Showing posts with label அதிரடிக்காரன். Show all posts
Showing posts with label அதிரடிக்காரன். Show all posts

Wednesday, August 2, 2023

பொள்ளாச்சியிலிருந்து புளியம்பட்டியும் கபாலி அதிகாலைக் காட்சியும்!!


Share/Bookmark


ஜெயிலர் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்குத் துவங்கும் எனத் தகவல்கள் வருகின்றன. அது உண்மையெனில் மிகவும் நல்ல முடிவு.


சில வருடங்களுக்கு முன் அதிகாலைக் காட்சி என்பது ஒரு சில நகரங்களில் அதிலும் ஒரு சில திரையரங்கத்தில் மட்டுமே நடக்கும். ஆனால் இன்று திரையிடப்படும் அத்தனை திரையரங்களிலும் அதிகாலைக் காட்சிகள் திரையிடப்படுகின்றன. அதிகாலைக் காட்சிகள் பார்ப்பது ஒரு பெருமையாகவும்,   எந்தத் திரையரங்கம் முதலில் திரையிடுகிறது என்பது ஒரு மானப் பிரச்சனையாகவும் இன்று பார்க்கப்படுகிறது.


இப்பொழுது வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களுக்கு முதலில் தவறான விமர்சனங்கள் வெளியாவது இந்த அதிகாலைக் காட்சிகளால்தான். 


ஒருபுறம் முதல் நாள் முதல் காட்சி பெருமைக்கு என்று வைத்துக்கொண்டாலும், டைட்டில் கார்டு, அறிமுகக் காட்சி, இடைவேளை, க்ளைமாக்ஸ் என அனைத்தையும் பிட்டு பிட்டாக வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றி விடும் 2k கிட்ஸ்களிடமிருந்து தப்பித்து ஒரு திரைப்படத்தின் சுவார்ஸ்யத்தை முழுமையாக உணர முதல் காட்சி பார்த்துவிட முடிவு செய்பவர்களும் பலர். 


மற்றொன்று அதிகாலைக் காட்சி என்றால் படத்தையும் பார்த்துவிட்டு, அலுவலகத்திற்கும் நேரத்திற்கு சென்றுவிடலாம்.


ஒரு திரைப்படத்தை நாம் ரசிப்பதற்கு தெளிவான, அழுத்தமற்ற மனநிலை வேண்டும். அதிகாலைக் காட்சிகளில் இது அத்தனையுமே பெரும்பாலானோருக்கு இல்லாமல் போகிறது.


உதாரணத்திற்கு  கபாலியின் அதிகாலைக் காட்சியைப் பார்க்க முயற்சித்தேன். டிக்கெட் எங்கும் கிடைக்கவில்லை. ரோஹினியில் மதியம் 3 மணிக் காட்சிக்கு மட்டும் இரண்டு டிக்கெட் கிடைத்தது. 


மறுநாள் காலை படம் ரிலீஸ். இரவு 9 மணிக்கு நண்பர் ஒருவர், அவர் நண்பரிடம் அதிகாலைக் காட்சிக்கு டிக்கெட் இருப்பதாகவும் விருப்பப்பட்டால் செல்லலாம் எனவும் கூறி அவர் நண்பரின் நம்பரைக் கொடுத்தார். "இந்தாப் போறேன் சுசேட்டிக்கு" என உடனே அவருக்கு கால் செய்தேன்.


அவர் டிக்கெட் இருப்பை உறுதி செய்தார். ஆனால் இரு சின்ன சிக்கல். அவர் இருப்பது வில்லிவாக்கம் அருகே. அவரின் வண்டியில் ஏதோ பிரச்சனை. அதனால் தன்னை பிக்கப் செய்து கொள்ள இயலுமா என்றார். நான் இருந்தது திருவொற்றியூர். தியேட்டர் ரெட்டில்ஸ். அவர் இருந்தது வில்லிவாக்கம. இது பொள்ளாச்சி பொய்ட்டு புளியம்பட்டி வர்ற ரூட்டாச்சே..  முடியாதென்று கூறினால் சிரியான நேரத்திற்கு அவர்  வராமல் போய்விட்டால் என்ன செய்வது என்று நினைத்து சரி என்றேன். 


4 மணிக் காட்சி மற்றும் என்பதால் அதிகபட்சம் 8 மணிக்குள் வெளியே வந்துவிடலாம் என நினைத்து அலுவலகத்தில் விடுப்போ, தாமதமாக வருவேன் என்றோ கூறவில்லை. மதியம் 3 மணிக் காட்சிக்கு எடுத்த இரண்டு டிக்கெட்டுகளை நண்பருடன் வேறு ஒருவரை லிங்க் செய்து அனுப்பி விட்டு விடலாம் என நினைத்தேன்.


பொள்ளாச்சி புளியம்பட்டி தொலைவையும் 4 மணிக் காட்சியையும் கணித்து நான் வீட்டிலிருந்து புறப்பட்ட நேரம் 2:30. அதற்கு முன் குளித்துக் கிளம்ப ஒரு அரை மணி நேரம். ஆக 2 மணியிலிருந்து தூங்கவில்லை. நானே இப்படியென்றால் ஒரு மணி நேரம் முன்னதாகத் திரையரங்கிற்குச் சென்று டான்ஸ் ஆடி Behindwoods ற்கு கண்டெண்ட் கொடுப்பவர்கள் எத்தனை மணிக்கு எழுவார்கள் என்பதை யூகித்துக் கொள்ளவும்.


ஒரு வழியாக திரையரங்கையடைந்து காட்சியும் ஆரம்பித்தது. பத்து நிமிடம் தாண்டி திரையரங்கில் மயான அமைதி. எமோஸன் எமோஸன் என்று ரஞ்சித் பேட்டிகளில் இழுக்கும்போதே சுதாரித்திருக்க வேண்டும். எமோஸனைப் பிழிந்ததில் அழுதே விட்டேன். ஆமா.. விட்டுருங்க விட்டுருங்க என அழுதேன்.


படம் முடிந்து வெளியே வருவதற்கும் தலைவலி உச்சத்தை அடைவதற்கும் சரியாக இருந்தது. குவாட்டர்ல பெப்பரக் கலந்து ஒரு பெக்கு போடுவோமா என நினைத்தேன். "பார்ட்டில சைடிஷ் திங்கிற மூதேவி" என்கிற மைண்ட் வாய்ஸ் கேட்கவும் அந்தப் ப்ளானைக் கைவிட்டேன். 


அந்தத் தலைவலியுடன் வீட்டிற்கு வர மணி 8:45 ஆகியிருந்தது. சரி மதியம் ரெண்டு டிக்கெட் இருக்கே அத மொதல்ல பத்தி விடுவோம் என நினைத்து நண்பன் Anantha Narayanan ற்கு கால் செய்தேன்.


"டேய்.. நா கொஞ்சம் அர்ஜெண்ட்டா ஆஃபீஸ் போகனும்டா.. ரெண்டு டிக்கெட் இருக்கு. உன் ஃப்ரண்டு யாரயாச்சும் அழச்சிட்டு பொய்ட்டு வா"


"நீ வந்தா நா வர்றேன். இல்லன்னா நா போகல" 


"டேய் நா என்ன உன் லவ்வராடா.. நா இல்லாம போமாட்டியா.. உசுற வாங்காம போய்த் தொலடா"


"இல்ல நீ வந்தாப் போறேன்.. இல்லனா விடு"


" எது இல்லன்னா உடா.. 600 ரூவா டிக்கெட்ரா அது" 


"சரி டிக்கெட் கிடைச்சும் நீ ரெண்டாவது தடவ வரமாட்றன்னா படம் மொக்கதான.." 


"ஆத்தாடி கரெக்டா கண்டு புடிச்சிட்டானே.. மொக்கைன்னு சொன்னா இவனும் வராம தனியா போகவிட்டுருவானே" என நினைத்து அதெல்லாம் இல்லடா "தலைவர் ஸ்டைல் சூப்பர்" "மியூசிக் செம" "எமோசன் அதுக்கும் மேல" என அஜித் படத்திற்கு கூறுவது போல் பிரித்து பிரித்து சொன்னேன். சரி என்றான்.


சரி தலையும் வலிக்குது. ஆஃபீஸுக்கு லீவப் போட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு மறுக்கா ரோஹினிக்கு போய் பாத்துட்டு வருவோம் என பாஸூக்கு கால் செய்தேன்.


"சார் தலை பயங்கரமா வலிக்குது"


"ஏன் படம் பாத்ததாலயா?"


" ஏ..எது..படம் பாத்ததாலயா.. ஆமா அதுக்கென்ன இப்ப"


"சரி வருவியா வரமாட்டியா"


"இல்ல சார் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு முடிஞ்சா மதியம் வர்றேன்"


"அவள அவசரமா வந்து இங்க ஒண்ணும் நீ பன்னப் போறதில்ல.. இருந்துட்டு நாளைக்கே வா"


"நன்றி அய்யா"


கொஞ்ச நேரம் தூங்கிட்டு மறுபடி பொள்ளாச்சியைத் தாண்டியுள்ள ரோஹினிக்குச் சென்று மீண்டும் ஒருமுறை துங்கியெழுந்து வந்தேன்.


இதெல்லாம் எதுக்காகச் சொல்றேன்னா.. அதுக்காகச் சொல்றேன்.


என்னைப் போல் படம் பார்த்துவிட்டு அலவலகம் செல்லலாம் என சில பேர். பள்ளிக்குச் செல்லலாம் எனப் பல பேர் (இது அவர்களைக் குறிக்கவில்லை) 


தர்பார் முதல் காட்சிக்கு ஒரு அம்மா பையனை அதிகாலைக் காட்சிக்கு அழைத்து வந்து படம் முடிந்த பிறகு அங்கேயே பையனுக்கு தலை சீவி ஸ்கூல் பேக்குடன் அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகியிருந்தது. அதையெல்லாம் தாண்டி தூக்கமின்மை.


அந்த சமயத்தில்  படம் சில நிமிடம் நீடித்தாலே எரிச்சல் வரும். சாதாரண மொக்கைகள் முரட்டு மொக்கைகளாகத் தெரியும். முதல் காட்சியில் நமக்கு மரண மொக்கையாகத் தெரிந்த திரைப்படம் மறுநாள் மாலை பார்ப்பவருக்கு "அவ்வளவு மோசமில்லையே" எனத்தோன்றும். ஒரு சில நாட்கள் கழித்துப் பார்த்தல் நமக்கே அப்படித்தான் தோன்றும்.


எனவே அதிகாலைக் காட்சிகளை நிறுத்துவது தமிழ்சினிமாவிற்கு நல்லது. 


குறிப்பு: ஒரு வேளை ஜெயிலர் அதிகாலைக் காட்சிகள் இருந்தால் தவறாமல் எனக்கும் ஒரு டிக்கெட் உசார் செய்யவும். ஏனென்றால் மேலே எழுதியிருப்பது சரியா இல்லையா என இன்னொரு முறை சரிபார்க்க வேண்டும்.


-அதிரடிக்காரன் 


#Jailer #Rajnikanth #Athiradikkaran

Thursday, June 16, 2022

சிவாஜி நினைவலைகள் - 15 Years of Sivaji


Share/Bookmark



பொறியியல் மூன்றாமாண்டு விடுதி. இரவு எட்டு மணி. மாலை ஏழு மணி முதல் பத்து மணி வரை காமன் ஹாலில் டிவி ஓடிக்கொண்டிருக்கும். பெரும்பாலும் 8 to a8:30 தான் எங்களுடைய இரவு உணவுக்கான நேரம். ஏனென்றால் அப்பொழுதுதான் நியூஸ் ஓடிக்கொண்டிருக்கும். “அத யாருப்பா அசிங்கமா பாத்துகிட்டு” என கும்பலாக எழுந்து சென்றுவிடுவோம். நியூஸ் பார்ப்பதற்காக மட்டுமே காமன் ஹாலிற்கு வருபவர்களும் உண்டு. 


அப்படி சிலர் மட்டும்காமன் ஹாலில் நியூஸ் பார்த்துக் கொண்டிருக்க, நாங்கள் ஹாஸ்டல் மெஸ்ஸில் உணவிற்காக உட்கார்ந்திருந்தோம்.


ஒரு வாய் எடுத்து வைக்கவில்லை.. ”ஹோஓஓஓஓ” என காமன் ஹாலிலிருந்து பயங்கர சத்தம் பின்னாலிருந்த

மெஸ்ஸில் கேட்டது. “வழக்கமா சச்சின் அடிக்கும் போது தான் இந்த மாதிரில்லாம் கத்துவாய்ங்க. இன்னிக்கு மேட்ச் கூட இல்லையே..என்னாச்சு?” என சாப்பிட்டத்தை அப்படியே வைத்துவிட்டு அனைவரும் காமல் ஹாலை நோக்கி ஓடினோம்.


”என்னாச்சு.. என்னாச்சு” என பதற்றமாக உள்ளே நுழைய, உள்ளே இருந்தவர்கள் அத்தனை உற்சாகத்துடன் “டேய் ஷங்கர் ரஜினிய வச்சி படம் எடுக்குறாரம்டா.. ஷங்கர் ரஜினிய வச்சி படம் எடுக்குறாராம்டா” உள்ளே

சென்றவர்களும் ”ஹோஓ”வென கூச்சல் போட காமன் ஹாலே திருவிழாக் கோலமானது. அப்படியே உட்கார்ந்து

விளம்பரத்திற்குப் பிறகு வந்த ஷங்கர்-ரஜினி கூட்டணியைப் பற்றிய முழு செய்தியைப் பார்த்துவிட்டு மட்டற்ற மகிழ்ச்சியுடன் சாப்பிடச் சென்றோம்.  செய்தியில் படத்தின் பெயர் என்ன என்பதயெல்லாம் யாரும் குறிப்பிடவில்லை. நாங்களே டைட்டில் எப்படி இருக்கப்போகிறது என பல யூகங்களை உருவாக்கியிருந்தோம்.


அடுத்த இரண்டாவது நாளில் கல்லூரி டீக்கடையில் ஒரு பேப்பர் செய்தி. ”ஷங்கர்-ரஜினி இணையும் திரைப்படத்திற்கு சிவாஜி என பெயரிடப்பட உள்ளதாகத் தகவல்” என இருந்தது.


“எலே என்னது? சிவாஜியா? என்னலே இத எப்டிப் படிச்சாலும் மாஸா இல்லையேலே” என மிகப்பெரிய ஏமாற்றம். ஆனால் எல்லாம் சில நாட்கள் தான்.


“அருணாச்சலம் டைட்டில மொதல்ல கேக்கும்போது என்னடா இது அருணாச்சலம், வேதாச்சலம்னு ரொம்ப சுமாரான டைட்டிலா இருக்கேன்னு நினைச்சேன். ஆனா அதயே ரஜினிசார் “அருணாச்சலம்”ன்னு கணீர்னு சொன்னப்போ அந்த டைட்டிலே பயங்கர பவர்ஃபுல்லா தெரிஞ்சிது.. அப்டியே ஒத்துக்கிட்டேன்” என சுந்தர்.சி கூறியிருப்பார். அதேபோல சில நாட்களிலேயே சுமாரான சிவாஜி, சூப்பரான டைட்டிலாக மாறிப்போனது.


இரண்டு மூன்று வாரம் கழித்து ஒருநாள் காலை ஆறுமணிக்கெல்லாம் ரூம் மேட் பிரபு ஆழ்ந்த நித்திரையில் இருந்த என்னை “யோவ்.. எந்திரிய்யா..  யோவ் எந்திரிய்யா” என வேக வேகமாக எழுப்பினான்.


என்ன இவன் விடியக்காலமே எழுப்பி விடுறான் என அலுத்துக்கொண்டே எழுந்தால் மடியில் அந்த ஹிந்து பேப்பரைப் வீசினான். பேப்பரில் சிவாஜியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். அதுவரை பார்த்திராத வித்யாசமான, சந்திரமுகியைக் காட்டிலும் இளமையான ரஜினி. ச்ச.. செம்மடா... அன்று மட்டும் கிட்டத்தட்ட பத்து பேராவது என்னிடம் பேப்பரைக் கொண்டு வந்து கொடுத்திருப்பார்கள், அந்தப் போஸ்டரை வெட்டி வைத்துக்கொள்வதற்காக. அந்த போஸ்டர்தான் ஃபைனர் இயர் முடியும் வரை என்னுடைய ரூம் சுவற்றில்   முருகனுக்கு அருகில்  ஒட்டப்பட்டிருந்தது. இன்னும் பத்திரமாக உள்ளது.


நான்காமாண்டு முடியும் தருவாயில் கல்சுரல்ஸிற்கு நான்கு நாட்களே இருந்த சமயம். சிவாஜியின் மூன்று பாடல்கள் லீக் ஆனது. அதில் ஒன்றை கல்லூரி ஆர்கெஸ்ட்ராவில் சேர்ந்து விடுவோமா என்று கூட யோசித்தோம். ஆனால் ஏற்கனவே பாடல்களெல்லாம் முடிவு செய்யப்பட்டு விட்டதால், மீண்டும் கேட்டால்  orchestra co-ordinator ரவிக்குமார் கடித்து வைத்து விடுவார் என அதை அப்படியே விட்டுவிட்டோம்.


மற்ற பாடல்கள் ரிலீஸான பொழுது ஊருக்குச் சென்றதால் உடனடியாகக் கேட்க முடியவில்லை. ஆனால் SPB பாடிய பாடல் எப்படி இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள அவ்வளவு ஆர்வம். நண்பர் Karthick Chandrasekar  ற்கு கால் செய்ய, ஹாஸ்டலில் இருந்த அவருடைய டேப்பில் முழு சத்தத்துடன் அந்தப் பாட்டை ஒலிக்க விட்டு ஃபோனில் கேட்க வைத்தார்.


கல்லூரி முடிவதற்குள் படம் வந்துவிட்டும், ஒன்றாகப் பார்த்துவிட்டு ஊருக்குச் செல்லலாம் என்றிருந்தோம். ஆனால் ரீலீஸ் தள்ளிப் போய், அது நிறைவேறாமல் போனது. ஊருக்குச் சென்றோம்.


கம்பெனியில் சேர்வதற்கான தேதியைக் கொடுத்துவிட்டார்கள். சிவாஜியின் ரிலீஸ் தேதியும் வந்தது. ஜூன் பதினைந்து. பட்டுக்கோட்டை அருண் திரையரங்கில் காலை ஏழு மணிக்காட்சி. அதற்குள் முதல் நாள் இரவு படம் பார்த்த சென்னை நண்பர்கள் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்க அன்றைய இரவு ரொம்பவே மெதுவாகக் கடந்துகொண்டிருந்தது.


காலை ஏழுமணிக்கு காட்சி ஆரம்பம்.  One of the best thalaivar movies. மன நிறைவுடன் மறுநாள் இரவு சென்னைக்கு கிளம்பினேன் முதன் முதலாக வேலையில்  சேர்வதற்காக.

நேற்று நடந்தது போல இருக்கிறது.  பதினைந்து ஆண்டுகள் ஒடிவிட்டது. சிவாஜி வந்தும், நான் வேலைக்கு சேர்ந்தும். நாளை மறுநாளுடன் L&T யில் பதினைந்து ஆண்டுகளை நிறைவு செய்கிறேன்.


-

Friday, April 1, 2022

ஆடியன்ஸ திட்டாதீங்க ப்ரோ!!


Share/Bookmark

 


RRR புகழ்ச்சிப்பதிவுகள் ஒரு புறம் சென்றுக்கொண்டிருக்க, “அந்தப் படத்த ஏன் கொண்டாடல? இந்தப் படத்த ஏன் ஃப்ளாப் ஆக்குனீங்க?” என சில படங்களைத் தூக்கிக் கொண்டு ஒரு கும்பல் குறுக்கயும் மறுக்கையும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் குறிப்பாக அவர்கள் கையில் வைத்திருக்கும் படம் 2.0 அதைக் கொண்டாடாமல் ஒழித்துவிட்ட பாவம் தான் நமக்கு நல்ல படமே கிடைக்கவில்லையாம். ஏம்பா.. கொஞ்சம் மனதைத் தொட்டு சொல்லுங்கள்.. 2.0 அதற்குத் தகுதியான படமா? எந்திரனின் தரத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லாத 2.0, ரஜினி படமாகவும் இல்லாமல் ஷங்கர் படமாகவும் இல்லாமல் ஹீரோ யார் வில்லன் யார் என்கிற தெளிவும் இல்லாமல் ஒரு மாதிரி எடுக்கப்பட்டது. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், 3D படம் என்பது மட்டும் வெற்றி பெற வைப்பதற்குப் போதுமானதா?

காலாவ ஏன் ஓட விடல? ஊடகங்கள் திட்டமிட்டு சதி செஞ்சிருச்சி. ஆமா… அது அவர் அரசியலில் ஈடுபடுவதாகச் சொன்னதற்கான எதிர்வினை. ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அதுதான் அரசியல். சொல்லப்போனால் திராவிடக் கூட்டங்கள் மாய்ந்து மாய்ந்து படத்தைப் பற்றி புகந்து தான் எழுதின. உண்மையில் படத்திற்கு பெரிய ஓப்பனிங் இல்லாததற்குக் காரணம் கபாலி எஃபெக்ட் தான்.

ஸ்டாலின் திரைப்படத்தில் சிரஞ்சீவி அனைவருக்கும் உதவுவார். அவர்கள் நன்றி சொல்லும்போது நன்றி வேண்டாம் மூன்று பேருக்கு உதவுங்கள் என்று சொல்லுவார். உடனே அவரது நண்பன் சுனில் ஒருவருக்கு உதவி செய்ய அவர் பதிலுக்கு நன்றி கூறமாட்டார். சுனில் ஏன் எனக்கு நன்றி சொல்லவில்லை என அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட  ”அவங்க உனக்கு நன்றி சொல்லலைன்னா, அவங்க நன்றி சொல்ற அளவுக்கு நீ இன்னும் உதவி செய்யலன்னு அர்த்தம்” என்பார்.

அதேபோலத்தான் ரசிகர்கள் ஒரு திரைப்படத்தைக் கொண்டாட வில்லையென்றால், அவர்கள் கொண்டாடும் அளவுக்கு நம்ம படம் இல்லை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஒரு ரசிகன் எதைக் கொண்டாட வேண்டும், எதை நிராகரிக்க வேண்டும் என்பது அவனுடைய ரசனை மற்றும் சூழல் தீர்மானிக்கும். இயக்குனர்கள் என்ன வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் ரசிகர்களுக்கு பிடித்தால் மட்டுமே அவர்கள் கொண்டாடுவார்கள்.

”புதுப்பேட்டையெல்லாம் எப்டி ஃப்ளாப் ஆச்சு.. இதெல்லாம் தியேட்டர்ல பாக்க எப்டி இருந்துருக்கும்?” என சிலாகிப்பவர்களைப் பார்க்க முடிகிறது. புதுப்பேட்டை முதல் காட்சி பார்த்துவிட்டு நொந்து போய் வந்த நண்பர்களின் முகம் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

ஆயிரத்தில் ஒருவன் எப்டி ஃப்ளாப் ஆச்சின்னு இன்னும் ஆர்டின் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். “என்ன நடந்துச்சி.. ஏன் இப்ப படம் முடிஞ்சிது” என கமலா திரையரங்கில் புலம்பிக்கொண்டே எழுந்து சென்றவர்களை இன்னும் ஞாபகம் இருக்கிறது. சில விஷயங்கள் அப்படித்தான். வீட்டில் சாவுகாசமாக உட்கார்ந்து கொண்டு தேவைப்பட்டால் பாஸ் செய்து விட்டு கொஞ்சம் ப்ரேக் எடுத்து பார்க்கும் பொழுது நிறைய திராபையான திரைப்படங்கள் கூட நன்றாகத்தான் இருக்கும்.  திரையரங்க அனுபவம் முற்றிலும் வேறு.

ஒரு திரைப்படம் வெற்றிபெற முதலில் நல்ல கதை எழுத வேண்டும். பின் அதை நல்ல தரத்தில் படமாக்க வேண்டும். பின் அதை முறையாக விளம்பரப்படுத்த வேண்டும். சரியான நேரத்தில் வெளியிட வேண்டும். இதில் எந்த இடத்தில் தவறு நடந்தாலும் ரிசல்ட் வேறு மாதிரி ஆகிவிடும். இதையெல்லாம் தாண்டி ஒரு திரைப்படம் வெற்றி பெற ஒரு மேஜிக் நடக்க வேண்டும் என ரஜினியே கூறியிருப்பார். அந்த மேஜிக் ஒரு சில படங்களுக்குத் தான் நடக்கும்.

ஒருவர் மாததிற்கு ஒரு படம் தான் பார்ப்பார். அதற்குத்தான் அவரிடம் காசு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் நீங்கள் அதே மாதத்தில் இரண்டு “கொண்டாட வேண்டிய” படங்களை ரிலீஸ் செய்கிறீர்கள் என்றால் இரண்டு படங்களில் ஒன்றைத்தான் அவர் தெரிவு செய்து பார்ப்பார். அதற்காக அவரிடம் சண்டைக்கு போகக்கூடாது அல்லவா?

மழை காலத்திலும், குழந்தைகளுக்கு பரிட்சை இருக்கும் நேரத்திலும் படத்தை ரிலீஸ் செய்து விட்டு ஏன் நீங்க தியேட்டருக்கு கொண்டாட வரவில்லை என்றால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்.

நல்ல திரைப்படங்களை எப்பொழுதுமே மக்கள் ஆதரிக்கத் தவறுவதில்லை. ஆனால் அந்த ஆதரவு திரையரங்கிற்கு வந்து, வசூலாகத் தரவேண்டுமென்றால் அதற்கு நிறைய விஷயங்கள் ஒத்துவரவேண்டும்.

ஆடியன்ஸ திட்டாதீங்க ப்ரோ!!

Monday, March 14, 2022

Bheemla Nayak (2022) Review


Share/Bookmark

 


Thursday, March 3, 2022

BANGARRAJU (2022)


Share/Bookmark



மனைவிக்கு அதிக முக்கியதுவம் கொடுக்காமல் வேலை வேலை என்றிருக்கும் மகனின் உடம்பிற்குள் ரொமாண்டிக் ஹீரோவான அப்பாவின் ஆவி புகுந்து மகனை ரொமான்ஸ் வேலைகளில் ஈடுபடச் செய்து, அவர்களின் இல்லற வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்றி வைக்கும் அற்புதமான ஒரு கதைக்களத்தைக் கொண்ட Soggade Chinni Nayana திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்திருக்கிறது இந்த பங்கார் ராஜூ.

SOGGADE CHINNI NAYANA விமர்சனத்திற்கு க்ளிக்கவும்

மகன் மருமகள் இடையே அன்யொன்யத்தைப் பெருக்க மகனின் உடம்பிற்குள் ஒரு நிமிடம் புகுந்து மருமகள் இடுப்பைக் கிள்ளி விட்டு மீண்டும் வெளியே வந்து விடுவது போல ஒருசில சல்லித்தனமான காட்சிகள் இருந்தாலும் அருமையான பாடல்களுடன், கலர்ஃபுல்லான, ஜாலியான கிராமத்துக்கு கதைக்களத்தில் பயணிக்கும் soggade chinni nayana வெற்றியும் பெற்றது.

அந்த வெற்றிதான் இந்த இரண்டாம் பாகத்திற்கு வித்திட்டிருக்கிறது. முதல் பாகத்தில் மகனின் உடம்பிற்குள் புகுந்து அவருக்கு உதவிய பங்கார்ராஜூவின் ஆவி இந்த முறை பேரனைக் காதல் வலையில் விழவைக்க அவர் உடம்பிற்குள் புகுந்து… நீங்க நினைக்கிற மாதிரில்லாம் ஒண்ணும் இல்ல. சும்மா உதவி செய்கிறார்.

பங்கார்ராஜூவின் பேரனாக சிரிப்பழகன் நாக சைதன்யா. நாயகியாக பேபம்மா க்ரித்தி ஷெட்டி. பூமியில் ப்ளேபாயான பங்கார்ராஜூ இறந்த பின்னரும் மேலே சென்று ரம்பா, மேனகா ஊர்வசியையெல்லாம் கரெக்ட் செய்து டூயர் ஆடிக்கொண்டிருக்கிறார்.

சென்ற முறை நாகர்ஜூனா மட்டும் பூமிக்கு ஆவியாக வந்தார். இந்த முறை ரம்யா கிருஷ்ணனும் இறந்து, அவருடைய ஆவியும் சேர்ந்து குடும்ப சகிதமாக வந்து பேரனுக்கு உதவி செய்கிறார்கள்.

ஆஹா ஓஹோ என்றெல்லாம் இல்லையென்றாலும் பெரிய அளவில் அருக்காமல் நீட்டாகச் செல்கிறது. விஷூவல்ஸ் அருமை. அதுவும் சொர்க்கத்தில் நடப்பது போன்ற காட்சிகள் கண்ணுக்கு விருந்து . அவ்வளவு அழகு. அனூப் ரூபன்ஸ் இசையில் பாடல்கள் அனைத்துமே ஒக்கே ரகம்.

நாகர்ஜூனா, ரம்யா க்ருஷ்ண்ன் ஜோடி கொள்ளை அழகு. அதுவும் நாகர்ஜூனாவிற்கு வயதே ஆகாது போல. என்னதான் சொன்னாலும், தாத்தா, பாட்டியின் ஆத்மாக்கள் அருகிலேயே இருந்து பேரனுக்கு உதவி செய்யும் காட்சிகளில் ”ச்சா உண்மைலயே இப்டில்லாம் இருந்தா நல்லாருக்கும்ல” என நினைக்க வைக்கின்றன.

ZEE5 இல் இருக்கிறது.

ரொம்பவும் எதிர்பார்க்காமல், ஜாலியாக பொழுதைப் போக்க நினைப்பவர்கள் பார்க்கலாம்.

Wednesday, November 3, 2021

ஒரு இனிய தீபாவளிப் பயணம்!!


Share/Bookmark





வழக்கமாக தீபாவளி பொங்கலுக்கு பேருந்தில் தான் ஊருக்குச் செல்வது வழக்கம். என்னுடைய ஆஸ்தான ராஹத் ட்ராவல்ஸ் சென்ற மாதம் எதோ சிக்கலில் சிக்கியதால் மொத்த பேருந்து சேவையும் முடங்கியிருக்கிறது. இந்த முறை வித்யாசமாக இருக்கட்டுமே என்று இரண்டு வாரம் முன்பு ரயிலில் முன்பதிவு செய்து வைத்திருந்தேன்.வேறு பேருந்துகளில் முன்பதிவு செய்யவில்லை.

வெய்டிங் லிஸ்ட் 50 க்கு மேல் இருந்தது. சரி எதற்கும் நம்முடைய அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது எனப் பார்க்கலாம் என்று காத்திருந்தேன். 


நமக்குத்தான் அதிர்ஷ்டம் கிளு கிளுன்னு இருக்குமே. சார்ட் வந்த பிறகு வெய்ட்டிங் லிஸ்ட் 33 இல் வந்து நின்று "வெளியே போங்கடா அயோக்ய ராஸ்கல்களா" என்றது IRCTC.


சரி ரெட் பஸ்ஸில் பேருந்துகளை தேடினேன். வழக்கமாக 500 ரூபாய் டிக்கெட் 1300, 1600, 1900 என ஒவ்வொரு ட்ராவல்ஸூம் அவரவர்களுக்கு ராசியான எண்களை டிக்கெட் தொகையாக நிர்ணயித்திருந்தனர். அதுவும் அனைத்து பேருந்துகளிலும் மீதமிருந்தது கடைசி வரிசையில் நடுவில் இருந்த சீட் மட்டுமே.


அந்த சீட்டில் பிரச்சனை என்னவென்றால் சாயவும் முடியாது முன்னால் கால் வைக்கவும் முடியாது. அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது ஓட்டுனர் கொஞ்சம் அழுத்தி பிரேக்கை மிதித்தால் மாயி வடிவேலுவைப் போல் முன்னால் போய் விழுந்து மூக்கட்டை பெயர்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதனாலேயே அந்த சீட்டை பெரும்பாலும் தெரிவு செய்வதில்லை.


ஒரு சில SETC சிறப்புப் பேருந்துகளும் ரெட் பஸ்ஸில் காண்பித்தது. ஆனால் அத்தனையும் ஊர்ப்பக்கம் ஓடும் (3+2) சீட்டர்கள். அதில் செல்லலாம். ஆனால் பத்து மணி நேரம் பயணித்து சென்றால் மறுநால் முதுகை கம்பி கட்டித்தான் நிமிர்த்த வேண்டியிருக்கும் என்பதால் அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.


மேலும் தேடியபோது கண்ணில் பட்டது "ஜோதி லட்சுமி ட்ராவல்ஸ்"


"எலே.. என்னது ஜோதி லச்சுமியா... யாரு இவா.. இப்டி ஒரு பஸ்ஸ நாம பாத்ததே இல்லையே" என எனக்குள் இருந்த GP முத்து ஒரு நிமிடம் வெளிப்பட்டார்.


டிக்கெட் விலை 900 ரூபாய். நடுவில் கூட காலி சீட்டுகள் இருந்தது. அதைவிட முக்கியமாக இந்தப் பேருந்தில் சென்றால் வேறு பேருந்திற்கு மாறாமல் வீட்டிற்கு அருகிலேயே இறங்கிக்கொள்ளலாம். ஆனால் 10:15 க்குத்தான் கோயம்பேடில் பேருந்து கிளம்புகிறது.


10:15 க்கு கிளம்பி எப்போ வீட்டுக்குப் போறது. சரி இந்த மழையில் வேறு ஆப்ஷன் இல்லை. ஒரு மணி நேரம் முன் பின் இருந்தாலும் தொல்லையில்லாமல் வீடு போய்ச் சேரலாம் என்று டிக்கெட்டை புக் செய்தேன். போர்டிங் பாய்ண்டாக ஆலந்தூர் மெட்ரோ ஸ்டேஷனை தெரிவு செய்திருந்தேன். 10.40 க்கு ஆல்ந்தூரில் பேருந்து.


இன்னும் மூன்று மணி நேரத்திற்கு மேல் இருந்தது. ஆசுவாசமாகக் ஒன்பது மணிக்கு மேல் கிளம்பி, இரவு உணவை முடித்துவிட்டு மெட்ரோவில் ஏறினேன். சுமார் 50 நிமிடப் பயணத்தில் ஆலந்தூர் வந்தடைந்தேன்.


ஸ்டேஷனுக்கு வெளியில் வந்து மெயின் ரோட்டில் பேருந்துக்காகக் காத்திருந்தேன். "ஈஸ் திஸ் சென்னை? தீபாவளியும் அதுவுமா ரோடு கொஞ்சம் கூட கூட்டமே இல்லாம இவ்வளவு ஃப்ரீயா இருக்கு.. ரிமார்க்கபிள் சேஞ்ச்" என சிவாஜி வசனத்தை நினைத்துக் கொண்டு நின்றிருந்தேன்.


பத்து நிமிடத்திற்கு மேல் ஆனது. எதோ பிசிறு தட்டியது. எனக்கு அருகில் முதுகில் ஆமை ஓடு போல் பையை மாட்டிக்கொண்டு சிலர் நின்றிருந்தாலும் அந்த பத்து நிமிடத்தில் வெளியூர் செல்லும் ஒரு பேருந்து கூட அந்த வழியாக வரவில்லை. 


"ரைட்டு.. இன்னிக்கு நம்மை அலைக்கழிக்கப் போகிறார்கள் " என்பதை போதி தர்மன் உணர்கிறார்.


அந்த ட்ராவல்ஸை தொடர்பு கொள்ளவும் ஓட்டுனர் நம்பர் எதுவும் SMS வரவில்லை. அடுத்த 5 நிமிடத்தில் ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. 


"அண்ணே எங்கியன்ணே இருக்கிய?"


"ஆலந்தூர் மெட்ரோவுக்கு வெளில நம்ம பஸ்ஸூக்காகத்தான் காத்துட்டு இருக்கேன்ணே" என்றேன்.


"அண்ணே ஒரு பிரச்சனை ஆயிப்போச்சு.. பஸ்ஸ மடக்கிட்டாங்க. சிட்டிக்குள்ள போகக்கூடாதம். கோச்சிக்கிடாம கொஞ்சம் கோயம்பேடுக்கு வந்தர்ரியலா?" என்றார்.


"கோயம்பேடா.. என்னண்ணே?!! இப்பதான் இங்க வந்தேன்..."


"அப்ப இன்னொன்னு பன்னுங்க.. வண்டலூருக்கு அடுத்து உள்ள ஊரப்பாக்கத்துக்கு வந்துருங்க"


"டேய் ஊரப்பாக்கத்துக்கு அங்குட்டு பத்து நிமிஷம் நடந்தா எங்க ஊரே வந்துரும்டா.." என நினைத்துக்கொண்டு பரவால்லண்ணே நா கோயம்பேடுகே வந்துடுறேன். விட்டுட்டு மட்டும் போயிடாதீங்க என்றேன்.


"நீங்க வந்தா தாண்ணே பஸ்ஸ எடுப்போம். மெதுவா வாங்க" என்றார்.


"எது மெதுவா வாங்கவா? இன்னிக்கு பஸ் எடுக்கிற ஐடியா இருக்கா இல்லையா இவனுங்களுக்கு" என நினைத்துக் கொண்டே மறுபடி மெட்ரோ ஸ்டேஷனுக்குள்ளே சென்றேன்.


"இறங்குன ட்ரெயின்லயே மறுக்கா எத்தி விடுறீங்களேடா" என் மறுபடி கோயம்பேடை நோக்கி புறப்பட்டு 10:50 க்கு அங்கு சென்று சேர்ந்தேன். 


மெட்ரோ ஸ்டேஷனுக்கு வெளியே ஜோதி லட்சுமி ரெடியாக நின்றது. அங்கு வரவேண்டிய கடைசி ஆள் நானும் வந்துவிட்டதால் உடனே ஜோதி லட்சுமின்புறப்பட்டது.


சரியாக 11:40 க்கெல்லாம் வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம் சிறப்பு பேருந்து நிலையத்தை அடைந்தது. தீபாவளி நேரத்தில் பன்னிரெண்டு மணிக்குள் சிட்டியைத் தாண்டுவது என்பதே நல்ல அச்சீவ்மெண்ட் தான். மோசமில்லை. எப்படியும் காலை எழு மணிக்குள் வீட்டில் இருக்கலாம் என்கிற நினைபுடன் மொபைலை பாக்கெட்டில் வைத்துவிட்டு, கர்ச்சீப்பை எடுத்து கண்ணில் கட்டிக்கொண்டு நித்திரையில் ஆழ்ந்தேன்.


பஸ் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்தது அரை தூக்கத்தில் தெரிந்தது. எங்கும் சூசூ போவதற்கு நிறுத்தினார்களா என்று தெரியவில்லை. நான் தூக்கத்திலேயே இருந்தேன். வழக்கமாக காலை ஆறுமணிக்கு அடிக்கும் அலாரம் வைப்ரேனுடன் அலற ஆரம்பித்தது.


கன்ணில் கட்டியிருக்கும் கர்ச்சீப்பை அவிழ்க்காமலேயே கையால் ஃபோனை அழுத்தி விட்டுவிட்டு, "மணி ஆறாகிவிட்டது.. எப்படியும் வண்டி கும்பகோணத்தைத் தாண்டி மன்னார்குடியை நெருங்கியிருக்க வேண்டும்" நினைத்துக்கொண்டேன்


எனக்கு பின் சீட்டில் இருந்தவதுக்கு ஃபோன் வந்தது. 


"ஆமா வந்துட்டுருக்கேன்.. இப்பதான் விருத்தாச்சலம் வரப்போகுது என்றார்"


 "எதேய்ய்ய்ய்? விருத்தாச்சலமே இப்பதான் வரப்போகுதா?"


அரைகுறைத் தூக்கம் முழுவதும் கலைந்தது. இருந்தாலும் மனதைத் தேற்றிக்கொண்டு, கண் மூடியபடியே இருந்தேன்.


அடுத்த அரைமணி நிமிடத்தில் பஸ்ஸின் டயர்களில் எதோ கட முட சத்தம். பஸ் இஞ்சின் நிறுத்தப்பட்டது. அப்போதுதான் பலரும் கண்ணை லேசக விழித்துப் பார்க்க ஆரம்பித்திருந்தனர். விடிந்தும் விடியாத மசண்டை இருட்டு. மழை கொட்டிக்கொண்டிருக்கிறது.


இரண்டு மூன்று நிமிடம் ஏன் பேருந்து நின்றத்உ யாருக்கும் எதுவும் தெரியவில்லை. சரி ட்ரைவரிடம் சென்று கேட்கலாம் என முன்னிருந்த ஒருவர் எழுந்து செல்ல, ட்ரைவர் இருக்கையில் ஆள் இல்லை.


மாறாக ட்ரைவரும், அட்டெண்டரும் பஸ்ஸை அம்போவென விட்டுவிட்டு வேறு திசையில் ஓடிக்கொண்டு இருந்தனர்.


ஆம். சைக்கிளில் வந்த் முதியவர் ஒருவர் ஜோதி லட்சுமியில் அடிபட்டு தூக்கியெறியப்பட்டிருக்கிறார் என்பது அப்போதுதான் அனைவருக்கும் புரிந்தது.


சாலையில் மறுபுறம் கொட்டும் மழையில் புற்களுக்கு நடுவே அந்தப் பெரியவர் அசைவுகளின்றிக் கிடந்தார். சம்பவத்தைப் பார்த்த இரண்டு பேர் பெரியவர் அருகே சென்றனர்.  அவரைத் தொடவில்லை. 


அடுத்த மூண்று நிமிடத்தில் ஒரு பெண் ஓடிவந்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு "அப்பா.. அப்பா.."என அழ ஆரம்பித்தார். அவர்களுக்கு இன்றைய பொழுது இப்படி விடிந்திருக்கக் கூடாது.


இருபது முப்பது பேர் கொண்ட கூட்டம் கூடியது. ஆம்புலன்ஸிற்கு அழைக்க வேண்டும் என பேசிக்கொண்டிருந்தார்கள். 


பேருந்திலிருந்த அனைவரும் பைகளை

எடுத்துக்கொண்டு கீழே இறங்கினோம்.


அதுவரையும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஒருவர் "ஏங்க பஸ்ஸ எடுக்கமாட்டாங்களா இப்ப?" எனப் பரிதாபமாக் கேட்டுக்கொண்டிருந்தார்.


"ஜாக்கிங் போன ட்ரைவர் வந்தோன எடுத்துருவாங்க" 


சாலையில் பெரியவரைச் சுற்றி நின்ற கூட்டத்துற்கு கொஞ்சம் தள்ளி கொட்டும் மழையில் நின்றுகொண்டிருந்தோம்.


இது எந்த ஊர் என்று தெரியவில்லை. எதாவது பேருந்து வருகிறதா எனப் பார்த்தபடி நின்றிருந்தோம். நின்ற பொழுது ஒருசிலர் அவரவர்களுக்குள் அறிமுகம் செய்துகொண்டிருந்தனர். 


" நீங்க எங்க போறீங்க?"


"பட்டுக்கோட்டை"


"அய்யோ நானும் பட்டுக்கோட்டைதாங்க போறேன்"


ஆமா.. ஜெர்மெனி ஏர்போர்ட்ல ஊர்காரங்க ரெண்டு பேரு தற்செயலா மீட் பன்னதுல எக்ஸைட் ஆயிட்டாங்க. ஏண்டா பட்டுக்கோட்டை போற பஸ்ல பட்டுக்கோட்டைகாரனுக தானடா போவானுக.. உசுற வாங்காம நில்லுங்கடா   எனத் தோன்றியது.


அடுத்த சில நிமிடங்களில் கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று வரவும் அனைவரும் ஏறிப் புறப்பட்டோம்


பஸ்ஸில் ஏறிய பின்னர் அடிபட்ட பெரியவரை தான் பார்த்ததாகவும், லேசாக அசைவு இருந்ததாகவும் ஒருவர் கூறினார். கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.


நடத்துனர் வந்தார்.


"அண்ணே கும்பகோணம் இங்கருந்து எவ்வளவு தூரம்ணே..?"


"எப்புடியும் 45 கிலோமீட்டருக்கு மேல வரும்"


வெளங்கும்... எட்டு பதினைந்துக்கு கும்பகோணம். அங்கிருந்து மறுபடி மன்னார்குடி ஒரு மணி நேரம். அங்கிருந்து மறுபடி பட்டுக்கோட்டை ஒன்னே கால் மணி நேரம். 


இன்னும் பஸ்ஸில் சென்றுகொண்டு தான் இருக்கிறேன். மதிய சாப்பாட்டிற்குள் வீட்டிற்குச் சென்றுவிடுவேன் என்று நினைக்கிறேன்.


வாழ்த்துங்க ஃப்ரண்ட்ஸ்!!

Friday, July 2, 2021

COLD CASE (2021)


Share/Bookmark

   




வழக்கமான ஒரு மர்டர் மிஸ்ட்ரி திரில்லர். ஆனால் கர்நாடகத்தையும் ஹிந்துஸ்தானியையும் கலந்து கர்நாடகஸ்தானி என்ற ஒன்றை வெண்ணிற ஆடை மூர்த்தி உருவாக்குவதைப் போல, மர்டர் மிஸ்ட்ரியுடன் ஒரு சூப்பர் நேச்சுரல் ஹாரரை கலந்து விட்டு அடித்து புது ஐட்டமாக ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒரு ஏரியில் கிடைக்கும் மண்டை ஒட்டுடன் ஆரம்பிக்கிறது திரைப்படம். தொடர்ந்து அந்த மண்டை ஓடு யாருடையது, அந்த மண்டையை யார் மண்டை ஓடாக மாற்றியது என்பதைக் கண்டறியும் ஒரு சுவாரஸ்யமான இவெண்டிகேஷன். எந்த இடத்திலும் போரடிக்காமல் நல்ல விறுவிருப்பாகவே செல்கிறது.

சமீப காலங்களில் வந்த இன்வெஸ்டிகேஷன் படங்களிலெல்லாம் சிசிடிவி ஃபுட்டேஜை எடுத்து வைத்துக்கொண்டு, இந்த இடத்துல ஃப்ரீஸ் பன்னுங்க.. இப்ப ஸூம் போங்க.. வண்டி நம்பர நோட் பன்னுங்க என்றவாரே ஓப்பியடித்துக் கொண்டிருப்பார்கள். அதுபோன்ற சிசிடிவி காட்சிகள் படத்தில் இல்லாதது ஆறுதலளித்தது.

நிச்சயம் முறை பார்க்கலாம்.

Sunday, June 20, 2021

ஜகமே தந்திரம் – ஒரு விரிவன அலசல்!!


Share/Bookmark

 


தனுஷ் நான் வியந்து பார்க்கும் ஒரு நடிகன். அவர் எப்படி திரைத்துறைக்குள் வந்திருந்தாலும், அதன்பிறகு அவர் தன்னை மெருகேற்றிக்கொண்ட விதம் அபாரம். அதே போல கார்த்திக் சுப்பராஜூம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவர். அவர் இதற்கு முன்னர் எடுத்திருந்த ஐந்து படங்களுமே எதோ ஒருவிதத்தில் எனக்கு பிடித்திருந்தது.  இந்த இருவரும் சேரும் படம் நிச்சயம் ஒரு சாதாரண திரைப்படமாக இருக்காது என்பது என்னுடையது மட்டுமல்ல. பலருடைய நம்பிக்கையும்.

ஆனால் ஜகமே தந்திரம் அத்தனையையும் சுக்கு சுக்காக நொறுக்குகிறது.. டீசர், ட்ரெயிலர், பாடல்கள் என அனைத்துமே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜூன் 18ம் தேதி வெளியான ஜகமே தந்திரம் அது ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது நிஜம். வலுவில்லாத கதை, விறுவிறுப்பில்லாத திரைக்கதை, எந்த உணர்வுகளையும் ஏற்படுத்தாத மிகச் சாதாரணமான வசனங்கள் என அதற்கான காரணங்கள் ஏராளம். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

முதலில் ஒரு படத்திற்குத் தேவை ஒரு தெளிவான கதை. அந்த கதையைப் பொறுத்து கதை நடக்கும் கதைக்களம். லண்டனில் இருக்கும் இரண்டு தரப்புகளுக்கு இடையே நடைபெறும் கேங் வாரில் கதாநாயகன் கொண்டு வரப்படுக்கிறார். பிறகு தான் செய்த தவறிற்கு பிராயச்சித்தமாக மனம் திருந்தி இலங்கை அகதிகளுக்கு உதவுகிறார்.  இங்கு கதை மதுரையில் ஆரம்பிக்கிறது பிறகு லண்டனிற்கு பயணித்து அங்கேயே முடிகிறது. அவர்கள் கூறியிருக்கும் கதைக்கு மதுரை வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. படத்தை லண்டனிலேயே ஆரம்பித்து லண்டனிலேயே முடித்திருக்கலாம்.

அடுத்து இந்த திரைப்படம் எந்த வகையைச் சேர்ந்தது? ஒரு சீரியஸான கேங்கஸ்டர் படமா? அல்லது ஒரு லைட் ஹார்ட்டர்டாக பார்க்கும் ஜாலியான நகைச்சுவை கலந்த கேங்ஸ்டர் படமா? அல்லது ஈழத் தமிழர்கள் ப்ரச்சனையை பேசும் ஒரு புரட்சிப் படமா? அதில் இயக்குனருக்கே மிகப்பெரிய குழப்பம் இருக்கிறது. ஒரு திரைப்படம் பயணிப்பதற்கு எதாவது ஒரு பாதையை (Genre) தெரிவு செய்து, அதில் மாறாமல் பயணித்தால் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேர முடியும். அல்லாமல் எல்லா பாதையும் சுற்றி சுற்றி ஓடிக்கொண்டிருந்தால் ஒரே இடத்தில் நிற்க வேண்டியது தான்.

அடுத்து  கதாநாயகன் சுருளியின் கதாப்பாத்திர அமைப்பு.  பரோட்டா கடையில் வேலை செய்பவர். 35 கொலைகள் செய்திருப்பவர் என்பதைத் தாண்டி அந்த கதாப்பாத்திரத்துக்கு வேறு எந்த பிண்ணனியும் கொடுக்கப்படவில்லை.

அத்தனை கொலைகள் எதற்காக செய்தார்? தன்னுடைய எதிரிகளைக் கொன்றாரா அல்லது யாருக்காவும் கொன்றாரா? காசு கொடுத்தால் கொலை செய்வாரா? ஆரம்பத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலை மறித்து ஏறி உள்ளே சிவனேன்னு சென்றுகொண்டிருக்கும் சேட்டு தம்பியைக் ரொம்ப காமெடியாக, ஜாலியாக கொலை செய்கிறார். இவர் உண்மையில் இது போல டம்மி பீஸ்களைத்தான் கொலை செய்வாரா அல்லது டெரர் பீஸ்களையும் கொலை செய்வாரா? எந்த ஒரு க்ளாரிட்டியும் இல்லை.

வழக்கமாக குத்துப் பாடலின் கடைசியில் ஒரு காட்சியில் டான்ஸ் மாஸ்டர் வந்து சல்யூட் அடித்து விட்டு போவது வழக்கம். அதேபோலத்தான் வருகிறார் பாபா பாஸ்கர். சரி டான்ஸுக்கு தானே வந்துட்டு போகட்டும் என விட்டால் அவரே பெரிய தாதா போல “சுருளி அவன போடனும்.. இவன போடனும்” என்று பேசிக்கொண்டிருக்கிறார். சார்.. உங்க ஃபேஸ்கட்டுக்கு இதெல்லாம் செட் ஆகல சார்.

சுருளியைக் காண லண்டனிலிருந்து ஒரு வெள்ளைக்காரர் வருகிறார். அவர் எப்படி வருகிறார் என்றால் சுருளியைப் பற்றி அப்ரைசல் மீட்டிங்கில் ஒரு பணியாளர் பேசுவதைக் கேட்டு, சுருளி மாதிரி ஒரு ஆள் தான் வேண்டும்  என மெனக்கெட்டு இங்கே வருகிறார். இதுவே படத்தின் ஆகப்பெரிய அபத்தம்.

அதைவிட பெரிய அபத்தம் அப்ரைசல் மீட்டிங்கில் கேங்க்ஸ்டரைப் பற்றி பேசச் சொன்னார்களாம். அப்ரைசல் மீட்டிங்கில் செய்த வேலையைப் பற்றித்தான் பேசச் சொல்லுவார்கள். இது போன்ற குரூப் டிஸ்கஷன்களெலாம் வேலை தேடிப்போகும் போது தான் நடக்கும். எதுனா அடிச்சி விடுவோம் என்கிற ரீதியில் எடுக்கப்பட்ட காட்சி. அந்த ஒரு  காட்சியே படத்தின் மீதான பிடிப்பை பாதியாகக் குறைக்கிறது.

லண்டனிற்கு அதற்கு முன்னர் சுருளி சென்றதில்லை. பவுண்ட் என்றால் என்ன? பவுண்டின் மதிப்பு எவ்வளவு என்று கூட தெரியாமல் இருப்பவர் லண்டனிற்கு சென்ற இரண்டு நாட்களில் சிவதாசின் முழு டீட்டெய்லை கண்டறிந்து வில்லன் குரூப்பிற்கு ஒப்பிப்பது அபத்ததிலும் அபத்தம். ஏண்டா இது கூட தெரியாமலா இவ்வளவு நாள் கேங்க்ஸ்டர் தொழில் பண்ணிகிட்டுருக்கீங்க எனத் தோன்றியது.

அடுத்து சிவதாஸாக வரும் ஜோஜூ ஜார்ஜின் கதாப்பாத்திரம். ”டானுன்னா நாலு இடத்துக்கு போகனும் வரனும்” என்கிற பாணியிலேயே அவரை இங்கும் அங்குமாக நடக்க விட்டு தூரத்திலிருந்து நமக்கு காண்பிக்கிறார்கள். மற்றபடி அவர் மட்டை ஆவதற்கு முன் வரும் இரண்டு காட்சிகளில் கூட அவர் நல்லவரா கெட்டவரா என்கிற எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. ஆளை போட்டுத்தள்ளி விட்டு கடைசியில் “பாவம்baa… அவர் எங்களுக்கெல்லாம் எவ்ளோ ஹெல்ப் பண்ணாரு தெர்மா?” என்கிறார்கள். ”ஏண்டா இத கொஞ்சம் முன்னாலயே சொல்லிருந்தா அவன் சாகும்போது கொஞ்சம் ஃபீல் பண்ணிருப்போமேடா” என தோன்றுகிறது.

சரி ரெண்டாவது பாதியில் ஹீரோயின் ”சிவதாஸ் யாருன்னு தெரியுமா?” என கத்திக்கொண்டே ஒரு ஃப்ளாஷ்பேக்கை சொல்ல ஆரம்பிக்கிறார்.

படம் ஏற்கனாவே செத்து சுண்ணாம்பான பிறகு, படம் பார்க்க ஆரம்பித்த பாதிபேர் தூங்கிய பிறகு ஈழம் சம்பந்தப்பட்ட ஒரு ஃப்ளாஷ்பேக் வருகிறது.  சரி சிவராஜைப் பற்றி எதோ பயங்கரமான ஃப்ளாஷ்பேக்கை சொல்லப்போகிறார்கள் எனப் பார்த்தால் இல்லை. அவர்கள் எப்படி கஷ்டப்பட்டார்கள். எப்படி நாடு நாடாக சென்றார்கள். கடைசியில் எப்படி லண்டன் வந்து சேர்ந்தார்கள் என அனைத்தையும் சொல்லிவிட்டு கடைசியில் ”இப்படி இங்கே வர்ற எங்களுகெல்லாம் உதவுபவர்தான் சிவதாஸ்” என்கிறார்.

ஒரு உதாரணம் சொல்லுவார்களே.. ஒரு சிறுவன் தென்னைமரத்தின் பயன்களை படித்துவிட்டு தேர்விற்குச் சென்றான். ஆனால் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி மாட்டின் பயன்பாடுகளை கூறுக என்று. ஆனால் அவனுக்குத் தெரிந்ததோ தென்னை மரத்தின் பயன்பாடுகள்.  தென்னை மரம் தேங்காய் கொடுக்கும், மட்டை கொடுக்கும், கீற்று கொடுக்குமா, கயிறு கொடுக்கும் என அதை அப்படியே எழுதினான். எழுதிவிட்டு கடைசியில் மாட்டை கட்டுவதற்கும் தென்னை மரம் பயன்படுகிறது என கடைசியில் ஒரு சொருகு சொருகி விட்டான். ஹீரோயின் கூறிய ஃப்ளாஷ்பேக்கில் அந்த மாடுதான் சிவதாஸ்.

அதைவிடுங்கள். எனக்குத் தெரிந்து நிறைய பேர் சிலாகிக்கும் ஒரு காட்சி சிவதாஸ் சாவதற்கு முன்னர் கூறும்

“துரோகம்.. தமிழ் இனத்தோட சாபம்” என்பது.

அப்டியாண்ணே.. ரொம்ப நல்லாருந்துச்சி.. நல்ல டயலாக்.

”சரிங்க சிவதாஸ்ணே…. நீங்க என்ன பண்ண ட்ரை பண்ணீங்க?”

”பீட்டருக்குத் தெரியாம தனுஷ தனியா செட்டிங் போட்டு பீட்டர்கிட்ட வேலைபாக்குற தனுஷ வச்சே பீட்டரக் கொல்ல ப்ளான் பன்னேன்”

“அப்ப அதுக்கு பேரு என்ன?”

“அதுக்கு பேரு ராச தந்திரம்”

“எடு செருப்ப”

சரி திரைக்கதைதான் கொஞ்சம் விறுவிறுப்பாக, சுவாரஸ்யமாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஒரு கேங்க்ஸ்டர் படம்… பரபரப்பாக சில நல்ல ஆக்‌ஷன் காட்சிகளை இடையில் சொருகிவிட்டு அதை வைத்து சில குறைகளை மறக்கச் செய்திருக்கலாம். அதுவும் இல்லை. பேசுகிறார்கள்.. பேசுகிறார்கள்.. பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.  சரி வசனமாவது கொஞ்சம் நன்றாக எழுதியிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.

லண்டனுக்கு சும்மா போகக்கூடாது என்று இந்த சுந்தரபாண்டியன் சவுந்தர்ராஜாவையும் வேறு கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். அவர் அங்கேயும் போய் ”என்ன மாப்ள இவன் கட்டைய போட்டுக்கிட்டுருக்கியான்… ஓவரா பண்றியான் மாப்ள..” என்கிறார். என்னடா இது லண்டன்ல சுந்தரபாண்டியன் ஓடிகிட்டுருக்கு. லண்டன்ற பேருக்காச்சும் கொஞ்சம் மரியாதை குடுங்கடா என்பது போல இருந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஈரான் ஈராக் பார்டரில் வில்லனை கொண்டு போய் விட்டு, அவரிடம் ரிபப்ளிக் ஆப் மாட்டுத்தாவணி என்கிற ஒரு பாஸ்போர்ட்டைக் கொடுத்து ஒரு கொடுமையான தண்டனை கொடுக்கிறார்கள் பாருங்கள்… யப்பா அத்திப்பட்டி சிட்டிசன் தோற்றார்.

James cosmo நடித்திருந்த பீட்டர் கதாப்பாத்திரத்திற்கு அல்பாச்சினோவை முதலில் கேட்டதாக கூறினார்கள். ஒருவேளை அல்பாச்சீனோ அந்த கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தால் அந்த ரோல் இன்னும் தாறுமாறாக இருந்திருக்கும். ஆனால் அதை மட்டும் வைத்துக்கோண்டு என்ன செய்வது.

ஒட்டுமொத்தமாக ஒன்றாக சேர்ந்து படம் என்கிற பெயரில் கொத்துக்கறி போட்டு வைத்திருக்கிறார்கள் என்பதே நிஜம்.

 

Saturday, February 20, 2021

Drishyam 2 - ஒரு சிறந்த படைப்பா?!!!!


Share/Bookmark


ஜீத்து ஜோசப் எடுத்த த்ரிஷ்யம் முதல் பாகம் ”கபிம்குபாம்” என வைத்துக்கொண்டால் அடுத்து அவர் எடுத்த தம்பி ”குபாம்கபிம்”. இப்போது வந்திருக்கும் த்ரிஷ்யம்-2  ”கம்பிகும்பா” அவ்வளவு தான். 


முதலில் லாஜிக் பார்க்க வேண்டிய படங்கள், லாஜிக் பார்க்கத் தேவையில்லாத படங்கள் என இரு வகையில் த்ரிஷ்யம் லாஜிக் பார்க்க வேண்டிய படங்களில் தான் சேருகிறது. இதனை படத்தின் கதைக் களமே முடிவு செய்கிறது.


த்ரிஷ்யம் முதலாவது பாகம் ஒரு ட்ரெண்ட் செட்டர். ஒருவன் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு நாளின் சம்பவங்களை



வேறொருநாளில் நடந்ததாக மாற்றி உருவாக்குகிறான் எனும் புதியதொரு கான்செப்டுடன் வந்து அனைவரையும் ஈர்த்த திரைப்படம்.  


இப்பொழுது முதல் பாகத்தில் காவல் நிலையத்தில் புதைக்கப்பட்ட உடலும் போலீஸின் கைக்கு சிக்கினால் அதிலிருந்து ஜார்ஜ்குட்டி எவ்வாறு தப்பிக்கலாம் என ஒரு சிறிய சிந்தனையை ஓடவிட்டு கிடைத்த ஒரு ஐடியாவை வைத்து இரண்டரை மணி நேரத்திற்கு இழுத்திருக்கிறார் ஜீத்து ஜோசஃப்.


லாஜிக் என்னென்ன இடிக்கிறது என பிறகு பார்ப்போம். அதற்கும் முன்னதாக நேரத்தை  நிரப்புவதற்காக நிறைய வழ வழவென்று காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.


அதிலும் முதல் ஒரு மணி நேரம் பாக்கியலட்சுமி சீரியல் ரேஞ்சிற்கு செல்கிறது. சொன்ன விஷயத்தையே திரும்பத்திரும்ப சொல்கிறார்கள். முதல் பாகத்தை ரீகால் செய்வது தவறில்லை. ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் ரீகால் செய்யும் அளவிற்கு அது அவ்வளவு complicated ஆன கதையும் இல்லை, பார்வையாளர்கள் அவ்வளவு சுலபமாக மறக்கும் கதையும் இல்லை.

ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் அன்னிக்கு ராத்திரி என்ன நடந்தது என ஒவ்வொருவரையாக விசாரிப்பது அபத்தமாக இருக்கிறது. விசாரிப்பவர்களிலிம் ஒரு சிலர் ஆமா சார் ஆறு வருசத்துக்கு முன்னால அன்னிக்கு ராத்திரி ஜார்ஜ் குட்டி வண்டி இப்டிக்கா போச்சு சார் என்கிறார்கள்.


ஒரு வேளை உண்மையிலேயே இதுமாதிரி இவெஸ்டிகேஷன்கள் நடந்தால் என்ன நடக்கும்..? வடிவேலு ஒரு படத்தில் கிளியாக நடிப்பாரே அதை ஞாபகப் படுத்திக்கொள்ளுங்கள்.

Police: 2013 ஆகஸ்டு 3 ம் தேதி ஞாபகம் இருக்கா?


Neighbors  : கீ.. கீ.. கீ..


Police :அன்னிக்கு நைட்டு இந்த பக்கமா நடந்து வந்தீங்களா?


Neighbors :  கீ.. கீ.. கீ..


Police :அப்போ ஜார்ஜ் குட்டிய வழில பாத்தீங்களா?


Neighbors   : "ஏண்டா கொன்னப்பயலே.. கொன்னப்பயலே... முந்தாநாளு நடந்ததே ஞாபகத்துக்கு வரமாட்டுது.. ஆறு வருசத்து முன்னாடி ஜார்ஜ் குட்டிய பாத்தியா கன்னுக்குட்டிய பாத்தியான்னுட்டு..


அடுத்து ஒரு திரைப்படத்தின் அத்தனை காட்சிகளும், கதாப்பத்திரங்களும் எதோ ஒரு வகையில் முக்கியக் கதைக்கு சப்போர்ட் செய்வதாக இருக்க வேண்டும். சில கதாப்பாத்திரங்கள், சில காட்சிகள் கதைக்கு ஒட்டாமல் துண்டாக நிற்கின்றன. குறிப்பாக த்ரில்லர் கதை சொல்லும் ஒரு பையனும் அவன் சார்ந்த ஒருசில காட்சிகளும் ஏன் வருகிறது என்று தெரியவில்லை.  ஜார்ஜ் குட்டி வீட்டில் நடக்கும் get together காட்சிகள் எல்லாம் எந்தப் பயனும் இல்லாமல் வெறும் நேரத்தைக் கடத்த மட்டுமே உதவுகிறது. 


திறந்த ஜன்னலைப் பார்த்தால் மூத்த பெண்ணிற்கு அங்கு யாரோ நிற்பது போலவே தெரிகிறது.. வலிப்பு மாதிரி எதோ வருகிறது.. 


”அதான் தெரியிதுல்ல.. கழுதை அந்த ஜன்னல மூடித்தான் வைங்களேண்டா… எனி டைம் தொறந்தே தான் இருக்கு.  பேய் வருதுன்னு தெரிஞ்சும் பச்சப் புள்ளைய பக்கத்து ரூம்ல தனியா தூங்க வைக்கிற ஹாலிவுட் பட parents  மாதிரி”


ஒரு திரைப்படத்தில் சில விஷயங்களை கண்டிப்பாக காட்சிப்படுத்த வேண்டும். சில விஷயங்களை வாயால் சொன்னால் மட்டும் போதும். அப்படி சொன்னால் மட்டும் போதுமான சில விஷயங்களை நேரத்தை இழுக்க காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். ஜார்ஜ் குட்டியை போலீஸ் ஸ்டேஷனுக்குள் பார்க்கும் ஒரு குற்றவாளி ரிலீஸ் ஆன பின்பு அவருடைய குடும்பம், அவருடைய மனைவியை சமாதானப்படுத்துவது என ஒரு நான்கு காட்சிகள் அவருக்காக எடுத்திருக்கிறார்கள். 


அல்டிமேட்டாக அவருக்கு பணம் தேவைப்படுவதால், போலீஸில் துப்புக்கொடுக்கப் போகிறார். பணத்திற்காக துப்புக் கொடுக்கப் போகிறார் என்பதை நியாபபடுத்த பெரிய பிண்ணனி எதுவும் தேவையில்லையே… மனிதர்களின் சுபாவமே அது தானே. 


இன்னொரு மரணக் காமெடி ஜார்ஜ் குட்டி வீட்டுக்கருகில் வசிக்கும் ஷாடோ போலீஸ் குடும்பம். அவர்களை போலீஸ் என ரிவீல் செய்வது தான் படத்தின் முதல் ட்விஸ்ட். அது படம் ஆரம்பித்து சுமார் ஒருமணி நேரம் கழித்துத்தான் வருகிறது. அந்த ஒரு ட்விஸ்டுக்காக படம் சுமார் அரை மணி நேரம் இழுக்கப்பட்டிருக்கிறது. 


ஒரு கொலை கேஸுக்காக, இரண்டு போலீஸ் இரண்டு வருடங்கள் வேலை செய்கிறார்கள் என்கிற அபத்தம் ஒருபக்கம் இருந்தாலும், கடைசியில் இரண்டு வருடங்களாக அவர்கள் கண்டுபிடித்தது எதுவுமே உபயோகமானது இல்லை என்பது நமக்குத் தெரியும் போது இன்னும் பரிதாபம். கதை ஓட்டத்தில் இதை பலர் இதை கவனிக்காமல் கூட இருந்திருக்கலாம். 


ஜெயிலிலிருந்து வெளிவந்தவர் ஜார்ஜ் குட்டியை அன்று இரவு தான் பார்த்தாகச் சொல்லும் காட்சி அதற்கு முன்னதாக இவர்கள் கடத்திய ஒண்ணரை மணி நேரத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்குகிறது.


முதல் காட்சியில் அந்த குற்றவாளி ஜெயிலுக்கு போகும் காட்சிக்கு பிறகு, நேரடியாக அவர் ஜெயிலிலிருந்து வெளிவந்து போலீஸிற்கு துப்புகொடுக்கும் காட்சிக்கு தாவி அதிலிருந்து நாம் படம் பார்த்தாலும் படம் நிறைவாகவே இருக்கும். 


அடுத்து படம் எடுப்பதாக கூறி, ஒரு எழுத்தாளரைப் பிடித்து கதை எழுதி காமெடி செய்வது அடுத்தது. அந்தப் புத்தகத்தாலும் ஜார்ஜ்குட்டிக்கு படத்தில் எந்த பிரயோஜனமும் இல்லை. கடைசியில் அவர் விடுதலையாவது கூட கிடைத்த எலும்புக்கூடு வருணுடையது அல்ல என்பதால் மட்டுமே.


அந்த கதை எழுதியதால் ஜார்ஜ்குட்டி அடைந்த லாபம் என்ன எனப் பார்த்தால், எலும்புக்கூட்டை தோண்டி எடுத்ததும் அடுத்து அதை என்ன செய்வார்கள் எங்கு கொண்டு செல்வார்கள் என்கிற தகவலைப் பெற்று அங்கு வேலை செய்யும் செக்யூரிட்டியை கரெக்ட் செய்கிறார். இந்தத் தகவலைப் பெறவா இத்தனை லட்சம் செலவு செய்து, கதாசிரியரைப் பிடித்து கதை எழுதினார்? ஒரு வேளை கதாசிரியர் மூலம் கதைக்கு புது ஐடியா எதாவது கிடைத்திருந்தாலும் பரவாயில்லை. அந்த மாற்று க்ளைமக்ஸை கூறுவது கூட ஜார்ஜ்குட்டிதான். 


இந்த முறை போலீஸ் ஜார்ஜ் குட்டியிடம் தோற்றால் அதன் பிறகு வெளியில் தலைகாட்டவே முடியாது எனும் சூழலில் மிக கவனமாக கையாளும் போலீஸ் அந்த எவெடென்ஸை ஜார்ஜ் குட்டி வந்து லவுட்டிக்கொண்டு போக வசதியாக அனாமத்தாக ஒரு குடிகார செக்யூரிட்டையை மட்டும் நம்பி விட்டு விட்டுப் போவது அபத்ததிலும் அபத்தம்.


பாடல்கள் இல்லாத ஒரு திரைப்படம் இரண்டு மணி நேரம் எடுக்கப்பட்டாலே அது மிகப்பெரியதாகத் தோன்றும். இங்கு இரண்டரை மணி நேரம். 

படம் ஒரு கட்டத்தை தாண்டி சுவாரஸ்யமகவே செல்கிறது. நிறைய லாஜிக் குறைகள் படத்தின் ஓட்டத்தில் தெரிவதில்லை. ஆனால் இதை ஒரு மாஸ்டர் பீஸ் என்றோ, இதுபோல ஒரு சீக்குவல் வந்ததே இல்லை என்பது போலோ பில்ட்டப்புகளையும், ரைட்டப்புகளையும் பார்க்கும்போது அதன் மறுபக்கத்தையும் பற்றி பேச வேண்டியிருக்கிறது. 

Thursday, June 4, 2020

Facebook எனும் நாடகக் கம்பெனி!!!


Share/Bookmark


Facebook கிட்டத்தட்ட ஒரு நாடகக் கம்பெனி போல மாறிவருகிறது. நடிகர்கள் தோற்றுவிடுவார்கள் போல. ஒவ்வொருவரும் தன்னை ஒரு மனிதநேய மஹான்களாகவும், பாஸிடிவ் எனர்ஜினியின் கொடோன்களாகவும் காட்டிக்கொள்வதற்கு ரொம்பவே முயல்கின்றனர்.

சிறிய உதாரணம் நேற்று அண்ணாசிப்பழத்தில் வைத்திருந்த வெடி வெடித்து கருவுற்றிருந்த ஒரு யானை மரணமடைந்தது. உண்மையில் நடந்தது ஒரு மிகப் பெரிய துயரமான சம்பவம். மாற்றுக்கருத்தில்லை. சாதாரணமாக , ஒரு யானை இறந்து கிடக்கும் புகைப்படங்களே மனதை உலுக்கும். அவ்வளவு பெரிய உருவம், நாம் வியந்து பார்க்கும் ஒரு உருவம் உயிரற்று சாய்ந்து கிடப்பது நிச்சயம் நம் மனதை எதோ செய்யும்.

ஆனால் நேற்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு, நம்மவர்கள் வருந்திய விதம் இருக்கிறதே.. அப்பப்பா.. "ஆணாகப் பிறந்ததற்கு வெட்கப் படுகிறேன் தோழி" பாணியில்

 "மனிதனாகப் பிறந்ததற்கே அவமானமாக இருக்கிறது" 

"மனித இனம்தான் எவ்வளவு கொடூரமானது"

 "நமக்கு கொரோன ஒன்றும் சும்மா வரவில்லை.. இதுபோன்ற பாவங்களினால்தான் வருகின்றது"

"வயித்துல இருந்த அந்தப் பிஞ்சி உசுறு உங்கள என்னடா செஞ்சுச்சி"

 என ஒரு ஈ எறும்பிற்குக் கூட தீங்கு நினைக்காத நம்மவர்கள் கண்ணீர் விடாத குறையாக புலம்பியிருந்தனர். கூடுதலாக கார்டூனிஸ்டுகள் அவரவர்கள் பங்கிற்கு இந்த சம்பவத்தை எவ்வளவு எமோஷனலாக்க முடியுமோ, அப்படி ஆக்க அவர்களது முழுத் திறமையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த மஹாபாவத்தை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்கிற கோஷமும் எழுந்து, ப்ரியங்கா காந்தி கேரள அரசிடம் இந்த சம்பவத்திற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்குமளவிற்கு சென்றிருக்கிறது.

சமூகவலைத்தளங்கள் கொடுக்கும் இந்த அழுத்தத்தில் நிச்சயம் அடுத்த ஓரிரு நாட்களில் அண்ணாசியில் வெடி வைத்தவர் பிடிக்கப்பட்டு, அவருக்கு தக்க தண்டனை வழங்கப் படலாம்.

முதலில் நடந்தது ஒரு விபத்து என்கிற கோணத்தில் முகநூல்வாசிகள் யாருமே அணுகவில்லை. அப்படியிருந்தாலும் அவர்களுக்கு அது தேவையுமில்லை. ஏனென்றால் அவர்களது இறக்க குணத்தைக் காட்ட, இப்போது இருக்கும் செட்டப் தான் சரியாக உள்ளது.

வேண்டுமென்றே பொழுதுபோகாமல் யாரும் அண்ணாசியில் வெடி வைத்து, ஒரு கருவுற்ற யானையைக் கொல்ல வேண்டும் என்பது யாருடைய எண்ணமாகவும் இருக்காது.

உணவில் வெடி வைத்துஉயிர்களைக் கொல்வது தவறுதான் என்றாலும் நிறைய இடங்களில் பன்றிகளின் அட்டகாசம் தாங்க முடியாத பொழுது விவசாயிகள் இந்த முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

பன்றிகளை கையாள்வது சற்று கடினம். இரவு நேரங்களில் கூட்டமாக வந்து பயிரிட்ட வயல்களை அடியிலிருந்து தோண்டி கலப்பையால் உழுதுபோட்டது போல ஆக்கிவிட்டுச் சென்றுவிடும்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழக்கும் விவசாயிகள் வேறு வழியின்றி இப்படிப்பட்ட ஒரு முடிவெடுக்கத் தள்ளப்படுகிறார்கள். பன்றிகளுக்கு வைக்கப்படும் இதுபோன்ற வெடிகளில் சில சமயம் நாய்கள் சிக்கி உயிரிழப்பதுண்டு.

அதுபோலத் தவறுதலாகத்தான் இந்த விபத்தும் நடந்திருக்கவேண்டும். யோசித்துப் பாருங்கள். அதே அண்ணாசியை, வயிற்றில் பத்து குட்டிகளுடன் ஒரு பன்றி தின்றுவிட்டு இறக்கிறது என வைத்துக்கொள்வோம். இந்தக் கண்ணீரை மக்கள் வடித்திருப்பார்களா? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். நாம் சாப்பிடும் மட்டன் பிரியானியில் செத்துக்கிடக்கும் ஆடும், ஃபீப் பிரியாணிகளில் கிடக்கும் மாடும் எதோ ஒரு பெற்றோரிடமிருந்தோ  அல்லது குழந்தையிடமிருந்தோ அவற்றின் சம்மதமில்லாமல் வலுக்கட்டாயமாக பிரித்து கொண்டுவரப்பட்டதுதான்.

அது இருக்கட்டும். பன்றிக்கு வெடி வைப்பது மட்டும் நியாயமா? சத்தியமாக நியாயமில்லை தான். நம்முடைய பார்வையில். நீங்கள் எப்பொழுதும் துணைக்கு அழைக்கும் அந்த ஏழை விவசாயி ஒருவரை நினைத்துக் கொள்ளுங்கள். கஷ்டப்பட்டு ஒரு வயலில் பயிரிட்டு பாதுகாத்து வைத்திருக்கிறார். அவருடைய வருமானம், குடும்பத்திற்கான உணவு அனைத்தும் அந்த ஒரு வயலை நம்பிதான் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். ராவோடு ராவாக பன்றிக்கூட்டங்கள் பயிரின் பாதியை அழிக்கிறது. தன்னுடைய கடின உழைப்பு, வருமானம், குடும்பத்திற்கான உணவு அத்தனையும் கண் முன்னே கேள்விக்குறியாக நிற்கும் போது , மீதி இருக்கும் கொஞ்சம் பயிரை காப்பாற்றிக்கொள்ள எந்த முடிவு வேண்டுமானாலும் எடுப்பார். அது பன்றியாக இருந்தாலும் சரி. யானையாக இருந்தாலும் சரி. 

"விலங்குகள் நடமாடும் காட்டை அழித்து வயல்வெளிகளாக்கிவிட்டு  இப்பொழுது விலங்குகளைக் குறை கூறுவதா?" என ஒரு கும்பல். வாய்யா... யோக ராசா.. உன்னத்தான் தேடிகிட்டுருந்தேன். ஏன் காடுகள் அழிக்கப்படுகிறது? ஏன் இயற்கை வளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுகின்றன? ஒரு Root Cause Analysis  செய்தால் கடைசியில் நமக்கு கிடைக்கும் ஒரே பதில் மக்கள் தொகைப் பெருக்கம். அத நிறுத்த முடியுமா உன்னால? எது நடக்கிறதோ இல்லயோ அந்த வேலை மட்டும் சரியாக நடந்துகொண்டே இருக்கிறதல்லவா? அப்படியானால் மற்றவற்றையும் ஒன்றும் செய்ய முடியாது.

மறுபடியும் கூறுகிறேன் நடைபெற்றது ஒரு துயரச் சம்பவம். வருத்தப்படுங்கள். அதை விட்டுவிட்டு எமோஷனலாக ஒரு விஷயத்தைப் பெரிதாக்கி  கடைசியாக, நீங்கள் கொடுக்கும் அழுத்தத்தில், சிலரின் வாழ்க்கையை முடித்துவிடாதீர்கள். 

Tuesday, March 3, 2020

தமிழில் அழிந்து வரும் மசாலா படங்கள்!!!


Share/Bookmark

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேருக்கும் பிடித்த அத்தனை அம்சங்களையும் ஒரே படத்தில் கலந்து கொடுப்படும் படங்கள் மசலா படங்கள் எனப்பட்டன.  காலப்போக்கில் உலக சினிமா ரசிகர்களின் ஊடுருவலில் அதே படங்கள் மருகி C செண்டர் ஆடியன்ஸுகளுக்கான படங்கள் எனவும் , ”நாலு ஃபைட்டு அஞ்சு பாட்டு” படங்கள் எனவும் அழைக்கப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட நாலு பாட்டு அஞ்சு ஃபைட்டு படங்களின் ரசிகனின் புலம்பல்தான் இந்தப் பதிவு


இப்போதும் தொலைக்காட்சியில் சின்னக்கவுண்டர், நாட்டாமை , சூரியவம்சம் வரிசையிலான  சில படங்களைப் பார்த்தால் பிரம்மிப்பாக இருக்கிறது. இத்தனை முறை பார்த்த பின்னரும் மறுபடி மறுபடி சலிக்காமல் பார்க்க வைக்கின்றன. இப்பொழுது வெளியாகும் திரைப்படங்களை ஒரு முறை பார்த்து விட்டு இரண்டாவது முறை கூட பார்க்க முடியவில்லை. பார்க்கத் தோன்றவுமில்லை. முக்கியமாக மேற்கூறிய வரிசையிலான படங்களைப் பார்த்தால் ஆரம்பத்திலுருந்து கடைசி வரை நாமும் அந்தக் கதையுடனேயே பயணித்திருப்போம். படம் முடியும் போது கிட்டத்தட்ட படத்தில் ஹீரோ எத்தனை காலம் பயணித்திருந்தாரோ அதே காலகட்டம் நாமும் பயணித்திருப்பதாக உணர்வோம். உதாரணமாக அண்ணாமலை இறுதிக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது, பழைய பால்கார அண்ணாமலையை நினைத்துப் பார்த்தால் அவர் எதோ ரொம்ப நாளுக்கு முன்னால அப்டி ஒருத்தர் இருந்தார் என்பதைப் போல தோன்றும். அதே போலத்தால் பல திரைப்படங்களுக்கும்.

ஆனால் இன்று அதுபோன்ற ஒரு உணர்வை தமிழ்திரைப்படங்கள் தருவதில்லை. இன்றும் ஒருசில படங்களைத் தவிற மற்ற அனைத்து படங்களுமே இரண்டரை மணி நேரத்திற்கு குறையாமல் தான் எடுக்கப்படுகின்றன. ஆனால் அந்த இரண்டரை மணி நேரத்தில் நமக்கு கிடைத்த அனுபவம் இன்றைக்கு எடுக்கப்படும் தமிழ்ப் படங்களில் நிச்சயம் இல்லை. என்ன காரணம்? 

இந்த பொங்கலுக்கு வெளியான இரண்டு தெலுங்குப் படங்களான ”Sarileru Neekkevvaru” வயும், “Ala Vaikundapuramlo”வயும் பார்க்கும்போது அதற்கான விடை கிடைத்தது.  இந்த பொங்கலுக்கு வெளியான இரண்டு படங்களில் அல்லு அர்ஜூன் நடித்த அலா வைகுண்டபுரம்லோ சூப்பர் டூப்பர் ஹிட். ”சரிலேரு நீக்கெவ்வரு” சுமாரான ஹிட். இந்த இரண்டு படங்களையும் பார்க்காதவர்கள் கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள். 




மெயின் மேட்டருக்கு செல்வதற்கு முன்னர் இந்த இரண்டு படங்களையும் பற்றி சிறியதாக ஒரு முன்னோட்டம். முதலில் அலா வைகுண்டபுரம்லோ... சில வருடங்களுக்கு முன்னர் அத்தாரிண்டிக்கி தாரெதி திரைப்படம் வரலாறு காணாத வெற்றி பெற்றதை அடுத்து அதன் இயக்குனர் திரிவிக்ரம் , அவரின் அடுத்தடுத்த படங்களையும் அதே கதைக்கு லேசாக மரு மாத்திரம் வைத்து எடுத்துவந்தார். அதுவும் ஒரு படத்தில் மூக்கில் மரு வைத்தால் அடுத்த படத்தில் கன்னத்தில் வைப்பார். இவ்வளவுதான் வித்யாசம். இப்படி “அ.. ஆ” என்ற படத்தையும்  மறுபடி பவனை வைத்து “அக்ஞாதவாசி” என்ற படத்தையும் எடுக்க இரண்டு அந்த அளவு சிறப்பாக செல்லவில்லை. சற்றும் தளராத திரிவிக்ரம் மறுபடி அதே கதைக்கு மருவை நெற்றியில் வைத்து எடுத்திருப்பதுதான் இந்த அலா வைகுண்டபுரம்லோ. பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்.

அடுத்தது மகேஷ் பாபுவின் சரிலேரு நீக்கெவ்வரு.. இதே ஒன் லைனிலும் ஏற்கனவே எண்ணிலடங்காத படங்கள். ஆனாலும் சலிப்பு தட்டாதபடி எடுத்திருக்கிறார்கள். முகத்தில் மூவ்மெண்ட் எதுவும் இல்லையென்றாலும் மகேஷ்பாபு மகேஷ்பாபுதான். டயலாக் டெலிவரியாகட்டும், ஸ்டண் சீவன்ஸாக  இருக்கட்டும்... ஒது ஒக்க ரகம்...  மகேஷ்பாபுவுடன் ராஷ்மிகா, விஜய் சாந்தி, ப்ரகாஷ்ராஜ், உயிர் சங்கீதா மற்றும் தெலுங்கின் முன்னணி நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருக்கும் இந்தப் படமும் ஒரு அருமையான கமர்ஷியல் எண்டர்டெய்ணர். 

சரி தற்போது மேட்டருக்கு வருவோம். தமிழ் சினிமாவில் அழிந்து போய்கொண்டிருக்கும் அந்த கதையுடன் பயணிக்கும் உணர்வு தெலுங்கு சினிமாக்களில் அப்படியே இருக்கிறது. சொல்லப்போனால் டெக்னாலஜி வளர வளர அதை இன்னும் மெருகேற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான முக்கியக் காரணம் ஒரு திரைப்படத்தில் வெறும் காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், வசனத்திற்கும், கதாப்பாத்திர அமைப்பிற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழில் எடுக்கப்பட்ட கடைசி தமிழ் கமர்ஷியல் படம் எது என்று யோசித்தால் நிச்சயம் ஞாபகத்திற்கு வரவில்லை. ஆனால் தெலுங்கில் இந்த பத்து வருடத்திலேயே அத்தனை படங்களைக் கூறலாம். குறிப்பாக இந்த திரிவிக்ரம், சுகுமார், கொரட்டலா சிவா படங்களிலெல்லாம் வசனங்கள் சிறப்பாக இருக்கும்.

தமிழில் வசனத்திற்காக மெனக்கெடுவதை சுத்தமாக மறந்துவிட்டார்கள். ஹரி ஒரு காலத்தில் மெனக்கெட்டு எழுதிக்கொண்டிருந்தார். சூர்யா கேட்டுக்குள் வந்த பிறகு அது வெறும் லவுடு ஸ்பீக்கர் சப்தமாக மட்டும் மாறிப்போனது வருத்தத்திற்குறியது. 

அதே போல கதாப்பாத்திர அமைப்பு. தமிழில் அதை சுத்தமாக மறந்துவிடுகிறார்கள். நமக்கு ஹீரோ  மட்டும்தான் முக்கியம். மற்ற அனைவரும் வெறுமனே வந்து எதோ ஒரு வசனத்தை உச்சரித்துவிட்டு செல்வது. அவ்வளவுதான். சமீபத்திய உதாரணம் தர்பார். படம் ஆரம்பித்தது முதல் கடைசி வரை தலைவரைத் தவிற பெரும்பாலானோருக்கு characterisation ற்கு மெனக்கெடவே இல்லை. வள்ளிக்கு மட்டும் பர்ஃபார்ம் செய்ய ஒரு காட்சி இருந்தது. மற்றவர்களுக்கு பெரிதாக எதுவும் இல்லை. தலைவரின் கூடவே நான்கு போலீஸ் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. என்னடா ரஜினி ஃபேனா இருந்துட்டு ரஜினி படத்தையே குறை சொல்கிறேனே என சிலர் யோசிக்கலாம். சில தலைவர் ரசிகர்களுக்கு கோபமும் வரலாம். 

நான் சொல்ல வருவது புரியவில்லையென்றால் உதாரணத்திற்கு படையப்பா திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். படையப்பா, நீலாம்பரி இந்த இரண்டு கேரக்டர்களின் தன்மை அனைவருக்கும் தெரியும்.  மற்ற கேரக்டர்களுக்கு வருவோம். சிவாஜி - ஊருக்கு நியாயம் சொல்பவர். மகனை வெளியே கண்டித்தாலும் உள்ளே ரசிக்கும் பாசமுள்ள அப்பா. லக்‌ஷ்மி - கணவனுக்கு மரியாதை கொடுக்கும், தன் பிள்ளையின் மனதை நன்கு புரிந்து வைத்திருக்கும் அம்மா.   நாசர்.. அரசியல்வாதி.. அடிக்கடி கட்சி மாறுபவர். ரமேஷ்கன்னா.. படையப்பாவின் நண்பர்.. படையப்பா எழுதிய லெட்டரை வசுந்தராவிடம் பல முறை கொடுக்க முயல்பவர். அனு மோகன்... படையப்பா பாம்பு புற்றில் கைவைக்கும் போது ஏன் பாம்பு கடிக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமுடையவர். படையப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் அதைக் கேட்பவர்.  மணிவண்ணன்.. பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர். மணிவண்ணனின் மகன்கள் - செய்யக்கூடாத தவறுகளை செய்பவர்கள். அண்ணனுக்கு பணிந்தவர்கள். இன்னும் அப்பாஸ், சித்தாரா, ப்ரீதா என படத்தில் நடித்த அத்தனை பேருக்கும் தனித்தன்மையான ஒரு கதாப்பாத்திர அமைப்பை சொல்லலாம். 

இதே அளவு டீட்டெய்லான கதாப்பாத்திர அமைப்பு தர்பாரில் செய்யப்பட்டுள்ளதா என்பதை நீங்களே யூகித்துகொள்ளுங்கள். இப்பொழுது மகேஷ்பாவுவின் சரிலேரு நீக்கெவ்வருவிற்கு வருவோம். படையப்பாவில் சொன்னது போல படத்தில் இருக்கும் அத்தனை கேரக்டர்களுக்கும் , தனித்தன்மையுடைய கதாப்பாத்திர அமைப்பு, ஓவ்வொருவருக்கான மேனரிசம் மற்றும் வசங்களை எழுதியிருக்கிறார்கள். ஹீரோயின், ஹீரோயினுடைய அம்மா, ஹீரோயினுடைய அக்கா இருவர், ஹிரோயினின் அக்கா குழந்தைகள், ஹீரோயினின் அப்பா, ஹீரோயினை திருமணம் செய்துகொள்ளப் போவதாக சொல்லப்படும் ஒரு காமெடியன், ஹீரோயின் பயணிக்கும் ரயிலின் டிடிஆர், வில்லன், வில்லனுடைய அப்பா,  வில்லனுக்கு துணைபோகும் ஒரு போலீஸ், வில்லனுடைய அள்ளக்கை, இரண்டே இரண்டு சின்ன காட்சிகளில் வரும் ஒரு ப்ரஸ் ரிப்போர்ட்டர், ஒரே ஒரு ஃபைட்டில் வரும் ஒரு அடியாள் இப்படி அத்தனை பேருக்கும் படத்தில் அவரவர்களுக்கென தனியாக ஒரு மேனரிசம், மற்றும் வசனங்கள் இருக்கின்றன. 

ஆனால் தமிழில் இது போல ஒரு டீட்டெயிலான கதாப்பாத்திர அமைப்பு பார்த்தே பல வருடங்களாயிற்று. உயிரற்ற கதாப்பாத்திரங்களை வைத்து வெறுமனே காட்சிகளை மட்டும் நகர்த்துவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.   படத்தின் கதாப்பாத்திரங்களே பார்வையாளர்களுக்கு படத்தின் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்துபவர்கள். 

நமது ஹீரோ இத்தனை கோடி சம்பாதிக்கிறார், இவர் அவரை முந்திவிட்டார், அவர் இவரை முந்திவிட்டார் என்றெல்லாம் அடித்துக்கொள்கிறோமே தவிற யார் தரமான படங்களை கொடுப்பது என்பதில் நமக்குள் சண்டையே வருவதில்லை. நம்முடைய ஹீரோக்களை விட குறைவாக சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் படங்கள், நம்முடைய திரைப்படங்களை விட குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படங்கள் எப்படி இவ்வளவு குவாலிட்டியான விஷுவலுடன் உருவாக்கப்படுகின்றன? அதை நாம் யோசிப்பதில்லை. 



இன்னும் சொல்லப்போனால் தர்பாரில் ரயில்வே ஸ்டேஷனில் வரும் சண்டையை சிலாகிக்காத ஆளே இல்லை. தலைவர் முதல் முறையாக அப்படி ஒரு சண்டைக்காட்சியில் நடித்ததைப் பார்ப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அதே போன்ற சண்டைக்காட்சிகள் பதினொரு வருடம் முன்னால் பாலய்யாவின் சிம்ஹா படத்திலேயே  தெலுங்கில் வந்திருக்கிறது என நினைக்கும்போது பத்து வருடம் பின்னால் இருக்கிறோமோ என்கிற கவலையும் இருக்கிறது. 

இதுபோல சில நல்ல படங்களை பார்க்கும்போதெல்லாம் பலமுறை நான் வயிற்றெரிச்சலில் தமிழ் சினிமாவை குறை சொல்லி புலம்பியிருக்கிறேன். அப்போதெல்லாம் நண்பர்கள் சொல்வது ஒன்றே ஒன்றுதான்.

 “போடா தெலுங்கு வந்தேரி நாயே”


Monday, September 23, 2019

காப்பான் - நல்ல படம்!!


Share/Bookmark
அம்மா அய்யா.. தமிழ் சினிமாவுல இன்னும் யாருக்காச்சும் விவசாயிகள காப்பத்தனும்னு ஆசையிருந்தா பட்டுன்னு வந்து காப்பாத்தி விட்டு போயிருங்க. அப்புறம் லேட்டா வந்து நாங்க காப்பாத்துறதுக்கு விவசாயிகளே இல்லையின்னு ஃபீல் பன்னக்கூடாது. நம்ம ஹீரோக்கள் இருக்க வேகத்தப் பாத்தா நம்ம ஊரு விவசயிகள் மட்டும் இல்ல நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் போயி காப்பாத்துவானுக போல. விவசாயத்த கார்ப்ரேட்டுக்கிட்டருந்து காப்பாத்துறதுக்கு முன்னால மொதல்ல இந்த கார்த்தி சூர்யாகிட்டருந்து விவசாயிகளக் காப்பாத்தனும். 

காப்பான்.. இண்டர் நேஷனல் டெரரிசத்தையும், டெல்டா விவசாயிகளையும் மிக்ஸ் பன்னி ஒரு மாதிரியான கசமுசாவான கதை. இந்த கதைய கே.வி. ஆனந்த் எப்டி புடிச்சிருப்பாருன்னு நம்மலாள உண்ர முடியிது. ரெண்டே ரெண்டு வாட்ஸாப் மெசேஜ் தான். ஒண்ணு “அங்கே எல்லையில் ராணுவ வீரர்கள்”ன்னு ஆரம்பிக்கும். இன்னொன்னு அங்கே டெல்டாவில் விவசாயிகள் கஷ்டப்படும்பொழுது”ன்னு ஆரம்பிக்கும். இது ரெண்டாயும் ஒண்ணா மிக்ஸ் பன்னி ஒரு கதைய ரெடி பன்னிருக்காரு. 

சூர்யா special protection Groupla  ஒரு பெரிய ஆபீசர். பங்கரமா வசனமெல்லாம் பேசுவாரு.  

"குண்ட மார்புல வாங்கனும்னு SPG la எழுதப்படாத ரூல்"

யார் மார்புல

சமுத்திரக்கனி மார்புலயும், மோகன்லால் மார்புலயும். 


ஆக்சுலா படத்துல சமுத்திரக்கனி இருக்கதே எனக்கு தெரியாது. படத்துல மொத மொத பாத்தாப்ப ஷாக் ஆயிட்டேன். அய்யய்யோ.. அதான் சூர்யா இருக்காப்ளயே.. இதுல சமுத்திரக்கனி வேறயா... கருத்து சொல்லி கொல்லப்போறாய்ங்களே.. இந்தப் பாத்தா சீவலு.. அந்தப் பக்கம் பாத்தா செதறலு எந்தப்பக்கமும் எஸ்ஸாக முடியாது போலயேன்னு ஒரு பீதில இருக்கும்போது அதுக்கு ஆறுதலா சமுத்திரக்கனி படத்துல எதுவும் அட்வைஸ் பன்னல. ஆனா அதுக்கும் சேத்து சூர்யா பேசிட்டாப்ளன்றது வேற விஷயம். 


சும்மா சொல்லக்கூடாது. கே.வி. ஆனந்த் ஸ்க்ரீன்ப்ளே நல்லாவே பன்னிருக்காரு. விவசாயிகளப் பத்தி பேசுற காட்சிகளத் தவற வேற எங்கயுமே படம் போர் அடிக்கல. ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் நல்ல விறுவிறுப்பா  போய் முடியிது. கேமரா ஸ்டண்டு எல்லாமே நல்லாருக்கு.  பாட்டும் மூணு பாட்டு நல்லாருக்கு.

ஆக்சுவலா படத்துக்கு வெடிகுண்டுன்னு தான் பேரு வச்சிருக்கனும். ஆனா கே.விக்கு ன்னு முடியிற பேருதான் வைக்கனும்றதால காப்பான்னு வச்சிருக்கானுக. ஏன்னா கூட்டிக் கழிச்சி பாத்தா first half la ஒரு 300 குண்டு second half la ஒரு 200 குண்டு கூட்டி கழிச்சி பாத்தா ஒரு 500 குண்டு வெடிச்சிருக்கு.இவ்வள்வு குண்டையும் எங்க வச்சானுங்கன்னு கேக்குறீங்களா? எங்க வக்கைலன்னு கேளுங்க..  ஸ்கூல் பேக்ல குண்டு.. உக்கார்ல சேர்ல குண்டு.. புல்லட் ஃப்ரூப் ஜாக்கெட்டுல குண்டு.. ஆப்ரேஷன் பன்ன கைக்குள்ள குண்டு.. வில்லனா வர்றவன் நெஞ்சுக்குள்ள ஏது... அங்கயெல்லாம் இல்ல... ஒரு லெவல்ல நமக்கே பயமா இருக்கு... நம்ம சீட்டுக்கு அடிலயும் எதயும் வச்சி வெடிச்சி விட்ருவானுகளோன்னு  அப்பப செக் பன்னி பாத்துக்க வேண்டியிருக்கு. 

மோகன்லால்.. செம்மையா இருக்காரு.. அந்த Prime Minister get up.. அவருக்கு எழுதப்பட்ட வசங்கள எல்லாமே நல்லாருக்கு.அவர் ஸ்க்ரீன்ல இருக்கும்போது வேற எந்த ஆக்டரோட பர்ஃபாமன்ஸூம் எடுபட மாட்டேங்குது. அதுக்காகவே அவர க்ரிச்ச் பன்ன சொல்லிட்டாங்க போல.
வழக்கமா கே.வீ.ஆனந்த் படத்துல யாராது ஒருத்தர் செத்த உடனே ஹீரோ டூயட் பாட போயிருவாரு. அதே மாதிரி இங்கயும் மோகன்லால் குண்டு வெடிச்சி செத்த அடுத்த செகண்ட் துபாய் லொக்கேஷன்ல துப்பட்டா துப்பட்டான்னு ஷாயிஷாவோட ஒரு டூயட் பாடுவாப்ளன்னு நினைச்சேன். ஏமாத்திட்டாரு.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்த எடுத்து வச்சிருக்காங்க. மினிஸ்டர்ஸ் குமிஞ்சி கும்புடு போடுறதுன்ஞ் திரும்பவும் நடந்த விஷயங்களையே எடுத்து வச்சிருக்காங்க.

சூர்யா வழக்கம்போல ஆளு செம ஃபிட்... கை ரெண்டயும் இழுத்து வச்சி கான்கிரீட் போட்டுவிட்ட மாதிரி படம் முழுக்க வெரப்பா சுத்துறாரு.  ஷாயிஷாதான் அவருக்கு செட் ஆகல.. வேற ஹீரோயின் யாரயாச்சும் போட்டுருக்கலாம்.  ஏனா? ஹைட்டு ப்ரச்சனை தான்.. ஷாயிஷா மூஞ்சி மட்டுமே சூர்யா இடுப்பு உயரம் இருக்கு. தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ்.. பாடல்கள் எப்பவும் போல.. மூணு பாட்டு நல்லாருக்கு. BGM அந்த அளவுக்கு சிறப்பா இல்ல 

ஆர்யா அமெரிக்க மாப்பிள்ளைய விட கொஞ்சம் பெட்டரான ரோல். தெலுகு மார்க்கெட்டுக்காக  ஒரு சில தெலுகு நடிகர்களோட பொமன் ஈரானியும் உள்ள வந்துருக்காரு. 

நாட்ல நிறைய டைரக்டர்களுக்கு டைட்டில் ப்ரச்சனை இருக்கும். ஆனா கே.வி. ஆனந்துக்கு அந்த ப்ரச்சனையே இல்ல.  இப்ப காப்பான்னு வச்சிருக்காரு. நாளைக்கே  சமூக ஆர்வலர ஹீரோவ வச்சி எடுத்தா துடைப்பான்னு வச்சிப்பாரு. இதே ராஜமெளலி ஈய வச்சி எடுத்த மாதிரி ஒரு கரப்பான் பூச்சிய வச்சி எடுத்தாருன்னா கரப்பான்னு வச்சிப்பாரு.  ஹீரோ ஒரு பெய்ண்டர்னு வச்சிக்குங்க படத்துக்கு பேரு நிப்பான்னு வச்சிப்பாரு. டைட்டில் கைவசம் ஸ்டாக்கு நிறைய இருக்கு.

நிறைய நெகடிவ் ரிவியூஸ் பாக்க முடியிது. அதெல்லாம் இதற்கு முன்னால வந்த சூர்யா படங்களால பாதிக்கப்பட்டவங்களோட Frustration. இந்தப் படம் நல்லாதான் இருக்கு. ரொம்ப நாளுக்கப்புறம் சூர்யாகிட்டருந்து ஒரு நல்ல எண்டர்டெய்னர். 

Wednesday, February 20, 2019

தில்லுக்கு துட்டு விமர்சனம் !!!


Share/Bookmark
தில்லுக்கு துட்டு வீடியோ விமர்சனம்


To subscribe Youtube channel Please click here 

விஸ்வாசம் விமர்சனம்!!!


Share/Bookmark
விஸ்வாசம் வீடியோ விமர்சனம்



To subscribe Youtube channel Please click here 

Thursday, October 25, 2018

சண்டக்கோழி-2


Share/Bookmark

சண்டக்கோழி.. என்னோட லைஃப்ல மறக்க முடியாத ஒரு படம். ஏன்னா அவ்ளோ பெரிய சர்ப்ரைஸ வேற எந்தப் படமும் இதுவரைக்கும் கொடுத்த்தில்ல. சண்டக்கோழி வந்தப்போ கல்லூரில படிச்சிட்டு இருந்தோம். அன்னிக்கு செமஸ்டர் எக்ஸாம் எழுதி முடிச்சிட்டு வெளில வந்தா வெளில சண்டக்கோழி போஸ்டர். அடுத்த மூணு நாள் ஸ்ட்டி லீவு ரைட்டு கெளம்பு. அன்னிக்கு நாங்க பட்த்துக்கு போனதுகு ஒரே ஒரு காரணம் மீரா ஜாஸ்மீன் மட்டுத்தான். பேர் வேற சண்டக்கோழின்னு இருந்த்தால அது ஒரு ஹீரோயின் ஓரியண்ட்ட் சப்ஜெக்ட்டா இருக்கலாம். மீராஜாஸ்மீன் கெத்து காமிச்சிருக்கும்னு கெளம்பிப் போனோம்.  ஆனா லிங்குபாய் குடுத்தாரு பாருங்க ஒரு ட்விஸ்ட்டு. தம்பி காசி வெட்டிருவான் இறங்கி ஓடுன்னு அந்தப் பெரியவர் சொன்னதும் அய்ய்யோ ஹீரோ செத்தாண்டான்னு நினைக்கும்போது இறங்கிப்போய் பொள பொளன்னு பொளக்குறது.. அடுத்து அண்ணேன் பையன் மேல எதுவும் கை வைச்சிடலயென்னதும். ஒருத்தன தூக்கிப்போட்டு மிதிச்சி ராஜ்கிரன் ஒருத்தன எட்டி மிதிச்சி இந்த மண்ணுல உள்ள ஒவ்வொரு உசுறலயும் என்னோட உசுரும் கலந்துருக்குடான்னு சொல்லி ஒருத்தன குச்சி மாதிரி ரெண்டா உடைச்சி போடுவாறு. 

ஒரு ட்ரெண்ட் செட்டர் அந்தப் படம். எப்பவும் வில்லன் பெரிய ஆளா இருப்பான். ஹீரோ அடிமட்ட்த்துலர்நுது அவன எதிர்ப்பான். ஆனா வில்லன் பெரிய ஆளு.. ஹீரோ அவன விட பெரிய ஆளு அப்டிங்குற கான்செப்ட் அதுக்கப்புறம் நிறைய படங்கள்ல வர ஆரம்பிச்சிது. விஷாலுக்கு தமிழ்ல்ல மட்டுமில்லாம தெலுகுலயும் மிகப்பெரிய மார்க்கெட் உருவாக காரணமா இருந்த படம் இந்த சண்டைக்கோழி. குருவி சேக்குற மாதிரி லிங்கு பாய் சேத்து வச்சிருந்த மரியாதையெல்லாம் அஞ்சான் அப்டிங்குற ஒரு படத்தோட நம்மல்லாம் சேந்து சிதைச்சிட்டோம்.  அவருக்கு நாம செஞ்சது மிகப்பெரிய பாவம். இத விட மொக்கைப் படம் எடுத்தவன்லாம் அசால்ட்டா வெளிய சுத்திக்கிட்டு இருக்கபோ லிங்குபாய்க்கு மனதளவுல மிகப்பெரிய பாதிப்பை சமூக வலைத்தளங்கள் மூலமா உண்டாக்கிட்டோம். அந்த பாதிப்புலருந்து அவர் மீண்டு வர சில வருஷங்கள் ஆயிருச்சி. புதுசா எதாவது ட்ரை பன்னி மறுபடி சிக்கல்ல மாட்டாம இருக்க, ஏற்கனவே ப்ளாக்பஸ்டரான சண்டக்கோழியோட இரண்டாவது பாகத்தை எடுத்து ஒரு சேஃப்பான கேம் விளையாட முயற்சி பன்னிருக்காரு லிங்கு பாய். விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி இவங்கல்லாம் நடிச்சி யுவன் இசையில லிங்குபாய் இயக்கி வெளிவந்துருக்க இந்த சண்டைக்கோழி -2 எப்டி இருக்குன்னு பாக்கலாம்.

சுத்துப்பட்டி ஏழு கிராமங்களும் சேர்ந்ந்து நடத்துற வேட்டைக்கருப்பு கோயில் திருவிழாவுல கறிச்சாப்பாட்டுல உண்டாகுற சின்ன சண்டை மிகப்பெரிசா மாறி இரண்டு கோஷ்டிங்களுக்குள்ள மோதலா மாறி அதுல வரலட்சுமியோட கணவர் இறந்துடுறாரு. பதிலுக்கு அவரக் கொன்னவங்க குடும்பத்தையே கருவருக்கனும்னு முயற்சி பன்னி எல்லாரயும் கொல்ல கடைசி பையன கொல்லப் போகும்போது துரை அய்யா வந்து காப்பாத்தி அவனோட உசுற காப்பாத்துற பொறுப் பேத்துக்கிறாரு. ஏழு வருஷம் கழிச்சி திரும்பம்வும் திருவிழா நடத்த, அந்த திருவிழா முடியிறதுக்குள்ள மிச்சம் இருக்க ஒரு பையனயும் கொல்ல வரலட்சுமி தீவிரமா முயற்சிக்க அவங்கட்டருந்து ராஜ்கிரனும் அவரோட பையன் விஷாலும் எப்படி அந்தப் பையன காப்பாத்துறாங்கன்றதுதான் கதை.

வீடியோ விமர்சனம்



ஒரு படம் ஓடும்போது இடையில திருவிழா வரலாம். ஆனா ஒரு திருவிழாவுக்கு இடையில அப்பப்ப படம் ஓடுறது இந்தப் படத்துலதான். வேட்டக்கருப்பு திருவிழாவுல படம் ஆரம்பிச்சி அதே திருவிழா முடியும்போது படமும் முடியிது.

ஏற்கனவே சொன்ன மாதிரி சண்டக்கோழி முதல் பாகத்தோட வெற்றிக்கு காரணம் அது நமக்கு கொடுத்த சர்ப்ரைஸ் எலெமெண்ட்ஸ் தான். இந்தப் படத்துல அது ஒண்ணு தான் மிஸ்ஸிங்.

படத்தோட ப்ளஸ்… சர்ப்ரைஸ் எலெம்ண்ட்ஸ் இல்லன்னாலும் சண்டக்கோழி முதல் பாகத்தோட ரெண்டவது பாதி பாக்குற மாதிரியான் ஒரு சுவாரஸ்யத்த படம் முழுசும் கொண்டு வந்துருக்காங்க. விஷால் ஆளூ அப்டியே இருக்காரு. கீர்த்தி சுரேஷ் அல்டிமேட்.  முதல் ஒருசில காட்சிகள்ல கீர்த்தி பேசுறது கொஞ்சம் எரிச்சலா வரும். என்ன பன்ற? மீராஜாஸ்மீன் மாதிரி.. அதான் நமக்கு வரலைல்ல.. விட்டுற வேண்டியதுதான.  போகப் போக மனசுல நின்னுடுறாங்க. அதுவும் திருவிழாவுல ஒரு டான்ஸ் ஆடுறாங்க பாருங்க. தரம். என்ன ஒரு ப்ரச்சனைன்னா தெலுகுல நாக சைதன்யான்னு ஒருத்தன் இருக்கான். அவனால வாய மூட்வே முடியாது. ஆல் டைம் ஓப்பன்லதான் இருக்கும். கீர்த்தி சுரேஷுக்கும் கிட்டத்தட்ட அதே ப்ரச்சனை இருக்குன்றதுதான் கொஞ்சம் வருத்தமான் விஷயம்.

படத்துல ராஜ்கிரன் கூட ஒரு நாலு கெழவங்க இருப்பாங்க. ஆரம்பத்துலருந்து கடைசி வரை.. ”டேய் அய்யா மேல கை வச்சிட்டாங்கடா.. அவங்க மொத்தத் தலையும் உருளனும்டா.. டாய் தம்பி மேல கை வச்சிட்டானுக்கடா அவங்க மொத்தத் தலையும் உருளனும்ண்டா.. டாய் நம்ம ஊர்க்காரன் மேல கை வைச்சீட்டாஙக்டா…அவங்க மொத்தத் தலையும் உருளனும்டா…”ன்னு சொல்லிக்கிட்டே இருப்பானுங்களே தவற கடைசி வரைக்கும் ஒரு ப்ளேடால கூட யாரயும் கிழிக்க மாட்டானுங்க

கேமரா, ஸ்டண்டு, பின்ணனி இசை எல்லாமே சூப்பர். யுவன் பாடல்கள்ல மட்டும் கொஞ்சம் கவுத்துட்டார். கம்பத்து பொன்ணூ பாட்டு மட்டும் சூப்பரா இருக்கு, அதே மாதிரி அந்தப் பாட்ட நல்லாவும் பிக்சரைஸ் பன்னிருக்காங்க. விஷாலும் சரி, ராஜ்கிரணும் சரி முதல் பாகத்துல கொடுத்த பர்ஃபார்மன்ஸூல கொஞ்சம் கூட குறையாம இதுலயும் பன்னிருக்காங்க.

இது வந்து என்ன கதைன்னே தெரியில.. இதுமாதிரி தமிழ்ல 45003 படம் வந்துருச்சி.. இதெல்லாம் ஒரு கதையா? அப்டினுலாம் சில விமர்சகர்கள் சொல்ல வாய்ப்பு உண்டு. கதையே இல்லாம படம் எடுக்கும் திறமையானவர்கள்ல ஒருத்தர்தான் லிங்குசாமி. விளையாட்டா சொல்ல்ல… சீரியஸாதான் சொல்றேன். ”பையா படத்துல பாத்தீங்கன்னா கதையே இருக்காது… “அப்டின்னு லிங்குசாமியே சொல்லிருக்காரு. ஆனாலும் படம்  ஹிட்.

ஏற்கனவே பார்த்த மாதிரியான காட்சிகள் இருந்தாலும், ஒரு சில காட்சிகள் எளிதா யூகிக்க முடியிறதா இருந்தாலும் படம் கொஞ்சம் கூட போர் அடிக்காம ஓடுது. ராஜ்கிரன், விஷால், ஊரு, கோயில்னு அந்த சண்டக்கோழி atmosphere eh ஒரு நல்ல ஃபீல குடுக்குது. கண்டிப்பா ஒரு தடவ குடும்பத்தோட பார்க்கக்கூடிய ஃபேமிலி எண்டர்டெய்னர் தான் இந்த சண்டக்கோழி. 

Tuesday, October 2, 2018

செக்க சிவந்த வானம் !!!


Share/Bookmark

இந்த ஆடுகளம்னு ஒரு படம் பாத்துருப்பீங்க… அதுல பேட்டக்காரன்னு ஒருத்தர் இருப்பாரு. ஒரு காலத்துல ஓஹோன்னு வாழ்ந்தவரு. சம காலத்து பசங்க கூட போட்டி போட முடியாம ரொம்ப கஷ்டப்படுவாரு. , தன்னோட கெத்த நிரூபிக்கிறதுக்காக நிறைய தில்லு முள்ளெல்லாம் பன்னுவாரு. அந்த மாதிரி தான் மணி சார். ஒரு காலத்துல ஓஹோன்னு பேர் சொல்லுற படங்கள எடுத்தவரு. சம கால படங்களோட போட்டி போட முடியாம ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தாரு. நானும் யூத்துக்கு படம் எடுக்குறேன், மேல் தட்டு மக்களோட லவ்வ படமாக்குறேன்னு பல வித லவ் ஸ்டோரிக்கள எடுத்து, ஆடியன்ஸ தியேட்டர விட்டு தெறிச்சி ஓட வச்சதுதான் மிச்சம். அவர் எடுத்த லவ் ஸ்டோரி எதுவுமே மக்களுக்கு பிடிக்கலன்னு அவரு தெரிஞ்சிக்கவே பத்து பதினைஞ்சி வருஷன் ஆயிருக்கு.  லவ் ஸ்டோரிய தலைய சுத்தி தூக்கி வீசியே ஆக வேண்டிய கட்டாயம், ஜெயிச்சே ஆக வேண்டிய கட்டாயம். இப்படி பல கட்டாயங்களுக்கு நடுவுல ஒரு கொரியன் படத்துல இன்ஸ்பையர் ஆகி எடுக்கப்பட்ட படமான இந்த செக்கச் சிவந்த வானம் எப்டி இருக்குன்னு பாக்கலாம்.

மணி சார் எடுத்த கடந்த சில படங்களைப் பாத்து கடுப்பாகி இனிமே மணி சார் படமே பாக்கக் கூடாது அப்டின்னு முடிவெடுத்த என்னைய மாதிரி பல பேர இந்தப் படத்தப் பாக்க வச்சதுக்கு முக்கியமான காரணம் இந்தப் படத்தோட ஸ்டார் காஸ்டிங். நாலு முன்ணனி ஹீரோக்கள், ப்ரகாஷ்ராஜ், ஜோதிகா.. அப்றம் எப்டி இந்தப் படத்த பாக்காம விடுறது.

வீடியோ விமர்சனம்

படத்தோட கதை ட்ரெயிலரப் பாத்தாலே எல்லாருக்கும் தெரியும். பெரிய கை ப்ரகாஷ்ராஜ் மட்டையானதும் அவரோட இடம் யாருக்கு அப்டிங்குற சண்டை அவரோட மூணு மகன்களுக்கு உண்டாகுது. அவங்களுக்குள்ள அடிச்சிக்கிட்டு யாரு அந்த இடத்த புடிக்கிறாங்கங்குறது தான் கதை

நாலு ஹீரோக்கள் இருந்தாலும் நாலுபேருக்கும் ஈக்குவலான ஸ்க்ரீன் ஸ்பேஸ் குடுத்து ஸ்க்ரீன் ப்ளே பன்னிருக்காங்க. நாலு பேரும் அதே மாதிரி நல்லாவே நடிச்சிருக்காங்க. குறிப்பா விஜய் சேதுபதிக்கும், சிம்புவுக்கும் ரசிகர்கள உற்சாகப் படுத்துற மாதிரி ஜாலியான வசனங்கள். சிம்புவோட ரசிகர்களெல்லாம் லெமூரியாக் கண்டத்தோட வழக்கொழிஞ்சி பொய்ட்டாங்கன்னு நினைச்சிட்டுருந்தேன். ஆனா சிம்பு எண்ட்ரிக்கு தியேட்டர் விசில் தெறிக்கிது. ஹிட்டு குடுத்து பல வருஷம் ஆச்சு. எந்தப் படமும் சொன்ன தேதிக்கு வர்றதில்லை. இருந்தாலும் இவ்வளவு ஃபேன் பேஸ் மெய்ண்டய்ன் பன்றது பெரிய விஷய்ம் தான்.

முதல் பாதி அப்டியே போரடிக்காம போகுது. ரெண்டாவது பாதில அண்ணன் தம்பிகளூகுள்ள சண்டை ஆரம்பிச்சதும் அது ஒரு சீரியஸான சண்டையாவே நம்மாள உணர முடியல. அவனுங்கத்தான் யுத்தம் நடக்குது யுத்தம் நடக்குதுன்னு அப்பப்ப சொல்லிக்கிறாங்க. ஆனா பாக்குற நமக்கு அப்டி ஒரு சீரியஸான யுத்தம் நடக்குற ஒரு ஃபீலே வர மாட்டுது. ஆடியன்ஸ அந்த கதைக்களத்துக்குள்ள இழுக்க முடியலன்னா அவங்க வைக்கிற காட்சிகளோட அழுத்தத்தையும் உணர வைக்க முடியாது.

எப்படி அர்விந்த் சாமிய அவங்க ரெண்டு பேரும் வீழ்த்துறாங்கன்றதுக்கு ரெண்டு  மூணு சீன் வச்சிருக்காங்க. அபாரம். ஒரு கும்பல் ரவுடிங்கள கூடாரத்துக்குள்ள விட்டு 30 செகண்ட் மோட்டிவேஷனல் ஸ்பீச் குடுக்குறாரு. மொத்த பயலுகளும் அவர் கூட சேந்துடுறாய்ங்க. சிங்கம் மாதிரி இருந்த அர்விந்த சாமி ரெண்டு மூணு இழப்புலயே பொட்டியத் தூக்கிட்டு ஊர் ஊரா ஓட ஆரம்பிச்சிடுறாரு.

சிம்பு அவங்க அம்மா கிட்ட பேசுற மாதிரி ஒரு காட்சி. தளபதில ரஜினியும் ஸ்ரீவித்யாவும் பேசிக்கிற சீன் மாதிரி எடுக்க முயற்சி பன்னிருக்காரு.ஆனா ரொம்ப ஆர்டிஃபீஷியலான காட்சியாகிப்போச்சு.  என் சாயாவ செத்ததுக்கு நீங்க யாருமே ஃபீல் பன்னலம்மாம்பாரு.. டேய் உன் சாயாவ நீயே ரெண்டு சீன்ல தான் பாத்துருக்க. இதுல உனக்கே அழுக வரக்கூடாது. இதுல அம்மாவ வேற அழுகச்சொல்லுற… அம்மா.. நீங்க என் கூட இருந்த்தே இல்லம்மான்னுவாரு. இவந்தான் யார் கூடயும் அதிகமா பழகக் கூடாதுன்னு செர்பியால போய் படுத்துக்கெடப்பாரு. இதுல அம்மா கூட இல்லன்னு பீலிங் வேற.

இது ரொம்ப விறுவிறுப்பான திரைக்கதையும் இல்ல.. ஒரு ப்ரில்லியண்ட்டான ஸ்க்ரீன்ப்ளேயும் இல்ல. இத ஒரு நல்ல த்ரில்லரா கொண்டுபோயிருக்கலாம். அதுக்கான ஸ்கோப் கதையில இருக்கு. ஆடியன்ஸ் நாமதான் ஒருவேள இப்டி ட்விஸ்ட் வைப்பாங்களோ இல்ல அப்டி ட்விஸ்ட் வைப்பாங்களோன்னு யோசிக்கிறோம். ஆனா மணி சார் ட்விஸ்டே இல்லாத்துதான் இங்க ட்விஸ்டு அப்டின்னு ஒரு ட்விஸ்ட் வச்சிருக்காரு.

மணி சார் இந்தப் படத்துல செஞ்சிருக்கது ரெண்டு சாதனை. ஒண்ணு ரொம்ப நாளுக்கு அப்புறம் படம் ஓடிக்கிட்டு இருக்கும்போது பாதிலயே தெறிச்சி ஓடாம முழு படத்தையும் தியேட்டர்ல உக்கார்ந்து பாக்குற மாதிரி ஒரு படம் எடுத்துருக்காரு. இன்னொன்னு சிம்பு நடிச்ச ஒரு படத்த கரெட்டான தேதிக்கு ரிலீஸ்  பன்னிருக்காரு. ரெண்டாவது தான் மிகப்பெரிய சாதனை.

நண்பர்கள் பல பேரு ஏ.ஆர்.ரஹ்மான் செக்க சிவந்த வானத்துக்கு செமையா மியூசிக் போட்டுட்டு சர்காருக்கு மட்டும் சங்கு ஊதிட்டாருன்னுலாம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. எனக்கென்னவோ இந்தப் படத்துல கூட இசை பழைய ஏ.ஆர்.ரஹ்மான் படங்கள் மாதிரி பெரிய அளவுல பாதிப்ப உண்டாக்குற மாதிரி இல்லை.

ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் கொஞ்சம் கூட போர் அடிக்காம படம் ஓடுது. அதே மாதிரி ஆஹா ஓஹோ.. மணி சார் ஈஸ் பேக், மணீ சார் ஈஸ் சைடு.. அப்டின்னு எக்ஸைட் ஆகுற அளவுக்கெல்லாம் படத்துல ஒண்ணும் இல்ல.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...