Monday, June 29, 2015

INSIDIOUS CHAPTER 3 – ஆயாவும் ஆவியும்!!!

”திடீர் திடீர்னு ஒடையிதாம் சாயிதாம்” டைப் படங்கள்ல insidious ஒரு முக்கியமான படம். டர்ர்ர கெளப்பி விட்டுருவாய்ங்க. பெரும்பாலும் முதல் பாகத்த விட ரெண்டாவது பாகம் சற்று டொம்மையாவும், போர் அடிக்கிற மாதிரியும் தான் வரும். ஆனா இந்த insidious முதல் பாகத்துக்கு கொஞ்சமும் குறையாத தரத்தோட ரிலீஸ் ஆனது அதோட ரெண்டாவது பாகம். உண்மையிலயே அந்தப் படத்த பாக்கும்போது, “இவிங்க மொதல்லயே ரெண்டாவது பார்ட் எடுக்கனும்னு நினைச்சி கதை எழுதுறாய்ங்களா இல்லை சும்மா எடுத்துட்டு ஹிட் ஆனவுடனே ரெண்டாவது பார்ட் எடுக்குறாய்ங்களான்னு ஒரு டவுட்டே வந்துச்சி. ஏன்னா முதல் பாகத்தோட கதையையும் ரெண்டாவது பாகத்தோட கதையையும் லிங்க் பன்ன விதம் அவ்வளவு செமையா இருக்கும். முதல் ரெண்டு பாகத்தையும் டைரக்ட் பன்னவரு ஜேம்ஸ் வான். ரெண்டு பாகத்தோடவே நிறுத்திருக்கலாம். இந்த 3வது பாகத்த அவரு தயாரிக்க, Leigh Whannel ங்குறவரு இயக்கிருக்காரு.

போன வருசம் The conjuring ah பாத்துட்டு, அதோட prequel Annabelle வந்தவுடனே ரொம்ப ஆர்வமா பாக்கப்போய் மிரட்டல் அடி வாங்கிட்டு வந்து புலம்புன கதை உங்களுக்கே தெரியும். கிட்டத்தட்ட அதே நிலமைதான் இந்த Insidious 3 லயும். தொடர்ந்து பேய் படமா பாக்குறதால அவ்வளவு பயம் தெரியலையா இல்லை படமே சற்று டொம்மையா இருக்கான்னு எனக்கே கன்பீசனா இருக்கு. சரி இப்ப இந்தப் படத்த கொஞ்சம் பாப்போம்.

மொதல்ல இந்த Insidious படத்தோட ஒரு பொதுவான கான்செப்ட் என்னன்னா, தூங்கிட்டு இருக்கும்போது சில பேரோட ஆன்மா, அவங்க உடம்ப விட்டு வெளிய போய் ஆவிகள் உலகத்துல ஒலாத்திக்கிட்டு இருக்கும். அந்த மாதிரி சமயத்துல ஏற்கனவே பாடியாயி ஆவியா சுத்துறவிங்க, தூங்கிட்டு இருக்க அந்த பாடிக்குள்ள போக முயற்சி பன்னும். ஒருதடவ அவன் உங்க உடம்புக்குள்ள வந்துட்டா, ஆவி உலகத்துல சுத்துற நீங்க அங்கயே ஆவியோட ஆவியா திரிய வேண்டியதுதான். அவ்ளோதான் மேட்டர்.

இப்ப அந்த ஆவிங்க உலகத்துக்குள்ள ஒரு ஆயா அப்பப்போ பொய்ட்டு வரும். என்னய்யா டெய்லி ஆஃபீஸுக்கு பொய்ட்டு வர்ற மாதிரி சொல்றீங்கன்னு வெறிக்காதீங்க. அது அந்த ஆயாவுக்கு மட்டும் உள்ள ஒரு ஸ்பெஷல் கிஃப்ட்.  யாராவது செத்துப்போன யார்கூடவாச்சும் பேசனும்னா ஆயாட்ட வந்து சொன்னாப் போதும் ஆயா மேட்டர அழகா கேட்டு சொல்லிரும்.

முதல் ரெண்டு பாகத்துல பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு ஹெல்ப் பண்றதுக்காக நம்ம ஆயா வரும். ஆனா இந்த படத்துல ஆயாவுக்காகத்தான் கதையே எழுதிருக்காய்ங்க. குயின்னு ஒரு சின்ன வயசு பாப்பா. அவங்க அம்மா ஒரு வருஷம் முன்னால இறந்து போயிடுறாங்க. ஆனா அந்தப் பொண்ணுக்கு அவங்க அம்மாட்ட சில விஷயங்கள் கேக்கனும்னு ஆசை. அதனால சிலப்பல முயற்சிகளப் பன்னி ஆவிங்க கூடப் பேச அதுவாவே ட்ரை பன்னுது. ஆனா ஒண்ணும் வேலைக்கு ஆகல. அம்மா வரல. அப்பதான் ஆயாவப் பத்தி கேள்விப்பட்டு அதுகிட்ட ஹெல்ப் கேக்க போனா, ஆயா கன்ன மூடி அவங்க அம்மாவ காண்டாக் பண்ணுது. கிழவி பதட்டத்துல ஒரு நம்பர மாத்தி போட்டுருச்சி போல.  அம்மாவுக்கு போகவேண்டிய லைன் வேற ஒரு பேய்க்கு போயிடுது. சும்மா இருக்க பேய்க்கு தந்தியடிச்சா அது சும்மா இருக்குமா. நம்ம சும்மாதானே இருக்கோம்னு அதுவும் கிளம்பி வந்துருது.

அன்னியிலருந்து குய்னுக்கு ஏழரை டபுள் காட் போட்டுடுறான். டெய்லி “திடீர் திடீர்னு சாயிதான் ஒடையிதாம்” மொமெண்டு தான்.  வந்ததும் ஏதோ ஒரு பேயி இல்லை. குய்ன் வீட்டுக்கு நேர் மெல உள்ள வீட்டுல இருந்து செத்துபோன ஒருத்தன். அதுவும் அவன் ரொம்ப சீரியஸா இருந்து, மூச்சு விட முடியாம மூக்குல ஆக்ஸிசன் மாஸ்க்கெல்லாம் போட்டப்புறம் செத்துருப்பான் போல. பேயானப்புறமும் அதே ஆக்ஸிசன் மாஸ்கோடவே திரியிறான்.


சரின்னு ஆயா “யார் அந்த மாஸ்க் போட்டவன்”ன்னு பாத்துட்டு வருவோமே”ன்னு முடிவு பன்னி அந்த பேய் உலகத்துக்கு போகுது. அங்க உள்ள போனா ஆயாவ போட்டுத்தள்ள இன்னொரு ஆயா காத்துக்கிட்டு இருக்கு. அதுக்கு என்ன கோவம்னு தெரியல. பேய்க்கிழவி நம்ம ஆய கழுத்த புடிச்சி நெறிக்கவும் நம்ம ஆயாவுக்கு பீதி ஆயி, மாஸ்க் போட்டவன கண்டுபுடிக்காமயே “Mission Impossible” ன்னு சொல்லிட்டு திரும்ப நம்ம உலகத்துக்கு வந்துருது. அப்ப ஒருத்தர் குடுக்குறாறு ஆயாவுக்கு அட்வைஸூ.. “ஆயா… அது செத்துப்போன ஆயா.. நீ உயிரோட இருக்க ஆயா.. அந்த ஆயாவவிட உனக்கு பலம் ஜாஸ்தி ஆயா… உன்னால முடியும் ஆயா.. U can do it ஆயா” ன்னு நம்ம கிட்ட வேலை வாங்குறதுக்கு நம்ம மேனேஜருங்க குடுக்குற பில்ட் அப் மாதிரி குடுத்து ஆயாவ சார்ஜ் ஏத்துராப்ள.



நம்ம ஆயாவப் பாத்தா ஊதுவத்திக்கு வெள்ளை பெயிண்ட் அடிச்சி ட்ரெஸ் போட்டு விட்டா மாதிரி தான் இருக்கும். ஆனா அந்த பேய்க்கெழவி அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்புடுற ஜம்போ மாமி மாதிரி இருக்கும். இப்ப சார்ஜ் ஏத்துன ஆயா திரும்ப உள்ள போகுது. அந்த பேய்க்கிழவி திரும்ப வந்து ஆயா கழுத்த நெறிக்கவும், ஆயா ஃபுல் சார்ஜையும் கையில கொண்டு வந்து விடுது பாருங்க ஒரு குத்து. பாலகிருஷ்ணாகிட்ட அடி வாங்குன வில்லன்மாதிரி பேய்க்கிழவி ஒரு பதினைஞ்சி அடி தள்ளிப்போய் விழுந்து எந்திருச்சி ஓடுது. “ஆயாவுக்கு ஆயா நாண்டா.. எனக்கு மந்திரிங்க யாரும் இல்லை” ன்னு ஒரு பாட்ட மட்டும் அங்க போட்டுருந்தா பட்டைய கெளப்பிருக்கும்.

அப்புறம் இன்னும் டீப்பா உள்ள போய், அந்த மாஸ்க் போட்ட பேய கண்டுபுடிச்சி அழிக்கிறாங்க. ராஜகாளியம்மன், பண்ணாரி அம்மன் படங்கள்லயெல்லாம் க்ளைமாக்ஸ்ல வில்லன கொல்லும்போது எல்லா சாமிக்கிட்டருந்தும் ஒரு ஒளி வந்து ஒண்ணா சேந்து பவர்ஃபுல்லாகி அப்புறம் தான் வில்லன கொல்லுவாங்க. அதுமாதிரி இங்கயும் அந்த பேய கொல்றதுக்கு எல்லாருமா ஒண்ணு சேந்து, “we can do it” “we can do it” ன்னு அவன கொல்றாய்ங்க. கொல்றது பெருசா ஒண்ணும் இல்லை. அந்த நாயி போட்டுருக்க மாஸ்க்க கழட்டி விட்டுறாங்க. அவ்வளவுதான். பேய்க்கு கூட ஆக்ஸிசன் ரொம்ப அவசியம் போல. இதுல ஆவியா இருக்க குய்னோட அம்மாவும் வந்து ஹெல்ப் பன்றாங்க. குயின் கிட்டயும் சொல்லவேண்டிய விஷயத்த சொல்லிடுறாங்க. குய்ன் ஹாப்பி.  கடைசியா “happy family” . சுபம்.

Insidious ல அந்தப் பேய்களோட உலத்துக்கு போற காட்சிகள் பாக்க ரொம்ப சூப்பரா இருக்கும். வெறும் இருட்டும் ஆட்களும் மட்டும்தான் தெரிவாங்க. அதுவே ரொம்ப பயமா இருக்கும். ஆனா பழகிட்டதாலயா என்னன்னு தெரில இங்க ஒண்ணும் பெருசா இம்ப்ரஸ் பண்ணல.


கதை பிக் அப் ஆகுறதுக்குள்ளயே இண்டர்வல் விட்டுடுறாய்ங்க. ட்ரெயிலர்ல காமிச்ச சீன்கள் மட்டும்தான் படத்துல நல்லா இருக்கு. ஒரு சில சீன்களை தவற பெரிய பயமுறுத்தல்கள் எதுவும் இல்லை. டவுண்லோட் பன்னியே பாத்துக்கலாம். 


ANNABELLE - புடீக!! அந்த டைரக்டர கொல்லுக!!


3 comments:

  1. Exactly. Totally disappointed

    ReplyDelete
  2. I laughed a lot..superb writing

    ReplyDelete
  3. ha ha ha.. sema review, very entertaining than the movie :-)

    ReplyDelete