Friday, March 14, 2014

நானும் ரஜினி ரசிகன் தான்.. ஆனா.....!!!! (201)

நானும் ரஜினி ஃபேன் தாங்க.. போன படம் எவ்வளவு சூப்பரா இருந்துச்சி.. ஆனா இந்த படம் எனக்கு  அவ்வளவா புடிக்கலங்க.. என்னங்க ரஜினி எப்பவும் கை கால ஆட்டி ஸ்டைல் பண்ணிட்டு மட்டுமே நடிச்சிகிட்டு இருக்காரு. ஒரு வித்யாசமான ரோல்ல நடிச்சா தான நல்லாருக்கும். அட என்னங்க.. இந்த படத்துல ரஜினி ஸ்டைலே இல்லீங்க. அவர்ட புடிச்சதே அந்த ஸ்டைல்தான். அது இல்லாம படம் எடுத்தா எப்டிங்க பாக்குறது. என்னடா மாறி மாறி உளருறானேன்னு பாக்குறீங்களா? இப்புடி உளருறதெல்லாம் நா இல்லீங்க. "நானும் ரஜினி ரசிகன் தான்"ன்னு சொல்லிகிட்டு சுத்திகிட்டு திரியிற சில ஜந்துக்கள். சிவாஜி வரும் போது படையப்பா சூப்பர்ங்க,, இது அவ்வளவு நல்லா இல்லைன்னு சொல்லுவாய்ங்க. எந்திரன் வரும்போது அட
சிவாஜி எவ்வளவு செம்மையா இருந்துச்சி இந்த படத்துல ரஜினி மாதிரியே இல்லீங்கம்ப்யாங்க. ஒவ்வொரு  ரஜினி படம் வரும் போதும் அதற்கு முந்தைய படம் அவர்களுக்கு மிகவும் பிடிச்சிருந்ததாகவும் இப்போ
ரீலீஸ் ஆவுற படம்தான் இவுகளுக்கு பிடிக்காத மாதிரியும் சீன் போட்டுகிட்டு திரியிறவிங்கதான் இந்த "நானும் ரஜினி ரசிகன் தான் சார்" குரூப்பு.

அதாவது ஒவ்வொரு படம் வரும்போதும் அது நல்லாருக்குன்னு பகிரங்கமா ஒத்துக்க முடியாத சில அந்நியர்களோட முட்டாள் தனமான பேச்சுக்கள்தான் இதெல்லாம். எதாவது குறை சொல்லனும். சரி சும்மா சொல்லி வைப்போம் அப்டின்னு அந்த படம் சூப்பர்ங்க பத்து வருசம் முன்னால வந்த படம் சூப்பர்ங்கன்னு எதாயாவது சொல்லிக்கிட்டு திரிய வேண்டியது.

மத்த நடிகர்களோட ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் ஒரு பெரிய வித்யாசம் இருக்கும். ஒருத்தன் ரஜினிக்கு ரசிகனாயிட்டான்னா அதுக்கப்புறம் அவன் மாறமாட்டான். ஆனா மத்த நடிகர்களுக்கு அப்படி இல்லை. எங்க கம்பெனியில அஜித் ஃபேன் ஒருத்தன் இருந்தான். ஒரு நாள் ஆஞ்சனேயா படத்த வச்சி அவன ஓட்டும் போது "ஹலோ.. ஆஞ்சனேயா படம் வரும் போது நா ஒண்ணும் அஜித் ஃபேன் இல்லீங்க. அப்போ நா விஜய் ஃபேன்" ன்னான். எனக்கு தூக்கி வாரிப்போட்டுருச்சி. ஏண்டா என்னடா நம்ம அரசியல் கட்சிகள்
எலெக்சனுக்கு எலெக்சன் மாறி மாறி கூட்டணி வக்கிற மாதிரி ஆயிட்டீங்க. ஆனா இதுக்கு காரணம் வேற ஒண்ணும் இல்லை. யாராவது ஒருத்தரோட ரசிகனா ஃபார்ம் ஆயிட வேண்டியது. அப்புறம் அவனோட நாலு படம் மட்டையானோன பொத்துனாப்புள எவன் படம் ஓடுதோ அவன் பக்கம் திரும்பிக்க வேண்டியது.

ஆனா அன்னையிலிந்து இன்னிக்கு வரைக்கும் ரசிகர்கள ஏமாத்தாத ஒரே ஆள் தலைவர் தான். அவர் ரசிகர்களா இருக்கும் போது வேற ஒருத்தன நெனைச்சு கூட பாக்க முடியாது. எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. நா ரெண்டாவது படிக்கும் போது (இப்போ வரைக்கும் நீ அவ்வளவு தானடா படிச்சிருக்க) கஷ்டப்பட்டு ஏழு ரூவா சேத்து பக்கத்து வீட்டு அண்ணன்கிட்ட சொல்லி ருத்ராட்சை வாங்கி போட்டேன். ஆனா ரெண்டு நாள்ல எங்க சார் பொடனில தட்டி அத கழட்ட சொல்லிட்டாருங்கறது வேற விஷயம். அன்னிக்கு ஆனா அவர எந்த அளவு புடிச்சிதோ இப்போ வரைக்கும் அத விட பல மடங்கு அதிகமா புடிக்கிதே தவற கொஞ்சம் கூட குறையல.


ரஜினியைப் பிடிக்காதவர்கள்ன்னு யாரும் இருக்க முடியாது. பிடிக்காதது போல காட்டிக்கொள்ள விரும்பும் சில பேருதான் இந்த மாதிரி உளரிக்கிட்டு இருக்காய்ங்க. இப்போ இந்த மாதிரி ஆளுங்களுக்கு இன்னொரு வயித்தெரிச்சல் சேந்து வந்துருச்சி. சில உலகநாயகர்களோட படங்கள் உள்ளூரக்கூட தாண்ட முடியாத சமயத்தில motion capturing ங்குற அடுத்த கட்ட சினிமாக்குள்ள தலைவர் நுழைஞ்சிட்டது பலபேரால பொறுக்க முடியல. அதுவும் என்னடா ஆறாயிரம் தியேட்டருங்குறாய்ங்க, 10 மொழில ரிலீசுங்குறாய்ங்க அப்போ இப்போலருந்தே  ஆரம்பிப்போம்னு கோச்சடையான் இசையிலருந்து வேலைய ஆரம்பிச்சிருக்காய்ங்க. ஏ.ஆர்.ரஹ்மான் இத விட கேவலமா மீயூசிக் போட்டதே இல்லையாம். ஏண்டா டேய்.. ஒரு period film க்கு இத விட சூப்பரா போடமுடியுமான்னு தெரியல. விட்டா குத்து பாட்டே இல்லைன்னு குறை சொல்லுவாய்ங்க போல.

இவிங்க என்ன நம்பிக்கையில இருந்தாய்ங்ன்னா.. அந்தப் புள்ள சவுந்தர்யா முன்னால சுல்தான்னு ஒரு படம் எடுத்துச்சி. அது அப்டியே ஆஃப் ஆயிருச்சி. அதே மாதிரி இதயும் கொஞ்ச நாள்ல ஊத்தி மூடிருவாய்ங்கன்னு நெனைச்சிட்டு இருந்துருப்பாய்ங்க போல. ட்ரெயிலர பாத்தே மெரண்டுட்டாய்ங்க. இந்தப்படம் ரிலீஸ் ஆனாலே நீங்கல்லாம் வாழ்க்கைல அப்புறம் ரஜினிய பத்தியே பேசக்கூடாதுடா.

அப்புறம் இந்த வட இந்திய காரய்ங்க.. நாம முப்பது வருசத்துக்கு முன்னால பாத்த படத்தயெல்லாம் இப்போ ரீமேக் பண்ணி பாத்துகிட்டு இருக்காய்ங்க. அவிங்களுக்கு பேச்சு. அனிமேஷன் சரியில்லையாமா. அவதார் அளவுக்கு இல்லையாமா. டின் டின்ல மூஞ்சி நல்லா தெரியிதாமா.. கோச்சடையான்ல அந்த அளவுக்கு இல்லியாமா.  டேய் அவதார் கூட கம்பேர் பண்றதுக்கு கூட ஒரு ரேஞ்ச் வேணும்டா.  நாங்க உங்க ஊர்ல படத்த ஓட்ட சாருக்கான நடிக்க வைக்க  தேவையில்லை. ஆனா நீ எங்க ஊருக்குள்ள நுழையனும்னாவே ரஜினி பேர சொன்னா தான் முடியும். அதான்டா ரஜினி.

அவரோட நடிச்ச சமகால ஹீரோக்கள் இப்போ நடிச்சிக்கிட்டு இருக்கது மாதிரி அப்பா ரோல்ல நடிச்சதில்லை. "நம்பிக்கை அதானே எல்லாம்"னு விளம்பரங்களுக்கு வந்ததில்லை. வருசத்துக்கு ஒரு படம் ரிலீஸ் பண்ணனும்னு அவசியமும் இல்லை. மூணு வருஷத்துக்கு ஒரு படம் தான் நடிப்போம். ஆனா Indian of the year ன்னாலும்  அவர் தான். Entertainer of the year ன்னாலும் அவர் தான்.  அதான் ரஜினி. 

பொதுவா தமிழ் சினிமாவ பொறுத்த அளவு ரஜினி எப்பவுமே ஒரு 10 வருஷம் முன்னால தான் இருப்பாரு.  அவரு பதினைஞ்சி வருஷத்து முன்னால நடிச்ச படங்கள தான் இப்போ அஜித், விஜய் படங்களா வந்துகிட்டு இருக்கு. எந்தெந்த கால கட்டத்துல மக்களுக்கு என்னென்ன படங்கள் குடுக்கனும்னு அவரவிட நல்லா தெரிஞ்சவங்க யாரும் இல்லை. பாட்ஷாவோட வரலாற்று வெற்றிக்கு அப்புறமும் அவரோட அடுத்த படங்கள்ல அந்த படத்தோட சின்ன தாக்கம் கூட இருந்ததில்லை. ஆனா இப்போ ஒருத்தனுக்கு ஒரு படம் தெரியாத்தனமா ஓடிட்டா போதும் அடுத்த 5 படம் அதே மாதிரி எடுத்து அறுத்து கொன்னுட்டு தான் விடுவாய்ங்க.

ரெண்டு மாசத்துக்கு முன்னால "தி ஹிந்து" ல ரஜினியப் பத்தி ஒரு கட்டுரை வந்துருந்துச்சி. அதாவது ரஜினி படங்கள் என்பது ஜேம்ஸ்பாண்ட் படங்கள் மாதிரி ஒரு genre ah மாறிவிட்டது. ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஹீரோக்கள் மாறி மாறி நடிப்பது போது இப்போது தமிழ்நாட்டில் ரஜினி படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த பொங்கலுக்கு "வீரம்" "ஜில்லா" என்ற இரண்டு ரஜினி படங்கள் வந்திருக்கின்றன. ஒன்றில் அஜித்தும் இன்னொன்றில் விஜய்யும் நடித்திருகின்றனர்". இது எப்டி இருக்கு.

ரஜினி அவரோட போட்டியாளர்காளாக சித்தரிக்கப்படும் பலரை விட எட்டாத உயரத்தில் பயணித்துக்  கொண்டிருக்கிறார்.  எனவே உங்களை வித்யாசமானவராகக்  காட்டிக் கொள்ள நீங்கள் செய்யும் இந்த சல்லித் தனமான வேலைகளை விட்டுவிட்டு, சரித்திரத்தில் இடம்பெறப் போகும் இந்தியாவின் முதன் மோஷன் கேப்சர் திரைப்படத்தைக் கொண்டாடத் தாயாருங்கள்.  சம்போ மகா... தேவாஆஆஆஆ!!!

25 comments:

  1. Excellent.Thalaivar always rocks .

    ReplyDelete
  2. Very good article. நெத்தியடியா எழுதி இருக்கீங்க. FB ல ஷேர் செய்யுறேன்.

    அருண்

    ReplyDelete
  3. Hi Siva,
    Unga article romba super a irunduchu.. also touching a irunduchu.. As always feeling so proud to be a SuperStar fan..!!!

    ReplyDelete
  4. \\அதாவது ஒவ்வொரு படம் வரும்போதும் அது நல்லாருக்குன்னு பகிரங்கமா ஒத்துக்க முடியாத சில அந்நியர்களோட முட்டாள் தனமான பேச்சுக்கள்தான் இதெல்லாம்.\\

    அண்ணே நான் சிவாஜி படம் வரும்போது சிவாஜி படம் நல்ல இருக்குனு தான் சொன்னேன் இந்திரன் படம் வரும்போது இந்திரன் படம் தான் நல்லா இருக்குன்னு 5 தடவ பார்த்தேன் ஆனால் கோச்சடையானை அப்படி நினைக்க முடியவில்லையே ஏன்?

    \\ட்ரெயிலர பாத்தே மெரண்டுட்டாய்ங்க\\

    மனசாட்சிய தொட்டு சொல்லுங்க ட்ரைலர் உண்மையிலேயே நன்றாகவா இருந்தது.

    \\நாங்க உங்க ஊர்ல படத்த ஓட்ட சாருக்கான நடிக்க வைக்க தேவையில்லை. ஆனா நீ எங்க ஊருக்குள்ள நுழையனும்னாவே ரஜினி பேர சொன்னா தான் முடியும். அதான்டா ரஜினி\\.

    தமிழ்லயும் தெலுங்கலையும் பல வருடங்களுக்கு முன் வந்த மசாலா படங்களை காப்பி அடித்து எடுத்த கேவலமான மசாலா படம் சென்னை எக்ஸ்பிரஸ் அதையே பெரிய அளவுக்கு ஹிட்டாக்கிய வட இந்தியர்களை பற்றி நமக்கு கவலை இல்லை எந்திரன் வெற்றியை பார்த்து பொறாமை பட்டு ரா ஒன் எடுத்து மொக்கை வாங்கியவர்கள் அவர்கள் அவர்களை பற்றி கவலை கொள்ள வேண்டாம்.

    //உலகநாயகர்களோட படங்கள் உள்ளூரக்கூட தாண்ட முடியாத சமயத்தில motion capturing ங்குற அடுத்த கட்ட சினிமாக்குள்ள தலைவர் நுழைஞ்சிட்டது பலபேரால பொறுக்க முடியல//

    கமல் பாதை வேறு ரஜினி பாதை வேறு அவர்கள் இருவரும் அவரவர் பாதையில் உச்சத்தில் உள்ளனர். தேவையில்லாமல் அவர்களை சேர்த்து ஒருவரை தாழ்த்தி பேச வேண்டாம்.

    ReplyDelete
  5. vakkali suppera ezhuthinga.. romba rasichen. :)

    ReplyDelete
  6. Adi sakka enna article. Ovvoru thalaivar rasigaroda manasula irunthatha appadiye sollitinga. Super athilayum particulara north side nama poga shah rukh khan theva illa. Aana namma oorukula varanumna thalaivan pera sonnathan nulaya mydiumnu. Awesome. Goosebumps !

    ReplyDelete
  7. Adi sakka enna article goosebump lines ! Nama north side poga shah rukh khan theva illa aana namma oorukulla avanunga varanumna thalaivan pera sonna than mudium ! Awesome

    ReplyDelete
  8. Antony Raj said...
    //மனசாட்சிய தொட்டு சொல்லுங்க ட்ரைலர் உண்மையிலேயே நன்றாகவா இருந்தது.//


    unaku pudikalanu solu athu yea avaruku pudichu erukunu solratha poinu solara

    //கமல் பாதை வேறு ரஜினி பாதை வேறு அவர்கள் இருவரும் அவரவர் பாதையில் உச்சத்தில் உள்ளனர். தேவையில்லாமல் அவர்களை சேர்த்து ஒருவரை தாழ்த்தி பேச வேண்டாம். //

    ipdi advice panra alavuku ne olukamanu un bloga padichu paathaley theriyum... neyela advice panraya .... unaku kochadayan oru anmation films athukukaga tintin avatar rabgeku neenga venumnu nenacha sathyama next 10 yearsku nadakavey nadakathu ana athukaga first valuable step tha intha film ok va atha yosi ok va avaru jillava pathi unamay eluthitarunu varkita vanthu ne oluka sigamani maari peela vidatha un pecha evanum nambamata kekevum matanga

    ReplyDelete
  9. //unaku pudikalanu solu athu yea avaruku pudichu erukunu solratha poinu solara//

    இதையே தான் நானும் சொல்றேன் இவருக்கு கொச்சடையான் ட்ரைலர் பிடிச்சிருக்கலாம் சிலருக்கு பிடிக்காம இருக்கலாம் இவருக்கு பிடிசிருகிரதால பிடிக்கலன்னு சொல்றவங்கள பத்தி தப்பா இவரு எப்படி எழுதலாம் உங்களுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டமா?



    ///avaru jillava pathi unamay eluthitarunu//



    நான் ஜில்லா வீரம் பற்றி எழுதிய விமர்சனத்தையும் இவருடைய ஜில்லா விமர்சனத்தில் நான் செய்த கமண்டையும் நன்றாக பாருங்கள் பின் இப்படி உளற வேண்டிய அவசியமே இருக்காது.



    //neyela advice panraya//



    சொந்த பெயரில் கூட கமெண்ட் செய்யாமல் அனானியாக வந்து நீயெல்லாம் இதை சொல்ற...... கொடுமை.....

    ReplyDelete
  10. //சொந்த பெயரில் கூட கமெண்ட் செய்யாமல் அனானியாக வந்து நீயெல்லாம் இதை சொல்ற...... கொடுமை.....//

    na ipa vanthuta apa varathathuku enaku reason eruku...ipavum na solara uankela advice panraku thaguthye ila... you now that...

    //இதையே தான் நானும் சொல்றேன் இவருக்கு கொச்சடையான் ட்ரைலர் பிடிச்சிருக்கலாம் சிலருக்கு பிடிக்காம இருக்கலாம் இவருக்கு பிடிசிருகிரதால பிடிக்கலன்னு சொல்றவங்கள பத்தி தப்பா இவரு எப்படி எழுதலாம் உங்களுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டமா?//

    ne ithathana first'ah comment pani erukanum atha vitutu manasaachiya thotu solunga kaal vilugara pls solunga kochadayan nalla ilanu solunum'nu yethirpaakaramari comment panra....thambi kelviya purinjuka ok va....

    //நான் ஜில்லா வீரம் பற்றி எழுதிய விமர்சனத்தையும் இவருடைய ஜில்லா விமர்சனத்தில் நான் செய்த கமண்டையும் நன்றாக பாருங்கள் பின் இப்படி உளற வேண்டிய அவசியமே இருக்காது.//

    na elathayum padichu paathutu theliva tha solara ok'va...neenga entha kaalathula unmaya othukitu erukeenga epa paru saamalipu tha panuveenga...




    ReplyDelete
  11. thambi antony.... moodu.... thalaivar pathi thappa pesatha.... athum ne oru janthu ku fan ah... antha janthu yaru vijay ah,,,, thu.....

    ReplyDelete
  12. பாஸ் நான் ரஜினி ரசிகன் கிடையது ஆனா ரஜினிய பிடிக்கும் கமல் ரசிகனும் கிடையது ஆனா கமலையும் பிடிக்கும் ஆனா நீங்க ஒருத்தர உயர்த்தி பேச ஒருத்தர தாழ்த்தி பேசாதிங்க கமலுடைய சாதனைகளை உலகம் அறியும் அது ரஜினிக்கே தெரியும்

    ReplyDelete
  13. //சில உலகநாயகர்களோட படங்கள் உள்ளூரக்கூட தாண்ட முடியாத சமயத்தில motion capturing ங்குற அடுத்த கட்ட சினிமாக்குள்ள தலைவர் நுழைஞ்சிட்டது பலபேரால பொறுக்க முடியல. //

    :))))))

    ReplyDelete
  14. இப்படத்தில் ரஜினி நடிக்கவில்லை. வெறும் டப்பிங் மட்டுமே பேசியிருப்பதாக கேள்வி.

    ReplyDelete
  15. @குட்டிப்பிசாசு:

    //ஆனா நீங்க ஒருத்தர உயர்த்தி பேச ஒருத்தர தாழ்த்தி பேசாதிங்க//

    பாஸ் நா எழுதுனத நீங்க தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன். நான் கமலின் திறமைகளைப் பற்றி எங்கயாவது தப்பா சொல்லிருக்கனா இல்லை கமல பத்தி எங்கயாவது தப்பா சொல்லிருக்கேனா? அவர் படங்கள் சரியா போகமாட்டேங்குதுங்குறது எல்லாருக்கும் தெரிஞ்ச ஒண்ணு.. இத சொன்னா தப்பா பேசுறதுன்னு அர்த்தமா?

    ReplyDelete
  16. @குட்டிப்பிசாசு;

    //இப்படத்தில் ரஜினி நடிக்கவில்லை. வெறும் டப்பிங் மட்டுமே பேசியிருப்பதாக கேள்வி.//

    இருக்கட்டுமே.. அதானல என்ன?

    ReplyDelete
  17. //na ipa vanthuta apa varathathuku enaku reason eruku...ipavum na solara uankela advice panraku thaguthye ila... you now that...
    //
    என்ன காரணம்? இப்பவும் நானும் சொல்றேன் உனக்கெல்லாம் அத சொல்றதுக்கு தகுதியே கிடையாது...

    //manasaachiya thotu solunga kaal vilugara pls solunga//

    மனசாட்சிய தொட்டு சொல்ல சொல்றதும் கால்ல விழறதும் ஒன்றா? என்ன தான் வேணும் உனக்கு?

    na elathayum padichu paathutu theliva tha solara ok'va...neenga entha kaalathula unmaya othukitu erukeenga epa paru saamalipu tha panuveenga...

    நான் ஜில்லா வீரம் விமர்சனத்துல வீரம் ஜில்லாவ விட நல்லா இருக்குனு தான் எழுதியிருக்கேன். இவர் ஜில்லா பத்தி எழுதுன விமர்சனத்துல ஜில்லா நல்லா இருக்குனு கமெண்ட் பன்னல. இதுல சமாளிக்க்ரதுல என்ன இருக்கு ஜில்லா வீரம் விமர்சனத்துல நான் என்ன விஜய்க்கு சப்போர்ட் பண்ணி தப்பா எழுதியிருக்கிறேன் சொல்லு?...

    ReplyDelete
  18. thambi antony.... moodu.... thalaivar pathi thappa pesatha.... athum ne oru janthu ku fan ah... antha janthu yaru vijay ah,,,, thu.....

    கடவுளையே கிண்டல் பண்ற இந்த உலகத்துலரஜினிய பத்தி பேச கூடாதுன்னு சொல்ல நீ யாரு சொன்னதுல எதாவது தப்பவோ இல்ல மாற்று கருது இருந்த சொல்லு அதவிட்டுட்டு உளறாத...

    ReplyDelete
  19. //மனசாட்சிய தொட்டு சொல்ல சொல்றதும் கால்ல விழறதும் ஒன்றா? என்ன தான் வேணும் உனக்கு?//

    thambi unaku kelvi puriyalaya ila puriyatha mari nadikaraya....avaruku pudichu erukunu solaratha maanasachiya thotu soluna unmaya nalava erukunu yethuku kekara avru solrathu poini sola varaya ila.. unaku thonunatha avarum solanumnu yethirpakaraya...inga paru purinja answer panu ila ne aaniye pudunga vena


    //என்ன காரணம்? இப்பவும் நானும் சொல்றேன் உனக்கெல்லாம் அத சொல்றதுக்கு தகுதியே கிடையாது...//

    ithu unaku romba mukkiyama...id use panama vara unaku ena thaguthinu sona na id use pani vanthuta.. apa yea varalanu ketutu eruka...ne epavumey naanga ena sola varomnu purinjalum athula yethavadhu escape aagarmari oru reasona pudichutu thongaraye thambi....unaku thaguthi ilanu na solraku unoda blog padichaley pothum therinjudumnu solra....na solrathula unma ilanu ne solu pakalam...

    ReplyDelete
  20. நான் சொல்கின்ற பதில் உங்களுக்கு புரியவில்லை என்றால் அது தவறான பதில் என்றாகிவிடாது. அவர் நன்றாக இருக்கிறது என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் தான் நான் அந்த கருத்தை எழுதினேன். அவர் ரஜினி ரசிகர் என்பதால் கூட அவருக்கு பிடித்திருக்கலாம் இதற்கு முன் வந்த ரஜினி பட ட்ரைலர்கள் ரஜினி ரசிகர்கள் அல்லாதவர்க்கு கூட பிடித்தவை.ஆனால் கோச்சடையான் ட்ரைலர் சில ரஜினி ரசிகர்களுக்கே இன்னும் நன்றாக எடுத்திருக்கலாமே என்று நினைக்க வைத்துவிட்டது. அதனால் தான் ரஜினி ரசிகராக இல்லாமல் மனசாட்சிய தொட்டு சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு நீங்கள் அறிவாளித்தனமாக மனசாட்சிய தொட்டு சொல்லு என்பதையும் காலில் விழுகிறேன் சொல்லு என்பதையும் ஒரே அர்த்தம் போல கேட்ட கேள்விக்கு தான் நான் பதில் சொல்லியிருக்கிறேன். முதல்ல கேள்விய ஒழுங்கா கேட்டுட்டு அப்பறம் பதிலை ஒழுங்காக எதிர்பாருங்கள்.

    ReplyDelete
  21. என்னுடைய பதிவுகளில் நான் என்ன பொய்யானவற்றை எழுதிவிட்டேன் சொல்லுங்கள் பார்க்கலாம் எனக்கு பிடித்த நடிகர் பக்கம் உள்ள நியாயத்தை தான் எழுதியிருக்கிறேன். அதில் எதாவது தவறான உண்மை இல்லாதவற்றை எழுதியிருந்தால் அது தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டும். அதைவிடுத்து நான் என்னவோ எல்லா பதிவிலும் தவறானவற்றை மட்டுமே எழுதியிருப்பதுபோல பொதுவாக சொல்ல கூடாது. நான் ரஜினியை கிண்டல் செய்து எழுதிய ஒரு பதிவு அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பதிவு தான் அதிலும் கூட நியாயமான முறையில் தமிழ் ரசிகர்கள் சிந்திக்கும் படி தான் எழுதியிருக்கிறேன். மற்றவர்களை போல அவர்களுக்கு பிடிக்காத நடிகர்கள் கை பட்டாள் குற்றம் கால்பட்டால்குற்றம் என்று எழுதவில்லை. அநாகரீகமான முறையில் ரஜினியை தாழ்த்தி விமர்சிக்கவில்லை.

    ReplyDelete
  22. 65 vayasu kezhavana aanapuram pethi vayasu ponnungala arai kurai dress pottu avangalodu kuthadikkaravanellam thalaivan illainga.... vakkira manam pidithavargal.

    ReplyDelete
  23. 65 vayasu kezhavana aanapuram pethi vayasu ponnungala arai kurai dress pottu avangalodu kuthadikkaravanellam thalaivan illainga.... vakkira manam pidithavargal.

    ReplyDelete
  24. //65 vayasu kezhavana aanapuram pethi vayasu ponnungala //

    மிஸ்டர் மனித குல மாணிக்கம்... நல்ல கருத்தா பேசுறீங்க... சரி தலைவருக்கு அதே வயசுல்ல, ராதா அம்புகா, ஸ்ரீபிரியா, ஸ்ரீதேவியவயே இப்பவும் ஹீரோயினா போட்டா நீங்க போய் பாப்பீங்களா?

    சும்மா வாயி இருக்குன்னு என்ன வேணாலும் பேச வேண்டியது

    ReplyDelete