Saturday, September 29, 2018

சாமி -2


Share/Bookmark
தமிழ் சினிமால அதிக முறை போலீசா நடிச்ச ஹீரோ யாருன்னு பாத்தா நம்ம கேப்டன் தான். மொதல்ல அப்ப்ப போலீஸா நடிச்சவரு, ஒரு லெவலுக்கப்புறம் போலீஸ் தவிற வேற எதுவுமே நடிக்கல.  , CBI ஆஃபீஸர், எலெக்ஷன் கமிஷ்ணர் இந்த மாதிரி ரோல்கள விட்டே வெளில வர முடியாம நடிச்சிட்டு இருந்தாரு. அந்த மாதிரி தமிழ்ல அதிக போலீஸ் படங்கள் எடுத்தவரு யாருன்னு பாத்தா நம்ம ஹரி சார் தான். கடந்த 2010லருந்து 2018 வரையில ஆறு படம் எடுத்துருக்காரு. அதுல வேங்கை , பூஜை இது ரெண்டத் தவற மத்த எல்லாமே போலீஸ் படம். அதுலயும் பூஜைல சத்யராஜ் ஒரு பவர்ஃபுல்லான போலீஸ் ரோல் பன்னிருப்பாரு. ஆக நம்ம கேப்டன் மாதிரியே இயக்குனர் ஹரியும் போலீஸுங்குற சட்டிக்குள்ள கைய விட்டுட்டு எடுக்க முடியாம சுத்திக்கிட்டு இருக்காருன்னு மட்டும் நல்லாத் தெரியிது. சரி இந்த சாமி ஸ்கொயர் எப்டி இருக்குன்னு பாப்போம்.

வீடியோ விமர்சனம்


நேத்து காலையிலயே பிரபல யூடியூப் சேனல்கள், டிவி சேனல்கள்லாம் சாமி ரிலீஸ் ஆன தியேட்டருக்கு போய் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் கவர் பன்றாங்க. படம் எப்டி இருக்குன்னு கேட்டு அவன் என்ன சொல்றானோ அதப் போடனும். அதவிட்டுட்டு இவனுங்க என்ன நினைக்கிறானுங்களோ அத ஆடியன்ஸ சொல்ல வச்சி அதப் போடுறானுங்க. படம் எப்டி இருக்கு? படம் பாக்கலாம் சார் நல்லாருக்கு. நல்லாருக்கா.. பாட்டெல்லாம் எப்டி இருக்கு? பரவால்ல சார் எப்டி இருக்கு. அதுவும் நல்லாருக்காசண்டை காட்சிகள்லாம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கா? அடுத்து அவனுக்கே குழப்பம் வந்துரும். சண்டை காட்சிகள் சுமாராத்தான் சார் இருக்குஎதிர்ப்பார்த்த அளவு இல்லை. ரைட்டு நம்ம எதிர்பார்த்த்து கெடைச்சிருச்சி. சாமி-2 எதிர்பார்த்த அளவு இல்லை டைட்டில போடு.  இதவிட இன்னோருத்தான் சூரி காமெடி எதிர்பார்த்த அளவு இல்லைன்னான். எனக்கு டபீர்னு வெடிச்சிருச்சி. சூரிகிட்டயெல்லாம் உன்ன யார்ரா காமெடிய எதிர்பார்க்க சொன்னது. அதுவும் ஹரி படத்துல வடிவேலு நடிச்சாலே காமெடி சுமாராத்தான் இருக்கும். இதுல சூரிகிட்ட காமெடி எதிர்பார்த்து ரொம்ப டிஸப்பாய்ண்ட் வேற ஆகுறான்.

சுமார் 15 வருஷம் கழிச்சி வந்த சீக்குவல்னாலும் முதல் பாகத்துல நடிச்ச பெரும்பாலான நடிகர்கள இதுலயும் கரெக்டா நடிக்க வச்சிருக்காங்க. அந்த சீக்குலுக்கான கதையையும் ஓரளவுக்கு நீட்டாவே லிங்க் பன்னிருக்காங்க. ஹரி படம் எல்லாத்துலயுமே ஒரே கதை தான். அதனால கதையப்பத்தியெல்லாம் பேசத் தேவையில்லை. எப்பவும் போல தியேட்டர்குள்ள போய் உக்காந்தா போர் அடிக்காம பரபரன்னு ரெண்டரை மணி நேரம் ஓடி முடியிது.

சில இயக்குனர்கள் கதை, திரைக்கதைய நம்பி படம் எடுப்பாங்க. சில பேரு கதா நாயகன நம்பி படம் எடுப்பாங்க. சில பேரு இசையமைப்பாளர நம்பி படம் எடுப்பாங்க. ஆனா முழுக்க முழுக்க ஸ்டண்டு மாஸ்டர நம்பி எடுக்கப்பட்ட படம் தான் இந்த சாமி-2. சண்டைக் காட்சிகள்லாம் வெறித்தனமா இருக்கு. அதுவும் விக்ரமோட அந்த உடம்புக்கு அவர் அத்தனை பேர அடிக்கிறாருன்னா நம்புற மாதிரி தான் இருக்கு. கல்யாண் மண்டபத்துல ஒரு சண்டை இருக்கு. ரொம்ப ஆக்ரோஷமா எடுத்துருக்காங்க.

ஸ்டண்ட்டு, விக்ரம் இதைத் தவற பட்த்துல சொல்ல வேண்டிய விஷ்யம்னு பாத்தா பாபி சிம்ஹா.. நார்மலா பாபி சிம்ஹா  வாயில பீடா போட்டுக்கிட்டே பேசுற மாதிரிதான் பேசுவாறு. ஆனா இந்தப் படத்துல வில்லன் ரோலுக்கு நல்லா செட் ஆயிருக்காரு. ஆளும் சூப்பரா இருக்காரு.

கீர்த்தி சுரேஷ் சும்மா பல்ல பல்ல காமிச்சிட்டு இருக்காம ஃபர்ஸ்ட் ஹாஃப்ல அழகா இருக்கு. கீர்த்தி சுரேஷ் அப்பாவா சந்தான பாரதி. என்ன சந்தான பாரதி கொஞ்சம் யங்காயிட்டாருன்னு பாத்தா அப்றம் தான் தெரியிது அது நம்ம கல்யான் ஜூவல்லர்ஸ் கார்ருன்னு. விஜயகுமார் இல்லாத குறைய இவர வச்சி போக்கிருக்காங்க.  சூரிஇப்பல்லாம் பொன்ராம் பட்த்துலயே சூரிகாமெடிக்கு சிரிப்ப்பு வரமாட்டுது. ஹரி பட்த்துல கேக்கவா வேணும். காமெடின்ற பேர்ல ரொம்ப போட்டு இழுக்காம சூரி வர்ற சீன்லாமே அதிகபட்சம் ஒரு நிமிஷம் ரெண்டு நிமிஷம் தான். அதனால ரொம்ப சேதாரம் இல்லை.

தலைவன் DSP பெரிய அளவுல ஒண்ணும் மேஜிக் பன்னல. பாடல்களும் சுமார். BGM um சுமார்.

மொத்தத்துல
 ரெண்டரை மணி நேரம் போரடிக்காம விறுவிறுப்பா போகுது. சிங்கம், சாமி படங்களோட முதல் பாகம் அளவுக்கு இல்லாட்டியும் சிங்கம்-2, சிங்கம் -3 படங்களை விட பல மடங்கு நல்ல படம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...