Friday, November 15, 2013

வில்லா - எடுத்துருக்கலாம் இன்னும் கொஞ்சம் நல்லா!!!


Share/Bookmark
 ”இந்த உலகம் பயப்படுறதுக்கு என்னிக்குமே தயாரா இருக்கு. பயமுறுத்துறதுக்கு தான் ஒரு ஆள்  தேவே” என்னடா எங்கயோ கேட்ட மாதிரி இருக்குன்னு யோசிக்கிறீங்களா? எங்கயும் இல்லை. வேட்டைக்காரன் படத்துல வர்ற ஒரு டயலாக்தான் இது. இதுல எவ்வளோ உண்மை இருக்குன்னு நேத்து வில்லாவுக்கு போகும் போது தான் தெரிஞ்சிது.  நிறைய பேர் டிக்கெட் எடுத்து பயப்படுறதுக்கு காத்திருந்தாங்க. பெரிய ஆச்சர்யம் என்னன்னா நேத்து நைட்டு ரெண்டாவது ஷோ கூட ஃபுல்லு. பெரிய ஹீரோவோ டைரக்டரோ இல்லாத ஒரு படத்துக்கு இவ்வளவு வரவேற்பு  இருக்குதுன்னா முதல் காரணம் பீட்சா வோட பெரிய வெற்றிதான். வில்லாவுக்கு வர்ற கூட்டத்த பாத்து கார்த்திக் சுப்புராஜ் திமிரா காலர தூக்கி விட்டுக்கலாம். ஏன்னா இந்த மொத்த கூட்டமும் அவர் கணக்குல தான் சேரும்.

அதுக்கும் மேல இந்த மாதிரி திகில் படங்கள் நம்மூர்ல ஏனோ அதிக அளவுல வர்றதே இல்லை.  வருஷத்துக்கு கொறைஞ்சது 5 ஆங்கில திகில் படமாவது ரிலீஸ் ஆகுது. ஆனா கடந்த 5 வருஷத்துலயும் சேத்து பாத்தாலே நம்மூர்ல நல்ல திகில் படங்கள்னு சொல்லிக்கிற அளவுல வந்தது ரெண்டு மூணு தான் இருக்கும். காமெடிப்படங்கள் எடுக்குறேன்னு ரெண்டு வருஷமா நம்மாளுங்க போட்டு அறுத்த அறுவையில எப்படா வேற மாதிரி படம் வரும்னு காத்துட்டு இருந்து வந்த கூட்டம் தான் அது.

தியேட்டருக்குள்ள நுழையும்போதே காதை பொளக்குற அளவு விசில் சத்தமும் கூச்சலும். என்னடா தெரியாம ஆரம்பம் படம் ஓடுற தியேட்டருக்குள்ள எதுவும் வந்துட்டோமான்னு ஒரே டவுட்டாயிப்போச்சி. அப்புறம் உள்ள போயி பாத்தா தான் தெரியிது.. அட நம்ம முகேஷு... ஒரே சீன்ல நடிச்சி ஒலக ஃபேமஸ் ஆனவன்னா அது நீ மட்டும் தான்யா.. ஒருத்தன திரும்ப திரும்ப பாக்க பாக்க யாருக்கு  வேணாலும் நம்மாளுங்க விசிலடிப்பாங்கங்கறதுக்கு முகேஷ், பவர் ஸ்டாரு, சாம் மார்த்தாண்டன்லாம்
ஒரு நல்ல உதாரணம்.

பீட்சா 2 ன்னு போட்டது இந்த படத்துக்கு எந்த அளவு ப்ளஸ் பாயிண்டோ அதே அளவு மைனஸ் பாயிண்டும் கூட. வந்த கூட்டம் முழுக்க படம் பீட்சா அளவுக்கு நம்மள பயமுறுத்தும்ங்கற மைண்ட் செட்டோட வந்தவங்க. ஆனா உணமை என்னன்னா எந்த இடத்திலும் வில்லா நம்மள பயமுறுத்தவே இல்லை. இப்போ பயமுறுத்துவாங்க அப்போ பயமுறுத்துவாங்கன்னு எல்லாம் சலிச்சி உக்காரும்போது இண்டர்வல் வந்துடுது.

சிலர் சொன்னாங்க. இது horror படம் இல்லை பயமுறுத்துறதுக்கு. இது ஒரு த்ரில்லர் படம்னு. இருக்கட்டும்.  யாவரும் நலம் படத்தை எடுத்துக்குவோம். அது பேய் படம் தான். ஆனா horror படம் இல்லை.  மூஞ்சி கிளிஞ்சி தொங்குற மாதிரி எந்த பேயும் நம்மள வந்து பயமுறுத்தல. திடுக் திடுக்குன்னு தூக்கி போடுற மாதிரி மியூசிக் இல்லை. குறிப்பா இருட்டுல நடக்குற மாதிரியான காட்சிகள் அதிகமா இல்லை. இருந்தாலும் ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் நம்மள சீட்டோட நுனில நகத்த கடிச்சிட்டு  உக்கார வச்சாய்ங்கல்ல அந்த மாதிரி ஒரு impact ah இந்த படம் கொண்டு வர தவறிடுச்சி.

ஆனா பீட்சா படத்தோட கதைய விட பல மடங்கு சூப்பரான சுவாரஸ்யமான ஒரு கதை. ஆனா அத execute பண்ணது தான் சரியில்லை. சும்மா எதாவது ஒரு ஆங்கில பேய் படத்த எடுத்துக்குவோம். பெருசா எந்த கதையும் இருக்காது. புதுசா ஒரு ஃபேமில ஒரு வீட்டுக்கு குடி போவாங்க. அந்த  வீட்டுல ஒரு பேய் இருக்கும். அவ்வளவுதான். ஒரே ஒரு வீட்ட வச்சிகிட்டு ரத்த வாந்தி எடுக்குற அளவுக்கு நம்மள பயமுறுத்துவாய்ங்க. ஆனா இந்த  படத்துல ஒரு சூப்பரான ஒரு தீம புடிச்சிருக்காங்க. பயமுறுத்துவதற்கான காட்சிகளும், லொக்காஷன்களும் இருந்தும் அத செய்யல.

ஆனா படம் நல்லா இல்லைன்னு கண்டிப்பா சொல்லிட முடியாது. எதிர்பார்ப்பை பூர்த்தி பண்ணலைன்னு தான் சொல்லனும். பீட்சா பேனர் இல்லாம தனியா வந்திருந்தா கூட இந்த படம் நல்ல ரீச் ஆயிருக்கும். மொத்தமா படத்துல உள்ள கேரக்டர்கள எண்ணுனா பத்த தாண்டாது. கேரக்டர் செலக்‌ஷனும் சூப்பர். ஹீரோ ஹீரோயினும் சூப்பர். இவங்க ரெண்டு பேர் நடிப்புலயும் எந்த கொறையுமே சொல்ல முடியாது. ஆனா சில துணை கதாபாத்திரங்கள வர்றவங்களோட ரோல் ஓண்ணு ரெண்டு கவனமில்லாத
வசனங்களால க்ளாரிட்டி இல்லாம போயிடுது.

குறிப்பா ஹீரோவோட ஃப்ரண்டா வர்ற கேரக்டர் அப்புறம் இன்னொரு சயிண்டிஃபிக் பேயோட்டி கேரக்டர். பேயோட்ட வந்துட்டு அவரு எடுத்துட்டு வந்துருக்க ஒவ்வொரு பொருளுக்கும்  அறிவியல் காரணங்கள சொல்லும் போது எரிச்சலா தான் வருது. உணமையாவே இருந்தாலும் அந்த இடத்துல அத கேக்குறதுக்கு என்னவோ புடிக்கல. பீட்சா படம் கார்த்திக் சுப்புராஜுக்கு முதல் படம்னாலும்  முதல் படம்ங்கற சுவடே தெரியாம சூப்பரா பண்ணிருந்தாரு. ஆனா தீபன் சக்கரவர்த்திகிட்ட ஒருசில காட்சிகள்ல அப்பட்டமா தெரியிது.

முதல் ஒண்ணே முக்கால் மணி நேரத்துல விட்டத கடைசி 15 நிமிஷத்துல புடிக்கிறாரு டைரக்டர்.  ஒவ்வொண்ணா ட்விஸ்ட அவுக்க அவுக்க..ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆ.... என்னா கதைடா... சூப்பர்ன்னு தோணுச்சி. என்னவோ தெரியல படம் முடிஞ்சி வீட்டுக்கு வந்தப்புறம் கூட அந்த க்ளைமாக்ஸ் என்னவோ பண்ணிட்டே இருந்துச்சி.. இவ்வளவு நல்ல கதைய இன்னும் நல்லா எடுக்காம விட்டுட்டாய்ங்களேன்னு கடுப்பாவும் இருந்துச்சி.

அதுவும் இல்லாம மியூசிக் இன்னொரு ப்ளஸ்.. படத்தோட ஆரம்பத்துல background la வர்ற “காணும் ஞானம்”ங்கற பாட்டு உண்மையிலயே கேக்கும் போது எதோ செய்யுது. அப்புறம் அந்த ப்யானோ தீமும் சூப்பர். படத்துக்கு இன்னொரு பெரிய விளம்பரமான நாசரை ஒரிரு ஒரு காட்சியில் மட்டும் அதுவும் அவருடைய லெவலுக்கு இல்லாம இருந்தது இன்னொரு சின்ன ஏமாற்றம்.

பீட்சா 2 ன்னு பெயர் போட்டதாலேயே இவ்வளவு ஏமாற்றமுமே தவிற வில்லா என்ற படம் சூப்பரான ஒரு கதையுடனும் சுமாரான திரைக்கதையுடனும், ஒருமுறை பார்க்க கூடிய ஒரு தரத்திலும் உருவாக்கப்பட்ட  ஒரு படமே. கடைசி பாரா படிப்பவர்களின் கவனத்திற்கு. படத்தோட  கதைய நா கொஞ்சம் கூட சொல்லல.  அதனால தைரியமா படிக்கலாம்.



Wednesday, November 6, 2013

பாண்டிய நாடு - தடையறத் தாக்க வெர்ஷன் 2.0!!


Share/Bookmark
மிர்ச்சி சிவாவ வச்சி ஒரு சீரியஸான கதை பண்ணா எப்டி இருக்கும்? ராமராஜன ஒரு yo yo boy ah வச்சி ஒரு பக்கா சிட்டி கதை பண்ணா எப்டி இருக்கும்? அந்த மாதிரி ஒரு சம்பவம் தான் இங்கயும்  நடந்துருக்கு. நானும் மதுரைக்காரன் தாண்டான்னு சொல்லிக்கிட்டு ஓங்கி அடிச்சா ஒன்பது பேரு  பறக்குற மாதிரி ஒரு இண்டர்வல் ஃபைட்டு இல்லாம ஒரு விஷால் படம். விஷாலோட பெரிய ப்ளஸ்ஸே அவர் படத்துல வர்ற அணல் பறக்கும் சண்டை காட்சிஙக தான். கிட்டத்தட்ட படம் முழுக்கவே விஷாலோட ட்ரேட் மார்க் சண்டைக் காட்சிங்க எதுவும் இல்லாம எடுத்து அதயும் பாக்குற மாதிரி எடுத்துருக்கதே இந்த படத்தோட முதல் வெற்றி. எனக்கு சுசீந்திரன் மேல ஒரு நல்ல அபிப்ராயம் இருந்ததே இல்லை. அவரோட ஒரு சில படங்கள் பாத்துருக்கேன். எல்லாருக்கும் புடிச்ச நான் மகான் அல்ல படம் எனக்கு அவ்வளவா புடிக்கலை. காரணம் வேற ஒண்ணும் இல்லை. பொல்லாதவன் படத்த அப்படியே எடுத்து வச்சிருந்தாரு.    

கதை மட்டும் கொஞ்சம் வேறன்னாலும்கேரக்டர்லருந்து சீன்ஸ் வரைக்கும் அப்படியே பொல்லாதவன நான் மகான் அல்ல படத்தோட ஒன் டு ஒன் மேட்ச்  பண்ண முடியும். ரெண்டு மூணு படம் தான் அப்போ நடிச்சிருந்தாருன்னாலும் ஒரு பெரிய ஹீரோவா  ஃபார்ம் ஆயிருந்த சமயத்துல நாலு ஸ்கூல் பசங்கள வில்லன்களா காமிச்சி அவங்க கூட சண்டை போடுறது என்னவோ என்னால ஏத்துக்க முடியல. அப்புறம் ராஜ பாட்டை பார்த்த பல பேரு அடுத்த சுசீந்திரன் படத்துக்கு போக ரொம்பவே யோசிப்பாங்கன்னு எல்லாருக்குமே தெரியும். இருந்தாலும் இந்த படத்துக்கு போக காரணம் நம்பத்தகுந்த நண்பர்கள் சிலர் குடுத்த நல்ல விமர்சனஙகளால தான்.

படம் ஆரம்பிக்கும்போதே அள்ளு கெளம்புது. கில்லின்னு ஒரு படம் மதுரைய வச்சி எடுத்து ஹிட் ஆச்சி. அதுக்கப்புறம் மொத்த சினிமா கதையும் மதுரைய சுத்தி மட்டுமே நடக்குது. மொதல்ல கோரிப் பாளையம். கூடல் நகர், தூங்கா நகரம் மாட்டு தாவணின்னு ஏரியா பேரா வச்சி படம் எடுத்தாய்ங்க. அப்புறம் மதுரை சம்பவம் , மதுரை டூ தேணி மாதிரியான மதுரை சார்ந்த பெயர்கள வச்சி எடுத்தாய்ங்க. இப்போ இவரு டைரக்ட்டா வச்சா தெரியும்னு பொத்தாம் பொதுவா பாண்டிய நாடுன்னு வச்சிருக்காரு. ஆக மொத்தத்துல நீங்க மதுரைய விட்டு வேற ஏரியாவுக்கு ஷிஃப்ட் ஆக மாட்டீங்க? 

அதுவும் ஆரம்பத்துலயே “இவரு தான் இந்த ஏரியாவுலயே பெரிய கையி... இந்த ஏரியாவுல என்ன நடந்தாலும் இவருக்கு கமிஷன் தராம நடக்க கூடாதுன்னு வேற ஆரம்பிச்சி ரெண்டு குரூப் சண்டையா வேற பிரிஞ்சோன ரொம்ப பயமாயிருச்சி. ஆத்தாடி தெலுகு படம் மாதிரி எதுவும் ஆரம்பிக்கப் போறாய்ங்களோன்னு..

நல்ல வேளை.. அந்த மாதிரியான சம்பவங்கள் எதுவும் நடக்கவே இல்லை. பாத்த கதைதான்னாலும் கேரக்டருங்களை நல்லாவே பண்ணிருந்தாரு. ரெண்டு ரவுடி குரூப்னா ஒருத்தர் தமிழ் சினிமா ரெகுலர் டைப் வில்லனாவும் இன்னொருத்தர சைலண்ட்டான கேரக்டராவும் காட்டி முதல் பாதிய ரொம்ப நல்லாவே நகர்த்திட்டு போயிருந்தாரு. செவந்தி பூ கொட்டும் போது வணக்கம் வச்சா மாதிரியே  பல்ல காட்டிகிட்டு ஸ்க்ரீன்ல ஸ்லோ மோஷன்ல எண்ட்ரி குடுக்குற மாதிரியான இண்ட்ரோ எதுவும்  விஷாலுக்கு இல்லை. ரொம்ப சாதாரணமான கேரக்டராவே வர்றாரு. விஷாலோட அண்ணனா வர்றவரும் சரி... சினிமாத் தனமா இல்லாம ரொம்ப இயல்பா இருக்கமாதிரியான ஒரு ஆள போட்டுருக்காங்க.

விஷால் இதுக்கு முன்னால பண்ண மொக்க காமெடி மாதிரியெல்லாம் இல்லாம இந்த படத்துல கொஞ்சம் நல்லாவே காமெடியும் பண்ணிருக்காரு. பரோட்டா சூரி அங்கங்க வந்து தலைய காமிக்கிறாரு. சிரிப்ப ரொம்ப வரவழைக்கலன்னாலும் கடுப்பேத்தாம இருக்கது ரொம்ப நிம்மதி. முதல் பாதில முழுக்கவே ஒரு விஷாலோட லவ் சீன் முடிஞ்சா அடுத்து வில்லனோட ஒரு டெரர் சீனுன்னு மாறி மாறி வர்ற  மாதிரி போயிட்டு இருக்க இண்டர்வல்ல நமக்கு ஒரு செம்ம ஆக்‌ஷன் ப்ளாக் இருக்குன்னு நெனைக்கும் போது, ரொம்ய இயல்பா ஒரு இண்டர்வல். முதல் பாதி முழுக்க நா யோசிச்ச ஒரு விஷயம் என்னன்னா இந்த சாதாரண அப்பா கேரக்டருக்கு எதுக்குப்பா பாரதி ராஜான்னு தான். ஆனா ரெண்டவது பாதி பாத்தப்புறம் தான் தெரிஞ்சிது ஏன் அவர போட்டாங்கன்னு. அடிச்சி தூள் கெளப்பிருக்காரு. அவரு குடுக்குற சில ரியாக்‌ஷன்கள வேற யாராலயும் குடுத்துருக்க முடியுமான்னு தெரியல.

இன்னொரு சூப்பர் கேரக்டர் விக்ராந்தோடது. 5 நிமிஷம் வந்தாலும் கெத்தா இருந்தாரு. முதல்பாதில பஸ் ஏரி வெளியூர் போற விக்ராந்த் கடைசில விஷால வில்லன்கள் வெட்ட தொறத்தும் போது கெத்தா வந்து ரீ-எண்ட்ரி குடுப்பாருன்னு ஆவலா இருந்தேன். ஆனா அங்கயும் வச்சாங்க ஒரு ட்விஸ்டு. இந்த படத்து வில்லனையும் எங்கயோ பாத்தா மாதிரி இருக்கு. ஆனா எங்கன்னு தான் தெரியல.

விஷாலுக்கும் லட்சுமேனனுக்கும் காதல் காட்சிங்க முதல் பாதியிலேயே முடிஞ்சிருது. ஆனாலும்  ஹீரோயினுக்கு குடுத்த காசு வீணா போயிடக் கூடாதுங்கறதுக்காக வலுக்கட்டாயமா ஒரு குத்து பாட்ட உள்ள நுழைச்சிருக்காய்ங்க. fi fi fi கலாச்சிஃபைன்னு ஒரு பாட்டு. அந்த பாட்டு மட்டும் தான் படத்துக்கே திருஷ்டி பொட்டு.  கண்றாவி அத கேக்கவும் முடியல பாக்கவும் முடியல. லட்சுமி மேனன் கும்கில இருந்த அளவு  அழகா இல்லை.

தடையற தாக்க எத்தனை பேரு பாத்துருக்கீங்கன்னு தெரியல. கிட்டத்தட்ட இந்த படமும் அதே மாதிரியான படம் தான். சில காட்சிகளும் சரி காட்சி பதிவுகளும் சரி. அப்படியே அந்த படத்த ஞாபகப்படுத்துது. ஆனாலும் அத விட இதுல கொஞ்சம் காமெடி, லவ்வுன்னு மசாலா அதிகாமாவே  சேத்து ரொம்பவே நல்லா பண்ணிருக்காய்ங்க.

விஷாலுக்கு ரொம்ப நாள் கழிச்சி ஒரு நல்ல படம். சுசீந்திரனுக்கும் கூட.. கண்டிப்பா பாக்கலாம். தீபாவளிக்கு வந்த படங்கள்ல இதான் பெஸ்டு. சரி மதுரைய விட்டு கொஞ்சம் வேற ஊரு பக்கம் வாங்கப்பா. புண்ணியமா போகும்.

ஆல் இன் ஆல் அழகுராஜா தான் போலாம்னு இருந்தேன். ஒரு கல் ஒரு கண்ணாடியிலயே ராஜேஷ் மேல லைட்டா டவுட் வந்துருச்சி. இருந்தாலும் கார்திக்காக போலாம்னு தான் நெனைச்சேன். போன பல பேர் ரத்த களரியொட வர்றத பாத்து நல்ல வேளை  உசாராயிட்டேன்.

Friday, November 1, 2013

ரம்பம் பம் ஆ..ரம்பம்!!!


Share/Bookmark

நேத்து நடுராத்திரிலருந்து facebook la ஆரம்பம் படத்த பத்தி ஸ்டேட்டஸ் போட்டுகிட்டு இருக்காங்க. "On the way to Arrambam" "me @ arrambam" ன்னு என்னென்னவோ. ஆனா யாருமே படம் எப்டி இருக்குன்னே போடல. படம் எப்டி பாஸ்  இருக்கு? "thala rocking boss"   படம் எப்டிங்க இருக்கு? " தல தாறு மாறு மாஸ்"  அண்ணே படம் எப்டிண்ணே இருக்கு? "தல பட்டைய கெளப்பிருக்காருல்ல" அய்யோ படம் எப்டி பாஸ் இருக்கு? " தல மரண மாஸ்"  வக்காளி படம் எப்டிடா இருக்கு? "தல தெறிக்க விட்டுருக்காரு..... தல ராக்கிங்"  கடைசி வரைக்கும் தல ராக்கிங் தல ராக்கிங்னு சொல்றாய்ங்களே தவற படம் எப்டி இருக்குன்னு ஒருத்தரும் வாயே தொறக்கல.. அப்பவே லைட்டா ஒரு டவுட்டு...  டவுட்டு ஆனமாதிரியே கரெக்கிட்டா ஆயிப்போச்சி.

அஜித் ரசிகர்கள பொறுத்த அளவுல ஃபோட்டோக்கு போஸ் குடுக்குற மாதிரி நிக்கிறதும், BGM போட்டுக்கிட்டு ஸ்லோ மோஷன்ல நடந்து வர்றதும் மட்டும் தான் மாஸ்ஸுன்னு கணக்குல எடுத்துக்குறாங்க போல. எதாவது ஒரு பஞ்ச் சீன் வச்சப்புறம் இந்த மாதிரி ஸ்லோமோஷன்ல நடந்தா நல்லாருக்கும். ஆனா இங்க ஸ்லோமோஷன்ல நடக்குறது மட்டும் தான் பஞ்ச் சீனாவே இருக்கு. ஆனா இந்த அளவு கெத்தான ஒரு லுக் யாருக்குமே இருந்ததில்லைங்கறது கண்டிப்பான உண்மை. முதல் பாதில அஜித்த பாத்துகிட்டே இருக்கலாம் போலருக்கு. செம ஸ்டைலிஷ்... காஸ்டியூம்ஸூம் சரி.. செம.. ஆனா கெத்தா இருக்கவன் வெத்தா நின்னுகிட்டே இருந்தா என்ன ப்ரயோசனம்...

ஆரம்பதோட ஆரம்பத்துல அஜித் இண்ட்ரோவும் சரி "அட்டடடா ஆரம்பமே" பாட்டு ஆரம்பிக்கிறதும் அந்த பாட்டு எடுத்துருக்கதும் சரி செம சூப்பர். அதுக்கப்புறம் நம்ம ஆர்யாவ ஃபோகஸ் பண்றோம். இவ்வளவு கேவலமான லவ் ஃப்ளாஷ்பேக் இதுவரைக்கும் எவனுக்கும் வச்சிருக்கமாட்டாய்ங்க. நம்ம விஷ்ணுவர்தன் மட்டும் எப்புடி இப்டியெல்லாம் யோசிக்கிறாருன்னு தெரியல கருமம். அதுவும் அவருக்கு ஜோடி டாப்ஸி... கருமம்... ரெண்டும் சேந்து பண்ற லவ்வுல நமக்கு மண்டை வெடிச்சி போயிருது. அதவிட கொடுமை என் பக்கத்துல இருந்த ஒருத்தன் இதுங்க லவ்வ பாத்து "வாவ்.. வாவ்" ன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருந்தான். கண்றாவி.. நீயெல்லாம் நல்ல படம் பாத்ததே இல்லையாடா... மிஸ்டர் ஆர்யா உங்க மொகரையையும் டாப்ஸி மொக்ரையையும் பாக்கவாடா நாங்க இப்டி 200 ரூவாய்க்கு டிக்கெட் எடுத்துக்கிட்டு வந்தோம்.. அஜித்த காமிங்கடா... நல்ல வேளை கொஞ்ச நேரத்துல நம்மாளும் வந்துட்டாரு.

முதல்பாதில வர்ற சீன்ஸ்லாம் நல்லாருக்குன்னு சொல்ல முடியாது. ஆனா அஜித் அந்த சீன்ல இருக்கதால வேற வழியே இல்ல. நல்லா இல்லைன்னாலும் நல்லா இருக்க மாதிரி மைண்டு செட் ஆயிக்குது.  ஒவ்வொரு ஷாட்லயும் வரைஞ்சி வச்ச படம் மாதிரி அவ்ளோ செமயா இருக்காரு. அதுவும் ஒரு சீன்ல ஒரு ப்ளாக் டிஷர்ட் போட்டுகிட்டு ஆர்ம்ஸ் தெரியிற மாதிரி இடுப்புல கைவச்சிட்டுநிப்பாரு பாருங்க.. ப்பா... சத்தியமா யாருக்கும் அந்த லுக் வரவே வராது. என்னடா யாருக்கும் வராது யாருக்கும் வராதுன்னு அப்பத்துலருந்து சொல்றேனேனு பாக்குறீங்களா? சரி வேற எந்த ஹீரோவையாது இந்த மாதிரி சுண்ணாம்பு சட்டி தலையோட நரைச்ச தாடியோட imagine பண்ணி பாருங்க.. பண்ணிபாத்தீங்களா? ரொம்ப கண்றாவியா இருக்குல்ல.. அதுக்கு தான் சொன்னேன். 

முதல்பாதி முழுக்க பெருசா எந்த ப்ரச்சனையும் தெரியல.. அஜித் நின்னா, திரும்புனா நடந்தா ஒரே சத்தம் தான் தியேட்டர்ல.  படம் ஓக்கே வாதான் போயிட்டு இருந்துச்சி. ஆனா செகண்ட் ஹாஃப் ஆரம்பிச்சோன்னா ஒரு ஃப்ளாஷ்பேக்க ஓப்பன் பண்ணாய்ங்க பாருங்க.. மூடி வச்ச பிரியாணிய மூணு நாள் கழிச்சி ஓப்பன் பண்ணா மாதிரி அப்புடி ஒரு பழைய வாடை. எத்தனை தடவ? எதோ விஷ்ணுவர்தன் ஒரு வருஷமா எடுக்குறாப்ளே.. நல்லா பண்ணிருப்பாப்ளேன்னு பாத்தா சிட்டிசன திரும்ப எடுக்கவாய்யா உன்னைய
கூப்டாய்ங்க? அதயும் ஒழுங்கா எடுத்துருக்கியா? ஃப்ளாஷ்பேக்கயும் அதுல வர்ற காரணங்களையும்  பாக்கும்போது இம்சை அரசன்ல வடிவேலு சொல்ற ஒரு டயலாக்குதான் ஞாபகம் வந்துச்சி. "ஒரு புறாவுக்கு போரா.. பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கிறது?"

மொதல்ல அஜித் எவ்வளவு சூப்பரா இருந்தாரோ அப்புடியே ஆப்போசிட் ஃப்ளாஷ்பேக்ல.. கண்றாவியா இருக்காரு. மீசை முழுக்க வழிச்சிட்டு வெள்ளை தலையோட பாக்கவே முடியில.. அசிங்கமா இருக்காரு. செம குண்டா வேற ஆயிட்டாரு. "மேலால வெடிக்குது வாடா" பாட்டோட visual சூப்பர். ஆனா  அதுல அஜித்துக்கு ஒரு டைட் டீ ஷர்ட்ட போட்டு விட்டு வேகமா வேற ஆடச்சொல்லிருக்காய்ங்க. அப்டியே அட்டகாசத்துல "தீபாவளி தல தீபாவளி" பாட்டுக்கு தல ஒரு ஸ்டெப்பு போடுவாரே..  அப்டியே கண்ணு முன்னால வந்துட்டு போச்சி.

ராணா டக்குபார்டி கொஞ்ச நேரம் வந்தாலும் ஆளு பெரிய சைஸ் விஷால் மாதிரி செமையா இருக்காரு.  ஏண்டா விஷாலே பெரிய சைஸ் தானே அதுல என்னடா பெரிய சைஸ் விஷாலுன்னு கேக்குறீங்களா? அட இவர பாருங்க.. பனை மரத்துல பாதி இருக்காரு. முதல் பாதிலயாது அஜித்த அப்பப்போ நடக்க விட்டு அப்பப்போ மீசிக் போட்டு ரசிகர்கள கத்த வச்சிகிட்டு இருந்தங்க. ரெண்டாவது பாதில அந்த மாதிரி சம்பவங்கள் கூட எதுவும் நடக்காததால ரசிகர்கள் என்ன பண்றதுன்னு தெரியாம உக்கார்ந்துருக்காங்க. ஒரு லட்சம் கோடி ஊழல், ஒரு லட்சத்தி 75 ஆயிரம் கோடி ஊழல்னு நாம பல ஊழல்கள கேட்டு பழகிட்டோம். அஜித் ஒருத்தர்கிட்ட போயி 200 கோடி ரூவா உழல பத்தி கொதிச்சி பேசிகிட்டு  இருக்கும் போது பக்கத்துலருந்து ஒருத்தரு "இன்னாப்பா 200 கோடிக்கு போய் இவ்ளொ பில்ட் அப் குடுத்து பேசிகிட்டு இருக்காரு" ங்குறாரு. நம்ம அரசியல் வாதிங்க நல்லா பழக்கி வச்சிருக்காங்க நம்மள.

ஒருத்தன கொல்லனும்னா சுட்டு தண்ணிக்குள்ள தூக்கி போடுவாய்ங்களா இல்லை தண்ணிக்குள்ள தூக்கி போட்டு சுடுவாய்ங்களா? நம்ம தமிழ்சினிமா வில்லன்கள் மட்டும் ஏன் இப்படி மங்கினிகளாவே சித்தரிக்கபடுறாய்ங்ன்னு தெரியில. ஹீரோவ தப்பிக்கனும்னே இதெல்லாம் பண்றாய்ங்க  ராஸ்கல்ஸ். முன்னாடி இருக்கவன பொட்டுன்னு நெத்தில  சுட்டு போடாம தோள் பட்டையில சுட்டு தண்ணிக்குள்ள தூக்கி போட்டு அப்புறமா சுடுறாய்ங்க.. இந்த கேம் நல்லாருக்குண்ணே... 

அதவிட செம்ம காமெடி ஆர்யா கேரக்டர். அவர் ஒரு செம்மையான hacker. சும்மா ஒரு லேப்டாப்ப வச்சிகிட்டு இன்னா வேணும்னாலும்  பண்ணுவாரு. இன்னா பண்ணுவாரா? ஸ்விஸ் பாங்க access பண்ணி எல்லா பணத்தையும் கொஞ்ச நேரத்துல ஆட்டைய போட்டுருவாரு. சும்ம இங்க உக்காந்து சிஸ்டம்ல ரெண்டு enter  ah மட்டும் தான் தட்டுவாரு.. அது உடனே connecting server ன்னு காட்டி பட்டுன்னு கனெக்ட் ஆயிரும். அது மட்டும் இல்லாம எந்த account லருந்து எந்த account க்கு பணம் transfer ஆயிருக்குன்னு world map ல graph lam வேற போட்டு காமிக்கும். அடேங்கப்பா… பலே பலே… 

அதுவும் க்ளைமாக்ஸ் வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது. அஜித்த எப்புடி ஸ்டைலா காட்டலாம்னு யோசிச்ச விஷ்ணுவர்தன் அதுல கொஞ்ச நேரத்தயாவது கதைய எப்புடி நல்லா எழுதலாம்னு யோசிச்சிருக்கலாம். விஷ்ணுவர்தன் மேல ஒரு தனி மரியாதை வச்சிருந்தேன். பொதுவா மொத படம் ஹிட் ஆயிட்டா அடுத்த படம் கண்டிப்ப அதே பார்முலால தான் எடுக்க பாப்பாங்க. ஆனா அறிந்தும் அறியாமலும் ஹிட்டுக்கு அப்புறம் பட்டியன்னு டோட்டல வித்யாசமான ஒரு படத்த குடுத்துருந்தாரு. அதுக்கப்புறம் வந்த சர்வமும் சரி, தெலுகு பஞ்சாவும் சரி அதே போல தான். ஒவ்வொன்னும் வேற வேற மாதிரி குடுத்துருந்தாரு. ஆனா இந்த தடவ ஏன் அருத பழசான ஒரு கதைய எடுத்துகிட்டார்னு தெரியல். 

அஜித் ஆர்யா மட்டும் இல்லாம கிஷோர் , அதுல் குல்கர்னி, ராணா டகுபார்டி ன்னு நிறைய கெத்தான ஆக்டருங்க. ஆனா என்ன ஆக்டருங்கள மட்டும் எடுத்து வச்சி என்ன பண்றது. கதை நல்லா இருந்தாதானே எதாது வேலைக்கு ஆவும். கிஷோர முதல் சீன்ல பாத்ததுமே செம சந்தோஷமா இருந்துச்சி.. சமீபத்துல எனக்கு ரொம்ப புடிச்ச ஆக்டருங்கள்ல அவரும் ஒருத்தரு. ஆனா படம் முடியும் போது கிஷோர இப்புடி டம்மி பீஸாக்கிட்டாய்ங்களேன்னு ரொம்ப வருத்தமா இருந்துச்சி. நயன் தாரா ஓக்கே.. டாப்ஸி கண்றாவி.

யுவனோட  BGM 1st half la விசில் சத்தத்தால சுத்தமா கேக்கவே இல்லை. செகண்ட் ஹாஃப்ல ஒரு தீம் சூப்பரா போட்டுருந்தாரு. 3 பாட்டு ஓக்கே. ரொம்ப நாள் கழிச்சி "ஹரே ராமா ஹரே கிரிஷ்ணா" ன்னு ஒரு சூப்பரான பாட்டு போட்டுருந்தாரு. கடைசில அத படத்துலயே காணும். கடைசில வர்ற  stylish தமிழச்சி பாட்டுக்கு பதிலா அத போட்டுருக்கலாம்.

இன்னும் ஒரு நாலு நாள்ல "தல தூள் டக்கருடோய்" ன்னு கத்துற சத்தமெல்லாம் கம்மி ஆயிடும். அப்போ தான் படம் உண்மையா எப்டி இருக்குன்னு எல்லாரும் பாப்பாங்க. அதுக்கப்புறம் படம் ரொம்ப நாள் தாங்காது.

யாருப்பா அது ஸ்டெரெய்ட்டா scroll பண்ணி கடைசி பாராவ படிக்கிறது? போங்க பாஸ் போய் மேலருந்து வாங்க.. :-)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...