ஏய் நா இண்டர்வியூக்கு போறேன்.. இண்டர்வியூக்கு போறேன்-ACCET PLACEMENT!!!
இந்தப் பதிவில்
குறிப்பிடப்படும் சம்பவங்கள் கதாப்பாத்திரங்கள் யாவும் உண்மையே.. (சினிமா மேற்கோள்கள்
மட்டும் எக்ஸ்ட்ரா)
காலேஜ்
சேந்து அஞ்சி செமஸ்டர் வர்ற வரைகும் செத்த நாய் செருப்ப கடிச்ச மாதிரி கிடக்குற பயலுக
குபீர்னு ஆறாவது செமஸ்டர்ல படிக்க கெளம்பிருவாய்ங்க. ஆளாளுக்கு நமீதா சைஸுல ஒரு புக்கை
கைல எடுத்துக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் திரிஞ்சிட்டு இருப்பானுங்க. இதுல லேடீஸ்
ஹாஸ்டல்லருந்து வர்ற ஃபோன் கால்ல டவுட்ட வேற க்ளியர் பன்னிட்டு இருப்பானுங்க. அப்டி
என்னடா கையில இவ்ளோ பெருசா வச்சிருக்காய்ங்கன்னு பாத்தா R.S.அகர்வால் எழுதுன Quantitative
Aptitude புத்தகம். சப்ஜெக்டுக்கு புக் எழுதிக் கொன்னது பத்தாதுன்னு அந்த அகர்வால்
நாதாரி நாயி இங்கயும் வந்துருச்சா. வக்காளி அவனக் கொல்லனும்டா மொதல்லன்னு தோணும்.
ப்ளேஸ்மெண்ட்க்கு
கம்பெனிங்க வரனும்னா மொதல்ல அவனுங்க மண்டையக் கழுவி காலேஜ்க்கு அழைச்சிட்டு வரனும்.
நம்மல்லாம் கூப்டப் போனா மேலயும் கீழயும் பாத்துட்டு வாட்ச்மேன் ட்ரஸ்ஸ குடுத்து கேட்டுல
உக்கார வச்சிருவாய்ங்க. அதனால அவனுங்கள கூப்டு வர நல்லா பேசுற ஒரு நாலு பேரு வேணும்.
அப்படிப்பட்ட பசங்கள செலெக்ட் பண்ணி Placement co-ordinator ah பதவி குடுத்து ஒவ்வொரு
கம்பெனிக்கும் அனுப்பி, அவனுங்கள கூட்டிக்கிட்டு வரனும். ஆமா இவனுங்க வழிச்செலவுக்கு
காசு வேணுமே? காலேஜ்ல கேட்டா “காலேஜே அவராதத்துலதான் ஓடுது.. நீ வேணா காலேஜுக்கு குடு”
ம்பாரு ப்ரின்சிபால். வேற என்ன பன்றது.. “எவன் எவனுக்கெல்லாம் வேலை வேணுமோ அவன்லாம்
2000 ரூவா குடுன்னு எல்லார்கிட்டயும் கலெக்ஷனப் போட்டு இந்த மாதிரி செலவுக்கெல்லாம்
யூஸ் பன்னிக்குவாய்ங்க. இப்ப இந்த ப்ளேஸ்மெண்ட்ல நம்ம கடந்து வந்த பாதையக் கொஞ்சம்
திரும்பி பாக்குறதுதான் இந்தப் பதிவு.
அந்த
நாளும் வந்துச்சி. மொதல்ல TCS வந்தாய்ங்க. கேலேஜே ஒரே திருவிழா மாதிரி இருந்துச்சி.
பசங்க எல்லாரும் ரேமண்ட்ஸ் மாடல் மாதிரி இருந்தாய்ங்க. பொண்ணுங்க அதுக்கு மேல… “டேய்
மச்சி.. யார்ரா இந்தப் பொண்ணு… இத நா சொல்லியே ஆகனும்… யாரும் இவ்வளவு அழக… இவ்வளவு
அழகப் பாத்துருக்க மாட்டாங்க.. “ “டேய்… நல்லா
கண்ண கழுவிட்டு பாருடா… அது நம்ம க்ளாஸ் புள்ளைதான்… ஃபுல் மேக்கப்புல வந்துருக்கு…” "அப்ப அங்க நிக்கிற பியூட்டி?” “அடேய்... நம்ம HOD மாலாடா..” “அடக் கருமத்தே…. வீட்டுக்கு போன உடனே கண்ண ஆசிட் ஊத்திக் கழுவனும்”ன்னு இப்படி பல கண்பீசன் நடக்குற அளவுக்கு புள்ளைங்களோட
கெட்டப் இருந்துச்சி.
மொதல்ல
aptitude test… முக்கால்வாசிப்பேரு தேறியாச்சி. நானும் உள்ள இருந்தேன். அடுத்து டெக்னிக்கல் இண்டர்வியூ… என்னென்னமோ கேட்டுட்டு
“ஆமா வெளியூரெல்லாம் அனுப்புனா போவியா?ன்னான்… நா படக்குன்னு “நோ சார்”ன்னேன்.. “ஏன்
சார்” னான்.. “என்னோட ஃபேமிய விட்டுட்டு என்னால எப்புடி சார்ர்… “ன்னு ஒரு விக்ரமன்
பட பர்ஃபார்மன்ஸ போட்டேன். க்ளியர் பன்னி HR இண்டெர்வியூக்கு அனுப்பிட்டானுங்க. வெளில
வந்து பயலுக்கிட்ட் சொன்னதுக்கு “அட நாசமா போற எடுபட்ட பயலே.. ஏண்டா போக மாட்டேன்னு
சொன்னே.. இதுக்கெல்லாம் போவேன்னு சொல்லனும்ண்டா” ன்னானுக… “இதெல்லாம் எனக்கு எப்படா
சொல்லிக்குடுத்தீங்க? திடீர்ன்னு கேட்டா நா என்னத்த சொல்றதுன்னு தெரியாம சொல்லித் தொலைஞ்சிட்டேனே…
அடுத்த HR இண்டெர்வியூல எப்டி கலக்குறேன் பாரு”ன்னு உள்ள போனேன்..
சொல்லிவச்சா
மாதிரி அந்தாளும் கரெக்ட்டா “வெளியூர் அனுப்புனா போவியா மாட்டியா?” ன்னான். இந்த தடவ
கொஞ்சம் கூட யோசிக்கலையே “போவேன் சார்” ன்னு மண்டைய வேகமா ஆட்டுனேன். ”டெக்னிக்கல்
இண்டர்வியூல போகமாட்டேன்னு சொல்லிருக்க.. இங்க வந்து போவேனு சொல்ற… ஒண்ணு மண்டைய இந்தப்
பக்கம் ஆட்டு இல்லை அந்தப் பக்கம் ஆட்டு.. ஏன் இப்புடி மாத்தி மாத்தி ஒளருற”ன்னாரு
அவுரு. சார் மதியாதார் தலைவாசல் மிதியாதேன்னு அவ்வையார் சொன்னாருன்னு அப்பச் சொன்னேன்..
ஆனா திருவள்ளுவர் என்ன சொல்லிருக்காருன்னா “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம்
செய்துவிடல்” ன்னு சொல்லிருக்காருன்னு கில்லி விஜய் மாதிரி மாத்தி மாத்தி பேசுனதுக்கு
எதோ சொல்லி சமாளிச்சிட்டு வெளில வந்தேன்.
மொத்த
குரூப்புக்கும் இண்டர்வியூ முடிய ராத்திரி ஆயிருச்சி. நைட்டு எட்டு மணியப் போல காலேஜ்குள்ள
வச்சி ரிசல்டு சொல்றானுங்க. EEE அட்டெண்டன்ஸ் வாரியா செலெக்ட் ஆன பேரெல்லாம் ஒவ்வொன்னா
படிக்கப் படிக்க நமக்கு உள்ளுக்குள்ள திகீர் திகீர்னு இருக்கு. கரெக்ட்டா நம்ம பேரு
வரப் போறப்ப மட்டும் டக்குன்னு ஜம்ப் பன்னி அடுத்த பேருக்கு பொய்ட்டாய்ங்க. கிட்டான்
போச்சா… காதுல குருவி ரிங்குன்னு சுத்துமே…. குபு குபுன்னு கண்ணுல தண்ணி வந்துருச்சி.
நம்ம செலெக்ட் ஆவாத்துக்கு கூட இல்லை. நமக்கு வேண்டியவங்க… வேண்டியவங்களுக்கு வேண்டியவங்க
எல்லாரும் TCS ல செலெக்ட் ஆயிட்டாங்க. அந்த சோகம் வேற..
எங்க
குரூப்புல மொத்தம் எழு பேரு (பசங்க மட்டுந்தேன்..). நானு, அனந்த், ப்ரபு, ஞான சுந்தர்,
பரத், ராஜா, வினோத். அதுல அனந்த், ப்ரபு செலெக்ட் ஆயிட்டானுங்க. ”அள்ளிப்போடு… அள்ளிப்போடு..”
ன்னு மொத்த காலேஜ் strength la பாதி பேர TCS அள்ளிக்கிட்டு பொய்ட்டனுங்க. சரி மிச்சம் இருக்க பயலுகளாவது நமக்கு கம்பெனியா
இருப்பாய்ங்கன்னு ஒரு ஆறுதல்.
அடுத்த
நாலாவது நாள்லயே CTS காம்பஸ் இண்டர்வியூ. அதுலயும்
Aptitude clear. (பேசிக்கலி நா கொஞ்சம் அறிவாளிதான்.. ஆனா பேசதான் வராது). அங்கயும்
இண்டர்வியூ. எனக்கு, வினோத், ராஜா மூணூ பேருக்குமே ஒரே பேனல்ல இண்டர்வியூ. அப்ப கஜினி
படம் வந்த சமயம். புதுசட்டையெல்லாம் போட்டு டை எல்லாம் கட்டிக்கிட்டு இருக்கவும் கஜினில
வர்ற சத்டியன் மாதிரி அங்கிட்டும் இங்கிட்டும் நடந்து “ஹாய்… ஐ ஆம் சஞ்சய் ராமசாமி”ன்னு அவன் குரல்ல காமெடி பன்னிட்டு இருந்தேன்.
ஒவ்வொருத்தனா
உள்ள கூப்டானுங்க. இப்ப நம்ம டர்ன். உள்ள போனதும் ஃபைல வாங்கி டேபிள்ள வச்சிட்டு மொத
கேள்வி
“what
is current?”
“………………………………..”
(பதில்
சொல்லல)
அடுத்த
கேள்வி
“what
is voltage?”
“…………………………………”
அதுக்கும்
பதில் சொல்லாம பே பேன்னு உக்கார்ந்திருந்தேன்.
அடுத்து
என்கிட்ட ஆன்ஸர் வரவைக்கனும்னே எதோ கேக்க அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சேன். பத்து
நிமிஷம் இண்டர்வியூ எடுத்தப்புறம் தில்லு முல்லு தேங்காய் சீனிவாசன் மாதிரி
“What
is current க்கும் Answer தெரியாது… What is Voltage க்கும் ஆன்சர் தெரியாது… ஆனா பேரு
மட்டும் எலெக்ட்ரிகல் என்ஜினியர்… கெட் அவுட்ட்ட்”ன்னு சொல்ல “ஷார்ட் நேம் சுப்பி
சார்”ன்னு வெளில வந்துட்டேன்.
வெளில
வந்த அடுத்த செகண்ட் தோணுது “Currnet na flow of electrons ல… Voltage ன்னா
potential difference ல… அட மானங்கெட்ட மைண்டே.. இத அப்பவே சொல்லிருந்தா அவய்ங்க்கிட்ட
அசிங்கப்படாமயாது வந்துருக்கலாம்லன்னு நினைச்சிட்டு போனேன்… அந்த இண்டர்வியூவும் அவுட்டு.
நம்ம பயலுக ராஜாவும் வினோத்தும் செலெக்ட் ஆயிட்டானுங்க. சங்கத்துல மிச்சம் நானு, பரத்து,
சுந்தர் மூணு பேருதான்.
மூணு
வருசமும் arrears எதுவும் வைக்காத்தால பாரபட்சம் பாக்காம எல்லா கம்பெனியும் அட்டெண்ட்
பன்ற eligibility இருந்துச்சி. அடுத்த நாலு நாள்ல WIPRO off campus interview. மதுரை
K.L.N காலேஜ்ல. பஸ் எடுத்து காரைக்குடிலருந்து மதுரைக்கு அழைச்சிட்டு போனாய்ங்க. என்னா
ஜாலி பஸ்ல. வேலை கிடைக்கலங்குற ஒரு குறையத் தவற வாய்க்கு மட்டும் நமக்கு குறைச்சலே
இல்லை அப்ப.
இதே
மாதிரி Aptitude க்ளியர் பன்னிட்டேன். நம்ம கூட பஸ்ல வந்த முக்கால்வாசிப்பேரு Apps
லயே மட்டை ஆயிட்ட்டால அவியிங்களல்லாம் பேக் அப் பன்னி அந்த பஸ்லயே திரும்ப அனுப்பிட்டானுங்க.
அடுத்து டெக்னிக்கல் இண்டர்வியூ. அதுலயும் க்ளியர் பன்னியாச்சு. நூறு பேருக்கும் மேல
வந்த பசங்கள்ள 12 பேரு மட்டும் டெக்னிக்கல் க்ளியர் பன்னி HR interview க்கு செலெக்ட்
ஆனோம். HR இண்டர்வியூம் முடிஞ்சி அந்த 12 பேர்ல 9 பேர் செலெக் பன்னானுங்க… சோகம் என்ன்ன்னா
முகேஷ எங்களால இந்த தடவையும் காப்பாத்த முடியல. இந்த தடவயும் ஊத்திக்கிச்சி.
மணி
ராத்திரி 11க்கு மேல… நாங்க பன்னண்டு பேரும் மதுரைக்கு வந்து பஸ்ஸு புடிச்சிதான் வரனும்.
அதெல்லாம் ப்ரச்சனை இல்லை. வர்ற 12 பேர்ல 9 பேர் குஜால்ஸ் மூடுல இருப்பாங்க. மித்த
3 பேரு நாங்க சோக மூடுல இருக்கோம். (இல்லைன்னாலும் வரவச்சிக்கனுமே). போற வழிலயே செலெக்ட்
ஆன ரெண்டு பயலுக சரக்கடிக்கப் போறேன்னு கிளம்பிட்டானுங்க. ரிஜெக்ட் ஆன பீஸூல நானும்
SM சரவணன்னு ஒரு பையனும் இருக்கோம். இன்னொருத்தன் யாருன்னு மறந்து போச்சு. நம்ம SM
சரவணன் எப்டின்னா, ஓங்கி அடிச்சான்னா ஒண்ணரை டன் இல்லை நாலு டன் வெய்ட்டு. அப்டி இருப்பான்
ஆளு.
நடந்து
வந்துக்கிட்டு இருக்கும்போது செலெக்ட் ஆகாத நாங்களே சும்மா வந்துகிட்டு இருக்கோம்.
செலெக்ட் ஆன ஒருத்தன் ரொம்ப ஃபீல் பன்னிட்டு வந்துக்கிட்டு இருந்தான். “ச்ச… போச்சுடா..
அவ்ளொதாண்டா… ச்ச போச்சுடா…”ன்னுட்டே வந்தான்.
என்னடா
செலெக்ட் ஆனவன் ஏன் போச்சுடா போச்சுடான்னு பொலம்புறான்னு என்னடான்னு கேட்டா
“ச்ச…
இந்த கம்பெனிலல்லாம் Place ஆனதே அசிங்கம் மச்சி… எங்கப்பாவுக்கெல்லாம் தெரிஞ்சா அசிங்கமா
திட்டப்போறாரு… ச்ச…. அசிங்கமா இருக்கும்”ன்னான்.
இய்ய்ய்ய்…. அடடடாடா. ஆஆஆ…. டேய்ய்ய்ய்ய்
இதக் கேட்ட்தும் எனக்கு தேவிக்குமார் ஞாபகம்
வந்துருச்சி.. (தேவிக்குமார் மேட்டர மைண்டுல வச்சிக்குங்க. பின்னால சொல்றேன்.) திடீர்னு
என்னோட உடம்புல எதோ ஒண்ணு இடிச்சிது. என்ன நமக்கு இங்க கொஞ்சம் muscle extraவா வளர்ந்துருக்கேன்னு
தொட்டுப் பாத்தா அது SM சரவணனோட ஆர்ம்ஸூ… முறுக்கிட்டு அடிக்கிற லெவல்ல நிக்கிறான்.
பின்ன கடுப்பாகுமா ஆவாதா… அவன் இருந்த கோவத்துக்கு நம்ம பயல அடிச்சி பூமிக்குள்ள இறக்கிருப்பான்.
அப்புறம் அவன சாந்திப் படுத்தி, மதுரை டவுனுக்கு
வந்து ஆளுக்கு நாளு பொரோட்டாவ பிச்சிப் போட்டுக்கிட்டு விடியக் காலமா காரைக்குடி வந்து
சேந்தோம்.
இந்த தேவிக்குமார பத்தி சொன்னேணே…. ஏற்கனவே
ஒரு பதிவுல சொல்லிருக்கேன். இருந்தாலும் இன்னொருதபா…
ஃப்ரஸ்ட் இயர்ல எங்களுக்கு பக்கத்து ரூமுதான்
தேவிக்குமார். காலேஜ் சேர்ந்து மொத series test நடத்தி, பேப்பர்லாம் திருத்தி குடுத்துருந்தானுங்க.
கணக்கு பேப்பர்ல நா 50க்கு 37ன்னு நினைக்கிறேன். நம்ம ரூம் பசங்க எல்லாமே ஓரளவு டீசண்டான
மார்க்குதான் எடுத்துருந்தாய்ங்க. சாப்ட மதியம் ரூமுக்கு வந்தப்ப தேவிக்குமார் ஹாஸ்டல்
காரிடார்ல நின்னு பெனாத்திக்கிட்டு இருந்தான்.
“போச்சுடா.. எல்லாமே போச்சுடா… மொத டெஸ்ட்லயே
இவ்ளோ கம்பியா எடுத்தா professor க்கு என் மேல impression eh போயிரும்டா” ன்னு ஃபீல்
பன்னிட்டு இருந்தான்… “ஹா..ஹா. ஃபெயில் ஆயிட்டான் போலருக்கு funny boy” ன்னு நினைச்சி
அவன் பேப்பர அப்டி கையில வாங்கிப் பாக்குறோம்…
டபீர்ன்னு நெஞ்சி வெடிச்சிருச்சி… 50 க்கு
49… அட நாயே.. இந்த மார்க்க வச்சிக்கிட்டு
தான் இவ்வளவு நேரம் இம்ப்ரஷன் போயிரும்… ஆப்ரேசன் ஆயிரும்னெல்லாம் பினாத்துனியா…
ரைட்டுரா..
இன்னிலருந்து நாங்க உன் பக்கத்து ரூம் இல்லடா.. ரூமக் காலி பன்றோம்டான்னு போனதுதான்.
பின்னாலதான் தெரிஞ்சிது அவன் தான் 10th matriculation எக்ஸாம்ல ஸ்டேட் ஃப்ர்ஸ்டுன்னு.
அவ்வளோதான். நாலு வருஷத்துலயும் அவன் எவ்வளவு மார்க் எடுத்தான்னு நாங்க கேட்டதே இல்லையே…
(இண்டர்வியூ கதை இன்னும் முடியல… மூணு
கம்பெனி கதை தான் முடிஞ்சிருக்கு.. இன்னும் 15 பாக்கி இருக்கு. அடுத்த பதிவுல தொடருவோம்)