Sunday, May 3, 2015

உத்தம வில்லன் – சேகர் செத்துருவான்!!!


Share/Bookmark
முன்னெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆகும்போதும் எல்லாரும் கேக்குற ஒரு கேள்வி ”படம் நல்லாருக்கா நல்லா இல்லையா? ங்குறது தான். ஆனா இப்ப கொஞ்சம் ட்ரெண்டு மாறி “படத்த முழுசா பாக்க முடியுமா முடியாதா? ங்குற கேள்வியத்தான் இப்ப வர்ற படங்கள்லாம் நம்மள கேக்க வைக்கிது. ஒவ்வொரு படத்துலயும் வித்யாச வித்யாசமா மொக்கைய போட்டு தெறிச்சி ஓட வைக்கிறாய்ங்க. படங்களை தரத்தின் அடிப்படையில முன்று பிரிவா பிரிக்கலாம். அவையாவன ஜில், ஜங், ஜக். இந்த ஜக் வகை மொக்கை படங்களை இதற பரிணாம வளர்ச்சியை வச்சி பிப்பா, பிஃப்பா, பிம்ளக் ன்னு மூணு வகையா பிரிக்கலாம். அந்த பிம்ளக் வகையைச் சேர்ந்த ஒரு படம் தான் நம்ம உத்தம வில்லர்.

நண்பர்களுக்கு ஒரு எச்சரிக்கை. நீங்க உத்தம வில்லன் படம் பாக்கனும்னு ஒரு ஐடியா வச்சிருக்கீங்களா? முதல்ல ஆசை, கோபம், விருப்பு, வெறுப்புன்னு உங்களுக்குள்ள மனிதர்களுக்குள்ள உள்ள உணர்வு இருந்துச்சினா கண்டிப்பா உங்களால இந்தப் படத்த முழுசா பாக்க முடியாது. மேற்கூறிய அனைத்து உணர்ச்சிகளையும் துறந்து நீங்க ஒரு ஜென் நிலையை அடைஞ்சா மட்டுமே உத்தம வில்லனின் க்ளைமாக்ஸ் வரை உங்களால் தாக்கு பிடிக்க முடியும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவன் ஒரு ரஜினி ஃபேன்பா. உடனே கமல் படத்த ஓவர் மட்டமா பேசுவான்னு மட்டும் தப்பா நினைச்சிட்டு, மேல நா குடுத்த எச்சரிக்கையை ரொம்ப லைட்டா எடுத்துக்கிட்டீங்கன்னா நிச்சயம் வருத்தப்படுவீங்க. நா காலேஜ்லருந்து பாத்த பல சரித்திர மொக்கை படங்களை ஒன்றிலிருந்து பத்தாக வரிசைப்படுத்தி வச்சிருந்தேன். நேத்து பாத்த புது வரவான உத்தம வில்லன் நேரடியா அந்த டாப் டென்ல முதல் இடத்த புடிச்சிருச்சின்னு சொன்னா அது மிகையாகாது. சரி வாங்க உத்தம வில்லரப் பத்தி கொஞ்சம் பாக்கலாம். கதையைத் தெரிஞ்சிகிட்டா படத்தோட சுவாரஸ்யம் (அவ்வ்) போயிருமோன்னு எதுவும் வருத்தப்படாதீங்க. நீங்க வருத்தப்பட இன்னும் நிறைய விஷயம் இருக்கு.

உச்ச நிலையில் இருக்கும் ஒரு பெரிய ஹீரோவுக்கு மூளையில கட்டி வந்துருது. சாகுறதுக்கு முன்னால கடைசியா தன்னோட குருநாதரான பாலச்சந்தரோட சேந்து ஒரு படம் பண்ணலாம்னு முடிவு பண்ணி அவர அப்ரோச் பண்றாரு கமல். மூளையில கட்டி இருக்கது தெரிஞ்சதும் அவர் உடனே கமல வச்சி படம் பண்ண ஒத்துக்கிறாரு. என்ன படம் மாதிரி படம் பண்ணலாம்னு பாலச்சந்தர் கமல்கிட்ட கேக்க “படம் பாத்துட்டு வெளில போகும்போது தியேட்டர்லருந்து எல்லாரும் சிரிச்சிட்டே போகனும் சார்.. காமெடி பண்ணுவோம்” ங்குறாரு. உண்மையிலேயே உத்தமவில்லன் படத்த பாத்துட்டு வெளில வரும்போதும் எல்லாரும் சிரிச்சிட்டே தான் வர்றாய்ங்க. என்ன கொஞ்சம் நார்மலா சிரிக்காம காதல் பரத் மாதிரி தலைய சொறிஞ்சிக்கிட்டே “ஞா..ஞா..ஞா” ன்னு சிரிச்சிட்டு வர்றாய்ங்க.

உடனே அவர்களோட காமெடிப்படம் தொடங்கப்படுது. அந்தப் படதோட பேர்தான் உத்தம வில்லன். என்ன செஞ்சாலும் சாகாத உத்தமன்ங்குற ஒரு கேரக்டர சுத்தி நடக்குற ராஜா காலத்து கதை தான் அந்த உத்தமவில்லன். அது வேற செம காமெடி படமா… காமெடி பண்றாங்க பாருங்க… சிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சிருக்கும்னு நினைச்சி வயித்துவலி மாத்திரையெல்லாம் எதுவும் எடுத்துட்டு போயிடாதீங்க. அந்த மாதிரி அசம்பாவிதம் எதுவும் நடக்கவே இல்லை. ஒரு இடத்துல கூட மருந்துக்கும் சிரிப்பு வராது.  

அந்தக் கதையில் வரும் வில்லத்தனமான ராஜாவாக நாசர். இம்சை அரசனில் வடிவேலு செஞ்ச காமெடியவே திரும்ப நமக்கு செஞ்சி காமிச்சி அருத்துக் கொல்றாரு. சமீப காலத்துல நாசர எந்தப் படத்துலயும் இவ்வளவு மொக்கை பண்ணதில்லை. அதுவும் ஒரே காமெடியை அம்பது இடத்தில் ரிப்பீட் அடிக்கிறாய்ங்க. மொத தடவையே அதப் பாத்தாலே சிரிப்பு வர மாட்டேன்ங்குது. இதுல திரும்பத் திரும்ப. குறிப்பா நாசரோட காது காமெடியும், ஹீரோயின் கமல்கிட்ட புலிய பழக்கி விடும்போது வரும் காமெடியும் (?).

ஷூட்டிங் ஒரு பக்கமா போயிட்டே இருக்க, கமலுக்கு மூளையில் கட்டி இருக்கது ஒவ்வொருத்தருக்கா தெரிய ஆரம்பிக்குது.  கரெக்டா உத்தம வில்லன் ஷூட்டிங் முடியிறதுக்கும் கமல் நோயோட உச்சகட்டத்த அடையிறதுக்கும் சரியா இருக்கு.ஆப்ரேஷன் தியேட்டர். ஆப்ரேஷன் பன்னா 50-50 chance தான். பிழைத்தால் பிழைக்கலாம். இல்லைன்னா கஷ்டம். கமல் கடைசில பிழைச்சாரா இல்லியாங்குறத நீங்களே படத்த பாத்து தெரிஞ்சிக்குங்க. சாதா ஹீரோக்களோட படங்கள்னா ஆப்ரேஷன் முடிஞ்சி வெளில வந்து டாக்டர் “இட்ஸ் எ மெடிகல் மிராக்கிள்” ன்னு சொல்லுவாறு. ஆனா இவரு உலக நாயகர். எதையுமே வித்யாசமா உலகத்தரத்தில் செய்யக்கூடியவர். அப்போ க்ளைமாக்ஸ் என்னவா இருக்கும்னு நீங்களே கெஸ் பன்னிட மாட்டீங்களா என்ன?

கமல் ஒரு மிகச் சிறந்த நடிகர்ங்குறதுல எந்த சந்தேகமும் இல்லை. ஆனா ஒருத்தர் ஒரு வேலையை ஒழுங்கா செஞ்சாதான் அதோட அவுட்புட் நல்லா வரும். நமக்கு எல்லாம் தெரியும்னு நாய் வாய வைக்கிற மாதிரி பாக்குற எல்லா இடத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் வச்சிட்டு போனா இப்படித்தான். கமல் ஒரு நடிகரா, அவர ஒரு இயக்குனர்கிட்ட ஒப்படைச்சிட்டு வாய மூடிட்டு இருந்தா அவர வச்சி எவ்ளோ பெரிய ஹிட்டெல்லாம் குடுக்க முடியும். கேங்கும் நா தான் லீடரும் நாதான். ஐ ஆம் ஸ்டோரி, ஐ ஆம் ஸ்க்ரீன் ப்ளே. ன்னு இருந்தா என்ன செய்றது.

என்னடா இவன் ஓவரா பேசுறானேன்னு நினைக்காதீங்க. நா சமீபகாலத்துல பாத்த மிகச்சிறந்த மொக்கை இந்தப் படம். எந்த இடத்துலயுமே படம் பாக்குறவங்கள கவராத ஸ்க்ரீன் ப்ளே. கமலின் வழக்காமான் அதிகப்பிரசங்கித் தன கேரக்டர்கள். ஜெராமும் அவர் பொண்ணும் வந்து மலையாளம் பேசுறாங்க. கமலோட மனைவியும், மாமனாரும் தெலுங்கு. கமலின் மகன் ஆங்கிலத்துல அதிக பீட்டர்ன்னு எல்லாமே எரிச்சலைக் கெளப்புது.

மீசிக்க ஜிப்ரான்கிட்ட குடுத்துருக்காரு. புது மியூசிக் டைரக்டர நம்பி கமல் தைரியமா படம் குடுத்துருக்காருபான்னு ஏகப்பட்ட அளப்பரைகள். “பேக்கரிய நீ வச்சிக்க உங்க அக்காவ நா வச்சிக்கிறேன்” ங்குற டீல் மாதிரி மியூசிக்க நீ போடு பாட்டெல்லாத்தையும் நானே பாடிக்கிறேன்னு டீல் போட்டுருப்பாப்ள போல. அது கூட பரவால்ல.. பக்கும் பக பக பக பக ன்னு ஒரு தீம் வருது. அதுலயும் பகபகபக ன்னு இவரு தான் வந்து கத்துறாப்ள. ஆனா படத்துல மியூசிக்க குறை சொல்ல முடியாது. பாடல்களும் சரி, BGM உம் சரி அருக்கல. ஆனா அதை தவற மத்ததெல்லாம் அருத்துச்சிங்குறது வேற விஷயம்.

ஒவ்வொரு காட்சியும் ரொம்ப ரொம்ப நீளம். சீரியல விட மோசமா ஓடிக்கிட்டு இருக்கு. படம் ஆரம்பிச்சி, ஆடியன்ஸ் படத்துக்குள்ள போறதுக்குள்ள கமல் ஜெயராம் பேசிக்கிற மாதிரி ஒரு ரொம்ப நீளமான சீன். பாதி பேர் அப்பவே வெறியாயிட்டாய்ங்க. கூட்டத்துலருந்து ஒருத்தன் “யோவ் படத்த போடுங்கையா” ன்னு கத்த ஆரம்பிச்சிட்டான். அதவிடக் கொடுமை செகண்ட் ஹாஃப் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே ஒரு பத்துபேர் கொண்ட குழு தியேட்டர விட்டு வெளிய பொய்ட்டு போன வேகத்துல திரும்ப உள்ள வந்து “பைக்க எடுக்க முடியல பாஸூ” ன்னு சலிச்சிக்கிட்டு உக்காருறாய்ங்க.

படத்துல கமல் 25 வருஷதுக்கு முன்னால பிரிஞ்ச காதலிக்காக ரொம்ப வருத்தப்படுறாரு. அதுவும் ஆண்ட்ரியா கூட ரொமான்ஸ் பண்ணிக்கிட்டே. வீட்டுல மனைவியா ஊர்வசி வேற. எனக்கு உடனே வடிவேலு காமெடிதான் ஞாபகத்துக்கு வந்துச்சி. உனக்கு இவன் எத்தனையாவது? “அஞ்சாவது” அப்ப உனக்கு ? “ஏழாவது” உன்ன விட ரெண்டு லீடிங்குன்னு.

படத்தில் நல்ல காட்சிகள்னு பொறுக்குனா ஒரு மூணு நாலு தேறும். கமல் பாலச்சந்தர்கிட்ட என்கதைய சொல்றதுக்கு ஒரு நிமிஷம் குடுங்க சார்னு சொல்லிட்டு “ஹீரோவுக்கு மூளையில கட்டி” ன்னு சொல்வாறு. உடனே பாலச்சந்தர் ”போடா இது பல படத்துல வந்துருச்சி”ன்னு சொன்னதும், “சார் இது படத்து கதை இல்லை.. என்னோட கதை.. படத்துக்கு இனிமே தான் கதை புடிக்கனும்” ன்னு சொல்வாரு. அப்புறம் கமல் அவர் பையன் கிட்ட உண்மைய சொன்னதும் ரெண்டுபேரும் அழுற சீன் செம்ம. எம் எஸ் பாஸ்கர் அழுது பர்ஃபார்மென்ஸ் பண்ற சீனும் சூப்பர்.

ரியலாக வரும் காட்சிகள் சாதா அருவை ரகம்னா, உத்தமனோட கதையில வர்ற காட்சிகள் மெகா அருவை. உத்தம வில்லனுக்கு ஒரு வெளக்கம் வேற. வில்லப் புடிக்கிறவன் வில்லனாம். ஆனா கடைசி வரைக்கும் உத்தமன் வில்ல கண்ணால கூட படத்துல பாக்க மாட்டாரு. உத்தமனோட கதை க்ளைமாக்ஸ்ல திடீர்னு அந்த ராஜாவே நீங்க தான் சார்ன்னு விடுறாங்க ரீலூ. இதெல்லாம் என்ன கணக்குன்னே தெரியல.
பூஜா குமார் கப்பி. ஒரு சில ஆங்கிள்ல ஓக்கே. ஆனா அவருக்குண்டான வசனங்களும் அத அவர் பேசும்போது குடுக்குற ரியாக்‌ஷனும் செம்ம கடி. ஆண்ட்ரியா பாத்திரமாகவே மாறியிருக்கிறார் (பாத்திரத்த சமீபத்துலதான் பாத்தேன் டாக்டர்).

ஆனா இப்ப ஒரு செம காமெடி என்னன்னா யாருமே இத ஒரு மொக்கை படம்னு ஒத்துக்க மாட்டாய்ங்க. அதாவது கமல் அருமையா படம் எடுத்துருக்கதாகவும், அவர் எடுத்தது நமக்கு தான் புரியாம படம் நல்லா இல்லைன்னும், இந்த உத்தம வில்லன் இன்னும் 15 வருஷத்துக்கு அப்புறம் வர வேண்டிய படம் இப்பவே வந்துருச்சின்னும் நம்ம காதுலயே ரீல் சுத்துவாய்ங்க. அதுக்கும் மேல இன்னும் சில பேரு ட்ரிக்ஸா ஒண்ணு சொல்லுவாய்ங்க பாருங்க “எனக்கு புடிச்சிருக்குப்பா” ன்னு. அவிங்கள மட்டும் அசைக்க முடியாது. இன்னொரு குரூப்பு இங்க வந்து “லிங்காவுக்கு இது பரவால்லை”ன்னு கமெண்டு போடுவாய்ங்க. வக்காளி வெறியாயிருவேன் பாத்துக்குங்க.


மொத்தத்துல உங்களோட பொறுமையின் அளவை சோதிச்சி பாக்க ஆசைப்படுறவங்க உத்தம வில்லனுக்கு போங்க. அவர் பாஷையிலயே சொல்லனும்னா “படம் செம மொக்கைன்னு சொல்லல.. செம மொக்கையா இல்லாம இருந்தா நல்லாருந்துருக்கும்” அம்புட்டுத்தேன். 


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

25 comments:

Unknown said...

Kamal padam maathiriyee ella.... sema mokkai... Mudiyalai da saaaamy :(

Anonymous said...

Compare to Linga.....for for for better movie....


Seshan/Dubai

முத்துசிவா said...

@seshan:

appa neenga lingavum pakala uthama villanum pakala... kelambunga

Anonymous said...

ungapadam inimel eppavum varaahu,engalathu vanthukittey irukkum

முத்துசிவா said...

பன்னி பத்து குட்டி போட்டாலும்.. சரி விடுங்க அத ஏன் என் வாயால சொல்லிக்கிட்டு

ARAN said...

எல்லாம் முடிஞ்சிருச்சு சிவா படிச்சுட்டு போயிருக்கனும் .போயிட்டு வந்து படிக்குறேன் எல்லாம் முடிஞ்சு போச்சு டூ லேட். பேஷன்ட் அவுட் .

Vignesh said...

Completely agree with uR review. Felt d same after seeing the movie..

Unknown said...

:))))

வருண் said...

உண்மையைச் சொல்லணும்னா நீங்க கமல் ரசிகர்களைப் புண்படுத்துவதுபோல்தான் விமர்சனம் எழுதியிருக்கீங்க. :-)

உங்க ரசனை இப்படி இருப்பதால்தான் நீங்க ரஜினி ரசிகர்.

பொதுவாக நம்ம ரசனையை குறை சொல்வதை விட்டுவிட்டு, எனக்குப் படம் பிடிக்கலைனு படத்தை குறை சொல்லுவோம்.

நான் பொதுவாக கமல் படங்களைப் பார்ப்பதைத் தவிர்த்து விடுவேன். ஏன்னா, படம் பார்த்தால் இதுபோல்தான் விமர்சனம் என்னிடம் இருந்தும் வரும். அதுவும் சண்டியர் கரன் ல இருந்து பலர் நாம் ரசிக்கும் படங்களை இஷ்டத்து விமர்சிப்பதுடன். ரஜினி படம் வந்தால் கொள்ளையடிக்கிறான்னு ஒப்பாரி வைக்கிறது. கமல் படம் வந்தால் அது சமூக சேவைனு சொல்லி நம்மளையும் நியாயமாக விமர்சனம் எழுத விடமாட்டார்கள்.

கமல் ரசிகர்கள் பலர் இந்தப் படத்தை உண்மையிலேயே ரசிக்கிறார்கள். நண்பர் சத்யபிரியன் விமர்சனம் பாருங்க. அவர்கள் பொய் சொல்லவில்லை. ரசனையில் வித்தியாசம். அவ்வளவுதான். :)

உங்களுக்குப் பிடிக்கலை போல. எனக்கும் பிடிச்சி இருக்குமா?னு சந்தேகமே.

Rajaguru said...

Nalla ezhuthurikinga boss. Enaku test match pudikaathu T20 thaan pudikum nu sonna yaarum ungala periya cric player nu sollida maatanga. Athae maathiri thaan neengalum scene laam neelama irukuthu nu solringa - konjam asattu thanama thaan irukku. Na kamal fan thaan.. But oru sila nalla illaatha scene irukku athuku nu padam mokka nu solrathulaam romba overu. Oru screen play ah kora sollum pothu thaiva seithu athu enna arthathula irukku nu purinjika try panunga. Uthama Villain palaya Raja gaalathuku kadha thaan aana athula irukka ellam sceneum inaiku nadakurathoda co relate panikulaam. Even antha kaadhu cmdy kuda enkita nalla explanation irukku. Villain pathina villakam tamil audience kae puriyum athu ethuku nu aana neenga villu pathi kaekuringa. Padatha innorathadava kashta padama tamil ah purinjikitu alutha thiruthama ellam sceneum paarunga. Nalla naal vadivelu cmdy dialog potu ezhuthu therithu nu ezhuthaanthinga. Namma payalagaluku Anbae Sivam kuda late ah thaan purinjuthu.
Movie is a complete decent entertainer .

Anonymous said...

படம் நீங்கள் சொல்வது போல் மோசம் இல்லை. உத்தமன் பகுதிகள் பொறுமையை சோதிக்கிறது. ஆனாலும் பல சமயங்களில் மிகவும் impressed. முதலில் வில்லன் இல்லை. சக நடிகர்கள் கமல் ஹசான்க்கு போட்டி போட்டு நடித்து உள்ளார்கள். Andrea பகுதி ஒரு குறியுடு. இரண்டு பென்டாட்டி சினிமா எத்தனை தடவை பார்த்தீர்கள், இரண்டு புருஷன் இந்த தடவை பார்க்கவும்.
கமல் விசிறி.

முத்துசிவா said...

//இரண்டு பென்டாட்டி சினிமா எத்தனை தடவை பார்த்தீர்கள், இரண்டு புருஷன் இந்த தடவை பார்க்கவும்.// அடேங்கப்பா... உலகத்தரம் போங்க..

இதுலருந்து பாலச்சந்தர் படங்கள் உங்களுக்கு அவ்வளவு பரிட்சையம் இல்லைனு தெரியிது.

முத்துசிவா said...

//இரண்டு பென்டாட்டி சினிமா எத்தனை தடவை பார்த்தீர்கள், இரண்டு புருஷன் இந்த தடவை பார்க்கவும்.// அடேங்கப்பா... உலகத்தரம் போங்க..

இதுலருந்து பாலச்சந்தர் படங்கள் உங்களுக்கு அவ்வளவு பரிட்சையம் இல்லைனு தெரியிது.

சிவக்குமரன் said...

படம் முடிஞ்சதும் என் நண்பன்(கடந்த 20 வருஷமா கமல் படங்களை முதல் ஷோ பாக்கறவன்) சொன்னது என்னன்னா, இது லிங்கா - பார்ட் 2, ஆனா கமல் நடிச்சது.

ஆனா விழுப்புரத்து மக்களை பாராட்டணும். படம் முடியற வரை ஒருத்தரும் வெளிய போகல.

விமல் ராஜ் said...

படம் சுமார் ராகம் தான்... உலக நாயகனின் முந்தைய பட அளவுக்கு இல்லை. ஒத்துகிறேன்.அதற்காக அவ்வளவு மோசம் இல்லை... நீங்க தான் ஓவரா கூவியிருகீங்கன்னு தோணுது....

முத்துசிவா said...

//படம் சுமார் ராகம் தான்... // அப்ப இன்னொருதடவ பாத்து என்ஜாய் பண்ணுங்க..

காரிகன் said...

இதுதான் உண்மையான விமர்சனம் இந்தப் படத்திற்கு. கமல் என்ற அல்ட்ரா அலட்டல் நடிகரின் அடுத்த குறியீட்டு காவியம் இந்த உத்தம வில்லன்.... வருங்காலத்தில் இதை மக்கள் எப்படி புகழப் போகிறார்களோ என்று இப்போதே திகிலாக இருக்கிறது...

SathyaPriyan said...

//
உண்மையைச் சொல்லணும்னா நீங்க கமல் ரசிகர்களைப் புண்படுத்துவதுபோல்தான் விமர்சனம் எழுதியிருக்கீங்க. :-)

கமல் ரசிகர்கள் பலர் இந்தப் படத்தை உண்மையிலேயே ரசிக்கிறார்கள். நண்பர் சத்யபிரியன் விமர்சனம் பாருங்க. அவர்கள் பொய் சொல்லவில்லை. ரசனையில் வித்தியாசம். அவ்வளவுதான். :)
//
நன்றி வருண். உண்மையில் இந்த பதிவை நான் ரசித்தே படித்தேன். நக்கல் நையாண்டியுடன் படத்தை கழுவிக் கழுவி ஊற்றி இருக்கிறார். :-)

எனக்கு குணா / தளபதி 1992 தீபாவளி நினைவில் வந்து விட்டது. அப்போதும் இப்படித்தான் எங்களை ஓட ஓட விரட்டினர் ரஜினி ரசிகர்கள் :-)

இவரது தளத்துக்கு இதுவே முதல் முறை. இவரது மற்ற பட விமர்சனங்களை படிக்க வேண்டும் என்ற ஆவல் உண்மையிலேயே வந்து விட்டது.

நாம் கஷ்டப்பட்டு உழைத்து ஈட்டும் பணத்தை கொடுத்து தானே படம் பார்க்கிறோம். யாரும் ஓசியில் படம் காட்டுகிறார்களா என்ன? அப்படி இருக்கும் போது நமக்கு பிடிக்கவில்லை என்றால் விமர்சனம் செய்வதில் என்ன தவறு.

இதில் கொடுமை என்ன வென்றால் விமர்சனத்தை விமர்சனமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் கலைஞர்களிடம் கூட இல்லை. அப்படி இருக்கையில் ரசிகர்களிடம் எப்படி இருக்கும்?

Anonymous said...

Rubber moonja vachittu nadikira kizhavanukku kamal evallo mael.

Unknown said...

ஒரு படம் எல்லோருக்கும் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் தீவிரமான கமல் ரசிகன். முத்துசிவாவின் தொடர்பில் இருக்கும் நண்பர்.
நமக்கு பிடித்த நடிகரை மற்ற நடிகரின் ரசிகர் அவதூராக பேசும் போது கோபம் வருவது இயல்பே இருந்தும் இது அவர் கருத்து,. இதை படித்துவிட்டு ஏன் இப்படி எழுதுனீர்கள் என்று நான் கேக்கவும் இல்லை, கோபமும் இல்லை. எனக்கு பிடித்த ஒரு படத்தை எல்லாரும் நல்லமுறையில் மட்டும் தான் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் எப்படி :) . இருந்தாலும் படத்தை விட கமல் மீது இவருக்கு கோபம் கொபளிகிறது!!!!

நாம் காரி துப்பிய ஆம்பளை, லிங்கா போன்ற படங்கள் இவருக்கு பிடித்திருந்தது, நமக்கு பிடித்த படம் இவருக்கு புடிக்கல, அவர் அவருக்கு ஒரு ரசனை அவளவுதான்.

Unknown said...

A small correction in last two words,


நாம் காரி துப்பிய ஆம்பளை, லிங்கா போன்ற படங்கள் இவருக்கு பிடித்திருந்தது, நமக்கு பிடித்த படம் இவர் காரிதுப்புகிறார்

Jayadev Das said...

\\Anonymous Anonymous said...

Compare to Linga.....for for for better movie....\\

தமிழன் என்னமா இங்கிலீஷ்ல வெளுத்து வாங்குறான் பாருய்யா, வெள்ளைக்காரன் தூக்கு மாட்டியிருப்பான்!!

Man that is far far better!! not for for...........!!

Anonymous said...

My first ever comment to any blogger..ever..


"அதாவது கமல் அருமையா படம் எடுத்துருக்கதாகவும், அவர் எடுத்தது நமக்கு தான் புரியாம படம் நல்லா இல்லைன்னும்" - You hit the nail right on the head. That is exactly right.

I will agree - Half of the movie was very bad. It was badly told. It wasn't funny. He wanted to bring two paradoxes together - while he is dying in real life, he is an immortal in reel life. Again, when real life is full of sadness, he wants to give happiness to his fans and go out with a bang. Unfortunately, it didn't resonate and the sequences were not funny.

However, to call the scene where Kamal comes to know about his daughter's existence a lengthy one and a bore, is typical of a Rajni fan. You cannot just appreciate it. I'm sorry if this is blunt; I've never said this to anyone. But you just cannot appreciate it. Watch it again, if you will and notice the blood vessels and nerves in his forehead. No body...I repeat..no body can give you halfway the same performance he gave for that scene.

The emotions with Andrea's character cannot be explained. His old love is lost. He tolerates Urvasi's character for his children and career. He is not a good man until death comes knocking. He needs a soul mate. He finds a partner in her. Perfectly reasonable - or rather practical.

The story and the making is much more complicated than you perceive it. I don't expect that everyone would understand; looks like simple films are your taste. Stick to them please. And please don't use Lingaa and UV in the same sentence.

Anonymous said...

My first ever comment to any blogger..ever..because I had to. Because jokes and funny writing should not replace substance.


"அதாவது கமல் அருமையா படம் எடுத்துருக்கதாகவும், அவர் எடுத்தது நமக்கு தான் புரியாம படம் நல்லா இல்லைன்னும்" - You hit the nail right on the head. That is exactly right.

I will agree - Half of the movie was very bad. It was badly told. It wasnt funny. He wanted to bring two paradoxes together - while he is dying in real life, he is an immortal in reel life. Again, when real life is full of sadness, he wants to give happiness to his fans and go out with a bang. Unfortunately, it didnt resonate and the sequences were not funny.

However, to call the scene where Kamal comes to know about his daughter's existence a lengthy one and a bore, is typical of a Rajni fan. You cannot just appreciate it. I'm sorry if this is blunt; I've never said this to anyone. But you just cannot appreciate it. Watch it again, if you will and notice the blood vessels and nerves in his forehead. No body...I repeat..no body can give you halfway the same performance he gave for that scene.

The emotions with Andrea's character cannot be explained. His old love is lost. He tolerates Urvasi's character for his children and career. He is not a good man until death comes knocking. He needs a soul mate. He finds a partner in her. Perfectly reasonable - or rather practical.

The story and the making is much more complicated than you perceive it. I don't expect that everyone would understand; looks like simple films are your taste. Stick to them please. And please don't use Lingaa and UV in the same sentence.

முத்துசிவா said...


முதலில் தங்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். புரிகிறது புரியவில்லை என்பதும், நன்றாக இருக்கிறது நன்றாக இல்லை என்பதும் வேறு வேறு விஷயங்கள் என்பதை தாங்கள் முதலில் அறிக. படம் நன்றாக இல்லை என்று கூறினேன் என்றால் எனக்கு படம் புரியவில்லை என்று நீங்களாக கற்பனை செய்து கொள்கிறீர்கள். ஏன் என்று தெரியவில்லை. இல்லை உங்களுக்கு மட்டுமே புரிந்து கொள்ளும் திறன் இருக்கின்றது என்று நீங்களாக நினைத்துக்கொண்டால் அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது. இல்லை ரஜினி ரசிகர்கள் என்றால் அவர்களுக்கு எதுவும் புரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா எனவும் தெரியவில்லை.

நடிப்பு என்ற ஒரு விஷயம் மட்டுமே ஒரு படத்தை தூக்கி நிறுத்தி விடாது. நல்ல திரைக்கதையுடன் நடிப்பு சேரும்போதே அதன் வெளிப்பாடு நன்றாக இருக்கும். கமல் நன்றாக நடிக்கவில்லை என்று நான் எங்கும் கூற வில்லை. அந்தக் காட்சி நீளமாக உள்ளதை நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள். படத்தின் ஆரம்பத்திலேயே அப்படி ஒரு காட்சி வைப்பது நிச்சயம் ரசிகர்களை வெறுப்படையவே செய்யும். ஒரு வேளை நான் ரஜினி ரசிகன் அதனால் எனக்கு பிடிக்கவில்லை என்கிறீர்கள்? ஆனால் என்னுடன் படம் பார்த்த சுமார் 150 பேரும் ரஜினி ரசிகர்கள் தான் போலும். பிறகு கமல் ரசிகர்கள் ஒருவர் கூடவா திரையரங்கிற்கு வரவில்லை.

//
The emotions with Andrea's character cannot be explained. His old love is lost. He tolerates Urvasi's character for his children and career. He is not a good man until death comes knocking. He needs a soul mate. He finds a partner in her. Perfectly reasonable - or rather practical.//

காட்சிகளை தாங்கள் மெனக்கெட்டு விளக்கத் தேவையில்லை. மறுபடியும் உங்களுக்கு மட்டுமே புரிந்தது என நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.

//looks like simple films are your taste//

எந்த வகை படமாக இருந்தாலும், படம் முழுக்க என்னை engage செய்துவைக்கும் படங்களை எனக்கு பிடிக்கும். உத்தம வில்லன் அந்த வகை படம் அல்ல.

//please don't use Lingaa and UV in the same sentence. //

அதான் முன்னாலயே சொல்லிட்டேனே... இந்த கன்றாவியை லிங்காவுடன் கம்பேர் செய்யாதீர்கள் என்று.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...