிலையில பத்து லட்சம் குடுத்தா என்ன பத்து கோடி குடுத்தா என்ன? இப்போ நடிகர்கள் குடுக்குற பணம் ஒரு courtesy க்காக நாங்களும் இருக்கோம்ன்னு ஒரு அட்டெண்டன்ஸ் போடுறதுக்காகத்தானே தவற இதை வச்சித்தான் அரசு மக்களை மீட்டெடுக்க போகுதுன்னு இல்லை. அள்ளக்கையா இருந்தாலும் “அரசாங்கம் யார்கிட்டயும் யாசகம் கேட்கவில்லை” ன்னு போட்டாருல்ல ஒரு போடு.

நேரடியா சென்று உதவிகள் செஞ்ச நடிகர்கள் செலவு செஞ்ச தொகையைத் தவிற, நிவாரணத்திற்காக அரசுகிட்ட நடிகர்கள் கொடுத்த நிதியால எதாவது மாற்றங்கள் ஏற்பட்டுச்சின்னு யாராவது சொல்ல முடியுமா? நிச்சயமா இல்லை. ரஜினி பத்துலட்சம் குடுத்தால பத்து குடும்பத்த மட்டும்தான் காப்பாத்த முடிஞ்சிது பத்து கோடி குடுத்திருந்தா இன்னும் ஒரு நூறு குடும்பத்த காப்பாத்திருக்கலாமேங்குற ரேஞ்சுல அடிச்சி விட ஆரம்பிச்சிட்டாய்ங்க.

தப்பே செய்யாம எந்த ப்ரச்சனைக்கும் போகாம எவ்வளவு நல்லவனா இருக்க பாத்தாலும், ஒருத்தனோட வளர்ச்சி அவனோட எதிரிகளுக்கு எவ்வளவு காழ்ப்புணர்ச்சிய ஏற்படுத்தும்ங்குறதுக்கு வெள்ளத்தின் போது விமர்சிக்கப்பட்ட ரஜினியே சாட்சி. அது மட்டும் இல்லை அஜித் 65 லட்சம், விஜய் அஞ்சு கோடின்னு அவன் அவன் கிளப்பி விட்டதுக்கு காரணமும் ரஜினி என்கிற மனிதரை தரம் தாழ்த்தி பேசனும்ங்குற ஒரே எண்ணத்துல தான்.

நவம்பர் 1ம் தேதியே அதாவது ரெண்டாவது முறை சென்னை மூழ்குறதுக்கு முன்னாலயே ரஜினி பத்துலட்சம் தருவதாக வெளியிட்டுருந்தாரு. “பத்து லட்சம் பத்தாதேடா” குரூப்பு உடனே இவரை மட்டம் செய்ய வேறு யாரையாவது தூக்கி பேசனும்னு யோசிக்கும்போது மறுநாள் சென்னையோட வெள்ளச் செய்தி பரவ நம்ம அல்லு அர்ஜூன் பதினெட்டு லட்சம் தர்றதா ட்விட்டர்ல போடுறாரு. பத்தாதா நம்மாளுக்கு. என்ட ஸ்டேட் ஆந்த்ரா.. எண்ட மதர் டங்க் தெலுங்கு… எண்ட சட்னி கோங்குறா சட்னின்னு ஆரம்பிச்சிட்டானுங்க…

பாத்தா இனிமே தெலுங்கு படம் தான் பாக்கனும்னு ஒருத்தன் போடுறான். பக்கத்து ஸ்டேட் காரனுக்கு இருக்க இரக்கம் கூட இவருக்கு இல்லையே… இவர்லாம் ஒரு மனிதனா.. தமிழ் ரத்தத்தை உறிஞ்சி சம்பாதித்தவன்னு ஆரம்பிச்சிட்டாய்ங்க… ஆனா அவய்ங்க ஊரு வெள்ளத்துல இருக்கும்போது நம்மாளு பஸ் அனுப்புனப்போ “ஏன் பஸ் அனுப்புனாரு” ன்னு பொங்குன பிச்சக்காரனுங்க தான் இவனுங்க.  

சரி ரஜினிய ஆந்த்ராக்காரனோட கம்பேர் பன்ன வேணாம். நம்ம ஊர்லயே எவனோடவாச்சும் கம்பேர் பன்னிதான் மட்டம் தட்டனும். யார போடுறது? போடுறா அஜித்துக்கு ஒரு அறுபத்தஞ்சி லட்சம். அதப்பாத்தோன்ன எங்க அனில் அண்ணேன் சும்மாருப்பாரா… போடுறா அவருக்கு ஒரு அஞ்சி கோடி.. யாருகிட்ட.. நீங்க லட்சத்துல ரீலு விட்டா நாங்க கோடில விடுவோம்லன்னு அணில் அண்ணா ஆளுங்க அடிச்சி விட்டாய்ங்க. இது எல்லாத்தையும் பாத்து வெறியான யாரோ ஒரு ரஜினி ரசிகன் போட்டான் எல்லாத்துக்கும் மேல ஒரு பத்து கோடி. போட்டாச்சா.. இப்ப எல்லாரும் ஷேர் பன்னுங்க..

எல்லாரை விட அதிகமா ரஜினிக்கு அமோண்டு போயிருச்சே.. இப்ப என்ன பன்றது…. இறக்குடா ஷாருக்கான… எத்தனை கோடி போடலாம்.. பத்து? பதினைஞ்சி? அட ஒரு அம்பது கோடியப் போடுப்பா.. குடுக்கவா போறாய்ங்க. சும்மா ரஜினிய மட்டம் தட்டுறதுக்கு தானே… ஆக ரஜினிக்கு எதிரா நம்ம ஆளுங்க குடுக்குறதா சொன்ன பணம் மட்டும் இருநூறு முன்னூறு கோடியத் தாண்டும். இது எல்லாம் இவர் ஒருத்தர காலி பண்றதுக்காக. கடைசில பாத்தா அவரத்தவற லிஸ்டுல உள்ள எல்லாரும் “ கூல் குடிக்க வேணா வர்றேன்.. குடுக்குறதுக்கெல்லாம் ஒண்ணும் இல்லை” ன்னு டஸ் ஆக்கி விட்டாய்ங்க.

இதுக்கு இடையில வீராதி வீரர் சூராதி சூரர் நாயகர் “நா குடுத்த வரிப்பணம் எங்க?” ன்னு கேட்டதா ஒரு செய்தி. உடனே ஆரம்பிச்சிட்டாய்ங்க.. இந்த தைரியம் யாருக்காவது வருமா? அரசை எதிர்த்து கேள்வி கேட்ட அறத் தமிழன் மறத்தமிழன்னு போஸ்டு போட்டாய்ங்க. கடைசில ஆடு திருடுபோகல… திருடு போன மாதிரி கனவு கண்டேன்னுட்டாரு அவுரு. அதுலயும் இவய்ங்களுக்கு காத்து போயிருச்சி.

இந்த கேப்புல வாட்ஸ் ஆப் குரூப்புல ஒருத்தன் “தமிழ்நாட்டின் பொருளாதாரச் சுரண்டல் கபாலியை தடை செய்வோம்” ன்னு ஒரு போஸ்டர் அனுப்புறான். ஏண்டா காவாலி… சொகப்பிரசவம் கொறைப் பிரசவம்னாடா பேசிக்கிட்டு இருக்கோம். கபாலி எப்படா உன்கிட்ட சொரண்டுனாரு. இத்தனைக்கும் இத ஷேர் பன்றவனுங்க யாருன்னு பாத்த திருட்டு விசிடிய வாங்கி ப்ரிண்டு சரியில்லைன்னு குறை சொல்லிகிட்டே பாக்குறவய்ங்களா இருப்பாய்ங்க. இவன்கிட்டருந்து பொருளாதாரத்த சொரண்டிட்டாய்ங்களாம்.

வானத்த போல படத்துல செந்தில்கிட்ட ஒரு பிச்சக்காரன் “தர்மப்பிரபுவே” ம்பான். உடனே அவரு “டேய் இவருக்கு ரெண்டு இட்லி கட்டு”ம்பாறு. அடுத்து “நீதிமானே” ம்பான் பிச்சக்காரன். “ரெண்டு வடையையும் சேத்துக்கட்டு” ம்பாறு. ஆனா கடைசில எதுவுமே குடுக்காம “நா சந்தோஷப்படுற மாதிரி நீ பேசுன.. நீ சந்தோஷப்படுற மாதிரி நா பேசுனேன்.. ஒண்ணும் தரமுடியாது போ” ன்னு அனுப்பி வச்சிருவாரு. அந்த மாதிரி தான் இவய்ங்க. இவங்க சந்தோஷப்படுற மாதிரி ஒரு புரளிய கிளப்பி விட்டா போதும். உண்மையிலயே அதனால எதாவது புண்ணியம் இருக்கான்னு எந்த சிந்தனையும் இல்லை.

இவர்களோட முக்கிய குறிக்கோள் ரஜினி எந்த விதத்துலயும் புகழப்பட்டுவிடக் கூடாதுங்குறது தான். ரஜினி தமிழர்களை ஏமாத்துனார்ன்னு வர்ற போஸ்ட மாஞ்சி மாஞ்சி ஷேர் பன்றாய்ங்க. ஆனா அதே “பத்து கோடி குடுத்தார்” ன்னு ஒருத்தன் போட்டா “அய்யயோ… don’t spread… இது fake” ன்னு பதறுறாய்ங்க.. ஏண்டா முதலை வந்துருச்சிங்குறத யோசிக்காம ஷேர் பன்னவய்ங்கதானடா நீங்க..

எவ்வளவு நஷ்டமடைந்தாலும் தயாரிப்பாளரையோ டிஸ்டிபியூட்டர்களையோ கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், கிடைத்ததை சுருட்டிக்கொண்டு ரெகுலராக போய்க் கொண்டிருக்கும் உத்தம சுப்பையா பாண்டிக்களுக்கு நடுவுல தன்னால் யாரும் நஷ்டமடையக் கூடாதுன்னு வாங்கிய சம்பளத்தை திரும்பித் தர்றவரு அவரு. ”நா எதாவது செய்வேன். ஆனா பணமா நேரடியா தரமாட்டேன். ஏன்னா பணம் இருந்தா அந்த இடத்துல அரசியல் வரும். அரசியல் வந்தா ப்ரச்சனை வரும்.. அது நமக்கு தேவையில்லை” ன்னு நேரடியாக ரசிகர்கள்கிட்ட சொன்னவரு அவரு. எப்போ எது செய்யனும்னு அவருக்குத் தெரியும். ரஜினிக்கு முன்னால நீங்க கேள்வி கேட்க வேண்டியவர்கள் எவ்வளவோ பேர் இருக்காங்க. அதயும் மீறி நீங்க அவரத்தான் கேள்வி கேக்கனும்னு நினைச்சா அந்த “மக்கள் முதல்வர்” ஸ்தானத்துக்கு உகந்தவர் வேற யாரும் இல்லை. அவர்தான். 

மத்த நேரங்கள்லயெல்லாம் ரஜினியை கன்னடராக பாக்குற நம்மாளுங்க, அவர தாக்கனும்னா மட்டும் தமிழ்நாட்டின் முதல் தமிழனா அவரத்தான் வச்சி பாக்குறாங்க. அவரை விட தமிழுனர்வு பர்சண்டேஜ்ல அதிகம்னு சொன்ன நாசர், ச்சீமான்லாம் இவய்ங்க லிஸ்டுலயே இல்லை போலருக்கு. 

நாலு கெட்டவனுங்க சேந்து ஒரு நல்லவன சாச்சிடலாம்னா இந்த உலகத்துல நல்லவங்க யாருமே இருக்கமாட்டங்கடா.. முடிஞ்ச வரைக்கும் நடத்துங்க.. பாக்குறோம்.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...