Monday, July 23, 2012

THE DARK KNIGHT FALLS ச்ச சாரிbaa... RISES


Share/Bookmark
ஊர்ல உள்ளவங்களுக்கெல்லாம் ஒரு கஷ்டம்னா பேட்மேன் வந்து காப்பாத்துவாரு.. ஆனா அந்த ஆளுக்கே ஒரு கஷ்டம்னா யார்க்கிட்ட போவாரு... முட்டிய மடக்கிட்டு அந்தாள குத்துறாய்ங்கய்யா குத்து படத்துல .. பாக்கவே பாவமா இருக்காரு... இந்த படத்துல அவர காப்பாத்திக்கவே அவருக்கு நேரம் போதல.... அப்புறம் எங்க ஊர்மக்கள  காப்பாத்துறது.
 முதல் ரெண்டு பகுதிகளோட தாக்கத்தால முன்பதிவுல புதிய சாதனை படைச்சிருக்க படம் இந்த அளவு எதிர்பார்ப்ப பூர்த்தி பண்ணிருக்கான்னா கண்டிப்பா இல்லைன்னு தான்  சொல்லனும்.

பேட்மேன்ங்கற கேரக்டர அதிகம் காட்டாம சைடுல வர்ற மத்தவங்களே முக்காவாசி படத்த ஓட்டிகிட்டு இருக்காங்க. படத்தோட முதல் காட்சியே படு மிரட்டலா எடுத்திருந்ததும் படம் பட்டைய கெளப்பப்போவுது நெனைச்சேன்... ம்ஹூம்... First half தாங்காது... முக்காவாசி நேரம் கான்வர்சேஷன்லயே போயிட்டு இருக்கு. பேட்மேனோட intro  scene படு மிரட்டலா இருந்தாலும், அதுக்கப்புறம் பேட்மேன வில்லன் குருப்பு மூத்தர சந்துக்குள்ள விட்டு கும்மு கும்முன்னு கும்மி டம்மி ஆக்கிருறாங்க. யோவ் நீ  அவிங்ககிட்ட அடி வாங்குறத பாக்குறதுக்காய்யா வந்தோம்?

வில்லன் ஒரு செம கப்பி... இவிங்க வாயத்தொறந்து இங்கிலீஷ் பேசுனாலே நமக்கு ஒரளவு  தான் புரியும். இதுல அந்தாளு மூஞ்சில மாஸ் போட்டுக்கிட்டு, கர கரன்னு பேசுறது செம கடுப்பா இருக்கு. அதோட இந்தாளு நம்ம தமிழ் படங்கள்ல பெரிய பெரிய வில்லன்களுக்கு அடியாள வர்றவிங்க மாதிரி தான் இருக்காரு..சுருக்கமா ஆளவந்தான் வில்லன் கமல் மாதிரின்னு சொல்லலாம். பாக்குறவிங்களயெல்லாம் தூக்கிபோட்டு மிதிக்கிறது.. கழுத்த திருவி கொல்றதுன்னு...  மாட்டுத்தனமா அடிக்கிறாறே தவற... ஒரு  fire இல்லையேப்பா.  ஃபயரு ஃபயரு... ஆனா second half la அவர் பத்தின ஃப்ளாஷ்பேக் சொல்லும்போது வில்லன்ங்குறத தாண்டி ஒரு

ஹீரோ பேட்மேன்... The dark Knight பாத்ததுலருந்து இவர தூம் அபிஷேக் பச்சன்னு தான் கூப்புடுவேன்.. ஏனா? சும்மா படத்துல டம்மியா வந்துட்டு போறதாலதான். இந்த படத்துலயும் அதே தான். முக்காவாசி நேரம் உடம்பு சரி இல்லாதவரா, அடிவாங்கிட்டு இருக்காரு. ஆனா சில பேட்மேனா வர்ற சில காட்சிகள்ல விசிலடிக்க வச்சிடுறாரு. வில்லன் முதல் பாதில  இவர அடிச்சிபோட்டுட்டு இவர்ட்ட "you have to see gotham goes into ashes..  then you will have my permission to die" ன்னு சொல்ற வசனத்த இரண்டாம் பாதில வில்லன அடிச்சிபோட்டு இவரு அவன்கிட்ட "you tell me where the trigger is and you will have my permission to die"  சொல்றது மாஸ்ஸூ.. வேறென்ன இதெல்லாம் நம்ம தலைவர் பட ஸ்டைல்தான்.


படத்தோட பெரிய ப்ளஸ் என்னன்னு பாத்தா கடைசி அரைமணி நேரம்னு சொல்லலாம். ஆக் ஷன் செண்டிமெண்ட், ட்விஸ்ட்ன்னு பட்டைய கெளப்பி, முதல் பாதில கோட்ட விட்டதயெல்லாம் தூக்கி நிறுத்துறாங்க. க்ளைமாக்ஸ் இன்னும் செம. பேட்மேன் கூட இருக்க தாத்தாவ எனக்கு ரொம்ப புடிக்கும். ஏன்னா.. அவரு ஒருத்தர்தான் ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமா புரியிறமாதிரி பேசுவாறு.

கில்லி படத்த காப்பாத்துறதுக்கு எப்புடி ஒரு ப்ரகாஷ்ராஜ் இருந்தாரோ அதே மாதிரி The Dark Knight படத்த காப்பாத்த ஒரு ஜோக்கர் இருந்தாரு. அந்த மாதிரி ஒரு கேரக்டர் இல்லாம இருந்தா அந்த படமும் ஒரு சுமாரான படம் தான். அதே தான் இங்கயும் நடந்துருக்கு... திரைக்கதையெல்லாம் முன்னாடி மாதிரிதான் இருக்கு. ஆனா ஸ்பெஷலா எதுவும் இல்லாததால the Dark Knight ஏற்படுத்திய தாக்கத்த இந்த படம் ஏற்படுத்துறது கஷ்டம் தான்.

இந்த படத்த ஒரு வார்த்தையில சுமார்ன்னு சொல்லிட முடியாது. அப்படி இல்லைன்னு நிரூபிக்க நிறைய  காட்சிகள் இருக்கு. அதே மாதிரி சூப்பர் படம்னு சொல்லமுடியாது. சரி ஏண்டா இப்புடி ஒளருறன்னு கேக்குறீங்க அதானா.... ஒரே கன்பீசன்பா.. சரி நீங்க பாத்துட்டு சொல்லுங்களேன்..


Sunday, July 15, 2012

பில்லா 2 - The டண்டனக்கா DON


Share/Bookmark

குறிப்பு: அஜித்தின் தீவிற ரசிகர்கள் இந்த விமர்சனத்தை படித்துவிட்டு வெறியடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது படத்தை பற்றிய விமர்சனமே தவிற அஜித்தை பற்றியது அல்ல.

விமர்சனத்துக்கு போறதுக்கு முன்னால நா உங்க எல்லாருக்கும் தலைவர் கவுண்டமணியோட ஒரு காமெடிய ஞாபகப்படுத்த ஆசைப்படுறேன். சின்னவர் படத்துல கவுண்டர் மீனவரா இருப்பாரு. ஒரு தடவ அவர் விரிக்கிற வலையில பெருசா எதோ விழுந்துட கரையில இருக்கவங்க எல்லாரும் அது பெரிய திமிங்கலம் அது இதுன்னு பில்ட் அப் குடுத்துட்டு, உண்மையிலேயே வலையில இருக்கது செந்தில் தான்னு தெரிஞ்ச அப்புறம் கவுண்டர கிண்டல் பண்ணுவாங்க.. அப்போ தலைவர் ஒரு டயலாக் சொல்லுவாரு பாருங்க..

"தண்ணிக்குள்ள இருக்கது என்னன்னு தெரியாமலேயே ஒருத்தன் அது தோலு ஒரு கோடி போகும்ங்குறா அது பல்லு ரெண்டு கோடி போகும்ங்குறான்... இன்னொருத்தன் அது எச்சி மெடிசினு... அத வித்தா பல கோடி போகும்னு சொல்றான்... இதெல்லாம் வெளங்குமாடா" ன்னு கடுப்புல சொல்லுவாரு. அதே ஃபீலிங்தான் படத்த பாத்த அப்புறம் எனக்கு. படம் எப்புடி இருக்குன்னு தெரியிறதுக்கு முன்னாலயே ஒருத்தன் இத  ஹாலிவுட் படம் மாதிரி இருக்குங்குறான். இன்னொருத்தன் மங்காத்தாவெல்லாம் சும்மா..இது அதெயெல்லாம்  தூக்கி சாப்பிட்டுருச்சிங்குறான். இன்னொருத்தன் தமிழ்ல இதுமாதிரி படமே இதுவரைக்கும் வந்ததில்லைங்குறான்.. யார்ட்ட விடுறீங்கானும் ரீலூ... வலைக்குள்ள திமிங்கலம் இருக்கும்னு எதிர்பாத்த கவுண்டருக்கு எப்புடி செந்தில்  இருந்தாரோ அதே மாதிரி நெலமை தான் படம் பயங்கரமா இருக்கும்னு நெனைச்சி போற நமக்கும்.

படம் ஸ்டைலா இருக்கு.. ரிச் லுக்கு... அது இதுன்னு கண்ட பில்ட் அப் விடுவாங்க... இன்னும் சில பேரு படம் மொக்கைன்னு நேரடியா சொல்றதுக்கு கஷ்டப்பட்டுகிட்டு நல்லா தான் இருக்குன்னு சொல்ல வாய்ப்பு இருக்கு. மக்களே ஓப்பனா சொல்லனும்னா...இது ஒரு ஹைடெக் ஸ்டைலிஷ் மொக்கைன்னு சொல்லலாம். ட்ரெயிலர்ல பாத்த வசனங்கள் நல்ல வசனங்கள் கூட படத்தோட சேர்ந்து வரும் போது காட்சிகளோட கப்பித்தனத்தால வீணா போயிருக்கு.

அகதியா இருக்க அஜித் எப்புடி படிப்படியா முன்னேறி ( நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹாணர்- முன்னேறி) பெரிய டானா ஆவுறாருங்கறது தான் கதை. பெருசா ஒண்ணும் பண்ணல... ரெண்டு மூணு தடவ இந்த டெம்போ ட்ராவலர்லர்ல சில கடத்தல்கள் பண்றாரு.. எனக்கு ஒரு பெரிய டவுட்டுங்க.. முப்பது வருசத்துக்கு முன்னால தான் இந்த ஹெராயின் அபின் எல்லாத்தையும் மளிகை கடையில ஜீனி பொட்டலம் போட்டுருக்க மாதிரி transparent கவர்ல போட்டு கடத்திக்கிட்டு இருந்தாய்ங்க. 2013 லயும் நீங்க இன்னும் திருந்தலையாடா..

நீங்க மட்டும் அம்பாஸிடர்ல போயிட்டு  இருந்துட்டு இப்ப சுமோ க்வாலிஸ்னு மாறிட்டீங்க.. கோட்டு போடுறீங்க... கூலிங் க்ளாஸ் இல்லாம போனா ரெண்டு கண்ணும் அவிஞ்சிருதுங்குறீங்க... அப்புடியே காலப்போக்குல அந்த ஹெராயின் பேக் பண்ற கவர தான் மாத்துனீங்கன்னா என்னடா? இன்னும் அந்த ஜீனி மடிக்கிற ப்ளாஸ்டிக் கவர்லயே பேக் பண்றீங்க.. எல்லாரும் அத கண்ணால பாக்கும் போதே கண்டுபுடிச்சிடுறாய்ங்க. ஒரு சக்தி மசாலா, புரு காஃபி பாக்கெட் மாதிரி fancy ah எதாவது கவர்ல அத பேக் பண்ணால்ல போலீஸ் கண்பீஸ் ஆவாங்க...

அப்புறம் அஜித் கையில ஒரு துப்பாக்கிய குடுத்துட்டாய்ங்க. கண்ணுல பாக்குறவிங்கல  எல்லாம் டம்மு டம்முன்னு சுட்டுகிட்டே இருக்காரு. பாத்து நீங்க எதும் அவர் முன்னாடி போயிரபோறீங்க அவளோதான்... பொட்டுன்னு சுட்டுருவாரு. அந்த அகதி குரூப்ப பாத்துக்குற ஒரு ஊணமுற்ற ஒரு சின்ன பையன் இருப்பான். அவன்  ஓவரா பேசுறான்னு அவன பொளேர்னு ஒரு அறை விட்டு அந்த ஏரியால ரவுடியா ஃபார்ம் ஆவுறாரு. அப்புறம் அவர் கிட்ட "அநாதையா நீ" ன்னு கேட்ட ஒருத்தர கழுத்த அறுத்து கொல்றாரு. இப்புடி புள்ளப்பூச்சியல்லாம் கொன்னுட்டு கடைசில இவர ஜெயில்ல புடிச்சி போட்ட ஒரு வில்லன கொல்லாம விட்டுட்டு "எனக்கு நண்பனா இருக்கதுக்கு
எந்த தகுதியும் தேவையில்ல... ஆனா எதிரியா இருக்க தகுதி வேணும்" ன்னு பஞ்ச் டயலாக் பேசுறாரு... செம்ம காமெடி தல நீங்க...அந்த டயலாக்க கேட்டதும் "யோவ்... அந்த சின்ன பயல அடிச்சி ரவுடியானவந்தான நீயி" ன்னு மனசுக்குள்ளயே சிரிச்சிகிட்டேன். 

அப்புறம் "டேய் என் வாழ்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா"ன்னு ஒரு ஸ்கூல் பையன பாத்து பேசுறாரு.

படத்துல மிக கேவலாமான ஒரு விஷயம் casting. யாரார டானா போடுறது.. எவன் எவன  எந்த ரோல்ல போடுறதுன்னே ஒரு விவஸ்த இல்லாம போச்சு... (சாரி நா அஜித்த சொல்லல) இந்த பயணம் படத்துல வாசிம் கானா நடிக்க ஒரு காமெடி ஆக்டர கூப்டு வந்து நடிக்க வைப்பாய்ங்களே.. அவன ஒரு சீரியஸான கேரக்டர்ல கோட்டு சூட்டெல்லாம் போட்டு நடிக்க வச்சிருக்காய்ங்க. அவன பாத்ததுமே தியேட்டர்ல எல்லாரும் டேய் இவன் அவண்டான்னு நக்கல் அடிக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க. அப்புறம் தூள்ல போலீஸா வர்றவரு ஒரு குட்டி டான்..செம கப்பி.  மெயின்வில்லன் Jr.NTR கிட்ட பல படங்கள்ல அடி வாங்குனவன்னாலும் தமிழுக்கு புதுசுங்கறதால ஓகே.. ஆனா ரஷ்யாகாரனா காமிச்சி அவன் பேசுற ஒவ்வொன்னுக்கும் தமிழ் ட்ரான்சிலேஷன் கீழ போடுறது செம கடுப்பு.

படத்துல எந்த கேரக்டருமே தெளிவு இல்லை. கதை எங்க நடக்குதுங்கறதுலயும் ஒரு தெளிவு இல்லை. திடீர்னு ரஷ்யாங்குறாய்ங்க.. திடீர்னு கோவாங்குறாய்ங்க... எதோ உள்ள பொய்ட்டோமேங்கறதுக்காக
கடனுக்குன்னு அவனுங்க சொல்றதயெல்லாம் பாக்க வேண்டியிருக்கும்.

அப்புறம் படத்துல ஹீரோயின்னு ஒண்ணு இருக்குங்க.. ஆனா உண்மை என்னன்னா அந்த புள்ளைய தவற படத்துல வர்ற மத்த எல்லாருமே சூப்பரா இருக்காங்க.. அது செம மொக்கையா இருக்கு... என்ன கண்றாவிக்காக அந்த கேரக்டர்னே கடைசிவரைக்கும் தெரியாம போச்சு.

அஜித் ஆளு பாக்கறதுக்கு சூப்பரா இருக்காரு. அவருக்கு கொடுக்கப்பட்ட நாலஞ்சி வசனங்கள ஒழுங்கா பேசிருகாரு.. அலட்டல் அதிகம் இல்லை
"நா தண்ணில இருக்கேன் நீ தரையில இருக்க" "அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்.. மாமன் மச்சான் பெண் கொடுத்தோர் பெண் எடுத்தோர்..." ன்னு இதுமாதிரி எமோஷனல் டயலாக்ஸ் இல்லாம இருக்கது பெரிய ஆறுதல். திரும்ப பழைய மாதிரி புஷ்டியான ஆகாரங்கள்லாம்  சாப்டு ப்ரம்மாண்டமா ஆயிட்டாரு. தொப்பை திரும்ப முன்னாடி மாதிரியே ஆயிருச்சி..மூஞ்சும் செம்ம குண்டாயிருச்சி...  கொடுமை என்னான்ன முக்காவாசி க்ளோஸ் அப் ஷாட்.. அய்யோ அம்மே... முதல் பாதில கைலி, சட்டை, ஜீன்ன்னு சாதாரண காஸ்ட்யூம்ல அஜித் ரொம்ப நல்லா இருக்காரு. ரெண்டாவது பாதில வழக்கம்போல ரேமண்ட்ஸ் மாடல் மாதிரி யுவன் ஷங்கர் ராஜாவ மியூசிக் போட சொல்லிட்டு நடந்துகிட்டே இருக்காரு.

யுவன் பாவம்.. இவரு போட்ட சில நல்ல ட்யூன்கள கப்பித்தனமா பாட்டு எடுத்து வச்சிருக்காய்ங்க. "எதோ எதோ ஒரு மயக்கம்" பாட்ட கெடுத்து வச்சிருக்காய்ங்க... உனக்குள்ளே மிருகம்  ஆரம்பத்துல பாக்குறப்ப நல்லா இருந்தாலும் கொஞ்ச நேரத்துல எதோ ஃபோட்டோ  ஷாப்புல எடிட் பண்ண ஃபோட்டோக்கள பாக்குற ஒரு ஃபீல குடுக்குது..

சக்ரி டோலட்டி...நீங்கல்லாம் நல்லா வருவீங்க தம்பி... நல்லா வருவீங்க.... இவர பத்தி வடிவேலுவோட சுனா பானா காமெடி டைப்ல சொல்லப்போனா "இவருக்கு சைக்கிள் பழகனும்னு ஆச வந்துச்சி.. அத கமல வச்சி கத்துகிட்டாரு..லோடு வச்சி ஓட்டனும்னு ஆசை வந்துச்சி.. அதுக்கு அஜித்த சைக்கிள்ல ஏத்திட்டு போயி கீழ தள்ளிவிட்டுட்டாரு. இந்த படம் பாத்த அப்புறம் தான் வெங்கட் ப்ரபு மேல ஒரு தனி அபிப்பிராயமே வந்துருக்கு.. யார்ட எதுமாறி எப்புடி வேலை வாங்கனும்னு அவருக்கு தெரிஞ்சிருக்கு. மங்காத்தாவுல கால்பங்கு கூட வராது இந்த பில்லா...

படம் முடிஞ்ச அப்புறம் யுவன் ஷங்கர் ராஜா வந்து "Give your way.... உவ்வே.. உவ்வே to the கேங்ஸ்டார்" னு பாட்டு பாட 'ஆமா இந்த மொகரைக்கு இது மட்டும் தான் கொறைச்சல்..இன்னும் ஒரு வாரம் கழிச்சி தியேட்டர்ல ஒருத்தன் இருக்கமாட்டான்.. அப்பவந்து அந்த கேங்ஸ்டர நடந்து பழக சொல்லுப்பா" ன்னு
நெனைச்சிகிட்டு வெளிய வந்தேன்.

முதல் வாரத்தில் ரசிகர்களால் ஹாலிவுட், பாலிவுட், ஸ்டைலிஷ், தல ராக்ஸ் ன்னு கண்ட மேனிக்கு ஏற்றி விடப்பட்டாலும் கடைசியாக ஆழ்வார், அசல் வரிசையில் சேரப்போகும் ஒரு படமே இந்த பில்லா 2.



Tuesday, July 10, 2012

ப்ளீஸ் அந்த புத்தகத்த வாங்காதீங்க!!!!


Share/Bookmark

ப்ளீஸ் இந்த கடையில சாப்புடாதீங்க!!

 ப்ளீஸ் இங்க யாரும் துணி எடுக்காதீங்க!!!

 ப்ளீஸ் இந்த கடையில டீ குடிக்காதீங்க!!

இங்த மாதிரி எங்கயாவது கடைக்காரனே போட்டுருந்தான்னா நாம அந்த கடைக்கு போவோமா? சுயநினைவுல இருக்கவன் எவனும் போகமாட்டான். ஆனா இதே மாதிரி ஒரு தலைப்ப வச்சி ஒரு புத்தகம் எழுதி அத 2 லட்சம் காப்பி வித்துருக்கான்யா ஒருத்தன்.


யார சொல்றேன்னு எல்லாருக்கும் இந்நேரம் புரிஞ்சிருக்கும். நம்ம விஜய் டிவி நீயா நானா கோபிநாத் தான் அந்த அதிகப்பிரசங்கி. இவரு ரெண்டு வருசத்துக்கு முன்னால  "ப்ளீஸ் இந்த புத்தகத்த வாங்கதீங்க" அப்புடின்னு ஒரு புத்தகத்த மெனக்கட்டு எழுதி  வெளியிட்டுருக்குறாரு... இத அதிகப்ரசங்கி தனத்தோட உச்சமா இல்லை நம்ம ஊர்காரய்ங்கள நல்லா புரிஞ்சிகிட்ட ஒரு புத்திசாலித்தனமான்னு தெரியல.

ப்ளீஸ் இந்த புத்தகத்த வாங்கதீங்கன்னா அப்புறம் என்னா ....த்துக்கு அத பப்ளிஷ் பண்ணி விலையோட புத்தகக் கடையில வச்சிருக்க? வித்யாசமா பேரு வக்கிறாராம்..அட அவன விடுங்க... இதயும் ரெண்டு லட்சம் காப்பி வாங்கி அவன இன்னும் ஏத்தி விட்டுருக்காய்ங்களே.. நம்மாளுகள என்ன பண்றது... வக்காளி இந்த பேரு வச்சதுக்கு ஒரு புத்தகத்த கூட வாங்கிருக்க கூடாது. அப்பதான் கொஞ்சம் ஓவரா  பொய்ட்டோமோன்னு அந்தாளுக்கு புரியும்.

ரெண்டு வருஷத்துக்கு கம்பெனி வேலையா வேற மாநிலத்துக்கு போகும்போது கூட வேலை பாக்குறவன் ஒருத்தன் இந்த புத்தகத்த வச்சிருந்தான். தலைப்ப பாத்ததுமே கடுப்பாயிருச்சி. சரி அப்புடி என்னதான் இது எழுதிருக்குன்னு பாக்கலாம்னு வாங்குனா

"ப்ளீஸ் இந்த புத்தகத்த வாங்கதீங்க அப்புடின்னு ஏன் தலைப்பு வச்சேன்னா... நா இந்த புத்தகத்துல புதுசா எதையும் சொல்லல.. உங்களுக்கு தெரிஞ்சததேயே தான் நா திரும்ப எழுதிருக்கேன்.." ன்னு சுத்தி சுத்தி எதோ கருத்து சொல்ற மாதிரி ரெண்டு பக்கத்துக்கு சொன்னதே சொல்லிட்டு இருந்தான். அப்புடின்னு போட்டுருந்துச்சி. அப்புடியே மூடி அவன் ட்டயே குடுத்துட்டேன்... "பரவால்லண்ணே படிச்சிட்டு குடு" ன்னான்... "ஆனியே புடுங்க வேண்டாம்னு குடுத்துட்டேன். கண்டவன்லாம் புத்தி சொல்ல வந்துட்டா அப்புறம் நாட்டுல யாருதாண்டா அத கேட்டு நடக்குறதுக்கு இருக்கது.

மத்தவங்க மாதிரியே நானும் இவரோட டைமிங் காமெடிகளுக்கு ரொம்ப ஃபேன்... அடிக்கடி அந்த ப்ரோக்ராம் பாக்குறதில்லன்னாலும் நிறைய தடவ பாத்துருக்கேன். நிறைய விஷயம்  தெரிஞ்சிருக்கு இவருக்குன்னு வியப்பா பாத்துருக்கேன். ஆனா கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் ஒரு நண்பர் மூலமா தெரிஞ்சிது இவரு ஒரு டம்மி தாதா... ஒரிஜினல் வேறன்னு... அந்த நிகழ்ச்சில கலந்துக்குற மத்தவங்க எல்லாம் முட்டாளுங்க.. இவரு மட்டும் தான்
புத்திசாலிங்கற நெனப்புல கண்டமேனிக்கு கேள்விகள கேட்டு சில அப்பாவிங்கள கார்னர் பண்ணி கேள்வி கேட்டுகிட்டே இருக்கவேண்டியது.. அப்புறம் அதயே நிகழ்ச்சியோட ஹைலைட்டாக்கி விளம்பரப்படுத்தி வியாபாரம் பண்ண வேண்டியது.

இந்த லட்சனத்துல எங்க இளைஞரணி தலைவன் பவர்ஸ்டாரயே கலாய்க்க ட்ரை பண்ணிருக்கான். என்னய்யா பண்ணாரு அவரு? அவரோட பணத்த போட்டு அவரே படம் நடிச்சி பல பேருக்கு வேலை குடுத்துக்கிட்டு இருக்காரு.. அதுல என்ன ப்ரச்சனை உனக்கு? உன்னை பாருன்னு கம்பல் பண்ணாரா? முடிஞ்சா பாரு முடியலானா மூடிக்கிட்டு இரு. இல்ல அவரு என்ன டி ஆர் மாதிரி அவர கலாய்க்கிறதே தெரியாம ஈஈ ன்னு பல்லகாட்டிகிட்டு இருக்காரா.. நம்மள எல்லாரும் கலாய்க்கிறாங்கன்னு தெரிஞ்சி எல்லாரும் சந்தோசமா இருக்கட்டும்னு சும்மா இருக்காரு.  நீ  வெளியுலகத்துக்கு தெரிய எத்தனை வருசம் ஆச்சி?  ஒரே வருசத்துல ஆல் ஓவர் தமிழ்நாட்டுலயும் ஃபேமஸா ஆனாருல்ல? அவர கூப்டு வச்சி அசிங்கப்படுத்திருக்க... தமிழ்நாடே கொந்தளிச்சிருச்சி பாத்தல்ல...


அதுக்காக கோபிநாத் வேஸ்ட்டுன்னு சொல்லவரல... அதிகப்பிரசங்கித்தனம், சொல்பேச்சு கேளாமை இந்த மாதிரி குணங்கள் அதிகமா இருக்கு.. இத எல்லாம் விட்டுவக்கிறது சரியில்ல.. வெட்டி  வைக்கிறது தான் சரி.

அப்ப நா கெளம்பட்டுமா? எங்கயா? நீயா நானா ஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா..
தொடந்து பேசுவோம்... Stay tuned... லயன் டேட்ஸ் வழங்கும் கோபிநாத்தா பவர்ஸ்டாரா....

Monday, July 9, 2012

நான் ஈ (EEGA) - ANOTHER STUNNER FROM SSR


Share/Bookmark



ஒரு நல்ல இயக்குனர் ஒரே மாதிரி படங்களை எடுப்பவரா இருக்கக்கூடாது.. ஒரே தரத்தில் படங்கள எடுக்குறவரா இருக்கனும். முன்னதற்கு உதாரணமா பல இயக்குனர்கள  சொல்லலாம். ஆனா பின்னதுக்கு உதாரணமா சில இயக்குனர்களை மட்டுமே சொல்ல முடியும். அந்த மாதிரி ஆளுங்கள்ள ஒருத்தர்தான் இந்த எஸ்.எஸ்.ராஜமெளலி.   ஒரே மாதிரியான ரவுடிஸ  கதைகளையே அரைச்சிட்டு இருக்க தெலுங்கு இயக்குனர்கள்  மத்தியில வித்தியாசமான படங்களை கொடுத்து அசத்துபவர்.

2008 ல  நண்பர் ஒருத்தர் ரவிதேஜா நடிச்ச விக்ரமார்குடு (சிறுத்தையின் ஒரிஜினல்) குடுத்து பாக்க சொன்னாரு. அந்த படம் பாத்ததுலருந்து ரவி தேஜாவுக்கும் fan ஆயிட்டேன்.. ராஜ மெளலிக்க்கும் fan ஆயிட்டேன். அதுக்கப்புறம் வந்த எல்லா ரவிதேஜா படங்களையும் மிஸ் பண்ணாம பாத்துட்டுருக்கேன். ராஜமெளலி விக்ரமார்குடுக்கு அப்புறம் எடுத்த எமதுங்காவயும் பாக்குற வாய்ப்பு கெடைச்சிது. நம்ம தலைவரோட அதிசய பிறவிய தழுவி Jr NTR ah வச்சி எடுக்கப்பட்ட படம்.

ராம் சரண் தேஜாவ வச்சி எடுத்த மஹதீரா எவளோ பெரிய ஹிட்டுன்னு எல்லாருக்கும் தெரியும். வழக்கமா படு மொக்கையான கிராஃபிக்ஸோட வர்ற தெலுங்கு படங்கள் மத்தில முதல் முறைய ஒரு தரமான கிராஃபிக்ஸோட எடுத்து அசத்தியிருந்தாரு. அதுக்கப்புறம் காமெடியன் சுனில ஹீரோவா வச்சி மரியாத ரமன்னா.. அதுவும் ஒரு சூப்பரான படம். 2010 ல ஆரம்பிச்ச இந்த eega, டப்பிங்க பண்ணப்படாம தமிழ்ல நேரடியா எடுக்கப்பட்டது ஒரு நிம்மதி.

இந்த படத்தோட 20 செகண்ட் ட்ரெய்லர் பாத்தாலே கதைய கண்டுபிடிச்சிடலாம். ஒரு ஈ ரிவெஞ்ஜ் எடுக்குற கதை. இத எவ்வளவு சூப்பரா எடுக்கமுடியுமோ அவளவு நல்லா எடுத்துருக்காங்க. லாஜிக்க பாக்குறதுக்கு வேலையே இல்ல... போனமா பாத்தோமா.. சிரிச்சோமான்னு  வந்துட்டே இருக்கலாம். "ஈ" ங்கற ஒண்ணை வச்சிக்கிட்டு அதுக்கு தேவையான மாதிரி மத்த  கேரக்டரையும், சீன்ஸயும் ரெடி பண்ணிருக்காரு. உதாரணமா சமந்தாவோட கேரக்டர்.




சுதீப்தான் படத்தோட ப்ளஸ்ஸே.. பட்டைய கெளப்பிருக்காரு. கோவத்துலயும் சரி, ஈயோட தொல்லையில மாட்டிக்கிட்டு பாவமாவும் சரி.. எக்ஸ்ப்ரஷன்ஸ் பின்னி எடுத்துருக்காரு. அவரோட வாய்ஸும் சூப்பர். டப்பிங் குடுத்தது யார்னு தெரில.. நம்ம அருண் பாண்டியன் வாய்ஸ் மாதிரி இருந்துச்சி.  சமந்தா வரைஞ்சி வச்ச மாதிரி இருக்காங்க.. அவங்க சிரிப்புல அப்புடியே நா செதஞ்சி பொய்ட்டேன்.. ஆல் யங் கேர்ஸ்..ஹையோ...  நானீ கால் மணி நேரமே வந்தாலும் மனசுல நின்னுடுறாரு.  சந்தானம் 5 நிமிஷமே வந்தாலும் தியேட்டரயே கலக்கிடுறாரு.. ஆனா என்ன இவரு சீன்ஸ எங்க சொருகுறதுன்னு தெரியாம கடைசில மொத்தமா போட்டு விட்டுருக்காய்ங்க.



MM கீரவாணி... ஈடா ஈடா ஈடா பாட்டு செம... பாட்டு வரிகள் சூப்பர்...

"ஈஈன்னு என்ன பாத்தான்
நான் ஈ ன்னு என்ன பாத்தான்
என்ன பூச்சியில சேத்தான்
அங்க தான அவன் தோத்தான்
நா மூச்சிக்குள்ள நஞ்சு ஏற்ற வந்திருக்கும் சாத்தான்"

கார்க்கியோட  வரிகள்லயே மொத்த படமும் வந்துடுது.. வெய்ட்டு..BGM um நல்லாருந்துச்சி.. ரெண்டு மாசம்  முன்னால JR NTR oda தம்மு பாத்தேன்.. அதுல அவருக்கு டண்ட டகர டகர டகர ன்னு BGM ல வாங்கிபோட்டு குத்திருப்பாரு. அத அப்புடியே அலேக்க தூக்கி இந்த "ஈ" க்கும் போட்டுருக்காரு. பாரபட்சம் பாக்காத மனுசன்யா...

அப்புறம் இந்த படத்தோட ஹீரொ கிராஃபிக்ஸ் "ஈ" பத்தி சொல்லியே ஆகனும். பெரிய பெரிய ஆளுங்க கூட முதல்ல சாஃப்ட்டான கேரக்டர்ல நடிச்சிட்டு அப்புறம் தான் ஆக் ஷன் ஹீரோவா ஃபார்ம் ஆவாங்க. நம்மாளு மொத படத்துல ஆக்சன் ஹீரோ... அது பொறந்து மொத மொதலா கஷ்டப்பட்டு பற்க்கும் போது "Life is back" ன்னு ஒரு BGM போட்டுருக்காங்க பாருங்க... சும்மா புல்லரிச்சிருச்சி.. இன்னொரு காட்சில நம்ம தலைவர் தோன்றி "சிங்கம்
சிங்கிளாதான் வரும்" ன்னு ஈக்கு பில்ட் அப் தர்றாரு. படம் முடிஞ்ச அப்புறம் நானீ என் பேரு பாட்டு ரீமிக்ஸ்ல இந்த ஈ,  ராஜமெளலியோட முந்தைய பட ஹீரோக்கள் மாதிரி டான்ஸ் ஆடுது பாருங்க... மாஸ்ஸூ...

ஆனா ஈ சமந்தாகூட பேச்சுவார்த்தை நடத்துற மாதிரியான காட்சிகள்
தான் கொஞ்சம் அதிகமா இருக்கமாதிரி தோணுச்சி. படத்துல வர்ற ஒரு ஆக்ஸிடண்ட் சீன் ரொம்ப அருமையா எடுத்துருக்காங்க.. அதுமட்டும் இல்லாம க்ளைமாக்ஸ்ல க்ளாஸ்லாம் உடையிற  மாதிரியான காட்சிகளூம் ரொம்ப அருமையா எடுக்கப்பட்டுருக்கு,

மொத்ததுல மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய ஒரு படம் இந்த நான் ஈ.

 சனிக்கிழமை காசில 2nd ஷோ பாத்தேன். தியேட்டர் full... படம் பாக்க வந்தவங்கள விட பில்லா டிரெய்லர் பாக்க வந்தவங்கதான் அதிகம்.  என்ன சவுண்டுடா ய்ப்பா... முதல்  டிரெய்லர விட இந்த ரெண்டாவது டிரெய்லர்ல படம் ஓடுவதற்கான வாய்ப்புகள் அதிகமா தெரியுது.. இன்னும் நாலு நாள் தான.. பாக்கலாம்.

அப்புறம் விஸ்வரூபத்தோட ரெண்டாவது டிரெய்லரும் போட்டாங்க.. படம் மட்டை ஆவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் அதுல தெரிஞ்சுது. அத பாத்தப்புறம் அவசரப்பட்டு கால விட்டுடக்கூடாதுன்னு ஒரு முடிவுக்கு வந்துருக்கேன். .


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...