சில பெரிய ஹீரோக்கள்
ரொம்ப ரொம்ப மோசமான, சில கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் போது, சில சமயம் என் நண்பர்கிட்ட
ஒண்ணு சொல்றதுண்டு. “மச்சி இவனுங்களுக்கு கீழ இருக்கவனுங்க, இவனுக்கு ஜால்ரா அடிச்சே
வெளில என்ன நடக்குது, ஆடியன்ஸ் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியாம செஞ்சிருவானுங்க போலருக்கு.
அதான் இப்டி updated ah இல்லாம, மோசமான ஒரு ஸ்டோரிய செலெக்ட் பண்ணிருக்காங்க போலருக்குன்னு”
பேசிப்போம். ஆனா என்னதான் ஒருத்தன் updated ah இருந்தாலும், ரொம்ப தெளிவானவனா இருந்தாலும்,
ஒவ்வொரு படத்தோட ரிசல்ட்டயும் அவனால கண்டிப்பா கணிச்சி கதை செலெக்ட் பன்ன முடியாதுன்னு
இந்த காக்கி சட்டை படம் பாக்கும் போதுதான் புரிஞ்சிது.
சிவகார்த்திகேயன்
யாரு, அவரு எப்படிப்பட்டவருன்னு எல்லாருக்கும் தெரியும். அவரு கலாய்க்காத ஆள் இல்லை.
அவரு கிண்டல் பண்ணாத படங்கள் இல்லை. அவர் எந்த தயாரிப்பாளரோட வாரிசும் இல்லை. நடிச்சா
ஹீரோ சார் நா வெய்ட் பண்றேன் சார்ன்னு நேரடியா ஹீரோவா களம் இறங்குனவரும் இல்லை. இன்னிக்கு
இருக்க ட்ரெண்ட்ல ஊறிப்போன மக்கள்ல ஒருத்தரா, படிப்படியா சினிமாவுக்கு போனவரு. அந்த
நம்பிக்கைய எதிர் நீச்சல் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தோட மிகப்பெரிய வெற்றில
காப்பத்துனவரு. ஆனா, யார் எப்படியிருந்தாலும் ஒரு டைரக்டர் வேலைய ஒழுங்கா செஞ்சா தான்
ஒரு படத்தை காப்பத்த முடியும். இல்லன்னா எல்லாம் அம்பேல்தான்னு திரும்ப நிரூபிச்சிருக்க
ஒரு படம்.
எதிர்நீச்சல்ன்னு
ஒரு சூப்பர்ஹிட்ட குடுத்த டீம், தொடர்ந்து நீச்சலடிக்க முடியாம முங்கிப்போன ஒரு கதை
தான் இந்த காக்கி சட்டை. சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை, ஏற்கனவே பாத்து பழக்கப்பட்ட பழைய காட்சிகள், சிவகார்த்திகேயனுக்கு பொறுந்தாத
கேரக்டர்ன்னு படத்துல பல ஓட்டைகள்.
சாதாரண கான்ஸ்டபிளா
இருக்கும் சிவகார்த்திகேயன், அநியாத்த கண்டு கொதிக்கிறாரு. குற்றவாளிகள் தண்டிக்கப்படாம
சுதந்திரமா சுத்துரத பாத்து ஆத்திரப்படுறாரு. போலீஸா இருந்தும், மேலதிகாரிகளோட குறுக்கீட்டால
ஒண்ணும் பன்ன முடியாம தவிக்கிறாரு. ஒரு காட்சில ரொம்ப எமோஷனா சக ஏட்டு இமாம் அண்ணாச்சிக்கிட்ட
சிவா புலம்ப, அதக் ஒட்டுக்கேக்கும் ப்ரபு ”தொட்டா ஷாக் அடிக்கிற மாதிரி ஒரு கேஸ புடி..
அப்புறம் பாக்கலாம்” ன்னு சிவா அசிங்கப்படுத்தி நோஸ்கட் பன்னிடுறாரு. நா கூட சிவா போய்
எதாவது கரண்ட் கம்பிய எதுவும் புடிச்சிடப் போறாரோன்னு பயந்துட்டேன்.
அப்போ மாட்டுது
ஒரு கேஸ். தப்பும் என்னன்னு தெரியும். யார் பன்னதுன்னும் தெரியும். எவிடென்ஸ் எங்க
இருக்குன்னும் தெரியும். ஆனா அரெஸ்ட் பன்ன முடியல. எப்படி கஷ்டப்பட்டு, மொக்கையைப்
போட்டு வில்லன புடிக்கிறாருங்குறதுதான் ரெண்டாவது பாதி கதை
முதல்ல இந்த படத்துல
சிவாவ ஒரு போலீஸா ஏத்துக்குறதே பெரிய விஷயமா இருக்கு. க்ரைம் ப்ரான்ச்ல வேலை செய்யிறதால
இவர யூனிஃபார்ம் வேற போட சொல்லமாட்டாய்ங்க. அதாவது இன்வெஸ்டிகேஷனுக்கு போகும்போது யாருக்கும்
டவுட் வரக்கூடாதாம். அதுக்குன்னு நம்மாளு கோர்ட்ல கூட கேஷுவல்ல இருக்காப்ள. படம் ஃபுல்லாவே
சன் மியூசிக்ல காம்பயரிங்க பண்றவிங்க மாதிரியே திரியிறாரு. ஆனா அப்பபோ “நாமெல்லாம்
போலீஸா இருந்து” “”நா போலீஸுங்குறதால” “போலீஸ் வேலை பாக்கும்போது” ன்னு அவரு போலீஸூன்னு
அப்பப்போ அவரே சொல்லிக்கிறாரு. நமக்கு தான் அந்த ஃபீலே வர மாட்டுது.
முதல்பாதில அப்பப்போ
சில காமெடிக்கு மட்டும் சிரிப்பு வருது. மத்தபடி இமாம் அண்ணாச்சிகூட சேந்து காட்டுமொக்கைய
போட்டுருக்காய்ங்க. அந்தாளு குரலைக் கேக்கும்போதெல்லாம் “எலே டேபிள் மேட் மேல் வீட்டுல
இருக்கு.. கீழ் வீட்டுல இருக்கு.. பக்கத்துவீட்டுல இருக்கு”ங்குற விளம்பரம் ஞாபகம்
வந்து செம்ம கடுப்பா வருது.
கொஞ்ச நாள்லயே
நிறைய ரசிகர்கள சேர்த்துருக்கிற சிவகார்த்திகேயன் படத்துக்கு எந்த அளவுக்கு ப்ளஸ்ஸோ,
அதே அளவுக்கு மைனஸூம் அவரு தான். படம் முழுக்க “முக்கோணம் SVS சன் ஆயில் வழங்கும் அது
இது எது” ல பேசுற மாதிரியே தொணத் தொணன்னு பேசிக்கிட்டே இருக்காரு. ஒருசில இடங்கள்ல
சிரிப்பு வந்தாலும் பெரும்பாலான இடங்கள்ல “யப்பா டேய்.. என்ன வாயிடா இது என்ன வாயி”ன்னு
நினைக்க வச்சிருது. இன்னொரு விஷயம் மிமிக்ரி பன்னி பன்னி, இவருக்கு இவரோட சொந்த ஆட்டிங்
மறந்து போச்சி போல. படத்துல பெரும்பாலான இடங்கள்ல ஜில்லா விஜய்ய பாக்குற மாதிரியே இருக்கு.
சிவகார்த்திகேயன்
நிறைய இடத்துல முகத்த சீரியஸா வச்சிக்கிட்டு வசனம் பேசுறாரு. ஆனா நமக்கு அதெல்லாம்
சீரியஸாவே தெரியல. ”அட இவரு இப்டித்தாம்பா எப்பவுமே மிமிக்ரி பன்னிட்டு இருப்பாரு..
கடைசில பாருங்களேன் இதெல்லாம் காமெடின்னு சொல்லுவாரு” ன்னு நம்ம மைண்டுல ஓடிக்கிட்டு
இருக்கு.
சில பெரிய நடிகர்கள்
பெரும்பாலும் விளம்பரங்கள்ல நடிக்க மாட்டாங்க. மைக்க பாத்த இடத்துலயெல்லாம் பேச மாட்டாங்க.
டிவி நிகழ்ச்சிகள் எல்லாத்துலயும் கலந்துக்க மாட்டாங்க. எப்போதாவது சில விழாக்கள்ல
மட்டும் தான் கலந்துக்குவாங்க. “அவரு எப்பவுமே இப்டித்தான்பா.. ரொம்ப reserved ah இருப்பாரு”
ன்னு மத்தவங்க குறை சொன்னாலும், ஒரு நடிகருக்கு அப்டி இருக்கது தான் நல்லது. அப்போதான்
அவர ஸ்க்ரீன்ல பாக்கும்போது ஆடியன்ஸுக்கு அது ஸ்பெஷலா தெரியும்.
அப்டி இல்லாம நம்ம
கூடவே சுத்திக்கிட்டு இருக்க ஒருத்தன் திடீர்னு ஒரு படம் நடிச்சி, அதுல ரொம்ப சீரியஸா
வேற வசனமெல்லாம் பேசுனா, படக்குன்னு நமக்கு சிரிப்பு வருமா இல்லையா? உதாரணத்துக்கு
இந்த சூர்யாவ எடுத்துக்குங்க. ”சரவணா ஸ்டோர்ஸ்.. க்ரோம்பேட்டையில் பபப பபப பம்” “ப்ரூ
காஃபி சாப்டுங்க” ”பாரதி சிமெண்ட் வாங்குங்க” ன்னு எதத்தொறந்தாலும் அவன் மொகரையா தான்
இருக்கு. அவன திரும்ப படத்துல பாக்கும்போது ஒரு surprise eh இல்லாம “அட டெய்லி காப்பித்தூள்
விக்கிற தம்பிதானப்பா நீ” ன்னு தான் இப்பல்லாம் தோணுது.
அதே மாதிரி தான்
இந்த சிவகார்த்திக்கேயனும். வாரா வாரம் விஜய் டிவில வந்து ஸ்டாண்ட் அப் காமெடி பன்னவரு.
ஜோடி நம்பர் ஒன்ல ஆடுனவரு. அதுமட்டும் இல்லாம விஜய் டிவி நடத்துற எல்லா ப்ரோக்ராமுக்கும் chief guest வேற. விஜய் டிவியப் பத்தி நம்ம எல்லாருக்கும்
தெரியும். ஒரே ஒரு ஷோ எடுத்து அத ஒரு முப்பது தடவ டெலெகாஸ்ட் பன்னி, நாம வெறியாவுற
வரைக்கும் விடமாட்டாய்ங்க. அப்படி ஒரு சமயத்துல வாரத்துல அட்லீஸ்ட் அஞ்சி நாள் மக்கள்
சிவகார்த்திகேயனப் பாத்துக்கிட்டு இருந்தாங்க. இப்போ திடீர்னு, நா போலீஸ்பா.. நா இன்ஸ்வெஸ்டிகேஷன்லாம்
பண்றேன்பாங்கும் போது அத டக்குன்னு ஏத்துக்க முடியல.
படத்தோட முதல்
பாதிலயே பெரும்பாலும் தலைவலி வந்துரும். ரெண்டாவது பாதி அதுக்கு மேல. யாருமே இல்லாத
கடையில யாருக்குய்யா டீ ஆத்துறங்குற மாதிரி, இவரு ரெண்டு அள்ளக்கைகள வச்சிக்கிட்டு
போலீஸ் ஸ்டேஷன்லயே ப்ளான் போட்டுக்கிட்டு இருப்பாரு. அதுக்குதான் வில்லன் ஒரு சூப்பரான
ஒரு வசனம் சொல்வான். “தம்பி இந்த சின்ன குழந்தைங்க சோறாக்கி குழம்பு வச்சி விளையாடும்ங்க..
அது பாக்க அழகா இருக்கும். ஆனா அத சாப்டமுடியாது” ன்னு. உண்மையிலயே சிவகார்த்திகேயன் second
half மொக்கை மொக்கையா பன்றத பாத்தா நமக்கே அப்டித்தான் தோணும்.
படத்துல ஒரே ஒரு
உருப்படியான விஷயம் வில்லன் விஜய் ராஸ். அசால்ட்டா நடிச்சிருக்காரு. ஆளு பாக்கவும்
கெத்தா இருக்காரு. அனிரூத் மீசிக்ல ரெண்டு பாட்டு ஓக்கே. BGM la ஒரு தீம் சூப்பரா இருந்துச்சி.
1st half ல ஒரு குத்துப்பாடு போட்டுருந்தாரு. ஸ்பாட்லயே வாந்தி வந்துருச்சி.
முதல்பாதில வர்ற போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள்
எல்லாத்துலயும் கேமரா செம்ம மொக்கை. ஆனா இண்டர்வல்ல மழையில நடக்குற ஒரு ஃபைட்டுல கேமரா
செம்ம. ஸ்ரீதிவ்யா அழகு. சிவா, ஸ்ரீதிவ்யா லவ் சீனெல்லாம் செம்ம கப்பி.
படம் எடுத்து ரிலீஸ்
பன்னவிங்க கூட அமைதியா இருப்பாய்ங்க போலருக்கு. நம்ம இணையவாதிகள் இருக்காய்ங்களே..
ஒருத்தன் இவன அடுத்த விஜய்ங்குறான். ஒருத்தன் அடுத்த சூப்பர் ஸ்டாருங்குறான். ஏண்டா
ஷூவுக்குள்ள pant ah போட்டு, சட்டைய தொறந்துவிட்டா எவன்னாலும் ரஜினியாடா. அதாவது ஒருத்தனை அவனாவே இருக்க விடமாட்டீங்க. ”அடுத்த
இவுர்.. அடுத்த அவுர்” ன்னு எதாவது பட்டம் குடுத்தாதான் இவிங்களுக்கு தூக்கம் வரும்
போல.
சிவகார்த்திகேயன்
ஆளு செம ஸ்மார்ட்டா இருக்காரு. டான்ஸூம் செம இம்ப்ரூவ்மெண்ட். ஆனா, வழக்கமான ஆக்ஷன்
மசாலா படங்கள் சார் மூஞ்சிக்கு இன்னும் செட் ஆகல. அதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி
ட்ரை பன்னாலாம்.
ஸ்க்ரீன்ப்ளே செம
சொதப்பல். ரெண்டாவது பாதி எந்த சீனுமே நல்லா இல்லை. ஒண்ணு ப்ரில்லியண்டான மூவ்ஸ் வச்சிருக்கலாம்.
இல்லை கொஞ்சம் சஸ்பென்ஸா இருக்க மாதிரியாவது எழுதிருக்கலாம். ரெண்டும் இல்லாம, அறு
அறுன்னு அறுக்குது.