Saturday, May 12, 2012

கலகலப்பு - BEST COMEDY FILM OF THE DECADE

ஒருத்தன அடிச்சி அவனுக்கு வலி வர வைக்கலாம்... ஆனா மேல கை படாம சிரிக்க வச்சே நமக்கு வயிறு வலி வர வைக்கிற வித்தைய சுந்தர் சி எங்கதான் கண்டுபுடிச்சாரோ? உங்களுக்கு இதுவரைக்கும் ரொம்ப புடிச்ச நகைச்சுவை படம்னா உடனே எத சொல்லிவீங்க? உள்ளத்தை அள்ளித்தா? மாமன் மகள்? மேட்டுக்குடி? வின்னர்? சிவா மனசுல சக்தி? பாஸ் என்கிற பாஸ்கரன்? இந்த எல்லா படத்தையும் அடிச்சி தூக்கிட்டு முன்னால நிக்குது இந்த கலகலப்பு...


யப்பா.... படத்துல ஒரு லெவலுக்கு மேல நம்மளால சிரிக்கவே முடியல... ஒரு காமெடிக்கு நாம சிரிச்சி முடிக்கிறதுக்குள்ள அடுத்த காமெடி.... படத்துல முதல் பாதிய தூக்கி நிறுத்துறதே மிர்ச்சி சிவா தான்... எங்கருந்துய்யா வாங்குன அந்த மூஞ்சியையும், அந்த டயாலாக் பேசுற slang கயும்... சிவா சாதாரணமா ஒரு டயலாக் பேசுனாலே அது பயங்கரம இருக்கு.. சிவா பேசுற ஒவ்வொரு டயலாக்கும் தியேட்டரே அதிருது..

முதல் பத்து நிமிஷத்துல விமல் வர்ற ஒரு ரெண்டு மூணு சீன் Bore அடிச்சாலும் சிவா கலத்துல எறங்குன உடனே எல்லாத்தையும் மறக்க வச்சிடுறாரு.. இளவரசுவ பத்தி சொல்லனும்னா அவர்ட்டருந்து இதுக்குமேல ஒரு நடிப்ப வாங்கமுடியாது.. காமெடில கொன்னு எடுத்துருக்காரு... அஞ்சலி, ஓவியா ரெண்டு பேருக்கும் நடிக்க பெருசா வாய்ப்பு இல்லன்னாலும் அழகான ஹீரோயின்களா படத்துல வலம் வர்றாங்க...

முதல்பாதி சிவா, விமல், இளவரசு, வி.எஸ்,ராகவன்னு படம் கலாட்டாவ நகர, ரெண்டாவது பாதில எண்டர் ஆவுறாரு சந்தானம்.. சில முன்னணி ஹீரோக்களுக்கே intro scene la அவ்வளோ வரவேற்பு இருக்கதில்ல இப்பல்லாம்.. ஆனா இந்த படத்துல சந்தானம்  introduction kku  எதோ ரஜினி பட intro மாதிரி கொடூர சவுண்டு.. சந்தானத்துக்கு மூணு body guards.. ஒருத்தர் பேரு மண்டை கசாயம், இன்னொருத்தர் பேரு பேயி.. தளபதி தினேஷ் பேரு
திமிங்கலம்... அந்த பேர   நெனைச்சே ரொம்ப நேரம் சிரிச்சிகிட்டு இருந்தேன்... தமிழ் சினிமால கொடூர வில்லன்களா இருந்த எல்லாரும் இப்ப காமெடிக்கு மாறிட்டாங்க... அவங்க காமெடி பண்றப்ப வழக்கத்த விட அதிகமா ரசிக்க முடியுது...

"ஏண்டா.. சைக்கிளாடா ஓட்டிகிட்டு இருக்கேன் sudden brake  போட்டு நிறுத்துறதுக்கு" ன்னு ஆரம்பிக்கிற சந்தானம் ஒவ்வொரு சீன்லயும் விழுந்து விழுந்து சிரிக்க வச்சிருக்காரு..  ஒரு சீன்ல அவசர அவசரமா எல்லாரும் சண்டைக்கு கெளம்பும் போது, தளபதி தினேஷ் "பாஸ் வீடு வரைக்கும் போய் சுகர் மாத்திரை போட்டுகிட்டு வந்துடுறேன்" ன்னு சொல்றதும், "நீயேல்லாம் எப்புடி பாஷா பாய்கிட்ட body guard ah இருந்தன்னு " ன்னு ன்னு தளபதி தினேஷ சந்தானம் வாருறதும் செம கலக்கல்... இவங்கல்லாம் பத்தாதுன்னு மனோபாலா வேற... தாறு மாறு காமெடி...உண்மைலயே இந்த படத்துக்கு தான் "கர்ப்பிணி பெண்கள், இதய நோய் உள்ளவர்கள் பார்ப்பதை தவிர்க வேண்டும்" ன்னு போடனும்.. சிரிச்சி சிரிச்சி அவங்களுக்கு எதாவது ஆனாலும் ஆயிடும்..

வசனங்கள் எல்லாமே மிக அருமை... கேபிள் ஷங்கருக்கு ஒரு சபாஷ்... பட்டைய கெளப்பிருக்காரு... எடுத்த சீனயே திரும்ப திரும்ப எடுத்தாலும் அதுல சலிப்பு வராம காமெடி பண்றதுல சுந்தர்.சி க்கு நிகர் அவரே தான்.. காமெடி படங்கள்ல மட்டும் தான் எந்த லாஜிக்கையும் பாக்காம மனசு விட்டு சிரிக்க முடியும். படத்துல போர் அடிக்கிற விஷயம்னா ரெண்டு டூயட் தான்... மத்தபடி பிண்ணனி இசையில எல்லாம் குறை சொல்ற மாதிரி எதுவும் இல்ல... "இவளுங்க இம்சை தாங்க முடியல" ங்குற பாட்டு சொல்ற மாதிரி இருக்கு.. ஆனா வழக்கம் போல ஆடியோவுல "குத்துங்க .. எசமான் குத்துங்க." ன்னு வர்றா வரிகள   "கொல்லுங்க.. எசமான் கொல்லுங்க" ன்னு மாத்தி விட்டுருக்காங்க...  இத பாட்டு எழுதும் போதே யோசிக்க மாட்டீங்களா? ஹி ஹி




டைட்டில்ல  சுந்தர்.சி பேர் போடும் போது என்னையும் என் நண்பனையும் சேத்து ஒரு  10 பேர் மட்டும் தான் தியேட்டர்லயே கைதட்டுனோம்...  ஆனா படம் முடிஞ்ச அப்புறம்  தியேட்டர்ல உள்ள எல்லாரும் எழுந்து நின்னு கை  தட்டுனாங்க... இதுதான் அவருக்கு கிடைச்ச பெரிய வெற்றி..சுந்தர்.சி ஃபேன்னு சொல்லிக்கிறதுக்கே ரொம்ப பெருமையா இருக்கு.


நேத்து சில பதிவர்கள் இந்த படத்த பத்தி எழுதுன reviews படிச்சேன்... "சுமார்"
"ஒகே ஒகே அளவுக்கு இல்லை" ன்னுல்லாம் எழுதிருந்தாங்க... அவங்கள என்ன சொல்றாதுன்னு தெரியல... சுந்தர்.சி யோட எல்லா படங்கள்லயும் பெஸ்டு இந்த படம்தான்.. சந்தோஷமா போங்க..ரொம்ப சந்தோஷமா வருவிங்க. அனைவரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய ஒரு படம். நா ரொம்ப நாளுக்கு அப்புறம் இந்த படத்த தான் ரெண்டாவது தடவ பாக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.


28 comments:

  1. நீங்க சொல்றதப்பார்த்தா உள்ளத்தை அள்ளித்தாவை விட சூப்பர இருக்கும் போல....பாத்திடவேண்டியதுதான்.

    ReplyDelete
  2. இந்த வாரம் இந்த படத்தை பார்த்தே ஆகணும்...

    ReplyDelete
  3. coming week i planing to watch.

    ReplyDelete
  4. சுந்தர்.சி யோட எல்லா படங்கள்லயும் பெஸ்டு இந்த படம்தான்.. சந்தோஷமா போங்க..///

    நேஜமாலுமேவா??????

    ReplyDelete
  5. @manimaran:

    ஆமா.. மிஸ் பண்ணாம பாருங்க

    ReplyDelete
  6. @தமிழ்வாசி ப்ரகாஷ்:

    இது என்னோட கருத்து தலைவரே.. மத்தபடி நீங்கதான் பாத்துட்டு சொல்லனும் :)

    ReplyDelete
  7. ஆஹா...யாரோட விமர்சனத்த எடுத்துக்கிறது..?

    ReplyDelete
  8. உங்க பதிவோட தலைப்பு தான் Best comedy of the decadeன்னு நினைக்கிறேன்... இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா...

    ReplyDelete
  9. @Philosophy Prabhakaran

    நா என்ன feel பண்ணேனோ அத தான் தலைப்பா வச்சிருக்கேன்... அது தங்களுக்கு ஓவராக தெரிஞ்சா அதுக்கு நா பொறுப்பல்ல நண்பரே...

    ReplyDelete
  10. ரசனை ஆளாளுக்கு மாறுபடும்.

    ReplyDelete
  11. ரசனை ஆளாளுக்கு மாறுபடும்.

    ReplyDelete
  12. நன்றி முத்து சிவா.. வசனங்களுக்கு நான் மட்டும் பொறுப்பல்ல.. இயக்குனர் பத்ரிக்கும் தான். நான் வெறும் உதவிதான்.

    ReplyDelete
  13. @ரேகா ராகவன்:

    //ரசனை ஆளாளுக்கு மாறுபடும். //

    அதே தான்

    ReplyDelete
  14. @சங்கர் நாராயண் @ Cable Sankar:

    //வசனங்களுக்கு நான் மட்டும் பொறுப்பல்ல.. இயக்குனர் பத்ரிக்கும் தான்.//

    அவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்களை சொல்லிருங்க Boss.. கலக்கிட்டீங்க ரெண்டு பேரும்

    ReplyDelete
  15. “ இனிய அன்னையர் தின வாழ்த்துகள் “

    ReplyDelete
  16. இதை ஜால்ரா என்று சொல்வதை தவிர வேறு வழி இல்லை

    வசனம் எழுதுனவருக்கே இந்த படத்தோட மதிப்பு தெரியும்

    உங்களோட கற்ப்பனை வறட்சி ரொம்ப மோசமான கட்டத்தை அடைஞ்சிருக்கு போல

    ReplyDelete
  17. @மௌனகுரு:

    //இதை ஜால்ரா என்று சொல்வதை தவிர வேறு வழி இல்லை//

    இந்த கமெண்ட் போடுறதுக்கு முன்னால கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்.. இந்த லைன் அடிக்கிற வேலையெல்லாம் இங்க வேணாம்..

    //உங்களோட கற்ப்பனை வறட்சி ரொம்ப மோசமான கட்டத்தை அடைஞ்சிருக்கு போல//

    ஓ அப்புடியா... இது வேற ஒண்ணும் இல்ல..அதாவது உங்களோட கற்பனை செழிப்பா இருக்கமாதிரி உங்களுக்கே ஒரு மன ப்ராந்தி அவ்வளவுதான்


    சில பேரு படத்த பாக்காமயே வந்து நாயம் பேசிட்டு இருப்பாய்ங்க..நீங்க அந்த category la இருக்க மாட்டீங்கன்னு நம்புறேன்..

    ReplyDelete
  18. //சில பேரு படத்த பாக்காமயே வந்து நாயம் பேசிட்டு இருப்பாய்ங்க..நீங்க அந்த category la இருக்க மாட்டீங்கன்னு நம்புறேன்..// unga nambikkai veen pogala boss


    //இந்த லைன் அடிக்கிற வேலையெல்லாம் இங்க வேணாம்.. // padam enakku pudicirunthathunnu sollirunthanganaa naan onnume sollirukkamaatten

    //Best comedy of the decade// this line leads me to write such line :( sorry for that


    MounaGuru

    ReplyDelete
  19. //padam enakku pudicirunthathunnu sollirunthanganaa naan onnume sollirukkamaatten

    Best comedy of the decade- this line leads me to write such line :( //

    அடுத்தவங்க என்ன கருத்து சொல்லுவாங்களோன்னு நெனைச்சிட்டு நான் எப்பவும் எதும் எழுதுறதில்லை.. எனக்கு தோணுறத அப்படியே எழுதிகிட்டு இருக்கென். இந்த மாதிரி படம் ஃபுல்லா சிரிச்சிட்டு இருந்ததே இல்ல... அதனால தான் நா அப்டி போட்டிருந்தேன்..

    ஒரு வேளை வசனம் எழுதுனவரு உங்களுக்கு தெரிஞ்சவரா இருக்கதால நீங்க சில நல்ல காமெடிங்கள "இவரு எழுதுனது தானே" அப்டின்னு அலட்சியப்படுத்திருக்காலாம்...
    அடுத்தவன் வளந்தாதான் நமக்கு புடிக்காதே..

    இல்லை உங்களுங்கு சுந்தர்.சி டைப் காமெடிங்க புடிக்காம ஹைடெக் காமெடிகள மட்டும் விரும்புறவரா இருக்கலாம்...

    எனக்கு அப்டி இல்லை... நா ஒரு சாதாரண ரசிகன்.. எனக்கு படம் ரொம்ப புடிச்சிருந்துச்சி...

    ReplyDelete
  20. //Comedy film of the Decade

    இது கொஞ்சம் அதிகப்படியோ என்று தோன்றுகிறது.

    படம் பெயருக்கேற்றபடி கலகலப்புதான். ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்று எனக்கு தோன்றியது.

    ReplyDelete
  21. //ஒரு வேளை வசனம் எழுதுனவரு உங்களுக்கு தெரிஞ்சவரா இருக்கதால நீங்க சில நல்ல காமெடிங்கள "இவரு எழுதுனது தானே" அப்டின்னு அலட்சியப்படுத்திருக்காலாம்...//

    இதே தான் நானும் கேக்கறேன் ஆனா ரிவர்ஸ்ல இப்பொதக்கு போதும் பாஸ் அடுத்த பதிவுல சந்திக்கலாம்
    மௌனகுரு

    ReplyDelete
  22. nalla review...best comedy movie...nanum padam mukuthum sirithu konde irunthen:)after a long time a best comedy movie

    ReplyDelete
  23. முத்து ரசனை என்பது ஒருவருக்கொருவர் மாறுபடுவது உண்மை தான்.

    நிஜமாகவே எனக்கு இந்த படம் பிடிக்கவில்லை... காமெடியும் அப்படி ஒன்றும் இல்லை. உள்ளத்தை அள்ளித்தாவை ஒப்பிடும் போது அதில் பாதி கூட இல்லை என்பது என் கருத்து.

    மிகைப்படுத்தி கூறியதாக (எனக்கு) தோன்றுகிறது. Opinion differs

    ReplyDelete
  24. @கிரி :

    உண்மைதான் Boss... நீங்க சொன்ன இதே கருத்த நிறைய பேர் என்கிட்ட சொல்றாங்க... மிகைபடுத்தி கூறியதாக... நான் படம் பார்த்த 2.30 மணி நேரமும் பயங்கர எஞ்ஜாய் பண்ணேன்... எனக்கு ரொம்ப ரொம்ப படம் புடிச்சிருந்ததால நான் என் கருத்த அப்படியே சொல்லியிருந்தேன்... உங்களுக்கு பயங்கர எதிர்பார்ப்ப ஏற்படுத்திய ஏமாற்றியதாக நினைத்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  25. unakku puriyara madhiri padam irundhichinnu sollu.

    ReplyDelete
  26. Boss intha film jollya na film than but உள்ளத்தை அள்ளித்தாவை compare pannina ...Ithellam onnumay illai..

    ReplyDelete
  27. படம் நல்லா இருக்குன்னு நீங்க சொல்லுறீங்க. அதனால் படத்தை சீக்கிரம் சன் டீவில போட்டுருவான்.நான் அஙக் பாத்துக்குறேன்

    ReplyDelete