பொதுவா சுயசொறிதல் பதிவுகள் எழுதுறதுல எனக்கு உடன்பாடு இல்லை. நம்மை பத்தி தெரிஞ்சிக்க பெரும்பாலும் யாரும்
விருப்பப்படுறது இல்லை அதை எழுதி திணிக்க எனக்கு விருப்பமும் இல்லை. ஆனா சில சமயங்கள்ல நம்மோட நேர்மை சந்தேகத்திற்கு உட்படும்போதோ,
குற்றம்சாட்டப்படும் போதோ விளக்கம் குடுக்க வேண்டிய கட்டாயம் உண்டாகிடுது. அந்த
மாதிரி ஒரு விஷயத்துக்காகத்தான் இந்த பதிவு.
கொஞ்ச நாளாவே எனக்கு வர்ற
சில பின்னூட்டங்கள்ல, நா எழுதுற சினிமா விமர்சனங்கள் one sided ah வும் biased ah
இருப்பதாகவும் நண்பர்கள் சிலபேர் சொல்லிருக்காங்க. இந்த கமெண்ட் ஒண்ணும்
புதுசில்ல. என்னோட அலுவல நண்பர்கள் என்னோட முகத்துக்கு நேரா சொல்ற இந்த விஷயத்த,
முகம் தெரியாத சில நண்பர்கள் இப்போ பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கிறதால இந்த
தன்னிலை விளக்கம் இப்போ அவசியம்னு நினைக்கிறேன்.
நா எந்த படத்தையுமே கிண்டல் பண்ணனும்ங்குற நோக்கத்துலயோ இல்லை விமர்சனம் எழுதனும்ங்குற
நோக்கத்தோடவோ பாக்கப் போறதில்லை. சினிமாங்குறது எனக்கு பொழுதுபோக்கு மட்டும் இல்லை.
நேரம் போகலன்னா எதாவது ஒரு படத்துக்கு கிளம்பி போற ஆள் நா இல்லை. சினிமா
பாக்குறதுங்குறது நா ரொம்ப ரசிச்சி, இந்த கஜினி சூர்யா சொல்ற மாதிரி இஷ்டப்பட்டு
செய்யிற ஒரு வேலை. ஒரு படம் பாக்கப்போனா கண்டிப்பா என்னோட favourite விஷயம் ஒண்ணு அந்தப் படத்துல இருக்கும். அப்படி இல்லைன்னா ஒரு மாசம் ரெண்டு மாசம் ஆனாலும் தியேட்டர்
பக்கம் போறது இல்லை.
நா ரொம்ப ரொம்ப ரொம்ப
சாதாரணமான ஒரு சினிமா ரசிகன். வழக்கமா இந்த ஹைட்டெக் ஆளுங்கல்லாம்ம் சொல்லுவாங்களே
“C” க்ளாஸ் ரசிகர்கள்னு. அப்படித்தான் நான்னு வச்சிக்குங்களேன். என்னோட எதிர்பார்ப்பெல்லாம் நா காசு குடுத்து பாக்கப் போற படம்
எனக்குள்ள எதாவது ஒரு impact ah ஏற்படுத்தனும். சிரிக்க வைக்கவோ, அழவைக்கவோ, ஆச்சர்யப்பட
வைக்கவோ செய்யனும்ங்குறது தான் என்னுடைய எதிர்பார்ப்பா இருக்குமே தவிற zero defect
படத்தையோ இல்லை ஒரு flawless படத்தையோ எதிர்பார்த்து இல்லை. நானும் உங்களைப்போல
படம் நல்லா இருக்கனும்னு, நமக்கு 3 மணி நேரம் நல்லா போகனும் நினைச்சி தான் போறேன்.
பெரும்பாலும் ஒரு படத்தை
பற்றிய மற்றவர்களோட விமர்சனங்கள் என்னை பாதிக்கிறதில்லை. ஆயிரம் பேர் சூப்பர்
டூப்பர்ன்னு சொன்னாலும், எனக்கு பிடிக்கலன்னா பிடிக்கலன்னும் அதே ஆயிரம் பேர்
அருவைன்னு ஒரு படத்த சொன்னா எனக்கு பிடிச்சிருந்தா தைரியமா எனக்கு
பிடிச்சிருக்குன்னு சொல்லவும் நா எப்பவும் தயங்கியதில்லை.
நா எழுதுற விமர்சனத்த
படிக்கிறவங்களுக்கு, விமர்சனம் என்பதை தாண்டி ஒரு விஷயத்த ஜாலியா படிச்ச ஃபீல்
குடுக்கனும்ங்குறதுக்காக கொஞ்சம் காமெடி மேற்கோள்களை அங்கங்க சேர்த்து எழுதுவேனே தவிற, எந்த இடத்துலயும் என் மனசுக்கு பட்ட
கருத்தை, ஒரு பதிவ சுவாரஸ்யமா மாத்துறதுக்காக திரிச்சி எழுதுனதில்லை.
“இந்தப்படத்தின் கதை
என்ன? படத்தில் எனக்கு பிடித்த வசனங்கள் என்ன? படக் குழு யார் யார்? “ ன்னு
விகடன்லயோ குமுதத்துலயோ வர்ற மாதிரி ஒரு formal டைப் விமர்சனங்களை எழுத எனக்கு
உடன்பாடு இல்லை. அதே மாதிரி இந்த காட்சியில கேமரா இந்த ஆங்கிள்ல இருந்துச்சி,
இந்த சீன்ல இப்படி ஒரு குறியீடு இருந்துச்சி, இந்த காட்சியில இந்த கலர் க்ரேடு
யூஸ் பண்ணிருக்காங்க” ன்னு எனக்கும் சினிமா தெரியும்ங்குற மாதிரியான
டெக்னிகல் விஷயங்களை முன்வச்சி விமர்சனங்கள் எழுதவும் எனக்கு உடன்பாடு இல்லை.
//Shankar failed as a
director from his usual style n theme but Padam avlo mokkai illa. some guys
comparing this with linga becoz this is also a biggie with high expectation
like linga in recent times.
Very very biased review. If someone read ur last 2 reviews (Aambala n lingaa) they ll agree with what i said.
u not mentioned anything about the world class flying car, Air swimming stunt by vishal n bond style bomb kicking in linga, u not wrote a single negative about these movies, really dese two r such great movies without any neagtive?. itha vera evanavathu paniruntha enna ootu ootirupinga.....
Even in I u not mentioned anything about positives like 'PC, ARR'.
If you say wat u wrote is ur opinion then write in A4 sheet n read urself. dont post in public n disappoint ur fans muthu.... //
Very very biased review. If someone read ur last 2 reviews (Aambala n lingaa) they ll agree with what i said.
u not mentioned anything about the world class flying car, Air swimming stunt by vishal n bond style bomb kicking in linga, u not wrote a single negative about these movies, really dese two r such great movies without any neagtive?. itha vera evanavathu paniruntha enna ootu ootirupinga.....
Even in I u not mentioned anything about positives like 'PC, ARR'.
If you say wat u wrote is ur opinion then write in A4 sheet n read urself. dont post in public n disappoint ur fans muthu.... //
பெயரிடாமல் பின்னூட்டம்
இட்டிருக்கார். அனேகமா இவர் எனக்கு ஏற்கனவே பரிட்சையமான ஒரு நண்பராக கூட
இருக்கலாம்.
பொதுவா படங்களை கம்பேர்
பண்ணி பார்த்து சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு ஷங்கர் படத்தையும், ஒரு
சுந்தர்.சி படத்தையும் எப்படி ஒண்ணா வச்சி பேச முடியிது? நா ஆம்பள நல்லாருக்குன்னு எழுதிருக்கேன். ஏன்னா ஆம்பளையில சுந்தர்.சி
கிட்ட என்ன எதிர்பார்த்தேனோ அது இருந்துச்சி. “ஐ” யில ஷங்கர்கிட்ட எதிர்பார்த்தது
சுத்தமா கொஞ்சம் கூட இல்லை. அவ்வளவு தான் வித்யாசம். ஆம்பள பாத்துட்டு தியேட்டர
விட்டு வெளிய வரும்போது இருந்த satisfaction ல பத்துல ஒரு பங்கு கூட ஐ பாத்துட்டு
வரும்போது இல்லை. ரெண்டு படமும் பாத்தவங்க உங்களை நீங்களே ஒரு தடவ கேட்டுப்
பாத்துக்குங்க.
ஒவ்வொரு படங்களுக்கும்
expectation level வேறுபடும். இப்போ இந்த “ஐ” யும் சரி “ஆம்பள” யும் சரி
டைரக்டர்களுக்காக நான் பார்த்த படம். விக்ரமுக்காவோ விஷாலுக்காகவோ இல்லை. ஷங்கருக்காகவும், சுந்தர்.சிக்காகவும் தான். ஒரு பெரிய டைரக்டரோட படம்
வருதுன்னா, அதோட expectation level அந்த டைரக்டர் இதுக்கு முன்னால செட் பண்ணி வச்ச
ட்ரெண்ட பொறுத்து தான் இருக்கும். இப்போ ஷங்கரோட ட்ரெண்ட்
எப்படி? அவர் படத்துல கதை, திரைக்கதை எப்படி இருக்கும்? காட்சிகளோட அழுத்தம்
எப்படி இருக்கும்? ப்ரம்மாண்டம் எப்படி இருக்கும்? அதுல பத்துல ஒரு பங்காவது இந்த
ஐ உங்களை satisfy பண்ணிச்சா?
அதே ஆம்பளையில சுந்தர்.சி
எதிர்பார்ப்பை நிச்சயம் கொஞ்சம் கூட ஏமாற்றாம பூர்த்தி செஞ்சிருக்காரு (என்னை
பொறுத்தவரை). அவ்வளவு தான் நல்லாருக்குன்னு சொன்ன படத்துக்கும், நல்லா இல்லைன்னு
சொன்ன படத்துக்கும் உள்ள வித்யாசம்.
சரி நா ரொம்ப biased ah
எழுதுறேன்னு சொல்றீங்க. ஒரு சின்ன உதாரணம். கொஞ்ச நாளுக்கு முன்னால ஒரு
பையன் என்னுடைய வலைத்தளத்துல சில பதிவுகள படிச்சிட்டு ரொம்ப பாராட்டினாரு. நா
எழுதுன சுந்தர்.சியின் முரட்டுக்காளை பட விமர்சனத்த பாத்து தான் ரொம்ப impress
ஆனதாகவும் சொன்னாரு. அப்புறம் கொஞ்ச நாள் தொடர்ந்து டச்ல இருந்து
அடுத்தடுத்த பதிவுகள பாராட்டியும் அவரோட கருத்துக்கள சொல்லிக்கிட்டும்
தொடர்ந்தாரு.
திடீர்னு ஒரு நாள் நா
தாண்டவம் படத்துக்கு எழுதுன விமர்சனத்த படிச்சிட்டு “இனிமே உங்க விமர்சனமே படிக்க
மாட்டேன்”னு சொல்லிட்டு பொய்ட்டாரு. ஏன்னா அவரு ஒரு தீவிர விக்ரம் ஃபேனாம். விகரம
பத்தியும் விக்ரம் பட த்த பத்தியும் தப்பா எழுதுனது புடிக்காம தொடர்ந்து படிக்கிறத
நிறுத்திட்டாரு. அப்போ, சுந்தர்சிய ஓட்டும்போது படிக்கிறதுக்கு ஜாலியா
இருக்கு. ஆனா “தாண்டவம்”ங்குற உலக காவியத்த நல்லா இல்லைன்னு சொல்லும்போது அவரால
தாங்கிக்க முடியல. இப்போ சொல்லுங்க biased ah இருக்கது நானா இல்லை நீங்களா?
உங்களோட
பின்னூட்டத்துலருந்து, நீங்க என்னோட சில பதிவுகள படிச்சிருப்பீங்கன்னு தெரியிது.
அதே மாதிரி என்னோட சில விமர்சனங்கள் உங்களோட கருத்துக்களுக்கு ஏற்ற மாதிரி ஒத்துப்போயிருக்குன்னும்
தெரியிது. ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்க ஆசைப்படுறேன். உங்களுக்கு இணையான மாற்று வேற யாருமே இருக்க முடியாது. அதாவது இந்த
உலகத்துல ஒவ்வொருத்தரும் unique. நமக்கு நம்ம தான் replacement. நம்மோட
எண்ணத்தையும் செயலையும் முழுக்க முழுக்க ஒத்த ஒருத்தரை நம்மால் கண்டுபுடிக்க
முடியாது.
அதுமாதிரி தான் நம்ம
ரெண்டு பேரோட எல்லா கருத்தும் ஒத்துப் போகும்னு எதிர்பார்க்க முடியாது. அப்டி
ஒத்துப்போகாத பட்சத்துல இத ஏன் biased ன்னு சொல்றீங்க? இன்னொருத்தரோட இன்னொரு view
ன்னு தானே நீங்க நினைக்கனும் விக்ரமையோ, ஷங்கரையோ தப்பா எழுதுறதால எனக்கு என்ன கிடைக்கபோவுது?
அப்புறம் நா சுமோ
பறக்குறத பத்தி சொல்லவே இல்லைன்னு வேற சொல்லிருக்கீங்க. நா தெரியாமத்தான்
கேக்குறேன் சுமோ பறக்குற படங்களை நீங்க இதுவரைக்கும் பாத்ததே இல்லையா? அப்போ ஹரி
படங்கள்ல ஒண்ணு கூட நீங்க பாத்ததே இல்லை போலருக்கு . ஒரு சாதாரண கமர்ஷியல் மசாலா படத்துல
வந்த சுமோ பறக்குற காட்சி அந்தப் படத்துக்கு ஒரு மைனஸா
எனக்கு தெரியவே இல்லை. அப்படி ஃபோகஸ் பண்ற அளவு அது பெரிய காமெடியும் இல்லை.
இணையத்துல எவண்டா கிடைப்பான் ஓட்டுறதுக்குன்னு அலையிற சில பேர் கிளப்பியது தான்
அந்த சுமோ ஸ்ட்ண்ட் காமெடி. லிங்காவை பொறுத்தவரை, அதை நா ஒரு விமர்சனமா எழுதல. லிங்காவை பற்றிய ஒரு பதிவாத்தான் எழுதியிருந்தேன். அதனால நீங்க சொன்ன அந்த வெடிகுண்டு காட்சிகளை குறிப்பிட்டு எழுதல.
ஒரு படத்துல லாஜிக்
பாக்அகனுமா வேணாமான்னு decide பண்றது அந்தப் படம் என்ன genreல வந்துருக்குங்குறத
தான். பிதாமகன் படத்துல சூர்யா ஒருத்தன அடிச்சி 10 அடி பறக்க விடுறாருன்னா அது லாஜிக் மீறலா தெரியும். அதே சிங்கம் படத்துல ஒருத்தன அடிச்சி 50 அடி பறக்க விட்டாலும் அது லாஜிக் மீறலா தெரியாது. இவ்வளவுதான் சினிமாவுல லாஜிக்.
//I agree with previous
person's review...You didn't mention even a single positive points like Music
or Camera or location anything...//
நான் எழுதும் ஒவ்வொரு விமர்சனத்திலும் படத்தில் நான் ரசித்த சிலவற்றை எழுதியிருப்பேன். மேலும் பாட்டு, BGM, கேமரா எப்படி இருந்துச்சின்னு
கூட ஒரு வரி மறக்காமல் எழுதுவேன். அஞ்சான் விமரசனத்துல கூட நீங்க ஒரு அது மாதிரி ஒரு பாராவ பாக்கலாம். “ஐ” விமர்னத்துல பதிவோட நீளம் ஏற்கனவே அதிகமாயிட்டதால மியூசிக் கேமரா பற்றிய ஒரு பத்திய விட்டுட்டேன். அவ்வளவு தான். நீங்க கேக்குறத பாத்தா நா எதோ “ஐ” ய மட்டம் தட்டனும்ங்குற
ஒரே நோக்கத்தோட எழுதியிருக்கேன்னு நினைக்கிறீங்க போல. நிச்சயமா இல்லை. ஏமாந்த ஒருவனோட புலம்பல் அது.
//This is not only for I
review. for some of the other posts where you are just trying to attack people
and not taking opinions.//
// If u say wat u wrote
is ur opinion then write in A4 sheet n read urself. dont post in public//
இதுக்கு ஒரே வரியில
என்னால பதில் சொல்லி முடிச்சிட முடியும். ஆனா
நிச்சயமா இந்த
வலைத்தளத்துல வெளியிடப்படுற விமர்சனங்கள், ஒரு தனி மனிதனோட பார்வையிலான சினிமா
தான். அடுத்தவர்களோட ஒபீனியன் கேட்டு நடுநிலை விமர்சனங்களை தர இது நாளிதழோ வார
இதழோ இல்லை. என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டும் தான். சிலருக்கு ஒத்துப்போகுது
சிலருக்கு ஒத்துப் போகல.
உங்களுக்கு இந்த முறை
ஒத்துப் போகல. “உங்களுக்கு இந்த விமர்சனம் புடிக்கலயா பரவால்ல விடுங்க பாஸ் அடுத்த
தடவ உங்களுக்கு ஏத்த மாதிரி நடுநிலையா விமர்சனம் எழுதிடுறேன்” ன்னு உங்ககிட்ட நா
சொன்னாதான் பெரிய தப்பு. தனி ஒரு மனிதனுக்கு நடுநிலைங்குற விஷயம் இருக்கவே
முடியாது. என்னோட பார்வையில படங்களை விமர்சிக்கிறேன். என் மனசாட்சிக்கு விரோதம்
இல்லாம ஒரு படத்த பத்தி நா என்ன நினைக்கிறோனோ அத எழுதுறேன். அதே மாதிரி தான்
மறுபடியும் எழுதுவேன். உங்களுக்கு பிடிக்கலன்னு public ah போட வேணாம்னு சொல்றீங்க.
ஆனா நிறைய பேர் நான் எழுதிருக்கது சரி தான்னு சொல்லிருக்காங்க. அவங்களுக்கு என்ன
செய்றது?