Monday, September 24, 2012

ஆறே வாரங்களில் சிக்ஸ் பேக் (SIX PACK) போடுவது எப்படி?- சில எளிய வழிகள்


Share/Bookmark
 குறிப்பு: இந்த பதிவு வெறும் நகைச்சுவைக்காகவே... யார்மனதையும் புண்படுத்தும் நோக்குடனோ, எவரையும் குறிப்பிட்டோ எழுதப்பட்டது அல்ல.
இதுவரைக்கும், காதல் தோல்விகளை குறைப்பது எப்படி? FACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி? பிரபல பதிவர் ஆவது எப்படி? ன்னு சில எப்படிக்கள பாத்துருக்கோம். அந்த வரிசையில் அடுத்ததாக ஒரு எப்படி....
 
 "ச்ச சின்ன வயசுல சிக்குன்னு சிறுத்தை குட்டியா இருந்தேன்... இப்ப கருத்து பெருத்த குட்டி ஆயிட்டேன்.. ஓட முடியல... உக்காரமுடியல... குணிய முடியல நிமிர முடியல... " அப்புடின்னு தான் நம்மள்ல  நூத்துல 60 பேரு ஃபீல் பண்ணிட்டு இருக்கோம்... ஒரு 20 வயசுல இருக்கும்போது உடம்பு ஏற மாட்டேங்குதேன்னு கொண்டக்கடலைய ஊரவச்சி திங்கிறதென்ன... முட்டைய ஒடைச்சி குடிக்கிறதென்ன... அப்புறம் ஏறாம என்ன பண்ணும்.... கொஞ்சம் கொஞ்சமா ஏறி ஒரு நாலு வருஷத்துல நாம நந்தனத்துல வந்தா வயிறு வண்டலூர்ல போயிட்டு இருக்கு. 

முன்னாடி உடம்பு ஏறுறதுக்கு என்னென்ன பண்ணமோ அதவிட நாலு மடங்கு அதிகமா எடைய குறக்கிறதுக்கு செலவு பண்ணிகிட்டு இருக்கோம்... சரி உடம்ப குறைக்க என்னடா வழின்னு தேடிப்பாத்தா டயட்டு இருக்கனும்னு சொல்றாய்ங்க.. இல்லை பயங்கரமா எக்ஸர்சைஸ் பண்ணனும்னு சொல்றாய்ங்க... சரி முதல்ல டயட்டுல இருப்போம்னு பாத்தா.. நாம சும்மா இருந்தாலும் நம்ம வாயி சும்மா இருக்கமாட்டேங்குது. ஓட்ஸ ஒரு வேளை குடிச்சிட்டு இருந்துடலாம்னு பாத்தா கருமம் அத குடிச்சாதான் அதிகமா பசிக்குது.. நாலு நாள் ஒழுங்க இருந்துட்டு அஞ்சாவது நாளு அஞ்சப்பர்ல போயி unlimited meals ah போட்டுட்டு வந்தா எப்புடி வயிறு குறையும்..

சரி ஆப்சன் B ல exercise பண்ணனும்ங்குறாய்ங்களே அதயும் தான் பண்ணிப்பாப்போம்னு டிவில தேடுனா... "நாலே வாரங்களில் உடல் எடையை குறைக்க  வேண்டுமா உடனே வாங்குங்கள்  ஆர்பிடெக்... வெறும் 9999 மட்டுமே...." ன்னு விளம்பரம் போடுவாய்ங்க.. சரி 10000 ரூவா செலவு பண்ணாலும் ஒரு மாசத்துல ஒரு சிக்ஸ் பேக்க வாங்கி போட்டுருவோம்னு அத வாங்குனா நாலு நாளுக்கு அப்புறம் அதுவும் வெறுத்துரும். நம்மள மாதிரியே இருக்க எவண்டயாவது அத செகண்ட்ஸ்ல வந்த வெலைக்கு வித்துட்டு திரும்ப மொதல்லருந்து ஆரம்பிக்க வேண்டியது...

என்ன வாழ்க்கை இது... இதயெல்லாம் ஒழிக்கனும்... சமுதாயத்துல எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் Fat Get Fattter... Lean Get Leaner... இத எப்படி சரி செய்யிறது... குண்டான ஒவ்வொருத்தரும் ஜிம்முங்கள்ல போயி நின்ன எடத்துலருந்தே ஓடுற அவலங்கள எப்படி போக்கலாம்னு குப்புற படுத்து யோசிச்சி உருவாக்கப்பட்டது தான் கீழ்கண்ட வழிகள்... இத பயன்படுத்தி  ஆறே வாரத்துல 6  பேக் வரலண்ணா என்னனு கேளுங்க

1. நீங்க ஒரு செண்டிமெண்ட் படங்களின் படங்கள் அதிகம் பார்ப்பவரா? விக்ரமனின் திவிர  ரசிகரா?  அப்புடி எதுவும் இருந்தா இன்னிக்கோட மறந்துருங்க. இனிமே நீங்க கஜினி, காக்க காக்க, சிங்கம், சத்யம் போன்ற படங்களைத்தான் திரும்ப திரும்ப பாக்கனும். அதுமாதிரி படங்களை பார்க்கும் போது உங்களையும் அறியாம உங்களுக்குள்ள ஒரு வெறி வந்து சும்மாவே நாலு பேர தூக்கி போட்டு மிதிக்கனும்னு தோணும். இந்த வெறி தான் சிக்ஸ் பேக் கொண்டுவருவதற்கு முதல் தேவை.

2. ஒரு பர்மனெண்ட் மார்க்கர எடுத்துகிட்டு உடம்பு பூரா, "கமலா 9790921944", சாந்தி என்ன ஏமாத்திட்டா", "ப்ரகாஷ் என் ஃபிகர  உசார் பண்ணிட்டான்" , "Find சாந்தி" , "Kill ப்ரகாஷ்" அப்புடிங்கற மாதிரி உடம்பு பூரா கஜினி மாதிரி எழுதி வச்சிகிட்டா  அத பாக்கும் போதெல்லாம் உங்களுக்கு எதோ கடமைகள் இருப்பது போலவும், Target ah achieve பண்ணனுங்கறது மாதிரியும் உங்களையும் அறியாம உள்ளுக்குள்ள ஒரு உணர்வு வரும்.

3. நீங்க "யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ" ன்னு பீலிங் பாடல்களை கேட்பவரா? மொதல்ல உங்க mobile play list ah மாத்தனும். இனிமே நீங்க "கற்க கற்க கள்ளம் கற்க" "ஆரடிக்காதே அத்துகிச்சி பாத்தே"  "நா அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட" "one two three four சுண்டல் பயிற ஊரவச்சி" "நானே இந்திரன் நானே சந்திரன் பொறந்த ஊருக்குள்ள" இந்த மாதிரி உசுப்பேத்துர பாடல்களையும், ஹீரோவுக்கு பில்ட் அப் குடுக்குற பாடல்களை மட்டுமே கேக்கனும். கேக்குறது மட்டுமில்லாம உங்க மனசுக்குள்ள அந்த கேரக்டராக்வே மாறனும். அதாவது கற்க கற்க பாட்டு கேக்கும் போது நீங்க உங்களையே DCP ராகவனா நெனைச்சிக்கனும். ஒரு வேலை காதல் பாடல்களை பாக்கனும்னு ஆசை வந்துச்சின்னு வைங்க நம்ம "கடல் கண்ணன்" சூர்யா பாடல்களா பாருங்க.. அவந்தான் பீச்ச பாத்த உடனேயே சட்டைய கழட்டி போட்டு சுத்திகிட்டு இருப்பான்.

4. அப்புறம் உங்கள நீங்களே ஒரு டானா மனசுக்குள்ள நெனைச்சிக்கணும். உங்களுக்கு அல்ரெடி சிக்ஸ் பேக் இருக்கதாகவும் உங்ககூடவே எப்பவும் பாஷா பாய் குரூப் மாதிரி நாலுபேர் நடக்குற மாதிரி நெனைச்சிகிட்டு மாடிப்படியில சைடு வாக்குல ஏறி ஏறி எறங்குங்க. (அரே தீவானோ... ம்ம்ம் ஸ்டார்ட்)  கொழுப்பு எப்புடி கொறையுதுன்னு மட்டும் பாருங்க.


5. உடம்ப கொறைக்கனும்னா மொதல்ல கலோரிய செலவு பண்ணுங்க கலோரிய செலவு பண்ணுங்கங்குறாங்க. 1000 ரூவா காச குடுத்தா அசால்ட்டா செலவு பண்ணிடலாம். கலோரிய எப்டி காலி பண்றது. பண்ணுவோம். எதாது காலேஜ் போற புள்ளையையோ இல்ல பள்ளிக்கூடம் போற புள்ளையையோ சைட் அடிக்கிறது  நல்லது. தினமும் அந்த புள்ளை பின்னாடியே நடந்து போயி காலேஜ் வரைக்கும் விட்டுட்டு அப்புறம் சாயங்காலம் அது பின்னாலயே காலேஜ்லருந்து வீடுவரைக்கும் பாடி காடா நடந்து வரலாம். வாக்கிங் போன மாதிரியும் ஆச்சி, பிகரையும் கரெக்ட் பண்ண மாதிரி ஆச்சி. அதாவது ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. அட இந்த விஜய் கூட விளம்பரத்துல வந்து சொல்லுவாரேப்பா... அதே தான்.

6. அடுத்தது என்னன்னு பாக்கப்போனா காலைலயில பச்ச கேரட்ட சாப்புடனும் மதியானம் ரெண்டு சப்பாத்தி சாப்புடனும், சாய்ங்காலம் ரெண்டு வாழைப்பழம் மட்டும் தான் சாப்புடனும்ங்கற உணவுக்கட்டுப்பாடுங்கறதே தேவையில்லை. நேரா உங்களுக்கு புடிச்ச ஹோட்டலுக்கு போங்க.. என்ன வேணுமோ வாங்கி வாரி வளைச்சி திண்ணுங்க. என்னடா இது? இப்புடி ஃபுல் கட்டு கட்டுனா எப்புடிடா வயிறு கொறையும்னு கேக்குறது எனக்கு புரியுது. இப்ப வருது பாருங்க. சாப்டு முடிச்ச அப்புறம் பில்லுன்னு ஒண்ணு கொண்டு வருவான் பாருங்க அப்ப காட்டனும் உங்க பர்பார்மன்ஸ. "என்னது பில்லா?" அப்புடின்னு வாழ்கையிலேயே நீங்க அப்புடி ஒரு வார்த்தைய கேள்விப்படாத மாதிரி ஒரு ஜெர்க்க குடுக்கனும்.

 அப்புறம் என்ன? அன்னிக்கு பூரா உங்கள கொல்லப்பக்கம் கொண்டு போயி, மாவாட்ட விட்டுருவாய்ங்க. "இப்ப எந்த ஹோட்டல்லடா கையால மாவரைக்கிறாங்க.. கிரைண்டர் தானே  அரைக்குது"ன்னு வக்கனையா கேப்பீங்களே... இப்ப எந்த ஹோட்டல்லப்பா கிரைண்டர்ல  மாவரைக்க கரண்ட் இருக்கு.. திரும்ப எல்லாரும் ஆதாம் ஏவாள் காலத்த நோக்கி பயணிக்க ஆரம்பிச்சாச்சி. இதே மாதிரி தினமும் வேலை முடிஞ்சப்புறம் பண்ணா ஒரே வாரம் தான். உடம்புல உள்ள மொத்த கொழுப்பும் கொறைஞ்சி size zero வ நோக்கி பயணம் பண்ண ஆரம்பிச்சிருவீங்க. அதுக்குன்னு ஒரே ஹோட்டல்ல டெய்லி இத ஃபாலோ பண்ண நெனைச்ச அவளவுதான். உள்ள நுழையும் போதே கெரண்ட கால வெட்டிப்புடுவாய்ங்க.

7. ஒரே  கல்லுல ரெண்டு மாங்கா கான்செப்ட்ல இது அடுத்த வழி. நீங்க வீட்ட விட்டு வெளிய கடைக்கோ இல்ல வேறு எங்கயாவதோ போகும் போது வழில நாய் எதாவது நின்னுச்சின்னா பாத்து ஒதுங்கிப் போயிடக்கூடாது. நின்னு அத மொறைச்சி பாருங்க. அதுவும் உங்கள பாக்கும். படக்குன்னு கீழருந்து ஒரு கல்ல பொறுக்கி அது மேல படாத மாதிரி அத அடிங்க. அப்ப விட்டுகிட்டு தொறத்தும் பாருங்க உங்கள.... இப்பவும் நின்னு வேடிக்க பாத்துகிட்டு  இருந்தா பட்டக்ஸ்ல பாதி காணாம போயிரும். உடனே ஓட்டத்த எடுத்துட வேண்டியது தான். நீங்க எங்க போகனுமோ அங்க அந்த நாயே  தொரத்தி கொண்டு வந்து விட்டுரும். காலைல எழுந்து ஜாக்கிங் போனும்னா யாரால முடியும். அதுனால இப்புடியே நாமலே நமக்கு ஒரு சந்தர்ப்பத்த ஏற்படுத்திக்கிட்டு ஓடிக்க வேண்டியது தான்.

8. அப்புறம் நீங்க பைக்குல ஆஃபீஸ் போறவரா? வேலைக்கே ஆவாது. மொதல்ல போயி காத்த புடுங்கி விட்டுடுங்க. சிக்ஸ் பேக்ஸ் போடுவதற்கு தேவையான சிறந்த போக்குவரத்து அரசு போக்குவரத்து தான். ஆனா  என்ன 10 மணி ஆபீஸுக்கு 7 மணிக்கே கெளம்ப வேண்டியிருக்கும். பரவால்ல. நமக்கு சிக்ஸ்பேக் தான் முக்கியம். நீங்க செய்ய வேண்டியது இது தான். நீங்க எங்க வெளில கெளம்புறதா இருந்தாலும் அரசு பஸ்கள தான் உபயோகிக்கனும். பஸ் ஸ்டாப்புல நிக்கும் போது காலியா எதாவது பஸ்வந்துச்சின்னா பொளக்குன்னு ஏறி உக்காந்துடக்கூடாது. (அப்புடி எதாது பஸ்ஸ பாத்தா மொதல்ல சொல்லுங்க. கின்னஸுக்கு அப்ளை  பண்ணுவோம்) கூட்டமா வர்ற பஸ்தான் நமக்கு வசதி... யோவ் எவன் பர்ஸ்லயும் கைய வச்சி பிக்பாக்கெட் அடிக்க சொல்லப்போறேன்னு நெனச்சி எவன் பைலயும் கைய வச்சிடாதீங்க. அவளோதான் அப்புறம் சிக்ஸ் பேக்லாம் வராது. பஸ்ல இருக்கவன் ஒவ்வொருத்தனும் ஒரு அடி அடிச்சான்னாலே ஒரே பேக்ல பரலோகம் போகவேண்டியது தான். 

இந்த வழில நீங்க ஸ்பெஷலா எந்த அசைன்மெண்டும் செய்ய தேவையில்லை. ஒரு அரைமணி நேரம் அந்த பஸ்ல பயணம் செஞ்சீங்கன்னாவே உங்க உடம்புல உள்ள மொத்த வியர்வையும் வெளியேறி, டிஹைட்ரேஷன் ஆகுற அளவுக்கு போயிடுவீங்க. படிக்கட்டுல  தொங்கிட்டு வர்றது இன்னும் உசிதம். உங்க ஆர்ம்ஸும் ஸ்ட்ராங் ஆவும். ஜன்னல் ஓரமா உக்கார்ந்துருக்க பாப்பாவும் உசார் ஆகும். (இது திருமணம் ஆனவர்களுக்கு உகந்ததல்ல. மனைவிக்கு தெரியவரும் பட்சத்தில் உயிர்ச்சேதம் ஏற்படும் அளவுக்கு ஆபத்து நிறைந்தது). பஸ்ல தொங்கிட்டே வர்றதால biceps develop ஆகும். ஓடிப்போயி ஏறுறதால calf muscles strength ஆகும்.. அப்டி இது ரெண்டும் ஆகலண்ணா கூட பஸ்ல வர்ற ஃபிகர் உசார் ஆகும். அதாவது பாம் ஒன்று செயல் மூன்று.



9. லீவ் நாள்ல மேற்கண்ட எந்த வேலையும் இருக்காது. அது மாதிரி சமயங்கள்ல கலோரிய செலவு பண்ண வடிவேலு பாணிய பின்பற்றலாம்.  நேரா மதுரைக்காரய்ங்க எவண்டயாவது வம்பிழுங்க. அம்புட்டு பயலும் வகுத்துலயே மிதிச்சி வயித்துல  உள்ள மொத்த கொழுப்பையும் அரைமணி நேரத்துல எடுத்து ஃபேச ப்ரஷ் ஆக்கி விட்டுருவாய்ங்க. ஒரு நாள்
முழுக்க செய்ய வேண்டிய வேலைய அரைமணி நேரத்துல முடிச்சிவிட்டுருவாய்ங்க. அப்டி இல்லையா நம்ம கலகலப்பு ஸ்டைல ஃபாலோ பண்ணுங்க. கிச்சன்ல இருக்க சாமனையெல்லாம் ஒண்ணு ஒண்ணா எடுத்து ஹால்ல வைங்க. அப்புறம் ஹால்ல வைச்ச சாமானையெல்லாம் எடுத்து பெட்ரூம்ல வைங்க. திரும்ப பெட்ரூம்ல வச்ச சாமனையெல்லாம் எடுத்து கிச்சன்லயே வச்சிருங்க. மேட்டர் ஓவர்.

10. டெய்லி பல்லு வெலக்குறதுக்கு முன்னாடி ஒரு முட்டை பின்னாடி ஒரு முட்டை குடிக்கிறது உசிதம். என்னது பின்னாடி எப்புடி குடிக்கிறதா? ஹலோ இது அந்த பின்னாடி இல்லை..... பல்லு விலக்கிய பின்னாடி... எப்ப பாத்தாலும் எஸ்.ஜே.சூர்யா  மாதிரியே யோசிக்க வேண்டியது. ஏன் பல்லு வெலக்குறதுக்கு முன்னாடி முட்டைகுடிக்கனும்னு கேக்குறீங்களா? அது உள்ள போயி மொதநாள் நைட்டு நீங்க சாப்ட unlimited meals எதும் செரிக்காம இருந்த அத வாந்தியா வெளிய கொண்டுவந்து மொத்த வயித்தயும் சுத்தப்படுத்திரும்.

11. நீங்க எங்க போனாலும் உங்கள விட ஒயரமா எதாவது பாத்தா உடனே கூச்சப்படாம தொங்கிடனும். அதுக்குன்னு வீட்ல ஃபேன பாத்தா கயித்த எதும் மாட்டி தொங்கி கொலைக்கேசுல  மாட்டி விட்டுடாதீங்க.  ஒரு உயரமான கம்பியயோ இல்ல உயரமான சுவத்தையோ பாத்தா அத புடிச்சி மேலயும் கீழயும் நாலு  தடவ காம்ப்ளான் பாய் மாதிரி தொங்குனா, பேக் டெவலப் ஆவுறதோட நாளப்பின்ன பக்கத்து ஊர் ஃபிகர பாக்க போகும் போது ஊர்க்காரய்ங்க தொறத்துனா "செவலை தாவுடா தாவு" ன்னு படக்குன்னு ஏறிக்குதிச்சி உடியாந்துடலாம்.

விரைவில் சிக்ஸ் பேக்கோட சந்திப்போம்...


நன்றி : நண்பன் கார்த்தி






Thursday, September 20, 2012

சுந்தரபாண்டியன் - சுமார் பாண்டியன்


Share/Bookmark
இன்னிக்கு இந்த படத்த பாத்துட்டு தியேட்டர்லருந்து நானும் நண்பனும் வெளிய வந்துகிட்டு இருந்தப்ப ஒரு சம்பவம்... ஒருத்தரு தியேட்டர் ஆப்ரேட்டர் சட்டைய புடிச்சி "ஏண்டா இப்டி செஞ்ச ஏண்டா இப்டி செஞ்ச" ன்னு எதோ சண்ட போட்டுகிட்டு இருந்தாரு. சரி என்னனு பாக்கலாம்னு அவர்கிட்ட போய் "என்னண்ணே ப்ரச்சனை?" ன்னு கேட்டோம். அதுக்கு அவரு "பாருங்க தம்பி.. சுந்தரபாண்டியன்குற படத்துக்கு டிக்கெட் எடுத்துகிட்டு உள்ள போனேன்.. ஆரம்பத்துல அந்த படம் தான் ஓடுனுச்சி... கொஞ்ச நேரத்துல கண்ணு அசத்திட்டதால தூங்கிட்டேன்... முழிச்சி பாத்தா நாடோடிகள் படத்து க்ளைமாக்ஸ் ஓடிகிட்டு இருக்கு.. நா  அசந்த நேரமா பாத்து இந்த நாயி ரீல மாத்தி போட்டுருச்சி தம்பி... இத நீங்களே கொஞ்சம் என்னன்னு கேட்டு ஒரு பைசல் பண்ணுங்க.."ண்ணாரு..

அப்புறம் தான் எங்களுக்கு மேட்டர் புரிஞ்சிபோயி " அண்ணே.. ஆப்ரேட்டர் மேல எதும் தப்பு இல்லண்ணே... நீங்க பாத்தது சுந்தரபாண்டியனோட க்ளைமாக்ஸ்தான்... அதே மாதிரி எடுத்துருக்காய்ங்க" ன்னோம்

"அதயே ஏன் தம்பி திரும்ப எடுத்துருக்காய்ங்க? நாம தான் அந்தப்படம் பாத்துட்டோமே... "

"விடுங்கண்ணே... விடுங்கண்ணே... இதெல்லாம் நமக்கு என்ன புதுசா...இவய்ங்க எப்பவுமே இப்புடித்தான்...  அடுத்த தடவையாவது தூங்காம படம் பாருங்க" ன்னு சொல்லி அவர அனுப்பி வச்சோம்.

படம் ஆரம்பிக்கும் போதே "நன்றி: திரு. சமுத்திரக்கணி" ன்னு போட்டாய்ங்க. அப்ப எங்களுக்கு ஏன்னு புரியல.. கடைசியா படம் பாத்துமுடிச்சப்புறம்தான் தெரிஞ்சிது அவரோட படத்த ரீமேக் பண்ணிருக்கதாலதான்  அந்த நன்றின்னு.

சசிகுமாரோட முந்தைய படங்களை மாதிரியே, காதலையும் நண்பர்களையும் சுத்தி நடக்குறமாதிரி கதை.  அதயே கொஞ்சம் அங்க இங்க பட்டி டிங்கரிங்கெல்லாம் பாத்து புதுபடமா எடுத்து ரிலீஸ் பண்ணிருக்காங்க. ஆனா ரொம்ப நல்லாவே எடுத்துருக்காங்க. முதல்பாதிய பரோட்ட சூரியோட டைமிங் காமெடிங்கதான் தூக்கி நிறுத்துது. அவர் பேசுற எல்லா டயலாக்குமே செம.

தமிழ்சினிமாவுல ஏற்கனவே வேலையில்லாம சுத்திகிட்டு இருக்க கேரக்டருக்குன்னே தனுஷ், ஆர்யா, விஷால்னு ஏகப்பட்ட பேரு போட்டி போட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த குரூப்புல சசிகுமாரும் சேந்துகிட்டாரு. படிச்சிட்டு சும்மா இருக்கவரு. மசாலா படங்கள் மேல ஆசை வந்துருச்சி போல. Intro song எல்லாம் வேற  இருக்கு.(ஆனா அந்த பாட்டுக்கு I am fan ஆயிட்டேன்) ஆளு செம பிட்டா இருக்காரு. ஆனா  மூஞ்சி மட்டும் கொஞ்சம் சட்டி மாதிரி இருக்கு. இவருக்கு க்ளோஸ் அப் ஷாட் வரும் போதெல்லாம் எனக்கு கலகலப்புல சந்தானம் பேசுற "போடா போடா. உன் மூஞ்செல்லாம் ரெண்டு நிமிஷத்துக்கு மேல  தொடர்ந்து பாக்க முடியலடா" ங்குற டயலாக்தான் ஞாபகம் வந்துகிட்டு இருந்துச்சி.

யையா... யய்யா சசிகுமார் அய்யா... ஓட்டுனது போதும் ரீலு அந்து போச்சிய்யா... அந்த க்ளைமாக்ஸ் லொக்கேஷன மட்டும் கொஞ்சம் மாத்திவிடுங்க... புண்ணியமா போகும். ஒருதடவ ரெண்டு தடவன்னா பரவால்ல... ஒவ்வொரு தடவையும் அங்கயேவா..

படத்தோட 1st half ஒண்ணே கால் மணி நேரம்னா அதுல ஒரு மணிநேரம் பஸ்ல தான் எடுத்துருக்காங்க. ஹீரோயின் லக்ஷ்மி மேனன் ஒண்ணும் அவ்வளவு சிறப்பா இல்லை. சுமார் ஃபிகர் தான். பஸ்ல வர்ற இந்த சுமார் ஃபிகர சூப்பரா காட்டனும்னு, மத்த எல்லா சீட்லயும் மொக்க பீசுங்களையா உக்கார வச்சிருக்காய்ங்க. மத்தபடி படத்துல குறிப்பிட்டு சொல்லனும்னா சசிகுமார் அப்பாவா வர்றவரு ரெண்டு மூணு சீனே வந்தாலும்  கெத்தா நடிச்சிருக்காரு.


நாம எதிர்பாக்குற டிவிஸ்ட் எல்லாத்தையும் ட்விஸ்ட் இல்லாம ட்விஸ்டா வச்சி க்ளைமாக்ஸ்ல நாம எதிர் பாக்காத சில ட்விஸ்டையும் வச்சி நிறைவா படத்த முடிச்சிருக்காங்க (ரொம்ப ட்விஸ்ட் அடிக்குதோ) தெளிவான போர் அடிக்காத screenplay. டைரக்டர் ப்ரபாகரன் பட்டைய கெளப்பிருக்காரு. சில காட்சிகள் வலுக்கட்டாயமா படத்துல திணிக்கப்பட்ட மாதிரி இருந்தாலும் படம் கொஞ்சம் கூட போர் அடிக்கல. அதுவும் இல்லாம மொத்தபடமும் சிட்டி வாசனை கொஞ்சம் கூட இல்லாம, மரம் செடிகொடிங்களோட ஒரே பசுமையா இருக்கது பாக்க ரொம்ப நல்லாருக்கு.


இந்த வருஷத்துல வெளியான பலபடங்களுக்கு சுந்தரபாண்டியன் எவ்வளவோ மேல். கண்டிப்பா பாக்கலாம். ஆனா என்ன எங்கயோ பாத்த மாதிரியே இருக்கும் அவ்வளவுதான்.

Monday, September 3, 2012

சென்னை பதிவர் சந்திப்பு - செம எஃபெக்ட்!!!


Share/Bookmark











Saturday, September 1, 2012

முகமூடி - செம்ம காமெடி சார் நீங்க!!!


Share/Bookmark
நான் தான் அப்பவே சொன்னேனேங்க.. இந்த ஆள நம்பாதீங்க நம்பாதீங்க... இவரு ஒரு  டுபாகூருன்னு... இப்ப கடைசியா வேலைய காட்டிட்டாரா? நானும் இதுவரைக்கும் பல கேவலமான படங்களை பாத்துருக்கேன். ஆனா இப்படி ஒரு படத்த.... never. இந்த லட்சணத்துல இந்தாளுக்கு வாய் கிழியிற மாதிரி பேச்சு மட்டும் கொறையவே இல்லை. நேத்தி வரைக்கும் "நீ பாத்த படு கேவலமான என்னப்பா? " எண்ட யாராச்சும் கேட்டா பொறி, அஸ்தமனம், முரட்டுக்காளை ன்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தேன். ஆனா அனைத்தையும் தாண்டி முன்னாடி வந்துருச்சி இந்த முகமூடி.

வழக்கமா கொரியா படம் உகாண்டா படம் ரவாண்டா படங்கள்லருந்து தான சார் அடிப்பீங்க.. அப்புடி அடிச்சாலும் எதோ தியேட்டர்ல உக்கார்ர மாதிரிதான எடுத்துத்துக்கிட்டு இருந்தீங்க. இப்ப ஏன் சார் திடீர்னு இங்லீஷ் படத்துக்கு அலேக்க ஜம்ப் அடிச்சிட்டீங்க? ஓ... இதுக்கு பேருதான் மொதல்ல வில்லனா பண்ணிட்டு படிப்படியா ஹீரோவா பண்றதா... நாங்க நல்லா பண்றமோ இல்லையோ நீங்க நல்லா பண்றீங்க சார். இப்புடியே இன்னும் நாலு படம் எடுத்து ஊருக்குள்ள விட்டீங்கன்னா, நம்மாளுகளுக்கு படம் பாக்குற எண்ணமே சுத்தமா அத்துப்போயிரும்.

சரி அப்புடி என்னதான் இந்த படத்துல இவரு எடுத்துருக்காருன்னு பாப்போம். இந்தாளுக்கு வழக்கமா மாட்டுற மாதிரி கொரியன் படம் எதுவும் கிடைக்கல. சரி பேட்மேனயே ஆட்டைய போட்டுடலாம்னு ஆரம்பிச்சிட்டாரு. நம்மாளுக ஒரு சீன எங்கயாவது ஆட்டைய போட்டாலே ஒண்ணுக்கு போற அளவு Facebook la போட்டு அடிப்பாய்ங்க... மொத்த படத்தையும் சுட்டா மோஷன் போற அளவு அடிப்பாய்ங்களேன்னு இவரே சொந்தமா முயற்சி பண்ணி பேட்மேன் சீரிஸ்ல உள்ள கேரக்டர்களை எல்லாம் தமிழ்படுத்திருக்காரு. (சொந்தமா- நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர். இப்பவே புரிச்ஞ்சிருக்கும் உங்களுக்கு எப்புடி இருந்துருக்கும்னு)




மூஞ்சில மாஸ்க்க போட்டுகிட்டு வீடுவீடா கொள்ளையடிச்சிட்டு பாக்குறவிங்களையெல்லாம்  கொலைபண்ற ஒரு கும்பல். ஏன் வீட்டுல கொள்ளை அடிக்கிறாங்களா? அட என்னப்பா நீங்க... ஜோக்கர் ரேஞ்சுக்கு அவர் பெரிய பேங்குல கொள்ளை அடிக்கிறாரு. நம்ம தமிழ்நாட்டு ரேஞ்சுக்கு வீட்டுல தான கொள்ளையடிக்க முடியும். புரியல... யாருக்கும் தெரியாத மாதிரி அந்த சீன்கள தமிழ்ப் படுத்தியிருக்காராமா...வழக்கம்போல ஊர சுத்திகிட்டு சும்மா திரியிறவரு ஜீவா (லீ). அவரு ஒரு மாஸ்டர்கிட்ட கும்பூ கத்துக்குறாரு. என்னது குஷ்பூவ எப்புடி கத்துக்க முடியுமா? யோவ் அது கும்ஃபூ யா...  அத கத்துக்குடுக்குற நம்ம செல்வா மாஸ்டர பாக்கனுமே... "பாஸ்.. சுகர் மாத்திரைய வீட்டுலயே வச்சிட்டு வந்துட்டேன்" ன்னு தளபதி தினேஷ் சொல்ற டயலாக் இவருக்கு தான் கரெக்டா பொருந்தும். சற்று டொம்மையான மாஸ்டரா இருக்காரு.

அதேமாதிரி இன்னொரு கும்பூ மாஸ்டர் இருக்காரு... அவருதான் நம்ம நரேன். டார்க் நைட்ல  வர்ற ஜோக்கர் கேரக்டர திறம்பட தமிழ்ல செஞ்சிருக்கவரு இவருதான். வக்காளி இந்த  கண்றாவியயெல்லாம் பாக்க வேணாம்னு அந்தாளு முன்னாடியே போய் சேந்துட்டாரு போலருக்கு. அப்புறம் கமிஷ்னர் GORDAN ah நடிச்சிருக்கவரு நம்ம நாசர். இவர பாக்கதான் படத்துல பாவமா இருக்கு. நேத்து நடிக்கவந்த ஒருத்தன இவருக்கு சீனியர் ஆபீசரா போட்டு இவர அந்தாளுக்கிட்ட திட்டு வாங்குறமாதிரி நெறைய சீன் எடுத்துருக்காய்ங்க கருமம்.

அப்புறம் படத்துல ஹீரோயின்னு ஒண்ணு அப்பப்ப வந்துட்டு போவுதுங்க. இதுக்கு இண்ட்ரோ சீன் எடுத்துருப்பாய்ங்க பாருங்க. மொதல்ல பாத்தா மொகத்த காட்டாம வேறு எத எதயோ  காமிச்சி பில்ட் அப் குடுத்துட்டு ரெண்டு சீன் கழிச்சி மூஞ்ச காமிச்சாய்ங்க பாருங்க... "அய்யோ ஆத்தா பல்லு ஏண்ணே அப்புடி இருக்கு?" ன்னு என் பக்கத்துல உள்ளவரு மயங்கியே விழுந்துட்டாரு. அந்த மொகரைய காமிக்காமயே இருந்துருக்கலாம்.

ஓவ்வொரு கேரக்டரும் ரொம்ப செயற்கை தனமா இருக்கு. உதாரணமா ஜீவாவோட தாத்தா ஒரு அந்த காலத்து எலெக்ட்ரானிக்ஸ் எஞ்ஜினர் போல... எப்ப பாத்தாலும் வீட்டு மாடில எதோ ஒரு PCB போர்டுல எதயோ பத்தவச்சமாணியமாவே இருக்காரு. (அநேகமா பேட்மேன்ல வர்ற Mr,Fox சோட தமிழ் கேரக்டர் போலருக்கு இவரு) அப்புறம் அதேவீட்டுல வித்யாசமான துணிங்கள்ளாம் டிசைன் பண்ற ஒருத்தர் இருக்கரு. புரிஞ்சிருக்குமே... அவருதான் ஜீவாவுக்கு அந்த "அருமையான" பேட்மேன் ட்ரஸ்ஸ தச்சி தர்றாரு. என்னது தையக்கூலி எவ்வளவா? என்னங்க ஒரே வீட்டுல இருந்துகிட்டு இதுக்கெல்லாம் காசு கேப்பாரா...

ஜீவாவ ஒரு சூப்பர் மேனா கதைக்குள்ள கொண்டுவர்றதுக்கு இந்த ஆளு கண்டமேனிக்கு  உள்ள உக்காரமுடியாத மாதிரி என்னென்ன சீனோ எழுதிருக்காரு. ஒரு சீன்ல ஜீவா, கந்தசாமில வடிவேலு சேவல் வேஷம் போட்டு போற மாதிரியே ஒரு கெட் அப் போட்டுக்கிட்டு "அந்த சூப்பர்" ஃபிகர மடக்குறதுக்காக அது வீட்டுக்கு போய் குட்டிக்கரணம்லாம் அடிச்சி காட்ட அங்கருக்க ஒரு சின்ன கொழந்த "உங்க பேர் என்ன அங்கிள்?" ன்னு கேக்குது அதுக்கு இவரு என் பேரு "முகமூடி" ங்கறாரு. அதுக்கப்புறம் படம் ஃபுல்லா இவர எல்லாரும் "முகமூடி" ன்னு தான் கூப்புடுறாங்க. "முகமூடி அங்கிள் வந்துட்டாரு" "முகமூடி திருடன புடிச்சிக்குடுத்துட்டாரு" "முகமூடி தான் எங்கள காப்பத்தனும்" இப்புடியெல்லாம் பேசிகிட்டு இருக்காய்ங்க. கண்றாவி கேக்கவே எவ்வள கடுப்பா இருக்கு.

படம் ஆரம்பிச்ச் கொஞ்ச நேரதுலருந்தே படத்த காமெடி படமாதான் எல்லாரும் பாத்துகிட்டு இருந்தாய்ங்க. இதுல செல்வாவுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக்... "இருவது வருஷத்துக்கு முன்னால..." ன்னு ஆரம்பிச்சி 10 நிமிஷம் ஃப்ளாஷ்பேக் சொல்லி முடிக்க, நமக்கு என்ன தோணும்னா "ஃப்ளாஷ்பேக் ஒண்ணும் அவ்வளவு வெயிட்டா இல்லையேப்பா"ன்னு தான். அதவிட ஒரு  கொடூர காமெடி, செல்வா ஜீவாகிட்ட "லீ.. நா இன்னும் உனக்கு கும்ஃபூல ஒரே ஒரு form தான் சொல்லிக்கொடுக்கல.. அதயும் கத்துத் தரேன்னு சொல்லி மெட்ரே ரயில் கட்ட கொண்டு வந்த ஒரு க்ரேன் உச்சில ஏறி நின்னுகிட்டு  லொல்லுசபா மனோகர் மாதிரி கைய முன்னாடி பின்னாடி ஆட்டிக்கிட்டு என்னமோ பண்ணிகிட்டு இருக்காரு. டேய் இதுக்கு பேருதான் அந்த யாருக்கும் தெரியாத கும்ஃபூ form ah... இந்த கருமத்த கீழ நின்னே சொல்லித்தரவேண்டியதான.. தவறி விழுந்தீங்கண்னா மண்டை செதறிப் போயிருமேடா...

அதவிட செம காமெடி இவரு க்ரேன்மேல ஏறி சொல்லிக்கொடுத்த அந்த ஸ்பெஷல் form ah வச்சிதான் நம்ம முகமூடி, வில்லன் நரேன கடைசில கொல்லுவார்னா பாத்துக்குங்களேன். க்ளைமாக்ஸ்ல நரேன் ஒரு பர்ஃபார்மண்ஸ் பண்ணுவாரு பாருங்க... "சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன் இப்ப முகமூடியா... "அப்புடின்னு ஒரு டயலாக்க வாந்தி வர்றமாதிரி ஒரு ஸ்லாங்க்ல பேசிக் கொன்னுடுவான்.

படத்துல நல்லாருக்குன்னு சொல்ற மாதிரி உள்ள ஒரே விஷயம் BGM தான். செமயா இருக்கு. எங்கருந்து அடிச்சாய்ங்கன்னு தான் தெரியல. அப்புறம் பாட்டபத்தி சொல்லனும்னா "நாட்டுல நம்ம வீட்டுல" பாட்டுக்கும் அஞ்சாதே "கண்ணதாசன் காரக்குடி" பாட்டுக்கும் ட்யூன்லயோ இல்ல கொரியோ க்ராஃபிலயோ ஆறு வித்யாசம் கண்டு புடிக்கிறவங்களுக்கு ஆஸ்கரே குடுக்கலாம். அப்புறம் "வாயமூடி சும்மா இருடா" பாட்டும் அவரோட மொத படத்துல வந்த "என்ன ஆச்சுடா... ஏது ஆச்சுடா" மாதிரியே இருக்கு.




ஜீவாவும் சரி நரேனும் சரி... செம ஃபிட்டா இருக்காங்க. ஆனா என்ன பண்றது இப்புடி ஒரு படத்துல நடிச்சிபுட்டாய்ங்களே.. இந்த கொடுமையில இந்த படத்துக்கு மூணு பார்ட் எடுக்கலாம் நாலு பார்ட் எடுக்கலாம்னு மிஸ்கினுக்கு பேச்சு வேற... மிஸ்டர் மொன்னை...மொதல்ல ஒரு  பார்ட்ட ஒழுங்கா எடுங்க.

இவ்வளவு சொல்லியும் சில பேரு என்ன பண்ணுவீங்க.."உங்களுக்கு மிஸ்கினின் கலைபார்வையை ரசிக்க முடியவில்லை. உங்களுக்கெல்லாம் 5 பாட்டு 4 ஃபைட்டு இருந்தாதான் படம் நல்லா இருக்குன்னு சொல்லுவீங்கன்னு"  எனக்கே கமெண்ட் போட்டுட்டு போய் இந்த படத்த பாத்தே தீருவேன்னு அடம் புடிப்பீங்க. உங்க விதிய யாரால மாத்த முடியும். ம்ம்ம்ம்... கிளம்புங்கள்


படம் பாத்துட்டு மிஸ்கின் மேல கொலைவெறியா இருக்கவிங்க இதயும் படிக்கலாம்.




மிஷ்கின் என்னும் உலகமகா டைரடக்கர்



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...