Monday, May 28, 2012

MEN IN BLACK 3 - WORST OF 3

நம்ம ஊர்ல சில படங்கள் ஆரம்பிச்சி, ஹீரோவோட கால்ஷீட் ப்ரச்சனை, தயாரிப்பாளர் ப்ரச்சனை ன்னு பல பிரச்சனைங்களால குறிப்பிட்ட நேரத்துல ரிலீஸ் பண்ண முடியாம முடங்கி போயிரும். சில நேரங்கள்ல ரொம்ப முயற்சி பண்ணி நாலு வருஷத்துக்கு முன்னால ரிலீஸ் ஆக வேண்டிய படத்த இப்ப ரிலீஸ் பண்ணுவாங்க. அந்த படங்கள் அந்த சீசன்ல வெளியிடப்படுற மற்ற படங்களோட போட்டி போட முடியாம மட்டை ஆயிரும். அதே மாதிரி ஒரு ஃபீலிங்க தான் தருது MIB 3. பத்து வருஷத்துக்கு முன்னால வந்த (2002) இந்த படத்தோட 2 வது பாகத்தோட கூட ஒப்பிட  முடியாத அளவு ஒரு கேவலமான காட்சி அமைப்பு மற்றும் கிராஃபிக்ஸ். இதயாடா இவளோ கஷ்டப்ப்ட்டு எடுத்தீங்கன்னு நெனைக்க தோணுது.

கதைன்னு பாத்தா ஓரளவுக்கு ஓகே தான். "ஏஜெண்ட் ஜே" (Will Smith) யோட பார்ட்னர் ஏஜெண்ட் கே (Tommy Lee Jones)  40 வருஷத்துக்கு முன்னால ஒரு பயங்கரமான ஏலியன அரஸ்ட் பண்ணி நிலாவுல (Moon) ஒரு ஜெயில்ல வச்சிருக்காரு... அரஸ்ட் பண்ணும்போது சும்மா இல்லாம அந்த எலியனோட கையயும் கட் பண்ணிடுறாரு. யாருமே இல்லாத நிலாவுல யாருக்குடா ஜெயில் கட்டிருக்கீங்கன்னு கேக்குறீங்க.. அதானே?  அட இந்த படத்துல அப்டிதான்பா...

அந்த கிருக்கு பயபுள்ள பாருங்க 40 வருஷம் சும்மா இருந்துட்டு இப்ப அந்த ஜெயில்லருந்து எஸ்கேப் ஆயிடுறான். எஸ்கேப் ஆகி என்ன ப்ரயோஜனம்.. கை இல்லையே... கை இல்லையே....அப்ப பயபுள்ளைக்கு ஒரு யோசனை வருது. டைம் மிஷின்ல 1969 க்கு திரும்ப போயி "ஏஜெண்ட் கே" நம்ம கைய வெட்டுறதுக்கு முன்னால அவன நாம கொண்ணுட்டா நமக்கு கை வந்துடுமேன்னு ப்ளான் பண்றான்.

 ஆமா எப்புடி டைம் மிஷின்ல 1969 க்கு போவான்? டைம் மிஷின் எப்புடி அவனுக்கு கெடைச்சிதுன்னு யோசிப்பீங்களே... ரொம்ப சிம்பிள்... இந்த படத்துல நம்ம மொபைல் கடை காரங்க Airtel, Vodafone, Aircel ன்னு பல சிம்முகள வச்சிகிட்டு நமக்கு எந்த ப்ளான் வேணுமோ அத போட்டுவிடுவாங்கல்ல...அதே மாதிரி எலெக்ரானிக்ஸ்  ஷாப் வச்சிக்கிட்டு ஒரு ஏலியன்  இருக்கும். அதுகிட்ட போய் ஒரு துப்பாக்கிய காட்டி மெரட்டுனா நீங்க எந்த வருஷத்துக்கு போகனுமோ அங்க அனுப்பி விட்டுரும்.

முன்னாடியது டைம் மெஷின் 10 ,15 fan னோட ஒரு ரும் சைஸுக்கு இருக்கும்.. ஆனா இங்க அதுவும் சிம்பிளா  நம்ம ஸ்மார்ட் ஃபோன் சைஸ்ல ஆயிருச்சி... நாம எப்புடி ஃபோன்ல அலாரம் வக்கிறோமோ அதே மாதிரி இதுல நீங்க வருஷம் தேதி நேரத்த செட் பண்ணிட்டு "கம்யூட்டர் ஜி... லாக்... " ன்னு அமுக்குனீங்கன்னா அடுத்த 30 செகண்ட்ல நீங்க பல வருஷங்கள் டைம் ட்ராவல் பண்ணி இருப்பீங்க..

வில்லன் அதே ப்ளான execute பண்ணி 1969 க்கு போய் "ஏஜெண்ட் கே" வ கொண்ணுடுறான். உடனே நம்ம ஹீரோ ஏஜெண்ட் ஜே சும்மா இருப்பாரா? பார்ட்னர காப்பாத்தனுமே.. வில்லன் நம்ம பார்ட்னர கொல்றதுக்கு ஒரு நாள் முன்னாடி அங்க போய் வில்லன கொன்னுட்டோம்னா நம்ம பார்ட்னர காப்பாத்திரலாமேன்னு ப்ளான் பண்றாரு. உடனே ஹீரோ அந்த எலெக்ரானிக் ஷாப்புக்கு போறாரு.. "என்னயும் 1969 க்கு அனுப்புடா நாயே... இல்லான்னா உன்ன கொன்னு, கொலை பண்ணி, விஷம் குடுத்து ஷூட்  பண்ணி மர்டர் பண்ணிருவேண்டா டோங்ரே......." அப்டின்னு அந்த கடைகாரன மெரட்ட அவனும் பயந்து போயி ஏஜெண்ட் ஜே வயும் 1969 க்கு அனுப்பி வைக்கிறான். அவளோதான் இப்ப எல்லாரும் 1969ல.


1969 ah படம் புடிச்சிருந்தாய்ங்க பாருங்க.. கண்றாவி... இப்ப உள்ள லொக்கேஷன்லயே நாலு பழைய டைப் காருங்கள மட்டும் அங்கிட்டு இங்கிட்டு ஓட விட்டுருக்காங்க... அதான் 1969 தாமாப்பா.. இது ஹாலிவுட்ல எடுத்த படமான்னு டவுட் வந்துருச்சி. அப்புறம் என்ன அங்க ஏஜெண்ட் ஜேயும், ஏஜெண்ட் கேவும் சேந்து வில்லன வேட்டையாடுறாங்க. கதைய கேக்குறதுக்கு ஒரளவுக்கு நல்லாருக்க மாதிரி இருக்கும். ஆனா பாக்குறதுக்கு சத்தியமா Body தாங்காது.

மொத ரெண்டு பார்ட்லயும் வில் ஸ்மித் டம்மி பீஸ் தான்.. அதே மாதிரி தான் இந்த  பார்ட்லயும். மொத ரெண்டுல கெத்து கேரக்டர்ல வந்த "ஏஜெண்ட் கே" வுக்கு இதுல நாக்கு தள்ளிருச்சி... வயசாயிருச்சில்லே.... அதனால அவரோட portion ah படத்துல ரொம்ப கம்மி பண்ணிட்டாங்க அதுனாலயே படம் டஸ்ஸாயிருச்சி. மொத்தம் 3 பார்ட்லயும் இந்த 3 வது பார்ட் தான் மிக கேவலம்.. நம்ம ஊரு "3" ah விட மோசம்னா பாத்துகுங்க... DVD வந்தவுடனே ஓட்டி ஓட்டி பாத்துக்கலாம். யாரும் அவசரப்பட வேண்டாம்.

வழக்கமா நா கூப்புடுற படத்துக்கு எவனுமே வரமாட்டாய்ங்க. போன மாசம் என் ரூம் மேட் என்ன "அஸ்தமணம்"ங்கற படத்துக்கு வற்புருத்தி கூப்புட்டதால போனேன். உலக கேவலம் அந்த  படம். So, அத வச்சே அந்த பையன Black mail பண்ணி ரெண்டு மூணு படத்துக்கு அழைச்சிட்டு போயிட்டு இருந்தேன்.. "டேய் அஸ்தமனத்துக்கு எல்லாம் வந்தேன்லடா... இந்த படத்துக்கு  வர மாட்டியா?" ன்னு சொல்லி ஜூனியர் NTR oda  "தம்மு" க்கெல்லாம் கூட அவன மெரட்டி அழைச்சிட்டு போனேன். ஆனா நேத்தோட அது முடிஞ்சி போச்சி. ஏன்னா  MIB க்கு நான் தான் அவன கூட்டிட்டு போனேன். படம் முடிஞ்சப்புறம் "டேய்... அஸ்தமனத்துக்கும் இதுக்கும் கழிஞ்சி போச்சி...இனிமே எதாது மொக்க படத்துக்கு கூப்டா கொண்டே புடுவேன்"ன்னு சொல்லிட்டான்.. இனிமே "தடையற தாக்க" "நான் ஈ" படத்துக்கெல்லாம் நா மட்டும் தனியா தான் போகனும் போலருக்கு :(

Wednesday, May 23, 2012

சுவாமி நித்யானந்தாவின் கிளு கிளு பயோடேட்டா



பெயர்
ஸ்வாமி நித்யான்ந்தா

புனைபெயர்
கோல்டன் கிரீடம் கில்மாகுமார்

Gender
ஆணாக இருக்கலாம்

வயது
குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பும் வயது
தொழில்
ஆன்மீகம்

குருநாதர்
ப்ரேமான்ந்தா

ரஞ்சிதா
பக்த மீரா

பொழுதுபோக்கு
ரஞ்சிதாவுடன் ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபடுவது

விரும்பி அருந்துவது
சோம பானம்

விரும்பி சாப்பிடுவது
ரஞ்சிதாவின் கையால் ஒரு ஸ்பூன் சிட்டுக்குருவி லேகியம்
விரும்பி பார்ப்பது
11 மணிக் காட்சி

வெறுப்பது
அரைக்குள் கேமரா

அடிக்கடி செல்வது
பரவச நிலைக்கு
பிடித்த வாசகம்
கதவை திற.. ரஞ்சிதா வரட்டும்
ஜெயில் வாழ்க்கை
உடம்பை தேற்றவும், உல்லாசமாக இருக்கவும் அரசாங்கமே ஏற்பாடு செய்த இன்பச் சுற்றுலா
ஜெயிலுக்கு முன்
50 கிலோ

ஜெயிலுக்குப் பின்
78 கிலோ


பிடித்த விளையாட்டு

ரஞ்சிதாவுடன் ஆடும் ஜலபுலஜங்ஸ்

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்
கன்னா என் சேலைக்குள்ள கட்டெரும்பு புகுந்துருச்சி
ரஞ்சிதா மீதான குற்றச்சாட்டு
பணிவிடைதானே செய்தார்.. வேறு என்ன தவறு செய்தார்?

ஜெயேந்திர்ர்
சக போட்டியாளர்

ஆதீனம்
5 கோடிக்கு வாங்கியது

மக்கள்
ஆன்மீக சொற்பொழிவில் மயங்கியவர்கள்
மக்களுக்கு கூற விரும்புவது
அனைவரும் ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபடுங்கள்! கடவுளின் அருள் பெருங்கள்!!!
 

நன்றி : நண்பன் கார்த்தி

Monday, May 14, 2012

FACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி?

 குறிப்பு: இந்த பதிவு வெறும் நகைச்சுவைக்காகவே... யார்மனதையும் புண்படுத்தும் நோக்குடனோ, எவரையும் குறிப்பிட்டோ எழுதப்பட்டது அல்ல.

ஏற்கனவே நா எழுதுன "ப்ரபல பதிவர் ஆவது எப்படி?"ங்குற பதிவ
follow பண்ணி நடந்ததால, பதிவுலக விட்டே போன பல பேரு கால் பண்ணியும் மெயில் பண்ணியும்  நன்றிக்கு மேல நன்றியா சொல்லிக்கிட்டு இருக்காங்க. அது மட்டுமா "காதல் தோல்விகளை குறைப்பது எப்படி?" ங்குற பதிவை ஃபாலோ பண்ணி காதலிகள்ட செருப்படி வாங்கிட்டு break up ஆன எத்தனையோ பேரு "உங்களால தான் நா இப்ப நிம்மதியா இருக்கேன்" ன்னு  மனசார வாழ்த்துறாங்க. இதெல்லாம் என்ன பெருமையா... கடமே..........

இதோ அந்த வரிசையில் உங்களுக்காக... ஃபேஸ்புக்கில் அப்பாடக்கர் ஆவது எப்படி?  (இது தற்போது facebook ல் நடைபெற்று கொண்டிருக்கும் சம்பவங்களின் தொகுப்பே)

1. முதல்ல உங்ககிட்ட ஒரு கேமரா இருக்கனும்... முக்கியமான விஷயம் அதுல zoom எஃபெக்ட் நல்லா இருக்கனும். உதாரணமா உங்க கால்ல ஒரு கொசு கடிக்க உக்காருதுன்னு வச்சிக்குவோம்... அத மடார்ன்னு அடிச்சி கொன்னுட கூடாது. உடனே உங்க கேமராவ எடுங்க. அந்த கொசுவ மட்டும் zooooooooooooooooooooom பண்ணி ஒரு ஃபொட்டோ எடுத்து "என்னை இன்று கடிக்க வந்த கொசு அப்புடிங்கற கேப்ஷனோட போட்டீங்கன்னு வைங்க லைக்கு அள்ளிக்கும்.

2. அப்புறம் நீங்க Onsite la இருக்கமாதிரி (இல்லைன்னா கூட) காட்டிக்கனும்.. அதாவது உங்க profile ல லொக்கேஷன்கிற எடத்துல யூரோப்புல உள்ள எவனுக்குமே தெரியாத ஒரு ஊர போட்டுக்கனும். அது மட்டும் பத்தாது... நீங்க லெதர் ஜாக்கெட் போட்டுகிட்டு ஒரு ஒரு மரத்த கட்டி புடிச்ச மாதிரியோ, இயற்கைய ரசிக்கிற மாதிரியோ ஒரு  ஃபோட்டோவுக்கு போஸ் குடுக்கனும். (லெதர் ஜாக்கெட் மிகவும் முக்கியம் அமைச்சரே) அப்பதான் நீங்க ஆன் சைட்டுல இருக்கீங்கன்னு நம்புவாங்க.

3. கலைக்கண்ணோட எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள அப்லோடு பண்ணனும். அது என்ன கலைக்கண்ணோட எடுக்கப்பட்ட ஃபோட்டோன்னு கேக்குறீங்களா..அதாவது கேமராவ நேர வச்சி எடுத்தா அது எல்லாரும்  எடுக்குற சாதாரண ஃபோட்டோ...  அதே கேமராவ 45 degree சாய்ச்சா மாதிரி எடுத்தா அதுக்கு பேரு  photography. அதுமட்டும் பத்தாது... அந்த போட்டோவுல உங்க friend  list la உள்ள எல்லாரையும் மறக்காம tag பண்ணி விட்டுடனும்.

4. நீங்க கொடைக்கானலோ இல்லை ஊட்டியோ டூர் போனீங்கன்னா அங்க ஒரு சுமாரா ஒரு 500 போட்டோ எடுத்துருப்பீங்க... அத அப்புடியே ஃபேஸ்புக்குல பொளக்குன்னு அப்லோட் பண்ணிட கூடாது... "குப்புசாமி Uploaded 305 photos in his album kodai tour" ன்னு ஒரு நோட்டிஃபிகேஷன் வந்துச்சின்னு வச்சிக்குங்க... எல்லாரும் வெறிச்சி ஓடிருவாய்ங்க. நீங்க அப்லோட் பண்ண ஃபோட்டோக்கள்ல சைடு ஆங்கிள்ல திரும்பி நிக்கிறது, சிரிக்கிறது , மொறைக்கிறது வெக்கப்படுறது, பிஸ் அடிக்கிறதுன்னு கண்ட ஃபோட்டோக்கள்லாம் இருக்கும்... அதுல கேமரா ஷேக் ஆயி பொகை மூட்டமாவே ஒரு 50 ஃபோட்டோ இருக்கும். அத அப்புடியே upload பண்ணுவீங்க. இதே மாதிரி பண்ணிட்டு இருந்தா உங்கள எல்லாரும் unfriend பன்ண கூஅட   வாய்ப்பு இருக்கு

5. பசிக்கொடுமை, ஏழ்மை இந்த மாதிரி விஷயங்கள கண்டா நீங்க பொங்கி எழனும்.... "உதாரணமா உகாண்டா மக்கள் சாப்பாட்டிறே கஷ்டப்படுறாங்க... நம்ம ஊர்ல சினிமா காரங்க மேல பால ஊத்திகிட்டு இருக்காங்க.. " அப்புடின்னு ஒரு சைடு பசியால் வாடுற மக்களையும், இன்னொரு பக்கம் ரஜினி படத்துக்கோ அஜித் படத்துக்கோ ரசிகர்கள் பால் ஊத்துற மாதிரி உள்ள படத்தையும் மெர்ஜ் பண்ணி ஒரு ஃபோட்டோ  upload பண்ணனும்.. அதுனால நீங்க பட்டினியா இருக்கனும்னோ இல்ல பசிக்கிறவங்களுக்கு சாப்பாடு போடனும்னோ அவசியம் இல்ல. நீங்க பசிக்குதுன்னு பிச்சை கேக்குறவனுக்கு ஒரு ரூவா கூட போடாம 1000 ரூவாய்க்கு  பீஸ்ஸா... பர்க்கர்... ஸ்பிரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் ரோல் ன்னு  என்ன வேணா சாப்புடலாம். எவனுக்கும் தெரியாது.

6. அப்புறம் இந்த விஜய்,அஜித் மாதிரி கமர்ஷியல் ஹீரோக்கள பாத்தாலே உங்களுக்கு அலர்ஜி வரனும்.. அதாவது நீங்க US la தான் born and brought up மாதிரியும், only இங்கிலீஸ் படங்கள் தான் பாப்பீங்கங்குற மாதிரியும்  "இந்த தமிழ் படங்களே இப்புடித்தான்... so boring ya" அப்புடின்னும் சீனப்போடனும்...

7. அப்புறம் இந்த டி.ஆர், பவர் ஸ்டார், சாம் ஆண்டர்சன் இவங்கல்லாம் உங்க கண்ணுல மனுஷங்களாவே தெரியக்கூடாது... அவங்கள எதோ வினோதமான ஜந்துக்கள் மாதிரியே நீங்க ட்ரீட்  பண்ணனும்.. அவங்கள பத்தின போஸ்ட் எல்லாத்துலயும் "so funny ya"  "funny guys"  இந்த மாதிரி கமெண்ட்ஸ் மட்டுமே போடனும். "funny" ங்கற வார்த்தை மிக முக்கியம்.

8. உங்க ஒரிஜினல் பேர முடிஞ்ச அளவு உபயோகிக்க கூடாது...  கத்திக்குத்து கந்தன், பெட்டி பெருமாளு, வெட்டு வேலு, பாக்கு ரவின்னு ரவுடிங்க எப்புடி அடைமொழியோட  இருக்காங்களோ அதே மாதிரி உங்க பேருக்கு முன்னாடியோ பின்னாடியோ எதாவது  ஒரு அடைமொழிய நீங்களே சேத்துக்குங்க.. உதாரணமா உங்க பேரு அசோக்குன்னா  அத டான் அசோக்குன்னும் அசாருன்னா  அத அசால்டு அசாருன்னும் மாத்தி வச்சிக்கலாம்.. காலப்போக்குல அதுவே உங்களுக்கு நிரந்தரமான பேராயிடும்.


9. அப்புறம் பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவி பண்ணனும்.. அது எப்புடி பண்றது? கைக்காசு எதும் போயிருமோன்னு பயப்படாதீங்க.. அது ரொம்ப ரொம்ப ஈஸி.. ஒரு குழந்தை சோகமா   இருக்கமாதிரி ஒரு ஃபோட்டோ... அதுக்குள்ள, இந்த குழந்தை எலும்பு புற்று நோயால் அவதிப்படுகிறது... அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் ரூபாய் தேவை..Facebook accepted to give 10 paise per each  like... please like and save the child" அப்புடின்னு ஒரு ஃபோட்டோவ எவனாவது share  பண்ணிருப்பான்.... அதுக்கு மத்தவங்க மாதிரியே ஒரு லைக்போட்டு முடிஞ்சா share பண்ணி விடுங்க.. அவ்ளோதான் கொழந்தைய காப்பத்தியாச்சி... மத்ததெல்லாம் facebook பாத்துக்கும்.

10. எல்லார்கிட்டயும் பாசமா இருக்கனும்... நேர்ல பாத்தா நீங்க சில பேர்ட்ட மூஞ்சி குடுத்து கூட பேசமாட்டீங்க...முன்னாடி விட்டு பின்னாடி அசிங்க அசிங்கமா கூட திட்டிருப்பீங்க.. ஆனா ஃபேஸ்புக்ல அப்புடி வெளிப்படையா எல்லாம் பேசக்கூடாது.. "கலக்குங்க மச்சி" "சூப்பர் மச்சி" "ஆல் த பெஸ்ட் மச்சி" இப்புடிதான் பேசி பழகனும்.. குறிப்பா பொண்ணுங்களுக்குள்ள நிறைய கொழாயடி சண்டை வரைக்கும் நடந்துருக்க்கும்.. ஆனா ஃபேஸ்புக்ல "hi dear" "you are looking awesome dear" "have fun dear" "u rocking  dear" இந்த மாதிரி தான் பேசனும். dear ங்கறது பொண்ணுங்களுக்கு தான்... பசங்க அவசரப்பட்டு யூஸ் பண்ணி தோஸ்தானாவ  ஃபார்ம் ஆயிராதீங்க..

11. அப்புறம் சில ஃபோட்டோக்கள் upload பண்ணனும்னு போது உங்களுக்கு அதுக்கு  என்ன description குடுக்குறதுன்னு தெரியாது.... அந்த மாதிரி சமயங்கள சமாளிக்க ஒரு ஆயுதம் இருக்கு... "how many likes?" அப்புடின்னு போட்டு விட்டுடனும்....  சில தாவர உண்ணிகள் அதுக்கும் லைக் போடும்... ஆன சில ஊண் உண்ணிகள் கெட்ட வார்த்தைல திட்டுறதுக்கு கூட வாய்ப்பு இருக்கு. அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

12. உங்க ஸ்டேடஸ்க்கு likes வாங்குறது ரொம்ப முக்கியம்... சில சமயம் என்ன status போடுறதுண்ணே தெரியலையா...ஒரு சூப்பர்  ஐடியா இருக்கு...

If you find your ஜட்டி size in the below numbers.. like it.. அப்புடின்னு போட்டு கீழ

      "75, 80, 85, 90, 95, 100, 110"

இப்புடி போட்டுருங்க... இதுக்குள்ள எல்லாரும் வந்துதான் ஆகனும்... கண்டிப்பா லைக் போட்டு தான் ஆகனும்.. அப்ப கோவணம் கட்டுறவங்கள கவர் பண்ண என்ன பண்றதா? அட கோவணத்துக்கெல்லாம் சைஸ் இல்லப்பா... free size தான்.

14. ஸ்டேடஸ் update ரெம்ப ரெம்ப முக்கியம்.. பக்கத்து வீட்டு அக்கா உங்கள சர்ஃப் வாங்கிட்டு வர  சொன்னிச்சின்னி வச்சிக்குங்க உடனே பொசுக்குன்னு போயிற கூடாது... வந்து facebook ல "surf வாங்க போறேன்"னு  status update பண்ணிட்டு தான் போகனும்.. ஏஞ்சொல்றேன்னா நீங்க சொல்லாம கொல்லாம சர்ஃப் வாங்க பொய்ட்டீங்கன்னு வச்சிக்குங்க உங்க ஆடியண்ஸ் எல்லாம்  எங்க பொயிட்டீங்க எங்க பொய்ட்டீங்கன்னு தவியா தவிச்சி போயிருவாங்கல்ல.. அது மட்டும் இல்ல நீங்க உச்சா போறதுக்கு முன்னால, கக்கா போறதுக்கு முன்னால கூட ஸ்டேடஸ் அப்டேட் பண்ணிட்டு தான் போகனும்...



15. அதே மாதிரி நீங்க உங்க location la பாப்ப நாயக்கம் பட்டி ன்னு போட்டு வச்சிருப்பீங்க.. திடீர்னு அலுவலக பணிக்காக ரெண்டு நாளூ எருமைநாயக்கம் பட்டிக்கு போறீங்கன்னு வச்சிக்குவோம் உடனே லொக்கேஷன் மாத்திரனும்... ஏன்னா உங்கள பாக்க வர்ற உங்க ரசிகர்கள், பாப்பநாயக்கம்பட்டிக்கு போய் ஏமாந்துரகூடாது பாருங்க...

16. அப்புறம் இந்த பொண்ணுங்கள கண்டா உங்களுக்கு சுத்தமா புடிக்கவே கூடாது.. ச்ச ச்ச... வெளியில மட்டும் தான்...உதாரணமா ஒரு காதல் தோல்வி பாட்டு வந்துச்சின்னு வச்சுக்குங்க அதுல  பொண்ணுங்கள தாக்குற மாதிரி உள்ள ரெண்டு லைன அப்புடியே லபக்குன்னு கவ்வி  உங்க ஸ்டேடஸ்ல போட்டுக்கணும்.... அப்பதான் நீங்க ரவுடியா ஃபார்ம் ஆக முடியும்... உங்க
நண்பர்கள் வட்டமும் பெருசாகும்.. ஏன்னா இந்த குடிகாரய்ங்களும், பொண்ணுங்களால பாத்திக்கப்பட்டவிங்களூம்  தான் உடனே friend  ஆயிருவாய்ங்க. நீங்க பல பொண்ணுங்க கிட்ட செருப்படி வாங்குன அப்புறம் தான் அந்த state ku  போனீங்கங்குற உண்மை யாருக்கும் தெரியக் கூடாது.

17. அப்புறம் இந்த ஆடு வெட்டுறவிங்க, கோழி வெட்டுறவிங்க, மரத்த வெட்டுறவிங்களையெல்லாம் "பாவிங்க" "மனிதாபிமானம் இல்லாதவிங்க"
"இதுங்கள்ளாம் என்ன ஜென்மம்" "இரக்கமில்லாதவர்கள்" ன்னு எப்புடி எப்புடி முடியுமோ அப்புடியெல்லாம் திட்டனும்.. ஏன்னா வெட்டுறங்கதான் குற்றவாளிங்க.. என்ன... நம்ம ஆடு கோழியெல்லாம் திங்கலைன்னா அவங்க ஏன் வெட்ட போறாங்கன்னு கேக்குறீங்களா? அதெல்லாம் கேட்க கூடாது... அவங்க பண்றது தப்பு தான்.. இதயெல்லாம் கேட்டா நீங்க அப்பாடக்கர் ஆக முடியாது... 

என்ன ஓகே வா..வெற்றியோட வாங்க

இவ்வாறாகச் செய்து வந்தால் வருடத்தின் இந்த நாள் மட்டுமல்லாமல் எந்த நாளும் இனிய நாளாகவே அமையும்.

எண்ணம் : நண்பன் அசால்ட்டு அசார்
கருத்துக்கள் : நண்பன் கார்த்தி
தொகுப்பு : முத்துசிவா


Saturday, May 12, 2012

கலகலப்பு - BEST COMEDY FILM OF THE DECADE

ஒருத்தன அடிச்சி அவனுக்கு வலி வர வைக்கலாம்... ஆனா மேல கை படாம சிரிக்க வச்சே நமக்கு வயிறு வலி வர வைக்கிற வித்தைய சுந்தர் சி எங்கதான் கண்டுபுடிச்சாரோ? உங்களுக்கு இதுவரைக்கும் ரொம்ப புடிச்ச நகைச்சுவை படம்னா உடனே எத சொல்லிவீங்க? உள்ளத்தை அள்ளித்தா? மாமன் மகள்? மேட்டுக்குடி? வின்னர்? சிவா மனசுல சக்தி? பாஸ் என்கிற பாஸ்கரன்? இந்த எல்லா படத்தையும் அடிச்சி தூக்கிட்டு முன்னால நிக்குது இந்த கலகலப்பு...


யப்பா.... படத்துல ஒரு லெவலுக்கு மேல நம்மளால சிரிக்கவே முடியல... ஒரு காமெடிக்கு நாம சிரிச்சி முடிக்கிறதுக்குள்ள அடுத்த காமெடி.... படத்துல முதல் பாதிய தூக்கி நிறுத்துறதே மிர்ச்சி சிவா தான்... எங்கருந்துய்யா வாங்குன அந்த மூஞ்சியையும், அந்த டயாலாக் பேசுற slang கயும்... சிவா சாதாரணமா ஒரு டயலாக் பேசுனாலே அது பயங்கரம இருக்கு.. சிவா பேசுற ஒவ்வொரு டயலாக்கும் தியேட்டரே அதிருது..

முதல் பத்து நிமிஷத்துல விமல் வர்ற ஒரு ரெண்டு மூணு சீன் Bore அடிச்சாலும் சிவா கலத்துல எறங்குன உடனே எல்லாத்தையும் மறக்க வச்சிடுறாரு.. இளவரசுவ பத்தி சொல்லனும்னா அவர்ட்டருந்து இதுக்குமேல ஒரு நடிப்ப வாங்கமுடியாது.. காமெடில கொன்னு எடுத்துருக்காரு... அஞ்சலி, ஓவியா ரெண்டு பேருக்கும் நடிக்க பெருசா வாய்ப்பு இல்லன்னாலும் அழகான ஹீரோயின்களா படத்துல வலம் வர்றாங்க...

முதல்பாதி சிவா, விமல், இளவரசு, வி.எஸ்,ராகவன்னு படம் கலாட்டாவ நகர, ரெண்டாவது பாதில எண்டர் ஆவுறாரு சந்தானம்.. சில முன்னணி ஹீரோக்களுக்கே intro scene la அவ்வளோ வரவேற்பு இருக்கதில்ல இப்பல்லாம்.. ஆனா இந்த படத்துல சந்தானம்  introduction kku  எதோ ரஜினி பட intro மாதிரி கொடூர சவுண்டு.. சந்தானத்துக்கு மூணு body guards.. ஒருத்தர் பேரு மண்டை கசாயம், இன்னொருத்தர் பேரு பேயி.. தளபதி தினேஷ் பேரு
திமிங்கலம்... அந்த பேர   நெனைச்சே ரொம்ப நேரம் சிரிச்சிகிட்டு இருந்தேன்... தமிழ் சினிமால கொடூர வில்லன்களா இருந்த எல்லாரும் இப்ப காமெடிக்கு மாறிட்டாங்க... அவங்க காமெடி பண்றப்ப வழக்கத்த விட அதிகமா ரசிக்க முடியுது...

"ஏண்டா.. சைக்கிளாடா ஓட்டிகிட்டு இருக்கேன் sudden brake  போட்டு நிறுத்துறதுக்கு" ன்னு ஆரம்பிக்கிற சந்தானம் ஒவ்வொரு சீன்லயும் விழுந்து விழுந்து சிரிக்க வச்சிருக்காரு..  ஒரு சீன்ல அவசர அவசரமா எல்லாரும் சண்டைக்கு கெளம்பும் போது, தளபதி தினேஷ் "பாஸ் வீடு வரைக்கும் போய் சுகர் மாத்திரை போட்டுகிட்டு வந்துடுறேன்" ன்னு சொல்றதும், "நீயேல்லாம் எப்புடி பாஷா பாய்கிட்ட body guard ah இருந்தன்னு " ன்னு ன்னு தளபதி தினேஷ சந்தானம் வாருறதும் செம கலக்கல்... இவங்கல்லாம் பத்தாதுன்னு மனோபாலா வேற... தாறு மாறு காமெடி...உண்மைலயே இந்த படத்துக்கு தான் "கர்ப்பிணி பெண்கள், இதய நோய் உள்ளவர்கள் பார்ப்பதை தவிர்க வேண்டும்" ன்னு போடனும்.. சிரிச்சி சிரிச்சி அவங்களுக்கு எதாவது ஆனாலும் ஆயிடும்..

வசனங்கள் எல்லாமே மிக அருமை... கேபிள் ஷங்கருக்கு ஒரு சபாஷ்... பட்டைய கெளப்பிருக்காரு... எடுத்த சீனயே திரும்ப திரும்ப எடுத்தாலும் அதுல சலிப்பு வராம காமெடி பண்றதுல சுந்தர்.சி க்கு நிகர் அவரே தான்.. காமெடி படங்கள்ல மட்டும் தான் எந்த லாஜிக்கையும் பாக்காம மனசு விட்டு சிரிக்க முடியும். படத்துல போர் அடிக்கிற விஷயம்னா ரெண்டு டூயட் தான்... மத்தபடி பிண்ணனி இசையில எல்லாம் குறை சொல்ற மாதிரி எதுவும் இல்ல... "இவளுங்க இம்சை தாங்க முடியல" ங்குற பாட்டு சொல்ற மாதிரி இருக்கு.. ஆனா வழக்கம் போல ஆடியோவுல "குத்துங்க .. எசமான் குத்துங்க." ன்னு வர்றா வரிகள   "கொல்லுங்க.. எசமான் கொல்லுங்க" ன்னு மாத்தி விட்டுருக்காங்க...  இத பாட்டு எழுதும் போதே யோசிக்க மாட்டீங்களா? ஹி ஹி




டைட்டில்ல  சுந்தர்.சி பேர் போடும் போது என்னையும் என் நண்பனையும் சேத்து ஒரு  10 பேர் மட்டும் தான் தியேட்டர்லயே கைதட்டுனோம்...  ஆனா படம் முடிஞ்ச அப்புறம்  தியேட்டர்ல உள்ள எல்லாரும் எழுந்து நின்னு கை  தட்டுனாங்க... இதுதான் அவருக்கு கிடைச்ச பெரிய வெற்றி..சுந்தர்.சி ஃபேன்னு சொல்லிக்கிறதுக்கே ரொம்ப பெருமையா இருக்கு.


நேத்து சில பதிவர்கள் இந்த படத்த பத்தி எழுதுன reviews படிச்சேன்... "சுமார்"
"ஒகே ஒகே அளவுக்கு இல்லை" ன்னுல்லாம் எழுதிருந்தாங்க... அவங்கள என்ன சொல்றாதுன்னு தெரியல... சுந்தர்.சி யோட எல்லா படங்கள்லயும் பெஸ்டு இந்த படம்தான்.. சந்தோஷமா போங்க..ரொம்ப சந்தோஷமா வருவிங்க. அனைவரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய ஒரு படம். நா ரொம்ப நாளுக்கு அப்புறம் இந்த படத்த தான் ரெண்டாவது தடவ பாக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.


Monday, May 7, 2012

கலெக்டர் பாலமுரளி


அவன் சொல்லி அடிக்கிறதுல கில்லி
சொல்லாம அடிக்கிறதுல திருப்பாச்சி
சொல்லி சொல்லாம சொழட்டி அடிக்கிறதுல சிவகாசி

இப்புடியெல்லாம் பாலமுரளிய பாராட்டனும்னு ஆசை தான்.. ஆனா என்ன.. அவருக்கு பாருங்க புகழ்ச்சி சுத்தமா புடிக்காது.. பட்டுக்கோட்டைலருந்து வந்து பட்டைய கெளப்பி தமிழ்நாட்டுலயே 5 வது இடத்துல IAS பாஸ்பண்ணி எங்க ஊருக்கு மட்டும் இல்லாம அவர் படிச்ச பள்ளிக்கும் பெருமை சேத்துருக்காரு நம்ம பால முரளி (http://www.facebook.com/balamuralidevendiran).

சோழர் பரம்பரையில் ஒரு கலெக்டர்.

இந்த விஷயத்த இங்க பதிவு செய்ய இன்னொரு காரணமும் இருக்கு. நானும் இவர் படிச்ச அதே ஸ்கூல்ல தான் படிச்சேன். இவர் படிச்ச அதே க்ளாஸ்ல தான் படிச்சேன். இவர் படிச்ச அதே வருஷம் தான் படிச்சேன். இவருக்கு முன்னாடி பெஞ்ச்ல தான் உக்காந்து படிச்சேன். ஏன்னா நா கொஞ்சம் குள்ளம் அவரு  கொஞ்சம் ஒசரம். அதுனால இவர தூக்கி பின்னாடி பெஞ்ச்ல போட்டுட்டாய்ங்க. அட சனியன் என் க்ளாஸ் மேட் தாங்க.

அரசினர் மேல்நிலைப்பள்ளி நாட்டுச்சாலை... இதான் நாங்க +1 & +2 படிச்ச
ஸ்கூல்... 2001-2003. அந்த வருடம் இன்னும் எங்க ஸ்கூல்ல மறக்க முடியாத
வருடங்களா இருக்கும்ங்கறதுல சந்தேகமே இல்ல. ஏன்னா 2003 ல எங்க
பேட்ச்ல தான் எங்க ஸ்கூல்ல முதல் முறையா 4 பேர் 1100 க்கு மேல
எடுத்திருந்தாங்க... ஸ்கூல் 1st வேற யாரும் இல்லை.. நம்ம கலெக்டர்
பால முரளி தான் (1133/1200). ஸ்கூல் 2nd எடுத்த பையனும் நமக்கு ரொம்ப வேண்டப்பட்ட  பையன் தான் (1131/1200) என்னது அவன் என்ன பண்ணிட்டு இருக்கானா? அவன விடுங்க.. அவன் ஒரு வெட்டி முண்டம் வீனா
போன தண்டம்... சும்மா மொக்கை படங்களா பாத்து அதுக்கு அத விட
மொக்கையா review எழுதிகிட்டு சுத்திகிட்டு இருக்கான்.

ஸ்கூல்ல நானும் இவரும் படிப்ப பத்தி பேசிருக்கோமோ இல்லையோ
பாபா படத்த பத்திதான் அதிக நேரம் பேசிருப்போம்.. ஏன்னா இவரும் நம்ம
தலைவரோட தீவிர ரசிகர். பாபாவுக்கு "ஒருவேள கதை இப்புடி இருக்குமோ, இல்ல ஒரு வேள அப்புடி இருக்குமோ" ன்னு என்னென்னவோ கற்பனை பண்ணி வச்சிருந்தோம்... கடைசில எல்லாம் டஸ் ஆயிருச்சி... :(

ஸ்கூல்ல, டியூஷன்லனு எங்க போனாலும் முன்னாடி முன்னாடி வந்து நின்னு மூஞ்ச காட்டி தொல்லை பண்ணிட்டே இருந்தான். சரி பரிட்சை முடிஞ்சோன்ன சனியன் ஒழிஞ்சாண்டா ன்னு பாத்தா ரிசல்ட் பாக்குற ப்ரவுசிங் சென்ட்டருக்கும் வந்து "ஹை நா உன்னவிட ரெண்டு மார்க் கூட எடுத்துட்டேனே... பிம்பிளிக்க பியாபீ" ன்னு கத்திகிட்டு இருந்தான்..


சரி இவன விட்டு தூரமா எங்கயாது ஓடிப்போயிரலாம்னு காரைக்குடி அழகப்பாவுல ஒரு சீட்ட வாங்கிகிட்டு போயிட்டேன்... விதி யார விட்டுது... அங்கயும் வந்துட்டான்... எங்க கலேஜ்க்கு பக்கத்துலயே (CECRI) la ஒரு சீட்ட வாங்கிகிட்டு. அடுத்த நாலு வருஷமும் இவன் கூட தானா... செத்தாண்டா சேகரு.... எப்புடியோ நாலு வருஷமும் ஓடிருச்சி... Final year படிக்கும் போது அவங்க காலேஜ் cultural program ku invite பண்ணிருந்தாரு. நானும் என் நண்பர்களும் போய் விழாவ நல்லா சிறப்பிச்சிட்டு (அவ்வ்வ்) வந்தோம். எங்க காலேஜ் Culturals ah விட ரொம்ப enjoy பண்ணது அங்க தான்...

படிக்கும்போதே வேலை வாங்குனதும் இல்லாம சைடுலயே கேப்புல கெடா வெட்டிகிட்டு  இருந்துருக்காரு. இவன் அடிச்ச மணி CECRI ஆஞ்சனேயருக்கு கேட்டுச்சோ  இல்லையோ... கவர்மண்டுக்கு கேட்டுருச்சி... அடிச்சாம்பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரு...

உன்னால பட்டுக்கோட்டைக்கே பெருமை... நீ படிச்சதால நம்ம ஸ்கூலுக்கு பெருமை... உன்னோட படிச்ச எங்க எல்லாருக்கும் பெருமை..

கண்ணா... என்னிக்கும் அந்நியாத்துக்கு தலைவணங்காத... அட்சி தூள் பண்ணு...


நண்பர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.



Thursday, May 3, 2012

KAHAANI- கஹானி - செம படம் !!!

இதுவரைக்கும் நா பாத்துருக்க ஹிந்தி படங்கள விரல் விட்டு எண்ணுனா நாலஞ்சி விரல் பாக்கி இருக்கும்... அது என்னன்னு தெரியல...ஹிந்தின்னா ஒரு அலர்ஜி.. அந்த பாஷை உச்சரிப்ப கேக்கும்போதே எதோ இனம் புரியாத ஒரு வெறுப்பு..  எதுனால அப்டி ஆச்சுன்னு தெரியல... போன வருஷம் PM eh கால் பன்னி "மிஸ்டர் சிவா... நம்ம நாட்டுக்காக நீங்க இத செஞ்சே ஆகனும்" னு ஹிந்தில  சொன்னப்ப "sorry PM... எனக்கு ஹிந்தி தெரியாது" ன்னு சொல்லி ஃபோன கட் பன்னவன்... "சரி இப்ப அதுக்கு என்ன பண்ணனும்ங்குற" ன்னு தானே  கேக்குறிங்க.. சும்மாதான்... எப்புடி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல... சரி மேட்டருக்கு வருவோம்..

வித்யாபாலனே ஹீரோவாகவும், ஹீரோயினாகவும் நடிச்சி வெளிவந்துருக்க படம் இந்த கஹானி...அப்ப டபுள் ஆக் ஷனான்னு கேப்பீங்களே... அட படத்துல
எல்லாமே அவங்கதான்னு சொல்ல வந்தேன்ப்பா...


இந்த படத்த பாத்து முடிச்சதும் திரும்ப ஒரு "Sixth Sense" ah பாத்தது போல
ஒரு உணர்வு.. அதே தரத்தோட, அதே மாதிரியான ஒரு சஸ்பென்ஸ் திரைக்கதை. கதை கேட்காம போய் படம் பாக்குறவங்களுக்கு படம் முடியும் போது ஒரு மிகத் தரமான படத்த பார்த்த ஒரு ஃபீல் இருக்கும்.

சரி சன் டிவி டாப் 10 சுரேஷ் குமார் மாதிரி சுருக்கமா படத்த பத்தி கொஞ்சம் சொல்றேன்...அதே slang la படிங்க

"லண்டன்லருந்து கொல்கத்தாவுக்கு ப்ராஜெக்ட்டுக்காக வந்த தன்னோட
கணவன்ட்டருந்து எந்த தகவலும் வராததுனால அவர தேடி கொல்கத்தா
வராங்க நிறைமாத கற்பிணியான வித்யா பாலன். ஆனா இங்க வந்து பாத்த
அப்புறம் அவருடைய கணவன் பேர்ல கொல்கத்தாவுக்கு யாரும்
வரலைன்னும், அந்த கம்பெனில அப்புடி ஒரு ஆளே வேலை செய்யலன்னும்
தெரிய வருது. பின்னர் போலீஸோட உதவியோட கணவன கண்டுபிடிக்க
முயற்சி பண்ணும் போது பல திடுக்கிடும் உண்மைங்க தெரிய வருது. அதயெல்லாம் தாண்டி வித்யா பாலன் கடைசில தன் கணவனோட சேர்ந்தாரா இல்லையாங்கறத சுவாரஸ்யமாவும் ரசிக்கிற மாதிரியும் சொல்லியிருக்க படம் தான் இந்த கஹானி.. "

வித்யாபாலன பாத்தாலே "அய்யோ... பதினொரு மாசமா இருக்கும் போலருக்கே" ன்னு நமக்கே தோணும். அப்டியே கர்பிணி பெண்ணாவே மாறிருக்காங்க... சில காட்சில அவங்க வேகமா நடக்கும் போது நமக்கு பயமா இருக்கு.. எதாவது ஆயிருமோன்னு.....

அருமையான ஸ்கிரிப்ட்.. தெளிவான திரைக்கதை... கடைசிவரைக்கும் போர்
அடிக்காம விறு விறுபோட எடுத்துட்டு போயிருக்காங்க...   ரொம்ப நாளுக்கப்புறம் ஒரு சூப்பர் படம் பாத்த திருப்தி....