Monday, October 14, 2013

சச்சின் என்னும் சரித்திரம் – ஆரம்பம்!!!


இவனுகளுக்கு வேற வேலையில்லப்பா… எழுதுறதுக்கு எதுவும் கிடைக்கலன்னா உடனே சச்சினை பத்தி எழுத ஆரம்பிச்சிடுவாய்ங்க ன்னு நீங்க சலிச்சிக்கிறது எனக்கும் புரியிது. இணையத்துல சச்சினைப் பத்தியும் அவரோட சாதனைகளை பத்தியும் இருக்க லட்சக்கணக்கான பதிவுகள்ல இதுவும் ஒண்ணா இருந்துட்டு போவுது விடுங்க. யாருக்கும் தெரியாத விஷயங்கள் எதயுமே இதுல சொல்லப்போறதில்லை. உங்களப்போல நானும் அவரைப் பத்தி பார்த்த படிச்ச சில விஷயங்களோட தொகுப்பாகவே இதனை எழுதுறேன். நமக்கு பிடிச்ச ஒருத்தர அடுத்தவங்க புகழும்போது எத்தனை தடவ வேணாலும் சலிக்காம கேட்டுக்கிட்டே இருக்கலாம். இந்த சின்ன உதாரணத்தோட ஆரம்பிக்கிறேன். 

ரஜினிகாந்த் ஒருதடவ அமிதாப்கிட்ட “எனக்கு உலகத்துல உள்ள எல்லாருமே நல்ல பழக்கப்பட்டவங்க “ ன்னு பெருமையா சொல்லிட்டு இருந்துருகாரு. உடனே அமிதாப் இத டெஸ்ட் பண்ணி பாக்கலாமேன்னு “சரி உங்களுக்கு Tom cruice ah தெரியுமா?” ன்னு கேக்க உடனே ரஜினி “நல்லா தெரியுமே… அவன் நம்ம பய தான்” ன்னாரு.

உடனே ரெண்டு பேரும் டாம் க்ரூஸ் வீட்டுக்கு போய் காலிங் பெல்ல அடிக்க கதவைத் திறந்த டாம் க்ரூஸ் ரஜினிய பாத்து ஷாக் ஆயி “தலைவா… what a surprise… என்ன திடீர்னு வந்துருக்கீங்க.. ஃபோன் பண்ணிருந்தா நானே வந்துருப்பேனே” ன்னு கதற ஆரம்பிச்சிட்டாப்ள… 
 
இதப் பாத்த அமிதாப் “சரி எதோ ஃப்ளூக்ல க்ளிக் ஆயிருச்சி… அடுத்து இன்னொருத்தர வச்சி டெஸ்ட் பண்ணுவோம்னு “உங்களுக்கு ஒபாமாவ தெரியுமா ரஜினி?” ன்னு கேக்க

“என்ன இப்டி கேட்டுட்டீங்க.. நாங்க ரெண்டு பேரும் ஃபேமிலி ஃப்ரண்ட்ஸ்” ன்னு சொல்லிட்டு ஒபாம வீட்டுக்கு போக ரஜினிய பாத்த ஒபாமா “வாவ்… உங்களுக்கு நூறு ஆயுசு ரஜினி… இப்பதான் உங்களுக்கு கால் பண்ணலாம்னு ஃபோன் எடுத்தேன் அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க… வாங்க லஞ்ச்ல வந்து ஜாயின் பண்ணிக்குங்கன்னு சொல்லி சாப்ட கூப்டுகிட்டாரு…

அமிதாப் கொஞ்சம் டர்ர்ர் ஆகி சரி கடைசியா ஒரு பெரிய ஆப்பா வப்போம்னு நெனைச்சி “உங்களுக்கு போப்ப தெரியுமா ரஜினி” ன்னு கேக்க
“ரொம்ப நல்லாவே தெரியும்… போன மாசம் கூட வீட்டுக்கு வந்துட்டு போனாரு” ன்னு சொல்லி போப்ப பாக்க வாட்டிகன் கெளம்பி போனாங்க…
வாட்டிகன் சர்ச் முன்னால ஒரே கூட்டமா இருக்க, அமிதாப் கிட்ட ரஜினி “அமிதாப் நீங்க இங்கயே இருங்க… நா உள்ள பொய்ட்டு போப் கூட பால்கனில வந்து நிக்கிறேன்” ன்னு சொல்லிட்டு உள்ள பொய்ட்டு கொஞ்ச நேரத்துல போப் கூட வெளில வந்து பால்கனில நின்னாராம். வெளில ஒரே கூட்டமா இருக்க என்னன்னு பாத்தா அமிதாப் மயங்கி  விழுந்து கிடந்துருக்காரு..

“என்ன அமிதாப் என்னாச்சி… ஏன் மயக்கம் போட்டீங்க?” ரஜினி கேக்க
“இல்லை ரஜினி… நீங்க போப் கூட வெளில வந்தப்போ கூட எனக்கு பெருசா எதுவும் தெரியல.. ஆனா அப்போ கூட்டத்துலருந்த ஒருத்தன் “ரஜினி கூட ஒருத்தர் நிக்கிறாரே யாரு அவரு? ன்னு ஒரு கேள்வி கேட்டான்.. அதக் கேட்டதும் தான் எனக்கு தலையே சுத்தி மயக்கம் போட்டுட்டேன்” னாராம்.

ஏன் இப்போ இத சொன்னேன்னா, இந்த ஜோக் இதுவரைக்கும் எனக்கு ஒரு பத்து தடவ forward மெயிலா வந்துருக்கும். ஆனா ஒவ்வொரு தடவையும் இத ஒரு வரி விடாம ஃபுல்லா படிச்சி எதோ புதுசா படிக்கிற மாதிரி படிச்சி சந்தோஷப் படுவேன். அதே மாதிரி தான் சச்சினை பத்தின நல்ல விஷயங்களை எவ்வளவு படிச்சாலும் பாத்தாலும் bore அடிக்காதுங்கற நம்பிக்கையில இத பதிவ ஆரம்பிக்கிறேன். 

சச்சின்ங்கற ஒருத்தருக்கு எப்பவுமே மக்கள்கிட்ட ஒரு தனி இடம் உண்டு. நல்லா யோசிச்சி பாருங்க… இதுவரைக்கும் நீங்க ஒரு ஸ்கோர் கார்ட பாக்கும் போது யரோட ஸ்கோர முதல்ல பாப்பீங்க? ஃப்ரண்ட்ஸ்கிட்ட கேக்கும் போது யாரோட ஸ்கோர முதல்ல கேப்பீங்க? “மச்சி… மேட்ச் என்னடா ஆச்சி? என்னது நூத்தி இருவதுக்கு மூணு விக்கேட்டா? சச்சின் எவ்ளோடா?” இதுதான் நம்ம அடுத்த கேள்வி.  மொதல்ல ட்ராவிட் எவ்ளோன்னோ இல்லை கங்குலி எவ்வளவு அடிச்சாருன்னோ நாம யாரும் எப்பவும் கேட்க மாட்டோம். அது தான் சச்சினுக்கு இருக்க ஒரு பெரிய பவர்.

எதிர்பார்ப்புங்கறது மனுஷனுக்கு மனுஷன் மாறுபடும். ஆனா சச்சின் ங்கற ஒருத்தர பொறுத்த அளவு எல்லாரோட எதிர்பார்ப்பும் ஒண்ணே ஒண்ணு தான். ஒரு சின்ன உதாரணம். நா காலேஜ் படிச்சிட்டு இருக்கும் போது ஒரு மேட்ச்… சச்சின் 65 ரன்ல அவுட் ஆயிட்டாரு. பக்கத்துல இருந்தவன் அசிங்க அசிங்கமா திட்ட ஆரம்பிச்சிட்டான். ‘என்னடா இவன் லூசு மாதிரி அவுட் ஆயிட்டு போறான்… வேஸ்டுடா” அது இதுன்னு என்னென்னவோ திட்ட ஆரம்பிச்சிட்டான். 

“என்னாச்சி மச்சி.. 65 ரன் எடுத்துத்துட்டு தானடா போறாரு.. ஏன் இப்டி திட்டுற?”ன்னேன்

“டேய் 65 ரன்னு யாரு வேணாலும் அடிப்பாங்கடா… யாருடா அவரு? சச்சின்.. நூறு அடிச்சா தாண்டா அது சச்சின்” ன்னான். 

என்னால எதுவும் பேச முடியல. நா சொல்ல வந்தது இதே தான். நம்ம மக்களோட எதிரிபார்ப்பு எல்லாமே இது தான்.

      1.  சச்சின்ங்கறவரு விளையாடுற அத்தனை மேட்ச்லயுமே சதம்   
       அடிக்கனும் 
       2.  50 ஓவரும் அவுட் ஆகாம வெளையாடனும் 
       3. ஜெயிக்கிற வரைக்கும் நின்னு விளையாடனும்

இவ்வளவு தான் நம்மளோட எதிர்பார்ப்பு. மத்தவிங்க அடிச்சாலும் சரி… அடிக்காட்டாலும் சரி.. அதப்பத்தி எந்த கவலையும் இல்லை. இந்த எதிர்பார்ப்பு ஒண்ணு ரெண்டு நாள்லயோ, இல்லை நாலு அஞ்சி செஞ்சுரி மட்டும் அடிக்கிறதாலயோ ஒருத்தனால கொண்டு வந்திட முடியாது. தல சொல்ற மாதிரி “அவர் வாழ்க்கையில ஒவ்வொரு மேட்சும் ஒவ்வொரு சதமும் ஒவ்வொரு ரன்னும் அவரா செதுக்குனது” 



அவர் ஒவ்வொரு ball ah ஃபேஸ் பண்ணும் போதும் நமக்கு ஹார்ட் பீட் ரேட் எப்டி இன்கிரீஸ் ஆகும்னும், அதே ball ah ஃபோருக்கோ சிக்ஸூக்கோ அடிச்சப்புறம் நமக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும்னும் அத அனுபவிச்சவங்களுக்கு மட்டுமே தெரியும்.

நம்மாளுங்களுக்கு இந்த சிறுபிள்ள தனமான நம்பிக்கைங்கறது ரொம்பவே அதிகம். அது ஒருவிதமான ஜாலியும் கூட. கொசு கடிக்குதேன்னு ஒருத்தன் அடிக்கிறதுக்காக கைய தொடைகிட்ட கொண்டு போவான். அந்த நேரம் பாத்து நம்மாளு ஃபோர் அடிச்சிடுவாரு. சூப்பர்… இங்க கைய வச்சாதாண்டா தலைவருக்கு செண்டிமெண்டு போலருக்குன்னு அவரு அடுத்த ஒவ்வொரு ball ah ஃபேஸ் பண்ணும் போதும் அவன் கொசு அடிக்கிற மாதிரியே கைய கொண்டு போவான். எதுக்கு? அவர் அடிக்கனும்ங்கறதுக்கு தான். 

இது கூட பரவால்ல.. சவுத் ஆஃப்ரிக்கா மேட்ச்ல சச்சின் 200 அடிச்சப்போ தெரியாத் தனமா ஒருத்தன் தலைய சொறியும் போது ஃபோர் அடிச்சிட்டாரு. அவ்வளவு தான். அதுக்கப்புறம் போட்ட ஒவ்வொரு பாலுக்கும், 50 ஓவரும் அவன் தலைய சொறிஞ்சிட்டே தான் இருந்தான். ஒர்க் அவுட் ஆயிருச்சில்ல.. அடிச்சாருல்ல 200… இந்த “மாதிரி சிறுபிள்ளை தனமான நம்பிக்கையல்லாம் அப்டியே விட்டுடனும்.. அதுக்கு பகுத்தறிவே ஊட்டி ஊட்டி ரொம்ப உள்ள போன வாழ்க்கே கசந்திடும்” ன்னு இன்னொரு கடவுள் சொல்லிருக்காரு. 

சச்சினுக்கு மக்கள்கிட்ட இவ்வளவு மரியாதை இருக்க இன்னொரு காரணமும் இருக்கு. அதுக்கு முன்னால வரைக்கும் ரேடியோ வழியாக மட்டுமே கிரிக்கெட்டை பத்தி கேட்டு வந்த மக்கள் கிரிக்கெட்டுன்னு ஒரு விளையாட்ட டிவி வழியா பாக்க ஆரம்பிச்சதே என்பதுகளோட இறுதிலதான். டிவிங்கற ஒரு விஷயம் எல்லா மக்களிடமும் ஊடுருவிய காலத்துல அனைவராலும் அறியப்பட்ட முதல் ஹீரோ சச்சின். அன்று முதல் இன்று வரை எல்லா மக்களுக்கும் பிடித்தமானவராக இருக்கும் ஒரே ஹீரோவும் சச்சின் ஒருவர் மட்டும் தான். 

அந்த ஹீரோவப் பற்றிய உங்களுக்கு தெரிந்த சில விஷயங்களையும், தெரியாத சில விஷயங்களையும் இந்த தொடர் பதிவின் மூலமா கொஞ்ச நாள் தொடரலாம்னு ஆசைப்படுறேன். முடிஞ்ச அளவு சுவாரஸ்யமாக தொடரவும் முயற்சி செய்றேன்.

(சரித்திரம் தொடரும்)

3 comments:

  1. உலகில் கிரிக்கெட் ஒரு மதம் எனில் சச்சின் அதன் கடவுள். இது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை அல்ல. முற்றிலும் உண்மையே.

    http://quarrybirds.blogspot.in/2013/10/blog-post_11.html?showComment=1381812525301#c7393480161552880349

    ReplyDelete
  2. வணக்கம் அன்புடையீர்,

    ஒம் அகத்திசாய நம !!!

    கருணை உள்ளம் கொண்ட கும்ப முனியின் அருளால் வைகாசி வளர்பிறையில் இருந்து, கோயம்புத்தூர் அருகே உள்ள கல்லார் அகத்தியர் ஞான பீடத்தில் அகத்தியர் ஜீவ அருள் நாடியில் அருள்வாக்கு வருவதாக தகவல் உறுதி படுத்தப்பட்டு உள்ளது.

    தொடர்பிற்கு மாதாஜி சரோஜினி - 9842550987

    கல்லார் அகத்தியர் ஞான பீட முகவரி :
    Sri Agathiar Gnana peedam
    2/464-E, Agathiar Nagar,Thoorippalam
    Kallar-641305,Mettupalayam,Coimbatore Dt, Tamilnadu, India
    PH:98420 27383, 98425 50987.
    ( மேட்டுப்பாளையம் to ஊட்டி மெயின் ரோட்டில், மேட்டுப்பாளையத்தில் இருந்து 10 வது கிலோமீட்டரில் கல்லார் உள்ளது. )

    நாடி பார்க்கும் நாள்:சனிக்கிழமை மட்டும்
    நேரம் :9 மணி முதல் 2 மணி வரை
    கட்டணம்:500/- ரூபாய்.
    ஒம் அகத்திசாய நம !!!
    ஒம் அகத்திசாய நம !!!
    ஒம் அகத்திசாய நம !!!

    ReplyDelete
  3. Sarithiratham appdiye ninnu poche??? eppa thodrauveenga

    ReplyDelete