குறிப்பு: இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல . திநகர் சரவணா ஸ்டோர்ஸ விட அதிகமா ஒரு கடையில கூட்டம் கூடுதுன்னா அது நம்ம டாஸ்மாக்குகள்ல தான். புதுப்படம் ரிலீஸ் ஆனா மொதநாள் மட்டும் தான் தியேட்டர்ல கூட்டம் அப்டி இருக்கும். ஆனா இங்க தினம் தினம் புதுப்பட ரிலீஸ் கூட்டம் தான். அள்ளுது. ரஜினியும் கவுண்டமணியும் மன்னன் படத்துல மொத டிக்கெட் வாங்கிட்டு கிழிஞ்ச சட்டையோட “சைனு... மோதரம்” ன்னு வர்ற மாதிரி தான் சாய்ங்காலம் இந்த கடைக்குள்ள போற ஒவ்வொருத்தரும் திரும்பி வர்றாய்ங்க. பொங்கலுக்கு வந்த படமெல்லாம் 50 கோடி கலெக்சன் பாக்கவே நாக்கு தள்ளுது. ஆனா ரெண்டே நாளுல டாஸ்மாக்குகள்ல 235 கோடி கலெக்சன்... எப்பூடி.. அப்டி இந்த குடியில என்ன தான் இருக்கு. ஏன் மக்கள் இவ்வளவு ஆர்வாமா இருக்காங்க... மனித சமுதாய முன்னேற்றத்துக்கு இந்த குடி எவ்வளவு உறுதுணையா இருக்குன்னு இப்போ பாப்போம்.
1. மொதல்ல கைய குடுங்க. நீங்க ஒரு குடிகாரனா ஆயிட்டாலே இந்த வெக்கம், மானம், சூடு, சொறைனை அசிங்கமான உணர்ச்சிகள்லாம் உங்கள விட்டு போயிரும். உங்க பையன் உங்கள மதிக்க மாட்டான். உங்க மனைவி உங்கள படு கேவலமா திட்டுவாங்க. ரோட்டுல போற வர்றவன்லாம் காறி துப்புவான். ஆனா நமக்கு தான் ஒண்ணுமே தெரியாதே. அதனால குடிக்க ஆரம்பிச்சிட்டாலே நீங்க காலர தூக்கி விட்டுக்கிட்டு பெருமையா சொல்லிக்கலாம் “NOW I AM A SHAMELESS FELLOW" ன்னு.
2. பஸ் டிக்கெட்டு ட்ரெயின் டிக்கெட்டு ஃப்ளைட் டிக்கெட்டுன்னு எல்லாத்தையும் ஏத்திபுட்டாய்ங்க. இப்பல்லாம் பக்கத்து ஊருக்கு போகனும்னாலே காசு ரொம்ப செல்வாகுது. ஆனா நூறு ரூவா செலவு பண்ணா லண்டன், அமெரிக்கா, சுட்சர்லாந்து ஏன் நிலாவுக்கே கூட பொய்ட்டு வரலாம். ஒரு குவாட்டர போட்டுட்டு நீட்டிகிட்டா போதும். அப்டியே பசிபிக் பெருங்கடல் வழியா பறந்து போய் அமெரிக்காவுல ஒரு யூ டர்ன போட்டு அப்டியே ஷாட் கட்டுல நாசா வழிய நிலாவுல போய் லஞ்ச் சாப்டு டின்னருக்கு
திரும்ப வீட்டுக்கு வந்துடலாம். தெளிவா இருந்தா இதெல்லாம் நடக்குமா?
3. குடிக்க ஆரம்பிச்சிட்டாலே நீங்க ஒரு திறந்த புத்தகமா மாறிடுவீங்க. ”உயிரே போனாலும் இந்த ரகசியத்த சொல்லிடாத”ன்னு ஒருத்தன் நம்மகிட்ட சொல்லிருப்பான். ஆனா ரெண்டு ரவுண்டு உள்ள போனா போதும் யார்கிட்ட அத சொல்லக்கூடாதுன்னு சொன்னானோ அவன்கிட்டயே அத்தனையும் அச்சி பிசிறாம சொல்லுவோம்.
4. மனுஷங்க பலபேர்கிட்ட இல்லாத ஒரு நல்ல பழக்கம் என்னன்னா இந்த சகிப்புத்தன்மை தான். சரக்கு உள்ள பொய்ட்டாலே இந்த சகிப்பு தன்மை எங்கருந்து தான் வரும்னு தெரியல. தெளிவா இருந்தா ஏசி ரூம்லதான் படுப்பேன்னு சொல்லி அடம் புடிப்பாய்ங்க. அடுத்தவன் எச்சி துப்புனாலே மூஞ்ச சுழிப்பாய்ங்க. ஆனா கூட கொஞ்சம் உள்ள பொய்ட்டா அவ்ளோதான்.. ரோட்டு ஓரமா சாக்கடைய ஒட்டி குபுக்குன்னு வாந்தி எடுத்து அது மேலயே படுத்து பொறண்டுக்குவாய்ங்க. வெரி டீசண்ட் கய்ஸ்ன்னு பேர் கூட உங்களுக்கு கிடைக்கும்.
5. எதோ கறுப்பு பணம்ன்றாங்க.. அந்நிய சலவலானிங்குறாங்க.. ஹவாலாங்குறாங்க.. வரி ஏய்ப்புங்குறாங்க.. இப்படிப்பட்டவங்க இருக்குற நாட்டுல நாடு நல்லாருக்கனும்னு நெனைக்கிற ஒரே ஜீவன்கள் இந்த குடிமகன்கள் தான். வாங்குற சம்பளத்துல கால்பகுதியோ இல்லை பாதியோ இல்லை முக்கால்வாசியோ (அவங்க அவங்க experience ah பொறுத்து) திரும்ப நாட்டுக்கு வருவாயா நாமளே குடுத்துடுறோம். நம்ம வீட்டுல சோறு இல்லைன்னாலும் பரவால்லை நாட்டு நல்லா இருக்கனும்னு நெனைக்கிறவிங்க குடிகாரய்ங்க மட்டும் தான்.
6. இன்னொரு முக்கியமான விஷயம் ஷேரிங்ங்ங்.. அவசரம்னு கேட்டா அம்மஞ்சல்லி தரமாட்டாய்ங்க. ஆனா குடிக்கிறப்ப மட்டும் இவய்ங்க பண்ற அலும்பு இருக்கே.. “பாஸ் இத சாப்டுங்க பாஸ்”... ‘வெறும் வயித்துல குடிக்காதீங்க பாஸ்... இந்த சிக்கன லைட்டா கடிங்க பாஸ்...” ”இன்னும் கொஞ்சம் தண்ணி ஊத்திக்குங்க பாஸ்”.. “என்ன அதுக்குள்ள எழுந்துட்டீங்க.. இன்னும் ரெண்டு பீரு இருக்கு.. அட உக்காருங்க பாஸ்” ன்னுஅவனுக்கு இல்லைன்னாலும் அடுத்தவன் வயிறு கெட்டுப் போயிறக்கூடாதுன்னு அள்ளி அள்ளி குடுப்பாய்ங்க.
7. நம்மூர்ல வேற மக்கள் தொகை ஏறிகிட்டே போவுது. என்பது கோடி நூறு கோடி நூத்தம்பது கோடின்னு அது பாட்டுக்கு போயிகிட்டே இருக்கு. இன்கம்மிங் அதிகமா இருக்கு ஆனா அவுட் கோயிங் ரொம்ப கம்மியா இருக்கு. எதச் சொல்றேன்னு புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். அதனால அவுட்கோயிங்க அதிகப்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் இந்த டாஸ்மாக். வேணுங்குற அளவு குடிங்க. கொஞ்ச நாள்ள லிவரு லீவராயி கிட்னி சட்னியாயி.. அப்புறமென்ன நாமளும் முகேஷ் மாதிரி அவுட்கோயிங் தான். அதானால மக்கள் தொகை கட்டுப்பாட்டுலயும் நாட்டுக்கு உதவுறது நம்ம ”குடி”மக்கள் தான்.
8. குடிகாரனா ஆயிட்டாலே பல குடும்பங்களை அழிக்கிற புண்ணியமெல்லாம் வந்து உங்களச் சேரும். நீங்க ஃபுல்லா குஸ்டு ரோட்டுல தெளிவா போயிட்டு இருக்க எவன் மேல வேணாலும் வண்டிய விட்டு அடிக்கலாம். சும்மா ஒரே ஒரு தடவ மட்டும் அவனுக்கு உயிர் போவும்.அவன் குடும்பம் அத்தோட காலி ஆவும். சில நேரங்கள்ல நமக்கு கூட ஒரு தடவ உயிர் போவும். இந்த புண்ணியமெல்லாம் யாருக்கு கெடைக்கும்?
9. கமலஹாசன் இன்னா சொல்லிருக்காரு. மன்னிப்பு கேக்குறவன் மனுஷன். மன்னிக்கிறவன் வீரன்ன்னு. ஒருத்தன் மனுசனாவுறதும் வீரனாவுறதும் இந்த தண்ணியாலதான். ஒருத்தன் நம்மள அசிங்க அசிங்கமா திட்டிருப்பான். வெட்டுக்குத்து ரேஞ்சுல ரெண்டு பேருக்கு சண்டை நடக்கும். ஆனா சாயங்காலம் ஒரு பாட்டில தூக்கி முன்னால வச்சா... “ஹி... ஹி...அப்புறம் மாப்ளே... சும்மா சும்மா நீ கோவப்படுவ” அப்டின்னு சொல்லிட்டு சமாதானமா
போயிருவாய்ங்க. நா மொதல்ல சொன்ன மாதிரி மா.வெ.சூ.சொ ங்குற ஃபீலிங்கே இருக்காது.
10 .இந்த ப்ளானிங்குங்ற மேட்டர யாரு ஃபாலோ பண்றாங்களோ இல்லியோ.. நம்ம குடிமகன்கள் கரெக்டா ஃபாலோ பன்றாங்க. மறு நாள் கடை லீவுண்ணா இவிங்க ரியாக்சன பாக்கனுமே.. மொத வேலையா போய் ரெண்டு பாட்டிலு வாங்கிட்டு வந்து ஸ்டாக் வச்சா தான் நடுக்கம் நிக்கிது.
11. வாழ்க்கையில போனா வராதது லிஸ்டுல முக்கியமான ஒண்ணு நம்ம வயசு. ஆனா தண்ணியப்போட்டா அதக்கூட திரும்ப கொண்டு வந்துடலாம். ரெண்டு ரவுண்டு உள்ள விட்டா அப்டியே பச்சை கொழந்தையாவே மாறிடுவாய்ங்க. அதான் இந்த சின்னக் குழந்தை நடை பழகும் போது விழுந்து விழுந்து எந்திரிக்குமே அந்த ஸ்டேஜூ.. என்ன ஒரே ஒரு வித்யாசம்னா சின்னக்குழந்தையில விழுந்து விழுந்து எந்திரிச்சா வீட்டுல உள்ளவங்க குழந்தை நடக்க ஆரம்பிச்சிட்டான்னு சந்தோஷப்படுவாங்க. ஆனா இப்போ விழுந்தா ஒரு பய கண்டுக்க மாட்டான்.. மூக்கு முகரையெல்லாம் பேந்து போயிரும்.
12 அது மட்டுமா பல கவிஞர்கள உருவாக்குறதும் இந்த தண்ணி தான். தெளிவா இருந்தா தொடர்ந்து நாலு வார்த்தை சேத்து பேச முடியாது. ஆனா உள்ள கொஞ்சம் விட்டுட்டா... “மெளண்ட் ரோடு அண்ணா சால... சூப்பர் ஸாரு முரட்டுக்காளை” “வானமோ நீலம்.. நீ தான் என் பாலம்” ந்ன்னு அப்டியே கவிதையா கக்குவாய்ங்க. அதுவும் லவ் பண்ணிட்டு இருக்கவிங்க தண்ணியடிக்கும் போது கூட எவனாவது மாட்னா அவனுக்கு மேட்டர் ஓவர்னு அர்த்தம்.