தொடர் தற்கொலைகளை துப்பறியும் ஒரு கதையாக ஆரம்பிக்கிறது இந்த Priest. பாதிரியார் கம் இன்வெஸ்டிகேஷன் ஆஃபீசராக மம்முட்டி. தலையில் ஒரு வட்ட தொப்பி, இடுப்பில் முடிச்சு போடப்பட்ட நீள அங்கி, வளர்ந்த தாடி, கையில் ஒரு குச்சி என ஃபாதர் பெனடிக்ட்டாக வலம் வருகிறார் மம்முட்டி
முழுப்படமும் அந்தத் தற்கொலைகளை துப்பறிவதிலேயே செல்லப்போகிறது
என நினைக்கும் போது, கதை இடைவேளையின் போது வேறு கோணத்தில் பயணிக்க ஆரம்பிக்கிறது.
Exorcism வகைப் படங்கள் நம்மை பயமுறுத்துமே தவிற பெரிய சுவாரஸ்யங்கள்
இருக்காது. ஆனால் இங்கு அப்படி இல்லாமல் இரண்டரை
மணி நேரப் படத்தையும் வெறும் ஹாரராக மட்டும் கொடுக்காமல் கடைசி வரை ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராகக்
கொடுத்து சுவாரஸ்யத்தைக் கூட்ட முயன்றிருக்கிறார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
படத்தின் சில திருப்பங்கள் Talaash, The Invisible Guest
திரைப்படங்களை ஞாபகப் படுத்துகின்றன. இருப்பினும் கட்டாயம் ஒரு முறை பார்க்கலாம்.