Saturday, March 30, 2013

INSIDIOUS (2010) - பயம் விரும்பிகளுக்கு!!!

உலகத்துல எந்த மொழில பேய் படம் எடுத்தாலும் கதை ஒரே மாதிரி தான் இருக்கும். பொதுவா படத்துல வர்ற பேய்கள ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒண்ணு ஃப்ளாஷ்பேக் பேய்கள் இன்னொன்னு NON-ஃப்ளாஷ்பேக் பேய்கள். இந்த ப்ளாஷ்பேக் பேய்கள்ல பெரும்பாலும் லேடீஸ் பேய்களும் குழந்தை பேய்களும் தான் அதிகம் வரும். இந்த ஃப்ளாஷ்பேக் பேய்கள ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒண்ணு பேச்சிலர் பேய்கள், இன்னொன்னு ஃபேமிலி பேய்கள். இந்த தனியா வர்ற லேடீஸ் பேய்கள் பெரும்பாலும் ஒரு நாலு அஞ்சு பேரால கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கும், அவங்கள பழிவாங்குறதுக்காக சபதம் எடுத்து பேயா சுத்திகிட்டு இருக்கும்.

இந்த ஃபேமிலி பேய்கள்ல பெரும்பாலும் ஒரு அம்மா பேயும் ரெண்டு குழந்தை பேய்களும் இருக்கும். இந்த மூணு பேரும் ஒரே நேரத்துல முன்னாள் புருஷனாலயோ இல்ல எதாவது ஒரு சைக்கோவாலயோ  ஒண்ணா சாகடிக்கப்பட்டிருப்பாங்க. இவங்க இறந்து போன வீட்டுக்கு வர்றவங்கள பயமுறுத்துறதுதான் இதுங்களோட வேலை. அந்த வீட்டுக்கு புதுசா வர்ற குடும்பத்துலயும் இந்த பேய் ஃபேமிலில என்ன கான்ஃபிக்ரேஷன் இருக்கோ அதே கான்ஃபிக்ரேஷன்ல தான் குழந்தைகள் இருக்கும். அதாவது பேய் பேமிலில ஒரு 5 வயசு குழந்தையும் ஒரு 3 வயசு குழந்தையும் இருந்தா அந்த வீட்டுக்கு புதுசா குடி வர்றவங்களுக்கும் அதே வயசுல ரெண்டு  குழந்தைங்க இருக்கும்.

இந்த NON-flash back பேய்கள் பெரும்பாலும் ஆம்பளை பேயிங்கதான். இதுங்க ஏன் பேயா சுத்துதுங்கன்னு  பெருசா காரணம் எதுவும் சொல்ல தேவை இல்ல. மூஞ்சில அங்கங்க கிழிஞ்சி தொங்குறமாதிரியும், ஒரு சைடு நெருப்புல வெந்த மாதிரியும் காமிச்சா போதும். இந்த vampire ருங்க எல்லாம் இந்த குரூப்புல தான் வரும்.  இதுங்க பழிக்கு பழியெல்லாம் வாங்காது கண்ணுல பட்டவிங்கள எல்லாம் புடிச்சி கடிச்சி பேயாக்கி விட்டுரும். இவ்வளவு தான்பா உலக பேய்படமே. (இவை என்னுடைய ஃப்ளாஷ்பேக் பேய்களும், NON-ஃப்ளாஷ்பேக் பேய்களும் என்ற ஒரு பழைய பதிவிலிருந்து சுட்டு மறுபடியும் ரிப்பீட்டு அடித்தது)

பொதுவாவே பேய் படங்கள்னாலோ இல்லை த்ரில்லர் படங்கள்னாலோ ஆல் ஒவர்த வேர்ல்டு பயன்படுத்திகிட்டு இருக்கது  ஒரே ஒரு கான்செப்ட் தான்  ஒரு 5 பேர் கொண்ட கும்பல் (3 பசங்க +2 பொண்ணுங்க) எவனுமே போகாத ஒரு காட்டுக்கு போய் எவனுமே தங்காத ஒது பங்களாவுல போய் தங்குவாய்ங்க.  ஒவ்வொருத்தரா செத்துகிட்டே வர கடைசில ஒரே ஒரு பொண்ணு மட்டும் தப்பிச்சி வரும்.  ஆங்கிலத் திரைப்படங்களும் இதுக்கு விதிவிலக்கு இல்லை. அவிங்க எடுக்குற படங்கள்ல ஒரு குடும்பம் ஒரு புது வீட்டுல போய் தங்கும். கண்டிப்பா அந்த வீட்டுல பூட்டி வைக்கப்பட்ட ஒரு அறையோ இல்ல பழைய பொருள்கள வைக்கிற ஒரு பால்கனியோ கண்டிப்பா இருக்கும்.

இவிங்க சும்மா இல்லாம அதுல ஏறி  தூங்கிகிட்டு இருக்க பேய நோண்டி விட்டு முழிக்க வச்சிருவாய்ங்க..அப்புறம் என்ன... பேய காமிக்காமலேயே மியூசிக் போட்டு நம்மள  பயமுறுத்துவாய்ங்க... கடைசில ஒரு மந்திர வாதிய கூப்டு வந்து அந்த பேய அழைச்சிட்டு வந்து பேச்சு வார்த்த நடத்துனா அது ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்லும்... என்ன அவன் கற்பழிச்சிட்டான். இவன் மர்டர் பண்ணிட்டான்னு... இதுலருந்து மாறுபட்டு வர்றது ஒரு சில படங்கள் மட்டும் தான் அந்த மாதிரி ஒரு படம் தான் இந்த INSIDIOUS...

வழக்கம் போல ஒரு 5 பேர் கொண்ட ஃபேமிலி புதுசா ஒரு வீட்டுக்கு போறாங்க... நா மேல சொன்ன அனைத்தும் நடக்குது. பால்கனில போய் கலைச்சி விட்டு பேய எழுப்பி விட்டுறாய்ங்க. அதுக்கப்புறம் வீட்டுக்குள்ள அங்கயும் இங்கயும் யாரோ திரியிற மாதிரியே ஒரு ஃபீலிங்... திடீர்னு ஒரு நாள் அவங்க பையன் என்ன நோயின்னே கண்டு பிடிக்க முடியாத ஒரு நோயால கோமா ஸ்டேஜூக்கு போயிட... அதை தொடர்ந்து பல திகில் சம்பவங்கள நடத்தி  நம்மள மெரட்டி க்ளைமாக்ஸ செமயா முடிச்சிருக்காங்க.

படத்தோட பெரிய ப்ளஸ் மியூசிக் தான். இதுக்கு முன்னாடி "The Grudge" படத்துல வர்ற "கிர் கிர் கிர்" ஒரு வித்யாசமான சவுண்டு பீதிய கெளப்பும்... அதே மாதிரி இந்த படத்துலயும் ஒரு மியூசிக் இருக்கு.. செம...  முதல் ஒரு 15 நிமிஷத்துக்கு அப்புறம் படம் முடியிற வரைக்கும் செம த்ரில்லிங்.. செமயா மெரட்டிருக்காங்க... தனியா பாக்குறது கொஞ்சம் கஷ்டம் தான்.

படத்தோட டைரக்டர் ஜேம்ஸ் ஸ்வான்... (James Swan).. இவரு வேற யாரும் இல்லை.. SAW, SAW II, SAW III, SAW IV படங்களை எடுத்தவர். அதாங்க... இந்த ஆளுங்கள பல மாதிரி டெக்னிக்கலா சாவடிச்சி சாவடிச்சி வெளாடுவானுங்களே அந்த படம்.  SAW உல எவ்வளவு கொடுரமா கொலைகள காமிச்சி நம்மள உச்ச கட்ட அருவருப்புக்கு கொண்டு போனாரோ அதே மாதிரி இந்த படத்துல பயத்தோட edge க்கே கொண்டு போயிருக்காரு...




சமீபத்துல நா பாத்த த்ரில்லர் படங்கள்ல எனக்கு மிகவும் பிடிச்ச படம்... கண்டிப்பா உங்களையும் மிரட்டும். இந்த படம் பாத்ததுலருந்து நண்பர்கள்கிட்டல்லாம் இத பாக்க சொல்லிருக்கேன்.. வேறென்னா நா பயந்த மாதிரி அவிங்களும் பயந்து சாகட்டும்னு ஒரு நல்லெண்ணம்தேன்...

இந்த படத்தின் torrent link:

http://www.torrentbit.net/torrent/1966359/Insidious%202010%20720p%20BRRip%20XviD%20%28avi%29%20TFRG/

IMDB rating   : 6.7/10
Category        : Horror, Thriller

1 comment:

  1. போல்டர்கைஸ்ட் படத்தோட கதைக்கரு தான் இந்தப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. படம் முழுக்க நிறைய க்ளிஷே சீன்கள். வெத்தான பயமுறுத்தல்கள். எரிச்சலூட்டும் கதாபாத்திரங்கள்.

    நேரமிருந்தால் the changeling (1980) படம் பார்க்கவும். இருட்டை வைத்து பயமுறுத்துதல், பேயைக் காட்டி பயமுறுத்துதல் இருக்காது. simple psychological horror மட்டுமே.

    ReplyDelete