Friday, September 26, 2014

லிங்கு போயி வெங்கி வந்துச்சி டும் டும் டும்!!!


Share/Bookmark

அவரு இதுவரைக்கும் அஞ்சாறு படம் எடுத்துருக்காரு. நாலஞ்சி சூப்பர் ஹிட்டு குடுத்துருக்காரு. அப்பல்லாம் கிடைக்காத பேரும் புகழும் (?) ஒரு அரைமணி நேர பேட்டி மூலமா கிடைச்சிருக்கு. அவரே கனவுல கூட நினைச்சிருக்க மாட்டாரு நாம ஒரு நாள் இவ்வளவு பேசப்படுவோம்னு. அஞ்சான் பாத்து வெறியான எவனோ ஒருத்தன் ஒரு வருசத்துக்கு முன்னால லிங்கு பாய் பேசுன வீடியோவ தேடிப்புடிச்சி எடுத்துருக்கான். உண்மைய சொல்லப்போனா அஞ்சான் மெகா ஹிட்டாயிருந்தா கூட லிங்குசாமி இவ்வளவு பேசப்பட்டிருக்கமாட்டாரு. போன சனி ஞாயிறுல அவர மையமா வச்சி ஃபேஸ்புக்குல வந்த ஃபோட்டோக்கள் மட்டும் ஆயிரத்த தாண்டும். என்னதான் வெளியில ஏன் இந்த தனிமனித தாக்குதல் தோழர்களேன்னு சில பேரு திரிஞ்சாலும் அந்த ஃபோட்டோக்களப் பாத்து சிரிக்கலன்னா மனுஷங்களே கெடையாது. 

எங்கடா வச்சிருந்தீங்க இவ்வளவு காமெடி சென்ஸ. லிங்கு பாய் அடுத்து படம் எடுப்பாரான்னே டவுட்டா இருக்கு? அப்டியே படம் எடுத்தாலும் சத்தியமா அந்தப் படத்த பத்தி எந்த பேட்டியிலயும் சொல்ல மாட்டாரு. டைரக்டர் நாந்தான். ஆனா அந்தப் படம் பத்தி மட்டும் நா பேச மாட்டேன்ன்னு எஸ்கேப்தான் ஆகப்போறாரு.

எல்லாரும் லிங்கு பாய ஓட்டி டயர்டு ஆகும்போது அடுத்து வந்தாரு நம்ம வெங்கி பாய்.  கரண்டு ஷாக் அடிக்கிறவன கையால புடிச்சி காப்பாத்த நினைக்குறது மாதிரி, லிங்கு பாய்க்கு உதவி பண்ண வந்து நம்மாளும் கரண்டுல அடிபட்டது  தான் மிச்சம். என்ன இருந்தாலும் ஒரே துறையில இருக்க சக நண்பர் அடிவாங்கும் போது காப்பாற்ற நினைச்சது எந்த தப்பும் இல்லை. ஆனா கெத்து காமிக்கிறதா  நெனைச்சி, எதோ ரசிகர்களுக்கு யாரையும் விமர்சிக்க அருகதை இல்லைங்குற லெவலுக்கு பில்ட் அப்
பண்ணிருக்கது தான் கொஞ்சம் ஓவர். வெங்கி என்ன சொன்னார்ங்குறது கிட்டத்தட்ட எல்லாருக்குமே தெரியும் இருந்தாலும் தெரியாத ஒண்ணு ரெண்டு பேரு இருந்தாலும் அவங்களுக்காக.

”Movie making is not as easy as u think guys!! We always do our best!! Sometimes it works out
and most of the times it don’t. Lingusami Saar is a great film maker!! I worked with him in Ji!!!Every creators are not god!! Even god made mistakes in his creations!! So who are we to judge!!

Hehehe all u guys are so funny but no one makes sense!! Everything that matters to u is whether a movie is a hit or not!! If u guys are good audience why didn’t u make thanga meengal a hit!!!?!???????? U can only troll us!! But what if we trolled u?!?! We make the movies for u!! We agree but why don’t u make a good film a hit?!?” 

Movie making is not as easy as u think guys  - Trolling is also not as easy as you think/ Sometimes it works out and most of the times it don’t  - அப்போ மாஸ்மட்டைங்குறத   இப்பவே  சொல்லிட்டீங்க.. அடுத்து   Lingusami Saar is a great film maker!! - தெரியும்  I worked with him in Ji!!!   - அதுனால தான் அந்தப்படம் மட்டையாச்சின்னும் தெரியும் Every creators are not god!!- இத எந்த புத்தகத்துல படிச்சீங்க?  Even god made mistakes in his creations!! - அது உங்க தம்பிய பாத்தாவே நல்லா தெரியிது  So who are we to judge - அடிங்க..காசு குடுத்து பாக்குறது நாங்க. no one makes sense  - ஆமா நமக்கு சென்ஸ் இல்லை. சாரோட மூளைய தான் ஒவ்வொரு  கடையிலயும் கூறு போட்டு வச்சிருக்காங்க
 //Everything that matters to u is whether a movie is a hit or not!! If u guys are good audience why
didn’t u make thanga  meengal a hit!!!?!????????//

நீங்க நல்ல படங்கள்ன்னு நெனைச்சி எடுக்குறதெயெல்லாம் ஹிட்டாக்கனும்னு மக்களுக்கு எந்த அவசியமும் இல்லை. நீங்க மட்டுமே பாக்குறமாதிரி உங்களுக்கு புடிச்ச ஒரு படத்த எடுப்பீங்க. அப்புறம் அது தியேட்டர்ல ஓடலன்னு நீங்களே ஒப்பாரி வேற வப்பீங்க. மக்களுக்கு புடிச்ச மாதிரி படம் எடுத்தா தானே ஓடும். உங்களோட அதிகப் ப்ரசங்கி தனத்தையும், உங்களை வித்யாசமானவரா  காட்டிக்கவும் சைக்கோத் தனமா எதயாவது எடுத்துட்டு யாரும் பாக்க மாட்டேங்குறாங்க பாக்க மாட்டேங்குறாங்கன்னு பொலம்புலறதுல என்ன யூஸ்?

எப்பவுமே நல்ல பொழுதுபோக்குபடங்கள்  தான் வியாபார ரீதியா ஹிட்டாகுமே தவிற நல்ல படங்களாகமட்டும் வெளியாகுற 90% படங்கள் கண்டிப்பா வியாபார ரீதியா வெற்றியடையாது. அதுக்காக மக்களுக்கு நல்ல படங்களை ரசிக்க தெரியலைன்னு எந்த ஒரு அர்த்தமும் இல்லை. அவை நல்ல படங்கள்தான் ஆனா தியேட்டருக்கு வந்து பொழுதுபோக்குவதற்கு சரியான படங்கள் அல்ல. அவ்வளவு தான். இப்பவும் அன்பே சிவம்படத்த ஆஸெம் அருமைன்னு சொன்னாலும் எத்தனை பேரால அந்த படத்த at a strech la உக்காந்து கொட்டாவி விடாம பாக்க முடியும்?

ஒரு படத்த ஹிட்டாக்குறதுலயோ இல்லை ஃப்ளாப்பாக்குறதுலயோ இணையத்துல இருக்குற நண்பர்களோட பங்கு மிக மிகக் குறைவே. பொதுமக்கள படத்த பாக்க வைக்கிற வேலைகளயெல்லாம்  நீங்க தான் பாக்கனுமே தவிற இணைய விமர்சகர்கள் அந்த வேலைய செய்யனும்னு எந்த அவசியமும் இல்லை. 

why didn’t u make thanga  meengal a hit ?இணைய நண்பர்கள்தான் ஒரு படத்தோட ஹிட்ட தீர்மானிக்குறதுன்னா இந்தப்படம் மெகா ஹிட்டாயிருக்கனும். ரிலீஸாவுறதுக்கு முன்னாலயே இந்தப் படத்த ஃபேஸ்புக்குல ஹிட்டாக்குனாங்க. பணமில்லை, ரிலீஸ் செய்ய விடமாட்டேங்குறாங்கன்னு டைரக்டர் ராமின் புலம்பல்களால தான் அந்தப் படத்துக்கு இணைய நண்பர்கள் ஒரு ஹைப் குடுத்தாங்களே தவிற, உண்மையில் அது ஒண்ணும் அவ்வளவு ஒலகத்தரமான படமெல்லாம் இல்லை. சும்மா ஆன்னா ஊன்னா ஏன் தங்க மீன்கள் ஹிட்டாவலன்னு கேட்டுக்கிட்டு.  இன்னும் சொல்லப்போனா இணையத்துல உலாத்துரவங்க மட்டும் தான் அந்தப் படத்த பாத்துருப்பாங்களே தவிற மற்றவர்களுக்கு அப்படி ஒரு படம் வந்துச்சான்னு தெரிஞ்சாலே பெரிய விஷயம். 

இவ்வளவு ஏன்? மூடர் கூடம் படத்த பத்தியோ இல்லை சதுரங்க வேட்டை படத்த பத்தியோ இணையத்துலருந்து ஒரு நெகட்டிவ் விமர்சனத்த எடுத்து காமிங்க பாக்கலாம். அப்டியிருந்தும் அந்தப் படங்கள் சரியா போகலன்னா என்ன காரணம்? மக்கள் கிட்ட உங்களால அத கொண்டு போய் சேர்க்க முடியல. உங்களுடைய மார்கெட்டிங் கோளாறுகளால ஃப்ளாப் ஆன படங்கள காட்டி ஏன் ஹிட்டாக்கலன்னு கேக்குறீங்களே இது நியாயமா?

நல்ல படங்களா இருக்கனும், நல்ல பொழுது போக்கு அம்சங்களும் இருக்கனும், நல்ல மார்க்கெட்டிங்கும் இருக்கனும். இது எல்லாம் இருக்குற ஒரு படம் நிச்சயம் ஃப்ளாப் ஆகாது. இது மூணுல எதுல கோட்ட விட்டாலும் வியாபார ரீதியாக டண்டனக்கா தான்.  


”Movie making is not as easy as u think guys!! நாங்க அப்படி நினைக்கல. ஆனா மூவி மேக்கிங்  மட்டும் தான் கஷ்டமானதுன்னு நீங்க நெனைச்சீங்கன்னா அந்த நினைப்பயும் மாத்திக்குங்க. அவன்  அவனுக்கு அவங்க அவங்க  வேலை தான் கஷ்டமானது. 
But what if we trolled u?!?!  - அய்யோ.. சார் பயமா இருக்கு சார்... ப்ளீஸ் சார் அப்டியெல்லாம்  பண்ணீடாதீங்க.. நீங்க எங்களை ஓட்டுறதும், மேல இருக்க ஃபோட்டொவுல இருக்கவன் செய்யிறதும்  ஒண்ணுதான். விக்ரமன் ஸ்டைல்ல சொல்லனும்னா கல்லு மேல கண்ணாடி விழுந்தாலும் கண்ணாடி மேல கல்லு விழுந்தாலும் சேதாரம் கண்ணாடிக்கு தான். பாத்து சூதானமா நடந்துக்குங்க.   


Saturday, September 20, 2014

அரண்மனை - Upgraded!!!


Share/Bookmark
சுந்தர்.சி யோட முப்பது படங்கள்ல முதல் முதலா வந்திருக்கிற ஒரு பேய் படம். எத்தனை வருஷம் ஆனாலும் இன்னும் போர் அடிக்காத படங்களை சுந்தர்.சியால குடுக்க முடியிறதுக்கு முக்கியமான  காரணம் அவர் எடுத்துக்கிட்ட காமெடிங்குற தீம் தான். எத்தனை தடவ பாத்தாலும், காட்சிகள் ரிப்பீட்  ஆனாலும் சலிக்காத ஒரு விஷயம் காமெடி. சதுரங்க வேட்டை படத்துல நட்ராஜ் ஒரு வசனம்  பேசுவாரு. “இப்பல்லாம் அம்மா, தங்கச்சி செண்டிமெண்ட் வச்சி படம் எடுத்தாலே க்ளீஷேன்னு  சொல்றாங்க. என்னிக்குமே க்ளீஷே ஆகாத ஒரே விஷயம்னா அது பணம் தான் சார்”ன்னு. பணத்தோட  சேத்து காமெடியையும் அந்த லிஸ்டுல சேத்துக்கலாம். எத்தனை தடவையானாலும் காமெடிங்க நமக்கு  சலிக்கிறதில்லை. இதுக்கு மிகச் சிறந்த உதாரணம் சுந்தர்.சி படங்கள் தான். அவர் படங்கள்ல அவர்  எடுத்த காட்சிகளே பல முறை ரிப்பீட் ஆயிருக்கு. இருந்தாலும் நமக்கு சுத்தமா போர் அடிக்கிறதில்லை.  அதே வரிசையில இன்னொரு காமெடி கலக்கல் தான் இந்த அரண்மனை.

”ஏன் திடீர்னு ஹாரர் படம் எடுக்க ஆரம்பிச்சிட்டீங்க?”ன்னு சுந்தர்.சிய கேட்டதுக்கு இப்ப உள்ள  ட்ரெண்டுக்கு ஹாரர் படஙக்ள் தான் நல்லா போகுது அதான் எடுக்குறேன்னு சொல்லிருக்காரு. காலம்  மாற மாற தன்னையும் update  பண்ணிக்கிறதும் சுந்தர்.சியோட வெற்றிக்கு இன்னொரு காரணம். ரொம்ப  நாளுக்கப்புறம் அவர் எடுத்த கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு படங்கள பாக்கும் போது,  அது எதோ இப்ப வர்ற சின்ன பசங்க எடுத்த படம் மாதிரி எல்லாமே லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கேத்த  மாதிரியான காமெடி.  இப்ப வந்துருக்க அரண்மனையும் அப்டித்தான்.

கொஞ்ச நாளுக்கு முன்னால வந்து செம்ம ஹிட்டான காஞ்சனா, யாமிருக்க பயமே படங்களோட  ஃபார்முலாவான திகில்+காமெடி கலவையில வந்திருக்க படம் தான் இந்த அரண்மனை. காமெடிங்குறது  சுந்தர்.சி யோட ஹோம் பிட்ச். அதுவும் பெரிய அரண்மனை, சந்தானம், சுவாமிநாதன், மனோபாலா,  கோவை சரளான்னு கும்பலான காமெடி பட்டாளம். எல்லாரையும் ஓவ்வொரு காரணத்த காமிச்சி   ஒண்ணா ஒரே அரண்மமனைக்கு கொண்டு வந்துடுறாரு. அப்புறம் என்ன சொல்லவா வேணும் அடிச்சி  நாசம் பண்ணிருக்காரு. குறிப்பா மனோபாலா கோவைசரளா காம்போ காமெடி  தாறுமாறு.  மனோபாலாவயும் பெஸ்டா யூஸ் பண்றது சுந்தர்.சி தான்.

பெரும்பாலும் சுந்தர்.சி படத்துல ஹீரோக்கள் மிக்சர் திங்கும் கேரக்டர்கள் தான். படத்துக்கு ஹீரோ ப்ரச்சனை வந்துடக்கூடாதுன்னு எதாவது டம்மிக்கள தூக்கி போட்டு அவனுங்கள சைடாக்கிட்டு  சந்தானத்த மெயினாக்கி தான் இப்ப படம் எடுக்குறாரு. அதுதான் நல்லா ஒர்க் அவுட்டும் ஆகுது.

படத்துல காமெடி பார்ட்டுக்கு யோசிச்ச அளவு Horror part க்கு சொந்தமா யோசிக்கலன்னு தான் சொல்லனும்.  The Conjuring, The Grude, Insidious, The mirror ன்னு சில ஹாலிவுட் படங்களப் பாத்து பேயிங்களோட  உருவத்தையும் சரி அதுங்க வர்ற சீனும் சரி அதே மாதிரி தான் எடுத்துருக்காங்க. ஆனாலும் நல்லாவே எடுத்துருக்காய்ங்க.

சந்திரமுகி ஷரவணாவாக இந்த படத்துல தலைவர் சுந்தர்.சி. ரொம்ப நாளுக்கப்புறம் திரையில  வந்திருக்காரு. சந்திரமுகில தலைவர் டாக்டர். இதுல சுந்தர்.சி வக்கீல். அவ்வளவு தான் வித்யாசம்.  மத்தபடி பேய் யாருன்னு கண்டுபுடிக்கிறதுலருந்து பேய்கிட்டருந்து நண்பர காப்பத்த கஷ்டப்படுற வரைக்கும் அதே கேரக்டர்.

 என்னதான் ஏற்கனவே பாத்த பேயகள்னாலும் டக்குன்னு பேயிங்கள காட்டும்போது உள்ளுக்குள்ள பீதி  கெளம்பத்தான் செய்யிது. குறிப்பா ஒரு சின்ன புள்ளை எப்பவும் தனியா யார் கூடவோ பேசிட்டே  இருக்கும். அத எல்லாரும் லூசுன்னு முடிவு பண்ணிருவாங்க. சுந்தர்.சி மட்டும் அதுகிட்ட போய்  யார்கிட்டம்மா பேசுறன்னு கேப்பாரு.. அதுக்கு அந்த புள்ளை செல்வி அக்காட்ட பேசிட்டு இருக்கேன்னு  சொல்லும். செல்வி அக்காவா இங்க யாரும் இல்லையேன்னு சுந்தர்.சி கேக்கவும் அந்தப் புள்ளை ஒரு வெறும் இடத்த காமிச்சி  “நல்லா பாருங்க இங்கதான் செல்வி அக்கா உக்காந்துருக்காங்க. அதுவும் உங்களையே தான் பாத்துட்டு  இருக்காங்க” ன்னு சொன்னதும் சுந்தர்.சி யவிட நமக்கு லைட்டா கலக்குது. ஹன்சிகா, லட்சுமி ராஜ், ஆண்ட்ரியான்னு முணு கில் பஜக் கில்மாஸ இறக்கி ஹாரரோட கவர்ச்சியையும்  அங்கங்க அள்ளித் தெளிச்சிருக்காங்க. ஹன்ஸிகா செம்ம அழகு. First half ஃபுல்லாவே நம்மள  கொஞ்சம் கூட யோசிக்க விடாம பயங்கரமா சிரிக்கவச்சும் பயங்கரமா பயமுறுத்தியும் கொண்டு  போயிடுறாங்க. ஆனா ஃபர்ஸ்ட் ஹாப்ல இருந்த அந்த சுவாரஸ்யம் செகண்ட் ஹாஃப்ல இல்லை.  சந்திரமுகிய திரும்ப பாக்குற மாதிரி ஒரு ஃபீலிங்க். அதுவும் ஃப்ளாஷ்பேக் பழைய புளிப்பானைக்குள்ள  வச்சி எடுத்த மாதிரி அருதப் பழசு. பேய் படம் என்று வந்துவிட்டால் வேறு என்னதான் ஷெய்ய  முடியும்.   

பரத்வாஜோட பாடல்கள் சுமார்தான்னாலும் ரொம்ப அருக்கல. செகண்ட் ஹாஃப்ல வர்ற சாதனா  சர்க்கம் பாட்டு ஓக்கே ரகம். அதுக்கும் மேல ரொம்ப பாட்டு வக்காம 3 பாட்டோட நிறுத்துனது மிகப்  பெரிய ஆறுதல். Background ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்கலாம்.  படத்துக்கு இன்னொரு பெரிய ப்ளஸ் CG. சுந்தர்.சி கொஞ்ச நாளுக்கு முன்னால ஒரு பேட்டில இந்த  படத்தோட கிராஃபிக்ஸ் ரொம்ப நல்லா வந்துருக்கு. கிராஃபிக்ஸ் மாதிரியே தெரியாதுன்னு  சொல்லிருந்தாரு. கிட்டத்தட்ட உண்மைதான். பேய் வர்ற காட்சிகளும் சரி மத்த கிராஃபிக்ஸும் சரி  ரொம்பவே நல்லாருக்கு. பேய்களயெல்லாம் ஆங்கிலப்படங்கள்லருந்து கடன் வாங்கியிருந்தா கூட அதே  மாதிரி நல்லா ”குவாலிட்டி”யான பேய்களையே காமிக்கிறாங்க. அதுக்கும் மேல க்ளைமாக்ஸ்ல சூரிய  கிரகணம் வர வர கார் ஓட்டிக்கிட்டு வரும் போது அந்த கிரகணமும் background கலரும் செம.

அரண்மனை இதுக்கு முன்னால வந்த காஞ்சனா படத்தோட அதே ஃபார்முலாதான்னாலும், காஞ்சனா  கூட அரண்மனைய கம்பேர் பண்ணும் போது பயமுறுத்துறதுல காஞ்சனாதான் பெஸ்ட். காஞ்சனாவிலயும் இடையில காமெடி வந்தாலும்  அதவிட அதிகமா பேய் வர்ற சீன்கள்ல பயமுறுத்திருப்பாங்க. இப்ப கூட  காஞ்சனாவ தனியா உக்காந்து பாக்க முடியாது. அதே அரண்மனையில காமெடி பார்ட் காஞ்சனாவ விட  பெஸ்டா இருந்தாலும் பேய்  வர்ற காட்சிகள் ரொம்ப பெரிய தாக்கத்த ஏற்படுத்தாததும், எல்லா  காட்சிகளையும் நாம ரொம்ப ஈஸியா கணிச்சிடுற மாதிரி இருக்கதும் படத்துக்கு மைனஸ்.

எது எப்படியா இருந்தாலும் காமெடிக்காக கண்டிப்பாக பார்க்கலாம். அதுவும் மேற்கூறிய Conjuring,   Insidious, The mirror, The grudge படங்களை பார்த்தது இல்லைன்னா பேய்களும் உங்கள மிரளவைக்கும்.  மொத்ததில் இந்த படத்துலயும் சுந்தர்.சியோட மேஜிக் ஒர்க் அவுட் ஆயிருக்கு. இந்த வருடத்தின்  வெற்றிப் படங்கள் வரிசையில அரண்மனையும் விரைவில் சேரும். 

Thursday, September 18, 2014

POWER (Telugu) - LOW VOLTAGE!!!


Share/Bookmark
ரவி தேஜாவுக்கு சில வருஷங்களவே கட்டம் சரியில்லை. ஒரு சமயத்துல தொட்டதெல்லாம்  ஹிட்டான காலமெல்லாம் மாறி இப்போ அவரு ஹிட்ட பாத்தே பல வருமாகிப்போச்சி. கடந்த  ரெண்டு மூணு வருஷத்துல அவர் நடிச்ச அத்தனை படமும் ஃப்ளாப். ஓண்ணு ரெண்டு படத்துக்கு  பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன் ஓரளவு ஓக்கேன்னாலும் படங்களோட தரத்த பாக்கப்போனா   கப்பிதான். ரவிதேஜாவோட வாழ்க்கையில மிகப்பெரிய ஹிட்டுகளா அமைந்த விக்ரமார்குடு மற்றும்  மிரப்பகாய் படங்கள்ல அவர் போலீஸா நடிச்சிருந்தாரு. அதற்கடுத்து இந்த ”பவர்” லயும் போலீஸ்  கேரக்டர்ல நடிச்சிருக்காரு. இந்தப்படம் எப்புடி? இப்புடுச் சூடுவோம்.

ம்மூர்ல படத்துக்கு எதாவது சீன் பஞ்சம்ன்னாலோ இல்லை படத்துக்கு கதையே பஞ்சமுன்னாலோ  என்ன பண்ணுவாய்ங்க.. அஞ்சாரு ஹாலிவுட் படங்கள போட்டு பாப்பாய்ங்க. ஹாலிவுட்  படங்கள்ல ஆட்டைய போட்டா அழகா கண்டு புடிச்சிடுறாய்ங்கண்ணு கொரியன் படங்கள்லருந்து  ஆட்டைய போடுவாய்ங்க. இப்போ அதையும் கண்டுபுடிச்சிடுறாய்ங்கண்ணு வேற எதாவது மொழில  நல்ல படங்கள் வந்துருக்கான்னு தேடிகிட்டு இருக்காய்ங்க. இதானைய்யா ஒரு படைப்பாளிக்கு  அழகு. இதானைய்யா தொழில் கத்துக்குற முறை. ஆனா தெலுகுல என்ன பண்றாய்ங்க தெரியுமா?   அவிங்க ஊர்ல கதைக்கோ, காட்சிக்கோ பஞ்சமுன்னா அவிங்க ஊர்ல அதுக்கு முன்னால எடுத்த  படங்களையே போட்டுப் பாத்து அதுலருந்தே சீன உருவுறாய்ங்க. அடாப்பாவி அடாப்பாவி..   நரேந்த மோடி இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை மட்டும் உபயோகியுங்கள்னு சொன்னத  தப்பா  புரிஞ்சிகிட்ட குரூப்பு போலருக்கு. 

விக்ரமார்குடு,  சாமி, ஜெண்டில்மேன், டான் சீனுன்னு பல படங்கள்லருந்து கொஞ்ச கொஞ்ச  துணிய உருவி பவருங்குற இந்த பல கலர் ட்ரெஸ்ஸ தச்சிருக்காய்ங்க. ACP பல்தேவ் (ரவிதேஜா) ஒரு பெரிய corruption பேர்வழி. பல கோடி ரூவாய் லஞ்சமாக வாங்கியிருக்கவரு. எந்த ஊர்ல  போனாலும் பெத்த பெத்த அமவுண்ட்ட லஞ்சமா வாங்கி பதுக்குறவரு. முதல் காட்சிலயே கல்கத்தாவுல ”கங்குலி பாய்” ங்குற பெரிய ரவுடிய கோர்டுக்கு கொண்டு போகும் போது பல்தேவ்  அவன கடத்தி கொண்டு போயிடுறாரு. கங்குலி பாய கடத்தி ஒரு இடத்துல வச்சிட்டு தப்பிக்கும்.

போது போலீஸால சுடப்பட்ட கார் வெடிச்சி பல்தேவ் இறந்து போயிடுறாரு.
தமிழ் படத்துலயாவது ஹீரோ இறந்து போறதுக்கு ஒரு பத்து சதவீத வாய்ப்பு இருக்கு. ஆனா தெலுங்கு படத்துல யாராவது இது மாதிரி கார் வெடிச்சி மலையிலருந்து உருண்டு சாகுற மாதிரி  காமிச்சா சத்தியமா அவனுங்க செத்துருக்க மாட்டானுங்க. எப்பிடியாது எஸ்கேப் ஆயிருப்பானுங்க  இல்லை எவனாவது காப்பாத்திருப்பானுங்க. அப்டியே கட்பண்ணி ஓப்பன் பண்ணா இன்னொரு  ரவிதேஜா போலீஸாகனும்ங்குற கனவோட ஊருக்குள்ள லந்து பண்ணிட்டு அப்டியே ஹன்சிகாவ  கரெக்ட் பண்ணிட்டு சுத்திட்டு இருக்காரு.

ஒருதடவ எதேச்சையா இந்த ரவிதேஜா டிவில வர அத கல்கத்தா ஹோம் மினிஸ்டர் பாத்து ஸாக்  ஆயி ஃபீல் ஆயிடுறாப்ள. இவனையே ACP பல்தேவா நடிக்க வச்சி காணாம போன கங்குலி  பாய கண்டுபுடிக்கலாம்னு ப்ளான் போடுறாப்ளே. ஏற்கனவே போலீஸ் வேலையில சேர துடிக்கிற  நம்ம ரவிதேஜா இந்த ஆப்ரேசனுக்கு ஒத்துக்குறாரு.  அப்டியே விக்ரமார்குடு செகண்ட் ஹாஃப்ல  பாத்தது இங்க ஃபர்ஸ் ஹாஃப்லயே ஓடுது. அப்புறம் கங்குலி பாய கண்டுபுடிச்சி ஹோம்  மினிஸ்டர்கிட்ட ஒப்படைக்கும் போது ஒரு ட்விஸ்டு. இண்டர்வல்ல ஒரு ட்விஸ்ட் வச்சே  ஆகனும்ங்குறது இப்போ தெலுங்கு படங்கள்ல எழுதப்படாத விதியாயிடுச்சி.

அப்புறம் செகண்ட் ஹாஃப்ல ACP பல்தேவோட ஃப்ளாஷ்பேக்க ஓப்பன் பண்றாய்ங்க. அப்பதான்  நம்ம சாமி படமும், ஜெண்டில்மேன் படமும் ஓடுது. பல்தேவ் ஏன் இவ்வளவு லஞ்சம்  வாங்குறாருன்னு வெளக்குறானுங்க. வில்லன் லஞ்சம் வாங்குனா அவன் கருப்பு பணம் சேக்குறான்.  ஆனா ஹீரோ லஞ்சம் வாங்குனா அவர் அனாத இல்லங்களுக்கு குடுப்பாரு இல்லை எதாவது  நல்ல காரியம் செய்யறதுக்கு பயன்படுத்துவாரு. இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா பாஸூ.  ஃப்ளாஷ்பேக்குல வருது நம்ம கேடிபில்லா கில்லாடி ரங்கா ரெஜினா.. ஃப்ளாஷ்பேக் முடியும்  போது வில்லன்களால குண்டடி பட்டு சாவுறதுக்குண்ணே அளவெடுத்து தச்சா மாதிரி ஒரு  கேரக்டர். 

ஃப்ளாஷ்பேக் முடிஞ்சப்புறம் க்ளைமாக்ஸ் ஃபைட்டு.. அங்க ட்விஸ்டுன்னு இன்னொன்னு  வக்கிறாய்ங்க. வேலையில்லா பட்டதாரி விவேக் மாதிரி “என்னது இது ட்விஸ்டா.... இல்லை இதான்  உங்க ட்விஸ்டா”ன்னு கேட்டேன்னு நெனைச்சிகிட்டேன். படம் முழுக்க எல்லாமே பாத்த சீன்கள்னாலும் பெருசா ஒண்ணும் போரடிக்கல.ஃபர்ஸ்ட் ஹாஃப்ல தலைவர் ப்ரம்மி கொஞ்ச நேரம் சிரிப்பு காட்டுறாரு. க்ளைமாக்ஸ்ல  ரஜினியோட லுங்கி டான்ஸ் மாதிரி இவருக்கு செட்டு போட்டு “ப்ரம்மி டான்ஸு ப்ரம்மி  டான்ஸூ”ன்னு ஒண்ணு எடுத்துருக்காய்ங்க.. தாறு மாறு. அப்புறம் ஹன்ஸிகா செம.. பயங்கர  ஸ்லிம்மாவும் ஆயிடுச்சி. ரெஜினா தூரத்துலருந்து கொஞ்சம் அழகா இருந்தாலும் பக்கத்துல  காட்டும் போதும், வசனங்கள் பேசும் போதும் சற்று டொம்மை போல் இருக்கு. ரவிதேஜா வழக்கம்  போல அருமை. போலீஸ் கெட்டப்புல செம கெத்தா இருக்காரு. ஆனா என்ன கண்றாவி  டைரக்டர்கிட்ட கதைய மட்டும் ஒழுங்கா கேட்டு நடிக்க மாட்டாரு போல.

நம்ம ப்ரகாஷ்ராஜ் கிட்ட ரெண்டே ரெண்டு நாள் மட்டும் கால்ஷீட் வாங்கி அந்தாளுக்கு மேக்கப்  கூட போடாம ரெண்டு சீன எடுத்துருக்காய்ங்க. செம டம்மி கேரக்டர். படத்துக்கு இன்னொரு  பெரிய ப்ளஸ் என்னன்னா தமன். எல்லா பாட்டுமே பக்கா. அதவிட BGM செம்ம. பாட்டு  எடுத்ததும் நல்லாதான் இருக்கு. அனைத்து ஃபைட்டுகளும் வழக்கம் போல தெறி.

மத்தபடி பெருசா ஒண்ணும் போரடிக்கல. எதிர்பார்த்த டிவிஸ்டுகளோட வழக்கமான சுமார் மூஞ்சி  குமாரு டைப் படமே இந்த பவர். 


Wednesday, September 3, 2014

RABHASA - எத்தனை தடவ!!!


Share/Bookmark
நம்ம பார்த்திபன் “கதை திரைக்கதை வசனம் டைரக்‌ஷன்” ன்னு ஒரே ஒரு படத்த எடுத்துட்டு  கதையில்லாம படம் எடுத்துட்டேன் கதையில்லாம படம் எடுத்துட்டேன்னு பீத்திக்கிட்டு இருக்காரு.. போயா யோவ் போயா.. இவரு தெலுகு படம்லாம் பாத்ததில்ல போலருக்கு.. கடந்த  10 வருஷமா அங்க எல்லாருமே கதையில்லாமத்தான்  படம் எடுத்துகிட்டு  இருக்காய்ங்க. சும்மா ஒரு படத்த எடுத்துட்டு பெருசா பேச வந்துட்டாரு. தெலுகு ஆக்‌ஷன் படம் எடுக்க தேவையான விஷயங்கள் இதுதான். மூணு வில்லன் குரூப்பு  இருக்கனும். மூணு குருப்பும் தனித்தனியா ஹீரோவ தேடனும். ஹீரோவுக்கு இண்ட்ரோவுக்காக காமெடி  வில்லன் குரூப் கூட ஒரு ஃபைட்டு. மூணு குரூப்பு கூடவும் ஹீரோவுக்கு தனித்தனியா ஒரு ஃபைட்டு  அப்புறம் க்ளைமாக்ஸ்ல மூணு வில்லன்களையும் சேத்து வச்சி ஒரு பெரிய ஃபைட்டு.ஒரு இண்ட்ட்ரோ சாங்கு. இரண்டு  ஹீரோயின்கள் வேணும்.  ரெண்டு ஹீரோயினோடவும் தனித்தனியா ஒரு டூயட்டு.   கடைசில ரெண்டுபேருகூடவும் சேர்ந்தா மாதிரி ஒரு குத்துப்பாட்டு. கிட்டத்தட்ட ஒண்ணரை மணி நேரம்  அவுட்டு.

இப்போ மூணு வில்லனும் சேந்துட்டானுங்க. டக்குன்னு க்ளைமாக்ஸ் ஃபைட்ட போட்டு படத்த  முடிக்கலாம்னு தோணும். ஆனா முடிக்க கூடாது. அப்ப கொண்டு வர்றோம் ப்ரம்மானந்தத்த.  அதுக்கப்புறம் சம்பந்தம் இருக்கோ இல்லையோ அவர வச்சி ஒரு அரைமணி நேரம் சிரிப்பு காட்டுறோம்.  இப்போ எல்லாரும் கல கலன்னு சிரிச்சிட்டு இருக்கும்போது டக்குன்னு ஃபைட்ட போட்டு சுபம்  போடுறோம். அம்புட்டுதேன். மாஸ் மசாலா ஆக்சன் ரெடி.

நா மேல சொன்ன ஜென்ரல் ஃபார்முலா கதைக்கும், ரபசாவுக்கும் ஆறு வித்யாசம் கண்டுபுடிக்க சொன்னா  சத்தியமா கண்டுபுடிக்க முடியாது. அதே தான். இவனுங்க கிட்ட உள்ள கெட்ட பழக்கம் என்னன்னா,  படத்துக்கு படம் பேர மட்டும் தான் மாத்துவானுஙக்ளே தவற நடிக்கிர கேரக்டர்கள கூட மாத்த  மாட்டாய்ங்க. ஒருத்தன் ஒரு படத்துல வில்லனா நடிச்ச அடுத்த 50 படத்துலயும் அவனுக்கு அதே ரோல்  தான்.


ஃபர்ஸ்ட் ஹாஃப்ல சமந்தா ப்ரனிதான்னு ரெண்டு ஹீரோயின்கள். பாத்த சீன்களேன்னாலும் கலர்ஃபுல்லா  இருக்கும்போது கொஞ்சம் குஜாலாத்தான் போகுது பிரநிதாவுக்கு பக்கத்துல பாக்கும் சமந்தா செம கப்பியா  இருக்கு. பிரநிதாவயே மெயினா போட்டுருக்கலாம் போல. சிவாஜில ரஜினிக்கு விவேக் ஃபேர் & லவ்லில ப்ளீச்சிங் பவுடர் கலக்குற மாதிரி இதுல  சமந்தாவுக்கு மேக்கப் பவுடர் கூட கொஞ்சம் சுண்ணாம்பையும்  கலந்துவிட்டு அடிச்சிருப்பாய்ங்க போல.  பொங்கலுக்கு மொத நாள் வெள்ளையடிச்ச வீடு மாதிரி  வெள்ளை வெளேர்னு இருக்கு மூஞ்சி. நம்ம  சரோஜாதேவியோட மேக்கப் தேவலாம் போல.

அத்தாரிண்டிக்கு தாரெதிங்குற படத்துல பவன் கல்யான் சமந்தாவோட பாத்ரூமுக்குள்ள போயிடுவாரு.  சமந்தா துண்டோட குளிக்க ரெடியா இருக்கும். பவன் கல்யாண அங்க பாத்தவுடனே இது ஓவர் ரியாக்சன் விடவும் அதுக்கு பவன் “ஆம்பளைங்க குளிக்கிறதயெல்லாம் நா பாக்க மாட்டேன்”ன்னு அசிங்கப்படுத்திட்டு போயிடுவாரு  இங்கயும் சில காட்சிகள்ல எனக்கும் அதே ஃபீலிங்க் தான். முகத்துல இருந்த பழைய கலை அப்படியே  மாறிப்போய் சில சமயத்துல இது பொண்ணாங்குற டவுட் கூட வருது. எனக்கு மட்டும் தான் இப்புடியா  இல்லை எல்லாருக்கும் இப்படியான்னு தெரியல.

ஹீரோயின ஸ்கெட்ச் போட்டு கரெக்ட் பண்றது தான் கடந்த மூணு  NTR படங்களோட ஃப்ர்ஸ்ட் ஹாப் கதை. .  அந்தப் புள்ளைய ஏன் ஸ்கெட்ச் போட்டு கரெக்ட் பண்ணாருங்குறத விளக்குறதுதான் செகண்ட் ஃஹாப்.   இங்கயும் அதே தான். வழக்கம்போல எதிர்பார்த்த மாதிரியே போய்க்கிட்டு இருந்த கதையில ஒரு செம  ட்விஸ்டு. என்னன்னு கேக்குறீங்களா? வழக்கமா படத்தோட கடைசில வர வேண்டிய குத்துப் பாட்டு  ஃபர்ஸ்ட் ஹாஃப்லயே வந்துருச்சி. நா அப்டியே ஸாக் ஆயிட்டேன். அப்புறம் ரெண்டு ஹீரோயினோட ஆடுற பாட்டையும் ரொம்ப எதிர்பாத்தேன். கடைசி வரைக்கும் அதுவும் இல்லை.

படத்துல இன்னொரு புது ட்ரெண்ட பாஃலோ பண்ணிருப்பாய்ங்க . சன் மியூசிக்ல போடுற 30 நிமிட  இடைவிடாத பாடல்கள் மாதிரி இங்க முப்பது நிமிட இடைவிடாத ஃபைட்டு. இண்டர்வலுக்கு முன்னால  கால் மணி நேரமும் பின்னால கால்மணி நேரமும் வெறும் ஃபைட்டு மட்டுமே. படத்தோட முதல் பாதி ஒரு  மணி நேரம் 5 நிமிஷம் ரெண்டாவது பாதி ஒரு மணி நேரம் 40 நிமிஷம். செகண்ட் ஹாஃப் மட்டும் ஒரு  தனி முழு படம் பாத்த எஃபெக்ட்டு.

ரேஸ் குர்ரத்துக்கு அப்புறம் தலைவர் ப்ரம்மானந்தாம் இந்தப்படத்துலயும் பட்டைய கெளப்பிருக்காரு.  செகண்ட் ஹாஃப் போர் அடிக்காம போறதே அவராலதான். “நேனு சிம்ஹாத்ரிக்கு சீக்குவல் ரா” ன்னு  செம பஞ்ச் பேசிட்டு சைடுல வந்து “நா அடிச்சா கொழந்தைங்க ஸ்கூலுக்கு கூட போகாது இவன் எப்புடி  கோமாவுக்கு போவான்”ன்னு சொல்றது செம. தலைவரோட கேரக்டரும் சரி, காமெடி ட்ராக்கும் சரி  ஏற்கனவே பாத்தது தான். ரெடி படத்துல வர்ற கேரக்டரையும், பிருந்தாவனம்ல வர்ற கேரக்டரையும் மிக்ஸில போட்டு அரைச்சி ஒரு புது கேரக்டர். செகண்ட் ஹாஃப்ல நிறைய சீன்ஸ் சுந்தர்.C படம் பாக்குற  மாதிரியே இருந்துச்சி.

பாட்டுங்க எல்லாமே பக்கா. வழக்கம்போல செம கலர்ஃபுல் picturization. தமன் காட்டுல மழை கொட்டோ  கொட்டுன்னு கொட்டிக்கிட்டு இருக்கு. மூணு வருஷம் முன்னால எப்புடி DSP இருந்தாரோ அது மாதிரி  இப்போ தமன். அனைத்து படத்துக்கும் அவருதான். எல்லா பாட்டுமே நல்லாதான் இருக்கு, என்ன ஒரு  கடுப்புன்னா, ஒரே சமயத்துல ரெண்டு மூணு பட பாட்டு ரிலீஸ் ஆகுறப்போ எது எந்தப் படத்தோட  பாட்டுன்னு கண்டுபுடிக்கிறதே ரெம்ப கஷ்டமா இருக்கு. உதாரணமா போன ஒரு மாசத்துல மட்டும்  தமனுக்கு NTR ரோட ரபஸா, ரவி தேஜாவோட “பவர்” அப்புறம் மகேஷ் பாபுவோட “ஆகடு”ன்னு மூணு  பட பாட்டுங்க ரிலீஸ் ஆயிருக்கு. 

NTR வழக்கம் போல சூப்பர். பாட்டு ஃபைட்டுன்னு ஒரே அமர்க்களம் தான். என்ன திரும்ப பிருந்தாவனம்  படத்த பாத்துட்டு வந்த அதே ஃபீல். இவருக்கு இண்ட்ரோ சீன் வைக்கிறதுக்கு பஞ்சமாயிடுச்சி போல.  திரும்ப தம்மு படத்துல வச்ச அதே இண்ட்டோ சீன், மேலருந்து கார்ல குதிக்க, கார் டயரு  கண்ணாடின்னு எல்லாம் சில்லு சில்லா தெறிச்சி ஓடுது. அதே மாதிரி ஃபைட்டுகள்ல ரவுடிங்கள விதவிதமா  அடிச்சி பறக்க விடுவாரு. உதாரணமா தம்மு படத்துல ஓடிவர்ற ஒருத்தன ஒரு அடி அடிச்சதும் அவன்  கீழ கிரிக்கெட் பால் மாதிரி விழுந்து ஒரு பிட்ச் குத்தி ஸ்பின் ஆகி ஒரு ஜம்ப் பண்ணி விழுவான். இங்க  புதுசா ரித்திக் ரோஷன் Coke டான்ஸ் ஆடி தரையில ஜம்ப் பண்ணும் போது coke எம்பி அவர் கைக்கு  வருமே அதே மாதிரி இவரு தரையில கால வேகமா மிதிக்க பக்கத்துல இருக்க ரவுடி தரையிலருந்து ஜம்ப்  பண்ணி அவர் அடிக்கிறதுக்கு வாகா மேல போறான். இன்னொரு விஷயம் நா நோட் பண்ணது  என்னனனா, நா பாத்ததுலயே இதுவரைக்கு அழுகுற சீன்ல நல்லா நடிக்கிறதுன்னா NTR தான்.

எது எப்புடியோ எதிர்பார்த்த மாதிரியே கலர்ஃபுல்லான பாட்டு, தெறிக்கிற ஃபைட்டு அப்புறம் ஒரு அரை  மணி நேரம் குலுங்க குலுங்க சிரிப்புன்னு குடுத்த காசுக்கு ஒர்த் தான். NTR ன் ராமைய்ய்ய  வஸ்தாவாய்யாவை விட இந்த படம் நல்லா தான் இருக்கு. மிகப்பெரிய ஹிட் ஆகலன்னாலும் ஃப்ளாப் ஆயிடாது. 

Tuesday, September 2, 2014

என்னது சூர்யா குள்ளமா? இய்ய்யாய்!!!


Share/Bookmark
ரெண்டு வாரத்திற்கு முன்னால ரிலீஸ் ஆகி சூப்பர், டூப்பர், பம்பர், மெகா, ஜிகா ஹிட்டாகி இன்னும்  திரையரங்கை விட்டு ஓடாமல் ஓடிக்கொண்டிருக்கும் அஞ்சான் படத்தப் பற்றி எழுதிய விமர்சனத்துல சூர்யா குள்ளமா  இருக்காருன்னு பொருள்படுற மாதிரி “டேய்… என்னடா இது டீப்பாய் உயரம் இருக்க இவந்தான் ராஜூபாயா” அப்டின்னு ஒரே ஒரு வரி எழுதியிருந்தேன். அது சில நண்பர்கள் மனச புண்படுத்திருச்சின்னு  நெனைக்கிறேன். சூர்யா குள்ளமா இருந்தா என்ன, உயரமா இருந்தா உங்களுக்கென்ன? படத்த பத்தி மட்டும் விமர்சனம் பண்ணுங்கன்னு ப்ளாக்லயும்  ஃபேஸ்புக்லயும் சில நண்பர்கள் சொல்லிருந்தாங்க. முதல்ல சூர்யாவ  குள்ளமா இருக்கார்னு சொன்னத வாபஸ் வாங்கிக்குறேன். சொல்லிட்டு வாப்பஸ் வாங்குறது தானே இப்போ லேட்டஸ்டு ட்ரெண்டு. அதோட மட்டும் இல்லாம இனிமே எழுதுற பதிவுகள்ல இதுமாதிரியான விமர்சனங்கள்  இல்லாமயும் பாத்துக்க முயற்சி செய்றேன்.

சரி அவர குள்ளம்னு சொல்றதுக்காக அவரோட மனசு வருத்தப்படும். குள்ளமாக இருக்க அனைவரும் வருத்தப்படுவாங்க அதனால அந்தமாதிரி எழுதுறத தவிர்க்கச் சொல்றீங்க. ரொம்ப கரெக்ட். ரொம்ப நல்ல எண்ணமும் கூட. தப்பா எடுத்துக்காதீங்க. இப்போ எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு. அதயும் பொதுவா கேக்குறேன்.

1. நாம கடையில ஒரு பொருள் வாங்குறோம். அந்தப் பொருள்ள எதோ குறை இருக்கு. எதுவா இருந்தா என்னன்னு வாங்கிட்டு வருவோமா இல்லை சண்டை போட்டு வேற பொருள் வாங்குவோமா?

2. கவுண்டமணி செந்தில் காமெடி பாத்து சிரிக்காதவங்க யாரும் இருக்க மாட்டீங்க. அதுல கவுண்டமணி செந்தில “பன்னி வாயா” “தகர டப்பா தலையா” “டேய் ஆப்ரிக்கா வாயா” “பேரிக்கா மண்டையா” “அரை மண்டையா” இப்படியெல்லாம் சொல்லி கூப்பிடும் போது நமக்கு சிரிப்பு வருமா இல்லை கவுண்டமணி செந்தில உடல் ரீதியா இப்படி இழிவுபடுத்தி பேசுறாறேன்னு உங்களுக்கு மனித நேயம் பொத்துக்கிட்டு வருமா?

3. இப்போ கீழ இருக்க படத்தப் பாருங்க. அந்தப் புள்ளை பக்கத்துல இருக்கவரு காமெடியன் இல்லை பல படங்கள் நடிச்ச ஒரு கன்னட ஹீரோ.இந்தப் படத்தப் பாத்து நமக்கு ”என்னடா இவன்லாம் ஹீரோவா நடிக்கிறான்.அதுவும் இவனுக்கு இப்புடி ஒரு ஹீரோயினா? ”ன்னு கோவம் வருமா இல்லை அவருதான் ஹீரோன்னு நா ஃபிக்ஸ் ஆயிட்டேன். மத்த படத்த பாக்குறது மாதிரியே இந்தப் படத்தையும் பாப்பேன்னு தோணுமா?

4. சரி சூர்யா பாட்டுன்னாலும் சரி ஃபைட்டுன்னாலும் சரி படக் படக்குன்னு சட்டைய கழட்டி சிக்ஸ் பாக்ஸ காமிக்கிறாரே.. அத பாக்கும் போது சூர்யாவோட கடின உழைப்பு தெரியுமா இல்லை “ச்ச.. இப்புடி சிக்ஸ் பேக்ஸ் காமிக்கிறாரே.. இதப்பாத்தா குண்டா தொப்பையோட இருக்கவங்க மனசு கஷ்டப்படுவாங்களே” ன்னு ஃபீல் பண்ணுவீங்களா?


சினிமாங்குறது ஒரு வியாபாரம் தான். நாம அத காசு குடுத்து பாக்குறோம். அதுல எதாவது குறை இருந்தா அத சொல்றதுக்கு நமக்கு எல்லா உரிமையும் இருக்கு. எப்படி சிக்ஸ் பேக், லோ நெக் ஜாக்கெட், ஜன்னல் வச்ச ஜாக்கெட், ஷார்ட் ஸ்கர்ட் போட்ட ஹீரோயின்கள்னு உடல் ரீதியான விஷயங்கள முன் வச்சி படங்களை விளம்பரப்படுத்தும் போது,  அதே சினிமாவுக்கு தேவையான உடல் ரீதியான விஷயங்கள் இல்லைன்னா அத குறை சொல்றது மட்டும் எப்படி தப்பாகும்? 

சூர்யாவ குள்ளம்னு சொன்னத பொறுத்துக்க முடியாதவங்க ப்ரனிதா கூட நிக்கிற ஹீரோவயும் முகம் சுழிக்காம பாத்தீங்கன்னா நீங்க தான் மகாத்மாக்கள். உங்கள் காலில் விழவும் நான் தயார். ஆனா அப்படி இல்லைன்னா, சூர்யாவுக்காக பொங்குறதுக்கு யாருக்கும் உரிமை இல்லை. 

சக மனிதர்களை நீங்க எப்படி மதிக்கிறீங்களோ அதே மாதிரி தான் நானும் மதிக்கிறேன். உங்களுக்கு இருக்க அதே மனித நேயம் எனக்கும் இருக்கு. சக மனிதர்களோட உடல் ரீதியான குறைகளை சொல்லி காயப்படுத்துறத நானும் விரும்பமாட்டேன். ஆனா நகைச்சுவைக்காக சில இடங்கள்ல, மற்றவர்கள் மனம் புண் படாத மாதிரி தான் எழுதிருக்கேன். எந்த இடத்துல சிரிக்கனும், எந்த இடத்துல மொறைக்கனும் எந்த இடத்துல வெறிக்கனும்ங்குற இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படுதல் நலம்.

உங்களுக்கு எப்படி குள்ளம்னு சொல்றத தப்புன்னு சொல்றதுக்கு ஒரு தியரி இருக்கோ அதே மாதிரி எனக்கும் அந்த விமர்சனத்துல அவர குள்ளம்னு சொன்னது கரெக்ட்ங்குறதுக்கு ஒரு தியரி இருக்குன்னு சொல்றதுக்காவே இந்தப் பதிவே தவிற யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.

சூர்யா வாழ்க!!!  தமிழ்நாட்டின் அமிதாப் பச்சன் வாழ்க!!!

இணையத்திலிருந்து பெறப்பட்ட மேலுள்ள முதல் படமும்  நகைச்சுவைக்காகவே... திரும்பவும் மொதல்லருந்து ஆரம்பிச்சிடாதீங்க!!!

Monday, September 1, 2014

சமரசம் (Compromises)!!!


Share/Bookmark
சமரசம் (compromises). நம்முடிய வாழ்வில் அமைதிக்காகவும் சகமனிதர்களின் சந்தோஷங்களுக்காகவும் நம்முடன் நாமே செய்துகொள்ளும் ஒரு உடன்பாடு. ஆனால் ஓவ்வொரு மனிதனின் வாழ்விலும் இந்த சமரசம் என்ற சொல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்வதே மகிழ்ச்சியை தருவதுபோல் தோன்றினாலும், ஒவ்வொருவர் வாழ்விலும் அதன் உண்மையான தாக்கம் என்ன? வாங்க கொஞ்சம் உள்ளே போய் பாக்கலாம்.
இந்த சமரசம் செய்துகொள்ளுதல் (compromises) என்பது என்ன? தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ நமக்கு விருப்பம் அல்லாத ஒன்றை ஏற்றுக் கொள்கிறோம். நாளைடைவில் அதன் கூடவே வாழக் கற்றுக்கொண்டும் விடுகிறோம். கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதா? ஒரு சிறிய உதாரணம். நாம் இப்பொழுது என்ன வேலை செய்து கொண்டிருக்கின்றோம்? நமக்கு ஒரு 15 வயது இருக்கும் பொழுது இந்த வேலைதான் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டோமா? நூற்றுக்கு 90 சதவீத பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். நம்மில் சிலர் மருத்துவர்களாக ஆசைப்பட்டிருக்கலாம், சிலர் வக்கீல்களாக ஆசைப்பட்டிருக்கலாம். சிலர் நடிகர்களாக ஆசைப்பட்டிருக்கலாம், ஏன், சிலர் அரசியல்வாதிகளாகக் கூட ஆசைப்பட்டிருக்கலாம்.
ஆனால் எதோ ஒரு சூழலில், சில நிர்பந்தங்களால் நாம்  இப்பொழுது செய்யும் வேலைக்கான பாதையை தேர்ந்தெடுத்திருக்கின்றோம். கொஞ்சம் கொஞ்சமாக அதிலேயே பழகியும் விடுகிறோம். இப்பொழுது சிறு வயதில் உண்மையிலேயே நாம் என்னவாக ஆக விரும்பினோம் என்பதையே மறந்து எதோ ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கிறோம். காரணம் நம் வாழ்க்கையின் எதோ ஒரு சூழலில் நாம் செய்துகொண்ட compromise.
இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமானால், உதாரணமாக நான் ஒரு மருத்துவராக ஆசைப்படுகின்றேன் என்று வைத்துக் கொள்வோம். எதிர்பாராத விதமாக என்னுடைய மதிப்பெண், மருத்துவப் படிப்பில் சேர போதுமானதாக இல்லை. உடனே நான் என்ன செய்ய வேண்டும்? ஒன்று நான் முன்னதாகவே ஒழுங்காகப் படித்திருக்க வேண்டும். அல்லது ஒரு வருடம் காத்திருந்து மறுதேர்வெழுதி  மருத்துவராக வேண்டும். இதை இரண்டையுமே செய்யாமல் மருத்துவர் ஆகவேண்டும் என்ற என்னுடைய கனவை விட்டுக்கொடுத்து பொறியியல் என்ற ஒரு பிரிவுக்குள் நுழைகின்றேன். இந்த இடத்தில் நான் செய்து கொண்ட சமரசமே என்னுடையை வாழ்வை திசைமாற்றியதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  அன்றிலிருந்து என் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் நான் அன்று செய்த அந்த சமரசமே காரணமாகவும் அமைகிறது.
இங்கே ஒரு கேள்வி எழழாம்..”நான் மருத்துவராக ஆசைப்பட்டேன். ஆனால் சூழ்நிலை காரணமாக வேறு துறைக்கு சென்றுவிட்டேன். அதனால் என்ன இந்த துறையிலேயே நன்றாகத்தான் சம்பாதிக்கிறேன். இதற்கு மேல் என்ன வேண்டும்?” என்று. சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாக விளங்கும். நமக்கு விருப்பமல்லாத ஒரு துறையை தேர்ந்தெடுத்து, அதில் நம்மை ஈடுபடுத்திக்கொண்டு நம்மால் இந்த அளவு வெற்றிபெற முடிகிறதென்றால், நமக்கு பிடித்தமான ஒரு துறையையே தெரிவு செய்து நம் வாழ்க்கையை அமைத்திருந்தால் நம் வெற்றி எந்த அளவு இருக்கும் என்பதை யோசிக்க முடிகிறதா?
நமது ஊரில் ஒருவரைப் பார்த்தால் என்ன கேட்போம். “what are you doing?” அதாவது அவர் என்ன வேலை செய்கிறார் என்பதைத் தான் நாம் அவ்வாறு கேட்போம். ஆனால் சில வெளிநாடுகளில் “what you do for living” என்றே கேட்பார்கள். என்னைப் பொறுத்தவரை மிகப் பொருத்தமான கேள்வி இதுவே. வாழ்வாதாரத்திற்காக மட்டுமே நாம், நமக்குப் பிடிக்காத துறைகளில் இருக்கின்றோமே தவிற வேறொன்றுமில்லை. பெரும்பாலும், நாம் பணி செய்யும் துறை நமக்கு பிடித்த துறையாக இருப்பதில்லை.  எப்பொழுது நம்முடைய விரும்பிய துறையே நாம் பணி செய்யும் துறையாகவும் மாறுகின்றதோ அதன் பிறகு நம் வெற்றிக்கு அந்த வானமே எல்லை
சமரசத்தில் இரண்டு வகை இருக்கின்றது.
முதலாவது நன்மைக்கும் நன்மைக்கும் இடையே நடைபெறும் சமரசம் (Good vs Good compromise). உதாரணத்திற்கு நீங்கள் உங்களது பைக்கை 20,000 ரூபாய்க்கு விற்க ஆசைப்படுகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் ஒருவர் அதனை 15000 ரூபாய்க்கு கேட்கின்றார். இறுதியில் இருவரும் 17500 க்கு ஒப்புக் கொள்கிறீர்கள். இதனை ஒரு சரிசமான பரிமாற்றம் என கூறலாம். இந்த பரிமாற்றத்தில் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. பெரிய லாபமும் இல்லை. இந்த வகையான சமரசங்களால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை.
இரண்டவது ஒரு வகை உள்ளது. நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் சமரசம்  (Good Vs Bad compromise). இதனை கீழ்வரும் ஆங்கில வாசகம் ஒன்று எளிதாக விளக்குகின்றது.
If there is any compromise between food and poison death will be the winner. If there is a compromise between good and evil it is only evil that can profit
உதாரணமாக நமது இருசக்கர வாகனங்கள் பெட்ரோல் என்ற எரிபொருளில் இயங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மண்ணென்னையும் ஒரு எரிபொருள் தான். அதிலும் நமது வாகனங்கள் இயங்கும். ஆனால் விலைகுறைவு என்பதற்காக மண்ணென்னையை உபயோகிக்க ஆரம்பித்தோமேயானால் என்னவாகும்? 10 வருடம் இயங்கவேண்டிய நம் வாகனங்கள் 2 வருடத்தில் பழுதடைந்துவிடும். இந்த வகை சமரசம் பொதுவாக நீண்டகால பிரச்சினையாக மாறும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக நம் நாட்டில் சமூக அந்தஸ்து அல்லது சமூக பார்வை” என்பது மிக முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது. ஒரு மாணவன் விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பினால், சிறு வயதிலிருந்தே அதில் ஈடுபட நேரிடலாம், ஆனால் நம் சமூகமோ, முதலில் படிப்பு, பின்னர் மற்றவை என்று அவனை சமரசப் படுத்தி விடுகிறது.
இது போன்று பல அன்றாட விஷயங்களில் நடைபெறும் சமரசங்களை நாம் காண்கிறோம். இவ்வாறு சமூக அந்தஸ்து காரணமாகவோ, பொருளாதாரத்தின் அடிப்படையிலோ, மற்ற சில காரணங்களினால் செய்துக் கொள்ளும் சமரசங்கள், நீண்டகால அடிப்படையில் சமரசம் ஆகிக்கொள்பவர் மனதில் ஒரு சிறு பாதிப்பையாவது ஏற்படுத்தியிருக்கும் என்பதுதான் உண்மை.
இறுதியாக நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு மனிதரைப் பற்றி இந்த பதிவுக்கு சம்பந்தமான சில விஷயங்களைக் கூறி முடிக்கின்றேன். ஜேம்ஸ் கேமரூன் என்பவரைப் பற்றி அனைவருக்குமே தெரியும். இன்றும் உலக அளவில் பெரும் வசூலை குவித்த முதல் இரண்டு படங்களை இயக்கியவர் இவரே. ஆனால் அவரைப் பற்றி சிலருக்குத் தெரிந்த பலருக்கு தெரியாத சில விஷயங்களை இங்கு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.
1990 களின் ஆரம்பத்தில் நீருக்கடியில் படம் பிடிக்கும் தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. அன்றைய சூழலில் இருந்த வசதிகளின் மூலம், சில கோணங்களில் மட்டுமே படம் பிடிக்க முடியும். நீருக்கடியில் வீடியோ கேமராக்களை எடுத்துக் கொண்டு நமக்கு தேவையான கோணங்களில் இயக்கி காட்சிகளை பதிவு செய்வது, அன்று பெரும் சவாலான ஒரு விஷயமாக விளங்கியது. தனது டைட்டானிக் படத்திற்குத் தேவையான சில காட்சிகளை எடுக்க அப்போதிருந்த வசதிகள் போதவில்லை என்பதை கேமரூன் உணர்ந்திருந்தார். உடனே தனக்கு தேவையான வசதி இல்லை என்றவுடன் சமரசம் செய்துகொண்டு இருக்கின்ற வசதியை வைத்துக் கொண்டு அந்த திரைப்படத்தை எடுத்துவிடவில்லை. அவருக்குத் தேவையான வசதிகளை அவரே  உருவாக்கிக் கொண்டார்.
அவரும் அவரது சகோதரரும் இணைந்து நீருக்கடியில் கேமராக்களை எடுத்துக் கொண்டு, வெகு இலகுவாக தேவையான எந்த கோணத்திலும் இயக்கும் படியான ஒரு இயந்திரத்தை உருவாக்கி அதனை அமெரிக்காவில் பதிவும் செய்து அதன் பின்னரே டைட்டானிக் உருவாக்கதில் ஈடுபட்டிருக்கின்றனர். (Under water dolly – US patent No: 4,996,938)

அந்த முயற்சிக்குக் கிடைத்த வெற்றி், வெளியாகி 19 வருடங்கள் ஆன பின்னரும் இன்றும் மற்ற எந்த திரைப்படத்தாலும் நெருங்க முடியாத அளவு வசூல் சாதனை படைத்து, இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கே இப்படி என்றால் முதலிடத்தில் உள்ள அவதார் திரைப்படத்தை பற்றி கூறினால் என்ன மனிதர் இவர் என்று தோன்றும். அவதார் திரைப்பட கதையை உருவாக்கி தேவையான தொழில் நுட்ப வசதிகள் இல்லாததால் 10 வருடம் காத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.அவதார் திரைப்படத்தின் கதை ”பேண்டூரா” என்ற ஒரு கிரகத்தில் வசிக்கும் ”நாவி” இன மக்களை சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. நாவி இனத்தவர்கள் நமக்கு புரியாதது போல ஒரு மொழி பேசுகின்றனர் அல்லவா?  அது எதோ புரியாத வார்த்தைகளை வைத்து எழுதப்பட்டது அல்ல. அது ஜேம்ஸ் கேமரூனால் அவதார் திரைப்படத்திற்காக புதிதாக உருவாக்கப்பட்ட, ஆயிரம் வார்த்தைகள் கொண்ட, இலக்கணத்துடன் கூடிய ஒரு புதிய மொழி. நாவி இனத்தவர் பேச ஒரு மொழி வேண்டும். ஆனால் அது பூமியில் பேசப்படும் எந்த மொழிகளுடனும் ஒத்துப் போகக் கூடாது. விளைவுதான் அந்த புதிய மொழியின் உருவாக்கம்.
அந்தப் படத்தில் தொடர்புடைய நடிகர்கள் அனைவருக்கும் அந்த மொழியை கட்டாயமாக கற்பித்த பின்னரே படப்பிடிப்பை துவங்கியிருக்கின்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எதோ புரியாத சில வார்த்தைகளை உபயோகித்திருந்தால் கூட நாம் பார்த்து தான் இருப்போம். ஆனால் அவருக்கு தேவையான ஒன்று கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு படி மேலே போய் ஒரு புதிய மொழியையே உருவாக்கியிருக்கின்றார். எங்குமே சமரசம் செய்துக் கொள்ளாமல், தனக்கு விருப்பான ஒரு விஷயத்தை அடைய எத்தனை தூரம் உறுதியாக நின்றதால், பிரமிக்கத்தக்க வெற்றியைப் பெற்றார்.
இதனை ஏன் கூறுகின்றேன் என்றால், சமரசம் செய்துகொள்வது சில இடங்களில் நன்மையை தந்தாலும், சமரசம் செய்துகொள்ளாமலிருப்பது பல இடங்களில், நீண்டகால அடிப்படையில் நன்மையை தரும். மாபெரும் வெற்றிகளைத் தரும். இந்த உலகத்தின் எந்த விஷயத்தை அடையவும் நமக்கு உரிமை உண்டு. அதற்குத் தேவையானவை சமரசம் இல்லாத தெளிவான நோக்கமும், கடின உழைப்பும் மட்டுமே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...