Tuesday, March 17, 2015

பொறுக்க முடியாது குருநாதா…!!!

குறிப்பு : இது ஒரு புலம்பல் பதிவு. வெறியாயிடாதீங்க. பெரும்பாலன பதிவர்களப் போல நானும் பதிவெழுதுறத ஒரு பொழுதுபோக்குகாக தான் செய்றேன். இந்த தளத்தின் மூலமா ஒரு சிலர கொஞ்சம் சிரிக்க வைக்கலாமேன்னு முயற்சி செஞ்சிக்கிட்டு இருக்கேன் அவ்ளோ தான். மத்தபடி இது மூலமா வருமானம் எதுவும் எனக்கு இல்லை. அப்படி ஆசையும் எனக்கு இதுவரைக்கும் வந்ததில்லை. சொல்லப்போனா domain address க்கு வருஷம் 530 ரூபா நா தான் செலவு பன்னிக்கிட்டு இருக்கேன்.

நா எழுதிய நிறைய பதிவுகள் வெவ்வெறு இடங்கள்ல வெளியிடப்பட்டிருக்கு. குறிப்பா, ஃபேஸ்புக்கில் அப்பாடக்கர்ஆவது எப்படி? ங்குற பதிவு அதிக அளவுல யார் யார் பேரெல்லாமோ போட்டு நிறைய தளங்கள்ல போட்டிருந்தாங்க. நா பெருசா எதுவும் கண்டுக்கல. சரி நம்ம எழுதுன பதிவு நாலு பேர் படிச்சா சரின்னு விட்டுட்டேன்.

என்ன சொல்றோம்ங்குறத விட யார் சொல்றாங்கங்குறதுக்கு ரொம்ப முக்கியம். ஒரு பிரபலமான ஆள் ஒரு சாதாரண விஷயத்த சொல்லும்போது அதுக்கு இருக்க மதிப்பு ஒரு சாதாரண ஆள் எப்படிப்பட்ட விஷயத்த சொல்லும் போதும் கிடைக்கிறதில்லைங்குறது தான் உண்மை. அதுவும் பெண்கள் ஒரு விஷயத்த சொல்லும்போது கிடைக்கிற மதிப்பு இருக்கே அப்பப்பா.. “hi good morning” ன்னு ஒரு புள்ளை போட்டுட்டு போன ஸ்டேட்டஸூக்கு 1500 லைக்கு, 650 கமெண்ட் வரும். மூணு நாளுக்கு முன்னால போட்ட குட் மார்னிங்குக்கு நம்மாளுக இப்பவும் ரிப்ளை good morning அனுப்பிக்கிட்டு இருப்பாய்ங்க.

ஒரு தடவ “நடுவுலகொஞ்சம் எதையோ காணும்?” ந்ங்குற ஒரு பதிவு எழுதியிருந்தேன். வழக்கம்போல அத படிச்சிட்டு நம்ம தளத்துல ஒரு அஞ்சாறு பேர் நல்லாருக்குன்னு கமெண்ட் போட்டுருந்தாங்க. அப்புறம் நண்பர் ஒருத்தர் மூலமா அந்தப் பதிவ ஒரு பெண் பதிவர் அவங்களோட தளத்துல போட்டுருக்கதா தெரிய வந்துச்சி. அதே பதிவுக்கு அந்த தளத்துல கிடைச்ச வரவேற்ப பாக்கனுமே.. 

ஒருத்தன் “மேடம் வாய்ப்பே இல்லை பின்னிட்டீங்க ங்குறான். இன்னொருத்தான் “what a thinking.. amazing” ன்னு போட்டுருக்கான். எப்படியெல்லாம் ஒருத்தர புகழ முடியுமோ அத்தனையும் பன்னி வச்சிருந்தாய்ங்க அந்த பின்னூட்டங்கள்ல. கிட்டத்தட்ட 50 கமெண்ட் அந்த போஸ்டுக்கு. அந்தக்கா எங்கருந்து அத போஸ்ட் பன்னுச்சிங்குறத அந்த போஸ்டுல போடவே இல்லை. ஓப்பனா சொல்லனும்னா நா போட்ட ஒன் ஆப் த மொக்கை போஸ்டுங்கள்ள அதுவும் ஒண்ணு. ஆனா என்ன.. ஒரு பொண்ணு மூலமா போனதால அதுக்கு அப்படி ஒரு வரவேற்பு


என்னோட பதிவுகள் நிறைய முறை நிறைய இடங்கள்ல courtesy name கூட இல்லாம பகிரப்பட்டிருக்கு. ஒரு சமயம், இங்க போஸ்ட் பண்ற அத்தனையையும் அப்படியே காப்பி பேஸ்ட் பன்னி penmai.com ல ஒருத்தர் போட்டுக்கிட்டு இருந்துருக்காரு. அதுவும் ரொம்ப நாள் கழிச்சி நண்பர் ஒருத்தர் மூலமாத்தான் தெரிஞ்சிது. அந்த admin la பேசின அப்புறம் எல்லா பதிவுலயும் reference website name ah add பண்ணாங்க.

முகம் தெரியாத நபர் ஒருத்தரோட எழுத்துக்கு குடுக்குற மதிப்பு, நம்ம பக்கத்துலயே இருக்கவன் செய்யும் போது கிடைக்கிறது இல்லை. என்னோட அலுவலகத்துல blogger சைட்டு ஓப்பன் ஆகாது. அதனான நண்பர்கள் சில பேருக்கு முழுப்பதிவையும் email la அனுப்புறதுண்டு. பெரும்பாலான பேர் அந்த mail la ஓப்பன் பன்றதே இல்லை. விமர்சனமா இருந்தா ஸ்க்ரோல் பண்ணி கடைசி பாராவ மட்டும் படிச்சிட்டு க்ளோஸ் பன்னிருவாய்ங்க.

இப்டித்தான் போன மாசம்  “நம்ம வீட்டு கல்யாணம்” ங்குற பேர்ல எழுதுன பதிவ எல்லாருக்கும் அனுப்பிருந்தேன். நாலு நாளைக்கு முன்னால அந்த பதிவ என்னோட அலுவலக நண்பர் ஒருத்தர் Whatsapp la அனுப்பி “சிவா உன்னோட post… என்னோட காலேஜ் ஃப்ரண்ட்ஸ் குரூப்புலருந்து எனக்கு வந்துச்சிடா” ன்னு அனுப்பிருந்தாரு. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. அதுக்கப்புறம், அதே wats app மெசேஜ்ஜ இன்னும் சில அலுவலக நண்பர்கள் எனக்கு fwd msg மாதிரி அனுப்பி “இது நல்லாருக்கு படிங்க” ன்னு அனுப்பிருந்தாங்க. அடப்பாவிகளா.. அப்போ நா அனுப்புற மெயில ஒரு பயலும் கண்ணெடுத்து கூட பாக்குறதில்லை. நா எழுதுனத எனக்கு அனுப்புறீங்களேப்பான்னு நினைச்சிக்கிட்டேன்.

சரி இனிமே மெயில் சர்வீஸ கட் பண்ணிட வேண்டியதுதான்னு யோசிச்சிட்டு இருக்கும்போது, திடீர்னு நண்பர் ஒருத்தர் Fb la ஒரு வீடியோவுக்கு ”இது உங்க ஸ்க்ரிப்டு” ன்னு போட்டு tag பன்னி விட்டுருந்தாரு. அந்த வீடியோவ பாத்தப்புறம் தான் தெரிஞ்சிது vikatan tv la ”நம்ம வீட்டு கல்யாணம்” போஸ்ட ஒரு வீடியோவா எடுத்து விட்டுருக்காய்ங்க.

கொடுமை என்னன்னா அத கொஞ்சம் நல்லா எடுத்துருந்தாலும் பரவால்லை. அந்த போஸ்ட எவ்வளவு கொலை பன்ன முடியுமோ அவ்வளவு கொலை பண்ணி கன்றாவியா எடுத்து வச்சிருக்காய்ங்க. எங்கருந்து மேட்டர சுட்டாங்கன்னு எந்த ஒரு courtesy name உம் இல்லாம.  இதான் அந்த வீடியோவோட லிங்க்.



அதவிட உச்ச கட்ட காமெடி அந்த வீடியோவுல தலைப்பு என்னம்மா இப்டி பண்றீங்ளேமான்னு வேற வச்சிருக்காங்க. நா தான் அவங்கள பாத்து கேக்கனும் “என்னம்மா இப்புடி ஆட்டைய போடுறீங்களேமா” ன்னு!!

”மச்சி அறிவுத் திருட்டு தான் மச்சி ரொம்ப மோசமான திருட்டு” என்னோட நண்பர் அடிக்கடி சொல்லுவாரு. நம்ம ஒண்ணும் பெரிய ஆக்கப்பூர்வமான, அபூர்வ போஸ்ட்டெல்லாம் எழுதிட. நம்ம கண்டுபுடிச்ச அனுகுண்டு டெக்னாலஜிய எதுவும் எவனும் திருடல.  ஆனா ஒரளவுக்கு பொழுது போற மாதிரியான பதிவுகள் தான் எழுதுறோம்.

சினிமா விமர்சனங்கள் எழுத மட்டும் தான் அதிக நேரம் ஆகுறதில்லை. அதிகபட்சம் ஒன்னரை ரெண்டு மணி நேரத்துக்குள்ள எழுதிருவேன். ஆனா மத்த பதிவுகளுக்கு, படிக்கிறவங்களுக்கு புடிக்கனும்ன்னு நிச்சயம் அதிக நேரம் எடுத்து தான் எழுதுவேன். படிக்கிறவங்க அத எப்படி பாக்குறாங்கன்னு எனக்கு தெரியலை. ஆனா நா போஸ்ட் பன்றது, பின்னால ஒரு நாள் நானே அத படிச்சா அட்லீஸ்ட் எனக்காவது அது புடிச்சிருக்கனும்னு  ஆசைப்படுறேன்

ஒரு பதிவ எழுதுனப்புறம் படிச்சி பாக்கும்போது எனக்கு புடிக்கலன்னா அத போஸ்ட் பன்றதே இல்லை. அதுமாதிரி கிடப்புல கிடக்குறதே ஒரு பதினைஞ்சி இருபது பதிவுகள் இருக்கும். ஒரு வேளை நா எழுதின பதிவு நல்லாருக்கா நல்லா இல்லையாங்குற கன்ஃபியூசன் எனக்கே இருந்தா நண்பர்கள் சில பேருக்கு அனுப்பி, அவங்க போடலாம்னு சொன்னப்புறம் தான் போஸ்டே பன்னுவேன்.

நல்லா இருக்கோ நல்லா இல்லையோ, நம்ம கொஞ்ச நேரத்த ஒதுக்கி ஒரு விஷயத்த செய்யும் போது, அதோட output ah சில பேர் நோகாம நோம்பு  கும்பிட்டு எடுத்துட்டு போறத பாக்கும் போது கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. அதனால தான் இந்தப் புலம்பல். 


17 comments:

  1. Avanunga Kedakuranunga Vidunga Jii Neenga polambatheenga engaluku kastama iruku
    Pannaiyarum pathmini padathula that comedion solra mari nalla irunthutu poranunga vidunga

    ReplyDelete
  2. சேம் பிளட் ப்ரோ . நானும் ஒன்னும் பெரிய எழுத்தாளர்லாம் கிடையாது . பொழுதுபோக்குக்காக அப்பப்போ எழுதுவேன் . இப்படி எழுதுன ஒரு சிறுகதைய , கொஞ்சம் பட்டி , டிங்கரிங்லாம் பண்ணி குறும்படமா ஒரு புண்ணியவான் எடுத்து நாளைய இயக்குநர்ல போட்டுட்டாரு . நண்பர் ஒருவர் இத சுட்டிக்காட்டுனாரு . சரி நம்ம கதை இன்ஸ்பிரேசன்ல எடுத்துருப்பாருனு விட்டுட்டேன் . ஆனா படத்துல கிட்டத்தட்ட கொஞ்சத்த மட்டும் மாத்தி எடுத்துட்டாரு . அட்லீஸ்ட் டைட்டில் கிரெடிட்டாவது கொடுத்துருக்கலாம் . அந்த கதைக்காக நாம ஒன்னும் கோர்ட்ல கேஸ் போட்டு பலகோடி நஷ்ட ஈடு கேக்கப்போறது கிடையாது . அட்லீஸ்ட் உண்மையாலும் அத கிரியேட் செஞ்சவங்களுக்கு மரியாதையாவது கொடுக்கலாம் .

    என்னம்மா இப்படி பன்றாங்களேமா ?

    ReplyDelete
  3. Ada Vidunga Bro..
    They can copy your post not your talent.

    Regards,
    A Yusuf

    ReplyDelete
  4. சாரி அண்ணே
    நீங்க சொல்றது உண்மை தான் ..நான் கூட உங்க பதிவில் ஒரு சில வரிகளுக்கு படி டிங்கரிங் பார்த்து போட்டிருக்கிறேன் ..
    நெசமாலுமே சாரிண்ணே

    ReplyDelete
  5. Halfuku mela dislike thaan ji. I have been commented with your post in their video. Hereafter neenga @least cut,copy prevent Javascript load paainuga sitela.

    Follow the link for the technique
    http://ctrlq.org/code/19637-prevent-people-copying-text-web-pages

    ReplyDelete
  6. Very Sad machi...
    they shuld have mentioned your name and your blog info.
    Intellectual theft :(

    ReplyDelete
  7. Seen the same as text format in Vikatan.. ..

    http://www.vikatan.com/news/article.php?module=news&aid=39809&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

    -Jay

    ReplyDelete
  8. @Alex, Yusuf , Madan Prabhu.D, cbzpandiyan

    Thans bros !!!

    ReplyDelete
  9. @Madan Prabhu.D

    Thanks ji... cut copy disable panniyachi

    ReplyDelete
  10. illa ji, now also we can copy the content by using Ctrl+A. Plz use the same technique mentioned in the following link.

    http://pastebin.com/uu0wD5bY

    Add some funny alert as your choice :)

    ReplyDelete
  11. அருமை , இதுக்கெல்லாம் கவலை படாமா எழுதுங்கன்னு சொல்ல முடியலை .
    ஏனா ஒரு பதிவர் மனசு ஒரு பதிவருக்கு தான் தெரியும் . . ..
    என்றும் போல் சேவை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ஆனா உங்களையும் பாராட்டணும். நான் எப்பவோ எழுதுன ஒன்னு வாட்ஸ்அப்ல வந்துடுச்சுன்னு போஸ்ட் போட்டுட்டு ஒரு மாசமா எழுதுறதையே நிறித்திட்டேன்.

    http://vathikuchi.blogspot.com/2015/02/blog-post_20.html

    ReplyDelete
  13. OMG! So sad to hear abt your Pulambal, Muthusiva!. Honestly I prefer reading reviews from your blog than other Allakai Cinema Websites. Even that 'Blue Shirt' tamiltalkies and Dummy Piece Prashanth too cant even reach the way you present the review.

    Let me tell the Pulambal of my friend who is a busfan, he used to click photos of Buses and upload in his Picasa, Flickr album. And most of the Photos were Aataiya pottu'fied by Dinamalar, Dinamani Epaper admins & use them for the cover stories. The worst thing they wont even remove the watermark.

    The Shocking came to him, when he saw his Photo was used by Govt for advertising End to End service in Theni Bus stand. Even the Govt Oppicers aataiya pottu'fy his Clicks for Flex board

    ReplyDelete
  14. உங்க “நம்ம வீட்ட்டு கல்யாணம்” இன்றும் கூட ஒரு ஃபேஸ்புக் பேஜ்ல பார்த்தேன். ஏதோ தானே எழுதியது போன்று எழுதியிருந்தது. ஆனந்த விகடனிலும் பார்த்தேன். நாமளும் இவ்ளோ நாள் எழுதுறோம் எவனுமே காப்பி பண்ரதில்ல. உங்க்ளோட போஸ்ட் பல பேரு காப்பி பண்ணுர லெவலுக்கு இருக்குனு சந்தோசப் படுரத தவிர வேற வழி இல்ல...

    ReplyDelete
  15. Hi Muthusiva,

    Felt bad to hear this:(
    its not a fair thing from others. I used to enjoy reading ur posts.But i rarely post comments. I would try to put regulary. I know readers comments would encourage u to do well. so I wud try to do it.

    Think i mite have told u b4 also, that u have good sense of humour.!!!
    Keep it up. I have shared few of ur post in mail to my friends, but i have put courtsey as ur article link. Pls let me know if this hurt u in any ways.
    Keep writing ur good post. All the best. :)

    ReplyDelete