"இந்தப்படமும்
சுல்தான் தி வாரியர் மாதிரி தான்.. ஆரம்பிச்சி கொஞ்ச நாள்ல காணாம
போயிடும்" "கேன்ஸூக்கு
போகுதுன்னு சொன்னாங்க பேச்சையே காணும்... " "படம் நல்லா இல்லை போல அதான்
ரிலீஸ் பண்ண
மாட்டேங்குறாங்க" "படத்துல ரஜினியே நடிக்கலையாமே" "கோச்சடையான் படம் ட்ராப் ஆயிடுச்சாமே..." "டீசர் அவ்வளவு சிறப்பா இல்லை.
இந்தப்படம்லாம் நம்மூருக்கு செட் ஆவாதுப்பா" "படம் விநியோகஸ்தர்களுக்கு
பிடிக்கலையாம் யாரும் வாங்க மாட்டேங்குறாங்களாம்" இப்படி கண்ட கண்ட மாதிரி பேசிய
வாயிங்களுக்கு மொதல்ல ஒரு பெரிய
திண்டுக்கல் பூட்டு போட்ட சவுந்தர்யாவுக்கு நன்றிகள் பற்பல. மோஷன் கேப்சரிங்ல
எடுத்த இந்தப் படம் முதல்ல ரிலீஸ் ஆனாலே அது மிகப்பெரிய வெற்றி. வேற எதுவும் தேவையில்லைன்னு
நா ஏற்கனவே ஒரு பதிவுல சொல்லியிருந்தேன். ஆனா எதிர் பார்த்ததை விட பலமடங்கு சிறப்பான ஒரு
படத்தை கொடுத்திருக்காங்க.
முகத்தில ஜார்ஜ்
புஷ் மாதிரியான மாஸ்க (mask) வச்சி மேக்கப்
போட்டா யார வேணாலும் ஜார்ஜ் புஷ்மாதிரி காமிக்கலாம். ஆனா
அதையெல்லாம் அடுத்த கட்ட முயற்றி, ஒலக முயற்சி ன்னு பாராட்டுனவியிங்க உண்மையான அடுத்த
கட்ட சினிமாவுக்கு தலைவர் செல்லும் போது பாராட்டாம குறை சொல்ல எப்படி மனசு வருதுன்னு
தெரியல. பல ஆங்கிலப்படங்களில்
போர்க்காட்சிகளையும், அரசர் காலத்து பிரம்மாண்டங்களையும்
பாத்து வாயைப்பிளந்துருக்கேன். இந்த மாதிரி நம்மூர்லயெல்லாம் எப்போ வரப்போகுதுண்ணு
கூட நினைச்சிருக்கேன். அதுக்கெல்லாத்துக்கும் சேத்து தலைவர் கொடுத்திருக்கும் பதில தான் இந்த
கோச்சடையான்.
மொதல்ல கொஞ்சம்
பயமாத்தான் இருந்துச்சி. சில தெருநாயிங்க குரைக்குறதுக்கு ஏத்த மாதிரி எதுவும் ஆயிடக்கூடாதுன்னு
கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சி. இதுக்கு முன்னால சந்திரமுகி ரிலீஸ் அப்போ இதே மாதிரி ஒரு
சின்ன பயம். தலைவர் கொஞ்சம் சருக்கினார்ங்குற ஒரே காரணத்துக்காக, அவர் பக்கத்துல நிக்கக்கூட
பயப்படுற பயலுங்கல்லாம் அவர் படம் கூட
போட்டி போட்டு ரிலீஸ் பண்ணாய்ங்க. அடிச்ச அடியில
அதுக்கப்புறம் அந்த நினைப்பு கூட அவங்களுக்கு வந்துருக்காது. சந்திரமுகி 200 வது நாள் விழாவுல எஸ்.ஏ.சந்திரசேகர்
"நானும் இளைய தளபதி விஜய்யும்
சச்சின் திரைப்படம் சந்திரமுகியுடன் ரிலீஸ் ஆகிவிடக்கூடாது
ன்னு எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனா முடியல" ன்னு வந்து பம்புனது இன்னும்
கண்ணுமுன்னாலயே
நிக்கிது.
ஆனா ரஜினி
எதிர்ப்பாளர்களா தங்களைச் சொல்லிக்கொல்லும் சில பேரு அவங்களையே அறியாம தலைவர எந்த
உயரத்துல வச்சிருக்காங்க தெரியுமா? முதல்ல கடவுள்
எதிர்ப்பு செய்வதன் மூலம் தங்களை பகுத்தறிவாளர்களா காட்டிக்கொண்டவங்க இப்போ ரஜினி எதிர்ப்பு
பண்ணாதான் அவர்கள் பகுத்தறிவுவாதிகளா நினைக்கிறாங்க. அப்போ அவர்களையும் அறியாம தலைவர
கடவுள் அந்தஸ்துக்கு உயர்த்திருக்காய்ங்க. அப்புறம் ஊருக்கு என்ன பண்ணாரு என்ன பண்ணாருன்னு ஒரு
நாட்டோட முதல்வர்கிட்ட கேக்க வேண்டியதை தலைவரிடமும் கேட்டு தலைவரை பதவியிலில்லா
மாபெரும் தலைவரா அவங்களே மதிக்கிறாங்க. "நானும் ரஜினி ரசிகந்தாங்க,, ஆனா" ங்குற வாக்கியத்த
உயயோகிக்காம யாராலும் தலைவர விமர்சனம் கூடப் பண்ண முடியாது. அதான் தலைவர்.
படத்தின் கதையைப்
பற்றியெல்லாம் இப்ப பேசத்தேவையில்லைன்னு நெனைக்கிறேன். யாரும் பாக்கமாட்டாங்கன்னு
தெரிஞ்ச படத்துக்குன்னா இதாம்பா கதை, இந்த சீன் இப்டி இருக்கு அந்த சீன் அப்டி இருக்குன்னு
சொல்லலாம். ஆனா எல்லாரும் பாக்கப்போற ஒரு படத்துக்கு எதுக்கு கதையையோ இல்லை காட்சிகளையோ
சொல்லனும். அதுக்கும் மேல தலைவர் படத்த விமர்சனம் பண்ற அளவு இன்னும் நம்மல்லாம் வளரல.
தெளிவுரையும், முடிவுரையும்
தெளிந்த நீரோடையாக தெரிந்தபிறகு முன்னுரை எதற்கு?
சில ஹைலைட்டுகள
மட்டும் சொல்லிக்கிறேன்.
1. படத்தை நீங்க 2Dல தான் பாத்தீங்கன்னா கண்டிப்பா ஒரு முறை 3D
யில பாருங்க. எஃபெக்ட்
தெறிக்குது.
2. "SUPER STAR" டைட்டில் கார்ட் அனிமேஷனும், அதற்கான இசையும்,
தலைவரின் intro
scene ம் மாஸ்ஸோ மாஸ்ஸூ..
3. படம்
முடியும்போது உங்களுக்கு ஏண்டா முடிஞ்சிது. இன்னும் கொஞ்சம் நேரம் ஓடுனா
நல்லாருக்குமேன்னு தோணும். ஏன்னா
க்ளைமாக்ஸ்ல வச்சிருக்க விஷயம் அப்டி.
4.தலைவரோட சின்ன
சின்ன expression களக்கூட அப்படியே
கொண்டுவந்துருக்கது செம. குறிப்பா தலைவர் வசனம் பேசுற
காட்சிகள்ல live action பாக்குற ஃபீல்
இருக்கு.
5. கடைசி அரைமணி
நேரம் சூப்பர். "நாசரின் கேள்விகளுக்கு தலைவரின் அசத்தலான பஞ்ச் பதில்கள்களுக்கும்"
"பார்த்தாயா எங்கள் நாட்டின் ரத கஜ
துரக பதாதிகளை" வசனத்தின் போதும் தியேட்டரே விசில்
சத்தத்தில் மூழ்கியது.
6. அனிமேஷன்ல
வந்தாக்கூட நம்மள கண்கலங்க வைக்க தலைவரால் மட்டுமே முடியும். முத்து படத்தில் "விடுகதையா"
பாடலுக்கு நமக்கு வந்த அதே சோகத்தை இந்த கோச்சடையானிலும் ஒரு காட்சி தருகிறது அதே ரத்தம்
அப்படித்தான் இருக்கும்.
7. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு
BGM eh நல்லா போடத்தெரியாதுன்னு
சில அரைமெண்டலுங்க சொல்லிகிட்டு திரியிதுங்க.
அதுங்க இந்த படத்த பாத்தா ஆயிசுக்கும் அந்த மாதிரி ஒரு வார்த்தைய சொல்ல மாட்டாங்க. BGM கொடூரம்...
தலைவர் பட மியூசிக்குக்கு இனி வேறு யாரையுமே நினைச்சி கூட பாக்க முடியாது.
8. படத்துல பாத்து
வியந்த இன்னொரு விஷயம் நாகேஷ். உருவத்த கொண்டுவந்தது பெரிய விஷயம்னாலும் அதே வாய்ஸ்ல அதே
மாடுலேஷன்ல பேசவும் வச்சிருக்கதுக்து உண்மையிலயே கிரேட்.
9. மோஷன்
கேப்சரிங்கில் டூயட் பாடிய முதல் ஆளும், பஞ்ச் டயலாக் பேசிய முதல் ஆளும் நம் தலைவர் தான். எங்கே போகுதோ வானம்
பாட்டும், ருத்ர தாண்டவமும்
செம.
முன்னடி ஒரு தடவ தலைவர் ஒரு நிகழ்ச்சியில் சொன்னத வச்சிப் பாக்கும் போது, கோச்சடையானோட கிளைமாக்ஸ் தான் "ரானா"
வில் இண்டர்வல் காட்சியாக இருந்திருக்கனும். ச்ச.. மிஸ் ஆயிடுச்சி.
கே.எஸ்.ரவிக்குமார் வழக்கம் போல தாறு மாறு. தலைவருக்கு ஸ்கிரீன் ப்ளே எழுதுறதுல SPM க்கு அடுத்து KSR தான்.
படத்தில் கொஞ்சம்
நெருடலாக இருந்த ஒரே ஒரு விஷயம் தீபீகாவோட மூகம். சில காட்சிகளில்
"ப்ப்ப்பா" ரியாக்சன் கொடுக்க வச்சிருச்சி. சவுந்தர்யா மேடம், இந்த படத்துக்கு
தலைவர் 15 நாள் தான்
ஷூட்டிங்ல இருந்ததா கேள்விப்பட்டோம்.
இன்னொரு பதினைஞ்சி நாள் சேத்து எடுத்துக்குங்க. அடுத்த பார்ட்ட எடுக்க
ஆரம்பிங்க. ஏன்னா வேற யாரையும் வச்சி
உங்களால இனிமே மோஷன் கேப்சரிங்ல படம்லாம்
எடுக்க முடியாது. அப்படியே நீங்க
எடுத்தாலும், வேற யாரையும்
எங்களால பாக்க முடியாது.
மொத்தத்தில் கோச்சடையான்... காலம் கடந்தும் பேச்சுடையான்.
தொடர்புடைய பதிவு
தொடர்புடைய பதிவு