Monday, May 14, 2012

FACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி?

 குறிப்பு: இந்த பதிவு வெறும் நகைச்சுவைக்காகவே... யார்மனதையும் புண்படுத்தும் நோக்குடனோ, எவரையும் குறிப்பிட்டோ எழுதப்பட்டது அல்ல.

ஏற்கனவே நா எழுதுன "ப்ரபல பதிவர் ஆவது எப்படி?"ங்குற பதிவ
follow பண்ணி நடந்ததால, பதிவுலக விட்டே போன பல பேரு கால் பண்ணியும் மெயில் பண்ணியும்  நன்றிக்கு மேல நன்றியா சொல்லிக்கிட்டு இருக்காங்க. அது மட்டுமா "காதல் தோல்விகளை குறைப்பது எப்படி?" ங்குற பதிவை ஃபாலோ பண்ணி காதலிகள்ட செருப்படி வாங்கிட்டு break up ஆன எத்தனையோ பேரு "உங்களால தான் நா இப்ப நிம்மதியா இருக்கேன்" ன்னு  மனசார வாழ்த்துறாங்க. இதெல்லாம் என்ன பெருமையா... கடமே..........

இதோ அந்த வரிசையில் உங்களுக்காக... ஃபேஸ்புக்கில் அப்பாடக்கர் ஆவது எப்படி?  (இது தற்போது facebook ல் நடைபெற்று கொண்டிருக்கும் சம்பவங்களின் தொகுப்பே)

1. முதல்ல உங்ககிட்ட ஒரு கேமரா இருக்கனும்... முக்கியமான விஷயம் அதுல zoom எஃபெக்ட் நல்லா இருக்கனும். உதாரணமா உங்க கால்ல ஒரு கொசு கடிக்க உக்காருதுன்னு வச்சிக்குவோம்... அத மடார்ன்னு அடிச்சி கொன்னுட கூடாது. உடனே உங்க கேமராவ எடுங்க. அந்த கொசுவ மட்டும் zooooooooooooooooooooom பண்ணி ஒரு ஃபொட்டோ எடுத்து "என்னை இன்று கடிக்க வந்த கொசு அப்புடிங்கற கேப்ஷனோட போட்டீங்கன்னு வைங்க லைக்கு அள்ளிக்கும்.

2. அப்புறம் நீங்க Onsite la இருக்கமாதிரி (இல்லைன்னா கூட) காட்டிக்கனும்.. அதாவது உங்க profile ல லொக்கேஷன்கிற எடத்துல யூரோப்புல உள்ள எவனுக்குமே தெரியாத ஒரு ஊர போட்டுக்கனும். அது மட்டும் பத்தாது... நீங்க லெதர் ஜாக்கெட் போட்டுகிட்டு ஒரு ஒரு மரத்த கட்டி புடிச்ச மாதிரியோ, இயற்கைய ரசிக்கிற மாதிரியோ ஒரு  ஃபோட்டோவுக்கு போஸ் குடுக்கனும். (லெதர் ஜாக்கெட் மிகவும் முக்கியம் அமைச்சரே) அப்பதான் நீங்க ஆன் சைட்டுல இருக்கீங்கன்னு நம்புவாங்க.

3. கலைக்கண்ணோட எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள அப்லோடு பண்ணனும். அது என்ன கலைக்கண்ணோட எடுக்கப்பட்ட ஃபோட்டோன்னு கேக்குறீங்களா..அதாவது கேமராவ நேர வச்சி எடுத்தா அது எல்லாரும்  எடுக்குற சாதாரண ஃபோட்டோ...  அதே கேமராவ 45 degree சாய்ச்சா மாதிரி எடுத்தா அதுக்கு பேரு  photography. அதுமட்டும் பத்தாது... அந்த போட்டோவுல உங்க friend  list la உள்ள எல்லாரையும் மறக்காம tag பண்ணி விட்டுடனும்.

4. நீங்க கொடைக்கானலோ இல்லை ஊட்டியோ டூர் போனீங்கன்னா அங்க ஒரு சுமாரா ஒரு 500 போட்டோ எடுத்துருப்பீங்க... அத அப்புடியே ஃபேஸ்புக்குல பொளக்குன்னு அப்லோட் பண்ணிட கூடாது... "குப்புசாமி Uploaded 305 photos in his album kodai tour" ன்னு ஒரு நோட்டிஃபிகேஷன் வந்துச்சின்னு வச்சிக்குங்க... எல்லாரும் வெறிச்சி ஓடிருவாய்ங்க. நீங்க அப்லோட் பண்ண ஃபோட்டோக்கள்ல சைடு ஆங்கிள்ல திரும்பி நிக்கிறது, சிரிக்கிறது , மொறைக்கிறது வெக்கப்படுறது, பிஸ் அடிக்கிறதுன்னு கண்ட ஃபோட்டோக்கள்லாம் இருக்கும்... அதுல கேமரா ஷேக் ஆயி பொகை மூட்டமாவே ஒரு 50 ஃபோட்டோ இருக்கும். அத அப்புடியே upload பண்ணுவீங்க. இதே மாதிரி பண்ணிட்டு இருந்தா உங்கள எல்லாரும் unfriend பன்ண கூஅட   வாய்ப்பு இருக்கு

5. பசிக்கொடுமை, ஏழ்மை இந்த மாதிரி விஷயங்கள கண்டா நீங்க பொங்கி எழனும்.... "உதாரணமா உகாண்டா மக்கள் சாப்பாட்டிறே கஷ்டப்படுறாங்க... நம்ம ஊர்ல சினிமா காரங்க மேல பால ஊத்திகிட்டு இருக்காங்க.. " அப்புடின்னு ஒரு சைடு பசியால் வாடுற மக்களையும், இன்னொரு பக்கம் ரஜினி படத்துக்கோ அஜித் படத்துக்கோ ரசிகர்கள் பால் ஊத்துற மாதிரி உள்ள படத்தையும் மெர்ஜ் பண்ணி ஒரு ஃபோட்டோ  upload பண்ணனும்.. அதுனால நீங்க பட்டினியா இருக்கனும்னோ இல்ல பசிக்கிறவங்களுக்கு சாப்பாடு போடனும்னோ அவசியம் இல்ல. நீங்க பசிக்குதுன்னு பிச்சை கேக்குறவனுக்கு ஒரு ரூவா கூட போடாம 1000 ரூவாய்க்கு  பீஸ்ஸா... பர்க்கர்... ஸ்பிரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் ரோல் ன்னு  என்ன வேணா சாப்புடலாம். எவனுக்கும் தெரியாது.

6. அப்புறம் இந்த விஜய்,அஜித் மாதிரி கமர்ஷியல் ஹீரோக்கள பாத்தாலே உங்களுக்கு அலர்ஜி வரனும்.. அதாவது நீங்க US la தான் born and brought up மாதிரியும், only இங்கிலீஸ் படங்கள் தான் பாப்பீங்கங்குற மாதிரியும்  "இந்த தமிழ் படங்களே இப்புடித்தான்... so boring ya" அப்புடின்னும் சீனப்போடனும்...

7. அப்புறம் இந்த டி.ஆர், பவர் ஸ்டார், சாம் ஆண்டர்சன் இவங்கல்லாம் உங்க கண்ணுல மனுஷங்களாவே தெரியக்கூடாது... அவங்கள எதோ வினோதமான ஜந்துக்கள் மாதிரியே நீங்க ட்ரீட்  பண்ணனும்.. அவங்கள பத்தின போஸ்ட் எல்லாத்துலயும் "so funny ya"  "funny guys"  இந்த மாதிரி கமெண்ட்ஸ் மட்டுமே போடனும். "funny" ங்கற வார்த்தை மிக முக்கியம்.

8. உங்க ஒரிஜினல் பேர முடிஞ்ச அளவு உபயோகிக்க கூடாது...  கத்திக்குத்து கந்தன், பெட்டி பெருமாளு, வெட்டு வேலு, பாக்கு ரவின்னு ரவுடிங்க எப்புடி அடைமொழியோட  இருக்காங்களோ அதே மாதிரி உங்க பேருக்கு முன்னாடியோ பின்னாடியோ எதாவது  ஒரு அடைமொழிய நீங்களே சேத்துக்குங்க.. உதாரணமா உங்க பேரு அசோக்குன்னா  அத டான் அசோக்குன்னும் அசாருன்னா  அத அசால்டு அசாருன்னும் மாத்தி வச்சிக்கலாம்.. காலப்போக்குல அதுவே உங்களுக்கு நிரந்தரமான பேராயிடும்.


9. அப்புறம் பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவி பண்ணனும்.. அது எப்புடி பண்றது? கைக்காசு எதும் போயிருமோன்னு பயப்படாதீங்க.. அது ரொம்ப ரொம்ப ஈஸி.. ஒரு குழந்தை சோகமா   இருக்கமாதிரி ஒரு ஃபோட்டோ... அதுக்குள்ள, இந்த குழந்தை எலும்பு புற்று நோயால் அவதிப்படுகிறது... அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் ரூபாய் தேவை..Facebook accepted to give 10 paise per each  like... please like and save the child" அப்புடின்னு ஒரு ஃபோட்டோவ எவனாவது share  பண்ணிருப்பான்.... அதுக்கு மத்தவங்க மாதிரியே ஒரு லைக்போட்டு முடிஞ்சா share பண்ணி விடுங்க.. அவ்ளோதான் கொழந்தைய காப்பத்தியாச்சி... மத்ததெல்லாம் facebook பாத்துக்கும்.

10. எல்லார்கிட்டயும் பாசமா இருக்கனும்... நேர்ல பாத்தா நீங்க சில பேர்ட்ட மூஞ்சி குடுத்து கூட பேசமாட்டீங்க...முன்னாடி விட்டு பின்னாடி அசிங்க அசிங்கமா கூட திட்டிருப்பீங்க.. ஆனா ஃபேஸ்புக்ல அப்புடி வெளிப்படையா எல்லாம் பேசக்கூடாது.. "கலக்குங்க மச்சி" "சூப்பர் மச்சி" "ஆல் த பெஸ்ட் மச்சி" இப்புடிதான் பேசி பழகனும்.. குறிப்பா பொண்ணுங்களுக்குள்ள நிறைய கொழாயடி சண்டை வரைக்கும் நடந்துருக்க்கும்.. ஆனா ஃபேஸ்புக்ல "hi dear" "you are looking awesome dear" "have fun dear" "u rocking  dear" இந்த மாதிரி தான் பேசனும். dear ங்கறது பொண்ணுங்களுக்கு தான்... பசங்க அவசரப்பட்டு யூஸ் பண்ணி தோஸ்தானாவ  ஃபார்ம் ஆயிராதீங்க..

11. அப்புறம் சில ஃபோட்டோக்கள் upload பண்ணனும்னு போது உங்களுக்கு அதுக்கு  என்ன description குடுக்குறதுன்னு தெரியாது.... அந்த மாதிரி சமயங்கள சமாளிக்க ஒரு ஆயுதம் இருக்கு... "how many likes?" அப்புடின்னு போட்டு விட்டுடனும்....  சில தாவர உண்ணிகள் அதுக்கும் லைக் போடும்... ஆன சில ஊண் உண்ணிகள் கெட்ட வார்த்தைல திட்டுறதுக்கு கூட வாய்ப்பு இருக்கு. அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

12. உங்க ஸ்டேடஸ்க்கு likes வாங்குறது ரொம்ப முக்கியம்... சில சமயம் என்ன status போடுறதுண்ணே தெரியலையா...ஒரு சூப்பர்  ஐடியா இருக்கு...

If you find your ஜட்டி size in the below numbers.. like it.. அப்புடின்னு போட்டு கீழ

      "75, 80, 85, 90, 95, 100, 110"

இப்புடி போட்டுருங்க... இதுக்குள்ள எல்லாரும் வந்துதான் ஆகனும்... கண்டிப்பா லைக் போட்டு தான் ஆகனும்.. அப்ப கோவணம் கட்டுறவங்கள கவர் பண்ண என்ன பண்றதா? அட கோவணத்துக்கெல்லாம் சைஸ் இல்லப்பா... free size தான்.

14. ஸ்டேடஸ் update ரெம்ப ரெம்ப முக்கியம்.. பக்கத்து வீட்டு அக்கா உங்கள சர்ஃப் வாங்கிட்டு வர  சொன்னிச்சின்னி வச்சிக்குங்க உடனே பொசுக்குன்னு போயிற கூடாது... வந்து facebook ல "surf வாங்க போறேன்"னு  status update பண்ணிட்டு தான் போகனும்.. ஏஞ்சொல்றேன்னா நீங்க சொல்லாம கொல்லாம சர்ஃப் வாங்க பொய்ட்டீங்கன்னு வச்சிக்குங்க உங்க ஆடியண்ஸ் எல்லாம்  எங்க பொயிட்டீங்க எங்க பொய்ட்டீங்கன்னு தவியா தவிச்சி போயிருவாங்கல்ல.. அது மட்டும் இல்ல நீங்க உச்சா போறதுக்கு முன்னால, கக்கா போறதுக்கு முன்னால கூட ஸ்டேடஸ் அப்டேட் பண்ணிட்டு தான் போகனும்...



15. அதே மாதிரி நீங்க உங்க location la பாப்ப நாயக்கம் பட்டி ன்னு போட்டு வச்சிருப்பீங்க.. திடீர்னு அலுவலக பணிக்காக ரெண்டு நாளூ எருமைநாயக்கம் பட்டிக்கு போறீங்கன்னு வச்சிக்குவோம் உடனே லொக்கேஷன் மாத்திரனும்... ஏன்னா உங்கள பாக்க வர்ற உங்க ரசிகர்கள், பாப்பநாயக்கம்பட்டிக்கு போய் ஏமாந்துரகூடாது பாருங்க...

16. அப்புறம் இந்த பொண்ணுங்கள கண்டா உங்களுக்கு சுத்தமா புடிக்கவே கூடாது.. ச்ச ச்ச... வெளியில மட்டும் தான்...உதாரணமா ஒரு காதல் தோல்வி பாட்டு வந்துச்சின்னு வச்சுக்குங்க அதுல  பொண்ணுங்கள தாக்குற மாதிரி உள்ள ரெண்டு லைன அப்புடியே லபக்குன்னு கவ்வி  உங்க ஸ்டேடஸ்ல போட்டுக்கணும்.... அப்பதான் நீங்க ரவுடியா ஃபார்ம் ஆக முடியும்... உங்க
நண்பர்கள் வட்டமும் பெருசாகும்.. ஏன்னா இந்த குடிகாரய்ங்களும், பொண்ணுங்களால பாத்திக்கப்பட்டவிங்களூம்  தான் உடனே friend  ஆயிருவாய்ங்க. நீங்க பல பொண்ணுங்க கிட்ட செருப்படி வாங்குன அப்புறம் தான் அந்த state ku  போனீங்கங்குற உண்மை யாருக்கும் தெரியக் கூடாது.

17. அப்புறம் இந்த ஆடு வெட்டுறவிங்க, கோழி வெட்டுறவிங்க, மரத்த வெட்டுறவிங்களையெல்லாம் "பாவிங்க" "மனிதாபிமானம் இல்லாதவிங்க"
"இதுங்கள்ளாம் என்ன ஜென்மம்" "இரக்கமில்லாதவர்கள்" ன்னு எப்புடி எப்புடி முடியுமோ அப்புடியெல்லாம் திட்டனும்.. ஏன்னா வெட்டுறங்கதான் குற்றவாளிங்க.. என்ன... நம்ம ஆடு கோழியெல்லாம் திங்கலைன்னா அவங்க ஏன் வெட்ட போறாங்கன்னு கேக்குறீங்களா? அதெல்லாம் கேட்க கூடாது... அவங்க பண்றது தப்பு தான்.. இதயெல்லாம் கேட்டா நீங்க அப்பாடக்கர் ஆக முடியாது... 

என்ன ஓகே வா..வெற்றியோட வாங்க

இவ்வாறாகச் செய்து வந்தால் வருடத்தின் இந்த நாள் மட்டுமல்லாமல் எந்த நாளும் இனிய நாளாகவே அமையும்.

எண்ணம் : நண்பன் அசால்ட்டு அசார்
கருத்துக்கள் : நண்பன் கார்த்தி
தொகுப்பு : முத்துசிவா


44 comments:

  1. விழுந்து விழுந்து சிரித்தேன்...பிரமாதமான பதிவு பாஸூ.. சூப்பர் :))

    ReplyDelete
    Replies
    1. இந்த பீ போஸ்ட்ல விழுந்து விழுந்து சிரிக்க என்ன இருக்கு

      Delete
  2. மச்ஹி.. வழக்கம் போல தாறுமாறு...செம்ம்ம்ம்ம :)

    ReplyDelete
  3. சான்சே இல்ல சார் ,

    அப்புறம் ஒரு முக்கியமான விஷயத்த விட்டுட்டீங்களே , " profile படத்துல ஒரு குழந்த போட்டாவோ இல்ல பூனைக்குட்டி, இல்ல திரிசா போட்டாவோ இருந்தா, - கண்டிப்பா அது அட்டு பிகர் ".

    ReplyDelete
  4. அருமை. நகைச்சுவைக்காக என்று சொன்னாலும் அத்தனையும் உண்மை. எல்லாமே நடக்குது. அந்த பக்கம் போறதுக்கே கடுப்பா இருக்கு.

    ReplyDelete
  5. ஹா ஹா ! இவ்வளவு இருக்கா !

    ReplyDelete
  6. கலக்குறீங்க

    சூப்பர்ருங்க செம காமடி

    ReplyDelete
  7. விளக்கமா விரிவா அதிரடியாக சொன்னமைக்கு நன்றிகள்

    ReplyDelete
  8. அப்படியே செய்றேன் ,அப்பாடக்கர் ......

    ReplyDelete
  9. உண்மையில் இதைப் படித்து விட்டு அலுவலகத்தில் சிரிக்க முடியாது என்பதால் போன் பண்ணுவது போல் வெளியே போய் வாய் விட்டு சிரித்தேன்..ஏதாவது ஒரு வகையில் நாமும் (ஒரு தொணைக்கு தான் !) இதில் வருவோம் தான்..என்றாலும் அருமையான அங்கதம். எழுதியவர் வாள்க.

    ReplyDelete
  10. நெஜமா நீங்க தாங்க பெரிய அப்பாடக்கர்.....! எங்களுக்கெல்லாம் சொல்லித்தர குரு....!
    உங்கள் பதிவிற்கு நன்றி....

    ReplyDelete
  11. நெஜமா நீங்க தாங்க பெரிய அப்பாடக்கர்.....! எங்களுக்கெல்லாம் சொல்லித்தர குரு....!
    உங்கள் பதிவிற்கு நன்றி....

    ReplyDelete
  12. உங்க அனுபவங்களை அப்படியே தந்திருக்கிறீங்களே.... நானும் use பண்ணிக்கிறன்....

    ReplyDelete
  13. இப்பதான் பாஸ் தெரியுது எனக்கு ஏன் எந்த பிகரும் மடியிதில்லனு

    சூப்பர் காமடி பாஸ்...

    ReplyDelete
  14. @ராம்குமார் - அமுதன் :

    நன்றி நண்பரே :)

    ReplyDelete
  15. @பீர் | Peer, அருணையடி:

    வருகைக்கு நன்றி !!

    ReplyDelete
  16. @Dr.Dolittle:

    நன்றி :)

    அந்த profile photo வுக்கு நான் ரெண்டு paragraph எழுதி வச்சிருந்தேன்... போஸ்ட் பண்ணும்போது எப்டியோ மிஸ் பண்ணிட்டேன்... :)

    ReplyDelete
  17. @திண்டுக்கல் தனபாலன் :

    //ஹா ஹா ! இவ்வளவு இருக்கா !//

    இது கம்மி தலைவா...:)

    ReplyDelete
  18. @மனசாட்சி™ :

    நன்றி :)

    ReplyDelete
  19. @Bladepedia கார்த்திக் s, முரளிகண்ணன்:

    நன்றி

    ReplyDelete
  20. @வலைஞன் :

    அப்படியே ஆகட்டும் :)

    ReplyDelete
  21. @chandramohan s:

    ரொம்ப thanks boss :)

    ReplyDelete
  22. @joe rabinson :


    //ஜமா நீங்க தாங்க பெரிய அப்பாடக்கர்.....! எங்களுக்கெல்லாம் சொல்லித்தர குரு....! //

    ஹிஹி..

    ReplyDelete
  23. @Gobinath

    //இப்பதான் பாஸ் தெரியுது எனக்கு ஏன் எந்த பிகரும் மடியிதில்லனு//

    நா அந்த மேட்டர் பத்தி எதுமே சொல்லலியே :)

    ReplyDelete
  24. நானும் என்னமோன்னு நெனச்சேன் கலக்கிட்டிங்க தலைவா

    ReplyDelete
  25. Hilarious! Excellent write up - liked it very much!

    ReplyDelete
  26. அருமையான பதிவு...

    ReplyDelete
  27. romba arumaiya yeludhiyirukeenga....

    Yen nanbar giri avaroda giriblog la unga post pathi pottar. adhunala vandhu padichen. inimey adikkadi varuven.

    Rajesh.v

    ReplyDelete
  28. பாஸ் கலக்கிட்டீங்க. சூப்பரோ சூப்பர்! இன்னும் வேறு மாதிரியான சீரியஸ் தொந்திரவுகளும் இருக்கின்றது - இளம்பெண்கள் மற்றும் ஆண்களால். இதனாலேயே ஃபேஸ்புக் பக்கம் போவதற்கே சிலசமயம் கடுப்பாயிருக்கிறது. அதிலும் திரைப்படம் தயாரிக்க என்னிடம் சாட்டில் ஃபேஸ்புக் நண்பர் (பிலிம் குறித்து அடிப்படை எதுவும் தெரியாதவர்/நடித்திருப்பது ஒரு வெ(கு)றும்படம்) ஒருவர் ”ஜஸ்ட் ஒரு கோடி இருபது லட்சம்” கேட்டார். நான் கருணாநிதியின் பேரன்கள், பவர் ஸ்டார் என்று பலர் இருக்கின்றனர் அவர்களைப் பாருங்கள் என்றேன். இளம்பெண்களால் காதல் மெசேஜ் தொந்திரவு! அது நமக்கு முடிந்துவிட்டது என்றாலும் கூட சிங்கிள் என்பதால் விடுவதில்லை. ஃபேஸ்புக் இல்லை ஃபேஸ்ப்ளாக் என்பதால் அலப்பறையும், மொக்கையும் தாங்கமுடியவில்லை. மிகவும் அருமையான பதிவு. கிரி ப்ளாக் பார்த்து இதைப் படித்தேன்.

    ReplyDelete
  29. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரசித்துச் சிரிக்கவைத்த இடுகை. வெல்டன் :)

    ReplyDelete
  30. //"உங்களால தான் நா இப்ப நிம்மதியா இருக்கேன்" ன்னு மனசார வாழ்த்துறாங்க. இதெல்லாம் என்ன பெருமையா... கடமே..........//
    கலக்குற மச்சி........

    ReplyDelete
  31. //////// "உங்களால தான் நா இப்ப நிம்மதியா இருக்கேன்" ன்னு மனசார வாழ்த்துறாங்க. இதெல்லாம் என்ன பெருமையா... கடமே..........//////
    கலக்குற மச்சி

    ReplyDelete
  32. "உங்களால தான் நா இப்ப நிம்மதியா இருக்கேன்" ன்னு மனசார வாழ்த்துறாங்க. இதெல்லாம் என்ன பெருமையா... கடமே........../////

    கலக்குறிங்க சார். (நீங்க சொல்லிகுடுதாதா சரியாய் follow பண்றனா?)

    ReplyDelete
  33. கலக்கல்! இந்த விசயத்துல பி.எச் டியே பண்ணியிருப்பீங்க போல! ஹாஹாஹா!

    ReplyDelete