”நீ
தெலுங்கந்தானே… உனக்கு தெலுங்கு படம் தான் புடிக்கும்” ”தெலுங்கு படம்னா தூக்கி வச்சி
பேச வந்துருவியே.. அவ்வளவு தாய் மொழிப்பற்று” இப்படியான கமெண்டுகள்தான் சமீபத்துல நம்ம
பதிவுக்கு வருது. அதாவது நான் ஒரு தெலுங்கன் என்பதால்தான் தெலுங்குப் படங்களை தூக்கி
வைச்சிப் பேசுறேனாம். ஏண்டா டேய்.. இங்க எத்தனை பேரு ஹாலிவுட் படங்களை தூக்கி வச்சி
பேசுறானுங்க.. அவனுங்கல்லாம் என்ன வெள்ளக்காரனுங்களா? உங்க லாஜிக்குல தீய வைக்க.
ஒரே
மாதிரியான ரசனையுடைய மக்களுக்கு, ஏறத்தாழ ஒரே
பழக்க வழக்கங்களை உடைய மக்களுக்கு ஒரே பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களில் தமிழ்ப்
படங்கள் மட்டும் ஏன் தரத்தில் மாறுபடுகின்றன என்பதுதான் என்னுடைய ஆதங்கம். அதுமட்டுமில்லாம
தமிழ் சினிமாவ அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இயக்குனர் பேர்வழிகள் செய்த ஒரே சாதனை பல பேர தியேட்டருக்கு
போகவிடாம செஞ்சது மட்டும் தான். இதச் சொன்னா நம்மள தெலுங்கன்றானுங்க. சரி நம்மள தெலுங்கன்னு
சொல்றதுக்கு அடுத்த இன்னொரு பதிவு.
ஏற்கனவே
நாம பார்த்து நமக்கு பிடிச்ச படங்களோட ரீமேக்கை
வேறு மொழிகளில் பார்க்குறத விட கொடுமை வேற எதுவும் இல்லை. ”96” ரீமேக்குல கன்னடா காரனுங்க
புல்டோசர விட்டு ஏத்துனப்ப நமக்கு எப்புடி வலிச்சிது. அதே தான் பல படங்களுக்கு நடக்குது.
பாதி நமக்கு தெரியிறதில்லை அவ்வளவு தான். பாட்ஷா படத்தோட கன்னடா ரீமேக்க சமீபத்துலதான்
பாத்தேன். சத்தியமா ஜனகராஜ் பாட்ஷாவா நடிச்சா எப்படி இரூந்துருக்குமோ அந்த எஃபெக்ட்தான்
இருந்துச்சி அந்தப் படத்த பாக்கும்போது. எது? அப்ப ஜனகராஜ் ரோல்ல நடிச்சவரு எப்படி
இருந்தாருன்ன்னு கேக்குறீங்களா?
சரி
மேட்டருக்கு வருவோம். ஜூனியர் NTR நடிச்ச டெம்பர் தான் ஆக்டிங்ல இப்பவரைக்குமே அவரோட
பெஸ்ட்டுன்னு நா நம்புறேன். அந்தப் பட்த்தோட ரீமேக் ரைட்ஸ் ரொம்ப நாளுக்கு முன்னாலயே
வாங்கி வச்சிக்கிட்டு அதுல சிம்புவ நடிக்க வைக்கப்போறதா பேச்சு அடிபட்டப்பல்லாம் என்னோட
மூச்சு நின்னு போற மாதிரி இருந்துச்சி. ஏற்கனவே ஒஸ்திங்குற படத்த எடுத்து டபாங்க் படத்து
அஸ்திய கரைச்சதெல்லாம் கண்ணு முன்னால வந்து
போகுமா இல்லையா.. கடைசியா விஷால வச்சி எடுக்குறதா சொன்னாங்க. நம்ம பேசிக்கலா ஒரு விஷால்
ஃபேன்ங்குறாதால பெருசா ஒண்ணும் எஃபெக்ட் இல்ல.
அயோக்யா
டீசரப் பாத்தப்போதான் தெரிஞ்சிது இது ஜெயம் ராஜாவ மிஞ்சிய ஒரு ரீமேக் பன்னிருக்காங்கன்னு.
ஒரு காட்சி, ஒரு வசனம் கூட மாத்தமா அப்படியே. அப்பவே முடிவு பன்னிட்டேன்… பாக்கக் கூடாதுன்னு.
டெம்பர்
படம் பத்தி எப்ப நினைச்சாலும் கண்ணு முன்னால முதல்ல வர்றது pre climax ல போலீஸ் ஸ்டேஷன்ல
வர்ற ஒரு சண்டை தான். அந்த ஃபைட் ஆரம்பிக்கிற விதம், அதற்கு முன்னால விஷாலுக்கும் அவருடைய
உதவியாளரா இருக்க ஒரு போலீஸுக்கும் நடக்குற வாக்குவாதம் செம்மையா இருக்கும். போசனி கிருஷ்ண முரளின்னு ஒரு
காமெடியன் அந்த ரோல பண்ணிருப்பாரு. அவரு காமெடியன்னாலும் எமோஷனலா அந்த சீன்ல பயங்கரமா
பண்ணிருப்பாரு.
எனக்கு
படம் எப்டி இருக்கும்ன்றத விட அந்த ரோல் தமிழ்ல யாரு பண்ணிருப்பான்றத தெரிஞ்சிக்கிறதுதலதான்
ரொம்ப ஆர்வமா இருந்துச்சி. டீசர்ல அது யாருன்னு காமிக்கல. ஆனா ட்ரெயிலர்ல அது கே.எஸ்.ரவிக்குமார்னு
தெரிஞ்சிது. சரி எதோ வித்யாசமா ட்ரை பன்றாங்க போலருக்குன்னு நினைச்சிருந்தேன்.
படம்
பாத்த பல பேருகிட்ட படம் எப்டி இருக்குன்னு கேட்டத விட செகண்ட் ஆஃப்ல ஒரு சீன் வருமே
அது எப்டி?ன்னு தான் கேட்டேன். நம்ம அந்த தெலுங்கு படத்த பாத்து எக்ஸைட் ஆன அளவுக்கு
தமிழ்ல பாத்து யாரும் அவ்வளவு எக்ஸைட் ஆனதா தெரியல. கடைசியா நேத்துதான் அந்த சீனப்
பாத்தேன். சர்வ நாசம்.
அது
ஒரு மசாலா காட்சிதான். ஆனாலும் அவ்வளவு எமோஷான சீன எதோ கடனுக்குன்னு எடுத்து வச்சிருந்தாங்க.
நா அந்த ரோல்ல ரொம்ப ஆவலா எதிர் பார்த்த்து நம்ம தம்பி ராமைய்யாவத்தான். உண்மையிலயே
தம்பிராமையாவ அந்த ரோல்ல போட்டுருந்தா அந்த சீன் பிரிச்சிருப்பாரு.
சில
படங்கள்ல அவர் ஒரு மொக்கை காமெடியன் தான்.
ஆனா அதே ஓரு கேரக்டர் ரோல்னு வரும்போது ஏந்த ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு
தரமான நடிப்ப கொடுப்பவர். தொண்டன் படத்துல 5 நிமிஷ காட்சின்னாலும் ஆளு மெரட்டிருப்பாரு.
விஷாலும்
சைடு வகுடெல்லாம் எடுத்து பாக்க ரொம்பக் கண்றாவியா இருந்தாரு. ஒத்த சீன் பாத்ததுல மொத்த
படம் பார்க்க இருந்த கொஞ்ச ஆர்வமும் போயிருச்சி. நம்ம மைண்டுல டெம்பரே இருக்கட்டும்னு
அத்தோட அந்த ப்ராஜெக்ட ட்ராப் பன்னிட்டேன்.
டெம்பர்
பட்த்துல வர்ற அந்த சீன்..