Monday, December 31, 2012

கவுண்டர் தொகுத்து வழங்கும் கடுப்பேற்றிய படங்கள்- 2012 !!!


Share/Bookmark

கவுண்டர் மெக்கானிக் ஷாப் ஸ்டூல்ல தனியா உக்காந்து பொலம்பிக்கிட்டு இருக்காரு.

"என்னடா வாழ்க்கை இது... கரண்டு இருந்தா தான நாலு பேரு மோட்டார ஓட்டுவான்... அது ரிப்பேர் ஆகும்.. அத நம்ம கிட்ட கொண்டு வருவானுக.. இப்பல்லாம் வாங்குன மோட்டாரு ஓடாம புதுசா அப்புடியே இருக்கு.. இவனுக அத எப்ப ஓட்டுறது... அது எப்ப ரிப்பேர் ஆகுறது நமக்கு எப்போ தொழில் கெடைக்கிறது.... ஒரே குஸ்டமப்பா... பேசாம தொழில மாத்தி பழைய மாதிரி பெட்ரமாக்ஸ் லைட்டே விக்க ஆரம்பிச்சிட வேண்டியதுதான்.....ஆனா ஒண்ணே ஒண்ணுடா... கரண்டு பில்லு நா கட்னதே இல்லைடா... "

அப்ப அந்த வழியா செந்தில் டவுசரோட பாட்டு பாடிகிட்டே வர்றாரு...

"மக்காயாலா மக்காயாலா .... காய காவுவா...
மக்காயாலா மக்காயாலா காய காவுவா..."

கவுண்டர் மனசுக்குள் " என்ன இந்த கருநாய ஆப்ரிக்கா காட்டேரி எதும் அடிச்சிருச்சா...  வேற வேற மொழில என்னென்னவோ பேசிட்டு வர்றான்"

செந்தில் பக்கத்துல வந்து.. "என்னண்ணே ரொம்ப பிஸியா இருக்கீங்க போல"

கவுண்டர் : அடி செருப்பால நாயே... என்ன நக்கலா... ஏண்டா நானே நாலு நாளா எந்த இளிச்ச வாயனும் சிக்கமாட்டேங்குறானேன்னு கடுப்புல இருக்கேன்... நீவேற வெந்த புண்ணுல புள்ளையார பாச்சிகிட்டு... ஆமா அங்க வரும்போது வேற பாசையில என்னவோ பண்ணிட்டு வந்தியே என்ன ராஜா?

செந்தில்: அதுவாண்ணே... அது லேட்டஸ்ட் தமிழ் பாட்டுண்ணே..

கவுண்டர் :
என்னது தமிழ்பாட்டா? எங்க ஒருக்கா பாடு

செந்தில்  : மக்கயாலா மக்காயாலா காய காவுவா

கவுண்டர் : இய்ய்ய்... ஏண்டா கும்கி வாயா..  இது தமிழ்பாட்டா... கொக்கா கோலா கேள்வி பட்டுருகேன்.. அது என்னடா மக்காயாலா...

செந்தில்  : இப்பவெல்லாம் இதுதாண்ணே தமிழ்பாட்டு...

கவுண்டர்: சரி அது எதுவா வேணாலும் இருக்கட்டும்... இன்னொருக்கா இந்த பாட்ட பாடுன மவனே அடுத்த வேளை சோறு திங்ய வாயி இருக்காது.

செந்தில்   : ஒரு யூத்து பாட்டு பாடுனா உங்களுக்கு புடிக்காதே... சரி விடுங்க... நம்ம ஊரு  கொட்டாயில மத்தியான ஆட்டம் படத்துக்கு போவலாம்னு இருக்கேன் வர்றீங்களா...

கவுண்டர் : (காத பொத்திக்கிட்டு) அய்யோ... நா ஏற்கனவே இந்தவருசம் படம் பாத்து வாங்குனதெல்லாம் போதும்பா...  நீ ஆள விடு...

செந்தில் : அட அப்புடி என்ன படம்னே பாத்தீங்க... கொஞ்சம் சொன்னீங்கன்னா எனக்கும் கொஞம் டைம் பாஸாகும்.

கவுண்டர் : (செந்தில் காலர பொத்துனாப்புல புடிச்சி ) சரி வா சொல்றேன்... மவனே ஆரம்பிச்சிவிட்டு பாதில ஓடலாம்னு எதுவும் பாத்த, வாயில முன்னாடி ரெண்டு பல்லத்தவற மத்த எல்லாத்தையும் புடுங்கி
எரிஞ்சிருவேன்.

செந்தில் : சரி சொல்லுங்க...


 அஸ்தமனம்:


இந்த டைரக்டரு ஒரு நல்லவரு... இதுக்குமுன்னால ஒரு அருமையான படத்த எடுத்தவரு..  அப்புடின்னு ஒரு பன்னி சொன்னத நம்பி இந்த படத்துக்கு போனேன்... இந்த படத்த பாத்த அப்புறம் தான் தெரிஞ்சிது அந்த டைரக்டரு இதுக்கு முன்னால எப்புடி பட்ட படம் எடுத்துருப்பருன்னு. டேய் இது படமே அல்ல.. நாளைய இயக்குனர்ல போடவேண்டிய ஒரு short film.. 150 ரூவா பணத்த வாங்கிட்டு முக்கா மணி நேரத்துல படம் முடிஞ்சிருச்சின்னு அனுப்பிட்டானுகடா..  இந்த படத்தோட பேரு படத்துக்கு பொருந்துதோ இல்லையோ படம் பாக்க போறவனுகளுக்கு கரெக்டா பொருந்தும் அஸ்த்தமனம் - வக்காளி டேய்!!!!!!!
முரட்டுக்காளை:


கவுண்டர்: இந்த ஆப்பு மேல தேடிப்போய் உக்காருரதுன்னு கேள்விப்பட்டுருக்கியா? அது இது தான். ஏண்டா எடுத்த படத்த ஒரு சீனு கூட மாத்தாம எடுக்குறதுக்கு பேரு ரீமேக்காடா... நல்லா பண்றானுகப்பா ரீமேக்கு.. என்பது தொண்ணூரு வயசுல வரவேண்டிய கொழப்பமெல்லாம் எனக்கு இந்த படத்த  பாத்தப்புறம் வந்துருச்சி... நாமட்டும் போனா பரவால்ல..ஒரு நாலுபேர வேற கூட்டிப்போயிட்டேன்.. படம் பாத்துமுடிச்சப்புறம் என்ன எப்புடியெல்லாம் தூக்கி போட்டு மிதிச்சாங்க தெரியுமா? இங்ங்ங்ங்

செந்தில் : அய்யோ பாவம்

கவுண்டர்: நாயே..என்ன பீலிங்கா... வக்காளி தேவையில்லாத எடத்துல பீலிங்க் விட்ட அந்த படத்த போட்டு உன்ன உள்ள விட்டு ரூம சாத்திருவேன்முரட்டுக்காளை - அந்தக் காளைய கொல்லுங்கடா!!

SKY FALLசெந்தில்: அண்ணேன்... நீங்க இங்கிலீஸ் படம் லாம் பாப்பீங்களா?

கவுண்டர்: அட என்னடா மண்டையா இப்புடி கேட்டுபுட்ட.. எங்க தாத்தா காலத்துலருந்தே நாங்க  ஒரு இங்கிலீஸ் படம் விடாம பாத்துருவோம்... அதுவும் பாண்டு படம்னா எனக்கு அப்புடி ஒரு
பிரியம்...அக்காங்..

செந்தில்: இல்லையே.. நீங்க அண்ணிக்கு போதையில வேற படத்துக்கு போறதுக்கு பதிலா தெரியாம
இந்த படத்துக்கு பொய்ட்டதால்ல  கீழத்தெரு முணியாண்டி சொன்னான்.

கவுண்டர்:  த்துப்பூ... சொல்லிட்டானா...சரி வுடே... தெரிஞ்சி போனனோ தெரியாம போனணோ... ஏண்டா போனோம்னு ஆயிருச்சிடா... படத்த பாத்துட்டு எனக்கு வந்த கடுப்புல என் பக்கத்துல உக்கார்ந்துருந்தவன் மூக்குல
உட்டேன் பாரு ஒண்ணு... பொல பொலன்னு ரத்தம் வந்துருச்சி.. நல்ல வேளை இருக்குங்கறதால அவன் என் மூஞ்ச பாக்கல...

செந்தில்: (மூஞ்ச அழுகுற மாதிரி வச்சிகிட்டு) அண்ணேன்..அந்த பக்கத்துல உக்காந்து மூக்குல குத்துவாங்குனது வேற யாருமில்லை... நாந்தாண்ணே...

கவுண்டர் : அட கவ்தம் மேனன் மண்டையா....நீ தாணா அது..SKY FALL - கடல்லயே இல்லையாம்!!!

அரவான்:


செந்தில்: அண்ணே ஒரு சந்தேகம்

கவுண்டர் : டேய் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள சந்தேகமா சரி கேளூ

செந்தில்  :
இந்த படத்துக்கு ஏண்ணே அரவான்னு பேர் வச்சிருக்காய்ங்க.?

கவுண்டர் : கொஞ்சம் பக்கத்துல வா... (செந்தில் பக்கத்துல வந்ததும் கண்ணத்துல பொளேர்னு ஒண்ணுவிட்டு)  நாயே நானே அது தெரியாமதான் ஒரு வருசமா திரியிறேன். படத்த தான் ஒழுங்கா எடுக்க மாட்டேங் குறானுகன்னா பேராச்சும் புரியிற மாதிரி வைக்கிறானுகளான்னு பாரு... எதாவது ஒரு பழைய புத்தகத்த படிச்சிருப்பானுக.. அதுல எதாவது ஒருத்தன் பேரு அரவான்னு இருந்துருக்கும் அத அப்புடியே இங்க கொண்டு வந்து வச்சிட்டானுக... மக்களுக்கு புரியிற மாதிரி மட்டும் இவனுக பேர் வைக்கவே மாட்டனுக.அரவான் - தமிழ் சினிமாவில் ஒரு கருங்கல்!!!

தேவுடு ச்சேசின மனுசுலு:


செந்தில்: அண்ணே சந்தேகம் கேக்கலாமா...

கவுண்டர்: நீ என்ன கேக்கப்போறன்னு எனக்கு தெரியிங்... தமிழ் படம் பாக்கவே நமக்கு துப்பு இல்லை இதுல தெலுங்கு வேறயான்னு கேக்கப்போற.. அதான?

செந்தில்: ஆமண்ணே...

கவுண்டர் : என்னடா பண்றது நம்மூர்ல தான் இப்புடி கருமாந்துரமா படம் எடுக்குறாய்ங்கன்னு அந்தபக்கம் கொஞ்சம் போனேன்.. இந்த படத்துக்கு நம்மூர் படமே எவ்வளவோ தேவலாம் போலருக்கு. ஆனா ஒண்ணுடா... அங்க படம் நல்லாருக்கோ இல்லையோ... ஆனா படத்த பாத்தா ஒரே கலரு ஃபிகரு
கலரு ஃபிகருதான்.. ஃபுல் எஞ்ஜாய் மெண்ட்தேவுடு ச்சேசின மனுஷுலு

 செந்தில் : (லைட்டா உடம்ப நெளிச்சிகிட்டே) அண்ணே எனக்கு லைட்டா ஒண்ணுக்கு வருது..

கவுண்டர் : இருடி... நீ எதுக்காக ஓடுறன்னு தெரியிங்...அப்புடியே எஸ்கேப் ஆயிரலாம்னுதானே பாக்குற...
அது நடக்காது மகனே...


முகமூடி :


கவுண்டர் : நா அப்பவே சொன்னேன்... இந்த கருப்பு கண்ணாடி போட்ட நாய நம்பாதீங்க பாக்க திருடன் மாதிரியே இருக்கான்னு.. எவனாச்சும் கேட்டானுகளா...இப்ப எடுத்துருக்கான் பாருங்கையா ஒரு படம்... ஏண்டா  இங்கிலீஸ் படத்த பாத்து எடுத்தீங்களே அத ஒழுங்க எடுக்க மாட்டீங்களா... படத்துக்கு பேரு வச்சிருக்கான் பாருங்கையா முகமூடின்னு... மூஞ்ச மூடிகிட்டு கூட இந்த படத்த பாக்க முடியல... அதுகூட பரவால்லய்யா ஹீரோயின்னு ஒரு புள்ளைய போட்டுருக்கானுக... அத பாத்துட்டு வந்து என்னால நாலு நாளூ வீட்டுல சோறு திங்க முடியலய்யா...

செந்தில் : அய்யோ அப்புறம் என்னண்ணே பண்ணீங்க..

கவுண்டர் :
வேற என்ன பண்றது... கடையில் போயி புரோட்டா சாப்டு வந்தேன்...  முகமூடி - செம்ம காமெடி சார் நீங்க!!!

பில்லா 2 :


ஒரு தடவ ஒரு படத்த எடுத்து அது ஹிட்டாயிட்டா அத அப்புடியே விட மாட்டானுக.. அதுக்கு பார்ட் 1 பார்ட் 2லருந்து பார்ட் 5 வரைக்கும் எடுத்து அத நாரடிச்சிட்டு தான் மறுவேளை பாக்குறானுக..

செந்தில்: ஹாலிவுட்லயெல்லாம் அப்புடித்தானே பண்றாய்ங்க..

கவுண்டர்: அது ஹாலிவுட்லடா... பாப்பநாயக்கம் பட்டில உண்ட கட்டி வாங்கி திங்கிற நமக்கெல்லாம் எதுக்குடா இதெல்லாம்... அதுவும் ஒழுங்கா எடுத்தானுகளான்னா இல்லை... சரி சொந்தமாவாச்சும் எடுத்துருக்கலாம்னா அதுவும் இல்லை... ஒரு இங்கிலீஸ்படத்த அப்புடியே உல்டா அடிச்சிருக்கு இந்த டோலட்டி நாயி. அந்தாளே பாவம்... 4 படத்துல ஒரு படம் தான் அவருக்கு ஓடுது.. இவனுங்க என்னன்னா அவர வச்சி தான் ட்ரயல் எடுக்குறானுக...

செந்தில்: ஆமா அது என்ன இங்கிலீஸ் படம்னே...

கவுண்டர்: அதுவாடா... ஸ்கார் ஃபேஸ்

செந்தில் : யார் ஃபேஸ்ணே?

கவுண்டர் : உங்கொப்பன் பன்னிவாயன் ஃபேஸ்.. படுவா...

செந்தில் : அது எப்புடின்னே இங்க உக்காந்துட்டே எல்லா விஷயத்தயும் தெரிஞ்சி வச்சிருக்கீங்க...

கவுணட்ர் : தட் ஈஸ் ஆல் இன் ஆல் அழகுராஜா... பில்லா 2 - The டண்டனக்கா DON

தாண்டவம்:

கவுண்டர் : முன்னாடியெல்லாம் படம் எடுக்கறதுக்காக வெளியூர்க்கு போவானுக... இப்பலாம் வெளியூர்க்கு போறதுக்காவே படம் எடுக்க ஆரம்பிச்சிட்டானுக... ஊர் சுத்தி பாக்க ஆசப்பட்ட நாயி தனியா சொந்தகாசுல போவனும்... இளிச்சவாயி புரடியூசர் ஒருத்தன் கெடைச்சிட்டா போதும்... அமெரிக்கால தான்  எடுக்கனும்பானுக... லண்டன்லதான் எடுக்கனும்பானுக... சுச்சர்லாந்துல தான் எடுக்கனும்பானுக... ஏண்டா ஃபாரின்ல தான் எடுக்கனும்னு நாங்க என்னிக்காவது கேட்டுருக்கமாடா... இல்லை நம்ம ஊர்ல படம் எடுக்குறதுக்கு எடமே இல்லையா...

எடுக்குறதயாவது நல்லா எடுக்குறானுகளா பாரு... எப்பவும் தியேட்டர் காரங்களுக்கு நாம காசுகுடுத்து டிக்கெட் எடுப்போம்... ஆனா இந்த படம் முடிஞ்சி வரும் போது தியேட்டர் காரன் படம் பாக்க வந்த ஒவ்வொருத்தருக்கும் ஆஸ்பத்திரி செலவுக்கு நூறு ரூவா குடுத்து அனுப்புறாண்டா... தாண்டவம் - என்னது மகாத்மா காந்தி செத்துட்டாரா?

செந்தில் : அப்புறம் அண்ணேன்.. நா ரொம்ப நேரமா சொல்லுவீங்க சொல்லுவீங்கன்னு எதிர்பாக்குறேன் சொல்ல மாட்டேங்குறீங்களே...

கவுண்டர் : என்னது?

செந்தில்: இந்த மாற்றான் அப்புறம் நீ தானே என் பொன் வசந்தம் இதெல்லாம் லிஸ்ட்டுல வரவே இல்லையே...

கவுண்டர் : இந்த வருசம் நா செஞ்ச ஒரே நல்ல காரியம் இந்த ரெண்டு படத்தையும் பாக்காம விட்டது தான்...எப்பவும் எல்லாருக்கும் முன்னாடி போயி படம் பாத்து அடி வாங்கிட்டு வருவேன். இந்த ரெண்டு படத்துக்கும் எனக்கு முன்னாடி போனவங்க ரத்த களரியோட வெளிய வர்றத பாத்தே இந்த
படங்க எப்புடி இருக்கும்னு நா தெரிஞ்சிகிட்டேன்..

சரி உங்கொக்கா சாப்புட கூப்புடுறா.. நா பொய்ட்டு சாப்டு வர்றேன்... நீ கெளம்பு கடைய சாத்தனும்

செந்தில்
: (சந்தோசமாக) அண்ணேன் நீங்க சாப்டு வாங்கண்ணே நா கடைய பாத்துக்கறேன்...

கவுண்டர்: உன் வேலையெல்லாம் எனக்கு தெரியிங் மகனே... கடையில இப்ப மிச்சம் இருக்கதே நாலு ஸ்பேனரும் ரெண்டு திருப்புளியிங் தான்... அதயும் தூக்கிட்டு போயி வித்துரலாம்னு பாக்குற... அது நடக்காது மகனே... நீ கெளம்பு...

செந்தில் : (பாட்டு பாடிக்கிட்டே வெளிய போறாரு) மக்காயாலா மக்காயாலா காய காவுவா

கவுண்டர் : (ஒரு பெரிய கம்பிய எடுத்து செந்தில் மேல வீசி.... ஹைபிட்ச்ல) ஒக்கா மவனே இதுவே  கடைசியா இருக்கட்டும்.. இன்னொருக்கா இந்த பாட்ட பாடுன  கிரீஸ அள்ளி வாயில அப்பிருவேன்,...  படுவா...


Monday, December 10, 2012

அந்த அமேசான் காடுகள் மிகவும் ஆபத்தானவை!!! - MAN Vs WILD


Share/Bookmark
நம்ம இம்சை அரசன்ல வர்ற அக்காமாலா, கப்ஸி தயாரிக்கிற காட்சி ஞாபகம் இருக்கா? "அரைத்த புயங்கொட்டையை வெண்ணீரில் கலந்து கொதிக்க விட வேண்டும்.. பின்பு அதனுள்  ஒரு கைப்பிடியளவு மண்புழுக்களை அள்ளி போடவேண்டும்" னு சொன்னவுடனே ஒரு வேலையாள் வாந்தி எடுப்பன்.  "பின்பு அதனுள் ஒரு முயலை மூன்று நாட்கள் நீந்த விட வேண்டும். பிறகு பாம்பு கழட்டி போட்ட சட்டையில் நன்றாக வடிகட்ட வேண்டும்"னு ன்னு சொன்னதும் "நானெல்லாம் சாக்கடையிலேயே ஒரு மாமாங்கம் கூடுகட்டி வாழ்ந்தவனைய்யா"ன்னு சொன்ன வடிவேலுகூட வாந்தி எடுத்துருவாரு. அதே மாதிரிதான் இங்கயும்.இவிங்க பண்றத பாத்தா யாரா இருந்தாலும் உவ்வே தான்.

மிஞ்சி மிஞ்சி போனா நாம என்ன என்னத்த திம்போம்? கோழி , ஆடு, மீன், இராலு, நண்டு சிலபேரு மாடு, பன்னி கூட... ஆனா இவிங்க இருக்காய்ங்களே... நடக்குறது, ஓடுறது, ஓடுறது போடுறது, தாவுறது, தவழ்றதுலருந்து உயிரோட எதாவது கண்ணுக்கு தெரிஞ்சாலே புடிச்சி திண்ணுடுறாய்ங்க. ஆத்தாடி .டிஸ்கவரி Man Vs Wild la ஒருத்தன் வர்றான் பாருங்க.

இந்த ப்ரோக்ராம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால அமேசான் காட்டுல 3500 வகை பூச்சிங்க இருந்துச்சாம். ஆனா இப்ப வெறும் 350 வகைதான் இருக்காம். மத்ததுங்க எல்லாம் என்ன  ஆச்சா? இவன் எல்லாத்தையும் புடிச்சி திண்ணுட்டாங்க. வழில போயிகிட்டேஇருக்கான்... ஒரு தவளை அதுபாட்டுக்கு சிவனேன்னு ஒரு மரத்துல உக்காந்துருக்கு ... உடனே அத புடிச்சி "ஐ... இத கொஞ்ச நேரம் மென்னுகிட்டே நடக்கலாம்.. இது ரொம்ப சுவையா இருக்கும்" அப்புடின்னு உடனே வாய்க்குள்ள தூக்கி போட்டு மெல்ல ஆரம்பிச்சிடுறாய்ங்க.அவன கொஞ்ச நாளு அமேசான் காடுங்களுக்குள்ள தொடந்து நடமாட விட்டா அங்க உள்ள மிச்சம் இருக்குற பூச்சி இனங்களையெல்லாம் அடியோட திண்ணே அழிச்சிருவான்.அன்னிக்கு நா பாத்த ஒரு எபிசோடு

நம்மாளு வழக்கம் போல "இந்த காடுகள்ல மிகவும் கவனமா இருக்கனும்... இந்த காட்டுல கொடிய விஷமுள்ள பாம்புங்க நிறைய இருக்கு... அதுங்க மனுஷங்கள அப்புடியே விழுங்கிரும். அப்டின்னு சொல்லிகிட்டே பொயிட்டுருந்தான். திடீர்னு ஒரு மரத்த பாத்து 'இந்த மரப்பட்டைங்கள கொஞ்சம் சாப்டா பாம்பு கடிச்சா விஷம் ஏறுரத தடுக்கும் ன்னு கொஞ்சம் மரப்பட்டைங்கள  வெட்டி பையில போட்டுகிட்டான்... அவ்வளவு பயந்தவனாடா நீயி...

 கொஞ்ச தூரம் போயிட்டே இருந்துட்டு திடீர்னு "பாருங்க... பாருங்க இங்க பாருங்க" ன்னு கத்துனான். உண்மையிலயே ஒரு ஆறடி நீள பாம்பு ஆந்த்ரா மெஸ் அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்டா மாதிரி உப்பலான வயிரோட அந்த இடத்த விட்டு நகராம படுத்துருந்துச்சி.. சரி இவந்தான் பாம்ப கண்டா பயப்புடுவானே ஓடிருவான்னு பாத்தா மெதுவா அந்த பாம்புக்கு பின்னாடி போய் அது கழுத்த புடிச்சி தூக்கிட்டான்...

ஏன் இந்த குருட்டு நாயி ஓடாம இப்புடி பண்றான்னு பாத்தா... பையிலருந்து ஒரு கத்திய எடுத்து அந்த பாம்பு தலைய தனியா வெட்டி போட்டுட்டு அடுத்த அஞ்சி நிமிஷத்துல அந்த பாம்போட கொடல தனியா உருவி வெளிய எடுத்துட்டு "பாம்போட வெய்ட்டுல மூணுல ரெண்டு பகுதி அதோட குடல் தான்... அதுனால குடல தனியா எடுத்துட்டா இத தூக்கிட்டு போக மிக ஈசியா இருக்கும்" அப்புடின்னு சொல்லிட்ட்டு அந்த பாம்ப அப்புடியே தோள்ல போட்டுகிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டான். ஏண்டா டேய் பாம்புககிட்டருந்து நீ தப்பிக்க மரத்து வேரெல்லாம் எடுத்து வச்சிருக்க உன்கிட்டருந்து தப்பிக்க அதுங்க எதடா எடுத்து வச்சிருக்கனும்? கொஞ்ச நேரத்துல அத நெருப்புல போட்டு சுட்டு "ஹ்ம்ம்ம்.... இன்னிக்கு நைட் டின்னர் ரொம்ப டேஸ்ட்டா இருக்கு... " ன்னு சாப்புட்டுகிட்டு இருக்குறான். அப்புறம் போயிட்டே இருந்தான்.. ஒரு பட்டுப்போன மரம் இருந்துச்சி.... அத ரெண்டா கையால ஒடைச்சிட்டு உள்ள பாத்தான்... பாத்துட்டு ஒரு ரியாக்சன் குடுத்தான் பாருங்க.. "ஹையோ நா இத கொஞ்சம் கூட எதிர்பாக்கல... நா ரொம்ப அதிர்ஷ்டக்காரன்" என்னடா இது இந்த நாய்க்கு மரத்துக்குள்ளருந்து பொதையல் எதுவும் கெடைச்சிருச்சோன்னு பாத்தா, உள்ள வெள்ளைக்கலர்ல சின்ன சின்ன புழுவா இருக்கு.

உடனே அதுல ரெண்ட கையில புடிச்சி "இந்த புழுக்கல்ல புரத சத்து மிகவும் அதிக அளவுல காணப்படுது.. அதுனால இதுங்கள கொஞ்சம் திண்ணா எனக்கு அதிக அளவுள சக்தி கிடைச்சி நா ரொம்ப தூரம் நடக்கலாம்" ன்னு சொல்லிட்டு அத வாயில போட்டு கருமுருன்னு மெண்ணு திண்ணுட்டான்... (உங்களூக்கு வாந்தி வர்ற மாதிரி இருக்குள்ள... எனக்கும் அதே ஃபீலிங் தான்) அதோட  மட்டும் இல்லாம "இந்த புழுக்கல நா கொஞ்சம் சேகரிச்சி வச்சிக்குறேன்... வழில நொறுக்கு தீனிமாதிரி இத உபயோகிச்சிகிட்டா நல்லா இருக்கும்"ன்னு சொல்லி ஒரு சின்ன சுருக்குபைபுல  மிச்சம் இருக்கதையும் அள்ளி போட்டுகிட்டு கெளம்பிட்டான். என்ன வாயிடா அது என்ன வாயி?

அப்புறம் இதெல்லாம் முடிச்சிட்டு ஒரு குகைக்கு போணான்... " இங்க உள்ள போயி பாத்தா என்னோட நைட் சாப்பாட்டுக்கு எதாவது கிடைக்கும்முனு நினைக்கிறேன்"னு உள்ள போயி தீ பந்தந்த வச்சிகிட்டு தேடுனான்... ஒரு ப்ரம்மாண்டமான பெருச்சாளி... "இது மட்டும் புடிச்சிட்டா எனக்கு இன்னும் ரெண்டு வேளைக்கு சாப்பாட்டு ப்ரச்சனையே இல்ல" அப்புடின்னு சொல்லிகிட்டெ அத தொறத்த அது டக்குன்னு ஒரு பொந்துக்குள்ள ஓடிருச்சி..
அதுக்கு ஆயுசு கெட்டி போல..  அப்புறம் அந்த குகையையே சுத்தி பாத்த அவன்
"இங்க பாருங்களேன்... என்னால இத நம்பவே முடியலன்னு" ஒரு ஜெர்க்க குடுத்தான்.. அய்யய்ய திரும்ப எதோ புழுங்கள பாத்துட்டான் போலருக்குடான்னு நெனச்சா இந்த தடவ  புழு இல்ல... பூச்சி.. சிலந்தி பூச்சி... ஒரு பெரிய சிலந்தி பூச்சி ஒண்ணு வலையில நின்னுச்சி..

"இங்க பாருங்களேன்.. இவ்வளவு பெரிய சிலந்தி பூச்சிய நா பாத்ததே இல்லை... நா தேள் சாப்புட்ட்டுருக்கேன்.. நட்டுவாக்கிளி சாப்டுருக்கேன்... ஆனா இவ்வளவு பெரிய சிலந்திய சாப்டதே இல்லை.. அதோட உடம்ப பாருங்களேன்... தேள் மாதிரியே இருக்கு  இது எதோ hybrid வகைய சேந்ததுன்னு நெனைக்கிறேன்" (ஏன்டா இல்லைன்னா மட்டும்
அத திங்காமயா விடப்போற... திண்ணு தொலை) அந்த சிலந்தி பூச்சிய கையில எடுத்து  மிஸ்டர் பீன் இரால சாப்புடுற மாதிரியே அந்த பூச்சிய கடிச்சிட்டு ஒண்ணு சொன்னான் பாருங்க... "நா அந்த சிலந்தியோட பின் பகுதிய கடிச்சிட்டேன்னு நெனைக்கிறேன்". ஏண்டா 6 அடி நீள பாம்பையா தூக்கிப்போட்டு தூர் வாருற.. இதுல சிலந்திய நீ முன்னால கடிச்ச என்ன பின்னால கடிச்சா என்ன?


இந்தாளுக்கு காட்டுல இருக்கதுங்கள எப்புயெல்லாம் கொல்லலாம்னுதான் ஸ்பெசல் ட்ரெயினிங் குடுத்துருப்பாய்ங்க போல. ஒரு நாள் போயிட்டே இருந்தான். திடீர்னு நின்னான்... "இங்க எங்கயோ கோழிங்க கத்துற சத்தம் கேக்குது.  அதுனால நா இங்கயே கொஞ்ச நேரம் தங்கி இருந்து அதுங்கள வேட்டையாட போறேன்னு படக்குன்னு நாலு குச்சிங்கள வெட்டுனான், ரெண்டுமூனு கெளைங்கள அப்புடியே ஒடிச்சான் ஒரு ஒருமணி நேரத்துல
கடையவே போட்டுட்டான். கிட்டத்தட்ட ஒரு ஆளு தூங்குற மாதிரி ஒரு சின்ன வீட்டையே கட்டிபுட்டான்.  "சரி இப்ப வேட்டையாடனும்... ஆனா அதுக்கு எனக்கு இப்போ அம்புங்க வேணும்" நேரான ஒரு குச்சியை ஒடைச்சான்..

அங்கன்னு பாத்து எவனோ பல வருசத்த்துக்கு முன்னாடி குடிச்சிட்டு போட்ட ஒரு பாதி  பீர் பாட்டில் கெடக்கு. அதோட அடிப்பகுதியே அப்புடியே கொஞ்ச கொஞ்சமா ஒடச்சி கூரா ஆக்கி அந்த குச்சிக்கு மொனையில வச்சி கட்டிட்டான்... அம்பு ரெடி... அடப்பாவி பல வித்தைகள கையில வச்சிருக்கான்யா. சும்மாவே ஜங்கு ஜங்குன்னு ஆடுவான்... இதுல சலங்கைய வேற கட்டியாச்சின்னா குஷிதான்... வெறும் கையையும் வாயையும் வச்சே பல ப்ராணிகளை கடிச்சி திண்ணவனுக்கு அம்பு கெடைச்தும் சும்மா இருப்பானா.. பத்தே நிமிசம் தான்.. 3 அடிக்கு ஒரு வான் கோழிமாதிரி எதையோ தூக்கிட்டு வந்துட்டான். அப்புறம் என்ன உக்காந்து மேய வேண்டியதுதான். நெருப்ப கொழுத்தி போட்டு, பாதி கோழிய சுட்டு திண்ணுட்டு பாதிய எடுத்து பைக்குள்ள வச்சிகிட்டான்.

அப்புறம் படுக்கும் போது சொல்றான். "நா இந்த நெருப்ப அணைக்க மாட்டேன்.. இது தான் என்ன காட்டு  விலங்குகள்கிட்டருந்து பாதுகாக்க உதவும்"

டேய் அதுங்க ஏண்டா உன்ன தேடி  வரப்போவுது...உன்னத்தேடி ஒரு காட்டு விலங்கு வருதுண்ணா அதுக்கு  விதி முடிஞ்சி போச்சின்னு  அர்த்தம்டா!!

Wednesday, December 5, 2012

நடுவுல கொஞ்சம் "எதையோ" காணும்!!!


Share/Bookmark
தலைப்ப பாத்ததும் "ஹையய்யோ இவனும் அது மாதிரி எழுத ஆரம்பிச்சிட்டானேன்னு அசிங்கமா திட்ட ஆரம்பிச்சிருப்பீங்களே.. சரி விடுங்க... இங்க என்ன என்னத்த காணும்னு பாப்போம்

 Monday, December 3, 2012

DAMARUKAM - அரைச்ச மாவ அரைப்போமா!!!


Share/Bookmark
அடுத்த மாசம் வருதுங்க... என்ன வரலியா? அப்ப தீவாளிக்கு வரும்.. என்னது தீவாளிக்கும் வரலியா? அப்ப கண்டிப்பா அடுத்த வாரம் வந்துரும்.  அட இப்பவும் வரலியா? அட என்னங்க  போங்க... இப்புடி பல ரிலீஸ் தேதிகளை குடுத்து பல ப்ரச்சனைங்களால தள்ளிப்போன தமருகம்  கடைசியா ரிலீஸ் ஆயிருச்சிப்பா.. ஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னால வேலை விஷயமா ஹைதராபாத் போயிருந்தப்ப எல்லா channel லயும் ஒரே தமுருகம் விளம்பரம் தான்.. இன்னும் சொல்லப்போனா  ஒரு சேனல்ல தமருகம் ரிலீஸுக்கு மூணு நாளுக்கு முன்னாடி கவுண்டவுன் எல்லாம் ஓடிட்டு   இருந்துச்சி. அன்னிக்கு தமருகம் ரிலீஸ் தேதி... காலைல கம்பெனி போற வழில ஒரு தியேட்டர்ல அந்த பட போஸ்டர் போட்டுருந்தாய்ங்க.. சரி என்ன ஆனாலும் சரி ராத்திரி அடிச்சி புடிச்சி  டிக்கெட் வாங்கி பாத்துட வேண்டியதுதான்னு நெனச்சிட்டு போனேன்.. சாய்ங்கலாம் திரும்பி வரும்போது பாத்தா அதுல வேற எதோ ஒரு இங்கிலீஷ் படம் போஸ்டர் போட்டுருந்தாய்ங்க..

"அட பாவிகளா... எங்க ஊர்ல படம் மொக்கையானா ஒரு ரெண்டு நாள் கழிச்சி தானடா தியேட்டர்லருந்து  தூக்குவோம்.. இவிங்க என்னனா ரெண்டே ஷோவுல தூக்கிட்டாய்ங்களே... அவளவு கோவக்காரய்ங்களாய்யா நீங்க?" ன்னு நெனைச்சிட்டு போனேன்.. அப்புறம் தான் தெரிஞ்சிது அன்னிக்கு ரிலீஸ் ஆக வேண்டிய  படம் ரிலீஸ் ஆகலன்னு. சரி படத்துக்கு வருவோம்...

அட நம்மூர் சினிமாவுல இந்த பஞ்ச பூதங்களை அடக்க நினைக்கிற அரக்கர்கள் எப்பதான்  ஒழியுவாய்ங்கன்னே தெரியலப்பா... அந்த ஏழு கிரகங்களும் ஒண்ணு சேர்ர நாள் அன்னிக்கு  இந்த நட்சத்துரத்துல பொறந்த ஒரு பொண்ண பலி கொடுத்தா பஞ்ச பூதங்களும் உன் கட்டுப்படுத்தலாம். இதுதான் விட்டலாச்சாரியா காலத்து வில்லன்கள்லருந்து இப்பவரைக்கும் நம்மூர் படங்கள்ல  அரக்கன்கள் செய்யிற வேலை... பசிச்சா ஒரு பண்ண வாங்கி திண்ணூங்க... காசு இருந்தா ரெண்டு வடைய  வாங்கி திண்ணுங்க .அப்புடி அந்த பூதங்களையெல்லாம் கட்டுப்படுத்தி என்னடா பண்ணப்போறீங்க

இங்கயும் அதே கதைதான்... அசுர குலத்துல ஒக்கே ஒக்க அசுரன் மட்டும் தான் மிச்சம் இருக்கான். அவன் ஒரு புள்ளைய பலி கொடுத்தா 5 பூதங்களும் அவரு கண்ட்ரோல்ல வந்துரும்.. அந்த  அசுரன் வேற யாரும் இல்ல... நம்ம வேட்டைகாரன்ல "வா.....டாஆஆஆஆ"ன்னு ஒருத்தர்  வந்து ஹைபிட்ச்ல கத்துவாரே அவரேதான். எல்லாருக்கும் மண்டை மேல முடி மொளச்சிருக்கும் ஆனா இவருக்கு பாம்பு முளச்சிருக்கு.. தலை நிறையா கசகசன்னு ஒரே பாம்புங்க... இந்த பாம்புகள  கிராஃபிக்ஸ் பண்ணதான் இவிங்களுக்கு நேரம் ஆயிருச்சி போல...

யாரோ ஒரு புள்ளைய பலி கொடுக்கனும்னு சொன்னோமே...ஆங் அது வேற யாரும் இல்ல... நம்ம  அனுஷ்காதான்.. இந்த படத்துல அனுஷ்கா performance காமிக்கிற மாதிரி எந்த காட்சியும் இல்ல. மற்ற சாதா ஹீரோயின் மாதிரி சும்மா வந்துட்டு போறாங்க. சிறப்பா சொல்றமாதிரி எதுவும் இல்லை.

ப்ரகாஷ்ராஜ்... அய்யோ கடவுள்... இவருக்கு செட் ஆகாத வேஷமே இல்ல போல எதுவா இருந்தாலும்  பிண்ணி பெடல் எடுக்குறாரு... இந்த படத்துல சிவபெருமானா வர்றாரு. இவருக்கும் performance காமிக்கிற மாதிரி சீன் எதுவும் இல்லைன்னாலும் அவரு வேலைய கரெக்டா பண்ணிருக்காரு. நம்ம அறை எண் 302ல் கடவுள்ல வர்ற மாதிரியே , கடவுள்னு சொல்லாம ஹீரோ கூட இருந்து அவருக்கு உதவி பண்ணிட்டு இருக்காரு. அப்புறம் ப்ரம்மானந்தம் வரவர படு மொக்கையாயிட்டே வர்றாரு.. காமெடியெல்லாம் ஒண்ணும் வேலைக்கு ஆகல..


சரிக் கமப் பத நீசே... கபக் கபக் கப, கபக் கபக் கப ஜல்சே... இது.தல DSP யோட 50 வது படம். 3 பாட்டு ஓக்கே.. நம்ம சார்மி வந்து ஆடுற "கும்மாங் கும்மாங் சாய்" பாட்டு செம... ட்ரெயிலர்ல  அந்த பாட்ட பாத்துட்டு அதுக்காக படத்துக்கு போறவாங்க ஏராளம். அப்றம் தல ஷங்கர் மகாதேவன் பாடுன க்ளைமாக்ஸ் பாட்டும் சூப்பர். க்ளைமாக்ஸ் பாட்டுனோன வழக்கம்போல குத்துப்பாட்டுன்னு நெனைப்பீங்களே... அதான் இல்லை... இது அகோரிங்க டான்ஸ் ஆடுற பாட்டு... கடைசி வரைக்கும் "Hello everybody....This is DSPeeeeeeeeeeeeeeee" அப்புடின்னு எதாது பாட்டு வந்துருமோன்னு பயந்துட்டே இருந்தேன்.. நல்ல வேளை வரல...

அப்புறம் யாரோ ஒருத்தர விட்டுட்டோமே.. ஆங்... நம்ம நாகர்ஜூனா கூட இந்த
படத்துல நடிச்சிருக்காருப்பா... என்னது ஹீரோவா? ச்ச ச்ச ... அதெல்லாம் இல்லை... அனுஷ்காவ காப்பாத்துற கெஸ்ட் ரோல்ல நடிச்சிருக்காரு... படம் ஆரம்பிச்சி 25 நிமிஷம் கழிச்சி தான் நாகர்ஜூனாவே வர்றாரு... படத்துல இவரு வர்ற காட்சிகள விட மத்தவங்க வர்ற காட்சிகள் தான் அதிகம்.. ஆரம்பத்துல பயங்கர சிவ பக்தனா இருந்துட்டு அப்புறம் குடும்பத்த இழந்தபிறது சிவன்கற பேரகேட்டாலே வெறுக்குற மாதிரியான கேரக்டர் இவருக்கு. ஆனா அத வச்சிகிட்டே பல காட்சிகள்ல மொக்கைய போடுறது செம கடுப்பு.  ஆளு ஆனா செமயா இருக்காரு...  க்ளைமாக்ஸ் பாட்டுல சிக்ஸ் பேக்கோட வர்றப்ப கெத்தா இருக்காரு... ஆனா நம்மாளுக்கு டான்ஸ் சுத்தமா வராது போல.. பாட்டெல்லாம் செம காமெடி.... அப்புறம் க்ளைமாக்ஸ்ல ல ஒரு கிராஃபிக்ஸ் மிருகதோட சண்ட போடுறாரு... பாக்க எதோ கார்ட்டூன் படம் பாத்த ஃபீலிங்கு.. அதோட மிரட்டல் அடி 2 க்ளைமாக்ஸ்ல ஹீரோ மேகத்துக்கு உள்ள போனதும் புத்தர் தெரிவாரு. அத பாத்துட்டு வந்து வில்லன கொல்லுவாரு. அத அப்புடியே இங்க ஆட்டைய போட்டு, க்ளைமாக்ஸ் சீனா வச்சிருக்காய்ங்க. இங்க புத்தருக்கு பதிலா சிவன்.

கிராஃபிக்ஸ்க்கு ரொம்ப உழைச்சிருக்காங்க.. நிறைய காட்சிகள் நல்லா இருந்தாலும் ஒரு சில காட்சிகள் இது தெலுகு பட கிராஃபிக்ஸ்ங்கறத அப்பட்டமா காட்டிக் குடுக்குற அளவு கப்பியா இருக்கு. மத்தபடி பெருசா சொல்லும் படியா எதுவும் இல்லை. வீண் பில்ட் அப் குடுத்தது மட்டும் தான் மிச்சம்.  சுருக்கமா சொல்லப்போனா "அரைச்ச மாவ அரைப்போமா துவைச்ச துணிய துவைப்போமா" தான்


Monday, November 19, 2012

துப்பாக்கி - விஜய்யின் மங்காத்தா!!!


Share/Bookmark
படம் பாக்க வர்றவிங்கள பஞ்ச் டயலாக் பேசியே தியேட்டர விட்டு அலற அலற ஓட விட்ட டாக்டர் விஜய்கிட்டருந்து இப்புடி ஒரு படம் வந்துருக்கத பாத்து நா மட்டும் இல்ல தமிழ்நாடே ஸாக் ஆயிருச்சி. கில்லிங்குற ஒரு மிகப்பெரிய வெற்றிக்கு அப்புறம் தமிழ்நாடே தன்னோட கைக்குள்ள வந்துட்டதா நெனைச்சி நம்மாளு அடுத்தடுத்த படங்கள்ல பேசுன பஞ்ச் டயலாக்குகளால நம்மூர காலி பண்ணிட்டு வடநாட்டுல போய் செட்டில் ஆனவங்க ஆயிரக்கணக்கானபேரு விஜய்ங்கர ஏரியாவுலருந்து அஜித்துங்குற ஏரியாவுக்கு தாவுனவுங்க லட்சக்கணக்கானபேரு. ரொம்ப நாளுக்கு முன்னாடி குனிஞ்ச விஜய் ரசிகர்களோட 'தல'ய தைரியமா நிமிர்ந்து பாக்க வைக்க ஒரு படம் துப்பாக்கி. 


வரிசையா வெற்றிப்பாதையில போய்கிட்டிருந்த முருகதாஸுக்கு 7ம் அறிவுல அடியப்போட்டதும் நம்மாளு உசாராயிட்டாரு. சாதாரண ஒரு ஒன்லைணுக்கு உருண்டு பெரண்டு ஒரு செமயான ஸ்கிரீன் ப்ளே எழுதி, பட்டைய கெளப்பிருக்காரு. இந்த வருஷத்துல பயங்கர build up ஒட வந்த பல பெரிய படங்கள்  மண்ணை கவ்வ,   நம்ம டுப்பாக்கியும் அந்த வரிசையில சேந்துருமோன்னு பயந்திருந்த பல  விஜய் ரசிகர்களோட மனசுல பீர வாத்துருக்காங்க. (மிஸ்டர் முருகதாஸூ..விஜய வச்சி டைம் பாஸ் பண்ணிகிட்டு இருந்த எங்க நெலைமையெல்லாம் யோசிச்சி பாத்தீங்களா...)

இந்த படத்தோட வெற்றிக்கு ரெண்டே விஷயம் தான்...  ஒண்ணு முருகதாஸோட ஸ்கிரீன் ப்ளே.. இன்னொன்னு விஜய்... மிலிட்ரி ஆஃபீசரா வர்றா இவரோட கெட்டப்பும் சரி ஆளும் சரி... சூப்பர்... எந்தவித மான அலட்டலும் இல்லாம, ஒவ்வொரு காட்சிலயும் பின்னி  பெடல் எடுத்துருக்காரு. காஸ்ட்யூமும் செம. வாய கட்டுனாதான்யா இவர மனுசனாவே மதிக்க முடியுது. ஒரு செக்யூரிட்டிகிட்ட பேசி அவர தற்கொலை பண்ண வைக்கிற சீன்ல விஜயோட டயாலக் டெலிவரி தாறுமாறு... முதல் பாதி ரொம்ப ஸ்லோவா நகந்தாலும் இண்டர்லல் சீன பாத்துட்டு எழும்பும் போது அந்த நெனப்பெல்லாம்  காணாம போயிடுது. காட்டுத்தனமான  அடிதடியெல்லாம் இல்லாம நீட்டான காட்சிகள்

என்னங்க? ஹாரிஸ் ஜெயராஜ பத்தியா? அவர ஏங்க வம்புக்கு இழுக்குறீங்க... அவர நம்பி வர்றவங்களுக்கெல்லாம் அவர்ட்ட இருக்க அந்த நாலு ட்யூன போட்டுகுடுத்துட்டு அவரு பாட்டுக்கு அவரு சோலிய பாத்துகிட்டு இருக்காரு...  இதுல விஜய்க்கு வர்ற அந்த தீம் சூப்பர். அத தவற BGM அதுபாட்டுக்கு சம்பந்தம் இல்லாம் எதோ ஒடிகிட்டு இருக்கு. "வாராயோ வாராயோ காதல்  கொள்ள" "வெண்நிலவே வெள்ளி வெள்ளீ நிலவே" இந்த பாட்டு ட்யூனுங்களயெல்லாம் BGM ah  போட்டு வச்சிருக்காரு.. சனியன் கடைசி வரைக்கும் திருந்தாது போல. கேமரா சூப்பர். பஸ்ல குண்டு வெடிக்கிற மாதிரி ஒரு சீன் செமயா இருக்கு.

சில கடுப்புகள்:

படத்துல கடியான ஒரு விஷயம் என்னன்னா இந்த காஜல் அகர்வால் வர்ற சீன்ஸ் தான்.  கண்றாவி... மொக்கைய போட்டு சாவடிக்குது... அதுகூட பரவால்ல.. அதுக்கு ஒரு வாய்ஸ்  டப்பிங் குடுத்துருக்கானுங்க பாருங்க... அத கேக்கும்போது காதுக்குள்ள காய்ச்சின கம்பிய விட்டு  கொடாயிற மாதிரி ஒரு ஃபீலிங்கு... அதுகூட பரவால்ல... சத்யன் அதுக்கும் மேல... காட்டு மொக்கை.

ஹாரிஸ் "அதே டெய்லர் அதே வாடகை" பாடல்கள குடுத்துருந்தாலும் எல்லா பாட்டுமே நல்லா  தான் இருக்கு. ஆனா பாட்டு picturization செம கப்பி.. "குட்டி புலி கூட்டம்" பாட்டு என்னோட  ஃபேவரெட்... ஆன அத ஸ்கிரீன்ல பாக்க எதோ பாட்ட எடுத்து அத ஸ்லோ மோஷன்ல  போட்டு பாக்குற மாதிரி இருந்துச்சி... அப்புறம் இன்னொன்னு இந்த பாட்டு முடிஞ்ச அடுத்த  5 வது நிமிஷத்துல அடுத்த பாட்டு... ஆதத்தாடி... காஜல ஓப்பன் டைப் பொண்ணுனு  காமிக்கிறாங்க... அதுக்குன்னு ஒருத்தன் ஒரு விளாட்டுதான் வெளயாட முடியும்... ஆனா  காஜல் அந்த பாட்டு முடியிறதுக்குள்ள, லாங் ஜம்ப், ஹை ஜம்ப், பாக்சிங், ரக்பி, ஜாவ்லின் த்ரோ, டென்னிஸ், ஹாக்கின்னு  இந்தியாவுல இருக்க அனைத்து விளையாட்டுகளையும் விளையாடுறாங்க... ஆனாலும் அவங்க  ரொம்ப வெளையாடுறாங்க முருகதாஸ் சார்... அலக்கெல்க்கா, கூகிள் பாட்டுங்க ஓக்கே...  வழக்கமா விஜய் பாடல் காட்சிகள்ல தரையில படுத்து ஆடுறேன்னு சர்க்கஸ் பண்ணுவாரே  அந்த மாதிரி காட்சிகள் எதுவும் இல்ல்லாதது ரொம்ப சந்தொஷம்

வில்லன்னு ஒருத்தன் இருக்கான்யா... ஆட்டுத் தொடைய அப்புடியே அடிப்பான் போலருக்கு.. கை ஒண்ணு ஒண்ணும் ஆலமர தூரு மாதிரி இருக்கு. இந்த மாதிரி body builder வில்லன்கள  போடுறதால ஒரு கடுப்பு என்னன்னா க்ளைமாக்ஸ்ல ஹீரோவோட ஒரு one to one fight வச்சே ஆகோனும்... அப்ப தானே அந்த சிக்ஸ்பேக்குக்கு ஒரு மதிப்பு... அதுமாதிரி ஒரு ஃபைட்டுக்காக
1945லருந்து ஒரு சீன் தான் இப்ப வரைக்கும்... ஹீரோ தலையில துப்பாக்கிய வில்லன்  வச்சிருவாரு.. சுட்டா மேட்டர் முடிஞ்சிரும்.. ஆனா சுட மாட்டாய்ங்க... திடீர்னு "உன்ன கொல்ல  எனக்கு துப்பாக்கியா...இஹா இஹா இஹா" ன்னு சொல்லிட்டு துப்பக்கிய ஒடைச்சி போட்டுட்டு  அப்புறம் ஹீரோ கையால அடி வாங்கியே சாவுவானுங்க... இதுலயும் அதுமாத்ரி ஒரு காட்சி இருக்கு... "சிக்ஸ் பேக்ஸ் வில்லன்கள் இருந்தால் திரைக்கதையில் வேறு என்னதான் மாற்றம் ஷெய்ய  முடியும்" ன்னு வி.எஸ்.ராகவன் ஸ்டைல்ல சொல்ற ஏ.ஆர்.முருகதாஸோட மைண்டு வாய்ஸ்  எனக்கு கேக்குது... உங்களுக்கு?.. இதுக்கு தான் பேசாமா தலைவர் ரகுவரன் மாதிரி வில்லன்களா போடனும்... அப்போ இந்த மாதிரி கப்பி காட்சிகளே வைக்க தேவையில்ல.

நிறைய காட்சிகள் செம மாஸ்ஸா இருந்தாலும், விஜய் ஒரு புள்ளி வச்ச வெள்ள பேப்பர்ல குத்து மதிப்பா நம்பர போட்டு அத மேப்பாக்குறது அல்டிமேட் காமெடி.. அதோட கோட்டு  போடுறத வச்சி  வில்லன் முலிட்டரி ஆஃபீசர்ஸ கண்டுபுடிக்கிறது அதுக்கும் மேல... என்னங்கடா நீங்களும் உங்க கண்டுபிடிப்பும்..

அப்புறம் விஜய் மிலிட்டரிங்குறாரு... சரி.. அப்புறம் அதுக்குள்ளயே வேற ஒரு சீக்ரெட்  ஆபீசருங்குறாரு. ஏங்க கேங்கும் நீங்க தான் லீடரும் நீங்கதானா... உங்களுக்கு பாஸூன்னு  யாரும் கெடையாதா...நீங்களா பாக்குறவிங்கள எல்லாம் போட்டு தள்றீங்க. என்ன பண்ணி  தொலைக்கிறது. உள்ள வந்துட்டா நீங்க சொல்றதயெல்லாம் நம்பித்தானே ஆகனும்.

ஆமா "taken" படத்த தான் நம்ம கேப்டன் விருதகிரிங்குற பேர்ல ஒரு சீன் கூட மாறாம தமிழ்ல ஏரீமேக் பண்ணிட்டாரே திரும்ப ஏன் அதே படத்துல போயி அதே டயலாக்க ஆட்டைய போட்டு "i am வொய்ட்டிங்"  ங்குற சீனா வச்சிருக்கீங்க... ஒரு வேள நீங்க விருதகிரி பாக்கல போலருக்கு.

எது எப்புடியோ படம் முடிஞ்சி வரும் போது கண்டிப்பா ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு நல்ல  படம் பாத்த எஃபெக்ட்டு. ஏற்கனவே தன்கிட்ட கதை சொல்ல வர்ற டைரக்டர்கள் கிட்ட "திருப்பாச்சி"  "சிவகாசி" பட dvd க்கள குடுத்து அதே போல காட்சி அமைக்க சொன்ன விஜய் இனி இந்த துப்பாக்கி படத்தின் DVD யை மட்டுமே கொடுப்பார் என நம்புவோம்.

என்னதான் விஜய்க்கு கில்லிங்குற படம் ஒரு மிகப்பெரிய ஹிட்டா இருந்தாலும், ப்ரகாஷ்ராஜ்  தான் முதல்ல ஞாபகம் வருவார். விஜய்ங்குற ஒரு நடிகருக்கு முழுசா கிடைச்ச மிகப்பெரிய வெற்றிப்படம்னா  இந்த துப்பாக்கி தான். சுருக்கமா சொல்லப்போனா 'தல' க்கு எப்புடி ஒரு மங்காத்தாவோ அதே மாதிரி விஜய்க்கு ஒரு துப்பாக்கி... இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படம். 

( இது விஜய் படத்துக்கு நா எழுதுற முதல் விமர்சனம். விஜய பத்தி நல்ல விதமா நா  எழுதியிருக்க முதல் பதிவும் இதுதான்னு நெனைக்கிறேன்)

Tuesday, November 6, 2012

SKY FALL - கடல்லயே இல்லையாம்!!!


Share/Bookmark
வின்னர்ல வடிவேலு வர்ற   இந்த காட்சி எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும்னு நெனைக்கிறேன். வடிவேலு மூஞ்சில அவங்க பாட்டி ஆரத்திய கரைச்சி ஊத்திரும்.. அப்ப வடிவேலு "பாத்தியாடா கெழவிக்கு ரவுச... ஆரத்திங்குற பேர்ல ஆசிட்ட மூஞ்சில கரைச்சி  ஊத்திட்டு போகுது..." ம்பாறு . அதுக்கு பக்கத்துல இருக்கவன்

"தல "உம்"னு ஒரு வார்த்தை சொல்லுங்க கெழவிய தூக்கிடுறேன்"

"ஏண்டா... அங்கன என்னய பொறட்டி பொறட்டி எடுத்தாய்ங்க... அப்பல்லாம் சும்மா இருந்துட்டு நாளைக்கு சாவப்போற கெழவியவா தூக்குறேங்குற" ம்பாறு... ஒரு வேலை கெழவிய தூக்கிரட்டுமான்னு கேட்டதுக்கு வடிவேலு "உம்"ன்னு சொல்லிருந்தாருன்னா என்ன நடந்துருக்கும்?

அது தான் இந்த ஸ்கை ஃபாலோட கதை...

ஒரு அகம்புடிச்ச கெழவி... ஏஜெண்டுக்கெல்லாம் ஏஜெண்ட்... MI6 ஓட த்லைவி...முன்னொரு காலத்துல ஒரு ஆப்ரேஷன்ல அதுகிட்ட வேலை பாத்த ஒரு ஏஜெண்ட்ட காப்பாத்தாம, சில பல காரணங்களுக்காக டீல்ல விட்டுருது... அதனால பல பாதிப்புக்கு உள்ளான அந்த  முன்னாள்  ஏஜெண்ட் கெழவிய தூக்கிரணும்னு முடிவோட திரியிறான்...  பேசாமா விட்டா கெழவி இன்னும் கொஞ்ச நாள்ல அதுவே மட்டை ஆயிரும்ங்கறது வேற விஷயம் ... இதுல ஜேம்ஸ் பாண்ட் பேரே  வர்லியேன்னு தானே யோசிக்கிறீங்க... அந்த கெழவிய  காப்பாத்துறதே நம்ம பாண்டு தான்... ச்ச... நம்ம P பாண்டு இல்ல... bond... James bond...படத்தோட முதல் காட்சியே தாறு மாறான ஒரு chasing... பத்து நிமிஷமும் பட்டைய  கெளப்பியிருப்பாய்ங்க.. ஒருத்தன நம்ம டேனியல் க்ரேக் ஓட ஓட வெரட்ட... அவரு எப்புடி  வெரட்டுராருன்னு அவரு கூட இருக்க பெண் ஏஜெண்ட் மூலமா கெழவி கேட்டுகிட்டே இருக்கு... ஒரு லெவல்ல ட்ரெயின் மேல டேனியல் க்ரேக்கும் வில்லனும் சண்டை போட்டுகிட்டு இருக்க.. கெழவி அந்த பொண்ணுகிட்ட வில்லன சுட சொல்லுது... ட்ரெயினும் ஓட, அதுமேல அவிங்க ரெண்டு பேரும் ஓட இந்த புள்ளை சுட முடியாம தெண்ற... நம்ம கெழவி 'M' டென்சனாயி "வக்காளி இப்ப சுடுறியா இல்லயாடி..."ங்குது...

பதட்டப்பட்டு பாப்பா மாரியாத்தா மேல பாரத்த போட்டு பொட்டுன்னு சுடுது... அது கரெக்டா குறி தவறாம நம்ம ஜேம்ஸ் பாண்ட சுட்ருது.. அவ்ளோதான்... பாண்டுக்கு ஓப்பணிங்லயே  எண்டு கார்டு போட்டுடாய்ங்களே... ட்ரெயின்லருந்து மல்லாந்துடுறாரு... உசேன் போல்ட்  மாதிரி 100 கிலோமீட்டர்  ஸ்பீடுல ஓடுனியே... இப்புடி ஒரே புல்லட்டுல மல்லாந்துட்டியே  என் தேசிங்கு ராசா.. ன்னு ஒரு சாங்கோட டைட்டில் போடுறாங்க... அந்த சாங்கும் சரி அந்த டைட்டில் அனிமேஷனும் சரி... தாறு மாறு...  

அவ்வளவுதான்.. அதுக்கப்புறம் படம் மட்டை... செத்துப்போன ஜேம்ஸ்பாண்ட் ஒரு செம்ம ஆக் சன் ப்ளாக்குல வந்து ரீ என்ட்ரி குடுப்பாருன்னு ஆவலோட இருந்தா, அடுத்த சீன்ல ஒரு அழகிகூட குஜால்ஸ் பண்ணிட்டு இருக்காரு... யோவ்... அந்த ட்ரெயின்லருந்து சம்மர் சாட் அடிச்சி  விழுந்தவன் தானே நீயி... இப்புடி சம்மர் வெகேஷனுக்கு வந்த மாதிரி சாலியா இருக்கா... நாங்க வேற எங்க ஊரு விஜயகாந்து, அர்ஜூனையெல்லாம் தப்பு சொல்லிகிட்டு இருக்கோமேய்யா.. 

கொஞ்ச நாள் அப்புடியே அந்தப்புற அழகிகளுடன் உலாவிக் கொண்டு இருக்குற James Bond அவிங்க ஆபீஸ்ல ஒரு குண்டு வெடிச்சதும், பொங்கி எழுந்து நரம்பு பொடைக்க திரும்ப  வேலைல join பண்ண போறாரு... அவிங்க என்னடான்னா திரும்ப எல்லா டெஸ்ட்லயும் பாஸ் பண்ணாதான் உன்ன வேலைக்கு சேத்துக்குவோம்னு சொல்லி நம்ம bond ah கலாய்ச்சிடுராங்க. ஒரு டெஸ்ட்ல கூட பாஸ் ஆவ மாட்டேங்குறாரு... காரணம்? வேற ஒண்ணும் இல்ல... நாக்கு தள்ளிருச்சி... ஃபுல் டைம் சரக்குலயே இருந்த அப்புறம் என்ன பண்ணும்? அப்புறம்  அந்த கெழவி ரெகமண்டேஷன்ல திரும்ப வேலைக்கு சேந்து வில்லன புடிக்கிறாரு...

வில்லன் யாருன்னு பாத்தா... அவன் ஒரு "அவன்"... தூரத்துலருந்து டயலாக் பேசிகிட்டே கொஞ்சம் கொஞ்சமா கேமரா முன்னால வர்ற வில்லனோட intro சூப்பர். வில்லனோட கேரக்டர் கிட்டத்தட்ட  ஜோக்கரோடது மாதிரியே இருக்கு... body language um சரி அவரு ஜெயில்ல இருக்கது ஜெயில்லருந்து தப்பிக்கிறதும் சரி கிட்டத்தட்ட எல்லாமே ஜோக்கரோட சீன்ஸ் மாதிரியே தான் இருக்கு. அந்த "அவன்" தான்  நம்ம "M" கெழவியல பாதிக்கப்பட்ட ஏஜெண்ட்.. கெழவிய  கொண்ணே ஆகனும்னு அடம் புடிக்கிறான்... அதோட ஒரு சீக்ரட் ஏஜென்ட்ஸ் லிஸ்ட்டயும்  ஆட்டைய போட்டு வச்சிகிட்டு கெழவிய பயமுறுத்துறான். ஞாயப்படி பாத்தா மொத சீன்ல சுட  சொன்னதுக்காக நம்ம Bond um வில்லன் கூட சேந்து தான் கெழவிய போட்டு தள்ளனும்... ஆனா என்ன பண்றது பாண்ட் ஹீரோவா பொய்ட்டாரு... கெழவிய காப்பாத்தியே ஆவனும்...

அதுக்காக அத அழைச்சிட்டு ஒரு சீக்ரட்டான எடத்துக்கு போயிட, அங்கயும் வில்லன் க்ரூப் வந்து அட்டாக் பண்ணுது...  கடைசில என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும்... வில்லன கொன்னு கெழவிய காப்பாத்திருப்பாரு பாண்டு... அப்புடித்தானே நெனைக்கிறீங்க... அதான் இல்லை... சண்டை முடிஞ்சதும் கெழவியும் அடிபட்டு செத்துருது...  மருதமலைல வடிவேலு அர்ஜூன பாத்து கேக்குற மாதிரி

"இதத்தானடா வில்லனும் முன்னாடியே செய்ய வந்தான்... அப்பவே கொன்னுருந்தா கெழவியோட  மட்டும் போயிருக்கும்... நீ ஏன் இப்ப தேவையில்லாம கெழவிய காப்பாத்துறேன்னு காட்டுக்குள்ள அழைச்சிட்டு வந்து 'U" turn எல்லாம் போட்டு ஒரு வீட்டை சல்லி சல்லியா நொறுக்கி...ஏன் இந்த ரத்த வெறி? " ன்னு ஜேம்ஸ் பாண்ட பாத்து நமக்கு கேக்க தோணூம்...


டேனியல் க்ரேக்... ஃபேஸ் கொஞம் ஃபிட் ஆகலன்னாலும் ஆளு செம ஃபிட்... கொஞ்ச நேர ஆக்சன் ப்ளாக்குன்னாலும் பிண்ணி எடுத்துருக்காரு...  ஆனா படத்தோட ஸ்டோரி, ஸ்கிரீன் ப்ளே அவ்வளவு சிறப்பா இல்லை... இவிங்க மொக்கையான ஒரு ஸ்டோரிய படமா எடுத்துட்டு கடைசில "ஜேம்ஸ் பாண்ட் கேரக்டருக்கு டேனியல் க்ரேக் சரிப்பட்டு வரமாட்டாருப்பா" ன்னு அவரு மேல பழிய தூக்கி போட்டுருவாய்ங்க... வழக்கமா நீங்க வெறும் bond ah இல்ல anabond ah ன்னு  கேக்குற அளவுக்கு   ரொமான்ஸ் சீன்ஸ் இருக்கும். இந்த படத்துல அதுவும் இல்லை. அதுனாலதான் படம் புல்லா டேனியல் க்ரேக் உம்முன்னே இருக்காரோ?


'M' பாட்டிய வச்சி இனிமே ஷூட்டிங்லாம் எடுக்க முடியாதுன்னு முடிவு பண்ணி இதுல அத போட்டு தள்ளிட்டாய்ங்க... ஹீரொயின்ஸ் மாதிரி ரெண்டு பேரு இருக்காங்க... மட்டம்... :(

படத்துல முதல் பதினைந்து நிமிடம் மட்டுமே பட்டைய கெளப்புது... அதுக்கப்புறம் மட்டையா மடங்கி எதோ கடனுக்குன்னு ஓடிகிட்டு இருக்கு....


Monday, October 29, 2012

பீட்சா - நல்லா கெளப்புறாய்ங்கையா பீதிய!!!!


Share/Bookmark
போன மாசம் 31ம் தேதி தாண்டவத்த பாத்துட்டு வீட்டுக்கு வந்தப்ப வந்த குளுர் ஜொரம் இன்னும் எனக்கு விட்ட பாடு இல்ல.. முகமூடி, தாண்டவம்னு மாறி மாறி அடி வாங்குனதுல தியேட்டர் பக்கம் போகவே இப்பல்லாம்அல்லு கெளம்புது. நல்ல வேளை மாற்றானுக்கு போகலாம்னு மொத நாளே முடிவு பண்ணி, மதுரை தங்கரீகல் தியேட்டர்ல வரிசையில நின்னு,  டிக்கெட் கெடைக்காததுனால மயிரிழைல உயிர் தப்பிச்சேன்.

ஒரு மாசமா படம் பாக்கலன்னதும் கண்ணெல்லாம் படக்குப் படக்குன்னு அடிக்க ஆரம்பிச்சிருச்சி..கையெல்லாம் நடுக்க ஆரம்பிச்சிருச்சி. சரி ஜொரம் கெடந்த கெடந்துட்டு போகுதுன்னு நம்ம க்ரோம்பேட்டை வெற்றி தியேட்டர்லயே ஆப்ரேஷன போட்ரலாம்னு ப்ளான் பண்ணேன். 2010ல எந்திரன் ரெண்டாவது தடவ வெற்றி காம்ப்ளெக்ஸல உள்ள ராகேஷ்ல பாத்ததுட்டு, "என்னடா இது நாம இங்க உக்கார்ந்துருந்தா ஒரு கிலோமீட்டருக்கு அந்தாண்ட குட்டி டிவில படம் ஓடிகிட்டு இருக்குன்னு" வெறிச்சி ஓடுனவந்தான். தாம்பரத்துக்கு மாறி 6 மாசத்துக்கு மேல ஆகியும் வெற்றில காம்ப்ளெக்ஸ்ல ஒரு படம் கூட பாத்தில்ல. இன்னிக்கு தூரமா போய் படம் பாக்குற அளவுக்கு பாடி தாங்காதுங்குறாதால  வெற்றிலயே பாத்தேன். ஸ்கிரீன் ரொம்பவே நல்லா இருந்துச்சி.

வழக்கமா எந்தப்டம் பாத்தாலும் எதாவது ஒரு காரணம் இருக்கும்.. பிடிச்ச ஹீரோ இல்லை பிடிச்ச டைரக்டர்னு... எதாவது.. ஆனா இந்த பீட்ஸா பாக்குறதுக்கு எந்த ரீசனும் இல்லை.. ஏன்னா யாரையுமே தெரியாது. ஹீரோவயும் ஹீரோயினையும் ஏற்கனவே ஒவ்வொரு படத்துல பாத்துருக்கேன் அவ்வளவுதான். ஆனா சமீபகாலமா வந்த பல படங்களை கம்பேர் பண்ணூம் போது ரொம்பவே சூப்பரான ஒரு படம் இந்த பீட்ஸா...

கதைய பாத்தா கிட்டத்தட்ட ஒரு short film எடுக்குற மாதிரியான கதைதான். ஆனா அதுக்கு சூப்பரா ஒரு ஸ்கிரீன் ப்ளே எழுதி பட்டைய கெளப்பிருக்காங்க. அதிகமான கேரக்டர்கள்லாம் இல்லை... மொத்தமாவே படத்துல ஒரு 10 கேரக்டர்ஸ் தான். அவங்களுக்குள்ளயே கதைய சுத்தவிட்டு முடிஞ்ச அளவு ட்விஸ்டுங்கள வச்சி ஆடியன்ஸ மெரள வச்சிருக்காங்க.


படத்தின் ப்ளஸ்:

1. தெளிவான கதை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை

2. மொக்கை போடாம , ஆங்கிலப்படங்கள் மாதிரியே முதல் காட்சியே கதைக்களத்திற்கு போயிடுது

3. தேவையில்லாத வழ வழ  கொழ கொழ சீன்கள் எதுவும் இல்லாம கதைக்கு தேவையான
சீன்கள் மட்டுமே இருக்கு.

4. இண்டர்வல்க்கு முந்தைய மற்றும் பிந்தைய கால் மணி நேரங்கள் தான் படத்தின் ஹைலைட். கொலை வெறி.... பீதிய கெளப்பி விட்டுடுறாய்ங்க

5. ஹீரோயின் ரம்யா... குள்ளநரி கூட்டத்துல இருந்தத விட இதுல சூப்பரா இருக்காங்கமைனஸ்:

ஏதாவது எதிர்பாத்து போயி இல்லைன்னாதான் மைனஸ் தெரியும்... இந்த படத்துக்கு எந்த எதிர்பார்ப்பும்  இல்லாம வந்தாதால எதுவும் மைனஸா தெரியல... எனக்கு பின் வரிசையில உக்காந்து ஒரு கருமம் புடிச்சவன் கச கசன்னு பேசிகிட்டே இருந்தான்.  அதுதான் ஒரே படம் பாக்கும்போது ஒரே
கடுப்பு.


டுப்பாக்கி :

 இன்டர்வல்ல துப்பாக்கியோட ரெண்டவாது ட்ரெயிலர் போட்டாய்ங்க...
என்னா சவுண்டு... "இன்னுமாடா இவர நம்பிக்கிட்டு இருக்கீங்கன்னு" ன்னு தோணுச்சி. அப்புறம் என்னன்னு தெரியல் ட்ரெயிலர் முடியும் போது விஜய் வாய நாய் கடிச்ச மாதிரி வச்சிகிட்டு "I am வொய்ட்டிங்" ங்குறாரு.. பாத்து படம் பாக்க போற நம்மள எதுவும் கடிச்சி வச்சிட போறாரு... உசாரய்யா உசாரு.    ட்ரெயிலர்ல பகவதி, வேட்டைக்காரன்னு எல்லாரயும் ஒண்ணா பாத்த ஒரு பீலிங்கு..


Monday, October 1, 2012

தாண்டவம் - என்னது மகாத்மா காந்தி செத்துட்டாரா?


Share/Bookmark
எனக்கு ஒண்ணு தான் புரியல... நம்ம ஊர்ல உள்ள மக்கள் எல்லாம் லவகுசாவுக்கு  அப்புறம் இப்பதான் தியேட்டர் போயி படம் பாக்குறோம்ன்னு இவிங்க மனசுல எதுவும் நம்ம மக்களைப் பத்தி நெனைச்சிட்டு இருக்காய்ங்களான்னு தெரில காந்தி காலத்துல  வரவேண்டிய படத்தையெல்லாம் இப்ப ரிலீஸ் பண்ணி இவியிங்க பண்ற அலும்பு இருக்கே.. ஆத்தாடி... அது எப்புடி கொஞ்சம் கூட வெக்கமே படமா இத ஒரு கதைன்னு எழுதி  அதுல நாலு பெரிய ஆக்டர்ஸ வேற நடிக்க வச்சி ரிலீஸ் பண்ணிருக்காய்ங்கன்னு தெரியலப்பா.

இந்த கொடுமையில இந்த கதைய என்னோட கதைன்னு ஒரு உதவி இயக்குனர் சொல்றாரு. இல்லைங்குறாரு மெயின் இயக்குனரு... டேய் இது உங்க ரெண்டு பேரோட கதையுமே  இல்லையேடா... கஜினி படத்தை திரும்ப எடுத்து வச்சிகிட்டு இதுக்கு ரெண்டு பேரும்  சண்டை வேற...  நன்னாரிப்பயலுகளா... கஜினியே ஆட்டைய போட்டது... ஆட்டைய போட்டதுலருந்தே ஆட்டைய போட்டுட்டீங்களா... இதுக்காகவே நம்ம டைரக்டர் விஜய்ய திருடர் குல திலகம் என்று இன்றிலிருந்து அன்போடு அழைப்போமாக...  ஆக்சுவலா இது தமிழ் சினிமாவோட பொதுக்கதைடா..

முதல் ரெண்டு சீன பாத்தாலே படத்தோட மொத்த கதையும் நமக்கு புரிஞ்சிடும். முதல் காட்சில லண்டன்ல நாலு இடத்துல குண்டு வெடிக்குது. உடனே ஒரு வருடத்திற்கு பிறகு ன்னு போட்டு அந்த குண்டு வெடிப்புல செத்தவங்களுக்கெல்லாம் அஞ்சலி செலுத்துறாங்க. அப்ப வர்றாரு நம்ம விக்ரம்.. நைட்டோட நைட்டா போயி ஒருத்தன போட்டுத் தள்றாரு.. இது பத்தாதா நமக்கு கதைய கணிக்க... அந்த குண்டு வெடிச்சதுல அனுஷ்கா செத்துப்போச்சி... அதுக்காக இவரு காரணமானவங்கள கொல்றாரு..  வாவ்...
கதை ரொம்ப புதுமையா இருக்குல்ல.

கொலைக்கான காரணத்த கண்டுபுடிக்கிற போலீஸ் ஆப்பீசர் கேரக்டர்ல நாசர்...  ஈழத் தமிழ் பேசுறேன்னு சொல்லிட்டு புதுசா தமிழ்ல நடிக்க வந்த மும்பை ஆக்ட்ரஸ் மாதிரி அப்பப்ப இடைஇடையே சிங்களத் தமிழ்ல பேசி வெறுப்பாக்குறாரு.  என்ன  கண்றாவிக்கு  இதெல்லாம்.   மிஸ்டர் விஜய் எல்லா படத்தையும் பாக்குற நீங்க ஒரு  தடவ தெனாலி படத்த பாத்துருக்கலாமே..இல்லன்னா நாசருக்கவது போட்டுக் காட்டியிருக்கலாம்.வரலன்னா விட்டுட வேண்டியது தானே... அந்த கேரக்டர் அந்த மாதிரி பேசனும்ங்கற அவசியம் கதையிலயும் இல்ல அந்த கேரக்டர்லயும் இல்லை. அப்புறம் ஏண்டா ஏன்? கதை நடக்குறது தான் லண்டன்ல... ஆனா திரும்புற பாக்கமெல்லாம் தமிழ் ஆப்பீசர்ஸ்தான்
இருக்காய்ங்க. அதோட பெரிய காமெடி நாசர் இந்த கொலைக்கேச இன்வெஸ்டிகேட் பண்ணுவாரு பாருங்க... பியூட்டிஃபுல்...

விக்ரம பாத்தா பாவமா இருக்கு... அவருக்கு மட்டும் ஏன் இப்புடி? காசி கெட் அப்பையும் தெய்வத்திருமகள் கெட்டப்பையும் கலந்து விட்டு ஒரு புது நடிப்பு, பாடி லாங்வேஜ்  கண்டுபுடிச்சிருக்காரு. ஆனா ஒண்ணும் வேலைக்காகல. ஒரு சீன்ல சட்டையில்லாம வர்ற ஃபைட் மட்டும் செம... உடம்பு செம ஃபிட்.... பழனி படிக்கட்டு மாதிரி கட்டிங்ஸ் இல்லைன்னாலும் பயங்கரமா இருக்கு. ஆனா மூஞ்சி செம்ம அடி வாங்கி உண்மையிலயே நோயாளி மாதிரி ஆயிட்டாரு.

எமி ஜாக்சன்... லண்டன்ல உள்ள ஒரு தமிழ்ப் பெண்... செம அழகா இருக்காங்க.
ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா பல தமிழ் ஹீரொயின்கள விட டயலாக்குக்கு  சூப்பரான லிப் மூவ்மெண்ட்... எமிய வச்சி இவிங்க போடுற மொக்க இருக்கே... யம்மா. மிஸ்லண்டனா எமிய செலெக்ட் பண்ற மாதிரி ஒரு சீன் எடுத்துருப்பாய்ங்க..  சரி ஹீரோயின் இண்ட்ரொடக்ஷனுக்காக ஒரு சீனு அப்டி இருந்தா பரவால்லன்னு  பாத்தா, அடுத்தடுத்து போடுற மொக்க இருக்கே...அப்பவே எழுந்து ஓடிரனும் போல இருக்கும். சீன் இல்லன்னா இன்னொரு ரெண்டு இங்கிலீஷ் படத்த சேத்து பாத்துட்டு நல்ல சீனா எடுக்குறது... ஏன் விஜய் சார் இப்டி?  "நங்காய்... நீலாவின் தங்காய்...." ஸ்டைல்ல ஒரு பாட்டு வேற இதுக்கு... அதே ட்யூன் அதே கொரியோக்ராஃபி... ஆனா ஹன்ஸிகாவுக்கு பதிலா எமி ஜாக்சன்...  அந்த பாட்டு ஃபுல்லா எமிய நடக்க விட்டே எடுத்துருக்காரு நம்ம விஜய்.. அப்ப தான் எனக்கு மைண்டுல ஒண்ணு தோணுச்சி... அட நல்லா நடக்க வைக்கிறீங்களே.. நீங்க அஜித்த வச்சி இன்னோரு DON story பண்ணலாம் போலருக்கே" ன்னு.

அனுஷ்கான்னு ஒரு ஆண்டி இந்த படத்துல நடிச்சிருக்காங்க.(But அழகா இருக்காங்க) படத்துலயே படு மொக்கையான கேரக்டர் அவங்களுக்கு தான். கண் டாக்டரான அவங்க புருசனா வரப்போறவரு யாரு என்ன பண்ராருன்னு தெரியாமயே கண்ணாலம் பண்ணிக்குறாங்களாமா... கணவன் மனைவியா விக்ரம் அனுஷ்கா வரும் காட்சிங்க எல்லாமே அப்புடியே  மெளன ராகம் மாதிரி. டயலாக் கூட  அப்புடியே... உதாரணத்துகு ரெண்டு பேரும்  கார்ல வரும்போது விக்ரம் கவனிக்காம கார ஸ்பீட் ப்ரேக்கர்ல வேகமா விட்டுட்டு அனுஷ்காட்ட பேசுற டயலாக்க பாருங்க..

விக்ரம்: சாரி.. பாக்கல

அனுஷ்கா: பாருங்க...

என்னத்த சொல்ல... ஜகபதி பாவுவும் ஒண்ணும் பெருசா சொல்லிக்கிற அளவுக்கு இல்ல. ஆனா ஆளு மட்டும் கெத்தா இருக்காரு...பாட்டும் சரி BGM உம் சரி... ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை.. எனக்கு ரொம்ப புடிச்சதே தல SPB பாடுன "தகிட தகிட தக தாஆஆஆஆ" தீம் தான்.. அத டைட்டில்ல பத்தே செகண்ட் மட்டும் தான் வந்துச்சி.. :(


விஜய் எடுத்த பழைய படங்களுமே படுமொக்கைகள் தான். ஓடுச்சின்னு தெரியல... இதுல இவருக்கு பல ஃபேன்ஸ் வேற. விஜய் படங்கள்ல  ஒரு மேட்டர் மட்டும் நோட் பண்ணுங்க.. இவர் எடுத்த சீன்களை எல்லாம்  பாருங்க... பெரும்பாலான சீன்ஸ் காமெடியாவும் இருக்காது.. சீரியசாவும் இருக்காது. செண்டிமெண்ட்டாவும் இருக்காது... ஆக்ஷனாவும் இருக்காது... மொக்கையா மட்டுமே இருக்கும்.

இன்னிக்கு நம்ம ஸ்டூடியோவுக்கு சிறப்பு விருந்தினரா இயக்குனர் விஜய்
வந்துருக்காரு... பேட்டி எடுக்கப்போறது வேற யாரும் இல்லை.... நம்ம தலைவர் தான்..

(கவுண்டர் ஸ்லாங்லயே படிங்க... பேட்டிகங்கள்ல பாத்துருக்கேன், டைரக்டர் விஜய் காமெடியா ஒரு கேள்வி கேட்டாலும் அதுக்கு ரொம்ப சீரியஸா பதில் சொல்லுவாரு.. அதே மாதிரி இங்க உள்ள பதிலையும் படிங்க)

விஜய் : வணக்கம்ணே

கவுண்டர் : டேய்... கார்ப்பெட் வாயா... உனக்கு வணக்கம் சொல்ற மூடுல நா இல்ல.. அந்த கருமத்த நீயே வச்சிக்க...  ஆமா நீ இதுவரைக்கும் எத்தனை படம் எடுத்துருக்க?

விஜய்: நா இதுவரைக்கும் ஒரு நாலு படம் எடுத்துருக்கேன்

கவுண்டர் : அடுத்தவங்க எடுத்ததுலருந்து நீ எடுத்தத கேக்கல நாயே... நீ எத்தனை படம் சொந்தமா எடுத்துருக்க?

விஜய்  : (வசீகரா விஜய் ஸ்டைல்ல) வல்லா... நா சொந்தமா எடுத்ததுன்னு சொல்லப்போனா...  how to say... ... well ah...

கவுண்டர் : அப்ப நீ எதுவும் சொந்தமா எடுக்கல...

விஜய் : அப்படியும் வைத்துக் கொள்ளலாம்...

கவுண்டர் : உன் மொகரைய பாக்கும்போதே தெரியிங் சரி அத விடு... தாண்டவம்னு ஒரு  படம் எடுத்துருக்கியே... அதுல என்ன கருமாந்த்ரத்துக்கு லண்டன்ல கதை நடக்குது... ஏன் அந்த கண்றாவிய இந்தியாவுலயே எடுக்க மாட்டியா?

விஜய்: கதைக்கு தேவைப்பட்டதால லண்டன் போனோம்...

கவுண்டர்: (ஹை பிட்ச்ல) உனக்கு தேவைப்பட்டுச்சின்னு சொல்லு நாயே... உனக்கு லண்டன் பாக்கனும்னு ரொம்ப நாள் ஆசை அதுனால ஒரு இளிச்சவாய் ப்ரொடியூசர் கெடைச்ச உடனே பொய்ட்டு வந்துட்ட.. ஆமா கதை கதைன்னு சொல்றியே ... அது ஒரு கதையா.. இந்த படத்துக்கு தாண்டவம்னு பேரு வச்சதுக்கு அந்த தொணைக்காலயும் 'வ" வயும் எடுத்துட்டு  "தண்டம்" அப்டின்னு வச்சிருக்கலாம்...


விஜய் : என்ன சார் இப்டி சொல்லிட்டீங்க... இந்த கதையமட்டும் நா அமெரிக்காவுல சொல்லிருந்தேன்னா...

கவுண்டர் :
குப்புற போட்டு செருப்புலயே அடிச்சிருப்பாய்ங்க... இன்னொருதடவ அத கதைன்னு சொன்ன வாயில கிரீஸ அள்ளி அப்பிப்புடுவேன்... படுவா..ஆமா இந்த விக்ரம் எப்புடி   ஒத்துகிட்டான்.. அவண்ட்ட போயி நீ என்ன சொன்ன?

விஜய்: அது ரொம்ப சிம்பிள்... "சார் இந்த படத்துல உங்களுக்கு செம கேரக்டர்... உங்களுக்கு கண்ணு தெரியாது... வாயால டொக்கு டொக்குன்னு சவுண்டு விட்டு, அத வச்சே வில்லன்கள கொல்றீங்க" அப்டின்னு மட்டும் சொன்னேன்... உடனே கால்ஷீட் குடுத்துட்டாரு.

கவுண்டர்: ஹைய்ய்யோ. அவண்ட்ட உள்ள கெட்டப் பழக்கம் இதான்யா... கண்ணு தெரியாத கேரக்டர் காது கேக்காத கேரக்டர்ன்னாலே உடனே ஒக்கே சொல்லிடுறான்... மவனே  நீ மட்டும் முழுக்கதைய சொல்லிருந்த அவன் வீட்டு நாய விட்டு பாதி மூஞ்ச கடிக்க  வச்சிருப்பான்.

விஜய்: சரி விடுங்கண்ணே... இதயெல்லாம் ஒரு பெரிய விஷமா பேசிக்கிட்டு.. எனக்கு  ஒரு அர்ஜெண்ட் வேல இருக்கு... நா பொய்ட்டு அடுத்த பட விமர்சனம்போது வர்றேன்.

கவுண்டர்: என்னது அடுத்த படமா? டேய் சீரியஸ் மூஞ்சா.... இதுவே கடைசியா இருக்கட்டும்.. இனிமே இந்த ஸ்டூடியோ பக்கம் உன்ன பாத்தேன் கரண்டு கம்பிய எடுத்து வாய்க்குள்ள சொருகி விட்டுருவேன்... ஓடிப்போயிரு...


Monday, September 24, 2012

ஆறே வாரங்களில் சிக்ஸ் பேக் (SIX PACK) போடுவது எப்படி?- சில எளிய வழிகள்


Share/Bookmark
 குறிப்பு: இந்த பதிவு வெறும் நகைச்சுவைக்காகவே... யார்மனதையும் புண்படுத்தும் நோக்குடனோ, எவரையும் குறிப்பிட்டோ எழுதப்பட்டது அல்ல.
இதுவரைக்கும், காதல் தோல்விகளை குறைப்பது எப்படி? FACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி? பிரபல பதிவர் ஆவது எப்படி? ன்னு சில எப்படிக்கள பாத்துருக்கோம். அந்த வரிசையில் அடுத்ததாக ஒரு எப்படி....
 
 "ச்ச சின்ன வயசுல சிக்குன்னு சிறுத்தை குட்டியா இருந்தேன்... இப்ப கருத்து பெருத்த குட்டி ஆயிட்டேன்.. ஓட முடியல... உக்காரமுடியல... குணிய முடியல நிமிர முடியல... " அப்புடின்னு தான் நம்மள்ல  நூத்துல 60 பேரு ஃபீல் பண்ணிட்டு இருக்கோம்... ஒரு 20 வயசுல இருக்கும்போது உடம்பு ஏற மாட்டேங்குதேன்னு கொண்டக்கடலைய ஊரவச்சி திங்கிறதென்ன... முட்டைய ஒடைச்சி குடிக்கிறதென்ன... அப்புறம் ஏறாம என்ன பண்ணும்.... கொஞ்சம் கொஞ்சமா ஏறி ஒரு நாலு வருஷத்துல நாம நந்தனத்துல வந்தா வயிறு வண்டலூர்ல போயிட்டு இருக்கு. 

முன்னாடி உடம்பு ஏறுறதுக்கு என்னென்ன பண்ணமோ அதவிட நாலு மடங்கு அதிகமா எடைய குறக்கிறதுக்கு செலவு பண்ணிகிட்டு இருக்கோம்... சரி உடம்ப குறைக்க என்னடா வழின்னு தேடிப்பாத்தா டயட்டு இருக்கனும்னு சொல்றாய்ங்க.. இல்லை பயங்கரமா எக்ஸர்சைஸ் பண்ணனும்னு சொல்றாய்ங்க... சரி முதல்ல டயட்டுல இருப்போம்னு பாத்தா.. நாம சும்மா இருந்தாலும் நம்ம வாயி சும்மா இருக்கமாட்டேங்குது. ஓட்ஸ ஒரு வேளை குடிச்சிட்டு இருந்துடலாம்னு பாத்தா கருமம் அத குடிச்சாதான் அதிகமா பசிக்குது.. நாலு நாள் ஒழுங்க இருந்துட்டு அஞ்சாவது நாளு அஞ்சப்பர்ல போயி unlimited meals ah போட்டுட்டு வந்தா எப்புடி வயிறு குறையும்..

சரி ஆப்சன் B ல exercise பண்ணனும்ங்குறாய்ங்களே அதயும் தான் பண்ணிப்பாப்போம்னு டிவில தேடுனா... "நாலே வாரங்களில் உடல் எடையை குறைக்க  வேண்டுமா உடனே வாங்குங்கள்  ஆர்பிடெக்... வெறும் 9999 மட்டுமே...." ன்னு விளம்பரம் போடுவாய்ங்க.. சரி 10000 ரூவா செலவு பண்ணாலும் ஒரு மாசத்துல ஒரு சிக்ஸ் பேக்க வாங்கி போட்டுருவோம்னு அத வாங்குனா நாலு நாளுக்கு அப்புறம் அதுவும் வெறுத்துரும். நம்மள மாதிரியே இருக்க எவண்டயாவது அத செகண்ட்ஸ்ல வந்த வெலைக்கு வித்துட்டு திரும்ப மொதல்லருந்து ஆரம்பிக்க வேண்டியது...

என்ன வாழ்க்கை இது... இதயெல்லாம் ஒழிக்கனும்... சமுதாயத்துல எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் Fat Get Fattter... Lean Get Leaner... இத எப்படி சரி செய்யிறது... குண்டான ஒவ்வொருத்தரும் ஜிம்முங்கள்ல போயி நின்ன எடத்துலருந்தே ஓடுற அவலங்கள எப்படி போக்கலாம்னு குப்புற படுத்து யோசிச்சி உருவாக்கப்பட்டது தான் கீழ்கண்ட வழிகள்... இத பயன்படுத்தி  ஆறே வாரத்துல 6  பேக் வரலண்ணா என்னனு கேளுங்க

1. நீங்க ஒரு செண்டிமெண்ட் படங்களின் படங்கள் அதிகம் பார்ப்பவரா? விக்ரமனின் திவிர  ரசிகரா?  அப்புடி எதுவும் இருந்தா இன்னிக்கோட மறந்துருங்க. இனிமே நீங்க கஜினி, காக்க காக்க, சிங்கம், சத்யம் போன்ற படங்களைத்தான் திரும்ப திரும்ப பாக்கனும். அதுமாதிரி படங்களை பார்க்கும் போது உங்களையும் அறியாம உங்களுக்குள்ள ஒரு வெறி வந்து சும்மாவே நாலு பேர தூக்கி போட்டு மிதிக்கனும்னு தோணும். இந்த வெறி தான் சிக்ஸ் பேக் கொண்டுவருவதற்கு முதல் தேவை.

2. ஒரு பர்மனெண்ட் மார்க்கர எடுத்துகிட்டு உடம்பு பூரா, "கமலா 9790921944", சாந்தி என்ன ஏமாத்திட்டா", "ப்ரகாஷ் என் ஃபிகர  உசார் பண்ணிட்டான்" , "Find சாந்தி" , "Kill ப்ரகாஷ்" அப்புடிங்கற மாதிரி உடம்பு பூரா கஜினி மாதிரி எழுதி வச்சிகிட்டா  அத பாக்கும் போதெல்லாம் உங்களுக்கு எதோ கடமைகள் இருப்பது போலவும், Target ah achieve பண்ணனுங்கறது மாதிரியும் உங்களையும் அறியாம உள்ளுக்குள்ள ஒரு உணர்வு வரும்.

3. நீங்க "யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ" ன்னு பீலிங் பாடல்களை கேட்பவரா? மொதல்ல உங்க mobile play list ah மாத்தனும். இனிமே நீங்க "கற்க கற்க கள்ளம் கற்க" "ஆரடிக்காதே அத்துகிச்சி பாத்தே"  "நா அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட" "one two three four சுண்டல் பயிற ஊரவச்சி" "நானே இந்திரன் நானே சந்திரன் பொறந்த ஊருக்குள்ள" இந்த மாதிரி உசுப்பேத்துர பாடல்களையும், ஹீரோவுக்கு பில்ட் அப் குடுக்குற பாடல்களை மட்டுமே கேக்கனும். கேக்குறது மட்டுமில்லாம உங்க மனசுக்குள்ள அந்த கேரக்டராக்வே மாறனும். அதாவது கற்க கற்க பாட்டு கேக்கும் போது நீங்க உங்களையே DCP ராகவனா நெனைச்சிக்கனும். ஒரு வேலை காதல் பாடல்களை பாக்கனும்னு ஆசை வந்துச்சின்னு வைங்க நம்ம "கடல் கண்ணன்" சூர்யா பாடல்களா பாருங்க.. அவந்தான் பீச்ச பாத்த உடனேயே சட்டைய கழட்டி போட்டு சுத்திகிட்டு இருப்பான்.

4. அப்புறம் உங்கள நீங்களே ஒரு டானா மனசுக்குள்ள நெனைச்சிக்கணும். உங்களுக்கு அல்ரெடி சிக்ஸ் பேக் இருக்கதாகவும் உங்ககூடவே எப்பவும் பாஷா பாய் குரூப் மாதிரி நாலுபேர் நடக்குற மாதிரி நெனைச்சிகிட்டு மாடிப்படியில சைடு வாக்குல ஏறி ஏறி எறங்குங்க. (அரே தீவானோ... ம்ம்ம் ஸ்டார்ட்)  கொழுப்பு எப்புடி கொறையுதுன்னு மட்டும் பாருங்க.


5. உடம்ப கொறைக்கனும்னா மொதல்ல கலோரிய செலவு பண்ணுங்க கலோரிய செலவு பண்ணுங்கங்குறாங்க. 1000 ரூவா காச குடுத்தா அசால்ட்டா செலவு பண்ணிடலாம். கலோரிய எப்டி காலி பண்றது. பண்ணுவோம். எதாது காலேஜ் போற புள்ளையையோ இல்ல பள்ளிக்கூடம் போற புள்ளையையோ சைட் அடிக்கிறது  நல்லது. தினமும் அந்த புள்ளை பின்னாடியே நடந்து போயி காலேஜ் வரைக்கும் விட்டுட்டு அப்புறம் சாயங்காலம் அது பின்னாலயே காலேஜ்லருந்து வீடுவரைக்கும் பாடி காடா நடந்து வரலாம். வாக்கிங் போன மாதிரியும் ஆச்சி, பிகரையும் கரெக்ட் பண்ண மாதிரி ஆச்சி. அதாவது ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. அட இந்த விஜய் கூட விளம்பரத்துல வந்து சொல்லுவாரேப்பா... அதே தான்.

6. அடுத்தது என்னன்னு பாக்கப்போனா காலைலயில பச்ச கேரட்ட சாப்புடனும் மதியானம் ரெண்டு சப்பாத்தி சாப்புடனும், சாய்ங்காலம் ரெண்டு வாழைப்பழம் மட்டும் தான் சாப்புடனும்ங்கற உணவுக்கட்டுப்பாடுங்கறதே தேவையில்லை. நேரா உங்களுக்கு புடிச்ச ஹோட்டலுக்கு போங்க.. என்ன வேணுமோ வாங்கி வாரி வளைச்சி திண்ணுங்க. என்னடா இது? இப்புடி ஃபுல் கட்டு கட்டுனா எப்புடிடா வயிறு கொறையும்னு கேக்குறது எனக்கு புரியுது. இப்ப வருது பாருங்க. சாப்டு முடிச்ச அப்புறம் பில்லுன்னு ஒண்ணு கொண்டு வருவான் பாருங்க அப்ப காட்டனும் உங்க பர்பார்மன்ஸ. "என்னது பில்லா?" அப்புடின்னு வாழ்கையிலேயே நீங்க அப்புடி ஒரு வார்த்தைய கேள்விப்படாத மாதிரி ஒரு ஜெர்க்க குடுக்கனும்.

 அப்புறம் என்ன? அன்னிக்கு பூரா உங்கள கொல்லப்பக்கம் கொண்டு போயி, மாவாட்ட விட்டுருவாய்ங்க. "இப்ப எந்த ஹோட்டல்லடா கையால மாவரைக்கிறாங்க.. கிரைண்டர் தானே  அரைக்குது"ன்னு வக்கனையா கேப்பீங்களே... இப்ப எந்த ஹோட்டல்லப்பா கிரைண்டர்ல  மாவரைக்க கரண்ட் இருக்கு.. திரும்ப எல்லாரும் ஆதாம் ஏவாள் காலத்த நோக்கி பயணிக்க ஆரம்பிச்சாச்சி. இதே மாதிரி தினமும் வேலை முடிஞ்சப்புறம் பண்ணா ஒரே வாரம் தான். உடம்புல உள்ள மொத்த கொழுப்பும் கொறைஞ்சி size zero வ நோக்கி பயணம் பண்ண ஆரம்பிச்சிருவீங்க. அதுக்குன்னு ஒரே ஹோட்டல்ல டெய்லி இத ஃபாலோ பண்ண நெனைச்ச அவளவுதான். உள்ள நுழையும் போதே கெரண்ட கால வெட்டிப்புடுவாய்ங்க.

7. ஒரே  கல்லுல ரெண்டு மாங்கா கான்செப்ட்ல இது அடுத்த வழி. நீங்க வீட்ட விட்டு வெளிய கடைக்கோ இல்ல வேறு எங்கயாவதோ போகும் போது வழில நாய் எதாவது நின்னுச்சின்னா பாத்து ஒதுங்கிப் போயிடக்கூடாது. நின்னு அத மொறைச்சி பாருங்க. அதுவும் உங்கள பாக்கும். படக்குன்னு கீழருந்து ஒரு கல்ல பொறுக்கி அது மேல படாத மாதிரி அத அடிங்க. அப்ப விட்டுகிட்டு தொறத்தும் பாருங்க உங்கள.... இப்பவும் நின்னு வேடிக்க பாத்துகிட்டு  இருந்தா பட்டக்ஸ்ல பாதி காணாம போயிரும். உடனே ஓட்டத்த எடுத்துட வேண்டியது தான். நீங்க எங்க போகனுமோ அங்க அந்த நாயே  தொரத்தி கொண்டு வந்து விட்டுரும். காலைல எழுந்து ஜாக்கிங் போனும்னா யாரால முடியும். அதுனால இப்புடியே நாமலே நமக்கு ஒரு சந்தர்ப்பத்த ஏற்படுத்திக்கிட்டு ஓடிக்க வேண்டியது தான்.

8. அப்புறம் நீங்க பைக்குல ஆஃபீஸ் போறவரா? வேலைக்கே ஆவாது. மொதல்ல போயி காத்த புடுங்கி விட்டுடுங்க. சிக்ஸ் பேக்ஸ் போடுவதற்கு தேவையான சிறந்த போக்குவரத்து அரசு போக்குவரத்து தான். ஆனா  என்ன 10 மணி ஆபீஸுக்கு 7 மணிக்கே கெளம்ப வேண்டியிருக்கும். பரவால்ல. நமக்கு சிக்ஸ்பேக் தான் முக்கியம். நீங்க செய்ய வேண்டியது இது தான். நீங்க எங்க வெளில கெளம்புறதா இருந்தாலும் அரசு பஸ்கள தான் உபயோகிக்கனும். பஸ் ஸ்டாப்புல நிக்கும் போது காலியா எதாவது பஸ்வந்துச்சின்னா பொளக்குன்னு ஏறி உக்காந்துடக்கூடாது. (அப்புடி எதாது பஸ்ஸ பாத்தா மொதல்ல சொல்லுங்க. கின்னஸுக்கு அப்ளை  பண்ணுவோம்) கூட்டமா வர்ற பஸ்தான் நமக்கு வசதி... யோவ் எவன் பர்ஸ்லயும் கைய வச்சி பிக்பாக்கெட் அடிக்க சொல்லப்போறேன்னு நெனச்சி எவன் பைலயும் கைய வச்சிடாதீங்க. அவளோதான் அப்புறம் சிக்ஸ் பேக்லாம் வராது. பஸ்ல இருக்கவன் ஒவ்வொருத்தனும் ஒரு அடி அடிச்சான்னாலே ஒரே பேக்ல பரலோகம் போகவேண்டியது தான். 

இந்த வழில நீங்க ஸ்பெஷலா எந்த அசைன்மெண்டும் செய்ய தேவையில்லை. ஒரு அரைமணி நேரம் அந்த பஸ்ல பயணம் செஞ்சீங்கன்னாவே உங்க உடம்புல உள்ள மொத்த வியர்வையும் வெளியேறி, டிஹைட்ரேஷன் ஆகுற அளவுக்கு போயிடுவீங்க. படிக்கட்டுல  தொங்கிட்டு வர்றது இன்னும் உசிதம். உங்க ஆர்ம்ஸும் ஸ்ட்ராங் ஆவும். ஜன்னல் ஓரமா உக்கார்ந்துருக்க பாப்பாவும் உசார் ஆகும். (இது திருமணம் ஆனவர்களுக்கு உகந்ததல்ல. மனைவிக்கு தெரியவரும் பட்சத்தில் உயிர்ச்சேதம் ஏற்படும் அளவுக்கு ஆபத்து நிறைந்தது). பஸ்ல தொங்கிட்டே வர்றதால biceps develop ஆகும். ஓடிப்போயி ஏறுறதால calf muscles strength ஆகும்.. அப்டி இது ரெண்டும் ஆகலண்ணா கூட பஸ்ல வர்ற ஃபிகர் உசார் ஆகும். அதாவது பாம் ஒன்று செயல் மூன்று.9. லீவ் நாள்ல மேற்கண்ட எந்த வேலையும் இருக்காது. அது மாதிரி சமயங்கள்ல கலோரிய செலவு பண்ண வடிவேலு பாணிய பின்பற்றலாம்.  நேரா மதுரைக்காரய்ங்க எவண்டயாவது வம்பிழுங்க. அம்புட்டு பயலும் வகுத்துலயே மிதிச்சி வயித்துல  உள்ள மொத்த கொழுப்பையும் அரைமணி நேரத்துல எடுத்து ஃபேச ப்ரஷ் ஆக்கி விட்டுருவாய்ங்க. ஒரு நாள்
முழுக்க செய்ய வேண்டிய வேலைய அரைமணி நேரத்துல முடிச்சிவிட்டுருவாய்ங்க. அப்டி இல்லையா நம்ம கலகலப்பு ஸ்டைல ஃபாலோ பண்ணுங்க. கிச்சன்ல இருக்க சாமனையெல்லாம் ஒண்ணு ஒண்ணா எடுத்து ஹால்ல வைங்க. அப்புறம் ஹால்ல வைச்ச சாமானையெல்லாம் எடுத்து பெட்ரூம்ல வைங்க. திரும்ப பெட்ரூம்ல வச்ச சாமனையெல்லாம் எடுத்து கிச்சன்லயே வச்சிருங்க. மேட்டர் ஓவர்.

10. டெய்லி பல்லு வெலக்குறதுக்கு முன்னாடி ஒரு முட்டை பின்னாடி ஒரு முட்டை குடிக்கிறது உசிதம். என்னது பின்னாடி எப்புடி குடிக்கிறதா? ஹலோ இது அந்த பின்னாடி இல்லை..... பல்லு விலக்கிய பின்னாடி... எப்ப பாத்தாலும் எஸ்.ஜே.சூர்யா  மாதிரியே யோசிக்க வேண்டியது. ஏன் பல்லு வெலக்குறதுக்கு முன்னாடி முட்டைகுடிக்கனும்னு கேக்குறீங்களா? அது உள்ள போயி மொதநாள் நைட்டு நீங்க சாப்ட unlimited meals எதும் செரிக்காம இருந்த அத வாந்தியா வெளிய கொண்டுவந்து மொத்த வயித்தயும் சுத்தப்படுத்திரும்.

11. நீங்க எங்க போனாலும் உங்கள விட ஒயரமா எதாவது பாத்தா உடனே கூச்சப்படாம தொங்கிடனும். அதுக்குன்னு வீட்ல ஃபேன பாத்தா கயித்த எதும் மாட்டி தொங்கி கொலைக்கேசுல  மாட்டி விட்டுடாதீங்க.  ஒரு உயரமான கம்பியயோ இல்ல உயரமான சுவத்தையோ பாத்தா அத புடிச்சி மேலயும் கீழயும் நாலு  தடவ காம்ப்ளான் பாய் மாதிரி தொங்குனா, பேக் டெவலப் ஆவுறதோட நாளப்பின்ன பக்கத்து ஊர் ஃபிகர பாக்க போகும் போது ஊர்க்காரய்ங்க தொறத்துனா "செவலை தாவுடா தாவு" ன்னு படக்குன்னு ஏறிக்குதிச்சி உடியாந்துடலாம்.

விரைவில் சிக்ஸ் பேக்கோட சந்திப்போம்...


நன்றி : நண்பன் கார்த்தி


Thursday, September 20, 2012

சுந்தரபாண்டியன் - சுமார் பாண்டியன்


Share/Bookmark
இன்னிக்கு இந்த படத்த பாத்துட்டு தியேட்டர்லருந்து நானும் நண்பனும் வெளிய வந்துகிட்டு இருந்தப்ப ஒரு சம்பவம்... ஒருத்தரு தியேட்டர் ஆப்ரேட்டர் சட்டைய புடிச்சி "ஏண்டா இப்டி செஞ்ச ஏண்டா இப்டி செஞ்ச" ன்னு எதோ சண்ட போட்டுகிட்டு இருந்தாரு. சரி என்னனு பாக்கலாம்னு அவர்கிட்ட போய் "என்னண்ணே ப்ரச்சனை?" ன்னு கேட்டோம். அதுக்கு அவரு "பாருங்க தம்பி.. சுந்தரபாண்டியன்குற படத்துக்கு டிக்கெட் எடுத்துகிட்டு உள்ள போனேன்.. ஆரம்பத்துல அந்த படம் தான் ஓடுனுச்சி... கொஞ்ச நேரத்துல கண்ணு அசத்திட்டதால தூங்கிட்டேன்... முழிச்சி பாத்தா நாடோடிகள் படத்து க்ளைமாக்ஸ் ஓடிகிட்டு இருக்கு.. நா  அசந்த நேரமா பாத்து இந்த நாயி ரீல மாத்தி போட்டுருச்சி தம்பி... இத நீங்களே கொஞ்சம் என்னன்னு கேட்டு ஒரு பைசல் பண்ணுங்க.."ண்ணாரு..

அப்புறம் தான் எங்களுக்கு மேட்டர் புரிஞ்சிபோயி " அண்ணே.. ஆப்ரேட்டர் மேல எதும் தப்பு இல்லண்ணே... நீங்க பாத்தது சுந்தரபாண்டியனோட க்ளைமாக்ஸ்தான்... அதே மாதிரி எடுத்துருக்காய்ங்க" ன்னோம்

"அதயே ஏன் தம்பி திரும்ப எடுத்துருக்காய்ங்க? நாம தான் அந்தப்படம் பாத்துட்டோமே... "

"விடுங்கண்ணே... விடுங்கண்ணே... இதெல்லாம் நமக்கு என்ன புதுசா...இவய்ங்க எப்பவுமே இப்புடித்தான்...  அடுத்த தடவையாவது தூங்காம படம் பாருங்க" ன்னு சொல்லி அவர அனுப்பி வச்சோம்.

படம் ஆரம்பிக்கும் போதே "நன்றி: திரு. சமுத்திரக்கணி" ன்னு போட்டாய்ங்க. அப்ப எங்களுக்கு ஏன்னு புரியல.. கடைசியா படம் பாத்துமுடிச்சப்புறம்தான் தெரிஞ்சிது அவரோட படத்த ரீமேக் பண்ணிருக்கதாலதான்  அந்த நன்றின்னு.

சசிகுமாரோட முந்தைய படங்களை மாதிரியே, காதலையும் நண்பர்களையும் சுத்தி நடக்குறமாதிரி கதை.  அதயே கொஞ்சம் அங்க இங்க பட்டி டிங்கரிங்கெல்லாம் பாத்து புதுபடமா எடுத்து ரிலீஸ் பண்ணிருக்காங்க. ஆனா ரொம்ப நல்லாவே எடுத்துருக்காங்க. முதல்பாதிய பரோட்ட சூரியோட டைமிங் காமெடிங்கதான் தூக்கி நிறுத்துது. அவர் பேசுற எல்லா டயலாக்குமே செம.

தமிழ்சினிமாவுல ஏற்கனவே வேலையில்லாம சுத்திகிட்டு இருக்க கேரக்டருக்குன்னே தனுஷ், ஆர்யா, விஷால்னு ஏகப்பட்ட பேரு போட்டி போட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த குரூப்புல சசிகுமாரும் சேந்துகிட்டாரு. படிச்சிட்டு சும்மா இருக்கவரு. மசாலா படங்கள் மேல ஆசை வந்துருச்சி போல. Intro song எல்லாம் வேற  இருக்கு.(ஆனா அந்த பாட்டுக்கு I am fan ஆயிட்டேன்) ஆளு செம பிட்டா இருக்காரு. ஆனா  மூஞ்சி மட்டும் கொஞ்சம் சட்டி மாதிரி இருக்கு. இவருக்கு க்ளோஸ் அப் ஷாட் வரும் போதெல்லாம் எனக்கு கலகலப்புல சந்தானம் பேசுற "போடா போடா. உன் மூஞ்செல்லாம் ரெண்டு நிமிஷத்துக்கு மேல  தொடர்ந்து பாக்க முடியலடா" ங்குற டயலாக்தான் ஞாபகம் வந்துகிட்டு இருந்துச்சி.

யையா... யய்யா சசிகுமார் அய்யா... ஓட்டுனது போதும் ரீலு அந்து போச்சிய்யா... அந்த க்ளைமாக்ஸ் லொக்கேஷன மட்டும் கொஞ்சம் மாத்திவிடுங்க... புண்ணியமா போகும். ஒருதடவ ரெண்டு தடவன்னா பரவால்ல... ஒவ்வொரு தடவையும் அங்கயேவா..

படத்தோட 1st half ஒண்ணே கால் மணி நேரம்னா அதுல ஒரு மணிநேரம் பஸ்ல தான் எடுத்துருக்காங்க. ஹீரோயின் லக்ஷ்மி மேனன் ஒண்ணும் அவ்வளவு சிறப்பா இல்லை. சுமார் ஃபிகர் தான். பஸ்ல வர்ற இந்த சுமார் ஃபிகர சூப்பரா காட்டனும்னு, மத்த எல்லா சீட்லயும் மொக்க பீசுங்களையா உக்கார வச்சிருக்காய்ங்க. மத்தபடி படத்துல குறிப்பிட்டு சொல்லனும்னா சசிகுமார் அப்பாவா வர்றவரு ரெண்டு மூணு சீனே வந்தாலும்  கெத்தா நடிச்சிருக்காரு.


நாம எதிர்பாக்குற டிவிஸ்ட் எல்லாத்தையும் ட்விஸ்ட் இல்லாம ட்விஸ்டா வச்சி க்ளைமாக்ஸ்ல நாம எதிர் பாக்காத சில ட்விஸ்டையும் வச்சி நிறைவா படத்த முடிச்சிருக்காங்க (ரொம்ப ட்விஸ்ட் அடிக்குதோ) தெளிவான போர் அடிக்காத screenplay. டைரக்டர் ப்ரபாகரன் பட்டைய கெளப்பிருக்காரு. சில காட்சிகள் வலுக்கட்டாயமா படத்துல திணிக்கப்பட்ட மாதிரி இருந்தாலும் படம் கொஞ்சம் கூட போர் அடிக்கல. அதுவும் இல்லாம மொத்தபடமும் சிட்டி வாசனை கொஞ்சம் கூட இல்லாம, மரம் செடிகொடிங்களோட ஒரே பசுமையா இருக்கது பாக்க ரொம்ப நல்லாருக்கு.


இந்த வருஷத்துல வெளியான பலபடங்களுக்கு சுந்தரபாண்டியன் எவ்வளவோ மேல். கண்டிப்பா பாக்கலாம். ஆனா என்ன எங்கயோ பாத்த மாதிரியே இருக்கும் அவ்வளவுதான்.

Monday, September 3, 2012

சென்னை பதிவர் சந்திப்பு - செம எஃபெக்ட்!!!


Share/BookmarkSaturday, September 1, 2012

முகமூடி - செம்ம காமெடி சார் நீங்க!!!


Share/Bookmark
நான் தான் அப்பவே சொன்னேனேங்க.. இந்த ஆள நம்பாதீங்க நம்பாதீங்க... இவரு ஒரு  டுபாகூருன்னு... இப்ப கடைசியா வேலைய காட்டிட்டாரா? நானும் இதுவரைக்கும் பல கேவலமான படங்களை பாத்துருக்கேன். ஆனா இப்படி ஒரு படத்த.... never. இந்த லட்சணத்துல இந்தாளுக்கு வாய் கிழியிற மாதிரி பேச்சு மட்டும் கொறையவே இல்லை. நேத்தி வரைக்கும் "நீ பாத்த படு கேவலமான என்னப்பா? " எண்ட யாராச்சும் கேட்டா பொறி, அஸ்தமனம், முரட்டுக்காளை ன்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தேன். ஆனா அனைத்தையும் தாண்டி முன்னாடி வந்துருச்சி இந்த முகமூடி.

வழக்கமா கொரியா படம் உகாண்டா படம் ரவாண்டா படங்கள்லருந்து தான சார் அடிப்பீங்க.. அப்புடி அடிச்சாலும் எதோ தியேட்டர்ல உக்கார்ர மாதிரிதான எடுத்துத்துக்கிட்டு இருந்தீங்க. இப்ப ஏன் சார் திடீர்னு இங்லீஷ் படத்துக்கு அலேக்க ஜம்ப் அடிச்சிட்டீங்க? ஓ... இதுக்கு பேருதான் மொதல்ல வில்லனா பண்ணிட்டு படிப்படியா ஹீரோவா பண்றதா... நாங்க நல்லா பண்றமோ இல்லையோ நீங்க நல்லா பண்றீங்க சார். இப்புடியே இன்னும் நாலு படம் எடுத்து ஊருக்குள்ள விட்டீங்கன்னா, நம்மாளுகளுக்கு படம் பாக்குற எண்ணமே சுத்தமா அத்துப்போயிரும்.

சரி அப்புடி என்னதான் இந்த படத்துல இவரு எடுத்துருக்காருன்னு பாப்போம். இந்தாளுக்கு வழக்கமா மாட்டுற மாதிரி கொரியன் படம் எதுவும் கிடைக்கல. சரி பேட்மேனயே ஆட்டைய போட்டுடலாம்னு ஆரம்பிச்சிட்டாரு. நம்மாளுக ஒரு சீன எங்கயாவது ஆட்டைய போட்டாலே ஒண்ணுக்கு போற அளவு Facebook la போட்டு அடிப்பாய்ங்க... மொத்த படத்தையும் சுட்டா மோஷன் போற அளவு அடிப்பாய்ங்களேன்னு இவரே சொந்தமா முயற்சி பண்ணி பேட்மேன் சீரிஸ்ல உள்ள கேரக்டர்களை எல்லாம் தமிழ்படுத்திருக்காரு. (சொந்தமா- நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர். இப்பவே புரிச்ஞ்சிருக்கும் உங்களுக்கு எப்புடி இருந்துருக்கும்னு)
மூஞ்சில மாஸ்க்க போட்டுகிட்டு வீடுவீடா கொள்ளையடிச்சிட்டு பாக்குறவிங்களையெல்லாம்  கொலைபண்ற ஒரு கும்பல். ஏன் வீட்டுல கொள்ளை அடிக்கிறாங்களா? அட என்னப்பா நீங்க... ஜோக்கர் ரேஞ்சுக்கு அவர் பெரிய பேங்குல கொள்ளை அடிக்கிறாரு. நம்ம தமிழ்நாட்டு ரேஞ்சுக்கு வீட்டுல தான கொள்ளையடிக்க முடியும். புரியல... யாருக்கும் தெரியாத மாதிரி அந்த சீன்கள தமிழ்ப் படுத்தியிருக்காராமா...வழக்கம்போல ஊர சுத்திகிட்டு சும்மா திரியிறவரு ஜீவா (லீ). அவரு ஒரு மாஸ்டர்கிட்ட கும்பூ கத்துக்குறாரு. என்னது குஷ்பூவ எப்புடி கத்துக்க முடியுமா? யோவ் அது கும்ஃபூ யா...  அத கத்துக்குடுக்குற நம்ம செல்வா மாஸ்டர பாக்கனுமே... "பாஸ்.. சுகர் மாத்திரைய வீட்டுலயே வச்சிட்டு வந்துட்டேன்" ன்னு தளபதி தினேஷ் சொல்ற டயலாக் இவருக்கு தான் கரெக்டா பொருந்தும். சற்று டொம்மையான மாஸ்டரா இருக்காரு.

அதேமாதிரி இன்னொரு கும்பூ மாஸ்டர் இருக்காரு... அவருதான் நம்ம நரேன். டார்க் நைட்ல  வர்ற ஜோக்கர் கேரக்டர திறம்பட தமிழ்ல செஞ்சிருக்கவரு இவருதான். வக்காளி இந்த  கண்றாவியயெல்லாம் பாக்க வேணாம்னு அந்தாளு முன்னாடியே போய் சேந்துட்டாரு போலருக்கு. அப்புறம் கமிஷ்னர் GORDAN ah நடிச்சிருக்கவரு நம்ம நாசர். இவர பாக்கதான் படத்துல பாவமா இருக்கு. நேத்து நடிக்கவந்த ஒருத்தன இவருக்கு சீனியர் ஆபீசரா போட்டு இவர அந்தாளுக்கிட்ட திட்டு வாங்குறமாதிரி நெறைய சீன் எடுத்துருக்காய்ங்க கருமம்.

அப்புறம் படத்துல ஹீரோயின்னு ஒண்ணு அப்பப்ப வந்துட்டு போவுதுங்க. இதுக்கு இண்ட்ரோ சீன் எடுத்துருப்பாய்ங்க பாருங்க. மொதல்ல பாத்தா மொகத்த காட்டாம வேறு எத எதயோ  காமிச்சி பில்ட் அப் குடுத்துட்டு ரெண்டு சீன் கழிச்சி மூஞ்ச காமிச்சாய்ங்க பாருங்க... "அய்யோ ஆத்தா பல்லு ஏண்ணே அப்புடி இருக்கு?" ன்னு என் பக்கத்துல உள்ளவரு மயங்கியே விழுந்துட்டாரு. அந்த மொகரைய காமிக்காமயே இருந்துருக்கலாம்.

ஓவ்வொரு கேரக்டரும் ரொம்ப செயற்கை தனமா இருக்கு. உதாரணமா ஜீவாவோட தாத்தா ஒரு அந்த காலத்து எலெக்ட்ரானிக்ஸ் எஞ்ஜினர் போல... எப்ப பாத்தாலும் வீட்டு மாடில எதோ ஒரு PCB போர்டுல எதயோ பத்தவச்சமாணியமாவே இருக்காரு. (அநேகமா பேட்மேன்ல வர்ற Mr,Fox சோட தமிழ் கேரக்டர் போலருக்கு இவரு) அப்புறம் அதேவீட்டுல வித்யாசமான துணிங்கள்ளாம் டிசைன் பண்ற ஒருத்தர் இருக்கரு. புரிஞ்சிருக்குமே... அவருதான் ஜீவாவுக்கு அந்த "அருமையான" பேட்மேன் ட்ரஸ்ஸ தச்சி தர்றாரு. என்னது தையக்கூலி எவ்வளவா? என்னங்க ஒரே வீட்டுல இருந்துகிட்டு இதுக்கெல்லாம் காசு கேப்பாரா...

ஜீவாவ ஒரு சூப்பர் மேனா கதைக்குள்ள கொண்டுவர்றதுக்கு இந்த ஆளு கண்டமேனிக்கு  உள்ள உக்காரமுடியாத மாதிரி என்னென்ன சீனோ எழுதிருக்காரு. ஒரு சீன்ல ஜீவா, கந்தசாமில வடிவேலு சேவல் வேஷம் போட்டு போற மாதிரியே ஒரு கெட் அப் போட்டுக்கிட்டு "அந்த சூப்பர்" ஃபிகர மடக்குறதுக்காக அது வீட்டுக்கு போய் குட்டிக்கரணம்லாம் அடிச்சி காட்ட அங்கருக்க ஒரு சின்ன கொழந்த "உங்க பேர் என்ன அங்கிள்?" ன்னு கேக்குது அதுக்கு இவரு என் பேரு "முகமூடி" ங்கறாரு. அதுக்கப்புறம் படம் ஃபுல்லா இவர எல்லாரும் "முகமூடி" ன்னு தான் கூப்புடுறாங்க. "முகமூடி அங்கிள் வந்துட்டாரு" "முகமூடி திருடன புடிச்சிக்குடுத்துட்டாரு" "முகமூடி தான் எங்கள காப்பத்தனும்" இப்புடியெல்லாம் பேசிகிட்டு இருக்காய்ங்க. கண்றாவி கேக்கவே எவ்வள கடுப்பா இருக்கு.

படம் ஆரம்பிச்ச் கொஞ்ச நேரதுலருந்தே படத்த காமெடி படமாதான் எல்லாரும் பாத்துகிட்டு இருந்தாய்ங்க. இதுல செல்வாவுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக்... "இருவது வருஷத்துக்கு முன்னால..." ன்னு ஆரம்பிச்சி 10 நிமிஷம் ஃப்ளாஷ்பேக் சொல்லி முடிக்க, நமக்கு என்ன தோணும்னா "ஃப்ளாஷ்பேக் ஒண்ணும் அவ்வளவு வெயிட்டா இல்லையேப்பா"ன்னு தான். அதவிட ஒரு  கொடூர காமெடி, செல்வா ஜீவாகிட்ட "லீ.. நா இன்னும் உனக்கு கும்ஃபூல ஒரே ஒரு form தான் சொல்லிக்கொடுக்கல.. அதயும் கத்துத் தரேன்னு சொல்லி மெட்ரே ரயில் கட்ட கொண்டு வந்த ஒரு க்ரேன் உச்சில ஏறி நின்னுகிட்டு  லொல்லுசபா மனோகர் மாதிரி கைய முன்னாடி பின்னாடி ஆட்டிக்கிட்டு என்னமோ பண்ணிகிட்டு இருக்காரு. டேய் இதுக்கு பேருதான் அந்த யாருக்கும் தெரியாத கும்ஃபூ form ah... இந்த கருமத்த கீழ நின்னே சொல்லித்தரவேண்டியதான.. தவறி விழுந்தீங்கண்னா மண்டை செதறிப் போயிருமேடா...

அதவிட செம காமெடி இவரு க்ரேன்மேல ஏறி சொல்லிக்கொடுத்த அந்த ஸ்பெஷல் form ah வச்சிதான் நம்ம முகமூடி, வில்லன் நரேன கடைசில கொல்லுவார்னா பாத்துக்குங்களேன். க்ளைமாக்ஸ்ல நரேன் ஒரு பர்ஃபார்மண்ஸ் பண்ணுவாரு பாருங்க... "சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன் இப்ப முகமூடியா... "அப்புடின்னு ஒரு டயலாக்க வாந்தி வர்றமாதிரி ஒரு ஸ்லாங்க்ல பேசிக் கொன்னுடுவான்.

படத்துல நல்லாருக்குன்னு சொல்ற மாதிரி உள்ள ஒரே விஷயம் BGM தான். செமயா இருக்கு. எங்கருந்து அடிச்சாய்ங்கன்னு தான் தெரியல. அப்புறம் பாட்டபத்தி சொல்லனும்னா "நாட்டுல நம்ம வீட்டுல" பாட்டுக்கும் அஞ்சாதே "கண்ணதாசன் காரக்குடி" பாட்டுக்கும் ட்யூன்லயோ இல்ல கொரியோ க்ராஃபிலயோ ஆறு வித்யாசம் கண்டு புடிக்கிறவங்களுக்கு ஆஸ்கரே குடுக்கலாம். அப்புறம் "வாயமூடி சும்மா இருடா" பாட்டும் அவரோட மொத படத்துல வந்த "என்ன ஆச்சுடா... ஏது ஆச்சுடா" மாதிரியே இருக்கு.
ஜீவாவும் சரி நரேனும் சரி... செம ஃபிட்டா இருக்காங்க. ஆனா என்ன பண்றது இப்புடி ஒரு படத்துல நடிச்சிபுட்டாய்ங்களே.. இந்த கொடுமையில இந்த படத்துக்கு மூணு பார்ட் எடுக்கலாம் நாலு பார்ட் எடுக்கலாம்னு மிஸ்கினுக்கு பேச்சு வேற... மிஸ்டர் மொன்னை...மொதல்ல ஒரு  பார்ட்ட ஒழுங்கா எடுங்க.

இவ்வளவு சொல்லியும் சில பேரு என்ன பண்ணுவீங்க.."உங்களுக்கு மிஸ்கினின் கலைபார்வையை ரசிக்க முடியவில்லை. உங்களுக்கெல்லாம் 5 பாட்டு 4 ஃபைட்டு இருந்தாதான் படம் நல்லா இருக்குன்னு சொல்லுவீங்கன்னு"  எனக்கே கமெண்ட் போட்டுட்டு போய் இந்த படத்த பாத்தே தீருவேன்னு அடம் புடிப்பீங்க. உங்க விதிய யாரால மாத்த முடியும். ம்ம்ம்ம்... கிளம்புங்கள்


படம் பாத்துட்டு மிஸ்கின் மேல கொலைவெறியா இருக்கவிங்க இதயும் படிக்கலாம்.
மிஷ்கின் என்னும் உலகமகா டைரடக்கர்Tuesday, August 21, 2012

துவாரமலை இரவுகள் - இறுதிப் பகுதி


Share/Bookmark
முதல் பகுதி

இரண்டாவது பகுதி

மூன்றாவது பகுதி

ஆறுமுகத்திற்கு ஒரு நிமிடம் அடிவயிற்றையே புரட்டிப்போட்டது அவன் கண்ட காட்சி. இதுவரை இவ்வளவு கோரமான ஒரு நிகழ்வை அவன் கண்டதில்லை... கால்கள் உடலை தாங்கிப்பிடிக்க மறுத்து  நடுக்க ஆரம்பிக்கவே, மெதுவாக ஒரு மரத்தை தாங்கிப் பிடித்துக்கொண்டு மெல்ல கீழே உட்கார்ந்தான். திருச்சாமி பலிகொடுக்கப்பட்டது ஒரு வகையில் அதிர்ச்சியை கொடுத்தாலும் தன் மகன் இல்லையே என்ற ஒரு சிறு ஆறுதல் மனதில் இருந்தது. என்ன செய்வது? விடிந்து இந்த விஷயம் ஊரில் எவருக்கேனும் தெரிந்தால் நம் நிலமை என்ன ஆவது? பஞ்சவர்ணமும் மகன்களும் எங்கே என்னும் பல கேள்விகள் மனதை குடைய ஆரம்பித்திருந்தன. திடீரென ஒரு யோசனை. பலனிருக்குமா என்று தெரியாவிட்டாலும், முயற்சி செய்து பார்க்கலாம் என முடிவு செய்தான். முகத்தில் வழிந்த வியர்வையை கையால் சுற்றி துடைத்துக்கொண்டு அரிக்கன்  விளக்கோடு எழுது நடக்க ஆரம்பித்தான்.

மலையம்மன் அருகில் சென்று மனதிற்குள்ளேயே தன் நிலமையை கொட்டித்தீர்த்து, காலைத்தொட்டு வணங்கி அங்கிருந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு நடக்கலானான். 10 நிமிடம் நடைப்பயணத்தில் அந்த வீடு வந்தது. குளிர் உடம்பின் வெப்பநிலையை கணிசமாக குறைத்துக் கொண்டிருக்க, வரிசையாக அமைந்திந்த 5 வீடுகளில் 3 வது வீட்டின் கதவைத் தட்டினான்.

"டொக்...டொக்...டொக்"

எந்த பதிலுமில்லை. சிறு இடைவெளிக்கப்புறம் மீண்டும் கதவைத் தட்ட உள்ளிருந்து ஒரு  ஆண்குரல்

"ஆருப்பா இந்த நேரத்துல"

"நா... நாந்தான் ஆறுமுகம்" என்று தொண்டை அடைத்த குரலில் கூற கதவு திறக்கப்பட்டது. உள்ளே சிறு சிமினி விளக்கை கையில் பிடித்துக்கொண்டு வைத்தியர் குழந்தை சாமி நின்றிருந்தார். ஆறுமுகத்தை கண்டதும் முகத்தில் சிறு பதட்டத்துடன்

"ஆறுமுகம்... என்னப்பா இந்த நேரத்துல... உடம்புக்கு எதாவது சரி இல்லையா.. ஏன் இப்புடி முகமெல்லாம் வேர்த்திருக்கு... உள்ள வா" என்றார்.


உள்ளே சென்று பேச வாயெடுத்த ஆறுமுகம், பேசமுடியாமல் தொண்டை அடைத்து அழ ஆரம்பிட்த்தான்..

"அய்யோ.... என்னப்பா ஆறுமுகம்.. என்னாச்சி.. வீட்ல கொழந்தை மனைவியெல்லாம் நல்லா இருக்காங்கல்ல.. ஏன்பா அழற.. விஷயத்த சொல்லு... "

"அவங்களுக்கெல்லாம் ஒண்ணும் இல்லையா" என்று ஆரம்பித்து இரண்டு நிமிடத்தில் கடந்த மூன்று நாட்களாக நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான்.

கேட்டு முடித்தவுடன் வைத்தியரின் முகம் ஒரு பயமும் வியப்பும் கலந்த பார்வையில் ஆறுமுகத்தை பார்த்து "என்னப்பா... இந்த காலத்துல இப்புடியெல்லாம் நடக்குமா.. என்னோட காலத்துல கூட நா நரபலிங்கறதையே பாத்ததில்லை.. அதெல்லாம் எங்க அய்யன் காலத்துலயே முடிஞ்சி போச்சின்னு நெனைச்சிட்டு இருந்தேன்.... நீ சொல்றது என்னால நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியலப்பா.."

"அய்யா நீங்க கண்டிப்பா இத நம்பித்தான் ஆகனும்... அன்னிக்கு நீங்க ராத்திரி வீட்டுக்கு பின்னால எதோ வெளிச்சம் பாத்தேன்னு சொன்னீங்கல்ல... அதுகூட இத பண்ண யாரோதான். நா அன்னிக்கு வெளிய வந்து ஒரு நிமிஷம் கூட இல்ல... உடனே உள்ள பொய்ட்டேன்.. சரி அன்னிக்கே உங்ககிட்ட இத சொல்லி பெரிய விஷயம் ஆக்க வேணாம்னு விட்டுட்டேன்.... எனக்கு இப்ப நீங்க ஒரு உதவி செய்யனும்... அன்னிக்கு நீங்க மலையம்மன் கோயிலுக்கு வரும்போது வேறு யாரையாவது வழியில எதேச்சையா பாத்தீங்களா... கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்க... "

சிறிது நேரம் தலையை குணிந்து தரையை பார்த்து யோசித்த வைத்தியர்.... "ஆமாப்பா... நம்ம கோவிந்தன வழியில பாத்தேன்... "

"எந்த கோவிந்தன் அய்யா?"

"உன் எஸ்டேட் ஓனர் திருச்சாமியோட வேலைக்காரன் கோவிந்தன்ப்பா...என்கிட்ட கூட எங்க இந்த நேரத்துல போறீங்கன்னு கேட்டான்... நா பச்சலை பறிக்கபோறேன்னு சொல்லிட்டு வந்தேன்"

உடனே புருவத்தை சுருக்கிய ஆறுமுகம் "நீங்க அவன இந்த நேரத்துல எங்க போறன்னு கேக்கலையா?"

"அவன எப்புடிப்பா கேக்குறது... திருச்சாமிக்கிட்ட வேலைபாக்குறது மட்டும் இல்லாம இங்க நெறைய எஸ்டேட்டுக்கு காவ காக்குறதே அவன் தான்.. ராத்திரி அப்பப்ப எழுந்து ஒரு சுத்து சுத்திட்டு வருவான் நானே நிறைய தடவ அவன நடுராத்திரில பாத்துருக்கேன்.. அதான் எதும் கேக்கல..."

சிறிது மனதிற்குள் தைரியம் வந்தவனாய் "எனக்கென்னவோ அவன் மேல தான்யா சந்தேகமா இருக்கு கோவிந்தன் இல்லாம திருச்சாமி வெளில எங்கயுமே போகமாட்டார். அவர் ஒரு நாள் கூட எஸ்டேட்டுக்கு  தனியா வந்ததில்லை.. நா உடனே அவன் வீட்டுக்கு போறேன்" என்று ஆறுமுகம் புறப்பட

"இருப்பா... தனியா போகாதே... எனக்கென்னவோ ப்ரச்சனை பெருசா இருக்கமாதிரி இருக்கு... வா நானும் உன் கூட வர்றேன்" என்ற வைத்தியர் வீட்டுக்கதவை இழுத்து வெளியில் கயிறால் கட்டிவிட்டு ஆறுமுகத்துடன் கோவிந்தன் வீட்டை நோக்கி புறப்பட்டார்.

கோவிந்தனின் வீடு துவாரமலை கிராமத்தின் எல்லையில் அமைந்த தனி வீடு... கோவிந்தன் அதிகமாக ஊர்மக்களுடன் ஒட்டுவதில்லை... இரண்டு வருடங்களுக்கு முன் கோவிந்தன் மனைவி குளிர்ஜுரத்தால் பாதிக்கப்பட்டு சரியான கவனிப்பில்லாததால் இறந்துபோயிருந்தால். தற்போது கோவிந்தன் மட்டுமே அந்த வீட்டில் வசித்துக்கொண்டிருந்தான். கிட்டத்தட்ட 15 நிமிட நடைபயண்த்திற்கு பின் கோவிந்தனின் வீடு கண்ணுக்கு புலப்பட்டது. குளிர்காற்றை தாங்குவதற்காக வைத்தியர் ஒரு பழைய கிழிந்த சால்வையை போர்த்தியிருக்க, ஆறுமுகத்திற்கு இன்னும் வியர்வை நிற்காமல் ஊற்றிக்கொண்டு இருந்தது.

நள்ளிரவு 2 மணிக்கு கூட கோவிந்தனின் வீட்டில் தெரிந்த விளக்கு வெளிச்சம், இருவருக்கும் வியப்பை அளித்தது.

"ஆறுமுகம்... வீட்டுல இன்னும் கோவிந்தன் முழிச்சிட்டு தான் இருக்கான் போல... நாம கையில  வெளிச்சத்தோட போனா கண்டுபுடிச்சிருவான்... முதல்ல அந்த அரிக்கனை அணைச்சிடு" என்று வைத்தியர் சொன்னவுடன் ஆறிக்கனை ஒளியை மெல்ல குறைத்து அணைதான் ஆறுமுகம்.  இருப்பினும் பாதிமேகத்தால் சூழப்பட்ட பெளர்ணமி நிலவு சிறிது வெளிச்சத்தை கொடுக்க அதன் உதவியில் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து நடந்து வீட்டின் வாயிலுக்கு செல்லும் பாதையை விட்டு விலகி சற்று ஒதுங்கி ஒதுங்கி கோவிந்தன் வீட்டின் வலது பக்கம் சென்றிருந்தனர். கோவிந்தன் வசிப்பதும் மரத்தாலான சிறு குடி என்பதால் மரச் சட்டங்களுக்கிடையே சிறிய இடைவெளிகள் வழியே உள்ளிருந்து வரும் விளக்கொளி கசிந்து கொண்டிருந்தது. சத்தமில்லாமல் அந்த சுவற்றருகே அமர்ந்திருந்த ஆறுமுகமும் வைத்தியரும் மெல்ல தலையை நிமிர்த்தி அந்த இடைவெளிகள் வழியே வீட்டின் உள்ளே பார்வையை ஊடுறுவ விட, இருவரின் முகமும் ஒரு வித்யாசத்திற்குட்பட்டது.

வீட்டின் நடுவில் ஒரு சிறிய செங்கற்கல்லால் சூழப்பட்ட சதுர பகுதியில் சிறு நெருப்பு எரிந்திருக்க அதன் ஒரு புறம் சட்டையில்லாத ஒருவர் எதோ வாயால் முனங்கிகொண்டிருக்க  மறுபுறம்  கழுத்தில் மாலைகளுடன் சந்தனமும் குங்குமமும் நிறைந்த நெற்றியுடன்   அக்னியை வணங்கியபடி ஒரு வயதான ஆணும் அவனருகில் விட்டத்தை வெறித்து பார்த்தபடி பருமனான தோற்றத்துடன் மாலைகள் அணிவிக்கப்பட்ட ஒரு பெண்ணும் உட்கார்ந்து இருந்தனர். அவரின் பின்னால் கோவிந்தன் நின்று கொண்டிருந்தான். உட்கார்ந்து இருப்பது யார் என சரியாக தெரியாத நிலையில் வேறு சில மரச்சட்டங்களின் இடைவெளியில் மாறி மாறி பார்க்க அவர்களின் முகமும் காணக்கிடைத்ததும் வைத்தியரும், ஆறுமுகமும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

மாலைகளுடன் உட்கார்ந்திருந்தது ஆறுமுகம் வசிக்கும் எஸ்டேட்டை முன்பு வைத்திருந்த  தட்சிணாமூர்த்தியும் அவரது மனைவியும்.

உள்ளே அவர்கள் எதோ பேச ஆரம்பிக்க, ஆறுமுகமும் வைத்தியரும் காதுகளை கூர்மையாக்கி கேட்க ஆரம்பித்தனர்.

"சாமி.. நீங்க சொன்ன மாதிரியே ஒரு பறவை, ஒரு கால்நடை, நீங்க சொன்ன அதே நட்சத்திரத்துல பிறந்த ஒரு நரன் எல்லாரையும், நீங்க சொன்ன அதே பெளர்ணமில, நீங்க சொன்ன அதே இடத்துல பலி கொடுத்தாச்சி... இப்பவாவது ஆண்டவன் கண்திறந்து எனக்கு மனைவிய பழையமாதிரி எனக்கு திரும்ப தருவாரா.. இதோட முழுசா நாலு  வருஷம் ஆச்சி இவளுக்கு ப்ரம்மைபிடிச்சது மாதிரி ஆகி.. குழந்தையில்லைங்குற குறையே தெரியாதமாதிரி என்னை வச்சிருந்த அவள இப்புடிபாக்குறதுக்கு எனக்கு சக்தி இல்லை" என்றார் 50 வயதான தட்சிணாமூர்த்தி

"இதில் ஆண்டவன் மனதுவைக்க எதுவுமே இல்லை... நாம் கொடுத்த பலிகள் அனைத்தும் உன்னுடைய முன்னோர்களின் ஆன்மாக்களை சாந்தியடைய செய்வதே... நமக்கு நடைபெறும் அனைத்து செயல்களும் அவர்களின் ஆசியுடனேயே நடைபெறுகிறது. நமக்கு காவல்தெய்வங்களும் அவர்களே... நமக்கு தீங்கு விளைவிக்கு கர்ம சாத்தான்களும் அவர்களே. இதுபோன பலிகள் மூலம் அவர்களின் ஆன்மாக்களை திருப்திப்படுத்துவதால், நாம எந்த நோக்கத்தை மனசுல வச்சி பலிகொடுக்குறோமோ அந்த செயல்கள் ஈடேற வழிபிறக்கும் என்பது சித்தர்களார் எழுதிவைக்கப்பட்ட உண்மை. கூடிய
விரைவில் நீ விரும்பியபடி உன் மனைவி பழையபடி மாறுவாள்"

"இதுகண்டிப்பா நடக்கனும்... அவளுக்காக தான் இத்தனை கஷ்டமும்... போனவருஷம் நீங்க என்கிட்ட இந்த பரிகாரத்த சொன்னதும், நீங்க சொன்ன நட்சத்திரத்துல உள்ள ஒருத்தனை தேடித் திரிஞ்சோம் அப்பதான் திருச்சாமிக்கு அந்த நட்சத்திரம்னு தெரிஞ்சிது. உடனே அவன என்னோட எஸ்டேட்ல வச்சி எதாவது செஞ்சா எங்க மேல சந்தேகம் வந்துரும்னு தான் நானும் கோவிந்தனும் திட்டம் போட்டு எனக்கு பணக்கஷ்டம் இருக்கமாதிரி காண்பிச்சி அவன்கிட்ட குறைஞ்ச விலையில அந்த எஸ்டேட்ட வாங்கவச்சிட்டு நா தலை மறைவாயிட்டேன். சிலபேரு நா இறந்துட்டேன்னு கூட நம்பிட்டாங்க. எல்லாம் நல்ல அமைஞ்சி வந்தவுடன் இன்னிக்கு ராத்திரி எஸ்டேட்ல பெரிய ப்ரச்சனைன்னு சொன்னதும் உடனே கெளம்பி வந்துட்டான் திருச்சாமி... நெனைச்சமாதிரியே அவன் கதையையும்
முடிச்சாச்சி... சாமி எனக்கு ஒண்ணுதான் புரியல.. பலிகள ஏன் என்னோட எஸ்டேட்ல குடுக்க சொன்னீங்க? அதனாலதான் இவ்வளவு யாருக்கும் தெரியாத ஒரு எடத்துல குடுத்துருந்தா இவ்வளவு  கஷ்டம் வந்திருக்காது.

"ம்ம்ம்ம்...ஒரு உயிர் பிரிஞ்ச அப்புறம் அந்த ஆத்மா எங்க சுத்திகிட்டு இருக்கும் தெரியுமா?"

"தெரியாது சாமி"

"உயிர் பிரிஞ்ச இடத்துல உடம்புலருந்து பிரியிற ஆத்மா அந்த உயிரற்ற உடலயே சுத்தி வந்துகிட்டு இருக்கும். சரீரத்த நாம இடுகாட்டுக்கு எடுத்துட்டு போகிறவரைக்கும் அதை தொடர்ந்தெ வர்ற ஆத்மா இடுகாட்டில் உடல் அழிக்கப்பட்டதும் அதன் பிறகு எங்கே செலவது என்று தெரியாமல் அந்த இடுகாட்டிலேயே தனது சரீரத்தை தேடி அலைந்து கொண்டிருக்கும்.... நீ வைத்திருந்த அந்த  எஸ்டேட் தான் நம் முந்தைய சந்ததியினரின் இடுகாடு என்பதை மறந்துவிடாதே.. இப்ப  தெரிந்திருக்கும் நான் ஏன் அங்கு பலியிடச் சொன்னேன்னு" என்று சொல்லிவிட்டு திரும்பிய சடைய்ப்ப சாமியின் முகத்தை கண்டதும் ஆறுமுகத்திற்கு அடுத்த அதிர்ச்சி...

"ரொம்ப நன்றிசாமி... எதோ என் மனைவி எனக்கு திரும்ப கெடைச்சிட்டா போதும்..." என்று சொல்லிவிட்டு கோந்தனை நோக்கி "கோவிந்தா... திருச்சாமி மலையிலருந்து தவறி விழுந்து இறந்துட்டதா ஊர நம்ப வச்சிரு..."

"அய்யா..." என கோவிந்தன் இழுக்க

"என்னயே செத்தவன்னு ஊர நம்பவச்ச உனக்கு இது ஒரு பெரியவிஷயமில்லை... திருச்சாமிக்கும்  வேற யாரும் இல்லை... ஊரப்பொறுத்த அளவு இனிமே நீதான் அந்த எஸ்டேட்டுக்கு முதலாளி.."

லேசான புன்னகையுடன் "சரிங்கையா.. ஆனா அங்க திருச்சாமி ஆறுமுகம்ங்கறவன் குடும்பத்த குடி வச்சிருக்காரே.. அவன என்ன பண்றது..."

"இப்ப நடந்த விஷயம் எதாவது அவனுக்கு தெரியுமா?"

"நம்ம மூணுபேர தவற ஒரு ஈ காக்காவுக்கு கூட தெரியாது மொதலாளி... காதும் காதும் வச்சமாதிரி செஞ்சி முடிச்சிருக்கேன்... ஆனா முந்தாநேத்து விடியகாலை 4.30 க்கு அந்த கோழித்தலைய  எடுத்து அப்புறப்படுத்த போகும் போது மட்டும் அத காணல... எதாவது பூனை சாடிருக்கும்... நேத்து அந்த ஆட்டை தடம் தெரியாம அப்புறப்படுத்திட்டேன்... இன்னும் கொஞ்ச நேரத்துல திருச்சாமியையும் இருந்த எடம் தெரியாம பண்ணிடுறேன்..."

"அப்புறம் என்னடா... ஆறுமுகம் புள்ளை குட்டிக்காரன்.... நிம்மதியா இருந்துட்டு போகட்டும்.... அவன எதும் தொந்தரவு பண்ணாத " என்ற தட்சிணாமுர்த்தியிடம்

"சரிங்கையா...."  என தலையாட்ட ஆறுமுகமும் வைத்தியரும் அந்த இடத்தை விட்டு மெல்ல நகர ஆரம்பித்தனர்.

10 நிமிட மெளனமான நடைபயணத்திற்கு பிறகு "ஆறுமுகம் உன்கிட்ட ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் பஞ்சவர்ணமும் உன் பசங்களும் பொழுதுசாய நம்ம மாரியப்பன் வீட்டுல உக்காந்து பேசிகிட்டு இருந்தாக... அநேகமா நீ வர நேரம் ஆனதால அங்கயே தூங்கியிருப்பாங்கன்னு நெனைக்கிறேன்" என்றார்...

நம்பமுடியாத பல சம்பவங்கள் நடந்தேறியிருந்தாலும், தன் குழந்தைகள் பாதுகாப்பக இருப்பது மனதிற்கு நம்பிக்கையை அளித்தது... வைத்தியரிடம் பதில் ஏதும் சொல்லாமல் கூடிய விரைவில்  வேறு இடத்திற்கு குடிபெயர வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் ஓட்டிக்கொண்டு நடந்துவந்தான். சிறிது நேரத்தில் மலையம்மன் கோவில் வர வைத்தியர் வீட்டுக்கு பிரியும் வழியில்

"ஆறுமுகம் நாம இன்னிக்கு பாத்தது நமக்குள்ளையே இருக்கட்டும்யா... அதுதான் எல்லாருக்கும் நல்லது..." என்று கூறிவிட்டு அவர்வீட்டுக்கு நடந்து செல்ல, மறுநாள் கோவிந்தன் நடத்தவிருக்கும்  நாடகத்தை கண்முன்னே ஓட்டியவாறு தன்னுடைய வீட்டை நோக்கி நடந்தான் ஆறுமுகம்.

முற்றும்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...