Friday, February 10, 2012

ஃப்ளாஷ்பேக் பேய்களும், NON-ஃப்ளாஷ்பேக் பேய்களும்


Share/Bookmark
 "ஏன்பா.. இந்த படத்தையெல்லாம் நீ இவ்வளவு சீக்கிரமாவா பாத்துட்ட" ன்னு
என்னத்த கன்னையா மாதிரி கேக்குற உங்க மைண்டு வாய்ச நா கேட்ச் பண்ணிட்டேன்.. ஹிஹி.. பாத்தவங்க ஃப்ரீயா விடுங்க. பாக்காதவங்க முடிஞ்ச வரைக்கும் பாக்க முயற்சி பண்ணுங்க.

SEVEN  (1995)


இந்த படத்த பாத்தப்ப இந்த இங்கிலீஷ்காரங்க மேல செம்ம கடுப்பாயிட்டேன். ஏன்னு கேக்குறீங்களா? நம்ம ஷங்கர் படத்த காப்பி அடிச்சி படம் எடுத்துருக்காய்ங்க.. அதாங்க... நம்ம ஊர்ல 2005 ல வந்த  அந்நியன்ங்கற படத்த அப்புடியே காப்பி அடிச்சி 1995ல்யே படம் எடுத்து ரிலீஸ் பண்ணி, நம்ம ஷங்கர கலாய்ச்சிருக்காய்ங்கன்னா கோவம் வருமா வராதா? இது பத்தாதுன்னு நம்ம கெளதம் மேனனோட காக்க காக்க படத்துலருந்தும் ரெண்டு மூணு சீன காப்பி அடிச்சிருக்காய்ங்க. இந்த ஹாலிவுட்காரய்ங்க எப்ப தான் திருந்த போராய்ங்கன்னு தெரியலப்பா..

தொடர் கொலைகள துப்பறிஞ்சி யார் கொலையாளிங்கறத கண்டுபுடிக்கிறது தான் படத்தோட கதை. அதாவது நம்ம அந்நியன் படத்துல ப்ரகாஷ்ராஜும், விவேக்கும் மெயின் கேரக்டர்லயும் விக்ரம் சைடு கேரக்டர்லயும்  நடிச்சிருந்தா எப்புடி இருக்குமோ அது தான் இந்த படம். ஆனா அந்நியன் அளவுக்கு மசாலா படம் இல்ல. இந்த மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் காமெடியெல்லாம் கெடையாது. செம டீசன்ட்டான சஸ்பென்ஸ் த்ரில்லர்.  கடைசி பதினைஞ்சி நிமிஷம் உண்மையிலயே நமக்கு பயங்கர expectation ah கெளப்பி விட்டு
நகத்த கடிச்சி துப்ப வச்சிருவாய்ங்க. கண்டிப்பா பாக்காதவங்க பார்க்க வேண்டிய ஒரு படம்.


இந்த படத்தோட Torrent link: http://www.torrentbit.net/torrent/1232877/Seven%20%281995%29%20%5BDVDrip-mp4%5D/

IMDB Rating : 8.7/10
Category : Crime, Thriller

THE GRUDGE (2004)



இதுவும் நம்ம ஊர்லருந்து காப்பி அடிச்ச படமான்னு கேப்பீங்களே? இது மட்டும் இல்ல. உலகத்துல எந்த மொழில பேய் படம் எடுத்தாலும் கதை ஒரே மாதிரி தான் இருக்கும். பொதுவா படத்துல வர்ற பேய்கள ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒண்ணு ஃப்ளாஷ்பேக் பேய்கள் இன்னொன்னு NON-ஃப்ளாஷ்பேக் பேய்கள். இந்த ப்ளாஷ்பேக் பேய்கள்ல பெரும்பாலும் லேடீஸ் பேய்களும் குழந்தை பேய்களும் தான் அதிகம் வரும். இந்த ஃப்ளாஷ்பேக் பேய்கள ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒண்ணு பேச்சிலர் பேய்கள், இன்னொன்னு ஃபேமிலி
பேய்கள். இந்த தனியா வர்ற லேடீஸ் பேய்கள் பெரும்பாலும் ஒரு நாலு அஞ்சு பேரால கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கும், அவங்கள பழிவாங்குறதுக்காக சபதம் எடுத்து பேயா சுத்திகிட்டு இருக்கும்.

இந்த ஃபேமிலி பேய்கள்ல பெரும்பாலும் ஒரு அம்மா பேயும் ரெண்டு குழந்தை பேய்களும் இருக்கும். இந்த மூணு பேரும் ஒரே நேரத்துல முன்னாள் புருஷனாலயோ இல்ல எதாவது ஒரு சைக்கோவாலயோ  ஒண்ணா சாகடிக்கப்பட்டிருப்பாங்க. இவங்க இறந்து போன வீட்டுக்கு வர்றவங்கள பயமுறுத்துறதுதான் இதுங்களோட வேலை. அந்த வீட்டுக்கு புதுசா வர்ற குடும்பத்துலயும் இந்த பேய் ஃபேமிலில என்ன கான்ஃபிக்ரேஷன் இருக்கோ
அதே கான்ஃபிக்ரேஷன்ல தான் குழந்தைகள் இருக்கும். அதாவது பேய் பேமிலில ஒரு 5 வயசு குழந்தையும் ஒரு 3 வயசு குழந்தையும் இருந்தா அந்த வீட்டுக்கு புதுசா குடி வர்றவங்களுக்கும் அதே வயசுல ரெண்டு குழந்தைங்க இருக்கும்.

இந்த NON-flash back பேய்கள் பெரும்பாலும் ஆம்பளை பேயிங்கதான். இதுங்க ஏன் பேயா சுத்துதுங்கன்னு  பெருசா காரணம் எதுவும் சொல்ல தேவை இல்ல. மூஞ்சில அங்கங்க கிழிஞ்சி தொங்குறமாதிரியும், ஒரு சைடு நெருப்புல வெந்த மாதிரியும் காமிச்சா போதும். இந்த Vampire ருங்க எல்லாம் இந்த குரூப்புல தான் வரும்.  இதுங்க பழிக்கு பழியெல்லாம் வாங்காது கண்ணுல பட்டவிங்கள எல்லாம் புடிச்சி கடிச்சி பேயாக்கி விட்டுரும். இவ்வளவு தான்பா உலக பேய்படமே. சரி நம்ம படத்துக்கு வருவோம்.



The Grudge- இந்த படத்தையும் பெரும்பாலானவங்க பாத்துருபீங்கன்னு நெனைக்கிறேன். பார்க்காதவங்களுக்காக.  இதுவும் மேல சொல்லியிருக்குற ஃப்ளாஷ்பேக் பேய்கள் வகையை சேர்ந்த பேய் தான். ஆனா ரொம்ப பயங்கரமான பேய். இது இருக்குற  வீட்டுக்கு புதுசா யார் வந்தாலும் அவங்கள கூச்சமே படாம கொன்னுடும். இந்த கண்டிப்பா ராத்திரில தனியா பாக்குறது கஷ்டம்தான். படத்துல ஒவ்வொரு செகண்டும் நம்மள பயமுறுத்தும். இதுல பேய் வரும்போது ஒரு ஸ்பெஷல் சவுண்டு ஒண்ணு குடுத்துருக்காய்ங்க பாருங்க.. படம் முடிஞ்சும் அந்த சவுண்டு என்ன சுத்தி கேட்டுகிட்டே இருக்க மாதிரி ஒரு  ஃபீலிங்கு. மொதல்ல லேப்டாப்ப மடியில வச்சிகிட்டு  ear phone போட்டுகிட்டு பாத்துகிட்டு இருந்தேன். கொஞ்ச நேரத்துல அல்லு கெளம்பி ear phone ah  கழட்டிட்டு லேப்டாப் சவுண்டுல பாத்தேன். அப்புறம் கொஞ்ச நேரத்துல லேப்டாப்ப தனியா வச்சிட்டு எட்டி உக்காந்து பாக்க ஆரம்பிச்சிட்டேன்.

இந்த படத்தோட Torrent link:http://www.torrentbit.net/torrent/1742539/The%20Grudge%202004%20Eng%20DVDrip%20-Fenopy%20com/ 

IMDB Rating : 5.7/10
Category : Horror, Mystery


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

10 comments:

Kumaran said...

என்னென்னு சொல்றது..ரொம்ப ரொம்ப ரசிச்சு படிச்சேன்..அவ்வளவு சுவாரஸ்யமான எழுத்து நடை..ரசிக்கலனா அம்மன் குத்தம் ஆயிடும்..

@@ இது இருக்குற வீட்டுக்கு புதுசா யார் வந்தாலும் அவங்கள கூச்சமே படாம கொன்னுடும். @@
பேயிக்கு எல்லாம் கூச்சமா ?? ம்ம்ம்..குசும்பு தாங்ககல..

நல்ல பதிவு..அதைவிட சிறந்த படங்களை பற்றிய நல்ல தொகுப்பு..என் நன்றிகள்..இதன் தொடர்ச்சி வருமானா சொல்லுங்கோ ??

சைக்கோ திரை விமர்சனம்

சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா நகைச்சுவையான நடையில் திகில் பட விமர்சனம்!! குட்

ஹாலிவுட்ரசிகன் said...

மிக அழகாக சிரிக்க வைத்து ஒரு ஹாரர் படம் பற்றி சொல்லியிருக்கீங்க. இன்னும் இந்தப் படம் பார்க்கல. ஆனால் Se7en படம் பார்த்திருக்கேன். மிகச் சூப்பரான த்ரில்லர். டோன்ட் மிஸ் இட்!!!

பாலா said...

செவன் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் கிரட்ஜ் எல்லா பாகங்களும் பார்த்துவிட்டேன். கதை அவ்வளவு பிரமாதமாக இல்லாவிட்டாலும், காட்சி அமைப்புகள், கண்டிப்பாக பீதியை கிளப்பி விடுபவை. நம் தைரியத்தின் அளவை, இந்த படத்தை இரவில் தனியாக பார்த்து சோதித்து கொள்ளலாம். அதிலும் அந்த "கிர்ர்ர்ர்...." சத்தம்.... மிக திகிலானது.

முத்துசிவா said...

@Kumaran:

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் பற்பல. :)

//பேயிக்கு எல்லாம் கூச்சமா ?? ம்ம்ம்..குசும்பு தாங்ககல.//

கூச்சப்படுற பேய், கூச்சப்படாத பேய் ன்னு இன்னு ரெண்டு மூணு பிரிவு போட்டுருக்கலாமோ? :)

முத்துசிவா said...

@சி.பி.செந்தில்குமார்

நன்றி தல.

முத்துசிவா said...

@ஹாலிவுட்ரசிகன்:

கண்டிப்பா Grudge பாருங்க பாஸ்.. பாலா அண்ணன் சொல்லிருக்கமாதிரி கதை அவ்வளவு பிரமாதமாக இல்லாவிட்டாலும், காட்சி அமைப்புகள், கண்டிப்பாக பீதியை கிளப்பி விடுபவை. மிரட்டுவானுங்க...

முத்துசிவா said...
This comment has been removed by the author.
முத்துசிவா said...

@பாலா

7 மிஸ் பண்ணாம பாருங்க தல.. செம worth.

Grudge 2, 3 part நல்லாருக்குமா?
IMDB la ரேட்டிங் 5 க்கும் கீழ இருந்ததால நா அத ரெண்டையும் பாக்கல.

என் இதயம் பேசுகிறது said...

\\ மொதல்ல லேப்டாப்ப மடியில வச்சிகிட்டு ear phone போட்டுகிட்டு பாத்துகிட்டு இருந்தேன். கொஞ்ச நேரத்துல அல்லு கெளம்பி ear phone ah கழட்டிட்டு லேப்டாப் சவுண்டுல பாத்தேன். அப்புறம் கொஞ்ச நேரத்துல லேப்டாப்ப தனியா வச்சிட்டு எட்டி உக்காந்து பாக்க ஆரம்பிச்சிட்டேன்.\\

இந்த எடத்துலதான் நீங்க நிக்கறீங்க.முத்து இந்த ப்ளாக் ஐ படிக்கறது ரொம்ப லேட்டானாலும் லேட்டஸ்ட் ஆ படிச்சிட்டேன். ஆனாலும் உங்களுக்கு நக்கல் அதிகம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...