Wednesday, May 1, 2013

சூது கவ்வும் - செம கவ்வு!!!!


Share/Bookmark
பொதுமக்கள் எல்லாம் கூடி நிக்கிற மார்க்கெட்டுல ஒரு போலீஸ் காரர வெரட்டி வெரட்டி வெட்டிக்கொல்லுற மாதிரியான ஒரு கொடூர வில்லன்... அவருக்கு எதிரா
யாரும் சாட்சி சொல்லக்கூட  பயப்படுற அளவு படு பயங்கரமான வில்லன். ஹீரோ சம்பந்தமே இல்லாத ஒரு இடத்துல நண்பர்களோட காமெடி பண்ணிகிட்டு ஹீரோயின கரெக்ட் பண்ணிகிட்டு திரியிறாரு. அப்போ வருது ஒரு ட்விஸ்டு... தெரிஞ்சோ தெரியாமலோ அந்த கொடூர வில்லனோட பாதையில ஹீரோ பூந்துடுறாரு. அப்புறம் என்ன... "ஏஏஏஏஏய்ய்ய்ய்... இன்னும் எண்ணி ஏழே நாள்ல உன் கதைய முடிச்சி உன்ன சாம்ராஜ்யத்தையே அழிச்சி தரை மட்டமாக்கல நா ஆம்பள இல்லடா" ன்னு வில்லன நேருக்கு நேரா நின்னு தொடைய தட்டி சவால் விடுறதோட இண்டர்வல்... அதுக்கப்புறம் அந்த கொடூரமான வில்லன தன்னுடைய புத்திசாலித்தனத்தால காமெடியனா மாத்தி அங்க இங்க ஓட விட்டு கரெக்டா அந்த ஏழாவது நாள் முடிய 10 செகண்ட் இருக்கும் போது போட்டுத் தள்ளுறாரு ஹீரோ.

இதே மாதிரி கதைகள்லயும் காட்சிங்கள்லயும்தான் கொஞ்ச நாளுக்கு முன்னாடி நம்மூர் சினிமாவே ஓடிகிட்டு இருந்துச்சி. அந்த மாதிரி சமயத்துல வித்யாசமான கதைக் களத்தோடவும் கதாப்பாத்திரங்களோடவும் உள்ள நுழைஞ்சி ஆட்சிய புடிச்சவங்க தான் சசிகுமார் குரூப். சலிச்சி போன கதைங்கள் பாத்துகிட்டு இருந்த நம்மாளுங்க சசிகுமார் சமுத்திரகனி கூட்டனிய அமோக ஆதரவு குடுத்து வரவேற்றாங்க.

அதே மாதிரிதான் இப்போ இன்னொரு புது குரூப்...நேற்று நாளைய இயக்குனர்களா வலம் வந்தவங்க  இன்று இன்றைய இயக்குனர்களா மாறி பட்டைய கிளப்ப ஆரம்பிச்சிருக்காங்க. நம்ம கலைஞர் டிவி வந்ததுலருந்து நடந்த உருப்படியான ஒரே ஒரு காரியம்னா இது ஒண்ணு தான். இரண்டு மூன்று சூப்பர் இயக்குனர்கள தமிழ்சினிமாவுக்கு கண்டுபுடிச்சி தந்துருக்கதுதான். போன வருஷம் கார்த்திக் சுப்புராஜோட பீட்சா படம் சைலண்ட்டா வந்து பட்டைய கெளப்புனிச்சி... அதே மாதிரி இந்த வருஷம் நலன் குமாரசாமிங்கறவரோட சூது கவ்வும்.

ஓப்பனா சொல்லனும்னா 2013 ல வந்த முதல் நல்ல படம்னு சொல்லலாம். ரெண்டு மாசத்துக்கு முன்னால வெளிவந்த இந்த படத்தோட டீசர் பார்த்ததிலிருந்தே படம் பாக்கனும்ங்கற ஆர்வம் தொத்திக்கிச்சி. குறிப்பா டீசர்ல வந்த அந்த மியூசிக்கும், விஜய் சேதுபதியோட கெட்டப்பும்... ட்ரெயிலர காமிச்சி நம்மள தியேட்டருக்கு இழுத்து உள்ள கும்மாங்குத்து குத்துன படங்கள் ஏராளம். ஆனா படம் பாத்தவங்கள எந்த விதத்துலயும் ஏமாற்றாத ஒரு படம் இது.

போன ஒரு வருஷத்துல விஜய் சேதுபதி நடிச்ச 3 படமுமே மெகா ஹிட்... நாலாவதா இந்த படத்தையும் சேத்துக்கலாம். படத்துக்கு முதுகெழும்பே விஜய் சேதுபதியோட வித்யாசமான கேரக்டரும், அவரோட நடிப்பும் தான். பட்டைய கெளப்பிருக்காரு. "இந்த வேலைக்கு முரட்டு தனமான முட்டாள் தனமும் குருட்டு  தனமான புத்திசாலித்தனமும் தேவை"ன்னு சொல்லுவாரு. அதேதான் அவரோட கேரக்டரும். முதல் பத்து நிமிஷத்த தவற படம் முழுசும் கைதட்டலும், சிரிப்பு சத்தமும் மட்டும் தான். ஒவ்வொரு  சீனும் சூப்பர். குறிப்பா இண்டர்வல் காட்சி செம சூப்பர்.

ராதாரவி, M.S.பாஸ்கர், ... இவங்க ரெண்டு பேரத் தவற மத்த எல்லாருமே குறும் பட நடிகர்கள் தான். ஆனா எல்லாருமே சூப்பரா நடிச்சிருக்காங்க. ஹீரோயினா வர்ற பாப்பாவோட (சஞ்சிதா ரெட்டி) கேரக்டரும் தாறு மாறு..  தில்லாலங்கடில சைடுல நின்னது இதுல மெயின் பிக்சராயிருக்கு. முதல்ல ஒரு காட்சில அது விஜய் சேதுபதியோட ஒயின்ஷாப்புல உக்கார்ந்துருக்கும். என்னடா கருமம்... பொண்ணுங்க ஒயின்ஷாப்புல இருக்க மாதிரி எடுத்துருக்காங்கன்னு நெனைச்சா அடுத்த காட்சிலயே நம்ம நெனப்பு தூள் தூளாயி..ச்ச "செமயான கேரக்டருல்ல" ன்னு  அசரவச்சிடுராங்க.

நளன் குமாரசாமி தாறு மாறு,,... முதல் படத்துலயே எல்லாருக்கும் புடிச்ச மாதிரி அருவை இல்லாத ஒரு முழுமையான பொழுதுபோக்கு படத்த  குடுத்ததுக்கு வாழ்த்துக்கள். அடுத்தடுத்து மத்தவிங்கள மாதிரி மொக்கை ஆயிடாம இதே மாதிரி நல்ல படங்கள எடுத்தா உசிதம். படத்துக்கு இன்னொரு பெரிய ப்ளஸ் BGM. சூப்பரா இருக்கு. ஆனா பாட்டு ஒண்ணும் வேலைக்கு ஆகல. கானா பாலா பாடுன ஒரு பாட்டு மட்டும் தேவையில்லாத மாதிரியும் கொஞ்சம் அருக்குற மாதிரியும் இருக்கு.

படத்தோட கதையையோ காட்சிங்களையோ சொன்னா படம் பாக்குறப்போ கொஞ்சம் சுவாரஸ்யம் கம்மி ஆயிடும். அதான் கதையையோ கேரக்டரயோ சொல்லாம பொதுவாவே ரம்பத்த போட்டுகிட்டு  இருக்கேன். அதனால இதுக்கு மேல என்னால இழுக்க முடியல.. கண்டிப்பா பாருங்க. செம படம்.


என்னது? நாளைய இயக்குனர்கள்லருந்து வந்தவங்க படம் எடுத்த மாதிரி மானாட மயிலாட குருப்புலருந்து சினிமாவுக்கு டான்ஸ் ஆட வர்றாங்களா?

டேய் அந்த சுட் தண்ணிய எடுடா.....

குறிப்பு:


சில நண்பர்கள் நா வேணும்னே எல்லா படத்தையும் நொள்ள சொல்றேன்னும் எந்த படத்தையுமே நல்லா இருக்குன்னு சொல்ல மாட்டேங்குறேன்னும் சொல்றாங்க.. ஏம்பா படம் நல்லா இருந்தா தானே நல்லா இருக்குன்னு சொல்ல முடியும். ஓப்பனா சொல்றேங்க... இந்த படத்துக்கு முன்னால நா கடைசியா ஓரளவு satisfied ah பாத்துட்டு வந்த படம் துப்பாக்கி தான். அது வந்து ஆறு மாசம் ஆச்சி..  அதுக்கப்புறம் வந்த படம் அனைத்தும் கப்பி...  நா என்ன IPL umpire ah? ஒரு தடவ LBW குடுக்கலன்னா அடுத்த தடவ கால்ல பட்டோனயே அவுட் குடுக்குறதுக்கு? எத்தனை தடவன்னாலும் நல்லா இல்லைன்னா நல்லா இல்லை தான்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...