தமிழ்சினிமா வந்து நகைச்சுவைக்கு வறண்டு போயிருக்க ஒரு காலகட்டம் இது. முழு நீள நகைச்சுவை சினிமாக்களோட வரத்தே இப்பல்லாம் இருக்கதில்லை. வந்தாலும் மக்கள சிரிக்க வைக்கிறதில்லை. மக்களும் கிட்டத்தட்ட இந்த ட்ரெண்டுக்கு ட்யூன் ஆயிட்டாங்க. மொக்கைகளா பாத்து பாத்து அங்கங்க ரெண்டு மூணு இடத்துல சிரிக்க வைச்சாலும் படம் சூப்பர்னுட்டு வந்துடுறாங்க. கழுத நமக்குதான் அந்த மாதிரி சாட்டிஸ்ஃபை ஆக முடியிறதில்ல. அந்த வகையில ஒரு முழுநீள நகைச்சுவை படத்துக்கு உண்டான கதைக்களத்தோட வந்துருக்க படம் கோகுல் இயக்கத்துல விஜய் சேதுபதி தயாரிச்ச் நடிச்சிருக்க ஜூங்கா.. எப்டி இருக்குன்னு பாப்போம்.
பஸ் கண்டக்டரா வேலை பாக்குற விஜய் சேதுபதிக்கு அவரோட அப்பவும் தாத்தாவும் பெரிய டான் அப்டிங்குற விஷயம் அவரோட 32 வயசுல தெரிய வர , உடனே பட்டுன்னு நானும் ஒரு டான் ஆயிடுறேன்னு ட்ரங்கு பொட்டிய தூக்கிட்டு மெட்ராசுகு வந்துடுறாரு. அதவிட அவரோட லட்சியம் என்னன்னா அவங்க அப்பா தாத்தா வச்சிருந்த சினிமா பாரடைஸ்ங்க்குற தியேட்டர மீட்குறது. அதுக்காக ரொம்ப கஞ்ச டானா இருந்து பணம் சேத்து அந்த தியேட்டர மீட்குறாரா இல்லையா அப்டிங்குறது
தான் படம். மீட்டுருவாரு… ஹீரோ சபதம்னு ஒன்று போட்டுவிட்டால் திரைக்கதையில் வேறு என்னதான் மாற்றம் ஷெய்ய முடியும்.
நிறைய இடத்துல படத்துல சிரிக்க வைச்சிருக்காங்க. அதவிட அதிகமா கத்தி போட்டுருக்காங்க. நல்ல
விஷயங்கள்னு பாத்தா ரெண்டு யோகி பாபு.. நிறைய இடத்துல சிரிக்க வைச்சிருக்காரு. அதவிட முக்கியமான விஷயம் யோகிபாபுவால படம் எந்த இடத்துலயுமே அறுக்கவோ போரடிக்கவோ இல்ல. அவருக்கு பாத்தா கவுண்டர் ஸ்டைல்ல கவுண்டர் குடுக்குற காமெடியும் ஒர்க் அவுட் ஆகுது. வடிவேலு மாதிரி அடிவாங்கி சிரிக்க வைக்கிற காமெடியும் ஒரி அவுட் ஆவுது. இப்பதைக்கு நம்பிக்கை தர்ற மாதிரியான ஒரு சில காமெடியன்கள்ல யோகி பாவுவும் ரொம்ப முக்கியமானவர்.
வீடியோ விமர்சனம்
அடுத்து விஜய் சேதுபதி பாட்டி. செம கெத்து பன்னிருக்கு. அடுத்து ஹீரோயின். கடைக்குட்டி சிங்கத்துல சற்று டொம்மையா இருந்த மாதிரி இருந்துச்சின்னு போன விமர்ச்னத்துல சொல்லிருந்தேன். நண்பர்கள் சில பேரு சண்டைக்கு வண்டாய்ங்க. .அதெப்டி அவள் சுமார்னு சொல்ல்லாம்னு. இந்தப் படம் பாத்தப்புறம்தான் கொஞ்சம் அவசரப்பட்டு வார்த்தைய விட்டுட்டோமோன்னு எனக்கே கொஞ்சம் ஃபீல் ஆச்சு. அதனால போன விமர்சனத்துல இவங்களப் பத்தி சொன்ன வார்த்தைகள அவைக்குறிப்புலருந்து நீக்குமாறு கேட்டுக்குறேன். ஆனா இந்தப் படத்துல செம சூப்பரா இருக்காங்க. டான்ஸ் பிச்சிருக்காங்க. ராதாரவி
ஒரு சீன்ல வந்தாலும் நல்லா பன்னிருக்காரு.
மைனஸ் அப்டின்னு பாக்கப்போனா பட்த்தோட திரைக்கதை.. ஒரே கஜாகாஜா.. எங்கயோ ஆரம்பிச்சி எங்கெங்கயோ, எதெதுக்குள்ளயோ போய் முடியுது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய பால குமாரா படத்துல விஜய் சேதுபதி வர்ற காட்சிகள்லாம் செயற்கைத் தனம் இல்லாம ரொம்ப இயல்பா இருக்கும். இன்னும் சொல்லப்போனா அந்த மாதிரி சீன்ஸ் எழுதுறதுதான் ரொம்ப கஷ்டம். அத ரொம்ப சூப்பரா பன்னிருப்பாங்க. இதுல எல்லாமே செயற்கைத்தனமா இருக்கு. விஜய் சேதுபதியே அப்டித்தான் இருக்காரு. படத்தோட எந்த ஃப்ரேம்லயுமே ஒட்டாம அவர் மட்டும் தனியா தெரியிறாரு. அதுலயும் அந்த கெட்டப்பு.. ப்ப்பா…. நம்ம ரெண்டரை மணி நேரமே அந்த கெட்டப்ப பாக்க முடியல.. எப்டி ரெண்டு மூணு மாசம் அதே கெட்டப்ல வச்சி படம் எடுத்தாங்களோ..
ஒரு ஹீரோவ காமெடி டானா காமிக்கும்போது அவருக்கான வில்லன்களும் அதே மாதிரி இருந்தாதான் எடுக்கும். ஆனா இங்க வில்லன்கள் ரொம்ப சீரியஸா இருக்காங்க. கொடுமை என்னான்னா இட்டாலியன் ட்ரக் மாஃபியான்னு ஒரு குரூப்பு கூடல்லாம் ரொம்ப சீரியஸா சண்டை போட்டுக்கிட்டு இருக்காரு.
படத்துல ரொம்ப சீரியஸா நடிச்சிருக்கது யாருன்னா நம்ம சுரேஷ் மேனன் தான். காமெடிப்படம்னு சொல்ல மறந்துட்டாங்க போல.
பட்ஜெட் பத்மனாபன்னு ஒரு ப்ரபு படம் பாத்துருப்பீங்க. கிட்டத்தட்ட இதே ஒன்லைன் . ப்ரபு சின்னக்குழந்தைல வாழ்ந்த வீடு இப்ப வேற ஒருத்தர்கிட்ட இருக்கும். அத மீட்குறதுக்காக ரொம்ப கஞ்சனா இருந்து, காசு சேர்ப்பாரு. சீன்னப்புள்ளைல அவர வீட்ட விட்டு தொறத்துன ஞாபகமெல்லாம் இருக்கும். அந்த வீட்டுக்காக ஏன் ப்ரபு இவ்ளோ கஷ்டப்படுறாருங்குறதுக்கு ஒரு ஸ்ட்ராங்கான ரீசன் இருக்கும். அவங்க அப்பாவும் தாத்தாவும் எழுதிக்குடுத்த தியேட்டர மீட்டுட்டு வர்றேன்னு விஜய் சேதுபதி கெளம்புறாப்ள. என்னக்கொடுமைன்னா அதுவரைக்கும் கண்டக்டராவ் வேலை பாக்குற விஜய் சேதுபதிக்கு அப்டி ஒரு தியேட்டர் இருக்குன்றதே தெரியாது. அவங்க அம்மா சொல்ற மொக்கை ஃப்ளாஷ்பேக்க கேட்ட உடனே பட்டுன்னு தியேட்டர மீட்டுன்னு வர்றேன்னு கெளம்பி போயிடுறாரு. என்ன இது? விஜய் சேதுபதிய ஒரு கஞ்ச டானா காமிக்க நிறைய சீன் வச்சிருக்காங்க.
ஒரு
சில
சீன்
ஓக்கே.. ஆனா சிலதெல்லாம் மண்டை வெடிச்சிருது. பஸ்ஸுக்கு காசு இல்லன்னு 5 டிகிரி செண்டிகிரேட்ல நீந்தியே போவாரு.
அடுத்து கேமரா… படத்த தியேட்டர்ல பாக்குறோம்ங்குற ஃபீலே நிறைய சீன்ல வரல. டவுன்லோட் பன்ன ப்ரிண்ட்ல பாத்தா ஒரு மாதிரி தெரியும்ல அப்டித்தான் இருந்துச்சி. அப்ப டவுன்லோட் பன்னி பாக்குறவனுக்கு எப்டி இருக்கும்னு நினைச்சிப் பாருங்க.
என்னைப் பொறுத்த அளவு படத்துக்கு மிகப்பெரிய மைனஸ் விஜய் சேதுபதிதான். அவர் படம்ங்குறதால தான் போனோம் இல்லங்கல.. பேசிக்கிட்டே இருந்தா காமெடின்னு நினைச்சிட்டாரு போல. பேசுறாரு பேசுறாரு வேலைக்காரன் சிவகார்த்திகேயனவிட அதிகமா பேசுறாரு. தலைவலி வந்துருச்சி. ”அயோ.. அயொயோயோ..” அப்டின்னு ஒரு பட்த்துல பன்னாரு.. ரெண்டு பட்த்துல பன்னாரு … எல்லா பட்த்துலயும் அதயே பன்னி அருக்குது.
விஜய் சேதுபதி ஸ்டோரி செலெக்ஷன் ரொம்ப ஒர்ஸ்டு. அவருக்கே தெரியாம அவருக்கு எதாவது நல்ல கதை மாட்டுனாதான் உண்டு. அடுத்தவங்களுக்கு வாய்ப்பு குடுக்குறேன் உதவி செய்யிறேன்னு நம்மள வச்சி செஞ்சிடுறாரு. ஹீரோக்கள் ஒரு லெவலுக்கு வந்துட்டா அவங்க ஒரு ரெஸ்பான்ஸிபிலிட்டிய ஃபீல் பன்னனும். வாய்ப்பு குடுக்குறேங்குற பேர்ல படம் பாக்குறவன் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்காம இருக்கனும்.
விஜய் சேதுபதி சொந்தப் புரோடக்ஷன்ல சூன்யம் வச்சிக்கிட்ட படம் தான் ஜூங்கா. நீங்க ரொம்பப் பொறுமையானவருன்னா ஒரு சில காமெடிக்கா படத்த பாக்கலாம்.