Friday, December 18, 2009

நா அடிச்சா தாங்க மாட்ட ..


Share/Bookmark

இந்த பதிப்பில் வரும் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் யாவும் உண்மையே. ஆனா யார் மனதையும் புண்படுத்துவற்காக அல்ல.

இடம்: விஜய் வீடு.
நாள் : வேட்டைக்காரன் ரிலீஸ் ஆனா மூன்றாவது நாள்.

விஜய்: என்னப்பா இப்புடி ஆயிடுச்சி. போன வாரம் தான் சன் டிவி ல "வருகிறது வேட்டைக்காரன்" ன்னு போட்டாங்க. இந்தவாரம் "இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, திரைக்கு வந்து சில நாட்களே ஆனா" ன்னு போடா ஆரம்பிச்சிட்டாங்க. ரொம்ப கஷ்டமா இருக்குப்பா...

எஸ்..சந்திரசேகர்: ஆமாண்டா மகனே... படம் வர்றதுக்கு முன்னாடி டிரைலர் மட்டும் 25 நாள் ஓடுனிச்சி. ஆனா படம் நாலு நாள் கூட தாக்கு புடிக்க மாட்டேங்குதேப்பா...

விஜய்: ஆமாப்பா.. என்னோட அடுத்த படமாவது ஒரு வாரம் ஓடுற அளவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி படமா இருக்கணும்.

எஸ்..சி: அதுக்கு தான் உன்னோட அடுத்த படத்த நானே தயாரிச்சி டைரக்ட் பண்ணலாமுன்னு இருக்கேன்.

விஜய்: என்பா.. என் படம் நாலு நாள் ஓடுறது உனக்கு பொறுக்கலையா. நீ மூடிக்கிட்டு, எல்லா ஆடியோ ரிலீஸ் பங்க்ஷன் லயும் " என் மகன் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்" ன்னு பேசுறதோட நிறுத்திக்க.

எஸ்..சி: நானும் நாலு வருஷமா இத தான் எல்லா மேடயிலையும் சொல்லிக்கிட்டிருக்கேன். எல்லாரும் இத கேட்டுட்டு ஓரமா போய் நின்னு, கெக்க புக்க கெக்க புக்க ன்னு சிரிச்சிட்டு " போங்க சார்.. காமெடி பண்ணாதிங்க" ன்னு சொல்லிட்டு போய்டுரானுங்க.

விஜய்: அட விடுப்ப. இவிங்க எப்பவுமே இப்புடி தான். இனிமே நீ " விஜய் தான் அடுத்த எம்.ஜி.ஆர்" ன்னு சொல்லிப்பாரு என்ன reaction ன்னு பாப்போம்.

எஸ்..சி: அப்ப நம்ம வீட்டுக்கு permanent ah ஒரு ஆம்புலன்ஸ் வாங்கிடுப்பா. எனக்கு அடிக்கடி தேவைப்படும். ஆனா எது பேசுறதா இருந்தாலும் நானே பேசிக்கிறேன். நீ இனிமே பிரஸ் மீட்டுக்கு ஏதும் போய் பேசிடாத. திருச்சி ல பேசும்போது வெறிநாய் கொலைக்கிற மாதிரி விட்டியே ஒரு எபக்ட்டு.... எல்லாரும் எண்ட வந்து " என்ன சார் உங்க பையன நாய் கடிச்சிருச்சா?" ன்னு கேக்குராயிங்க.

விஜய்: சரி விடுப்பா... நம்ம சண்டைய அப்புறம் வச்சிக்குவோம்.. என்னோட அடுத்த படத்துக்கு கதை சொல்றதுக்காக வெளில டைரக்டருங்க எல்லாம் wait பண்ணிட்டு இருக்காங்க. வரச்சொல்லு.

முதல்ல ஒருத்தரு வர்றாரு.

டைரக்டர்: சார், இந்த படத்துல கதை தான் சார் ஹீரோ.

விஜய்: நிறுத்து. கதைங்கற வார்த்தைய கேட்டாலே எனக்கு அலர்ஜியா இருக்கு.
அதுக்கு தமிழ் நாட்டுல வேற ஆளுங்க இருக்காங்க. போயிட்டு அடுத்த ஆள வர சொல்லு. நம்மள பத்தி தெரியாம வந்துட்டிங்க போலருக்கு.

அடுத்தவர் வர்றாரு.

டைரக்டர் 2: வணக்கம் சார்.

விஜய்: வணக்கம் லாம் இருக்கட்டும். ஆரம்பி .

டைரக்டர் 2: சார் இந்த படத்துல நீங்க இது வரைக்கும் பண்ணாத ஒரு புது கேரக்டர் சார். படத்துல நீங்க ரிகஷா ஓட்டுறீங்க. படத்தோட பேரு "மாட்டுக்காரன்".

விஜய்: யோவ். உனக்கு அறிவு இருக்கா.. படத்துக்கு மாட்டுக்கரன்னு பேரு வச்சிட்டு ரிக்ஷா ஓட்டறேன்னு சொல்ற.

டைரக்டர் 2: ஏன் சார், நீங்க மட்டும் கில்லி ன்னு பேர் வச்சிட்டு கபடி விளையாண்டிங்க. போக்கிரின்னு பேர் வச்சிட்டு போலீஸ் ah நடிச்சீங்க. வில்லு ன்னு பேர் வச்சிட்டு படம் full ah துப்பாக்கியாலேயே சுட்டுகிட்டு இருந்தீங்க. வேட்டைக்கரன்னு பேர் வச்சிக்கிட்டு ஆட்டோ ஒட்டுநீங்க. அப்பல்லாம் உங்க அறிவு எங்க சார் போச்சு?

விஜய்: நீ ரொம்ப பேசுற. உனக்கு சான்ஸ் கெடையாது. கெளம்பு. அடுத்தவன வரச்சொல்லு. அவனாவது எனக்கு புடிச்ச மாதிரி கதை சொல்றானா பாக்கலாம்.

அடுத்தவரு உள்ள வர்றாரு.

டைரக்டர் 3: சார் இந்த படத்துல மூணு வில்லன் சார். நாலு fight சார். அஞ்சி குத்து பாட்டு சார். அஜித்த தாக்குற மாதிரி ஒரு ஆறு பஞ்ச் டயலாக் சார். ஒரு சீன்ல ரஜினி மாதிரி டான்ஸ் ஆடுறீங்க சார். ஹீரோயின் ah ஆந்திர லிருந்து ஏறக்குறோம் சார்.

விஜய: super.. excellent.. fantastic.. bale... நாளைக்கே பூஜா போட்டு படத்த ஆரம்பிக்கிறோம். அப்புறம் படத்தோட டைட்டில் நெருப்பு மாதிரி இருக்கணும்.

டைரக்டர் 3: அப்ப படத்துக்கு "நெருப்பு" ன்னே பேர் வச்சிக்கலாம் சார்.

விஜய்: சூப்பர். உங்களுக்கு பேரரசு மாதிரி பெரிய எதிர்காலம் இருக்கு.
எஸ்..சி: என்பா அப்ப கதை?

விஜய்: அத படம் எடுக்கும் பொது டைம் இருந்த யோசிச்சிக்கலாம் பா. இந்த நெருப்பு அடுத்த வேட்டைக்கு கெளம்பிட்டான்.

Thursday, December 3, 2009

ஏறி வாய்யா... ஏரி வாயா..


Share/Bookmark
சென்னையில பஸ்ல போயிட்டு வர்றவங்களுக்கு கீழ்க்கண்ட வாசகங்களெல்லாம் ஒண்ணும் புதுசா இருக்காது.

"காலையிலேயே வந்துட்டான் சாவு கிராக்கி 100 ரூபாய தூக்கிகிட்டு.. எறங்கி அடுத்த பஸ்ல வா.."

" படியில நின்னு பல்ல காட்டிக்கிட்டு நிக்காம உள்ளா வாப்பா..... எதுத்தாப்புல வர்றவன் தலைய மட்டும் தனியா கொண்டு போய்ட போறான்.."

"ஏன்யா.... கம்பிய கட்டி புடிச்சிகிட்டு இங்கயே நிக்கிறியே .. அது என்ன உம் பொண்டாட்டியா... அது ஒன்னும் கீழ விழுந்துடாது விட்டுட்டு உள்ள போ..."

"என்பா கிண்டி ஒரு டிக்கெட் குடு " ன்னு கேக்குற பெரியவர்ட "கிண்டியெல்லாம் டிக்கெட் தர முடியாது... சும்மாதான் தருவேன். வேணும்னா வாங்கு இல்லன்னா எறங்கு.."

இப்புடி எல்லாருக்கும் பஞ்ச் தர்றவங்கதான் நம்ம சிட்டி பஸ் கண்டக்டருங்க. இப்புடி எல்லார்கிட்டயும் எரிஞ்சி விழற இவங்க சில பேர பாத்தா மட்டும் பொட்டி பாம்பா அடங்கிடுவாங்க. அவங்க வேற யாரும் இல்ல, ஸ்கூல் படிக்கிற பசங்க தான்.

அவிங்க வண்டில ஏறுனா டிக்கெட்டும் எடுக்க மாட்டாயிங்க.. வழியையும் விட மாட்டாயிங்க. கையில வச்சிருக்கிற 25 கிலோ school bag க்கு லக்கேஜும் வாங்க மாட்டயிங்க.. இதுனாலேயே நம்ம கண்டக்டர்களுக்கு அவியிங்கள பாத்தாலே ஒரு கொல வெறி...

அதுலயும் அந்த பசங்களுக்கு கண்டக்டர கலாயிக்கிரதுல அப்புடி ஒரு சந்தோசம்... நான் பாத்து ரசிச்ச சில புஞ்ச்சுகள் இதோ..

அன்னிக்கு
ஒருநாள் அப்புடித்தான் கண்டக்டரு
" டிக்கெட்... டிக்கெட்... டிக்கெட் வாங்கு... " ன்னுட்டே வந்தாரு...

அங்க இருந்த ஸ்கூல் பையன் ஒருத்தன் "அண்ணே... பாஸ்" ன்னு பஸ் பாச எடுத்து காமிச்சான்...

உடனே பக்கதுல இருந்தவன்.. "அண்ணே ... நா பெயில் " ன்னு ஸ்கூல் rank card ah எடுத்து காமிச்சிட்டான்..

"ஆமாண்டா... இப்புடியே பேச்சு படிச்சிகிட்டே இரு உருப்புட்டுரலாம்..." ன்னு முனுமுனுத்துகிட்டே போன அவர பாக்க கொஞ்சம் பாவமா தான் இருந்துச்சி..

அப்புறம் ஒருநாள் " ஏன்பா .. முன்னாடி ஏதாவது டிக்கெட் இருக்கா ..." ன்னு கேட்டாரு வழக்கமான slang ல.

" இங்க ஒரு சூப்பர் டிக்கெட் இருக்குண்ணே... ஆனா ரொம்ப நேரமா மொரச்சிகிட்டே இருக்கு.. இத வந்து கொஞ்சம் என்னனு கேளுங்கண்ணே... " ன்னான் முன்னாடி foot borard ல நின்ன ஒருத்தன்.

அவன் சொன்னது கேக்காத மாதிரியே, bag la வச்சிருந்த register ah எடுத்து கணக்கு எழுத ஆரம்பிச்சிட்டாரு நம்மாளு.

இதுகூட பரவால... அன்னிக்கு வேப்பேரி பஸ் ஸ்டாப் ல பஸ் வந்து நின்னுச்சி... கீழ நெறய பசங்க bag மாட்டிகிட்டு நின்னுட்டிருந்தாங்க... திடு திடு ன்னு ஒரு பையன் மட்டும் படில ஏறி கண்டக்டர் கிட்ட

" அண்ணே இந்த பஸ் மின்னல் நகர் போகுமாண்ணே? ன்னு கேட்டான்.

"போகும்.. போகும்... எல்லாரும் சீக்ரமா இருங்க" ன்னாரு அவரு.

"ஆனா நாங்கதான் அங்க போகலியே... நீங்க கெளம்புங்க" ன்னு சொல்லிட்டு இறங்கிட்டன்.

அசிங்கப்பட்டன் ஆட்டோக்காரன் ங்குற மாதிரி ஆயிடுச்சி அந்த கண்டக்டரோட நெலம...

"புள்ளைய பெக்க சொன்ன குட்டி சாத்தான பெத்து விட்டுருக்கயிங்க.." ன்னு அந்த பையனோட அப்பா அம்மாவ திட்டிட்டு விசிலடிச்சாறு.

Saturday, October 31, 2009

ஆதவன்


Share/Bookmark
"ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை "

மறைந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த பதிப்பு. காட்டுத்தீயை விட வேகமாக பரவும் வதந்தியால் தற்போது அவதிப்படுகிறார் இந்த ஆதவன். வழக்கமாக அஜித் , விஜய் படங்கள் வெளியாகும் போது கிளப்பி விடப்படும் புரளிகளைப்போல், இப்போது சூர்யா சிக்கியிருப்பது யாரால் என்பது புரியாத புதிர். ஒரு வேளை தயாரிப்பாளரின் எதிரிகளா? ஹ்ம்ம்... அது நமக்கு வேண்டாத வேலை .

இந்த ஆதவனை பற்றி தற்போது நம்மூரில் கூறப்படுவன என்ன தெரியுமா?

" கந்தசாமிய விட கேவலமா இருக்கு"

"முதல் பாதி பார்க்கலாம்... இரண்டாம் பாதி அறுவை"

"வடிவேலுவை தவிர படத்தில் வேறு ஒன்றும் இல்லை"

என் தாய் மலடுன்னு சொன்னானம் ஒருத்தன். அது போலத்தான் இந்த கருத்துக்கள். திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களை திரும்ப திரும்ப பார்த்து 200 நாட்கள் ஓடவைத்த நம் மக்கள் இந்த ஆதவனில் என்ன குறை கண்டார்கள் என தெரியவில்லை. ஒருவேளை கேவலமான படங்களை தொடர்ந்து பார்த்து, எது நல்ல படம் எது கேவலமான படம் என பகுத்தறியும் தன்மையை இழந்துவிட்டர்களா?

படத்தில் வடிவேலுவை தவிர வேறு ஒன்றும் இல்லை என சொல்பவர்களுக்கு சூர்யா ஆக்க்ஷன் காட்சிகளில் பூந்து விளையாடியிருப்பது தெரியவில்லையா? தற்போது தமிழ் சினிமாவில் காணப்படும் மற்ற ஆக்க்ஷன் ஹீரோக்களை போல வெட்டி பன்ச் டயலாக்குகளை பேசாமல் தன் உடற்கட்டிலும், வசன உச்சரிப்பிலும், முக பாவனைகளிலும் அதை வெளிக்காட்டியிருப்பது நம் மக்களுக்கு ஏனோ பிடிக்கவில்லை...

இந்த படத்தை பற்றி கூறப்படும் மற்றுமொரு கருத்து "கதை, பலமுறை பார்த்த பழைய கதை" என்பது. ஆமாம். கண்டிப்பாக. தமிழ் சினிமா தோன்றிய காலத்திலிருந்து ஆயிரக்கணக்கில் படங்கள் வெளிவந்தது விட்டன... எனவே நமக்கு கதைக்கு கொஞ்சம் பஞ்சம் தான். ஆனால் திரைக்கதைக்கு பஞ்சம் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் காண வேண்டிய ஒரு சிறந்த மசாலா படத்தை அளித்திருக்கின்றனர். ஆரம்ப காட்சியிலிருந்து இறுதிவரை சற்றும் தொய்வில்லாத திரைக்கதை. சண்டை காட்சிகள் கேசினோ ராயலின் இறக்குமதி. அதே தரத்துடன். வடிவேலு சிறு இடைவேளைக்கு பின் மீண்டும் நம் பழைய வெடிவேலுவாக.. பிண்ணியிருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் தாலாட்டு. பின்னணி இசையில் ஆங்கில படத்துக்கு இணையான தரம்... மிரட்டியிருக்கிறார்.

முதலில் படத்தை பார்த்து கருத்து சொல்பவர்கள் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். எதிர்மறை கருத்துக்கை உடையவர்களை விட கருத்து சொல்ல தெரியாதவர்களாலேயே இந்த குழப்பம். ஏனெனில் நம்மூரில் படம் பார்பவர்களை விட, பார்த்தவர்களிடம் கதை கேட்டு ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் அதிகம்.

என்னிடம் கூறிய அனைவரும் இப்படத்தை பற்றி அவ்வளவு நன்றாக கூறவில்லை. ஒருவன் மட்டும் "சூப்பரா இருக்கு மச்சி" என்றான். அவனுக்காக பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது.

உங்களுக்கு அந்த ஒருவன் நானாக இருந்தால் மகிழ்ச்சி.

என்ன ஒண்ணு நயன்தாராவ க்ளோஸ் அப்புல காட்டுன ரெண்டு ஷாட்ல நா கொஞ்சம் பயந்துட்டேன்... ஆங்... எனக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும்..


நான் அடித்து கூறுகிறேன் இந்த 2009 இல் வெளிவந்த அனைத்து திரைப்படங்களிலும் முந்திக்கொண்டு முதலில் நிற்பவன் இந்த ஆதவன்.

எதிர்வினைகளை எதிர்பார்கிறேன்.

இப்படிக்கு,
தமிழ் சினிமா ரசிகன்.

Tuesday, September 22, 2009

குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்


Share/Bookmark
வெடி குண்டு ன்னு சொன்னா யாருக்கு வேணா பயமா இருக்கும். ஆனா நம்ம தமிழ் நாட்டு காரங்களுக்கு மட்டும் பயமாவே இருக்காது. ஏன்னா நம்ம தமிழ் சினிமா மக்கள் கிட்ட வெடிகுண்ட பத்தி அவ்வளவு நல்ல விதமா சொல்லிருக்காங்க. பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் குண்டு வெடிச்ச தான் மூஞ்சயே காட்டுவாங்க. அதுலையும் நம்ம கேப்டன் விஜயகாந்த் படம்னா அவரோட intro scene ku atleast நாலு குண்டாவது வெடிக்கனும்.அப்ப தான் அவரு வருவாரு.

வில்லன் வீசுன குண்ட அப்புடியே கவ்வி புடிச்சி திரும்ப அவனுக்கே வீசுறது, அப்புறம் வெடிகுண்ட வச்சி FOOT BALL ஆடுறது (ஜெயம் ரவி) , கூலிங் கிளாஸ் கலட்டுனா குண்டு வேடிக்குறது ( வில்லு விஜய்) மாதிரியான சூப்பர் சீன் எல்லாம் வக்கிரத்துக்கு நம்மாள மட்டும் தான் முடியும்.

அதுலயும் கிளைமாக்ஸ் ல வர்ற வெடிகுண்டு காட்சிகள் தான் உச்ச கட்ட காமெடி.

வில்லன் ஏதாவது ஒரு பொது இடத்துல bomb வச்சிருவாரு. அதிகமா இதுவரைக்கும் பாம் வைக்கப்பட்ட இடம் hospital தான். அதிகமா வச்சவரு நம்ம ரகுவரன் தான். வச்சிட்டு பேசாம இல்லாம ஹீரோவுக்கு அத போன் பண்ணி சொல்லிடுவாரு.

"அந்த ஹாஸ்பிடல் ல bomb இருக்கு. முடிஞ்சா எடுத்து பாரு..... ஹா ஹா..."

அப்பறம் என்ன.... ஹீரோ வுக்கு தெரிஞ்சா எந்த bomb வெடிக்கும்?. அடுத்த ரெண்டாவது நிமிஷத்துல ஹீரோ அந்த ஹாஸ்பிடல் ல இருப்பாரு. ஹாஸ்பிடல் லருந்து எல்லாரும் வெளில ஓடி வருவாங்க... இவரு உள்ள போவாரு.... அந்த சமயம் ஒரு பெரியவர் கால் தடுக்கி கீழ விழுவாறு... அவர வேற ஹீரோ தூக்கி வெளில கொண்டு பொய் விட்டுட்டு திரும்ப bomb ah தேடுவாரு. கடைசில
"டிக் டிக் ....டிக் டிக்..." bomb ah கண்டுபுடிச்சிருவாறு...

அது ஒரு digital display ல டைம் ஓடிக்கிட்டிருக்கும்...

"பாம் ச்குவார்டு கூட இருப்பாங்க... " அவங்க அந்த பாம பாத்த உடனே சொல்லிடுவாங்க....
" Very Powerful RDX.... இந்த bomb ah ரொம்ப complicated ah, diffuse பண்ண முடியாத படி டிசைன் பண்ணிருக்காங்க... எங்களோட service ல இப்புடி ஒரு பவர்புல் பாம பாத்ததே கிடையாது" ன்னு சொல்லிட்டு அவங்களும் கெளம்பிடுவாங்க... இப்ப நம்மாளு மட்டும் தனியா...

"இன்னும் 30 செகண்ட் தான் இருக்கு.... "

அந்த பாம் ல மஞ்ச கலர், சிவப்பு கலர், நீல கலர் ல மூணு வொயர் இருக்கும். அதுல எதாவது ஒயர கட் பண்ணா bomb வெடிக்காது... எத கட் பண்றது...

சிகப்பா... நீலமா..
நீலமா... சிகப்பா... 30,29,28...... 15,14, 13,.....

ஹீரோ
வின் முகத்தில் வியர்வை... "பதட்டமா இருக்காராம்..." ஆனா படம் பாக்குற யாருக்கும் பதட்டமா இருக்காது.... ஏன்னா இதுவரைக்கும் எந்த படத்துலயும் ஹீரோ வொயர கட் பண்ணும்போது பாம் வெடிச்ததே இல்ல..

கடைசியா bomb வெடிக்க ஒரு செகண்ட் இருக்கும் போது எதாவது ஒரு wire ah கட் பண்ணி bomb ah வெடிக்க விடாம பண்ணிடுவாரு...வில்லன் கஷ்டப்பட்டு செஞ்ச bomb ah, ஹீரோ சிம்பிளா ஒரு கட்டிங் பிளேயர வச்சி diffuse பண்ணிடுவாரு. இதுமாதிரி நம்ம ஆகஷன் கிங் அர்ஜுன் ஒரு அம்பது அறுபது பாம எடுத்துருப்பறு....

இது கூட பரவால... சில படங்கள்ல ஹீரோ வொயர கட் பண்ணாம, அந்த பாம அப்புடியே அலேக்கா தூக்கிட்டு பொய் மெரீனா பீச் ல போட்டுட்டு வந்துடுவாரு... அது எப்புடின்னு தெரியல தாம்பரத்துல குண்டு வச்சா கூட அடுத்த ரெண்டாவது நிமிஷத்துல ஓடி வந்து மெரீனா பீச் ல தூக்கி போட்டுருவாங்க.. மொத்ததுல வில்லன் வக்கிர குண்டு வெடி குண்டு இல்ல ... வெருங்குண்டு...

வெடி குண்ட கண்டுபுடிச்சவன் மட்டும் நம்ம தமிழ் சினிமாவ பாத்தான்... அந்த எடத்த்துலையே துடி துடிச்சி செத்துடுவான்.

Wednesday, August 5, 2009

ஹலோ.... யாரு தன்ராஜா...


Share/Bookmark
கல்லூரி வாழ்கைல எவ்ளோதான் பொழுதுபோக்கு இருந்தாலும் அடுத்தவன வம்பிழுத்து அவன கலாய்கிறதுல இருக்க சொகமே தனிதான்.அதுலயும் எதாவது ஒரு தெரியாத நம்பருக்கு call பண்ணி அவங்கள சுத்த விடுறதுல தான் என்ன ஒரு ஆனந்தம்.இதுல சில நேரம் இடம்தெரியாம வம்பிழுத்து வாயில புன்னோட போறதும் உண்டு.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி BPL sim கார்டு ( தற்பொழுது vodafone) காலேஜ் வாசல்ல பத்து ரூபாய்க்கு மூணு னு கூட இல்லாம, பிள்ளயார் கோயில் ல உண்ட கட்டி தர்ற மாதிரி எல்லாரையும் வரிசையா நிக்க வச்சி free யாவே அள்ளி வழங்குனாய்ங்க. எந்த proof um தேவையில்ல. College ID card ah காட்டினாலே போதும். மொபைல் இல்லாதவன் கூட பின்னாடி யூஸ் ஆகுமேன்னு ஆளுக்கொண்ணு, அப்புறம் அவனோட "ஆளுக்கு" ஒன்னு னு வாங்கி வச்சிகிட்டானுங்க . இதுல இன்னொரு நல்ல விஷயம் என்னன்னா நைட் 10 மணியிலேர்ந்து காலயில பத்து மணி வரைக்கும் BPL to BPL free.

இதுல எப்புடியோ ஒரு சிம் கார்டு எங்க ரூம் கு வந்துடிச்சி. அது எவன் பேர்ல இருக்குன்னு கூட எங்களுக்கு தெரியாது. ஒரு பொருள் நம்மகிட்ட வந்துட்டாலே அப்புறம் அது நம்மோடது மாதிரி தான. அதுனால அந்த சிம் கார்டுக்கு நாங்களே அடைக்கலம் குடுத்து வச்சிருந்தோம். பத்து மணி வரைக்கும் எவனுக்காவது sms அனுப்பி வெளாடுவோம். இதுல சில நேரம் எங்க காலேஜ் பசங்களுக்கே தெரியாம அனுப்பிடுவோம். ஆனா அவன் எங்க காலேஜ் பையன்தான்னு மொத reply லயே தெரியும்.

"Hi" அனுப்புனா கொஞ்சம் கூட யோசிக்காம
"எவ புருசன்டா நீ?" னு reply பண்ணுவானுங்க. உடனே இவன் நம்ம பய ன்னு கண்டுபுடிச்சிடலாம்.

பத்து மணி வரைக்கும் ஒழுங்கா இருந்துட்டு அதுக்கப்றம் வேலைய ஆரம்பிச்சிடுவோம். குத்து மதிப்பா எதாவது ஒரு BPL நம்பர் டயல் பண்ணா எவனாவது எடுப்பான். அவன்ட சம்பந்தம் இல்லாம எதாவது பேசுவோம். சில பேர் கடுப்பயிடுவானுங்க. சில பேர் சிரிச்சிகிட்டே வச்சிடுவானுங்க.

ஒரு நாள் கரக்டா ஒரு 11.30 மணி இருக்கும். எதோ ஒரு நம்பெருக்கு கால் பண்ணேன். call ah attend பண்ண உடனே
" மாப்ள ரிசல்ட் வந்துடுச்சி... உனக்கு நாலு பேப்பர் அவுட்டு" ன்னு கொஞ்சம் பரபரப்பா சொன்னேன்.. கொஞ்ச நேரம் பதிலே வரல. அப்புறம் முதல் மரியாதையை சிவாஜி ஸ்டைல் ல

" தம்பி...... யாருப்பா நீ..... என்ன பிரச்சன உனக்கு..." ன்னு பதில் வந்துச்சி

"டேய் நீ பெயில் ஆயிட்டன்னு சொல்றேன் ... வாய்ஸ் மாத்தி mimicry பண்றியாடா நாயே..." ன்னேன்.
"டேய் யார்டா நீ....நாயே... நாயே...வந்தேன்னா சங்க கடிச்சிடுவேன்... ஒழுங்கா phone ah வச்சிரு" ன்னு சொன்னான் கொஞ்சம் கரகரப்பான்குரலில்.

"இப்புடி அன்பா சொன்னா வச்சிட்டு போறேன்.... அடபோங்கண்ணே....எல்லாத்துக்கும் கோவபடுவாறு" ன்னு சொல்லிட்டு வச்சிட்டேன்.

இன்னொரு நாள் இதே மாதிரி இன்னொரு நம்பருக்கு கால் பண்ணி
"மச்சி... ரொம்ப அவசரம்.... உடனே ஒரு ஐயாயிரம் ரூபாய எடுத்துகிட்டு கோத்தகிரி பெண்டுக்கு வந்துரு... " ன்னேன். அவன் எந்த பதட்டமும் இல்லாம
"சரிடா மாப்ள.... ஐயாயிரம் போதுமா?" ன்னு கேட்டான். "இத மொதல்ல கொண்டு வாடா" ன்னேன்.
"டேய் நாயே! நாலு பேர்ட நாங்க பண்ற வேலைய எங்ககிட்டயே நீ பன்றியா? வந்தேன்னா பிச்சிபுடுவேன்.எங்கருந்துடா பேசுற?" ன்னான்.

"அண்ணா...அவ்வளவு செரமம் எல்லாம் உங்களுக்கு வேண்டாம்னா... நானே பிச்சிக்கிறேண்ணா ... கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்றேன்னா... ஒலகத்துலையே ரெண்டே அறிவாளிங்கண்ணா .... ஒண்ணு நா..."

"இன்னொன்னு யாருடா?"
"அதுவும் நாந்தாங்கண்ணா... " ன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டேன்.

பொதுவா ஆப்பு கண்ணுக்கு தெரியாதுன்னு சொல்லுவாங்க.... அதேமாதிரிதான் எனக்கும் மொதல்ல ஏதும் தெரியல... sim card நம்ம பேர்ல இல்ல... என்ன பண்ணிடுவாங்க ன்னு நெனச்சிட்டு இருந்தேன்.

வழக்கம் போல ஒருத்தனுக்கு நைட் கால் பண்ணி எக்கச்சக்கத்துக்கு பேசுனோம். அவனும் ஒரு கல்லூரி மாணவன் என்பது பேச்சிலேயே தெரிஞ்சுது. அவனும் கொஞ்சம் form ல இருந்துருப்பான் போல... கடைசில கடுப்பாயி கட் பண்ணிட்டன்... வழக்கமா நாங்க கால் பண்ணி பேசுன எவனும் எங்களுக்கு திரும்ப கால் பண்ண மாட்டனுங்க... அன்னிக்கு கொங்சம் வித்யாசமா அந்த நம்பர்ல இருந்து மறுநாள் திரும்ப கால் வந்துச்சி...
attend பண்ணி "சொல்லுடா மாப்ள.. எப்புடி இருக்க " ன்னேன்.
அதுக்கு அவன் "நா நல்லாருக்கேன் மச்சி... ஆமா ராஜா ங்குறது யாருடா.." ன்னு கேட்டான்.
"பக்கத்து ரூம் ல ஒரு வெட்டி முண்டம் அந்த பேர்ல இருக்கான்... ஆமா நீ ஏன் கேக்குற.. "
"இல்ல உன்னோட நம்பர் ah trace பண்ணிட்டேன். அது அந்த பேர்ல தான் இருக்கு... அதன் கேட்டேன்... " னு அசால்டா சொன்னான்...
"எப்புடி trace பண்ண?" னு கேட்டேன்.

"மவனே யார்ட உன் வேலைய காட்டுற ... உன்னையெல்லாம் ஓட விட்ட தண்டா சரியாவரும்... இன்னும் கொஞ்ச நேரத்துல உன்ன தூக்குறேண்டா... " ன்னு சொன்னான்.

"சாரி சார்.அப்புடியெல்லாம் பண்ணிடாதீங்க... நாங்க சும்மா வெளையாட்டுக்கு தான் பேசுனோம் ...."ன்னேன்.

"என்னடா வெளையாட்டு.. எத்தன பேர்டா இப்புடி கெளம்பி இருக்கீங்க.... காரைக்குடி காலேஜ் ல தானடா படிக்கிறீங்க... உன்ன எல்லாம் போலீஸ் ல புடிச்சி குடுக்கனும்டா..." நேரம் ஆக ஆக பேச்சுல கொலைவெறி அதிகமாயிடுச்சி ... எனக்கு பீதி அதிகமாயிடுச்சி.... lite ah வியர்வை வேற...

" சாரி சார்.தெரியாம பண்ணிட்டேன்... நீங்க யாரு சார் ?" ன்னு கேட்டேன்...

" நா காரைக்குடி police station லருந்து பேசுறேன்னு" அவன் சொன்ன அதே நேரம் கீழிருந்து என் நண்பன் என்னை சத்தம் போட்டு கூப்பிட்டான்.. அவனுடைய குரலை phone இல் என்னால் கேட்க முடிந்தது....
"ஆஹா... நம்ம ஹாஸ்டல் ல இருந்து தான் எவனோ நம்மள கலாய்கிரானா.... ச்ச... இது தெரியாம ஓவரா பம்பிட்டோமே " ன்னு நெனச்சுகிட்டு
"சார் நீங்க எங்கருந்து பேசுறீங்க?"
"அதான் சொன்னேனேடா... காரைக்குடி police station லருந்து பேசுறேன்..."

"சார் நீங்க ஒன்னு பண்ணுங்க... நீங்க இருக்குற எடத்த விட்டு நேர எழுந்து வந்து நொட்டாங்கை பக்கம் திரும்பி கொஞ்ச தூரம் போநீங்கன்ன... அங்க ஒரு பஸ் ஸ்டாப் இருக்கும்... அதுல் ஒரு தீஞ்ச மண்ட உக்கார்ந்து இருப்பன்.. அவன்ட பொய் சொல்லுங்க அவன் நம்புவான்" ன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டேன்.

"நம்ம கொஞ்சம் ஓவரா போறோமோ... போவோம்..."ன்னு நெனச்சிக்கிட்டு திரும்புனா, ஒருத்தன் ரொம்ப நேரமா என்ன watch பண்ணிக்கிட்டு இருந்திருப்பான் போல... அவன் மெதுவா என் பக்கத்துல வந்து

" த்து... இதெல்லாம் ஒரு பொழப்பு..."ன்னு சொல்லிட்டு போய்ட்டான்...

Monday, July 27, 2009

மோதி விளையாடு


Share/Bookmark
சரண் இயக்கத்தில் வினய் நடிப்பில் வெளிவந்திருக்கும் புதிய திரைப்படம். ஒரு வலுவில்லாத கதைக்கு திரைக்கதை எழுத முடியாமல் எழுதி, தோற்றுபோய் இருக்கிறார் சரண். படத்தின் அனைத்து காட்சிகளுமே வெளிநாடுகளில் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. காட்சி பதிவு (மட்டும்)அருமை.

.
வழக்கமாக நல்ல திரைக்கதை எழுதி வசனங்களில் மட்டும் கோட்டை விடும் சரண் இந்த முறை திரைக்கதையிலேயே கோட்டை விட்டிருக்கிறார். ஒரே ஒரு எதிர்பாராத திருப்பத்தை தவற படத்தில் சொல்லிக்கொள்வது போல வேறு எதுவும் இல்லை. முதல் பாதியில் சந்தானம் , மயில் சாமி ஆகியோர் இருந்தும் கூட அவர்களை அதிகம் நம்பாமல் காஜல் அகர்வாலை வைத்து கதையை (?) நகர்த்தியிருக்கிறார்கள். எங்களால முடியல....

இடைவேளை
வரை, ஏன்டா வந்தோம் னு நினைக்கும் போது கதையில் ஒரு திருப்பம். சரி second half எதோ இருக்கும் போலருக்குன்னு நெனச்சா, நம்மலவிட கேனயன் வேற யாரும் இல்ல. பின்பாதியில் எதோ திரைக்கதையை ஒப்பேத்துனா போதும் னு படம் எடுத்து நம்மள கடுப்பேத்தி இருக்காங்க.

ஹரிஹரன்-லெஸ்லி இசையில் இரண்டு பாடல்கள் இனிமை. "மோதி விளையாடு மோதி விளையாடு " பாடல் படமாக்கப்பட்ட விதம் அருமை.

கடைசி வரைக்கும் படத்துல யாரும் மோதி விளையாடல. படத்த பாத்துட்டு நாங்க தான் சுவத்துல மோதி மோதி வெளயாண்டோம். இதுல எங்களுக்கு பெரிய வருத்தம் எதுவும் இல்ல. ஆனா சரணிடம் அடுத்து சரணடைந்திருப்பது தல அஜித். அத நெனைக்கும் போது தான் lite ah கஷ்டமா இருக்கு. 'தல' யின் தலை தப்பிக்குமா?

Monday, July 20, 2009

ஆறிய ஜெயராஜு


Share/Bookmark

"ஒ மா ஸிமீ யா ஆயா ஆயா"
"ஒக்காளி ஸ்விங் ச்சாய் ச்சாய் ச்ச ச்சைச்சா "
"அய்ய கக்கா ஆயி ஆயி ஆயியே"
" ஒ ஆயி ய்யே ஆயி ய்யே ஆயி ய்யே "

என்னடா இவன் ஆயி ஆயி ன்னு அசிங்கமா பேசுறானேன்னு யாரும் தப்ப நெனைக்க வேண்டாம். இதெல்லாம் நம்ம "ஹாரிஸ்" ஜெயராஜ் பாட்டுக்கு இடயில வர்ற வார்த்தைகள் தான். இது போன்ற கருத்துக்கள் நிறைந்த பாடல்களை தமிழக மக்களுக்கு அள்ளி தருவதில் அவருக்கு நிகர் அவரே.
பொதுவா சினிமா ல ஒருத்தர் பெரிய ஆளு ஆயிட்டங்கன்னா பழசெல்லாம் மறந்துடுவங்கன்னு சொல்லுவாங்க. ஆனா பழச மறக்காத ஒரே ஆளு யாருன்னா நம்ம நாறிய ச்சி ஆரிய ஜெயராஜ் தான். மின்னலே படத்துல என்ன டியூன் போட்டாரோ அதையே தன் இன்னிக்கு வரைக்கும் போட்டுக்கிருக்காரு.

சுருக்கமா சொன்ன இவரு சூப்பர் ஸ்டார் மாதிரி. ஏன்னா அவரு அன்னிக்கு சொன்னத தான் இன்னிக்கு சொல்வாரு. இன்னிக்கு சொன்னத தான் என்னிக்கும் சொல்வாரு. அதே மாதிரித்தான் இவரும். "அன்னிக்கு போட்ட டியூன தான் இன்னிக்கு போடுறாரு. இன்னிக்கு போட்ட டியூனதான் என்னிக்கும் போடுவாரு".

இதுல இன்ன்னொரு காமெடி என்னன்னா இதுவரைக்கும் ஆரிய ஜெயரோட ஆல்பம் failure ஆனதே இல்லன்னு இவருக்கு ஒரு நல்ல பேரு வேற. எப்புடிடா ஆகும்? ஒரே டியூன் ல வரியா மட்டும் மாத்தி போட்டு பாட்ட release பண்ணிடுவாரு. நம்ம பயலுக அத கேப்பாங்க. எங்கயோ கேட்ட மாதிரி இருக்கும். ஆனா எங்கன்னு அவனுங்களால கண்டுபுடிக்க முடியாது. அதுனால சிம்பிள் ஆ " அட நல்லாருக்கு" ன்னு வடிவேலு பாணியில சொல்லிட்டு போய்டுவானுங்க.

நம்ம பசங்க கிட்ட உள்ள கெட்ட பழக்கம் என்னன்னா மொதல்ல எவன் என்ன சொல்றனோ அதையே கடைசிவரைக்கும் follow பண்ணுவானுங்க. அதுனால எல்லாரும் "fantastic, என்னமா பாட்டு போட்டு இருக்காரு.. பின்னிட்டாரு " ன்னு ரெண்டு மூணு பிட்ட extra va போட்டு இவனையெல்லாம் பெரியாளு ஆக்கிவிட்டானுங்க.

இதுல நம்ம சூப்பர் டைரக்டரு கெளதம் மேனனும் , 'ஆறிய' ஜெயராஜும் ஒன்னா சேந்துட்டானுங்கன்னா அவ்ளோதான், " நாராயணா இந்த கொசு தொல்ல தாங்கமுடியலடா.. மருந்தடிச்சி கொல்லுங்கடா..."
கெளதம் புதுசா ஒரு படம் ஆரம்பிச்சாருன்னா, harris ஜெயராஜ் ட்ட போய் "போன படத்துல போட்டு குடுத்த பாட்டு மாதிரியே போட்டு குடுங்கன்னு" கேப்பாரு போலருக்கு. அதுக்கு இவன் " அட அதுக்கென்ன அதே பாட்டையே போட்டு தர்றேன் " ன்னு போட்டுகுடுதர்றான். அதுக்கு கெளதம் " அப்பச்சரி ...நானும் அதே மாதிரியே பாட்டையும் எடுதர்றேன்னு " ஒரே பாட்ட இதுவரைக்கும் நாலு தடவ எடுத்துருக்கங்காங்கையா.... அட வெக்கங்கெட்டவங்களா.... இதுக்கு ஏன்டா வெள்ளையும் சொள்ளையுமா அலையிறீங்க?

அட பாட்டு தான் இப்புடி போடுறான்னா Background Music சுத்தம். நாலு பேர கூப்டு வைச்சி "ஓமியோ கஜினி ஓமியோ கஜினி ஒமியோமியோ" னு ஒப்பாரி வைக்கிற மாதிரி வாயில வர்றதா சொல்லுங்கப்பா ன்னு விட்ருவான் போலருக்கு...

அட பொது வாழ்க்கைய விடுங்கப்பா... இவரோட கெட்டப்ப பார்த்து "நீங்க யாரு ஏ.ஆர்.ரகுமான் தம்பியா?" ன்னு கேக்கனும்னு இவருக்கு ஆசை போல. அதுக்கு நீ சொந்தமா பாட்டு போடனும் ராசா. உன்ன ஆஸ்கர் மேடைல நிக்க வச்சா, ஒலகம் தாங்காதுடா சாமி. நீ யாருயாருட்டெல்லாம் பாட்ட சுட்டியோ அவன்லாம் துரத்தி துரத்தி சி.டியாலேயே அடிப்பான்!

Harris ஜெயராஜ் பாட்டுன்னா " வாவ்" னு சொல்லணும்.. கெளதம் மேனன் படம்னா "superb... செதுக்கிருக்கண்டா... " னு feel பண்ணனும்... அப்பத்தான் கெத்துன்னுந்னு நெனச்சிக்கிட்டு நெறைய பேர் ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்க்காயங்க. இவன் கேவலமா டியூன் போட்டாலும் வாவ் சொல்றவனுங்க, ஸ்ரீ காந்த் தேவா நல்ல ட்டின் போட்டாலும் ஒத்துக்க மாட்டங்க. இவனுங்கல்லாம் இருக்குற வரைக்கும் , ஆறிப்போன பழைய பாடல்களைப் போடும் ஆறிய ஜெயராஜ் மாறிய ஜெயராஜா மாறவே மாட்டாரு
!!

Wednesday, May 27, 2009

IPL 2009 (Inthiya Perusugalin Lollu)


Share/Bookmark


கடந்த நாற்பது நாட்களாக IPL போட்டிகள், எதிர்பாராத பல திருப்பங்களுடன் நடந்து முடிவடைந்துள்ளது. கடந்த முறை கோப்பை வென்ற ராஜஸ்தான் அரையிறுதிக்குள் கூட நுழைய முடியவில்லை. அதுபோல் கடந்த முறை கடைசி இடத்தில் இருந்த டெக்கான் இந்த முறை கோப்பையை வென்றுள்ளது. இத பாக்கும் போது ஒரு பஞ்ச் டயலாக் ஞாபகம் வருது. "வாழ்கை ஒரு வட்டம்டா, இதுல மேல இருக்கவன் கீழ வருவான். கீழ இருக்கவன் மேல போவன்". அப்போ நடுவுல இருக்கவன் எங்க போவான்னு கேக்க கூடாது. இந்த IPL interesting ah மாத்துன சில special performers ah பற்றி பாக்கலாம்.

கங்குலி (கேப்டன் சங்கிலி) : இவரு ரொம்ப நல்லா விளையாடுவாரு. ஆனா ஒரு சின்ன பிரச்சனை என்னன்னா இவருக்கு கண்ணு கொஞ்சம் சரியா தெரியாது. மத்தபடி ரொம்ப நல்லா விளையாடுவாரு. இவரு பேட்டிங் பண்ணும் போது சில நேரம் ball, keeper கைக்கு போனது கூட தெரியாம " எங்க இன்னும் பந்தே வரல?" னு வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாரு. "அட கருமம் புடிச்சவனே ball பின்னாடி போய் பத்து நிமிஷம் ஆகுதுடா" னு யாரவது இவருக்கு சொல்லணும். இவன டீம் சேத்ததே பெருசு. இந்த கொடுமையில இவருக்கு கேப்டன் பதவி வேணுமாம். வெளங்கிடும்.


யுவராஜ் சிங் (சிங்குக்கு ஊதிட்டாங்க சங்கு): எல்லாரும் மேட்ச் தோத்தா ரெண்டு பாயிண்ட் போயிடுமேன்னு வருத்தப்படுவாங்க. ஆனா இவனுக்கு preeti zinda ட்ட இருந்து கெடைக்கிற ஒரு முத்தம் போயிடுமேன்னு வருத்தம். யாரு preeti பக்கதுல உட்காருரதுங்குரதுல பஞ்சாப் டீம் கடுமையான போட்டியம்ப்பா. அதுனாலயே இவரு சீக்கிரம் அவுட் ஆயிட்டு பக்கத்துல வந்து கப்புனு உக்கர்ந்துடுவாராம் (இல்லன்னா மட்டும் அடிச்சிடுவானா னு நீங்க கேக்குறது எனக்கு புரியிது ). இதுனால ஒருநாள் ஸ்ரீசாந்துக்கும் இவருக்கும் அடிதடி ஆயிடிடுச்சாம்ப்பா.அப்புறம் கடைசில " கூட்டுக்குடும்பத்திலே விரிசல் விழலாமா? ஆளுக்கு ஒரு ஒரு பக்கமா உக்காருங்கப்பா" ன்னு லலித் மோடி தீர்ப்பு சொல்லி சண்டைய வெலக்கி விட்டாராம்.


வி.வி.எஸ்.லக்ஷ்மன் : இவன் ஒரு வளந்து கெட்டவன். டிராவிட் எல்லாம் திருந்திட்டன். இன்னும் இவன் திருந்தலப்பா. ஆனா duck out ஆனா கூட "சுனா பானா யாரும் பாக்கல போ போ" .. நு ஒடம்ப வெரப்பா வச்சிக்கிட்டு தான் வெளில போவான். ஆனா நல்ல வேளை, ஹைடரபாத் டீம் உசாரா இவன ஓரம் கட்டி உக்கார வச்சிட்டாங்க. இல்லன்ன அவன்ங்க எல்லாம் cup வாங்குறது நடக்குற காரியமா? அட போங்க பாஸ் .


மகேந்திர சிங் தோணி (அப்புடியே வீட்டுக்கு போ நீ ): இவன் பேர தோணி னு வச்சதுக்கு பதிலா சாணின்னு வச்சிருக்கலாம். 20-20 மேட்ச் பதினெட்டாவது ஓவர் கூட விக்கெட் ஸ்டாண்டிங் பண்ணுறதுல இவரு ரொம்ப கவனமா இருப்பாரு. ஒரு மேட்ச் எட்டு விக்கெட் save பண்ணா அடுத்த மேட்ச் பதினெட்டு விக்கெட்டுக்கு விளையாட விடுவாங்கன்னு யாராவது இவன்ட சொன்னாங்களோ என்னவோ? சென்னை தோத்த எல்லா மேட்ச் லயும் தோணி ரொம்ப கஷ்டப்பட்டு விளையண்டாருங்க, சென்னை டீமுக்காக இல்லங்க opponent டீமுக்காக.

எல்லாரும் பேட்டிங் பண்ண வந்தா opponent டீம் அவங்க விக்கெட்ட எடுக்க தான் பாப்பாங்க. ஆனா தோணி பேட்டிங் பண்ண வந்தா மட்டும் "டேய் இவன்தாண்டா நம்ம trump card. இவன வச்சி தாண்ட நம்ம மாட்ச்ச முடிக்கணும். இவன மட்டும் அவுட் ஆக்கிடவே கூடாது" ன்னு ரொம்ப கவனமா இருப்பங்கலாம்ப்பா. Semi final la பெங்களூரு வின் பண்ணவுடனே மனிஷ் பாண்டே கு man of the match award குடுத்தாங்க. ஆனா அவங்க "நாங்க இந்த மேட்ச் ஜெயிச்சதுக்கு எங்க தெய்வம் தோணி தான் காரணம். அதுனால இந்த award அவருக்கு குடுக்குறதுதான் நியாயம் னு சொல்லி , தோனிக்கு man of the match குடுத்துட்டங்கலாம்.


லஷித் மலிங்கா (நல்லா அடிப்பாரு மாங்கா ): எவ்வளவு தூரத்துல குச்சிய (stump) வச்சிருந்தாலும் கரெக்டா பாத்து அடிக்கிறதுல இவர மிஞ்சுரதுக்கு ஆளே கெடயாது. ரோடு ஓரத்து புளியமரத்துல புளியங்கா அடிச்சி தின்ன பயலுகள எல்லாம் கிரிக்கெட் வெளயாட விட்டா இப்புடித்தான். அப்பறம் இவருக்கு ஒரு சின்ன பிரச்சனை என்னன்ன இவரு மண்ட வைக்கோல் போர் மாதிரி இருக்குறதுனால , ரோட்ல போகும்போது ஆடு, மாடெல்லாம் ஏறி மேஞ்சிட்டு , செத்து போயிருதம்ப்பா. அதுனால தென் ஆப்பிரிக்க அரசு இவரோட மண்டைக்கு கடுமையா கண்டனம் தெரிவிசிருக்காங்க. அடுத்த தடவ இந்த மண்டையோட வந்தா, ஓடவிட்டு நடு மண்டையிலேயே சுட்டுருவோம் னு ரெண்டு மூணு தீவிரவாத அமைப்புகள் வேற மிரட்டல் விடுத்துருக்காங்கலாம் .


மேத்யு ஹேடன் : சென்னை டீம் கு சிக்குன ஒரு சிறந்த அடிமை இவன். . "யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற?" ங்குரமாதிரி, யாருமே அடிக்காத டீம் ல இவன் மட்டும் அடிப்பன். பிள்ளைய பெக்கசொன்ன எரும மாட்ட பெத்து வச்சிருக்காங்க. என்ன தான் இவன் கஷ்டப்பட்டு விளையண்டாலும், தோணி யோட ஆட்ட திறமையால சென்னைக்கு semi final லயே ஆப்பு அடிச்சி அனுப்பிட்டாங்க. Man of the series award ஆவது நமக்கு குடுப்பங்கலான்னு ஆவலோடு இருந்த இவருக்கு, அதுவும் கிடைக்கததால், "வடை போச்சே!!! " நு வருத்தத்தோட ஊருக்கு போய்ட்டாரு.


ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (சங்கி மங்கி ): இவன் கைலையெல்லாம் யாருடா பேட்ட குடுத்து வெளையாட வர சொன்னது. சின்ன புள்ளைங்க வெளையாடுற எடத்துல இவனுக்கு என்ன வேலைன்னு தெரியல. Bowling போட வர்றவனுங்கள மூஞ்ச காட்டி பயமுறுத்தி, அவங்களுக்கு வேப்பல அடிக்கிற அளவுக்கு கொண்டு போயிடுறான். தப்பி தவறி அவுட் ஆயிட்டான்னா கிங் காங் கோவப்படுரமாதிரி பேட்ட தூக்கி வீசிடுறான். இத பாத்துட்டு South african animal circus ல ஒரு நாள் guest appearance தர சொல்லி ஒருத்தர் கேட்டராம். அதுக்கு இவன், அவன் மூக்க புடிச்சி கடிச்சி வச்சிட்டானாம்.


ட்ரம்ஸ் மணி (நாலுல சனி): சென்னை டீம் ல ரன்அடிக்கிறாங்களோ இல்லையோ, இவன் drums அடிக்கிறத நிறுத்த மாட்டான். அடுத்த IPL ல இவருக்கு சென்னை டீம் ல இடம் கெடச்சாலும் கெடைக்கலாம். ஆனா கடைசில "என்னோட உழைப்பெல்லாம் வீனா போச்சே.... நானும் வீட்ல இருந்தே மேட்ச் பாத்துருக்கலாமோ?" ன்னு feel பண்ணிக்கிட்டே வீட்டுக்கு வந்துருக்காரு.
தோ இவனுங்களால நமக்கு கொஞ்சம் time pass ஆனா சரி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...