Thursday, January 27, 2011

கடுப்பேத்துறார் மை லார்ட்


Share/Bookmark

ஒரு பதிவுக்கு கமெண்டுங்கறது அந்த பதிவு படிக்கிறவங்களுக்கு அத படிக்கிறதனால எதாவது ஒரு உண்ர்வு வந்துச்சின்னா, அவங்களா போடுறது. அது அந்த பதிவை பற்றியதாகவோ இல்லை அந்த பதிவர பற்றியதாவோ இருக்கலாம். கொஞ்ச நாளா சிலர் சில பதிவுங்களுக்கு போடுற கமெண்ட்டுகள பாத்தா இதுங்கல்லாம் என்ன ஜென்மம்னு தோணுது. இவிங்கல்லாம் இருக்குற இடத்துக்கு நாம தப்பா வந்துமாட்டிகிட்டமோன்னு கூட சில நாள் எனக்கு தோணிருக்கு.

அந்த வகையில ஹைலைட்டான, சில கமெண்டுங்க உங்களுக்காக

"Me the first" 

எதோ 12th public exam la state 1st வந்துட்ட மாதிரி 'பருவம் பதினாறு-அஜால் குஜால் விமர்சனம்"ங்கற பதிவுக்கு ஒருத்தன் "me the first" ன்னு கமெண்டு போட்டுருக்கான். அந்த பதிவ ஒலகத்துலயே மொத மொதல்ல படிச்சி அவரு சாதன பண்ணிட்டாராம். ஏண்டா எதெதுக்கு 'me the fisrt"ன்னு ஒரு வெவஸ்த வேணாமா? இவியிங்க எவனும் பதிவுலஎழுதுறத படிக்கிறது இல்ல... தலைப்ப மட்டும் பாத்துட்டு ஒலிம்பிக்ல கோல்டு மெடல் வாங்குனமாதிரி  me the first, me the last nu போடுறது.


"வடை எனக்கே"

அதே மாதிரிதான் "வடை எனக்கே" குருப்பும். பசிச்சா பண்ண  வாங்கி திண்ணுங்க.. காசு இருந்தா ஒரு வடைய வாங்கி திண்ணுங்க...அத விட்டுட்டு ப்ளாக்ல வந்து வடை எனக்கு போண்டா பக்கத்து வீட்டுகாரனுக்குன்னு கடுப்பேத்திகிட்டு..

"Wait..I'll read and come"

டாக்டருங்க சாப்புடுறதுக்கு முன்னாடி ஒரு மாத்திரை சாப்புடுங்க... சாப்பிட்ட அப்புறம் இந்த மாத்திரைய சாப்புடுங்கன்னு சொல்ற மாதிரி இவிங்க blog படிக்கிறதுக்கு முன், blogபடிக்கிறதுக்கு பின் ன்னு ரெண்டு கமெண்டு போடுறவிங்க. blog ah படிச்சப்புறம் நல்ல கமெண்டு போடுவாயிங்களான்னா அதும் இல்ல.. "படிச்சிட்டேன் ஓட்டுபோட்டுட்டேன்... வரட்டுமா" ன்னுட்டு போயிகிட்டே இருப்பாய்ங்க.

ஒரு பதிவுக்கு கமெண்டுக்கு போடனும்னு தோனுச்சின்னா போடுங்க.பதிவுக்கு ஓட்டு போடுறதையும், கமெண்டு போடுறதையும் கடமையா நெனச்சி பண்ணாதீங்க. நண்பர் இளவரசன்  சொன்ன மாதிரி பதிவர்களுக்கு ஓட்டு போடுறத நிறுத்திட்டு பதிவுங்களுக்கு ஓட்டு போட முயற்சி பண்ணுங்க

Monday, January 3, 2011

எந்திரனில் கவுண்டர் நடித்திருந்தால்-2


Share/Bookmark
இதன் முதல் பகுதியை படிக்க இங்கே க்ளிக்கவும்
குட்டிய பஞ்சாயத்தார் முன்னாடி அறிமுகம் செஞ்சி வச்ச பிறகு,

(சனாவாக கோவை சரளா) கோவைசரளா வேகமா வந்து கவுண்டர கட்டி புடிச்சிகிட்டு

அய்யோ என்ற மச்சான்னா என்ற மச்சான் தான்.. என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு.. இத தான் ராத்திரியும் பகலுமா செஞ்சீங்களா மச்சான்... நா கூட நீங்க எதோ திருவிழால ஜோசியம் பாக்குற பொம்மை செய்ரீங்களோன்னு உங்கள தப்பா  நெனச்சிட்டேன். I'm sorry..

கவுண்டர்: அட விடுகண்ணு.. உன்ற மாமன பத்தி இன்னும் உனக்கு சரியா தெரியல... கண்ணாலம் ஆகட்டும் முழுசா தெரிஞ்சுக்குவ.... (இவங்க பேசிகிட்டு இருக்கும்போதே செந்தில் அந்த கூட்டத்துலருந்து வேகமா வெளில வர்றாரு.)

செந்தில்: அண்ணேன்.... ஒரு சந்தேகம்.... அவங்களுக்கெல்லாம் இருக்க ஒண்ணு எனக்கு இல்லையாமே... அது என்ன? அத ஏன் நீங்க எனக்கு குடுக்கல....

கவுண்டர்: அடேய் பிசாசு தலையா... அவங்களுக்கெல்லாம் வாயும் வயிறும் தனித்தனியா இருக்கு.... ஆன உனக்கு கழுத்துக்கு கீழருந்தே வயிறு மட்டும் தான் இருக்கு. அதான் உனக்கும் அவங்களும் உள்ள வித்தியாசம்.போதும்மா...

கோவைசரளா:
மச்சான் இது ரொம்ப நல்லா இருக்கு மச்சான். நா ஒரு ரெண்டு நாளு வச்சி வெளயாண்டுட்டு தரட்டுமா?

கவுண்டர்: இவன வச்சி வெளயாடுறேன்னு இவன அழச்சிட்டு போனா இவன் உன்ன வச்சி வெளயாண்டுருவான்.. அவன் முழிய பாத்தியா?

கோவை.சரளா:
மச்சான்..... boy friend ah  இல்லை... toy friend ah..

கவுண்டர்:
என்னது டாய் friend ah? அவன் மூஞ்ச பாத்தியா? இவன டாய் friend ah லாம் வச்சிக்க முடியாது.'பேய்' friend ah வேணும்னா வச்சிக்கலாம். சரி என்னமோ  கூட்டிட்டுபோ.... டேய் அங்க போயி பாக்குறவங்கள எல்லாம் கடிச்சி வச்சிராத.. உன்  பல்லு பட்டா poison ஆயிடும்.

செந்தில்: ஹாய்.... i'm குட்டி.. speed 5 km/hr......

கவுண்டர்: ஆரம்பிச்சிட்டான்யா... நா சொல்லிக்குடுத்தத எனக்கே சொல்றாணே...இதபார் செகப்பி... இவனுக்கு வர்ற செவ்வாய் கிழமை A.B.C.D evaluation இருக்கு அதுக்குள்ள கொண்டு வந்து விட்டுடு...

கோவை சரளா:
சரி மச்சான்...

===============
A.B.C.D OFFICE:

இங்கே வந்திருக்கின்ற ABCD நிறுவன தலைவர் V.S.ராகவன் அவர்களே, அவருக்கு  லெஃப்ட்ல சைடு வாங்கி உக்கார்ந்துருக்கும் பண்ணு வாயன் பி.பாண்டு அவர்களே, ரைட்ல சைடு வங்கி உக்கார்ந்துருக்கும் சண்முக சுந்தரம் அவர்களே.... நா கண்டுபுடிச்சிருக்க இந்த ரோபோவ பரிசோதனை பண்ணி, இதுக்கு அனுமதி வழங்குமாறு உங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம். விக்ஸ் வேப்பரப்...

பி.பாண்டு: ஆங்...அய்யோ....... குட்டி... let me check ur colour and shape
perception... இந்தா இருக்கே பெட்ரமாஸ் லைட்... இதுல இருக்க வெள்ளைகலர், ரவுண்ட் மேண்டில்லருந்துதான் குபீர்னு வெளிச்சம் வரும்... this is right or wrong?

செந்தில்: (மேண்டில கையில தனியா பிச்சி) இதுல எப்புடிண்ணே எரியும்....

பி.பாண்டு: ஆங்... அவ்...அய்யோ.. இவன் அவனே தான்.....

சண்முக சுந்தரம்:
குட்டி... தமிழ் சினிமா, கவுண்டமணி செந்தில் காமெடில, என்னதான் கவுண்டர விட செந்தில் புத்திசாலித்தனமா கேள்விகள் கேட்டா கூட, கடைசில மிதி விழுகபோறது என்னவோ செந்திலுக்கு தான்னு நிரூபனம் இருக்குதே..... அது தெரியுமா?

செந்தில்: தெரியும். its a paradox. நடைமுறையில அது ஒரு convergence series ah இருக்கதுனால செந்திலாலயும் அடிக்க முடியும்...

கவுண்டர்: (மனசுக்குள்ளயே) அடங்ங்ங்ங்..... நீ வீட்டுக்கு வா நாயே.... கட்டிங் ப்ளேயர வச்சி நாக்க புடுங்கி வெளில எரிஞ்சிடுறேன்..

சண்முக சுந்தரம்: என்ன சொல்றீங்க? approve பண்ணிடலாம்ல?

கொஞ்சம் இருங்க.... (prof.போரா வாக V.S.ராகவன்)

V.S.R:
ஒரு வாழைப்பழத்தோட மதிப்பு என்னன்னு தெரியுமா உனக்கு?

செந்தில்: அது எந்த வாழைப்பழம்ங்கறத பொறுத்தது.

V.S.R: கரகாட்ட காரன் பட வாழைப்பழ காமெடில, ஒரு பழம் கவுண்டமணிகிட்ட இருக்கு... அந்த இன்னொரு பழம் எங்கன்னு தெரியுமா?

செந்தில்: Hypothetical question.

V.S.R: ஷ்மார்ட் (smart) Answer.  இப்போ நா ஷொல்றத அப்புடியே ஷெய்...எழுந்துரு.... முன்னாடி நட.... பின்னாடி நட.... run forward....

கவுண்டர்:
யோவ் நீங்க என்ன பொண்ணு பாக்கவா வந்துருக்கீங்க.. இந்த நாய முன்னாடி நட.. பின்னாடி நடன்னு சொல்லிகிட்டு... விட்டா பஜ்ஜி போண்டால்லாம் கேப்பீங்க போலருக்கு...

V.S.R: மிஷ்டர் வடக்குபட்டி... ஷத்த நேரம் ஷும்மா இருக்குறேளா..குட்டி.. ரன்.....(செந்தில் ஓடுறாரு) ரன் ஃபாஷ்ட்....... (வேகமா ஒடுறாரு) ரன் அரவுண்டு த ஆலமரம்..... (ஆலமரத்த சுத்தி ஓடுறாரு) கேட்ச் திஷ்  நைஃப்.... (கத்திய தூக்கி போட செந்தில் catch புடிக்கிறாரு)... வடக்குபட்டிய  குத்து... செந்தில கவுண்டர் வயித்துல குத்திடுராறு....கத்திய வெளிய எடு...

செந்தில்: (கத்திய வெளிய எடுத்த செந்தில்) "அய்யோ என்னண்ணே ரத்தம் வருது?"

கவுண்டர்: ஆஆஆ.. ஏண்டா பிசாசுக்கு பொறந்த பிசாசு தலையா..இந்த கெழட்டு நாயி பேச்ச கேட்டுகிட்டு ரெண்டு இன்சு கத்திய உள்ள எறக்கிட்டு இப்போ ரத்தம் வருதான்னா கேக்குற.. .

V.S.R: மிஷ்டர் வடக்குபட்டி... இது ரொம்ப ஆபத்தான மெஷின்.இத approve பண்ண முடியாது...

கவுண்டர்: யோவ் நீங்க என்னய்யா இத reject பண்றது? இன்னிக்கு வீட்டுக்கு போனோன்ன இந்த நாய கண்ட துண்டமா வெட்டி கூறு போட்டுட்டு தான் மறு வேலை.... இருடா டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...........................

ஒரு பதிவரின் அவசர பதிவுக்கு ஆப்பு


Share/Bookmark "கண்ணால பாக்குறதும் பொய் ,Blog la படிக்கிறதும் பொய் , நேரா போய் பாக்குறதே மெய்" ங்குறத நா இன்னிக்கு தான் புரிஞ்சிகிட்டேன்.சில மிகைப்படுத்தப்பட்ட விமர்சனங்களால, ஒரு இயக்குனர பத்தி ஒரு பதிவர் சில நாட்களுக்கு முன்னாடி சில தவறான கருத்துக்கள தெரிவிச்சிருந்தாரு.அதற்கு மறுப்பு தெரிவிக்கவே இந்த பதிப்பு.

அந்த இயக்குனர் வேற யாரும் இல்லை. நம்ம சசிகுமார் தான். அந்த பதிவர் வேற யாரும் இல்ல, நான் தான். சில காரணங்களால ஈசன் படத்த உடனே பாக்க முடியல.

தியேட்டர்ல மொத ஷோ படம் ஓடிக்கிட்டு இருக்கும் போதே சுட சுட விமர்சனம் எழுதுறதா நெனச்சிகிட்டு கருமாந்த்ரமா எழுதுற சில பதிவர்கள் இங்க இருக்காங்க. (பெயர் சொல்ல தேவையில்லன்னு நெனக்கிறேன்) அவங்களோட விமர்சனங்கள படிச்சேன். படம் பைசாவுக்கு தேறாதுங்கறதே அந்த விமர்சனங்கள்லேருந்து தெரிஞ்சிது. ஈசன் படத்தை பத்தின இது மாதிரியான விமர்சனங்களினால, சசிகுமாரும் எல்லா இயக்குனருங்க மாதிரி ஆயிட்டாரோன்னு நெனச்சி, போன வாரம் "முதல் வெற்றிப்பட இயக்குனர்கள்" ங்குற பதிவுல சசிகுமார பத்தியும் போட்டுருந்தேன்.

நேத்து ஈசன் படம் பாத்தப்புறம் தான், நா படிச்ச விமர்சனம் தான் பைசாவுக்கு தேறாதுங்கறத தெரிஞ்சிகிட்டேன். என்னோட அந்த பதிவுல சசிகுமார இழுத்தது ரொம்ப  தப்பு. அதுக்கு மன்னிப்பு கேக்குறதுக்காகவே இந்த பதிவு. மத்தபடி நா பொதுவா  வெளியிட்ட கருத்துக்கள்ல எந்த மாற்றமும் இல்லை.

சுப்ரமணிய புரத்தை விட இந்த படத்துல சசிகுமாரோட இயக்கத்துலயும், திரைக்கதையிலயும் நல்ல முன்னேற்றம். படத்துல நடிச்ச எல்லாருமே ரொம்ப பழக்கப்படாத நடிகர்களா இருக்கது படத்துக்கு பெரிய ப்ளஸ். வைபவ்க்கு நடிப்பை வெளிப்படுத்துற மாதிரி ஒரு காட்சியும் இல்லை. அவரு அப்பாவா வர்றவருக்கு அந்த வாய்ப்பிருந்தும் அவர நடிக்க வைக்க முடியல. இது மட்டும் தான் இந்த படம் முடியும் போது குறையா தெரியுது.

சமுத்திரகனிய பத்தி சொல்லியே ஆகனும், அவரு ஒரு நல்ல இயக்குனருங்கறத தாண்டி மிக சிறந்த நடிகர்ங்கறது இந்த படத்த பாத்தா தெரியும்.ரொம்ப இயல்பான நடிப்பு. ஹீரோவா நடிக்க எந்த விதத்துலயும் குறைஞ்சவர் இல்லை. அவரோட கதாபத்திர அமைப்பும் மிக அருமை. ஜேம்ஸ் வசந்தனோட இசைல எல்லா பாட்டுமே நல்லா தான் இருக்கு.குறிப்பா ஃப்ளாஷ்பாக் ல வர்ற "கண்ணில் அன்பை சொல்வாளே" பாட்டு ரொம்ப சூப்பர்.

படத்துல சில pub சீன்கள வெட்டித்தள்ளிட்டாங்கன்னு நெனக்கிறேன். படம் இப்பொ சிக்குன்னு சிறுத்த குட்டி மாத்ரி சூப்பரா இருக்கு. க்ளைமாக்ஸ் ல சுப்ரமணியபுரம் க்ளைமாக்ஸ்ல நமக்கு என்ன feel இருந்துதோ, அதைவிட அதிகமாவே இருக்குங்கறது உண்மை

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...