Tuesday, February 5, 2019

வந்தா ராஜாவாத்தான் வருவேன்..!!!



ஒரு திரைப்படம் உருவாகும்போது அது எந்த மொழியில் உருவாகுது, எந்த வட்டாரதை சார்ந்து உருவாகிறது, என்ன மாதிரி ரசனை உடைய மக்களை சென்று சேரப்போகிறது அப்டிங்குறதயெல்லாம் மைண்ட்ல வச்சித்தான் காட்சிகள் அமைக்கப்படும். அதெ ஒரு படத்த மொழியிலருந்து இன்னொரு மொழிக்கு ரீமேக் பன்னும்போது அந்த மொழிக்கு ஏற்ற மாதிரி ஒரு சில மாற்றங்களைச் செய்வது அவசியம். அப்படி மாற்றங்களை காணாத படங்கள் நிச்சயம் தோல்வியைத்தான் சந்திக்கும். 

ஒரு நல்ல ரீமேக், மோசமான ரீமேக் ரெண்டுக்குமே டபாங் ஒரு பட்த்தை உதாரணமா எடுத்துக்கலாம். ஒரே படம் தமிழ்லயும் ரீமேக் செய்யப்படுது. தெலுங்குலயும் ரீமேக் செய்யப்படுது. தமிழ்ல அட்டர் ஃப்ளாப்.. தெலுங்குல ஒரிஜினல் டபாங்க விட மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட். காரணம் மேல சொன்னதுதான். தெலுங்குல அந்தப் படம் அந்த மக்களுடைய ரசனைக்கு ஏற்ற மாதிரி தேவையான மாற்றங்கள் செய்யப்பட்ட்து. தமிழ்ல அது செய்யல. சரி இப்ப இந்த வந்தா ராஜாவாத்தான் வருவேன் எப்டி இருக்குன்னு பாப்போம்.

படத்தோட கதை ஏற்கனவே தெரிஞ்சிருக்கும். சின்ன வயசுல கோச்சிட்டு போன அத்தைய சமாதானம் பன்னி கூட்டிட்டு போக வெளிநாட்டுலருந்து இந்தியா வர்ற ஹீரோ என்னெல்லாம் பன்றாருன்றது தான் ஒன்லைன்.

நல்ல படங்களை நாசம் செய்வது எப்படின்னு ஒரு புத்தகம் எழுதுனா இந்த வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்த ஒரு முக்கியமான கேஸ் ஸ்ட்டியா எடுத்துக்கலாம். ஒரு ரீமேக்க எப்டியெல்லாம் பன்னக்கூடாதோ அப்டியெல்லாம்  அத்தனையும் ஒரே பட்த்துல பன்னி வச்சிருக்காங்க. அத்தனை ரெக்கார்டுகளையும் உடைச்ச ஒரு படத்த ரீமேக்குன்ற பேர்ல கொத்துக்கரி போட்டு வச்சிருக்காங்க.

வீடியோ விமர்சனம்



ஒரிஜினலுக்கு ரீமேக்கும் என்ன வித்யாசம்? என்ன ப்ரச்ச்னை? முதல் ப்ரச்சனை படத்தோட காஸ்டிங். அத்தாரிண்டிக்கி தாரெதி படத்தோட ரீமேக்குக்கு தமிழ்ல கரெக்டான ஒரு ஹீரோ விஜய் மட்டும்தான். வேற யாரயும் நினைச்சுக் கூட பாக்க முடியாது. விஜய் கூட பவன் கல்யாண 100% ரீப்ளேஸ் பன்ன முடியாது. கண்டிப்பா ஒரு அதுல ஒரு 80% ஒர்க் அவுட் ஆயிருக்கும். அத சிம்பு பன்னது முதல் ப்ரச்சனை…  ஆயிரம் கோடி ரூபா சொத்துக்கு வாரிசு அப்டிங்குற கெத்து பவன் கல்யாணோட முகத்துல பாடி லாங்குவேஜ்ல , வசன உச்சரிப்புல அசால்ட்டா தெரியும். அந்த சிம்புகிட்ட கொண்டு வரவே முடியல. அவர் ஒரு ரிச் boy அப்டிங்குறத காட்ட உள்ள பனியன் போட்டு மேல ஓரு சட்டை எக்ஸ்ட்ரா போட்டுருக்காரு அவ்வள்வுதான். அந்த கெட்டப்புல சிம்பு படம் முழுக்கவே க்ளைமாக்ஸ்ல வர்ற ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மாதிரி இப்டியேதான் இருக்காரு.

அது மட்டும் இல்லாம ஹீரோ கதாப்பாத்திரம் சில இட்ங்கள்ல கேஷுவலா பேசனும். சில இடங்கள்ல காமெடியா பேசனும். சில இடங்கள்ல கோவப்பட்டு பேசனும். சில இடங்கள்ல செண்டிமெண்ட்டா பேசனும். ஆனா சிம்பு அனைத்து சிட்சுவேஷன்கள்லயும் ஒரே மாதிரிதான் பேசுறாரு. ஒரே ஸ்க்ரிப்டுல ஒரு ஹீரோ என்ன மாதிரியான ஒரு impact ah குடுக்க முடியும் அப்டிங்குறதுக்கு உதாரணமா இந்த அத்தாரிண்டிக்கு தாரெதியையும் வந்தா ராஜாவாத்தான் வருவேனையும் எடுத்துக்கலாம்.

இந்த தற்பெருமை பேசியா சாகடிக்கிற கூட்டம் ஒண்ணு இருக்குல்ல. அவய்ங்களுக்கு ஒரு சங்கம் வச்சா சிம்புவமும் அவங்க டாடியையும்தான் தலைவராப் போடனும். நூறு ஹிட்டு குடுத்த ரஜினி கமலே அவங்க தற்பெருமைய படத்துல பேசுறதில்லை. இவரு என்னான்னா எல்லா பட்த்துலயும் மன்மதன்… வல்லவன்…. சரி அடுத்து.. மன்மதன்.. வல்லவன்… சர்றா.. அடுத்து.. மன்மதன்… பதினைஞ்சி வருசமாச்சி நடிக்க வந்து… மன்மதன் வல்லவன் படத்த தவற பேர் சொல்ற அளவுக்கு கூட வேற படம் இல்ல… இதுல எனக்கா ரெட் கார்டு எடுத்துபார் ரெக்கார்டாம்… படம் எதுவும் ஓடாதப்பவே இந்தப்பேச்சுன்னா நாலஞ்சி படம் நல்லா மட்டும் ஓடிருந்தா.. இத்த்தான் ஆட்டுக்கு வால ஆண்டவன் அளந்துதான் வச்சிருக்கான்னு சொல்லுவாங்க ஊருக்குள்ள.

குறுகிய காலத்துக்குள்ளயே சிம்புவோட வளர்ச்சி ப்ரம்மிக்க வைக்கிது.ரொம்ப ஷார்ட் பீரியட்ல ஒரு நாலஞ்சு சுத்து பெருசாயிருக்கது பெரிய விஷயம் தான். டைட்டில் போடும்போது அப்டியே சிம்புவ freeze பன்னி அப்டியே பெய்ண்டிங்க் மாதிரி காமிப்பாங்க.  ஆஹ்.. வரவர மூஞ்சி டாடி மாதிரியே ஆயிட்டு இருக்கே.. படம் முழுக்கவே பாத்தா சிம்பு க்ளைமாக்ஸ்ல வர்ற ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மாதிரி தான் வர்றாரு.

நா சுந்தர்.சி ய ரொம்ப நம்பி இருந்தேன். எப்டியும் நம்மாளு காமெடில கலக்கிருப்பாருன்னு. மெகா சொதப்பல். இந்த ஷூட்டிங் எடுக்கும்போது ஃப்ரேம்ல எதாவது எம்ப்டி ஸ்பேஸ் இருந்தா அங்க எதாவது ப்ராப்பர்ட்டிய வச்சி ஃபில் பன்னிக்குவாங்க. இப்ப வர்ற படங்கள்ல அந்த கேப்ப ஃபில் பன்ற ப்ராப்பர்ட்டியாத்தான் ரோபோ ஷங்கர யூஸ் பன்றாங்க. ஃப்ரேம்ல கேப் விழுகுதா.. அப்ப ரோபோ ஷங்கர தூக்கி அங்க நிக்க வைய்யி.. அவ்ளோதான். அவருக்கு காமெடியும் வர மாட்டேங்குது.. சீரியஸாவும் வர மாட்டேங்குது. யோகிபாபு வந்தப்புறம் ஓரளவு சிரிப்பு வருது. சிம்பு உருப்புடனும்னா சில தீய சக்திகள்கிட்டருந்து முதல்ல வெளிய வரனும். அதுல முதல் தீய சக்தி VTV கணேஷ்..

 சிம்பு எப்டி VTV கிட்டருந்து வெளிய வரனுமோ அதே மாதிரி சுந்தர்.சி ஹிப்ஹாஃப் ஆதிகிட்டருந்து வெளிய வந்தா அவருக்கு நல்லது.  இந்தப் பட்த்த கொத்துக்கறி போட்ட்துல மிக முக்கியமான பங்கு ஆதிக்கு உண்டு. DSP ய கிண்டல் பன்றவங்க இந்தப் பட்த்த பாத்துட்டு இதோட ஒரிஜினல ஒருதடவ பாருஙக். கால்ல விழுந்து கும்புடுவீங்க.

இதுவரைக்கும் லைக்கா பன்னதுலயே இத வந்து ஒரு வெய்ட்டான ப்ராஜெக்ட்ன்னு சொல்ல்லாம். ப்ரபு , ரோபோ ஷங்கர், யோகிபாபு, சிம்பு இவங்களோட வெய்ட்டு மட்டுமே கிட்டத்தட்ட ஒரு டன்னுக்கு மேல இருக்கும்.  சந்தான பாரதியல்லாம் நடிக்க வைச்சிருந்தா இன்னும் கூட வெய்ட்டான படமா அமைஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு.

சிம்பு இப்ப திரும்ப தொடர்ந்து நடிக்க ஆரம்பிச்சிருக்கத்து மகிழ்ச்சி… இவ்வாறாகச் செய்து வந்தால் ஒரு நாலஞ்சி பட்த்துல எதாவது ஒரு படம் ஹிட் ஆகுறதுக்கு வாய்ப்பு நிறையா இருக்கு. ஏன்னா நமக்கே தெரியாம சில சமயம் நல்ல ஸ்க்ரிப்ட் வந்து மாட்டும். விஜய் சேதுபதிக்கெல்லாம் அப்டித்தான். வருசம் பத்து படம் நடிக்கிறாரு. பத்துல அவருக்கே தெரியாம ஒரு ரெண்டு ஸ்க்ரிப்ட் நல்ல ஸ்க்ரிப்ப்டா மாட்டிக்கிரும். அப்டியே பெரியாளா ஃபார்ம் பன்னி வண்டிய ஓட்டிரலாம்.

மொத்தத்துல முதல் பாதிய விட ரெண்டாவது பாதி கொஞ்சம் பரவால்லன்னு படம் பாத்த சில பேரு சொன்னாங்க. ஆனா எனக்கு ரெண்டு ஆஃபுமே ஒரே மாதிரி தான் இருந்துச்சி. என்னைப் பொறுத்த அளவு ஒரு சுந்தர்.சி ரசிகனாவும் சரி, அத்தாரிண்டிக்கி தாரெதி ரசிகனாவும் சரி மிகப்பெரிய ஏமாற்றம்.

7 comments:

  1. விஜய் மாதிரி ஒரு மாஸ் உள்ள ஸ்டார் பண்ணி இருக்க வேண்டிய படம்.கரெக்ட்டா சொன்னீங்க... சிம்பு மாஸ் ஹீரோ டயலாக் பேசினாலும் மக்கள் அவரை அப்படி நினைக்கலியே.. முகம் பூசணிக்காய் மாதிரி வேற ஆகிடுச்சு. இனி தொடர்ந்து பதிவுகள் போடுங்க பாஸ். தினமும் செக் பண்ணி பார்த்து டயர்டு ஆகிட்டேன்

    ReplyDelete
  2. Adikadi review podunganna plzzzzzz

    ReplyDelete
  3. Adikadi review podunganna plzzz

    ReplyDelete
  4. Adikadi review podunganna plzzzz

    ReplyDelete
  5. நல்லவேள டைட்டில் முடிஞ்சிதான் போனேன்.

    ReplyDelete
  6. Adikadi post podunga plz

    ReplyDelete