Tuesday, July 26, 2016

ரஜினிகாந்த் – திரையுலகின் கடைசிக் கடவுள்!


Share/Bookmark
தியாகராஜ பாகவதர், என்.டி.ராமா ராவ், எம்.ஜி.ஆர்  என நம் திரையுலகம் பல கடவுள்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தை, ஒவ்வொரு தேசத்தை ஆட்சி செய்தவர்கள். திரையில் தோன்றிய போதெல்லாம் ரசிகர்களை ஆனந்தக் கடலில் துள்ளிக் குதிக்கச் செய்தவர்கள். மக்கள் எல்லா நடிகர்களுக்கும் அந்த பாக்கியத்தை அளிப்பதில்லை. அந்த வகையில் நம் காலகட்டத்தின் கடவுள், சொல்லப்போனால் கடைசிக் கடவுள் ரஜினிகாந்த்.

ஏன்? இவருக்குப் பிறகு வேறு யாரும் அந்த இடத்தைப் பிடிக்க முடியாதா? பிடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதே உண்மை. கிடைப்பதற்கரிய ஒரு விஷயம் நமக்கு எப்போதாவது கிடைக்கும்போதே அதன் சிறப்பை நாம் கொண்டாடி மகிழ்கிறோம். ஒரு காலத்தில் நடிகர்களைக் தொடர்பு கொள்வதோ, காண்பதோ அவர்களிடம் ஒரு கையெழுத்து வாங்குவதோ மிகப்பெரிய விஷயம். உங்களின் கருத்தை ஒரு நடிகருக்கு தெரிவிப்பதோ அல்லது அவருக்கு எதிரான ஒரு எதிர்மறை கருத்துக்களை பெரிய அளவில் பரப்புவதோ இயலாத காரியம்.

ஆனால் இன்று…டிவிட்டர் புண்ணியத்தில் நீங்கள் என்ன நினைத்தாலும் ஒரு நடிகரிடம் நேரடியாகச் சொல்லி விட முடியும். உங்கள் கருத்துக்களை நொடிப்பொழுதில் உலகத்திற்கே பரப்ப முடியும். இணைய வசதியுடன் கூடிய ஒரு கணிப்பொறி போதும். எவ்வளவு பெரிய மனிதனின் அஸ்திவாரத்தையும் உங்களால் ஆட்டிப்பார்க்க முடியும்.  

நிழல் திரையில் நடிகர்கள் நற்கருத்துக்களைக் கூறும்போது முன்பு வாய்மூடிக் கேட்ட மக்கள், இன்று ஒரு நடிகர் திரைப்படம் வாயிலாக கருத்து சொல்ல முயலும்போது அவரின் சுயவாழ்க்கையை ஒப்பிட்டு இந்த கருத்தை சொல்ல நீ தகுதியானவானா என்ற கேள்வியைத்தான் முதலில் கேட்கிறார்கள்.

காலையில் எழுந்து தேநீர் விளம்பரத்திலிருந்து, குளிர்பானம், துணிக்கடை ,நகைக்கடை விளம்பரங்கள் என அனைத்திற்கும் வந்து முகம் காட்டி விட்டுச் செல்லும் நடிகர்களைத் திரையில் காணும்போது ஏனோ  மக்களுக்கு அந்த ஒரு சிலிர்ப்பு வருவதில்லை.அந்த வகையில் இதுபோன்ற அபரிமிதமான இணைய வளர்ச்சிகளிலிருந்தும் விளம்பர வியாபாரங்களிலிருந்தும் விலகி நிற்கும் கடைசி நடிகர் திரு. ரஜினிகாந்த்.

இப்போது கபாலிக்காக நடந்து கொண்டிருக்கும் கொண்டாட்டங்கள் உலகின் எந்த மொழிப் படங்களுக்கும், எந்த ஒரு நடிகருக்கும் நடந்திராத ஒரு அதிசயம். கடந்த ஒருமாதமாக குழந்தைகள் முதல் பெரியவர் எங்கு பார்த்தாலும் பேசிக்கொள்வது கபாலி பற்றியே. இணைய தளங்கள் எதைத் திறந்தாலும் முதலிலும், முழுவதிலும் வந்து நிற்பது கபாலி பற்றிய செய்திகளே.

வெளிநாடுகளில் இந்த திரைப்படத்திற்கு செல்வதை திருவிழா போல கொண்டாடுகின்றனர். பேரிஸின் ரெக்ஸ் திரையரங்கில் இவரைப் பற்றிய இரண்டு நிமிட mashup ற்கு திரையரங்கே விசில் சத்தத்தாலும், தலைவா என்ற சத்தத்தாலும் அதிர்கிறது. அந்தத் திரையரங்கில் வாழ்நாளிலேயே இப்படி ஒரு ஆரவாரத்தைக் கண்டிருக்க மாட்டார்கள்.  . இரண்டு வயது குழந்தைகள் கபாலி வீடியோக்களை பலமுறை போட்டு காண்பிக்கச்சொல்லி நச்சரிக்கின்றன. அவரைப் போலவே செய்து பார்க்கின்றன.

கார்ப்பரேட் கம்பெனிகள் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கின்றன. முதல் காட்சிக்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. கபாலியைப் பார்ப்பதற்காகவே வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு சிலர் வருகின்றனர். தமி்ழர்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்றால் தமிழ்நாட்டில் வசிக்கும் வெளிமாநில மக்கள் அதற்கும் மேல் இருக்கிறார்கள். எவ்வளவாக இருந்தாலும் சரி முதல் காட்சி நாங்களும் பார்க்க வேண்டும் டிக்கெட் கேட்டு நச்சரிதவர்கள் ஏராளம்..

செக்ரட்டரியேட்டிலிருந்து லெட்டர் பேடில் முத்திரையுடன் ஒருவர் முதல் காட்சிகு  டிக்கெட் கேட்கிறார். அமைச்சர்கள் முதல் காட்சிக்கான டிக்கெட் வாங்க என்னென்ன செய்தார்கள் என்ற கதைகளைப் படித்திருப்பீர்கள். இதற்கிடையில் வயிற்றெரிச்சல் தாங்காத ஓரிருவர் வழக்கு தொடுக்கின்றனர். வழக்கை தள்ளுபடி செய்யும் நீதிபதி “மகிழ்ச்சி” என்று கூறு முடிக்க நீதி மன்றமே மகிழ்ச்சியில் திளைக்கிறது

ஆயிரம், ரெண்டாயிரம் என முதல் காட்சிக்கான கட்டணம் வியாபார நோக்கில் எகிருகின்றது. எவ்வளவாயினும் கொடுக்க மக்கள் இருக்கின்றனர். ஆனால திரையரங்கில் டிக்கெட்டுகள் தான் இல்லை. சிறுவயதில் தீபாவளிக்கு முதல்நாள் மகிழ்ச்சியில் தூக்கம் வராது. அதைப்போல் முழுவதும் தூங்காமல் பண்டிகை கொண்டாடுவதைப் போல் திரையரங்கிற்குச் செல்கின்றனர். முதல் நாள் படத்தைப் பற்றி பெரும்பாலான எதிர்மறைக் கருத்துக்கள். ஆனால் போகப்போக ரஜினியை எதிரியாக பாவித்தவர்களே அவர் படத்தை தூக்கி நிறுத்துகின்றனர்.

முன்பு ஏதேதோ சொல்லி ரஜினியை வசைபாடியவர்கள் இன்று அவர்களாகவே ஏதேதோ சொல்லி ரஜினியின் பெருமை பாருகின்றனர். வசைபாடியவர்களும் வீண் விளம்பரத்திற்காக இவரை வம்பிழுத்தவர்களும் பின் அவரைப் புகழ்வது ஒன்றும் புதிதல்லவென்று அனைவருக்கும் தெரியும்.

முதல்நாளே இணையத்தில் வெளியிடுவோம் என சவால் விட்டனர். சவாலிலும் ஜெயித்தனர். பெரும்பாலானோரின் ஆண்ட்ராயிடுகளிலும் அதிகாலையே கபாலி. வாங்கி வைத்துக்கொண்டனரே தவிற ஒருவருக்கு கூட அதை மொபைலில் பார்க்க மனது வரவில்லை என்பதே உண்மை.

சிலர் எல்லாம் வியாபாரம்… எல்லாம் பணம் என்கின்றனர். வியாபார யுக்தியால் மட்டுமே ஒருவர் இவ்வளவு உயரத்தை அடைய முடியாது என்பது அவர்களுக்கு மட்டுமல்ல. எல்லோருக்குமே தெரியும்.

நாம் நம் தலைமுறையில் பார்த்து இந்த அளவு வியக்கும் .கடைசி icon இவர் மட்டுமே. சிறிவர் முதல் பெரியவர் வரை, அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை திரையில் ஒருவரைக் கண்டதும் குழந்தையாக மாறி ஆர்ப்பரிப்பது இவர் ஒருவரைக் கண்டு மட்டுமே.

இவையெல்லாம் என்ன? அப்படியென்ன இவருக்கு மட்டும் அந்த சிறப்பு? பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை. பின்புலத்துடன் வரவில்லை. யாரையும் ஏமாற்றிப் பிழைக்க வில்லை. கண்டக்டராக அடிமட்டத்திலிருந்து படிப்படியாக உழைப்பால் உயர்ந்தவர். இந்த டீத்தூளை வாங்கு, இந்தக் கடையில் துணி வாங்கு, இந்த கடையில் நகைவாங்கு எந்த ஒரு விளம்பரப் பொருளையும் மக்கள் மீது திணிக்காதவர். எவ்வளவு உயரத்திலும் தந்நிலை மறக்காதவர். இன்றைய சூழலில் தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ரஜினிகாந்தின் வெற்றி ஒரு சாமான்யனின் வெற்றியாகவே கருதப்படுகிறது. 

ஒவ்வொருவருக்கும் ஒரு துறையில் பிடிப்பு இருப்பதற்கு ஒருசிலர் காரணமாக இருப்பார்கள். உதாரணமாக க்ரிக்கெட் ரசிப்பவர்களுக்கு சச்சின். இப்போது தோணி. அதற்குப் பிறகு? சச்சினின் ஓய்வுக்குப் பிறகு பாதிபேர் கிரிக்கெட் மறந்தார்கள். மீதமிருப்பவர்களை  கட்டி வைத்திருப்பவர் தோணி மட்டுமே. தோணியின் ஓய்வு மீதமிருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானோரின் ஓய்வாகத்தான் இருக்கும்.

அடுத்து வரும் தலைமுறையில் நடிகர்களுக்கு இன்று இருப்பது போல மதிப்பும், அவர்களைப் பார்க்கும்போது மக்களுக்கு சிலிர்ப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.  நடிகர்கள் “நடிப்பு என்ற தொழிலை செய்யும் சாதாரண மனிதர்களாகத்தான் பார்க்கப்படுவார்கள். இன்று இணையத்தில் கபாலி திரைப்படத்தின் கொண்டாட்டங்களாக வரும் ஒவ்வொரு வீடியோவும் பிற்காலத்தில்  நாமே பார்த்து வியக்கப்போகும் பொக்கிஷங்கள். 

இத்தனை மகிழ்ச்சியுடனும், ஆரவாரத்துடனும் ஒவ்வொருவரும் குழந்தைகளாக மாறி ஒரு தனிமனிதனின் திரைப்படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் கடைசி மனிதனும், கடைசி நடிகரும், கடைசிக் திரையுலகக் கடவுளும் ரஜினிகாந்த்தாகவே இருப்பார்.


நன்றி : அண்ணன் அருணன்



(இந்த வாரம் கபாலி  வாரம்.. அதுனால... கண்டுக்காதீங்க)

Sunday, July 24, 2016

கபாலிக்கு பறக்கத் தெரியாதா?!!


Share/Bookmark
படம் ரிலீஸ் ஆன முதல் நாள் நூறில் ஐம்பது சதவீதம் பேர் படம் பிடிக்கலன்னும் ஐம்பது சதவீதம் பேர்தான் பிடிச்சிருக்குன்னும் சொன்னாங்க. ரெண்டாவது நாள் இதே பிடிக்கலை பிடிச்சிருக்கு சதவீதம் 25-75 ஆச்சு. மூணாவது நாளான இன்னிக்கு கிட்டத்தட்ட இது 10-90 ஆக மாறிருச்சி. சமூக வலைத்தளங்கள்ல இன்றைய நிலமைப் படி படம் நல்லா இல்லைன்னு யாருமே சொல்லல. ”நல்லா தானேங்க இருக்கு இதப் போய் ஏன் நல்லா இல்லைன்னு சொன்னீங்க?” ன்னு நிறைய பேர் கேக்குறாங்க. அவங்க மனசுக்கு உண்மையிலயே படம் பிடிச்சிருந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம்.

எந்த பெரிய நடிகருக்குமே முதல் நாள் படம் ரிலீஸ் ஆகும்போது ஆப்போசிட் குரூப் நெகடிவ் ரிவியூ குடுக்குறது சகஜம் தான். அஜித் விஜய் படங்களை பொறுத்த அளவு இந்த விஷயம் ரொம்ப மோசமா நடக்கும். ஆன்லைன் ரிவியூக்களப் பாத்து நம்மாள படம் எப்டின்னே கணிக்க முடியாத அளவுக்கு மாத்தி மாத்தி கால வாரிவிட்டுக்குவாங்க. ரஜினிய பொறுத்த அளவு இந்த உடைப்பு வேலைகள் பெரிய லெவல்ல நடக்கும்ங்குறது லிங்காவின் போது நடந்த நாடங்கள்லருந்தே நமக்கு தெரிஞ்சிருக்கும்.  

ஆனா இந்த முறை கொஞ்சம் வித்யாசமா, முதல் நாள் படத்தைப் பற்றிய disappointment பெரும்பாலும் ரசிகர்களிடமிருந்து தான் வந்தது. மாறா ரஜினி இப்படி நடிச்சிருந்தா நல்லாருக்கும், அப்படி நடிச்சிருந்தா நல்லாருக்கும்னு எப்பவும் குறை சொல்ற குரூப்புகள்கிட்டருந்து பெரும்பாலும் படம் நல்லாதான் இருக்குங்குற பதில் வந்ததோடு மட்டுமில்லாமல், படம் வெற்றி பெறனும்ங்குற நோக்கத்துல அவர்களே சமூகவலைத்தளங்கள்ல நிறைய பாஸிடிவ்வான விஷயங்கள தொடர்ந்து பகிர்ந்துகிட்டு வர்றதையும் பார்க்க முடியிது. மகிழ்ச்சி.

அவர்களும் சரி, மற்ற ரஜினி ரசிகர்களும் சரி படத்தை புகழ்றதுக்கு பொதுவா யூஸ் பன்னிக்கிட்டு இருக்க ஒரு விஷயம் “ரஜினி பயங்கரமா நடிச்சிருக்காரு… இருபத்தைஞ்சி வருஷத்துக்கு முன்னால காணாமப் போன ரஜினி திரும்ப கிடைச்சிட்டாரு… முல்லும் மலரும் ரஜினி திரும்ப வந்துட்டாரு… “ இதுதான். பெரும்பாலும் படத்தைப் பற்றி நல்லவிதமா சொல்ற எல்லாரோட பதிவுகள்லயும் மேற்கண்ட எதாவது ஒரு வாக்கியம் இல்லாமல் இருக்கத்தில்லை.  

ஒருவேளை நீங்களும் இந்தப் படத்துலதான் ரஜினி ரொம்ப நாள் கழிச்சி நடிச்சிருக்காருன்னு நினைச்சீங்கன்னா, ரஜியை நீங்க ரசிச்சது அவ்வளவுதான். அதே மாதிரி உங்களோட அகராதில நடிப்புங்குறதுக்கு “சோகம்” “ஏக்கம்” “அழுகை” இந்த மூன்று விஷயங்களை வெளிப்படுத்துறதுன்னு மட்டுமே நீங்க நினைச்சிட்டு இருக்கீங்க. நடிப்புங்குறது இந்த மூணு விஷயம் மட்டுமில்லை. இதைத் தாண்டி கோபம், மகிழ்ச்சி, குழப்பம், வெகுளித்தனம்ன்னு இன்னும் எக்கச்சக்க பரிணாமங்களை வெளிப்படுத்துவதே நடிப்பு.

என்னை பொறுத்தவரைக்கும் ரஜினி இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருக்காருங்குறதுல என்ன சந்தேகம் இல்லை. ஆனா அந்த இருபத்தஞ்சி வருஷத்துக்கு பிறகு ரஜினி நடிச்சிருக்காருன்னு நீங்க சொல்றது, எதோ ஒரு வகையில நீங்களும் இந்தப் படத்துக்கு சப்போர்ட் பன்றதுக்காகத்தான்.

ஒருவேளை நீங்க சொல்ற  மாதிரியே வச்சிக்கிட்டோம்னா, அப்ப இந்த இருபத்தஞ்சி வருஷமா ரஜினி ஸ்கீரீன்ல ஏனோதானோன்னு வந்துட்டுப் போனதா தானே அர்த்தம். எப்ப ஒரு நடிகன் அவன் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தோட ஒட்டாம, சுத்தமா விலகித் தெரியிறானோ அப்பதான் அவன் நடிக்கலைன்னு அர்த்தம். அப்படி எந்தப் படம் இருக்கு.

கபாலியில் ரஜினி பயங்கரமா நடிச்சிருக்காருன்னு நீங்க சொல்றதுக்கான காரணம் வழக்கமான ரஜினி படங்களைக் ஒப்பிடும்போது கபாலில ரஜினியின் முகத்தில் எப்போதும் ஒரு ஏக்கமும் தேடலும் இருக்கும். ஓரிரு காட்சிகளில் உடைந்து அழவைப்பார்.

கபாலியில் ரஜினி –ராதிகா ஆப்தே ரொம்ப நாள் கழிச்சி சந்திக்கிற சீன்ல நா அழுதேன். இல்லைன்னு சொல்லல. ஆன இதே முத்து படத்துல சரத் பாபு ரஜினியை அடிச்சி விரட்டும்போது, ஏன் அடிக்கிறாங்க எதுக்கு அடிக்கிறாங்கன்னே தெரியாம, எஜமான் சொன்ன சொல்லையும் தட்ட முடியாம ஒரு குழப்பத்தோடவே அழுதுகொண்டு வீட்டை விட்டு போவாரே… அதுல வரவழைச்ச அழுகைய கம்பேர் பன்னும்போதும், அந்த காட்சில அவர் வெளிப்படுத்திய நடிப்பை விட இது எனக்கு அவ்வளவு பெருசா தெரியலை. அதே முத்து க்ளைமாக்ஸ்ல பொன்னம்பலத்துக்கிட்ட ”எஜமான் எங்க இருக்காருன்னு சொல்லிடுடா… எஜமானுக்கு ஒண்ணும் ஆகலைல்ல?” ன்னு அழுகையும் தவிப்புமா கலந்து கேப்பாரே அதெல்லாம் என்ன?

பாட்ஷாவுல மெடிக்கல் சீட் கேட்டுப்போற சீன். ஒரு சிரிப்போட “வெளில சொல்லிடமாட்டீங்களே” ன்னு சொல்லிட்டு கைய சொடுக்கி “ஒருதடவ சொன்னா” ன்னு சொல்லும்போது முகத்த கொடூரமாக்கி அடுத்த செகண்டே கைதட்டி ஆளுங்களக் கூப்பிட்டு, கைய கட்டிக்கிட்டு ஒரு வெகுளியான சிரிப்பு சிரிப்பாரே… என்ன அதெல்லாம்? நடிப்பு. படையப்பால ரம்யா கிருஷ்ணன மீட் பன்ற சீன். ”குழந்த.. நீ சொன்னியே 5 faces… எனக்கு இன்னொரு face இருக்கு… ஆறுமுகம்” அப்டிங்கும்போது அவரோட முகத்தையும் “இந்தப் படையப்பனோட இன்னொரு முகம்” அப்டிங்கும்போதும் அவர் முகத்துல காட்டுல variation னயும் பாத்துருக்கீங்களா? அதுவும் நடிப்புதான். சிவாஜில எல்லா சொத்தும் போனப்புறம், ராஜாகிட்ட போய் “என்னோட நிலமை கொஞ்சம் சரியில்லை.. கல்யாணத்த கொஞ்சம் தள்ளி வச்சிக்கலாம்” ன்னு கேக்கும்போது அந்த தர்மசங்கடத்த அவர் முகத்துல வெளிப்படுத்துறத நோட் பன்னிருக்கீங்களா?

இன்னும் ஓவ்வொரு படத்துலயும் எவ்வளவோ சின்னச் சின்ன விஷயங்கள் சொல்லிக்கிட்டே போகலாம். அவரை அணு அணுவா ரசிப்பவர்கள் 25 வருஷத்துக்கு அப்புறம் ரஜினி இப்பதான் நடிச்சிருக்காருன்னு கண்டிப்பா சொல்லமாட்டங்க. அதுலயும் ரஞ்சித் ரஜினிக்குள்ள இருக்க நடிகன வெளில கொண்டு வந்துட்டாருன்னு வேற பெருமை பட்டுக்குறாங்க. அவருக்குள்ள உள்ள நடிகர் எப்பவும் ஒரே மாதிரிதான் இருக்காரு. ஒரு கமர்ஷியல் படத்துல நடிக்கும்போது, அதுல ஒரு நடிகன் நடிப்பை வெளிப்படுத்தவே முடியாதுங்குதப் போல ஒரு பிம்பத்த ஏற்படுத்திருக்காங்க நம்மாளுங்க. உண்மையிலயே ஒரு மசாலா படத்துலதான் ஒரு நடிகர் எல்லா விதமான நடிப்பு திறமையையும் வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கும். எல்லா எமோஷன்களும் கொஞ்ச கொஞ்சம் இருப்பதால எந்த ஒரு பகுதியும் பெருசா ஹைலைட் பன்னப்படாம போயிடும்.

கபாலி எனக்கு அவ்வளவு satisfied ah இல்லைன்னு எழுதிருந்ததுக்கு நிறைய பேர் “ரஜினி கை கால ஆட்டுனாதான் உங்களுக்கு பிடிக்கும்.. அவர் நல்லா நடிச்சா உங்களுக்கு பிடிக்காது” “உங்களுக்கெல்லாம் ஆறு பாட்டு 5 ஃபைட்டு உள்ள படம் தான் புடிக்கும்.. நல்ல கதை உள்ள படம்லாம் உங்களுக்குப் பிடிக்காது…” ன்னு ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் சில பேரு சமூக வலைத்தளங்கள்ல “இந்தப் படம் பிடிக்கலன்னா அவங்களுக்கு புரியலன்னு அர்த்தம்”ன்னு கமல் படத்துக்கு சொல்ற மாதிரி ஆரம்பிச்சிட்டாங்க. 

இங்க நா ஒரு விஷயத்த தெளிவு படுத்தனும். இந்த தளத்தில் தொடர்ந்து விமர்சனங்கள் படிக்கிறவங்களுக்கு ஒரு விஷயம் தெரிஞ்சிருக்கும். நான் விமர்சன்கள்ல ரொம்ப டீப்பா உள்ள இறங்கி ”இந்த காட்சி இப்படி இருந்தது அந்தக் காட்சி அப்படி இருந்தது” ன்னு காட்சி வாரியா அலசுறதில்லை. எல்லா விஷயங்களையும் லைட்டா டச் பன்னி, நா சொல்ல வர்றத கொஞ்சம் ஜாலியா சொல்லிட்டு போயிடுவேன். ஏன்னா படம் பாக்கும்போது எனக்கு இருந்த சுவாரஸ்யங்கள் எனக்கப்புறம் பாக்குறவங்களுக்கும் கிடைக்கனும்ங்குற ஒரு எண்ணத்துலதான். அதுக்காக நமக்கு புரியலன்னு நீங்க நினைச்சா அது என்னோட பொறுப்பில்லை. நா படத்த டீட்டெய்லா பாக்குறேன்னு உங்களுக்கு புரிய வைக்கிறதுக்காக பதிவுகள்ல என்னோட வித்தைய இறக்கி உங்கள் தெறிச்சி ஓட வைக்கிறதுக்கும் எனக்கு மனசில்லை.

இன்னொரு விஷயம் எல்லா படங்களையும் படங்களாகத்தான் பாக்குறேன். அவன் இந்த சாதிய தூக்கி வச்சி படம் எடுக்குறான், இந்த சாதிய மட்டமா பேசிருக்கான் அதுனால இந்த படத்த நா எதிர்க்குறேன்னு படங்களை ரியல் லைஃபோட கம்பேர் பன்னி அதன் மேல விருப்பத்தையோ வெறுப்பையோ நா காட்டுறதில்லை. உதாரணமா சமீபத்துல வந்த மருது படத்தை பெரும்பாலானோர் வெறுக்க காரணம் முத்தையா அவர் சாதிய முன்னிருந்ததி தூக்கி பேசிருக்காருங்குறதுக்கு தான். படத்தை வெறுத்த பலரும் அதுல ஜாதிய பாத்தாங்களே தவிற, அது ஒரு படமா எப்படி இருந்துச்சின்னே பாக்கல.

கபாலியைப் பொறுத்த அளவும் என்னோட நிலை அதுதான். ”ரஞ்சித் தாழ்த்தப்பட்ட மக்களின் குரலை பதிவு செய்திருக்கிறார்… யாரும் சொல்லாத விஷயத்தை தைரியமாக சொல்லியிருக்கிறார்.. மலேசிய மக்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்” இது போன்ற விஷயங்களே படத்தை சப்போர்ட் செய்யும் பலரின் கருத்துக்களாக இருக்கிறது. என்னைப் பொறுத்த வரை ஒரு திரைப்படம் என்கிற வகையில் நிறைய விஷயங்களை எனக்கு அது திருப்திபடுத்தவில்லை. 

முதலில் கபாலிங்குற அந்த கேரக்டரோட வடிவமைப்பு. விமர்சனத்தில் ஏற்கனவே சொல்லியிருந்த விஷயம்தான். கபாலி அங்க வாழ்ற தமிழ் மக்களோட தலைவனா காட்டப்படுறாரு. சிறையிலிருந்து வர்றவர் அவர் குடும்பத்தை தேடுறதைத் தவிற மக்களுக்கு பெரிதாக எதுவுமே செய்திருக்க மாட்டார். அந்த Free life school இல் கூட கபாலி கட்டிடம் கொடுத்தார்ன்னு சொல்லுவாங்களே தவிற மற்றபடி கபாலிதான் அந்தப் பள்ளிய நடத்துவதாக கூட காட்டமாட்டாங்க.

கபாலி சிறையிலிருந்து வர்றாருன்னு தெரிஞ்சதும் ரெண்டு இளைஞ்சர்கள் படத்தில் பேசிக்கொள்வார்கள் “Bro செம்ம கை ப்ரொ… சாவடி” ம்பாப்ள ஒருத்தர். “அண்ணேன்.. கபாலி வர்றான்.. வெளில வந்தோன சூட்டோட சூடா செஞ்சா சாவடியா இருக்கும்” ம்பாரு இன்னொருத்தர். ரெண்டு பேருமே இளைஞர்கள். 25 வருஷத்துக்கு முன்னால ஜெயிலுக்கு போன கபாலி மேல் இவர்களுக்கு இவ்வளவு வெறுப்பும், மதிப்பும் வர காரணம் எதுவுமே இருக்காது. கபாலி ஜெயிலுக்கு போகும்போது இவர்கள் பிறந்திருக்கவே மாட்டார்கள். இல்லைன்னா கபாலியோட பெருமைய வரலாறு மூலமா தெரிஞ்சிக்க கபாலியும் ரொம்ப பெருசா எதுவும் செஞ்சிருக்க மாட்டாரு.அப்படி இருக்க கபாலி மேல இவ்வளவு மதிப்பும் வெறுப்பும் வர்றதுக்கான காரணமே எதுவும் இல்லை. 

கபாலியை சிறையிலருது கூட்டிட்டு வரும்போது ஜான்விஜய் நடுரோட்டில் போதை மருந்து மாத்துரத காமிச்சி சொல்லுவாரு.. “பட்டப் பகல்லயே எப்படி மாத்துறாங்க பாத்தியா… 43” ன்னு. அந்த காட்சில அவர் எப்டில்லாம் பன்றானுங்க பாருன்னு கோவப்பட்டு சொல்றாரா இல்லை ”செம்மையா பன்றானுங்க பாரு” ன்னு பில்ட் அப் பன்னி சொல்றாரான்னே தெரியாது. அடுத்து free school ல “அண்ணேன் அவன் பேர கேளேன்..” னதும் “ஒருத்தன் டைகர்” ன்னு சொல்லுவான். உடனே எல்லாம் சிரிப்பாங்க. அதுல சிரிக்க என்ன இருக்கு? 

“நம்ம கேங் நல்லது பன்ற கேங்.. நம்ம கேங் நல்லது பன்ற கேங்” ன்னு அடிக்கடி படத்துல சொல்லுவாங்க. ஆனா என்ன நல்லது பன்றாங்கன்னே சொல்ல மாட்டாங்க.. ஒருதடவ எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்கும்போது ரஜினி எழுந்து  ஒரு ஸ்பீச் குடுப்பாரு.. “நாம என்ன செஞ்சிக்கிட்டு இருக்கோம்.. நமக்கு வேலைகள் நிறைய இருக்கு…. நேரம் குறைவா இருக்கு” ன்னு. அப்படி எந்த வேலையும் செய்ய மாட்டாங்க.

கபாலி தமிழ்நேசன் இடத்த புடிச்சத அவர் பையனும் சரி வில்லன்களும் சரி ரஜினிய ஒரு போட்டியாதான் பாப்பாங்களே தவிற கீழ்சாதி ஆளு, வெளியூர்லருந்து வந்தவன் இடத்த புடிச்சிட்டாங்குற பார்வையிலயே பாக்க மாட்டாங்க. ஆனா க்ளைமாக்ஸ்ல திடீர்னு உனக்கு நிலம் இருக்காடா… ஆண்ட பரம்பரைன்னு சொகப்ரசவம் கொரை ப்ரசவம்னு பேச ஆரம்பிச்சிருவானுங்க.

ஒரே மாதிரியான காட்சியமைப்புகள் நிறைய இருக்கு படத்துல. குறிப்பா லீ மெரிடியம் ஹோட்டல் ரூம் காட்சிகள்ல கதவ யாரோ தட்டுறதும், அதுக்கு ரஜினியும் தன்ஷிகாவும் ஷாக் ஆவுற மாதிரியுமான காட்சிகள் மூணு தடவ வரும். அதே போல ரஜினி மனைவியைத் தேடும் படலத்துல எதையுமே கண்டுபிடிப்பது போல இல்லாம யாரோ ஒருவர் “சார் எனக்கு வேலு எங்க இருக்கான்னு தெரியும்… சார் எனக்கு அந்த ஃப்ரெஞ்ச்காரங்க வீடு எங்க இருக்கான்னு தெரியும்” ன்னு சொல்ற காட்சிகள் ஒரு மூணு நாலு தடவ வரும். ஒரு காட்சிய எப்படி தொடங்குவது எப்படி எடுத்துச் செல்வதுங்குறது முக்கியம். இந்த மாதிரி ரிப்பீட்டட் காட்சிகள் கடுப்பையே வரவழைக்கிது.

சில படங்களில் லாஜிக் பார்க்க வேண்டும். சில படங்களில் லாஜிக் பார்க்கக்கூடாது. லிங்காவில் லாஜிக் பார்த்தா தப்பு. கபாலில லாஜிக் பாக்கலன்னா தப்பு. கபாலி மனைவி இறந்துட்டதா நினைச்சி தேடாம இருக்காரு. ஆனா குமுதவள்ளி அட்லீஸ்ட் கபாலிக்கு என்ன ஆச்சின்னாவது தெரிஞ்சிக்க முயற்சித்திருக்கலாமே. கபாலி மட்டும்தானே உள்ள போனாரு. அவர் கூட இருந்த அமீர் மற்றும் இன்ன பிற கேங்குகளேல்லாம் அங்கயேதான இருந்தாங்க.

சங்கிலி முருகன் சீன்ல இன்னொரு அபத்தம். முதல் வசனத்துல “என் புருஷன என் கண்ணு முன்னாலயே கொன்னுட்டாங்கன்னு வள்ளி அழுதுக்கிட்டே இருப்பா” ன்னு சொல்லுவாப்ள. அடுத்து கொஞ்ச நேரத்துல “என் புருஷன் வருவாரு.. வந்து என்ன கூட்டிட்டு போவாருன்னு வள்ளி சொல்லிக்கிட்டே இருப்பா” ன்னு சொல்லுவாரு. புருஷன் செத்துட்டாருன்னு நினைச்சிட்டு இருக்க பொண்டாட்டி எப்படி வந்து கூட்டிட்டு போவாருன்னு சொல்லும்.

இன்னும் சிலபேரு “உங்களுக்கு மலேசிய தமிழர்களோட வாழ்க்கை முறை புரியலை..”ன்னு படத்தில் உபயோக்கிற வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தத்த போட்டு “ரஞ்சித் கரெக்ட்டாதான் எடுத்துருக்காரு… உங்களுக்கு தான் புரியலை”ன்னு சொல்றாங்க. நீ இதுக்கு தனி ஆர்டிகிள் எழுதி புரிய வைக்கிறதுக்கு பதிலா,  ரஞ்சித் புதுசா மலேசியாவுக்கு போற ஒருத்தனுக்கு இந்த வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் சொல்லிக்குடுக்குற மாதிரி ஒரு காட்சி  வச்சிருந்தா எந்த ப்ரச்சனையுமே இல்லையே.


நீ மட்டுமாய்யா ரஜினி ரசிகன்? நானும் தான்யா.. யார்யாரோ படத்த தூக்கி பேசும்போது சின்ன வயசுலருந்து அவர் ரசிகரா இருந்துகிட்டு படத்த தப்பா பேச எனக்கென்ன வந்துச்சி. அதுக்குன்னு புரியாததாலதான் நல்லா இல்லைன்னு சொல்றாங்கன்னு சின்னப்புள்ள தனமா கிளப்பி விடாதீங்க. 



Friday, July 22, 2016

கபாலி - A ரஞ்சித் வித்தை!!!


Share/Bookmark
ஒரு இயக்குனர் அதிகபட்சம் ரெண்டு படத்துல அவர் யாரு, அவருடைய கெப்பாகுட்டி என்ன, அவரால என்ன மாதிரியான output குடுக்க முடியும்ங்குறத காட்டிருவாரு. அதுதான் அவரோட benchmark. அதுக்கப்புறம் அவருடைய ஒவ்வொரு படைப்புகள்லயும் ஒரு பத்து பதினைஞ்சி பர்செண்ட் இம்ப்ரூவ்மெண்ட் இருந்தாலே பெரிய விஷயம். Drastic ah ஒரு மிகப்பெரிய change ah அவங்க படங்கள்ல எதிர்பார்க்க முடியாது. மக்களுக்கு அவர் மீதான மீதான எதிர்பார்ப்புகளும் அவர் ஏற்கனவெ செட் பன்னிருக்க benchmark ah பொறுத்துதான் அமையிது. அந்த இயக்குனர் அவரோட standard ah யே meet பன்னாத பொழுதுதான் மக்கள்கிட்ட வண்டி வண்டியா வாங்கிக் கட்டிக்கிறது. அதே அந்த இயக்குனர் எந்த ஹீரோவ வச்சி படம் எடுக்கும்போதும் மக்களுடைய எதிர்பார்ப்பு இயக்குனரோட benchmark ல தான் இருக்கனும். ஆனா சிலசமயம் அப்படி இல்லாம மிகப் பெரிய ஹீரோக்கள இயக்கும்போது மக்களோட எதிர்பார்ப்பு ஹீரோக்களோட முந்தைய படங்களின்  standard க்கு போயிடுது. 

கபாலியில் நடந்ததும் அதுதான். ரஜினிகாந்த் என்கிற ஒரு பேரால, ரஞ்சித் யாரு, அவரால என்ன பன்ன முடியும், என்ன பன்ன முடியாதுங்குற சிந்தனைய தூக்கி எறிஞ்சிட்டு, மக்கள் எல்லாம் ரஜினியோட Standard ல ஒரு மிகப்பெரிய படத்தை எதிர்பார்த்திருந்தோம். இன்னும் சொல்லப்போனா அந்த சிந்தனையே நமக்கு வராத அளவுக்கு செஞ்சது படத்தோட மார்க்கெட்டிங் மற்றும் டீசர்.

படத்தோட முதல் போஸ்டரிலிந்து டீசர் வரை எல்லாத்துலயும் சாதனை. ரசிகர்கள் மட்டும் இல்லாம சாதாரண பொதுமக்களையும் திருப்திப் படுத்தி “கபாலி எப்போ, கபாலி எப்போ” ன்னு எதிர்பார்ப்பை தூண்டி விடுற அளவு இருந்த இரண்டு டீசர்கள் இது அடுத்த பாட்ஷாவா, அடுத்த பில்லாவான்னு எல்லாரையும் நினைக்க வைச்சிது.

ஓரளவு தெளிவா இருந்த சிலரையும் தடம் மாற வைத்தது இந்தப் படத்தை ரஞ்சித் இயக்க ரஜினி எப்படி ஒத்துக்கிட்டார்ங்குற கேள்வி. எந்திரன் 2 கிட்டத்தட்ட முடிவாகி ஆரம்பிக்கப்போற சமயம். கவுதம் வாசுதேவ மேனனிடம் கதை கேட்டு ஓக்கே பன்னி வச்சிருந்த நேரம், திடீர்னு பிக்சர்லயே இல்லாத ரஞ்சித் ரஜினி படத்தை இயக்கப்போறார்ங்குற நியூஸ். ரெண்டே படங்கள்.. அதுவும் மிகப்பெரிய வெற்றியெல்லாம் பெறாத, critically acclaimed படங்களை மட்டும் எடுத்த ரஞ்சித்திற்கு எப்டி வாய்ப்பு கிடைச்சிது? அப்ப நிச்சயம் பயங்கர பவர்ஃபுல்லான ஸ்டோரி இருக்கும் அப்டிங்குற  இந்த நினைப்புலதான் நானும் ஸ்லிப் ஆனேன். சரி உண்மையில என்னதான் நடக்குது?

கதை என்ன, கதைக்களம் என்னன்னு ஏற்கனவே ரஞ்சித், எடிட்டர் ப்ரவீன்னு ஆளாளுக்கு ஒவ்வொரு பேட்டில கொஞ்ச கொஞ்சமா சொல்லிட்டாங்க. மலேசியாவில் அடிமைப்பட்டு கிடக்கிற தமிழ் மக்களுக்காகப் போராடி அவங்கள மீட்டெடுக்கும் கபாலி இருபத்தைஞ்சி வருஷ ஜெயில் வாழ்க்கைக்கு பிறகு வெளில வந்து எப்படி தான் தொலைத்த வாழ்க்கையை மீட்டெடுத்து மலேசிய தமிழ் சமுதாயத்த சீரழிக்கும் எதிரிகளை எப்படி  ஒழிக்கிறார்ங்குறது தான் கதை. 

இதை எப்படி நீட்டி முழக்கி ரஜினிகிட்ட சொல்லி ஒப்புதல் வாங்குனாங்கன்னு தெரியல. ஆனா திரையில நமக்கு காண்பிக்கப்படுறது தெளிவில்லாத, முடிவில்லாத ஒரு கதை, திரைக்கதை. ரஜினிக்காக இந்த கதை இல்லை, இந்த கதையில் ரஜினியை பிக்ஸ் பன்னிருக்கோம்னு எக்கச்சக்க பேச்சு. ஆனா உண்மையிலயே இந்தப் படத்துல ரஜினிங்குற ஒரு விஷயத்த வெளில எடுத்துட்டு அப்டி என்ன இருக்குன்னு  பாத்தா எதுவுமே இல்லை


படத்தோட மிகப்பெரிய மைனஸ் காஸ்டிங். ஒரே டெக்னீஷியன்களை வச்சி படம் எடுக்குறது தப்பு இல்லை. ஆனா ஒரே ஆக்டர்கள வச்சிக்கிட்டு சூட் ஆனாலும் சூட் ஆகலன்னாலும் அவர்களை ஒவ்வொரு படத்துலயும் மாத்தி மாத்தி நடிக்க வைச்சிக்கிட்டு இருக்கது கண்டிப்பா கடுப்பாதான் ஆகும். ஒரு ரஜினி படம்னா, அவர் கூட நடிக்கிற மற்ற நடிகர்களும் கிட்டத்தட்ட அவரோட ஸ்க்ரீன் ப்ரசன்ஸ்க்கு ஈக்குவலா நடிக்கனும். ராதாரவி, நாசர், ரகுவரன், மனோரமா மாதிரியான பெரிய கைங்கள தலைவர் படங்கள்ல அடிக்கடி போடுறதுக்கு முக்கிய காரணமும் இதுதான். கார்த்தியையும், கேத்ரின் தெரெசாவையும் தவிற மெட்ராஸ் படத்துல நடிச்ச எல்லாரும் இதுல வர்றாங்க. அதுவே கடியா இருக்கு. ரஞ்சித் அவருக்கு பழக்கமான ஒவ்வொருத்தருக்கும் சான்ஸ் குடுக்கனும்னு அதுக்குன்னே தனியா கேரக்டர்கள உருவாக்கிருப்பாரு போல.

அப்படி கொடுத்தவரு அந்த கேரக்டர்கள அழுத்தமானதாகவும், ரஜினிக்கு ஈடுகொடுக்கும்படி அவங்களோட நடிப்பையும் கொண்டுவந்திருக்கனும். ஆனா அதப் பத்தி ரஞ்சித் கவலைப்பட்டதாகவே தெரியல. சுருக்கமா சொன்னா மெட்ராஸ் படத்து atmosphere la கோட் சூட் போட்டு தலைவர உள்ள விட்ட மாதிரி இருக்கு. இதுல ஒவ்வொரு கேரக்டரையும் detailing பன்றதுக்காக ஒவ்வொருத்தோர வாழ்க்கை பின்னனிய விளக்குறதுக்கும் தனித்தனி காட்சிகள். ஆனா இங்க அதெல்லாம் தேவையில்லாததா தோணுது.

என்னதான் இயல்பான சினிமா எடுத்தாலும், சில சினிமாத்தனங்கள் கண்டிப்பா படத்துக்கு தேவை. ஒவ்வொரு கேரக்டரோட உடல் மொழியும், அவங்க பேசுற வசனமும் இதுல அடங்கும். நிஜ வாழ்க்கையில ரெண்டு பேரு டீக்கடையில உக்காந்து பேசிக்கிட்டு இருக்கதுக்கும் ஒரு சினிமால ரெண்டு பேரு டீக்கடையில உக்காந்து பேசிக்கிட்டு இருக்கதுக்கும் வித்யாசம் இருக்கனும். சினிமாவுல பேசுறப்போ அவங்க பேசுற வசனங்கள் ரொம்ப precise ah வும், கொஞ்சம் ஸ்பெஷலாவும் இருக்கனும். ஆனா கபாலியில் வருபபை எல்லாம் நிஜ டீக்கடை டைப் வசனங்கள். ஆளாளுக்கு வாயில வர்றத பேசிக்கிட்டு இருக்காங்க.  

”படம் ஸ்லோவா இருக்கு… படம் ஸ்லோவா இருக்கு”ன்னு நிறைய பேர் சொல்றத கேட்டேன். படம் ஸ்லோவா இருக்குங்குறது தப்பே இல்லை. ஸ்லோவா இருந்தாலும் சீன்ஸ் பவர்ஃபுல்லாவும், அந்த காட்சி மூலமா நமக்கு எதாவது impact குடுக்குற மாதிரியும் இருந்தா ஸ்லோங்குறது ஒரு ப்ரச்சனையே இல்லை. கபாலியைப் பொறுத்த அளவு ஸ்லோன்னு நண்பர்கள் ஃபீல் பன்றது powerless காட்சிகள். எந்த ஒரு பாதிப்பையும் நமக்கு ஏற்படுத்தாத காட்சிகள்.

ரஜினிங்குற ஒருத்தர்தான் படம் முழுக்க நம்மள கட்டி வச்சிருக்கார். அவரோட சின்னச் சின்ன ஸ்டைலான மூவ்மெண்டுகள் படத்துல ஏராளம். வில்லன்களை எதிர்க்கும்போது கண்ணுல இருக்கும் வெறி, குழந்தை கிடைச்ச சந்தோஷத்துல எல்லத்தையும் மறந்து அவளையே அதிசயமா பார்க்கும் பார்வை, மனைவிய தேடும்போது இருக்க ஏக்கம்னு நடிப்புல பின்னிருக்காரு. ரஜினிக்கு அடுத்தபடியா சொல்லும்படியான பாத்திரப்படைப்பும், சொல்லும்படியான நடிப்பும் அட்டக்கத்தி தினேஷ்.தான். ஜான் விஜய், கிஷோர் போன்ற மற்ற அனைவரும் எதோ ஓகே ரகம்.

படத்துக்கு இன்னொரு ஆறுதல் சந்தோஷ் நாராயணன். ரெண்டு பாட்டுதான் படத்துல முழுமைய வருது. மத்ததெல்லாம் அங்கங்க பிட்டு பிட்டா background la வருது.  விக்ஸ் அப்டிங்குறதத்தான் சுத்தி சுத்தி எழுதிருக்கேன்னு விவேக் சொல்ற மாதிரி நெருப்புடா தீமத்தான் சுத்தி சுத்தி வேற மாதிரியான BGM ah போட்டுருக்காரு. நல்லாருக்கு. கேமராவும் சில காட்சிகள்ல செம. க்ளைமாக்ஸ் காட்சி நடக்குற CG ல செய்யப்பட்ட லொக்கேஷன் செம.

ரஞ்சித்தோட திரைக்கதையும் சரி வசனமும் சரி ரொம்ப வீக். திரைப்படம்ங்குற மீடியத்த மக்களை எண்டர்டெய்ன் பன்ன மட்டும் பயன்படுத்துவது உசிதம். தேவையில்லாம அந்த கருத்த சொல்றேன் இந்த கருத்த சொல்றேன், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு படத்துல குரல் கொடுக்குறேன்னு கிளம்புறதெல்லாம் வேலைக்கு ஆகல. வேண்டுமென்றே தினிக்கப்பட்ட ஆண்டையர் டைப் வசனங்கள் ஏராளம்.

நிறைய விஷயங்கள்ல படத்துல தெளிவே இல்லை. முதலாவதா மலேஷிய மக்கள் பேசுற தமிழ்ல வர்ற சில வார்த்தைகள் நமக்கு ரொம்ப புதுசு. “கட்டைய தொட்டான்” “கட்டி ஓட்டுறான்” மாதிரியான வசனங்கள திரும்ப திரும்ப கேரக்டர்கள் பேசிக்கிட்டு இருக்கு. அப்டின்னா என்ன அர்த்தம்னே நாலஞ்சி சீனுக்கு அப்புறம்தான் நமக்கு புரியிது. அப்புறம் மலேசிய போலீஸே பயப்படும் அளவுள்ள ஒரு டான், பெரிய மாஃபியாவ எதிர்த்து சண்டை போடுற ஒரு டான்..  அவரை சுற்றி இருக்க நபர்கள் எப்டி இருக்கனும்? அவரோட கேங் எப்டி இருக்கனும்? ஆனா தலைவர் கூட நச நசன்னு பேசிக்கிட்டு ஜான் விஜய் மட்டுமே திரியிறாப்ள. காமெடியனா இருந்தாலும் ஜனக ராஜ் கேரக்டர் பாட்ஷாவுலயோ, நாயகன்லயோ பாக்க எவ்வளவு பவர்ஃபுல்லா இருக்கும். ஆனா இங்க சிறப்பா இல்லை.

ஃப்ளாஷ்பேக் அவ்வளவு பெரிய இம்பாக்ட்ட தரல. அதே மாதிரி இருபத்தைஞ்சி வருஷம் ஜெயில்ல போடுற அளவுவுக்கோ, அவர அதுக்கப்புறம் ரிலீஸ் பன்னலாமான்னு போலீஸ் டிஸ்கஸ் பன்ற அளவுக்கோ ஃப்ளாஷ்பேக் காட்சிகள பவர்ஃபுல்லா காட்டல.

மலேஷிய நண்பர்கள் சிலர்கிட்ட பேசியவரை, ரஞ்சித் அங்க இருக்க தமிழர்களோட வாழ்க்கைய அப்படியே படம் புடிச்சிருக்கதாகவும், படத்துல காமிக்கிற மாதிரிதான் நிஜத்துலயும் அந்த கேரக்டர்களோட நடை உடை பேச்சு பாவனை எல்லாம் இருக்கும்னு சொன்னாங்க.


பொதுவா எந்த ஒரு இயக்குனர் ரஜினி படத்த இயக்கும் போதும் “முதல்ல நா அவருக்கு ரசிகன்.. அப்புறம் தான் இயக்குனர்” ம்பாங்க. அப்படி ரசிகனா இருக்க நீங்க ஒரு ரசிகனோட எதிர்பார்ப்பு எப்படி இருக்கும்னும் கண்டிப்பா நீங்க உணர்ந்து தான் படம் எடுக்கனும். ஆனால் ரஞ்சித் நிச்சயம் அந்த விஷயத்துல தவறிட்டார்னுதான் சொல்லனும். 

ஒரு ரசிகனா எனக்கு இதுபோல நிறைய ஆதங்கங்கள்.  இருந்தாலும் படம் ரொம்பலாம் அருக்காம டீசனட்டாதான் போகுது. இண்ட்ரோவை தொடர்ந்து வர்ற 15 நிமிஷம், இண்டர்வல் ப்ளாக், ரஜினி ராதிகா ஆப்டே செண்டிமெண்ட் காட்சிகள்  சிறப்பு. ஒரு சீன்ல அழுக வச்சிட்டாங்க. 

மொத்தத்துல ரஜினிங்குற சூரியன வச்சி உலகத்துக்கே வெளிச்சம் காட்டலாம். ஆனா ரஞ்சித் அவரை வைச்சி கொடுத்துருக்க output  ஒரு ஊருக்கு கூட பத்தாது. (இதன் மூலமா என்ன சொல்ல வர்றேன்னு எனக்கே புரியல யுவர் ஹானர்.. அட்ஜஸ்ட் பன்னிக்குங்க) 




Tuesday, July 19, 2016

ஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்!!


Share/Bookmark
பொதுவாக ரஜினி படம் ரிலீஸ் ஆகப்போற சமயத்துல தமிழ்ப் போராளிகள் பொங்கி எழுறதும், அதுக்கு நம்ம பதில் எழுதுறதும் காலங்காலமா நடந்துகிட்டு வர்ற ஒண்ணு தான். அந்த மாதிரி பதிவுகளப் பாக்கும் போது முன்னாடிலாம் ரொம்ப கோவம் வரும்.  ஆனா அதுவே போகப் போக, அவிங்க அறிவாளித்தனமா கேக்குற கேள்விகள்லாம் சிரிப்ப தான் வரவழைக்குது. இந்த தடவ அந்த நாயிங்கள கண்டுக்காம சைடு வாங்கி போயிருவோம்னுதான் ரொம்ப நாள அதப் பத்தி எதும்  பொங்காம இருந்தேன். திடீர்னு துப்பாக்கி பட வசனம் ஞாபகம் வந்துச்சி. வயித்தெரிச்சல்ல பொங்கி, வாய்க்கு வந்தத உளருற அந்த நாயிங்களே திரும்பத் திரும்ப ஒரு விஷயத்த சொல்ல வெக்கப்படாதப்ப நமக்கு என்ன?

பட ரிலீஸூக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு. நாளையிலருந்து பாருங்களேன். ஒரு லிட்டர் பால குடுத்தா எத்தனை நைஜீரியா குழந்தைங்களோட பசியப் போக்கலாம், முதல் ஷோ டிக்கெட் எடுக்குற ஐநூறு ரூவா காசுல எத்தனை குடும்பங்களோட பசியப் போக்கலாம்னு நிறைய பேர் சர்வே எடுத்து போடுவாய்ன்க. அதாவது கட்டவுட்டுக்கு ஊத்துற அந்த பால வச்சித்தான் பலபேரு பசிய போக்கலாம்னு இருப்பானுங்க. ஆனா பாருங்க இந்த பாழா போன ரசிகருங்க அத எடுத்து கட்டவுட்டுக்கு ஊத்தி வேஸ்ட் பன்னிடுறாய்ங்க.

மிஸ்டர் போராளீஸ்.. நீங்க 50 ரூவா குடுத்து முருகன் இட்லி கடையில ஒரு செட்டு இட்லி சாப்புடுறதுக்கு பதிலா ஒரு சாதாரண ஹோட்டல்ல ஒரு செட்டு இட்லி பத்து ரூவான்னு சாப்டீங்கன்னா ஒரு 40 ரூவா சேவ் பன்னி அத வச்சி நாலு பேருக்கு சாப்பாடு வாங்கி போடலாம். மாசம் ஒரு தடவ எவன் மண்டையாவது கழுவி ட்ரீட்டுன்னு ஒரு பாருக்கு அழைச்சிட்டு போய் பத்தாயிரம் இருவதாயிரம்னு செலவு பன்னி மூக்கு எது வாயி எதுன்னு தெரியாத அளவுக்கு குடிக்கிறீங்களே.. அத நிறுத்துனா மாசம் பத்து குடும்பங்களுக்கு சாப்பாடு போடலாம். இவ்வளவு ஏன்.. நியூ இயர் அன்னிக்கு.. அதுவும் ஆங்கிலப் புத்தாண்டு அன்னிக்கு நீங்க மெரினா பீச்சுல உடைச்சி போடுற பீர் பாட்டில்களை கம்மி பன்னாலே அந்த காச வச்சி ஒரு ஊருக்கே சாப்பாடு போடலாம்.

ரஜினி படத்துக்கு செலவு பன்ற காச வச்சோ, கட்டவுட்டுக்கு ஊத்துற பால வச்சோ தான் அவங்க பசியப் போக்கனும்னு இல்லை. இதே மாதிரி நீங்க புடுங்குற ஒவ்வொரு தேவையில்லாத ஆனியையும் கம்மி பன்னாலே நைஜீரியா மட்டும் இல்ல.. உலகத்துல உள்ள அனைத்து ஏழைங்க பசியையும் வறுமையையும் போக்கிடலாம்.

வெள்ள நிவாவரணத்துக்கு அவர் கொடுத்த பணமும் நிவாரண பொருட்களையும் சாமி கணக்குல சேத்துட்டீங்க. ரைட்டு. இப்ப உங்க கணக்குப் படி அவர் எதுவுமே குடுக்கலன்னு வச்சிக்குவோம். வெள்ளத்துக்கு ஒண்ணும் குடுக்காத ரஜினி படத்த ஒழிக்கனும்.  அதான உங்க பாலிசி. ஒழிக்கலாம். அப்ப நாலு நாள் தூங்கமா முழிச்சி வேலை பாத்த சித்தார்த் படத்த நீங்க மெகா ஹிட்டாக்கிருக்கனுமே. தமிழன் அல்லாத ரஜினி படத்த ஓடவிடக்கூடாது . கரெக்டா சொன்னீங்க. அப்ப மூச்சுக்கு மூச்சி “நான் தமிழன்ய்யா.. தமிழன்ய்யா” ன்னு சொல்லிக்கிட்டு திரியிர டி.ஆர் படத்தையும் சீமான் படத்தையும் சரித்திர வெற்றி பெற வச்சிருக்கனுமே. 

இதெல்லாம் பரவால்ல.. நீங்க எப்பவும் பன்றது. பழகிப்போச்சு. ஆனா கபாலிய ஒழிக்கிறதுக்காக திருட்டு விசிடி குரூப்புக்கு உங்க ஆதரவ குடுத்தீங்க பாத்தீங்களா? அக்காவ வச்சி கடைய வாங்குன வீரபாகுவெல்லாம் உங்க ராச தந்திரத்துக்கிட்ட தோத்து பொய்ட்டாண்டா.. இதுல அந்த வெளக்கு புடிக்கிற வேலைய பெருமையா வேற சொல்லிக்கிறீங்க.

எதுக்காக இந்த விளக்கு புடிக்கிற வேலைன்னு கேட்டா, கபாலி படத்துக்கு டிக்கெட்  விலை ஏத்திட்டாங்களாம். அதுக்காக சார் கோவப்பட்டுட்டாராம். நண்பர் ஒருத்தர் சொன்ன மாதிரி  டாஸ்மாக்க ஒழிக்கனும்னு கள்ளச்சாராயம் காய்ச்சி விக்கிறவய்ங்களுக்கு ஆதரவு குடுக்குற மாதிரி இருக்கு.

சரி மொதல்ல ஏன் இந்த டிக்கெட் விலையெல்லாம் இப்டி எக்குதாப்பா ஏறுச்சி? பத்துவருஷத்துக்கு முன்னால இப்படி ஒரிஜினல் டிக்கெட் விலைய விட ஐந்து மடங்கு பத்து மடங்கு ஏத்தியா வித்தாய்ங்க? என்னிக்கு இந்த திருட்டு விசிடி காலம் ஆரம்பமாச்சோ அப்பவே டிக்கெட் விலையும் அதிகமாக ஆரம்பிச்சிது. உங்களுக்கு தெரிஞ்சி கடைசியா நூறு நாள் ஓடுன படம் எது? அம்பது நாள் ஓடுன படம் எது? இப்பல்லாம் ஒரு புதுபடம்னா அதுக்கு மவுசு ஒரே வாரம் தான். ரெண்டு நாள்ல ஆண்ட்ராய்டு ஃபோன் வச்சிருக்கவன் எல்லார் கையிலயும் படம் போய் சேந்துருது. ஒரு வாரத்துக்குள்ள தயாரிப்பாளர் போட்ட பணத்த எடுக்கனும். வேறென்ன வழி.. இது தான்.

இணையத்துல திருட்டு ப்ரிண்ட் ரிலீஸ் ஆனா என்ன...படம் நல்லாருந்தா எல்லாரும் தியேட்டருக்கு போவான்ங்குறான் ஒருத்தன். இதே வாய வச்சிக்கிட்டு தான் இந்த நாயிபோன மாசம் பூரண மதுவிலக்கு வேணும்னு கேட்டுச்சி. எதுக்கு பூரண மதுவிலக்கு? இவன் லாஜிக்படி குடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறவன் குடிக்க மாட்டான்ல.


சரி டிக்கெடி விலை ஏறுறது உனக்கு புடிக்கல. நீ பாக்காத. இல்லையா அடுத்தவனையும் பாக்காதன்னு சொல்லு. அதென்ன திருட்டு ப்ரிண்ட்ல பாருன்னு சொல்றது. அவர வெறுக்குற உங்களாலயே படத்த பாக்காம ஒதுக்க முடியாதப்ப.. ஏண்டா நொன்னை.. இத்தனை வருஷமா அவர் ரசிகர்களா இருக்கவங்க எத்தனை ரூவா வேணாலும் குடுத்து பாக்கனும்னு நினைக்கிறதுல என்னடா தப்பு?

எதோ இவய்ங்க மட்டும்தான் குடும்பம் குட்டியெல்லாம் நல்லா பாத்துக்குற மாதிரியும் ரசிகர்களெல்லாம் அவங்கள நடுத்தெருவுல விட்டுட்டு வேலைவெட்டி இல்லாம நடிகருங்க வீட்டு வாசல்லயே காத்துக்கிட்டு இருக்க மாதிரியும் நினைச்சிட்டு இருக்காங்க. குருட்டு நாயே.. வீட்டுக்குள்ள லாப்டாப்புலயே உக்காந்துட்டு இருக்காம அக்கம் பக்கம் பாரு. இந்த மாதிரி ரசிகனா சுத்திக்கிட்டு இருக்கவன்லாம் உன்னவிட நூறு மடங்கு அவன் ஃபேமிலிய சந்தோஷமா வச்சிருப்பான்.

என்னோட நெருங்கிய நண்பர் ஒருத்தருக்கும் எனக்கும் முந்தாநாளு செம வாக்குவாதம். ஆடி, பென்ஸ், Rolls Roys ன்னு மூணு கார் ஃபோட்டோ, நாலாவத ஒரு லாரில ஒரு கும்பல் தொங்கிட்டே போறத போட்டு, நடிகர்கள் கார்ல போறாங்க… ஆனா ரசிகர்கள் அவங்க படத்த பாக்க இப்படி தொங்கிட்டு போறாங்கன்னு.

இது என்ன பணத்துக்காகவா? நமக்கு புடிச்ச ஒரு விஷயத்த, அடுத்தவங்களுக்கு தொல்லை இல்லாத ஒரு விஷயத்த (வயித்தெரிச்சலை தவிற) நம்மாள முடிஞ்ச ஒரு விஷயத்த, யாரோட கட்டாயப்படுத்துதலும் இல்லாம நாமளே சந்தோஷமா செய்யிறோம். இதுல பணம் எங்கருந்து வந்துச்சி.

பட ரிலீஸான முதல்நாள் கொண்டாட்டங்களையும், கட்-அவுட் பாலாபிஷேகங்களை மட்டுமே பாக்குற இந்த முட்டாள் போராளிக் கூட்டம் அதே மன்றங்களால மக்களுக்கு செய்யிற உதவிகள எங்கயாது சொல்றாய்ங்களா? ரசிகர்கள், ரசிகர் மன்றங்களெல்லாம் முதல்ல என்ன? ஒரே ரசனையுடைய மக்களோட குழுமம். தனிப்பட்டு நாம ஒரு விஷயத்த செய்யிறதுக்கும் நாலு பேர் சேர்ந்து செய்யிறதுக்கும் வித்யாசம் இருக்கு. எனக்கு இன்னிக்கு பொறந்த நாளுங்க.. நா இன்னிக்கு நாலு பேருக்கு உதவி செய்யிறேன்.. நீங்களும் நாலு பேருக்கு உதவி செய்யிங்க” ன்னு ஒருத்தன்கிட்ட கேட்டா ”உன் பொறந்த நாளுக்கு நான் ஏண்டா உதவனும்”ன்னு காரித் துப்பிட்டி போயிருவான்.

அதே “பாஸூ… இன்னிக்கு தலைவர் பர்த்டே வாங்க எதாவது பன்னலாம்” ன்னு கூப்டா அப்ப அவனுக்கும் உதவுற ஒரு எண்ணம் இருக்கும். போரூர்ல கட்டிடம் இடிஞ்சி விழுந்தப்ப முதல் முதலா ஒரு ரஜினி ரசிகர் மீட்புக் குழுவினருக்கு ஜூஸ் வாங்கி கொடுக்க ஆரம்பிச்சிதான் எல்லாரும் சேந்து உதவி செய்ய ஆரம்பிச்சாங்க. சென்னை வெள்ளத்தின் போது அதே மன்றங்கள் மூலமாகத்தான் சில கோடிரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. அதெல்லாம் அம்னீஷியா வந்து நீங்க மறந்துட்டீங்க. ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் எத்தனை நலத்திட்ட உதவிகள், எத்தனை ரத்ததானங்கள்? இது ரஜினி மன்றங்களை மட்டும் சொல்லல. பெரிய நடிகர்கள் சிலரின் மன்றங்கள் எல்லாத்துலயுமே இந்த செயல்பாடுகள் நடந்துக்கிட்டு தான் இருக்கு.

தீவாளி, பொங்கல் போன்ற பண்டிகைகள எதுக்கு கொண்டாடுறோம்? நரகாசுரன் கதைகள்லாம் ஒருபக்கம் இருந்தாலும் பண்டிகைங்குறது மக்களை ஒண்ணு சேர்க்கவும், மகிழ்ச்சியா இருக்கவும் தான். எனக்கெல்லாம் முன்னாடி தீவாளிக்கு மட்டும்தான் புது ட்ரஸ்ஸே கிடைக்கும். அடுத்த ஒரு வருஷத்துக்கு எந்த ஊருக்கு போனாலும் எந்த கல்யாணத்துக்கு போனாலும் அந்த ஒரு ட்ரஸ்ஸ போட்டு தான் அழைச்சிட்டு போவாங்க. என்னைப்போல தீபாவளிப் பண்டிகை இல்லைன்னா நிறைய பேருக்கு புதுத்துணிங்குற வேலையே இருக்காது.

இந்த தீபாவளி பொங்கல் மாதிரி ரஜினியும் மக்கள் கூட்டத்த ஒண்ணும் சேக்குற ஒரு பண்டிகை மாதிரி. தமிழ்நாட்டுல ரஜினி படம் வந்தா மட்டுமே தியேட்டருக்குப் போற எத்தனையோ குடும்பங்கள் இருக்கு. வேற எந்த படத்துக்கும் நம்பி  குடும்பத்த அழைச்சிட்டு போகவும் முடியல. அப்டி வேற படங்களுக்கு கூப்டா வர அவங்களுக்கும் பிடிக்கிறது இல்லை.

வழக்கமா நீங்க ரஜினி படங்களை குறை சொல்ல என்ன சொல்லுவீங்க? வயசாயிருச்சி.. இனிமே அமிதாப் மாதிரி வயசான கெட்டப்புல நடிச்சாதான் நல்லாருக்கும்பீங்க. அப்டி இந்த படத்துக்கு சொல்ல முடியல. படம் ரிலீஸாகுறப்போ அரசியல் பேசி படத்த ஓட வைப்பார்ம்பீங்க. இதுவரைக்கும் அவர் வாயவே திறக்கல.  பி.வாசு, ரவிக்குமார் போன்ற இயக்குனர்கள குறை சொல்லுவீங்க. ரஞ்சித்த ஏற்கனவே போராளி குரூப்ஸ் accept பன்னிட்டாதால இந்தப் படத்துல ரஞ்சித்தையும் குறை சொல்ல முடியல. பாட்டு மொக்கைன்னு சொல்லுவீங்க. ஆனா மக்கள் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன நீங்க ஓட்ட மாட்டீங்க. அதுனால பாட்டையும் குறை சொல்ல முடியல.

வேற என்னதான் செய்வீங்க. எதாவது சொல்லியே ஆகனும்ங்குற frustration ல tamilrockers க்கு விளக்கு புடிக்க ஆரம்பிச்சிட்டீங்களே பையா… கண்ணு அது திருட்டு ப்ரிண்ட் கண்ணு.. அவனுங்க திருடனுங்க.. நம்ம போராளிங்க…. அதயெல்லாம் ஆதரிக்கலாமா? பக்கத்து வீட்டுக்காரன் நகைய ஒரு நாயி திருடிட்டு ஓடிருச்சின்னா ஓடிப்போய் புடிச்சி நாலு அடி அடிக்காம இருந்தாலும், இன்னும் நாலு பேர் வீட்டுல சேத்து திருடுன்னு ஊக்கப்படுத்தக் கூடாது.

இதுல இன்னொரு வித்யாசமான பொங்கிகள் ஏன் கபாலி படத்துக்கு மட்டும் கேக்குறீங்க.. ஏன் மத்த படத்துக்குலாம் இந்த திருட்டு விசிடி கும்பல எதிர்த்து கேக்க வேண்டியது தானே?ன்னு எதிர்கேள்வி கேட்டு அவய்ங்கள நியாயப் படுத்திக்கிறாய்ங்க.  யாருக்கு தலை வலிக்குதோ அவன் ஆஸ்பத்திரிக்கு போறான். ஏன் நீ தான் ரொம்ப தைரியமான ஆளாச்சே.. மத்த படத்துக்கெல்லாம் நீங்க போராடுறது? ஒரு தப்பை எப்போதாவது தட்டிக்கேட்கிறார்கள் என்பதற்காகவும், அந்த தப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்காகவும் அது சரியாகிவிடாது.

ரஜினி தமிழ் சினிமாவின் ஒரு அடையாளம். தமிழ்ப் படங்களை “முதன் முதலாக” என உலகத்தின் பல மூலைக்கும் எடுத்துச் சென்றவர்.  போன வருஷம் தான் ஒருத்தன் இவரப் பாத்து “உங்களுக்கு மார்க்கெட் இல்லை” ன்னான். இன்னிக்கு கார்ப்பரேட் கம்பெனிகள் அவர் பட ரிலீஸூக்கு official holiday விடுற அளவு இருக்கு. இப்ப அவர் மார்க்கெட் என்னன்னு எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும். 

ஆக போராளிகளே.. இன்னும் ரெண்டு நாள்ல தமிழ்சினிமாவோட ஒரு முக்கியாமான நாள். ஒண்ணு வந்து எஞ்ஜாய் பன்னுங்க. இல்லைன்னா பேயாம இருங்க. கொண்டை தெரியிற மாதிரி கேவலமா பொங்காதீங்க. நீங்க கேக்குற கேள்விக்கெல்லாம் சிரிப்புதான் வருது.





Friday, July 8, 2016

தில்லுக்கு துட்டு – லொள்ளு சபா!!!


Share/Bookmark
ஒருத்தனுக்கு ஏழரை நடக்கும்போது எத்தொட்டாலும் வெளங்காதுங்குறத  கடந்த ஒரு வருஷமா கண்கூடாவே பாத்துகிட்டு இருக்கேன். அட ஏழரை நடக்குறது வேற யாருக்கும் இல்ல. எனக்குத்தான். இறைவி படத்துக்கு ஐட்ரீம்ல டிக்கெட் புக் பன்னப்போ online ல தியேட்டரே ஃபுல்லா காமிச்சிது. ஆனா தியேட்டர் போனா மொத்தமே ஒரு அம்பது பேர்தான் இருந்தாய்ங்கன்னு போன பதிவுல சொல்லிருந்தேன். ஐட்ரீம பொறுத்தமட்டுல 90 ரூபா டிக்கெட் எடுத்தாலே நிறைந்த தரத்தோட படம் பாக்கலாம் இப்ப நேத்து திரும்ப அதே மாதிரி ”தில்லுக்கு துட்டு” புக் பன்றதுக்கு ஓப்பன் பன்னா இறைவிக்கு இருந்த மாதிரியே 120 ரூபா டிக்கெட்ல மட்டும் நாலே சீட்டுதான் இருந்துச்சு. ”இவய்ங்க இதயே ஒரு ட்ரிக்ஸா வச்சிருக்காய்ங்களே.. விடக்கூடாது.. தியேட்டருக்கு நேராவே போய் போய் கவுண்டர்லயே நாளைக்கு ஷோவுக்கு டிக்கெட் வாங்கிட்டு வந்துருவோம்னு 6 குலோ மீட்டர் வண்டிய எடுத்துக்கிட்டுப் போனா, “பாஸ்.. பத்து டூ ஏழுதான் புக்கிங்கு.. அல்ரெடி நாளைக்கு ஷோ ஃபுல்லு.. நீங்க பொய்ட்டு காலையில வாங்கன்னு தொரத்தி விட்டாய்ங்க.  

இந்த அவமானம் வெளில தெரியாம கிளமிருவோம்னு தியேட்டர்லருந்து வண்டிய எடுத்துக்கிட்டு ஒரு 200 மீட்டர்தான் வந்துருப்பேன்… “பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்” ன்னு கொடகொடன்னு மழை கொட்ட ஆரம்பிச்சிருச்சி. பாதி நனைஞ்சும் பாதி நனையாமையும் ஓரமா ஒரு கடையில நின்னேன்.. மழை விடுற மாதிரி இல்லை. ”நமக்கு எவனோ சூனியம் வச்சிட்டான்… எடுக்குறேன்  சூனியத்த எடுக்குறேன்” ன்னு நினைச்சிட்டு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாம தொப்பலா நனைஞ்சிட்டே வீட்டுக்கு போய்ட்டு இருக்கும்போது தான் வீட்டுல சோப்பும் ஷாம்பும் தீந்துபோனது ஞாபகம் வர ஒரு மெடிக்கல்ல நிறுத்தி சோப்பும் ஷாம்பும் வாங்குனேன். 

அத குடுக்குறப்போ அந்த மெடிக்கல் பாப்பா “என்னண்ணே… மழை வேற பெய்யிது… சோப்பு ஷாம்பெல்லாம் வாங்குறீங்க.. குளிச்சிகிட்டே வீட்டுக்கு போகப்போறீங்களா” ன்னுச்சி.  “சோத்துலயும் அடிவாங்கியாச்சி. சேத்துலயும் அடிவாங்கியாச்சி… ஒரு மனுசனுக்கு எத்தனை அசிங்கம்டா… ச்சை.. “ன்னு நினைச்சிக்கிட்டு வீட்டுக்கு வந்து திரும்ப ஆன்லைன்ல ஓப்பன் பன்னா ஒக்கே ஒக்க டிக்கெட் இருந்துச்சி.. கடவுள் கை உடல கொமாருன்னு நினைச்சிட்டு அப்புறம் அதையே பன்னிட்டேன். மூடிக்கிட்டு மொதல்லையே அத பன்னிருந்தா ஒரு மணிநேரம் வேஸ்ட் ஆகி மழையில நனைஞ்சி ஜல்பு புடிக்காமயாவது இருந்துருக்கும். சரி வாங்க படத்த பாப்போம்.


”நடிச்சா ஹீரோசார்.. நா வெய்ட் பன்றேன் சார்” ன்னு சந்தானம் ஒரு முடிவெடுத்து முழுமூச்சா இருக்காரு. இப்டித்தான் தெலுங்குல சுனில்ன்னு ஒரு காமெடியன். குண்டா கருப்பா காமெடி பன்னிக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தவரு திடீர்னு சிக்ஸ் பேக் வச்சி நா ஹீரோடான்னு வந்து நின்னுட்டாரு. ரெண்டு படமும் ஓடுச்சி. இப்பவரைக்கும் ஹீரோவாதான் மெய்ண்டெய்ன் பன்றாப்ள.  நம்ம சந்தானம் நடிச்ச “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” கூட அந்த சுனில் நடிச்சி ராஜமெளலி இயக்கிய படம்தான்.

நாகேஷ், கவுண்டர், வடிவேலு, கருணாஸ் ன்னு சில நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக நடிச்சி ஒரு சில வெற்றி தோல்விகளுக்குக்கப்புறம் திரும்பவும் நகைச்சுவையாளராகவே தொடர்ந்து வெற்றி பெற்றிருக்காங்க. ஒரு காமெடி நடிகர ஒரு ஹீரோவா அவ்வளவு சீக்கிரம் நம்மளால ஏத்துக்க முடியிறதில்லை. நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுற கதைகள்ல மட்டுமே அவர்களை கொஞ்சம் பொறுத்திப் பாக்க முடியுமே தவிற ரெகுலர் ஹீரோக்களைப் போல திடீர்னு இவங்களும் சீரியஸாக மாறி டூயட், டான்ஸ், ஃபைட்டு, புத்திமதின்னு சொல்றத நம்மாள ஜீரனிச்சிக்க முடியிறதில்லை.

ஆனா சந்தானத்த பொறுத்த மட்டுல அவர ஹீரோவா ஏத்துக்குறதுல என்னைப் பொறுத்த அளவுல தயக்கம் எதுவும் இல்லை. ஏன்னா ஏற்கனவே அவர் காமெடியனா நடிச்சா கூட, எந்த ஹீரோவோட நடிச்சாலும் ஸ்க்ரீன்ல சந்தானத்தோட டாமினேஷந்தான் இருக்கும். வடிவேலுவப் போல எப்பொழுதும் அடிவாங்கி சிரிக்க வைக்காம, ஹீரோவுக்கு ஈக்குவலான கெத்தான கேரக்டர்லதான் நடிச்சிருக்காரு. அதானால காமெடியன் சந்தானத்த ஹீரோ சந்தானமா பாக்குறதுல பெரிய கஷ்டமா எனக்குப் படல.

அதுமட்டும் இல்லாம கெட்டப்பெல்லாம் மாத்தி ஆளு செமயா இருக்காரு. சந்தானத்தோட வாழ்க்கைய செதுக்குனதுல ஒரு முக்கியமான பங்கு இயக்குனர் ராம்பாலாவுக்கு உண்டு. லொல்லு சபா மூலம் சந்தானத்தோட திறமையெல்லாம் உலகத்துக்கு காட்டுனவர் அவர்தான். அதற்கான ஒரு நன்றிக்கடனா கூட இது இருக்கலாம்.

ட்ரெயிலர்லயே கதையயும், இது என்ன மாதிரி படம்ங்குறதையும் சொல்லிருந்தாங்க. ஆவி குடியிருக்க ஒரு காட்டு பங்களா.. யார் அதுக்குள்ள போனாலும் செத்துருவாங்க. அங்க சந்தானத்த உள்ள கொண்டு வந்து பேயக் கலாய்க்கனும். அதுக்கான ஏற்பாடுகள முதல் பாதில பாக்குறாங்க.

வழக்கமான மாஸ் ஹீரோக்களைப் போல ஒரு இண்ட்ரோ சாங்கு… அடுத்ததா காதல்.. காதலுக்காக ஃபைட்டுன்னு இவ்வளவுநாளா சந்தானம் கூட நடிச்ச ஹீரோக்கள் என்ன பன்னாங்களோ அத இப்ப சந்தானம் பன்றாரு. அங்கங்க நிறைய ஒன்லைன் counters சிரிக்க வைக்கிது. ஹீரோயினும் சரி, சந்தானம்-ஹீரோயின் லவ் ட்ராக்கும் சரி செம மொக்கை. இப்பல்லாம் காலேஜ்ல லவ் பன்னிட்டு ரெண்டு வருஷம் ஃபாரின் பொய்ட்டு வந்த புள்ளைங்களே பசங்கள மறந்துரும்ங்க. இதுல தம்மாதூண்டு வயசுல ஸ்கூல்ல படிச்சப்போ சந்தானத்த புடிக்கும்னு, இப்ப தேடிப்போய் காதலை சொல்றதுங்கறதெல்லாம் கப்பி.

முதல் பாதி முழுசுமே கிட்டத்தட்ட லொல்லு சபாவ டிவில பாக்குற ஒரு ஃபீல் தான். சந்தானம் மட்டும் கெத்தா இருக்காரு. மத்தபடி surrounding, மத்த ஆட்கள் எல்லாமே அதே லொல்ளு சபா செட்டு. ஆனா முதல் பாதிய போர் அடிக்குதுன்னுலாம் சொல்ல முடியாது. காட்சிகள் இன்னும் கொஞ்சம் நல்லா பன்னிருக்கலாம்.

மொட்டை ராஜேந்திரன் உள்ள வந்து செகண்ட் ஹாஃப் ஆரம்பிச்சப்புறம் எல்லா சீனும் காமெடிதான். கிட்டத்தட்ட செகண்ட் ஹாஃப்லாம் சுந்தர்.சி  படம் பாத்து நான்ஸ்டாப்பா சிரிக்கிற ரேஞ்சில இருந்துச்சி. இப்பல்லாம் பேய் இல்லாம கூட பேய் படம் எடுப்பாங்க. ஆனா மொட்டை ராஜேந்திரன் இல்லாம பேய் படம் எடுக்குறது ரொம்ப கஷ்டம் போல. மனுஷன் பின்னி எடுக்குறாப்ள. அவரு சாதாரணமா பேசுனாலே throat infection  ஆன மாதிரி தான் இருக்கும். இதுல throat infection ஆயிருந்தப்போ டப்பிங் பேசிருப்பாரு போல. மொத ரெண்டு மூணு காட்சில ஓவர் கரகரப்பு. என்ன பேசுனாருண்ணே புரிய மாட்டுது.

கருணாஸ் வழக்கம்போல அருமை. கூட ஆனந்தராஜூம் சேர்ந்து லூட்டி அடிக்கிறாரு. லொள்ளு சபா மனோகர ஒரே சீனோட கயட்டி விட்டாங்க. இன்னும் ரெண்டு மூணு சீன் யூஸ் பன்னிருக்கலாம். படத்துக்கு இன்னொரு ப்ளஸ் தமன். 3 பாட்டும் நல்லா போட்டுருக்காரு. BGM மும் ஓக்கே. அதே மாதிரி ஸ்டண்டும் நல்லா பன்னிருக்காங்க. சும்மா டமால் டுமீல்னு அடிச்சி பறக்க விடாம, சூப்பரா எடுத்துருக்காங்க.

இயக்குனர் ராம்பாலாவுக்கு கண்டிப்பா நல்லதொரு தொடக்கம். கதை, திரைக்கதையெல்லாம் ரொம்ப சூப்பர்னு சொல்ல முடியாதுன்னாலும் கண்டிப்பா ரெண்டு மணிநேரம் போரடிக்காம உக்காந்து சிரிக்கிற அளவுக்கு நல்லாதான் பன்னிருக்காரு. எவ்வளவுதான் நம்மூர்பானி படங்கள் எடுத்தாலும் ஆங்கிலப்படங்களோட தாக்கம் இல்லாம எடுக்க முடியாது போல. நல்லா போயிகிட்டு இருந்த படத்தோட க்ளைமாக்ஸ்ல நம்ம “Insidious” படத்தோட சீன் ரெண்ட அப்டியே எடுத்து வச்சிருக்காய்ங்க.


மொத்தத்துல ஹீரோவா சந்தானத்துக்கு முதல் முழுமையான வெற்றி. நிச்சயம் படத்த பாத்து சிரிக்கலாம்


Tuesday, July 5, 2016

கவுண்டரின் GAME OF THRONES!!!


Share/Bookmark


இடம்: எமலோகம்

எமலோகம் முழுவதும் கூட்டம் ரொம்பி வழியிது

செந்தில் :ஏய் அடிச்சிக்காம வரிசையில நில்லுங்க….. ஒவ்வொருத்தராத்தான் உள்ள விட முடியிங்.. பொறுமையா இருங்க… பொறுமையா இருங்க” ன்னு கூட்டத்தக் கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கார்.
திடீர்னு  
          ”அண்ட சராசரங்கள் நடுங்கும் பயங்கரண்டா
          அகில லோகத்தையும் காக்கும் எமண்டா…“
ங்குற சத்தம் கேக்க, கவுண்டர் கையில ”கதை” யுடன் வந்து நிக்கிறாரு.

செந்தில்: ”ஏய்.. ப்ரபு வந்துட்டாரு… எல்லாரும் அமைதியா இருங்க…”
இதைக் கேட்ட உடன் கூட்டத்தில் இருந்த அனைவரும் பதறி அடிச்சி  ஒடுறாங்க

செந்தில் : டேய்… பயப்படாதீங்கப்பா.. அவர் ஒண்ணும் கல்யாண் ஜூவல்லர்ஸ் ப்ரபு இல்லை.. எங்க எம தர்மப் ப்ரபு… 
என்று சொல்லிக் சமாதானப்படுத்த,  கவுண்டர் பக்கத்தில் வருகிறார்.

கவுண்டர் : சீனா கூனா… என்ன இன்று எமலோகத்தில் கூட்டம் அலைமோதுகிறது? ஊருக்குள்ள பூகம்பம் எதுவும் வந்துருச்சா?

செந்தில் : ப்ரபு… இதெல்லாம் பூகம்பத்தால் இறந்த கூட்டம் இல்லை. இவங்கல்லாம் Game of Thrones சீரியல்ல செத்துப் போனவங்க.

கவுண்டர் : சீனா கூனா… என்ன பிதற்றுகிறாய்… ஒரு ஊரையே அழைத்து வந்து ஒரு சீரியலில் இறந்தவர்கள் என்கிறாய்…

செந்தில் : ப்ரபோ… நீங்க ரம்பையுடன் உலாவச் சென்றிருந்த இந்த ஆறு வருஷத்தில் நடந்த விபரீதம் இது.

கவுண்டர் : (கோவமாக) நான் இல்லாத சமயத்தில் இப்படி ஆளாளுக்கு சட்டத்தை கையில் எடுத்தால் என்ன செய்வது? அந்த இயக்குனரை இப்போதே என் கதையால் நசுக்கி விடுகிறேன்…

செந்தில் : (மெதுவாக கவுண்டர் காதுக்குள்) ப்ரபு கோபப்படாதீர்கள்… இப்படி எதாவது நடந்தால் நமக்கும்  கொஞ்சம் வேலை கம்மிதானே.. கண்டுக்காதீங்க..

கவுண்டர்: அப்டீங்குறியா.. சரி உடு…

செந்தில் : ப்ரபு.. நீங்கள் போய் உங்கள் இருக்கையில் அமருங்கள் .. நான் ஒவ்வொருவராக அனுப்புகிறேன்.


கவுண்டர் அவரது சிம்மாசனத்தில் சென்று அமர்கிறார்.



முதல்ல வயிறு வழியா கிழிஞ்சி, தொங்குற குடல கையில புடிச்சிக்கிட்டே ரத்தம் சொட்ட சொட்ட ஒருத்தர் வர்றாரு…

கவுண்டர் : சீனா கூனா.. யார் இவன்? கர்பமான காண்டாமிருகத்துக்கு வயித்துல ஆப்ரேசன் பன்ன மாதிரி வந்து நிக்கிறான்.

செந்தில் : அவருதான் ராபர்ட் பெராத்தியன் ப்ரபு

கவுண்டர் : (பெராத்தியன பாத்து ) ஏண்டா வயித்த புடிச்சிக்கிட்டு நிக்கிற?

பெராத்தியன்: வயித்துல பன்னி கடிச்சிருச்சிங்க

கவுண்டர் : (கோவமாக) சீனா கூனா.. என்னிடம் சொல்லாமல் எப்போது நீ பூலோகம் சென்றாய்?!!

செந்தில்: ப்ரபு… அயல்நாட்டு ஆட்கள் முன்னால் என்னை அசிங்கப்படுத்தாதீர்கள்… அவர் சொல்வது உண்மையான பன்றியை

கவுண்டர் : தோம் தாத்தா… பன்னி கடிக்கிற வரைக்கும் என்னடா  பன்னிக்கிட்டு இருந்த?

ரா.பெராத்தியன் : நா ஒரு பெரிய ராஜா ப்ரபு. காட்டுக்கு வேட்டைக்கு போயிருந்தேன். போன இடத்துலதான் பன்னி கடிச்சிருச்சி.

கவுண்டர் : ஏண்டா… ஒரு பன்னி வந்து உன் வயித்துல கொத்து பரோட்டா போட்டு போயிருக்கு.. நீ இன்னும் வெக்கப்படாம உன்னை ராஜான்னு வேற சொல்லிக்கிட்டு திரியிற… சீனா கூனா… இவனை நரகத்திற்கு அனுப்பி விடு. இன்னொரு முறை இவன் வாயால் இவனை ராஜா எனக் கூறிக்கொண்டால் கொதிக்கும் எண்ணையை ஒரு கரண்டி மொண்டு வாய்க்குள் ஊற்றச்சொல்

செந்தில் : அப்படியே ஆகட்டும் ப்ரபு



அடுத்து தலையில்லாத ஒரு முண்டம் ஒண்ணு கவுண்டர் கிட்ட போகுது:

கவுண்டர் : இய்ய்ய்… சீனா கூனா… என்ன இவன் மண்டை இல்லாமல் என் முன் வந்து நிற்கிறான்… யார் இவன்?

செந்தில் : அவர்தான் Ned stark.

கவுண்டர் : நெட் ஸ்டார்க்கா இருந்தா என்ன டோனி ஸ்டார்க்கா இருந்தா என்ன… அதுக்குண்ணு மண்டை இல்லாம வருவானா? போய் மண்டையோட வரச் சொல்லு.. இல்லையென்றால் இவனுக்கு எமலோகத்தில் இடம் இல்லை.

செந்தில்: ப்ரபு… அவரோட எதிரிங்க அவர் தலைய தனியா வெட்டி கம்பில மாட்டிட்டாங்க. இனிமே அதை எடுத்துட்டு வர்றது சாத்தியமில்லாத விஷயம்.

கவுண்டர் : அதுக்குன்னு எமலோகத்துல இப்புடி முண்டமா திரிஞ்சா பாக்குறவங்க நம்மள என்ன நினைப்பாங்க…

செந்தில் : பாவம் ப்ரபு... மிகவும் நல்லவர்.. எதிரிகளின் சூழ்ச்சியால் இப்படி ஆகிவிட்டார். கொஞ்சம் கருணை காட்டுங்கள்

கவுண்டர்: சரி… நீ இவ்வளவு சொல்வதால் விடுகிறேன். இவனை சொர்க்கத்துக்கு அனுப்பி விடு.

என்றதும் நெட் ஸ்டார்க் கையெடுத்து கும்பிட்டு நடந்து போறார். கொஞ்ச தூரம் போனதும், போறவன திரும்ப கூப்பிட்ட்டு

கவுண்டர் : டேய் தம்பி நெட் ஸ்டார்க்கு… எமலோகத்துல டீயெல்லாம் குடுப்பாங்களே.. எப்புடி வாங்கி குடிப்ப?

நெட் ஸ்டார்க் இரண்டு கைகளால் எதோ சைகை காமிக்கிறார்.

கவுண்டர் : அக்காங்…. அதெல்லாம் சரியா வராது. ஒரு பெரிய புனல் ah எடுத்து கழுத்து ஓட்டையில சொருகிக்க.. டீ வந்தா அதுல ஊத்திர சொல்றேன்… சரியா… போம்மா…

என்றதும் நெட் ஸ்டார்க் இன்னொரு வணக்கத்தை வச்சிட்டு கிளம்புறார். 



அடுத்து ஒருத்தர் கொடூரமான முகத்தோட வர்றாரு.

கவுண்டர் : இஹ்ஹ்ஹ்ஹ்… என்ன பாதி வெந்து பாதி வேகாத மூஞ்சோட வந்து நிக்கிறான்… எரிக்கும்போது பாதில எந்திரிச்சி இங்க ஓடி வந்துட்டானா…

செந்தில் : ப்ரபு அவர் தான் க்ளகேன்… சுருக்கமா ஹவுண்டுன்னு கூப்டுவாங்க.

கவுண்டர் : இவன ஹவுண்டுன்னு வேணா கூப்டுக்கட்டும் இல்ல UK பவுண்டுன்னு வேணா கூப்டுக்கட்டும்… இது என்னா மூஞ்சி… இந்த மூஞ்ச வச்சிக்கிட்டு என்ன தைரியத்துல இவன் என்னப் பாக்க வந்தான்.

செந்தில் : அவருக்கு சின்ன வயசுல ஏற்பட்ட ஒரு தீ விபத்துல மூஞ்சி இப்டி ஆயிருச்சி ப்ரபு

கவுண்டர் : ஓ.. சின்ன வயசுலருந்தே இவன் இப்புடித்தான் திரியிறானா? இப்ப தெரியிது ஏன் இவ்வளவு பேர் செத்துருக்கானுங்கன்னு…

செந்தில் : இவர சொர்க்கத்துக்கு அனுப்பவா நரகத்துக்கு அனுப்பவா?

கவுண்டர் : எங்கும் அனுப்ப வேண்டாம்.. அவன திரும்ப Game of Thrones சீரியலுக்கே அனுப்பி விடு

செந்தில் : (ஒரு ஜெர்க் அடிச்சி) ப்ரபு.. என்ன சொல்றீங்க… திருப்பி அனுப்புறதா? 

கவுண்டர்: ஆமாடா சீனா கூனா… இவன் மூஞ்ச நல்லா ஒருதடவப் பாருடா… காலங்காத்தால எழுந்து இவன் மூஞ்ச பாத்துட்டு நா தொழிலுக்கு கிளம்புனா அந்த நாள் விளங்குமா.? அதுக்கு தான் சொல்றேன்.. அனுப்பிரு

செந்தில் : இவன் ஆயுள் முடிந்து விட்டதே ப்ரபு…

கவுண்டர் : டேய்… ஆயில் முடிஞ்சா இன்னும் ரெண்டு லிட்டர் வாங்கி ஊத்தி அனுப்புடா… சீனாக்கூனா… வரவர நீ என் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேசிக்கொண்டிருக்கிறாய். சொல்வதைச் செய்

செந்தில் : அப்படியே ஆகட்டும் ப்ரபு… (ஹவுண்டைப் பார்த்து) நீ திரும்ப Game of Thrones serial க்கே போகலாம்
ஹவுண்ட் நக்கலா சிரிச்சிக்கிட்டே அங்கருந்து அங்கருந்து நகர

கவுண்டர் : டேய் வெந்த மூஞ்சா…. என்னடா சிரிப்பு

ஹவுண்ட் : இல்லை பாதி மூஞ்சோட வந்த என்னையே பாக்க முடியலன்னு திருப்பி அனுப்புறீங்களே… அடுத்து ஒருத்தன் மூஞ்சே இல்லாம வந்துகிட்டு இருக்கான்.. அவன என்ன பன்னப்போறீங்களோன்னு நினைச்சி சிரிச்சேன்ன்னு சொல்லிட்டு ஹவுண்ட் அந்த இடத்த விட்டு நகர

ப்ரின்ஸ் ஓப்ரைன் அடுத்ததாக கவுண்டரை நோக்கிச் சென்றார்….

(அடுத்த பதிவில் தொடரும்)




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...