Wednesday, March 3, 2010

விண்ணை தாண்டி வருவாயா....


Share/Bookmark
நண்பர்களே.... யாராவது இந்த படத்துக்கு போகணும்னு ஆசப்பட்டீங்கன்னா, நல்ல plan பண்ணி போங்க. Office la வேல பாக்குறவங்க இந்த படத்த காலைல பாத்துட்டு மதியம் office போயிடலாம்னோ, இல்ல காலேஜ் ல படிக்கிறவங்க இந்த படத்த morning பாத்துட்டு afternoon class ku போயிடலாம்னோ நெனச்சி போனீங்க... செத்தீங்க.... ஏன்னா அவ்ளோ நேரம் ஓடுது இந்த படம். Night show போன விடிஞ்சி தான் வீட்டுக்கு போகலாம்.

இந்த படம் பாக்க என்கூட ஒரு நாலு பேர அழைச்சிட்டு போனேன். படம் முடியும் போது side la இருந்தது ஒரு சத்தம். "ச்சீ... அப்புடியெல்லாம் பண்ணாதீங்க நயன்தாரா...!! " ன்னு.

டேய்
இந்த படத்துல த்ரிஷா தானடா heroine. யாருடா நயனதாராவ கூப்புடுறதுன்னு பாத்தா.... என் பக்கத்துல உக்கார்ந்து இருந்தவன் தூக்கத்துல ஒளரிக்கிட்டு இருக்கான்.... டேய் சனியன் புடிச்சவனே எழுந்திரிட போலாம்" ன்னா bed coffee குடுத்தா தான் வருவேன்னு அடம் புடிக்கிறான்.ஒரு வழியா அவன எழுப்பி கூப்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சி...

நா சொன்ன இந்த ஒரு minus point தாங்க இந்த படத்துல. டக்குன்னு முடிக்க வேண்டிய படத்த ஒரு ரெண்டு கிலோமீட்டர் இழுத்து முடிச்சிருக்காங்க.

படத்தோட title போடும் போதே ரஜினி ரசிகர்கர்களின் முகம் சிவப்பாக மாறுற அளவுக்கு ஒரு கொடுமை நடக்குது. காரணம் 'young super star' simbhu போடுறதுதான். ஆனா படம் முடிஞ்சி வர்றப்போ "ச்ச... போன போகுது போட்டுக்கட்டும்" ன்னு சொல்ற அளவுக்கு நடிச்சிருக்க்காறு சிம்பு. இது வரைக்கும் இப்டி ஒரு சிமபுவ யாரும் பாத்துருக்க மாட்டங்க. அவ்ளோ சூப்பரான நடிப்பு. இவ்ளோ expressions, இவளோ அழகான முகம் இதெல்லாம் இவளோ நாள் எங்க வச்சிருந்தாருன்னே தெரியல....

படம் ஆரம்பிச்ச மொத நிமிஷத்துலேர்ந்து த்ரிஷாவ லவ் பண்ண ஆரம்பிக்கிறாரு. படத்தோட கடைசி நிமிஷம் வரைக்கும் அத மட்டுமே பண்றாரு எ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கோட.

த்ரிஷா தேவதை மாத்ரி வர்றாங்க. இந்த சிம்பு-த்ரிஷா pair ah விட best pair வேற இருக்குமான்னு சந்தேகம் தான். அவ்ளோ அழகா லவ் பண்றாங்க. படத்துல நெறைய scene ல கை தட்டி ரசிக்கிற மாதிரி இல்லாம, feel பண்ணி ரசிக்க வச்சிருக்காங்க.

லவ் story ன்னு வந்துட்டாலே, ஹீரோவோட பேரு கார்த்திக் னு தான் இருக்கணும்னு நடிகர் சங்கத்துல எதாவது சட்டம் போட்டுருக்காங்கலான்னு தெரியல. இந்த படத்துல சிம்பு பேரும் கார்த்திக் தான்.

"இந்த உலகத்துல எத்தனையோ பேரு இருக்கும் போது, நா உன்ன மட்டும் ஏன் லவ் பண்ணேன் ஜெஸ்சி? " இந்த dialogue ah சிம்பு படத்துல ஒரு 40 தடவ சொல்லுவாரு.

" நீ ஏன் என்ன லவ் பண்ண கார்த்திக்?" இந்த dialogue ah த்ரிஷா ஒரு 50 தடவ சொல்லுவாங்க.

ஒரு கட்டத்துல " டேய் கருமம் புடிச்சவனுன்களா... நீங்க லவ்வே பண்ண வேண்டாம்... செத்துருங்கடான்னு " நம்ம சொல்ற அளவுக்கு second half la இழுவை.

இதுக்கும் மேல வழக்கமான கெளதம் படத்தோட வாடை கொஞ்சமும் குறையல. எப்பவும் போல எல்லா சீன்லயும் background voice la narrate பண்றது. வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் ல வர்ற அதே எடத்துல US la ஒரு song. அத விட கொடும வழக்கமா அவன் படத்துல வர்ற மாதரியே 3rd class வசனங்கள்.

"என் பொண்ண உன் பையன் try பண்றான்"

"அவளோட front ah பாத்தத விட back ah தான் அதிகமா பாத்தேன்"

"ஒ..... "வில் ஆரம்பிக்கிற கெளதம் மேனனோட favorite வார்த்தை அடிக்கடி...

இதுமாதிரி வசனங்கள் இந்த மாதிரி படத்துக்கு தேவையா? இவன் திருந்த மாட்டங்க... திருந்தவே மாட்டன்...

எ.ஆர்.ரஹ்மான் first half ல ஹாரிஸ் ஜெயரஜோட feel ah ye குடுத்தாலும் , second half "மன்னிப்பாயா" song வரும் போது, " நா அவன் மாதிரி இல்லீங்கோ... வேற மாதிரீங்கோ" ன்னு proof பண்ணிடுறாரு.

"த்ரிஷா கெடைக்கலன்ன திவ்யா" ங்குற அருமையான ஒரு message ah இந்த படத்துல சொல்லிருக்காங்க... கண்டிப்பா ஒரு தடவ பாக்கலாம்..(தியேட்டருக்கு போனா ஒரு தடவ பாத்து தானப்பா ஆவனும்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது).

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...