Saturday, October 31, 2009

ஆதவன்


Share/Bookmark
"ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை "

மறைந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த பதிப்பு. காட்டுத்தீயை விட வேகமாக பரவும் வதந்தியால் தற்போது அவதிப்படுகிறார் இந்த ஆதவன். வழக்கமாக அஜித் , விஜய் படங்கள் வெளியாகும் போது கிளப்பி விடப்படும் புரளிகளைப்போல், இப்போது சூர்யா சிக்கியிருப்பது யாரால் என்பது புரியாத புதிர். ஒரு வேளை தயாரிப்பாளரின் எதிரிகளா? ஹ்ம்ம்... அது நமக்கு வேண்டாத வேலை .

இந்த ஆதவனை பற்றி தற்போது நம்மூரில் கூறப்படுவன என்ன தெரியுமா?

" கந்தசாமிய விட கேவலமா இருக்கு"

"முதல் பாதி பார்க்கலாம்... இரண்டாம் பாதி அறுவை"

"வடிவேலுவை தவிர படத்தில் வேறு ஒன்றும் இல்லை"

என் தாய் மலடுன்னு சொன்னானம் ஒருத்தன். அது போலத்தான் இந்த கருத்துக்கள். திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களை திரும்ப திரும்ப பார்த்து 200 நாட்கள் ஓடவைத்த நம் மக்கள் இந்த ஆதவனில் என்ன குறை கண்டார்கள் என தெரியவில்லை. ஒருவேளை கேவலமான படங்களை தொடர்ந்து பார்த்து, எது நல்ல படம் எது கேவலமான படம் என பகுத்தறியும் தன்மையை இழந்துவிட்டர்களா?

படத்தில் வடிவேலுவை தவிர வேறு ஒன்றும் இல்லை என சொல்பவர்களுக்கு சூர்யா ஆக்க்ஷன் காட்சிகளில் பூந்து விளையாடியிருப்பது தெரியவில்லையா? தற்போது தமிழ் சினிமாவில் காணப்படும் மற்ற ஆக்க்ஷன் ஹீரோக்களை போல வெட்டி பன்ச் டயலாக்குகளை பேசாமல் தன் உடற்கட்டிலும், வசன உச்சரிப்பிலும், முக பாவனைகளிலும் அதை வெளிக்காட்டியிருப்பது நம் மக்களுக்கு ஏனோ பிடிக்கவில்லை...

இந்த படத்தை பற்றி கூறப்படும் மற்றுமொரு கருத்து "கதை, பலமுறை பார்த்த பழைய கதை" என்பது. ஆமாம். கண்டிப்பாக. தமிழ் சினிமா தோன்றிய காலத்திலிருந்து ஆயிரக்கணக்கில் படங்கள் வெளிவந்தது விட்டன... எனவே நமக்கு கதைக்கு கொஞ்சம் பஞ்சம் தான். ஆனால் திரைக்கதைக்கு பஞ்சம் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் காண வேண்டிய ஒரு சிறந்த மசாலா படத்தை அளித்திருக்கின்றனர். ஆரம்ப காட்சியிலிருந்து இறுதிவரை சற்றும் தொய்வில்லாத திரைக்கதை. சண்டை காட்சிகள் கேசினோ ராயலின் இறக்குமதி. அதே தரத்துடன். வடிவேலு சிறு இடைவேளைக்கு பின் மீண்டும் நம் பழைய வெடிவேலுவாக.. பிண்ணியிருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் தாலாட்டு. பின்னணி இசையில் ஆங்கில படத்துக்கு இணையான தரம்... மிரட்டியிருக்கிறார்.

முதலில் படத்தை பார்த்து கருத்து சொல்பவர்கள் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். எதிர்மறை கருத்துக்கை உடையவர்களை விட கருத்து சொல்ல தெரியாதவர்களாலேயே இந்த குழப்பம். ஏனெனில் நம்மூரில் படம் பார்பவர்களை விட, பார்த்தவர்களிடம் கதை கேட்டு ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் அதிகம்.

என்னிடம் கூறிய அனைவரும் இப்படத்தை பற்றி அவ்வளவு நன்றாக கூறவில்லை. ஒருவன் மட்டும் "சூப்பரா இருக்கு மச்சி" என்றான். அவனுக்காக பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது.

உங்களுக்கு அந்த ஒருவன் நானாக இருந்தால் மகிழ்ச்சி.

என்ன ஒண்ணு நயன்தாராவ க்ளோஸ் அப்புல காட்டுன ரெண்டு ஷாட்ல நா கொஞ்சம் பயந்துட்டேன்... ஆங்... எனக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும்..


நான் அடித்து கூறுகிறேன் இந்த 2009 இல் வெளிவந்த அனைத்து திரைப்படங்களிலும் முந்திக்கொண்டு முதலில் நிற்பவன் இந்த ஆதவன்.

எதிர்வினைகளை எதிர்பார்கிறேன்.

இப்படிக்கு,
தமிழ் சினிமா ரசிகன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...