விஜய் சேதுபதியைப்
பார்த்தால் மக்களுக்கு ஒரு அலுப்பு வரக் காரணமும் இதுவே. முன்பு ஒப்புக்கொண்ட, தேங்கி
நின்ற படங்கள் அனைத்தும்
ஒட்டுமொத்தமாக வாரம் ஒன்று இரண்டு என வெளியாக ஆரம்பிக்க, ஒவ்வொரு
படத்திற்கும் ப்ரோமோஷனுக்காக ஒவ்வொரு சேனலுக்கு பேட்டி கொடுக்க, அதே சமயத்தில் ஒரு
தொலைக்காட்சி சமயல் நிகழ்ச்சி தொகுப்பாளராக வாய்ப்பும் கிடைக்க, கடந்த சில வாரங்களாக
எங்கும் விஜய் சேதுபதி, எதிலும் விஜய் சேதுபதி. அவர் படங்கள் அதிகமாக விமர்சிக்கப்பட
காரணமும் இந்த சலிப்புணர்வே. லாபம் இன்னும் பார்க்கவில்லை. துக்ளக் தர்பார் இன்றுதான்
பார்த்தேன். கொடூர மொக்கையெல்லாம் கிடையாது. ஓக்கே ரகம் தான். ஆனால் படம் கடுமையாக
விமர்சிக்கப்பட்டது.
அனபெல் சேதுபதிக்கும்
கிட்டத்தட்ட அதே நிலமை தான். அரண்மனைக்குள் பேய் என்கிற அருதப் பழசான கான்செப்ட். காஸ்டிங்கெல்லாம்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மூன்றையும் கவர் செய்வது போலத்தான் போட்டிருக்கிறார்கள். ஆனால்
கான்செப்ட் தான் இல்லை.
முதல் பாதியில்
அக்மார்க் சுந்தர்.சி ஃபார்முலா காட்சிகள். சிரிப்பை வரவழைக்க நல்ல ஸ்கோப் இருந்தது.
ஆனால் மிகவும் அமெச்சூரான இயக்கத்தில் அனைத்தும் சின்னா பின்னமாகிறது.
நகைச்சுவையை
வரவழைக்க வேண்டுமெனில் வடிவேலுவெல்லாம் தன்னை
எந்த அளவு தாழ்த்திக்கொள்வார் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் யோகிபாபு என்ன நினைத்துக்
கொண்டிருக்கிறார் தெரியவில்லை. பிச்சைக்காரன் கெட்டப் போட்டாலும் கெத்தாக இருப்பது
போல் சத்தம் போட்டு, எதாவது பேசினால் காமெடியாகிவிடும் என்ற நினைப்பு போல. கவுண்டரே
அதயெல்லாம் ஒரு அளவுக்குத்தான் செய்வார். யோகிபாபு வரவர அருக்கிறார். வெகு சில கவுண்ட்டருக்கே
சிரிப்பு வருகிறது
அடுத்தது டாப்ஸி.
இரண்டாம் பாதியில் வரும் வெளிநாட்டு கேரக்டருக்காக டாப்ஸி தெரிவு செய்யப்பட்டாரா எனத்
தெரியவில்லை. படம் கடுப்பேற்றுவதற்கு அடுத்த காரணம் டாப்ஸி. ராதிகா, ராஜேந்திர பிரசாத்,
வென்னெலா கிஷோர் அனைவரும் வீணடிக்கப் பட்டிருக்கிறார்கள்.
அதுவரை சுமார்
மொக்கையாகச் செல்லும் படம் இரண்டாம் பாதியில் சேதுணா எண்ட்ரி கொடுத்த பின்னர் சூர மொக்கையாகிறது.
சேதுபதியிடம் எனக்கு மிகவும் பிடித்தது ஒரு விஷயம் தான். இன்னிக்கு ஒரு பேச்சு நாளைக்கு
ஒரு பேச்சு என்றெல்லாம் கிடையாது. ராஜா கெட்டப் போட்டாலும் ரவுடி கெட்டப் போட்டாலும்
ஒரே பேச்சு தான். இதில் ராஜா கெட்டப்பில் உட்கார்ந்து கொண்டு “மொழி வேற அறிவு வேற…
அறிவு இருக்கவனுக்கு மொழி புரியும்” என்று எதோ அட்வைஸ் செய்துகொண்டிருந்தார். அய்யா…
சமுத்திரக்கனி அய்யா….
ஒரு வழியாக படம்
முடிவுக்கு வந்து ”சரி கழுதை போய்த் தொலை” என்று நினைக்கும் போது ”செகண்ட் பார்ட் கம்மிங்
சூன்” என்று ஒரு ஸ்லைடு போடுகிறார்கள்.
”எடுத்து விடுண்ணே.. ச்சாகட்டும் அம்புட்டு பயலும்”